Home Blog Page 24

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை முடித்து திரும்பியவுடன் மதுரையில் தொடங்கும் ‘சேயோன்’ படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளவுள்ளார். அப்படத்தை முடித்துவிட்டு ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க திதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தமாக கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மாளவிகா மனோஜிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவரும் கதை கேட்டு நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

விரைவில் படப்பிடிப்பு திதிகள் முடிவானவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என தெரிகிறது. ‘சேயோன்’ படம் போலவே, ராம்குமார் படமும் குறுகிய கால தயாரிப்பாக உருவாகிறது. சிம்பு நடிக்க பூஜைப் போடப்பட்ட கதையில், இப்போது சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கவுள்ளது. இதன் ஆரம்பகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

 

பல்கலைக்கழகங்களில் மெய்நிகர் முறையில் விரிவுரைகளை நடத்த உத்தரவு

பல்கலைக்கழக விரிவுரைகளை மெய்நிகர் முறையில் முன்னெடுக்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடியால் ஏற்படும் போக்குவரத்துச் சிரமங்களைக் குறைக்கவும், அதேநேரம் கல்வி நடவடிக்கைகள் தடையின்றித் தொடர்வதை உறுதிப்படுத்தவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்துத் தேவையைக் குறைப்பதற்காக விரிவுரைகளை மெய்நிகர் முறையில் நடத்துமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், பல்கலைக்கழக கல்விசார் பணியாளர்கள் தற்போது சாத்தியமான இடங்களில் புதன்கிழமைகளில் ‘வீட்டிலிருந்தே பணிபுரிதல்’ முறையைப் பின்பற்றி வருகின்றனர்.

அனைத்துக் கல்வி நடவடிக்கைகளையும் முழுமையாக இணையவழியில் முன்னெடுப்பது தற்போதைக்குச் சாத்தியமில்லை என்பதால், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் சில நேரடி அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

பல்கலைக்கழக ஊழியர்கள் முடிந்தவரை ஒன்றிணைந்து வாகனங்களைப் பகிர்ந்து கொண்டு பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விஞ்ஞான, பொறியியல் மற்றும் மருத்துவ பீடங்கள் போன்ற நடைமுறைப் பயிற்சிகள் அவசியமான பாடப்பிரிவுகள் குறித்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே சில விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.

கோட்பாட்டு ரீதியான (Theoretical) விரிவுரைகள் மெய்நிகர் முறையில் நடத்தப்படும். நடைமுறைப் பயிற்சிகள் சிறிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படும்.

உதாரணமாக, ஒரு தொகுதி மாணவர்கள் ஒரு வாரம் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து தமது செய்முறைப் பயிற்சிகளை முடித்து விட்டுத் திரும்பலாம்.

தற்போதைய நிலைமை மேலும் மோசமடைந்தால், கொவிட்-19 தொற்று பரவல் காலத்தைப் போலவே மாணவர்கள் வீடுகளிலிருந்தே கற்குமாறு கேட்டுக்கொள்ளப்படலாம்.

இருப்பினும், இது குறித்த இறுதி தீர்மானம் இன்னும் எட்டப்படவில்லை.

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் கல்வித் தொடர்ச்சியைப் பேணுவதே எமது முதன்மை நோக்கம் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை: ஈரான்

இஸ்ரேல்-அமெரிக்காவுடன் போர் நிறுத்தத்துக்கு தங்கள் நாடு அழைப்பு விடுக்கவில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் முதல் நாள் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவா் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா். ஈரானின் பாதுகாப்புப் படை தளபதிகள் உள்ளிட்டோரும் உயிரிழந்தனா்.

இதனைத் தொடா்ந்து, ஈரானும் இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க கடற்படை மற்றும் ராணுவ நிலைகள் மீதும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய உலக நாடுகள் அதிகம் பயன்படுத்தப்படும் ஹோா்மூஸ் நீரிணையையும் ஈரான் மூடிவிட்டது. இதனால் உலகின் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும், விலை ஏற்றமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரான் பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுப்பதாகவும், தங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்திருந்தாா். ஆனால் இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அரகாச்சி தனது சமூகவலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், ‘போரை நிறுத்துவது தொடா்பாக பேச்சுவாா்த்தைக்கு எங்கள் நாடு கோரிக்கை விடுத்ததாக கூறுவது மாயை (பொய்). எங்கள் நாடு ஒப்பந்தத்துக்கோ அல்லது பேச்சுவாா்த்தைக்கோ கோரிக்கை விடுக்கவில்லை. அமெரிக்கா்கள், ஈரானியா்கள் மீது தாம் திணித்துள்ள போா் தவறானது, அதை திரும்பச் செய்யக் கூடாது என்று அமெரிக்க அதிபா் உணரும் வரை எங்கள் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பதுளை, கோபோ தமிழ் வித்தியாலயத்தில் 39வது உத்தியோகபூர்வ வித்தியாலய தினம் கொண்டாட்டம்

பதுளை, கோபோ தமிழ் வித்தியாலயத்தின் 39வது உத்தியோகபூர்வ வித்தியாலய தினம், அதிபர், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறு ஒருங்கிணைந்த முறையில் வித்தியாலய தினம் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிடைத்துள்ள குறிப்புகளின்படி, தோட்டப்பகுதி மாணவர்களின் எழுத்தறிவை மேம்படுத்தும் நோக்கில் 1924ஆம் ஆண்டு அப்பகுதியில் இருந்த “பால் காம்பரா” ஒன்றை மையமாகக் கொண்டு இப்பாடசாலை முன்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இப்பாடசாலை நூற்றாண்டைத் தாண்டிய வரலாற்றைப் பெற்றிருந்தாலும், உத்தியோகபூர்வமாக 1987 மார்ச் 16ஆம் திகதி முதலாவது அதிபரான திருமதி கே. ராஜம்மாள் அவர்களால் சம்பவத்திரட்டு புத்தகத்தில் கையொப்பமிட்டு ஆரம்பிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலையின் வரலாற்று விழிப்புணர்வையும் பெருமையையும் பாடசாலை சமூகத்திற்கும் மாணவர்களுக்கும் ஏற்படுத்தும் நோக்கில், இவ்வாண்டு முதல் மார்ச் 16ஆம் திகதி வித்தியாலய தினமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என பாடசாலையின் அதிபர் எம். எப்.எம். இர்ஷாட் அறிவித்தார்.

காலை 7.45 மணியளவில் பாடசாலை முன்றலில் சங்கீதப் பாட ஆசிரியையான செல்வி என். நிரோஷினியின் தேவாரப் பண்ணிசையுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து அதிபரினால் பாடசாலைக் கொடி ஏற்றப்பட்டு, மாணவர்களால் பாடசாலைக் கீதம் பாடப்பட்டது.

ஆசிரியர் கே. ஜீவராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.. ஆரம்பப் பிரிவு பகுதித்தலைவர் திருமதி ஆர். ராஜஸ்ரீ அவர்களால் அறிமுக உரை வழங்கப்பட்டதுடன், ஆசிரியை திருமதி சி. கோகிலவாணி அவர்களால் சத்தியப்பிரமாணம் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து ஆசிரியை திருமதி ஆர. உதயப்ரியா அவர்கள் பாடசாலையின் மகுட வாசகம், நோக்கம் மற்றும் குறிக்கோளை விளக்கினார்.

நிகழ்வில் அதிபர் எம்.எப்.எம். இர்ஷாட் தலைமையுரை நிகழ்த்தியதுடன், முன்னாள் அதிபர்களான எம். சண்முகராஜா மற்றும் எம். வரதராஜா ஆகியோர் விசேட உரைகளை வழங்கினர்.
மேலும், தெஹிகொல்ல தமிழ் வித்தியாலயத்தின் அதிபரும் இப்பாடசாலையின் முன்னாள் ஆசிரியருமான பி. லசன்தன் அவர்களும் கலந்துகொண்டார்.

மாணவர்கள் சார்பில் தரம் 4 மாணவி வி. நிக்ஷிகா மற்றும் தரம் 11 மாணவி ஆர். லக்ஷிகா ஆகியோர் உரையாற்றினர். பின்னர் வித்தியாலய தினத்தை முன்னிட்டு கேக் வெட்டியும் கொண்டாடப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் ஆசிரியை திருமதி ஏ. லில்லி தெரேசா நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக, பாடசாலை காரியாலயத்தில் முன்னாள் அதிபர்களின் புகைப்பட திறப்பு நிகழ்வும் நடைபெற்றது.

முன்னாள் அதிபர்களின் புகைப்படங்களுக்கு அனுசரணை வழங்கிய முன்னாள் அதிபர் எம். வசந்தகுமார், பழைய மாணவரான அமரர் ஜெயபிரகாஷ் அவர்களின் தாயார் திருமதி கே. ஜெயலலிதா மற்றும் புதிய பாடசாலைக் கொடிக்கு அனுசரணை வழங்கிய பழைய மாணவரும் நலன் விரும்பியுமான கார்மேகம் யதுர்ஷன் ஆகியோருக்கு பாடசாலை நிர்வாகம் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

மேலும், நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் நிர்வாகம் சார்பில் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன.

நடராஜா மலர்வேந்தன்

ஆப்கானிஸ்தான் வைத்தியசாலைமீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 400 பேர் பலி!

ஆப்கானிஸ்தான், காபூலில் உள்ள வைத்தியசாலைமீது hகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் சுமார் 250 பேர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவே (16) இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா தெரிவித்துள்ளார்.

எனினும், மக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் தாங்கள் தாக்குதல் மேற்கொள்ளவில்லை என பாகிஸ்தான் மறுத்துள்ளது.

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் வைத்தியசாலை போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிற சூழலில், அண்மைய காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே போர் மூண்டது.

மத்திய கிழக்கு போர்ச்சூழல்: நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது!

மார்ச் மாதத்துக்குரிய இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வு இன்று 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

முக்கிய சில விடயங்கள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெறவுள்ளன. சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைகள்மீதான விவாதங்களும் இடம்பெறவுள்ளன.

மத்திய கிழக்கு போர்ச்சூழல் மற்றும் சமகால அரசியல் விவகாரங்கள் பற்றியும் ஆளும் மற்றும் எதிரணிக்கிடையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறக்கூடும்.

தரமற்ற நிலக்கரியால் மின் கட்டணத்தை உயர்த்த அரசு சதி!

தரமற்ற நிலக்கரி பயன்பாட்டினால் ஏற்பட்டுள்ள மின் உற்பத்தி இழப்பை ஈடுசெய்ய, மின்சாரக் கட்டணத்தை அதிகரித்து அந்தச் சுமையை மக்கள் மீது சுமத்த அரசு முயற்சித்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியுள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு விடுத்த விசேட அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“வரலாற்றில் முதல் முறையாகத் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்பட்டமையால், லக்விஜய நுரைச்சோலை மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய 810 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது போயுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 678 மெகாவோட் மாத்திரமே உற்பத்தியாகியுள்ளது.

* முதல் அலகு: 216 மெகாவோட்
* இரண்டாம் அலகு: 230 மெகாவோட்
* மூன்றாம் அலகு: 232 மெகாவோட்

நிலக்கரி மூலம் மின் உற்பத்தி குறையும் போது, அதிக செலவுடைய எரிபொருள் மின் நிலையங்களை நாட வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் மேலதிக உற்பத்திச் செலவை, 75 இலட்சம் மின்சார நுகர்வோரிடமிருந்து அறவிட அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய கிழக்கின் போர்ச் சூழலை ஒரு சாட்டாகக் கூறி, தவறான தகவல்கள் மூலம் மின் கட்டணத்தை உயர்த்தும் ‘மக்கள் விரோத’ செயலில் அரசு ஈடுபட்டுள்ளது.

நுரைச்சோலையில் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்படுவது குறித்து அரசு நாட்டுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

அரசின் இந்த மோசடி நடவடிக்கையால் மின் கட்டணத்தை உயர்த்துவது, மக்களுடன் செய்துகொண்ட சமூக உடன்படிக்கையை மீறும் செயலாகும்.” – என்று சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

போரைக் காரணமாகக் காட்டி மின் கட்டணத்தை உயர்த்த அரசு முற்பட்டால், மக்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராடப் போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேட்டோவையும் வம்புக்கு இழுக்கிறார் ட்ரம்ப்!

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத் தவறினால், அந்த அமைப்பு மிக மோசமான எதிர்காலத்தைச் சந்திக்க நேரிடும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

“உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் இந்த முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்கு கூட்டு முயற்சி தேவை. இதில் நேட்டோ நட்பு நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் இணைய வேண்டும்.

ஹார்முஸ் நீரிணை மூலம் பயனடையும் நாடுகள், அங்கு எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய உதவ வேண்டும். இதற்கு எவ்விதப் பதிலும் இல்லாமலோ அல்லது எதிர்மறையான பதில் வந்தாலோ, அது நேட்டோ அமைப்பின் எதிர்காலத்திற்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் கருதுகிறேன்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

நம்மிடம் நேட்டோ என்ற ஓர் அமைப்பு உள்ளது. நாங்கள் அவர்களிடத்தில் மிகவும் கனிவாகவே நடந்து கொண்டிருக்கிறோம். உக்ரைன் விவகாரத்தில் அவர்களுக்கு உதவ வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லை. உக்ரைன் எங்களிடமிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. ஆயினும் நாங்கள் அவர்களுக்கு உதவினோம்.

இப்போது அவர்கள் எங்களுக்கு உதவுகிறார்களா என்பதைப் பார்ப்போம். ஏனெனில், ‘நாங்கள் அவர்களுக்குத் துணையாக இருப்போம்; ஆனால் அவர்கள் நமக்குத் துணையாக இருக்க மாட்டார்கள்’ என்று நான் நீண்ட காலமாகவே கூறி வருகிறேன்.

அவர்கள் நமக்குத் துணையாக இருப்பார்களா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அமெரிக்காவைப் போலன்றி, ஐரோப்பாவும், சீனாவும் வளைகுடாப் பிராந்தியத்திலிருந்து வரும் எண்ணெயையே பெருமளவில் சார்ந்திருக்கிறது” என்றார்.

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் சீனா உதவத் தவறினால், இந்த மாத இறுதியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் தான் திட்டமிட்டுள்ள சந்திப்பு ஒத்திவைக்கப்படக்கூடும் என்றும் ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்தார்.

நேட்டோ என்பது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 31 நாடுகளை உள்ளடக்கிய ஒரு ராணுவக் கூட்டணியாகும்.

இது கூட்டுப் பாதுகாப்பை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. அதாவது, இந்த அமைப்பில் உள்ள ஒரு உறுப்பு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து உறுப்பு நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும்.

 

” அடுத்த தேர்தலில் மக்கள் எமக்கே வாக்களிப்பார்கள்”

அடுத்த தேர்தலில் மக்கள் எமக்கே வாக்களிப்பார்கள்: ஜே.வி.பி.போன்று நாம் பொறுப்பற்ற விதத்தில் செயல்படவில்லை!

“எமக்கு கட்சி அரசியலைவிட தாய்நாடுதான் முக்கியம். எனவே, ஜே.வி.பியினர்போன்று நெருக்கடிய சூழ்நிலையிலும் அரசியல் நடத்தி நாட்டுக்கு ஒருபோதும் விளைவிக்கமாட்டோம்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாட்டில் கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தவேளை, ஜே.வி.பியினர் பொறுப்பற்ற விதத்திலேயே அரசியலை முன்னெடுத்திருந்தனர்.

ஆனால் நாம் தற்போது எதிரணியில் இருந்தாலும் நாட்டுக்கு தீங்கு விளைவிக்ககூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபடமாட்டோம் .
அடுத்த தேர்தலில் ஜே.வி.பியினரால் ஆட்சிக்கு வரமுடியாது.

எமக்குதான் மக்கள் ஆட்சியை வழங்குவார்கள். எனவே, நாடு நெருக்கடியை சந்திப்பதை நாம் விரும்பவில்லை.

நெருக்கடியான சூழ்நிலைகளின்போது நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கக்கூடிய இயலுமை எமது கட்சிக்கு உள்ளது. போர் காலத்தில் அதனை செய்து காட்டினோம் எனவும் மொட்டு கட்சி செயலாளர் குறிப்பிட்டார்.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

ஈரான் வான்வெளியில் அமெரிக்க ஆதிக்கம்!

0
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின்...

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” நாளை ஆரம்பம்!

0
- நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம். இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும்...

முதல் வெற்றியை பதிவு செய்யுமா சி.எஸ்.கே?

0
மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் , லக்னோ ஆகிய அணிகள் மோத உள்ளன. இன்றிரவு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை...