Home Blog Page 25

துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்: விமானப் போக்குவரத்து நிறுத்தம்!

 

துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை நடந்த ட்ரோன் தாக்குதலில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

துபாயில் அமைந்துள்ள உலகின் மிகவும் பரபரப்பான சர்வதேச விமான நிலையத்தின் அருகே நடந்த இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் துபாய் அதிகாரிகள் தெரிவித்தனர். தீயை அணைக்க துபாய் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) அருகே நடந்த ட்ரோன் தாக்குதலில் எரிபொருள் தொட்டிகளில் ஒன்று பாதிக்கப்பட்டது. தீயை கட்டுக்குள் கொண்டுவர துபாய் பாதுகாப்பு படைகள் தற்போது தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

இச்சம்பவத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் விமான நிலைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் துபாய்க்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் விமான நிலையத்திற்கு அருகில் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, நகரத்தின் சில பகுதிகளில் வான் பாதுகாப்பு எச்சரிக்கைகள் ஒலித்தன. ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் அறிவித்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மூன்று முக்கிய துறைமுகங்களை காலி செய்ய ஈரான் நேற்று அழைப்பு விடுத்த நிலையில், இன்று இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை கையாளும் முக்கிய முனையமான கார்க் தீவில் சமீபத்தில் தாக்குதல்களை நடத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துறைமுகங்கள், கப்பல் தளங்கள் மற்றும் மறைவிடங்களைப் பயன்படுத்துவதாக அமெரிக்கா மீது ஈரான் குற்றம் சாட்டியது.

மனோ, அநுர தொலைபேசி உரையாடல்: அடுத்த வாரம் நேரடி சந்திப்பு!

 

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோருக்கு இடையில் இன்று தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

“ஜனாதிபதி அனுர, தற்போது தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பதில்லை”, என மனோ கணேசன், நேற்று நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது, பகிரங்கமாக கூறி இருந்தார்.

இதையடுத்தே இன்று இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது.

இந்த தொலைபேசி உரையாடலின் போது, தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அவசர பிரச்சினைகள் குறித்து உரையாடுவதற்காக மனோ கணேசன் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

இதற்கமைய அடுத்த வாரம் தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழுவை, சந்தித்து உரையாட அழைப்பு விடுத்துள்ளார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

போர்க்கப்பல்: ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த முக்கிய நாடுகள்!

 

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை முடக்கியுள்ளதால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தீர்க்க, அமெரிக்க அஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நட்பு நாடுகளின் இராணுவ உதவியைக் கோரியுள்ளார்.

இருப்பினும், இந்தப் பதற்றமான சூழலில் போர்க்கப்பல்களை அனுப்ப ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளன.

குறிப்பாக ஜப்பான் தனது எண்ணெய் இருப்புகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ள அதே வேளையில், அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் நேரடியாகப் போரில் ஈடுபடத் தயக்கம் காட்டுகிறது.

பிரிட்டன் போன்ற நாடுகள் வான்வழி கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பரிசீலித்தாலும், மேலதிக இராணுவத் தலையீடு நிலைமையை மோசமாக்கும் என்று அஞ்சுகின்றன.

இந்தப் பொருளாதாரப் பாதிப்புகளைக் குறைக்க சீனா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கும் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை விளம்பரப்படுத்த விஜய் சேதுபதி பேட்டிகள் அளித்துள்ளார். அதில் தனது தயாரிப்பில் உருவான படங்கள் அனைத்தும் நஷ்டத்தையே ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார்.

அப்பேட்டியில் விஜய் சேதுபதி, “நான் தயாரித்த படங்கள் அனைத்துமே எனக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தி இருக்கிறது. எனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் முதலில் ‘சங்குத்தேவன்’ என்ற படத்தை உருவாக்கினேன். ஆனால், அப்படம் கைவிடப்பட்டதால் எனக்கு 1.75 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ‘ஜூங்கா’ மற்றும் ‘லாபம்’ ஆகிய படங்களும் எனக்கு நஷ்டம் தான்.

ஆனால், இப்படங்கள் எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினாலும், அவற்றில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. ஏனெனில் அப்படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். தற்போது ‘காட்டான்’ வெப் சீரிஸை தயாரித்துள்ளேன். இதற்கான நிதியை ஹாட்ஸ்டார் நிறுவனம் வழங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சரின் ‘தலை’ குறிவைப்பு: 18 ஆம் திகதி பிரேரணை கையளிப்பு!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை மறுதினம் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கையளிக்கப்படவுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த
தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

மார்ச் மாதத்துக்குரிய 2ஆவது வார நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகி, 20 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்நிலையிலேயே எம்.பிக்களிடம் நாளை கையொப்பம் பெறப்பட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை மறுதினம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, தரமற்ற நிலக்கரி இறக்குமதி என்பன உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே மேற்படி பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

அரசின் நிர்வாகத் தோல்வியால் நாடு மீண்டும் நெருக்கடிக்குள்!

அரசின் திட்டமிடப்படாத மற்றும் திறமையற்ற நிர்வாகம் காரணமாக நாடு மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியுள்ளார்.

கேகாலை தேர்தல் தொகுதி அலுவலகத் திறப்பு விழாவில் நேற்று (15) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

“மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் நான் எச்சரித்தபோது, அரசு அதைக் கேலி செய்தது. ஆனால், அந்த எச்சரிக்கை விடுத்து 12 நாள்களுக்குள்ளேயே மீண்டும் கியூ.ஆர். குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. முறையான ‘மூலோபாய திட்டமிடல்’ அரசிடம் இல்லாததே இதற்குப் பிரதான காரணமாகும்.

ரஷ்யாவுடனான நேரடி இராஜதந்திர உறவுகள் மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறு நாம் வழங்கிய ஆலோசனைகளை அரசு ஆரம்பத்தில் நிராகரித்தது. தற்போது கடும் நெருக்கடி ஏற்பட்ட பின்னரே ரஷ்ய தூதுவரைச் சந்திக்க முற்படுகின்றனர். அதேபோல், தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலக்கரியும் தரமற்றது என்பது உறுதியாகியுள்ளது. இதனால் 135 மெகாவோட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதன் சுமையை இறுதியில் மின் நுகர்வோரே சுமக்க வேண்டியுள்ளது.

எரிபொருளுக்கு கியூ.ஆர். முறைமை கொண்டுவரப்பட்டதைப் போல, அரசின் இப்போக்கைப் பார்த்தால் எதிர்காலத்தில் விவசாயிகளின் உரங்களுக்கும் கியூ,ஆர். குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசு, எவ்வித முன்னாயத்தமும் இன்றி நாட்டை ஏமாற்றி ஆட்சி நடத்தி வருகின்றது. எதிர்க்கட்சி வழங்கும் நல்ல ஆலோசனைகளைக்கூட ஆணவத்தால் நிராகரிக்கின்றனர். அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகப் பொய்களைப் பரப்புவதிலும் காட்டும் ஆர்வத்தை, நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இவர்கள் காட்டவில்லை.” – என்றார்.

டித்வா சூறாவளி பாதிப்பின் பின்னர் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு கோரியபோதும், அதனை ஜனாதிபதி உதாசீனம் செய்தார் என்று குறிப்பிட்ட சஜித் பிரேமதாஸ, அரசியல் பழிவாங்கல்களால் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதையும் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உரையாற்றினர்.

மரக்கறி விலைப்பட்டியல் (16.03.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய மேலும் ஒரு வீராங்கனை ஈரான் திரும்பினார்!

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய ஈரான் மகளிர் கால்பந்து அணியைச் சேர்ந்த ஐந்தாவது வீராங்கனை தனது விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு தாயகம் திரும்பியுள்ளார்.

ஈரான் அணியின் கேப்டன் சஹ்ரா கன்பாரி என அடையாளம் காணப்பட்டுள்ள இவர், தேசபக்தி உணர்வுடன் நாடு திரும்பியதாக ஈரான் ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன.

முன்னதாக, தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது மௌனம் காத்ததால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி ஏழு வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு கோரினர்.

தற்போது அவர்களில் இருவர் மட்டுமே ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ள நிலையில், மற்றவர்கள் தங்களது முடிவை மாற்றிக்கொண்டு வெளியேறிவிட்டனர்.

சக வீராங்கனைகள் நாடு திரும்புவதற்கு ஈரான் அரசின் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக எழுந்தகுற்றச்சாட்டுகளை ஆஸ்திரேலிய அரசு மறுத்துள்ளது.

வீட்டிலிருந்து பணியாற்றும் முறைமை குறித்து மேலும் ஆராய்ந்து அறிக்கைமுன்வைக்க பணிப்பு

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட நிறுவனத் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது குறிப்பாக சுகாதாரம், கல்வி, கைத்தொழில், விவசாயம் மற்றும் கடற்றொழில் போன்ற துறைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்தந்தத் துறைகளில் தற்போதைய எரிபொருள் தேவைகள் குறித்து அமைச்சுக்களின் செயலாளர்களால் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த ஜனாதிபதி, சுகாதாரத்துறை போன்றவற்றுக்குத் தேவையான அத்தியாவசிய எரிபொருள் கையிருப்புகளைப் பிரதேச ரீதியாகப் பராமரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயுமாறு கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று, வீட்டிலிருந்து பணியாற்றும் முறைமை குறித்து மேலும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் செயலாளர்களுக்கு இதன்போது அறிவுறுத்தினார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகள் குறித்து முன்கூட்டியே எதிர்வுகூற முடியாது என்பதால், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், அதற்காக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறையை (QR Code) மேலும் முறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறையில் காணப்படும் குறைபாடுகளை மிக விரைவில் திருத்தியமைத்து அதனைப் புதுப்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். மேலும், உருவாகும் புதிய நிலைமைகள் குறித்து தொடர்ச்சியான கண்காணிப்புடனும் அவதானத்துடனும் இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு துறையும் தனித்தனியாக முடிவெடுப்பதற்குப் பதிலாக, ஒட்டுமொத்தமாகச் சிந்தித்து சவால்களுக்கான மாற்று வழிகளைக் கண்டறிந்து செயற்படுத்த வேண்டும் என்றும் இதற்காகப் பரஸ்பர புரிந்துணர்வுடன் விரைவாகச் செயற்படுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக்க சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதார ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷான் கமகே ஆகியோருடன் சுகாதாரம், கல்வி, கைத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை!

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அதிகாரிகள், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவித்த நிலையில், அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரின் தொடக்கத்தில் நடந்த தாக்குதலில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பிறகு அவரின் மகன் மொஜ்தபா காமேனி அதிகாரத்திற்கு வந்தார்.

இந்த சூழலில், “வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் மொஜ்தபா காமேனி காயமடைந்துள்ளார்; அநேகமாக அவரது முகம் சிதைந்திருக்கலாம்” என்று அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் கூறினார்.

இன்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,

“ஈரானில் சமீபத்தில் உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மொஜ்தபா காமேனி உயிருடன் இருக்கிறாரா என்பதே எனக்குத் தெரியவில்லை. இதுவரை, அவர் பொதுவெளியில் தோன்றவில்லை.

அவரின் மரணம் குறித்த செய்திகள் தற்போது வெறும் வதந்தி மட்டுமே. அவர் உயிருடன் இல்லை என்று எனக்குத் தகவல்கள் வருகின்றன. ஒருவேளை அவர் உயிருடன் இருந்தால், அவர் தனது நாட்டிற்காக மிகவும் புத்திசாலித்தனமான ஒன்றைச் செய்ய வேண்டும்; அதுதான் சரணடைவது” என்று கூறினார்.

இந்த சூழலில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “புதிய உச்ச தலைவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் நேற்று எங்களுக்கு தனது செய்தியை அனுப்பினார்; அவர் தனது கடமைகளைத் தொடர்ந்து ஆற்றுவார்” என்று தெரிவித்தார்.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

ஈரான் வான்வெளியில் அமெரிக்க ஆதிக்கம்!

0
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின்...

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” நாளை ஆரம்பம்!

0
- நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம். இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும்...

முதல் வெற்றியை பதிவு செய்யுமா சி.எஸ்.கே?

0
மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் , லக்னோ ஆகிய அணிகள் மோத உள்ளன. இன்றிரவு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை...