Home Blog Page 26

மாகாணத் தேர்தல் இவ்வருட இறுதியில்!

நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் தேர்தலுக்கான திகதி மற்றும் எந்த முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த உத்தேசித்த மாகாண சபைத் தேர்தலில், புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள குழு இவ்வாரம் கூடவுள்ளது.

இக்கூட்டத்தின் போது தேர்தல் முறைமை மற்றும் புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை தொடர்பான பரிந்துரைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

இது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போது அரச தரப்பால் வெளியிடப்படவுள்ளன. அத்துடன், குறித்த குழுவின் பரிந்துரைகளை ஜூன் மாதத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை குறித்து கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு இராஜதந்திர மையங்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஏற்கனவே கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன்போது எட்டப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இவ்வருடத்துடன் நிறைவடைகின்றது. இந்தச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு மனித உரிமைகள், நல்லாட்சி உள்ளிட்ட 27 நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இதில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது ஆகியன பிரதான நிபந்தனைகளாக உள்ளன.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கை மீது தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், அதற்கு முன்னதாகவே தேர்தலுக்கான திகதியை அறிவிக்க அரசு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த சிறீதரன் எம்.பி.

மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த சிறீதரன் எம்.பி.

– தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்து கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய பேரருட் கலாநிதி ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை ஆண்டகையை இன்று (14) காலை சந்தித்துக் கலந்துரையாடினார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் சமகால சவால்கள் தொடர்பாக ஆயரின் கவனத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டு சென்றார்.

இந்தச் சந்திப்பின்போது தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் உடனிருந்தார்.

சமகால அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் தமிழ் மக்களின் நலன் சார்ந்த அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரக புஜாயிரா துறைமுகத்தின் மீது ஈரான் தாக்குதல்

ஐக்​கிய அரபு அமீரகத்​தி​லுள்ள புஜா​யிரா துறை​முகத்​தின் மீது ட்ரோன்​கள் மூலம் ஈரான் கடும் தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது.

அணுசக்தி ஒப்​பந்த விவ​காரம் தொடர்​பாக ஈரான் மீது அமெரிக்கா – இஸ்​ரேல் இணைந்து கடந்த மாதம் 28-ம் திகதி தொடங்​கிய போர் இன்று 16 ஆவது நாளாக நீடிக்கின்றது.

இப்​போரில் ஈரானின் ராணுவ தளங்​கள், போர்க் கப்​பல்​கள், விமானங்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டன. இதற்கு பதிலடி​யாக இஸ்​ரேல் மற்​றும் வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க தளங்​களை ஈரான் தாக்கி வரு​கிறது.

இதனிடையே உலகின் கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்​தில் முக்​கிய பாதை​யாக உள்ள ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் முடக்கி உள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய், எரி​வாயு விநி​யோகம் உலகள​வில் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த ஜலசந்தி வழி​யாக கப்​பல் போக்​கு​வரத்தை தடுக்​கக் கூடாது என்று அமெரிக்கா எச்​சரித்​துள்​ளது.

இந்​நிலை​யில் நேற்று ஐக்​கிய அரபு அமீரகத்​தி​லுள்ள புஜா​யிரா துறை​முகத்​தின் மீது ஈரான் படைகள் ட்ரோன்கள் மூலம் கடும் தாக்​குதல் நடத்​தின.

துறைமுகம் மீது ட்ரோன்களால் ஈரான் படைகள் தாக்கியபோது அமெரிக்கப் படைகள் அந்த ட்ரோன்களை இடைமறித்துத் தாக்கின. இதன் காரணமாக கீழே விழுந்த ட்ரோன்களின் பாகங்களால் அங்கிருந்த எண்ணெய்க் கிடங்குகள் தீப்பிடித்து எரிந்தன.

ஹார்​முஸ் ஜலசந்​திக்கு அருகே இந்த முக்​கிய​மான புஜா​யிரா துறை​முகம் அமைந்​துள்​ளது. இந்த துறை​முகத்​தில் கப்​பல்​களுக்கு எண்​ணெய் வகைகளை ஏற்​றிக் கொண்​டிருந்த போது இந்​தத் தாக்​குதல் நடந்​துள்​ளது என்று அங்​கிருந்து வரும் செய்​தி​கள் தெரிவிக்​கின்​றன.

மரக்கறி விலைப்பட்டியல் (15.03.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

இலங்கையில் மீண்டும் QR குறியீட்டு முறைமை!

இலங்கையில் மீண்டும் எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நுகர்வோர் மத்தியில் ஏற்பட்டுள்ள அசாதாரண கேள்வி மற்றும் சட்டவிரோதப் பதுக்கலைக் கட்டுப்படுத்தி, இருப்பிலுள்ள எரிபொருளைச் சீராக நிர்வகிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

இதன்படி, இலங்கையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஞசு குறியீட்டு முறைமை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை 6.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு வாராந்தம் ஒதுக்கப்பட்ட எரிபொருள் அளவு

வாகன வகைகளுக்கான எரிபொருள் அளவுகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன:

1. பேருந்துகள் – 60 லீற்றர்

2. மோட்டார் சைக்கிள் – 5 லீற்றர்

3. வேன் – 40 லீற்றர்

4. மோட்டார் கார் – 15 லீற்றர்

5 லொறி – 200 லீற்றர்

6.வாகனங்கள் (Land Vehicles) – 25 லீற்றர்

7. முச்சக்கர வண்டி – 15 லீற்றர்

8. விசேட பயன்பாட்டு வாகனம் – 40 லீற்றர்

9. குவாட்ரிசைக்கிள் (Land Vehicles) – 5 லீற்றர்

ஏற்கனவே QR குறியீட்டிற்கு பதிவு செய்துள்ள வாகன உரிமையாளர்கள், தங்களது வாகன உரிமையும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணும் மாற்றமில்லையெனில், 2026 மார்ச் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் fuelpass.gov.lk இணையதளத்தின் “Vehicle Login” பகுதியின் மூலம் தங்களது QR குறியீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

வாகன உரிமை அல்லது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மாற்றமடைந்திருந்தால், அவர்கள் 2026 மார்ச் 15 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் மீண்டும் இணையதளத்தின் “Vehicle Registration” பகுதியின் மூலம் புதிதாக பதிவு செய்ய வேண்டும்.

அதேபோல், இதுவரை QR குறியீட்டிற்கு பதிவு செய்யாதவர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் 2026 மார்ச் 15 காலை 6.00 மணி முதல் fuelpass.gov.lk இணையதளத்தின் மூலம் பதிவு செய்து QR குறியீட்டை பெற முடியும்.

 

‘மின்சார மாபியா’வுக்கு தீனி போடுகின்றது அரசு

தற்போதைய அரசு முன்னெடுக்கும் தரமற்ற நிலக்கரி ஊழலானது, நாட்டில் நிலவும் எரிபொருள் மின்நிலைய மாபியாவை மேலும் வலுப்படுத்துமே ஒழிய வேறொன்றுமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அரசு நாட்டுக்குத் தரமற்ற நிலக்கரியையே இறக்குமதி செய்கின்றது என்பதை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பம் முதலே கூறி வருகின்றது. நுரைச்சோலை மின்நிலையத்தின் மூன்று இயந்திரங்கள் ஊடாக நேற்று 810 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 680 மெகாவோட் மாத்திரமே உற்பத்தியாகியுள்ளது. இந்த 130 மெகாவோட் தட்டுப்பாட்டுக்குத் தரமற்ற நிலக்கரி பயன்பாடே பிரதான காரணமாகும்.

தரமற்ற நிலக்கரியால் போதுமான மின்சாரம் உற்பத்தி செய்யப்படாத போது, அதனை ஈடுகட்ட எரிபொருள் மின்நிலையங்களிலிருந்து அதிக விலைக்கு மின்சாரம் பெறப்படுகின்றது. இந்த நட்டத்தை இறுதியில் மின்சார நுகர்வோரான பொதுமக்களே தாங்க வேண்டியுள்ளது.

இந்தத் தரமற்ற நிலக்கரியால் தற்போது மின்சாரத் துறையில் ‘அவசர கொள்முதல்’ நிலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. வியப்பூட்டும் விடயம் என்னவென்றால், இதுவரை தரமற்ற நிலக்கரியை விநியோகித்த அதே நிறுவனத்துக்கே மீண்டும் புதிய ஒப்பந்தங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது மிகவும் ஆபத்தான மற்றும் மோசடியான செயலாகும்.

வலுச்சக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பாகும். ஆனால், தற்போது ‘வலுச்சக்தி அபாயமே’ காணப்படுகின்றது. தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்துவதால் மின் உற்பத்தி உபகரணங்கள் சேதமடைவதுடன், சாம்பல் சதவீதம் அதிகரிப்பதால் மக்களின் உடல் நலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அரச அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் நுரைச்சோலைக்கு விஜயம் செய்தபோது, மின் உற்பத்தி குறைவாக இருப்பதை நேரடியாகக் கண்டும், நிலக்கரியில் எந்தப் பிரச்சினையும் இல்லை என நாட்டுக்குப் பொய் உரைப்பது கண்டிக்கத்தக்கது.

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் சர்வதேச ரீதியில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள தருணத்தில், இவ்வாறான ஊழல்கள் நாட்டுக்கு இழைக்கப்படும் குற்றமாகும். முறைமை மாற்றம் பற்றிப் பேசிக்கொண்டு ஊழல், மோசடிகளையே அரசு முன்னெடுத்து வருகின்றது.

அதிக மின்சாரக் கட்டணத்தை அறவிட்டு, இந்த ஊழலின் சுமையை மக்கள் மீது சுமத்துவதற்காக மக்கள் இந்த அரசுக்கு ஆணையை வழங்கவில்லை.” – என்றார்.

எனது அழைப்புக்கு அநுர பதிலளிப்பதில்லை: மனோ

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், தனது தொலைபேசி அழைப்புகளுக்கு அவர் பதிலளிப்பதில்லை என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தத் தகவலைத் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாங்கள் இருவரும் எதிர்க்கட்சியில் இருந்தபோது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாரம் ஒருமுறையாவது இரவு 10 மணிக்குப் பின்னர் எனக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திப் பேசுவார். பல்வேறு விடயங்கள் குறித்து நாங்கள் நீண்ட நேரம் கலந்துரையாடுவோம்.

ஆனால், அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், நான் அவருக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினாலும் கூட அவரிடமிருந்து எந்தப் பதிலும் வருவதில்லை. அது பரவாயில்லை.” – என்றார்.

ஜனாதிபதியான பிறகு அநுரகுமார திஸாநாயக்கவுடனான தொடர்பாடலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் குறித்து மனோ கணேசன் எம்.பி. வெளியிட்ட இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கார்க் தீவுமீது அமெரிக்கா தாக்குதல்: ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க விமானங்கள் சேதம்!

ஈரானின் கச்சா எண்ணை ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றும் கார்க் தீவு மீது அமெரிக்கா சரமாரியாக குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது.

பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவு, ஈரானின் எண்ணை முனையமாக செயல்படுகிறது.அங்கு பெட்ரோலிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

ஈரானின் கச்சா எண்ணை ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்தை இந்த தீவு கையாளுகிறது. மேலும் அந்நாட்டின் எரிசக்தித் துறைக்கு ஒரு மிக முக்கிய மையமாகவும் இது திகழ்கிறது.

ஈரானுக்கு முக்கியம் வாய்ந்த அந்த தீவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி அங்குள்ள ராணுவ உள் கட்டமைப்புகள், கடற்படை தளம், விமான நிலைய கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை அழித்து உள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியதாவது,

” அமெரிக்க ராணுவம் மத்திய கிழக்கு வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஒன்றை நடத்தியது.

ஈரானின் மகுடமாகத் திகழும் கார்க் தீவில் அனைத்து ராணுவ இலக்குகளையும் அமெரிக்க ராணுவம் முற்றிலுமாக அழித்துள்ளது.

மனிதநேயம் மற்றும் கண்ணியம் கருதி அந்த தீவில் உள்ள எண்ணை உள்கட்டமைப்புகளை அழிக்காமல் விட்டுவிட நான் முடிவெடுத்துள்ளேன்.

ஆனால் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் தடையின்றியும் பாதுகாப்பாகவும் செல்வதற்கு ஈரானோ அல்லது வேறு எவரேனும் இடையூறு செய்தால், எனது இந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்வேன்.

நாங்கள் தாக்க விரும்பும் எந்தவொரு இலக்கையும் தற்காத்துக்கொள்ளும் திறன் ஈரானிடம் துளியும் இல்லை. ஈரானின் ராணுவமும், இந்தத் தீவிரவாத ஆட்சியுடன் தொடர்புடைய மற்ற அனைவரும் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, தங்கள் நாட்டில் எஞ்சி இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனமாகும் ” என்று டிரம்ப் கூறி உள்ளார்.

ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க விமானங்கள் சேதம்!

அதேவேளை, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப் படைதளம் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதில் அமெரிக்க விமானப்படையின் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதமடைந்துள்ளன. மொத்தம் 5 விமானங்கள் சேதம் அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதேவேளையில் விமானங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும் அவை பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகம்மீது ஈரான் தாக்குதல்!

ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

தூதரக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

தாக்குதலைத் தொடர்ந்து தீவிபத்து ஏற்பட்டு கட்டிடத்தின் இருந்து கரும்புகை வெளியேறும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இது ஒரு ட்ரோன் தாக்குதல் என்று சில பாதுகாப்பு அதிகாரிகள் கூறினாலும், ஏவுகணை மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்கத் தூதரகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.பலமான பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் பாக்தாத் அமெரிக்கத் தூதரக வளாகத்தை ஈரானின் தாக்கியுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.⚡️

ஈரானின் புதிய உச்ச தலைவரின் தலைக்கு விலை நிர்ணயித்தது அமெரிக்கா!

ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி மற்றும் பல ஈரான் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அறிவித்துள்ளது.

ரானிய பயங்கரவாதத் தலைவர்கள்’ என்று குறிப்பிட்டு அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்த நபர்கள் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் பல்வேறு படைப்பிரிவுகளை கட்டளையிட்டு வழிநடத்துகிறார்கள். இது உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைத் திட்டமிடுகிறது, ஒழுங்கமைக்கிறது மற்றும் செயல்படுத்துகிறது.

இவர்களை பற்றிய தகுதியான தகவல்கள் அளித்தால் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வெகுமதி அளிக்கப்படும். இது நீதிக்கான வெகுமதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மிகப்பெரிய பரிசுகளில் ஒன்றாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா வெளியிட்டுள்ள தலைவர்கள் பட்டியலில் மோஜ்தபா காமேனி உட்பட புலனாய்வு அமைச்சர் எஸ்மாயில் காதிப், துணைத் தலைமைத் தளபதி அலி அஸ்கர் ஹெஜாசி, மேஜர் ஜெனரல் யஹ்யா ரஹீம் சஃபாவி, உள்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் எஸ்கந்தர் மோமெனி மற்றும் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி உள்ளிட்ட பல ஈரான் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே அதிகரித்த பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க பாதுகாப்புத்துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

முதல் வெற்றியை பதிவு செய்யுமா சி.எஸ்.கே?

0
மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் , லக்னோ ஆகிய அணிகள் மோத உள்ளன. இன்றிரவு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை...

மரக்கறி விலைப்பட்டியல் (05.04.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அஞ்சமாட்டோம்: ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடுவை நிராகரித்தது ஈரான்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் விதிக்கப்பட்ட 48 மணிநேர காலக்கெடுவை ஈரான் நிராகரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் ஹார்முஸ் நீரிணையை திறக்க அல்லது புதிய உடன்படிக்கையை எட்ட 48 மணிநேரக் கெடுவை...