இஸ்லாமிய புரட்சியையடுத்து 1979 இல் ஆட்சியை இழந்த ஈரானிய மன்னரின் மகனான ரெசா பஹ்லவி , பாரிஸில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஈரானில் அமையவிருக்கும் ஒரு இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தத் தான் தகுதியானவர் என்று பஹ்லவி , உக்ரைன் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார் என தெரியவருகின்றது.
அத்துடன், ரஷ்யாவுடன் ஈரான் கொண்டுள்ள இராணுவக் கூட்டணி மற்றும் உக்ரைன் போரில் ஈரானிய ட்ரோன்களின் பயன்பாடு ஆகியவை தொடர்பில் மேற்படி சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் தற்போதைய போக்கைக் கண்டித்த ஜெலென்ஸ்கி, ஒரு சுதந்திரமான ஈரானை உக்ரைன் விரும்புவதாகத் தெரிவித்தார்.
தனது நாட்டின் இறையாண்மையைக் காக்கப் போராடும் உக்ரைன் மக்களின் வலியை மற்ற நாடுகளை விடவும் ஈரான் நன்கு உணரும் என்று பஹ்லவி இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.3 ஓவரில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது. மழை காரணமாக 32 ஓவரில் 243 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது.இதனால் வங்கதேச அணி 23.3 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 41 ரன்னும், தவுஹித் ஹிருடோய் 28 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ராப், மாஸ் சதாகத் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.இதன்மூலம் பாகிஸ்தான் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரில் 1-1 என சமனில் உள்ளது.
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மோஜ்தபா காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 8-ம் தேதி மோஜ்தபா தனது தந்தை அலி காமேனியின் மறைவுக்குப் பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில், 12 நாட்களாக நீடித்து வரும் போரின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், மோஜ்தபா தனது ஒரு காலை இழந்ததோடு தற்போது கோமா நிலைக்கு சென்றுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் கிழக்குப் பகுதியில் உள்ள மஷாத் நகருக்கு அருகே மோஜ்தபா காமேனி சென்றுகொண்டிருந்தபோது, அவரது வாகனத்தை குறி வைத்து ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்துப் பேசிய பீட் ஹெக்செத், “ஈரானின் புதிய தலைவரைத் தாக்குவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அவர் ஒரு காலை இழந்து உயிருக்குப் போராடி வருகிறார். ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை எவ்வளவு பலமான பாதுகாப்பை வழங்கினாலும், எங்களின் துல்லியமான தாக்குதலில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது என்பதற்கு இதுவே சாட்சி” என்று தெரிவித்துள்ளார்.
மோஜ்தபா தற்போது டெஹ்ரானில் உள்ள சினா பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்குப் பலத்த பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோஜ்தபாவின் உடல்நிலை குறித்து ஈரான் இதுவரை அதிகாரபூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானில் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவருடன் Levan S. Dzhagaryan , வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijith Herath இன்று (13) கலந்துரையாடியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மத்திய கிழக்கு போர்ச்சூழலால் வளை குடா நாடுகளில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் விடயத்தில் அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையிலேயே ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெறுவது தொடர்பில் கொழும்பு அவதானம் செலுத்தீயுள்ளது.
ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா தற்காலிகமாக வளர்த்தியுள்ளது.
எனவே, பல நாடுகள் ரஷ்யாவில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றன.
இலங்கையின் மேற்படி கோரிக்கை தொடர்பில் ரஷ்ய அரசாங்கத்துக்கு உடனடியாக தெரியப்படுத்தப்படும் என ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த ஊழியர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வுகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும், அதுவரை, அனைத்து தரப்பினரும் புரிந்துணர்வுடன் செயல்பட்டு, எதிர்பார்க்கும் நோக்கங்களை அடைவதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவார்கள் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த ஊழியர்களுக்குரிய அனைத்து உரிமைகளும் புதிய நிறுவனங்களுக்குள் உறுதிப்படுத்தப்படுவதையும், நிறுவனங்களின் கீழ் ஊழியர் உரிமைகளைப் பாதுகாப்பதையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த இடைப்பட்ட காலத்தில் புரிந்துணர்வுடன் செயல்பட்டு தமது பங்களிப்பை வழங்குமாறு அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புச் செயற்பாட்டின் போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மத்திய கிழக்கின் போர் நிலைமையையும் அதைக் கையாள்வதில் எழுந்துள்ள சவால்களையும் தாம் புரிந்துகொள்கிறோம் என்றும், இந்த நேரத்தில் அரசாங்கத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும் அல்லது அரசியல் நோக்கங்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்றும் சுட்டிக்காட்டிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இந்த மறுசீரமைப்பு செயல்முறையை மிகவும் சரியாக நிறைவுசெய்வதற்கு பங்களிப்பதாகவும் தெரிவித்தனர்.
புதிய நிறுவனங்களில் முறையான நியமனக் கடிதத்தைப் பெறுவதும், கூட்டு ஒப்பந்தத்தின் தேவையும் இந்த செயல்பாட்டில் தாம் எதிர்கொண்ட இரண்டு முக்கிய பிரச்சினைகள் என்று சுட்டிக்காட்டிய தொழிற்சங்க பிரதிநிதிகள், அண்மையில் வலுசக்தி அமைச்சருடன் நடந்த கலந்துரையாடலின் போது இந்த பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும், இது தொடர்பாக ஜனாதிபதியின் தலையீட்டை எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே புதிய நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே கூட்டு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சருடனான கலந்துரையாடலில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, விரைாக அமைச்சரவையில் சமர்ப்பித்து, அங்கீகாரம் பெற்று அதை செயல்படுத்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
கூட்டு ஒப்பந்தத்தை எட்டும்போதும், தீர்க்கப்படாத பழைய பிரச்சினைகளைத் தீர்க்கும்போதும், தொழிற்சங்கங்களும் நிர்வாக அதிகாரிகளும் நடுநிலைமையில் இருந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மேலும் விளக்கினார்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதன் நோக்கங்களை விளக்கிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரசாங்கத்தின் அனைத்து எதிர்கால பொருளாதாரத் திட்டங்களும் முழுமையாக வலுசக்தியை மையமாகக் கொண்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.
எனவே, இந்நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய காரணியாக வலுசக்தித் துறை மாறி வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த சவாலை வெற்றிகொள்ள வலுசக்தி துறையை தயார்படுத்துவதில் வலுவான நிறுவனக் கட்டமைப்பின் அவசியம் உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மின்சார சபையிடம் உள்ள தரவுகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மையால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை குறித்தும் விளக்கிய ஜனாதிபதி, இந்த மறுசீரமைப்புச் செயல்பாட்டின் போது முறையான தரவு கட்டமைப்பை நிறுவுவது மற்றும் இத்தகைய துறையில் பேணப்பட வேண்டிய உயர் மட்ட நிதி ஒழுக்கம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
மேலும், இலக்குமயப்பட்ட ஊழியர் செயல்திறனை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக அண்மைய டித்வா சூறாவளி போன்ற அவசர நிலைமைகளின் போது இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பை இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டினார்.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மலையக மக்களின் அடையாளமான காமன்கூத்தை, நூறுவது வருடம் அரங்கேற்றும் திருப்தியில் கினிகத்தேனை, சீத்தாலெட்சுமி தோட்டம் (பிளக்குவாட்டர்)
அருணாசலம் லெட்சுமணன். அமைப்பாளர், நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம். அதிபர்- ம.மா-கொத்- உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயம்.
தென்னிந்தியாவில் இருந்து வருகைத்தந்து இலங்கையின் பெருந்தோட்ட பொறிமுறையினை விருத்தி செய்வதில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்கேற்பு மிக முக்கியத்திற்குரியதாக விளங்குகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பூர்வீக தொடர்பு நிலைகள் குறித்த ஆதாரங்கள் பல உள்ளன.
அவ் ஆதாரங்களை முன்வைப்பதில் இராமாயண சித்தரிப்புக்கள் குறித்த பார்வை மிகுந்த கவனத்தை பெறுகின்றன.
இவ்வாறான தொடர்பு நிலைகள் பல இருந்த போதிலும் 1823ம் வருடத்தை பிரதானப்படுத்திய நகர்வு ‘மலையக சமூக’ உருவாக்கத்தில மிக முக்கிய கட்டமாக அமைகிறது. அப் பிரயத்தனத்தில் ‘மலையகம் – 200’ என்ற கோசத்தின் பின்னணியில் இடம்பெற்ற நிகழ்வுகள் அவதானத்திற்குரியதாக அமைந்தன.
இவ் இருநூறு வருடகால அவதானிப்பில் மலையக மக்களின் வரவு, வாழ்வு, புலம்பெயர்வு, இருப்பின் ஆர்வம், புலம்பெயர்வின் நிர்ப்பந்தம், பிரயோக அரசியலின் பலம் பலவீனம், கலை பண்பாட்டு அம்சங்கள், கல்வி நிலைகள், பொருளாதார நகர்வுகள் போன்றவை பற்றிய அவதானங்களும் கவனத்தை பெறுகின்றன.
மலையக மக்களின் இருப்பை தக்க வைப்பதிலும் அவர்களின் அடையாளத்தை பிரதிபலிப்பதிலும் கலைகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. அக் கலைகளுள் முத்தாய்ப்பாகவும், மலையகத்தின் முக்கூத்துக்களில் மூலமாகவும் அமையும் காமன்கூத்து மலையக மக்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய வகிபங்கை பெறுகிறது எனலாம்.
அமரர். இராமசாமி கோபால் வாத்தியார்
இந்திய வம்சாவளி தமிழர்களின் புலம்பெயர்வு இலங்கையின் வழிபாட்டு மரபிலும் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன. பிரித்தானிய காலனித்துவ பொறிமுறையில் இலங்கையில் பெருந்தோட்டத்துறையை விருத்தி செய்யும் முனைப்பில் சொல்லெனா துயரங்களை அனுபவித்தவர்களாக இவர்கள் திகழ்கிறார்கள்.
இலங்கையில் 1823ம் வருடத்திற்கு முன்னர் வர்த்தக நோக்கம் கருதிய புலம்பெயர்வுகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான புலம்பெயர்வுகள் இலங்கையில் பூர்வீகத்தில் இருந்த முருக வழிபாட்டை மேலும் வலுப்படுத்தும் கைங்கரியத்தை ஆற்றியுள்ளது. மலையகம் உட்பட நாடுமுழுவதும் செட்டிமார்களின் வர்த்தக நடவடிக்கை நோக்கம் கருதிய வரவுகளால் சத்திரங்கள் உருவெடுத்தன. பின்னர் அச் சத்திரங்கள் முருகன் ஆலயங்களாக உருவெடுத்தன. அவ்வாறான ஆலயங்களுள் நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயமும் குறிப்பிடத்தக்கதாகும்.
1823ம் வருடத்தை பிரதானப்படுத்திய புலம்பெயர்வானது இலங்கையில் அம்மன் வழிபாட்டை நிலைநிறுத்துவதில் பெரிதும் துணைபுரிந்துள்ளது. அதன் தொடர்ச்சி நிலையிலேயே மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்த்தானம், நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்த்தானம் ஆகியன அமையப்பெற்றமை கவனத்திற்குரியதாகும். மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்த்தானம் இருநூறு வருடத்தை அடையாளப்படுத்தும் வகையில் கடந்த வருடம் தபால் திணைக்களத்துடன் இணைந்து நினைவு முத்திரையை வெளியிட்டுள்ளது. ஒரு கல்வி நிறுவனம் என்ற வகையில் கினிகத்தேனைக்கு அருகிலுள்ள நகரமாக நாவலப்பிட்டி விளங்குகிறது.
நாவலப்பிட்டி நகரில் அமைந்துள்ள கதிரேசன் மத்திய கல்லூரியும் தனது நூற்றாண்டை கொண்டாடிய மகிழ்வில் ‘அடையாள முத்திரையை வெளியிட்டுள்ளது. மலையகம் – 200 தொடர்பில் இலங்கையும் இந்தியாவும் இரு வேறுப்பட்ட முத்திரைகளை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அவ் இரு நாடுகளும் வெளியிட்டுள்ள முத்திரைகள், வழமை போலவே நமது தேயிலை பரிக்கும் காட்சியை மாத்திரம் பொதித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம் தபால் திணைக்களத்துடன் இணைந்து தனிப்பட்ட ரீதியாக நினைவு முத்திரையினை வெளியிட்டது. ‘நிகர்’ அமைப்பு வெளியிட்ட முத்திரை மலையகத்தின் வாழ்வியலையும், வரலாறையும், வளர்ச்சி நிலைமையினையும் எடுத்துக்காட்டும் முனைப்பில் திருப்தியை உணர்த்துவதாக அமைகிறது. அம் முத்திரை மலையக மக்களின் நேசிப்பிற்குரிய கலையான காமன்கூத்தையும் அடையாளப்படுத்தியுள்மை கவனத்திற்குரியதாகும்.
நூறாவது காமன் கூத்து நிகழ்வை தலைமையேற்று நடத்தும் காமன் வாத்தியார் நல்லு மோகனதாஸ்
‘கினிகத்தேனை’ இலங்கையில் இராமாயணத்துடன் தொடர்பு முக்கிய தளமாகிறது. இராமாயணத்தின் சித்தரிப்பிற்கமைய அனுமனால் வைக்கப்பட்ட தீ நூராமல் எரியத் தொடங்கியது. நூரள, நூரளை என்ற பிரயோகத்தின் அடையாளமாகி போன பெயராக ‘நுவரெலியா’ அமைகிறது. கினிகத்தேன நீர் வளமிக்க களமாகிறது. இலங்கையின் மிக நீளமான நதியும், அகலமான நதியும் இத்தளத்தின் ஊடாகவே செல்கின்றன. நீர் வளமிக்கதான நிலையில் அனுமனால் மூட்டப்பட்ட தீ இப் பகுதியில் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. தீ பரவவில்லை என்பதை சிங்களத்தில் ‘கினி கத்த நே’ என கூறுவார்கள். அப் பிரயோகத்தின் அடையாளதத்துடனே ‘கினிகத்ஹேன’ என அழைக்கப்பட்டு வந்துள்ளது. இராமாயணத்தில் தமிழ் மன்னன் இராவணனேடு தொடர்புபடும் ‘இராவணன் கல்வெட்டு’ தொடர்பில பல இடங்களில் அவதானிக்கலாம்.
கல்வெட்டுக்களுக்கு ஏற்ற கற்களாக கிரணைட் கற்கள் விளங்குகின்றன. அவ்வகையான கற்கள் இப்பிரதேசத்திலும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. புவியியல் ரீதியான தொடர்ச்சி நிலையில் இம்புல்பி;ட்டி, கல்லாறு, ஹோல்கம ஆகிய பிரதேசங்களுக்கு மிக அண்மையிலே இத் தோட்டமும் காணப்படுகின்றது. குறித்த பிரதேசங்களில் கிரணைட் கற்கள் அதிகம் விளைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ‘சீதை’ இராமாயணத்தின் முக்கிய பாத்திரம் என்ற வகையில் இத் தோட்டமும் ‘சீத்தாலெட்சுமி தோட்டம்’ என அழைக்கப்படுகின்றமை கவனத்திற்குரியதாகும்.
அவ்வாறே இருநூறு வருடங்களுக்கு முன்னர் இந்திய வம்சாவளி தமிழர்களின் வரவுப் பாதையின் முக்கிய அங்கமாக கினிகத்தேனையின் சுவடுகள் கவனத்திற்குரியனவாகும். மாத்தளை, கண்டி, கினிகத்தேன என்றவாறே தொப்பித்தோட்டமான அட்டன் பகுதிக்கான நடை பயணம் தொடர்ந்துள்ளது. அக் காலக்கட்டத்தில் இப் பாதையினூடாக பயணித்தவர்கள் கினிகத்தோனையை ‘ஒத்தக்கடை’ என்றே அடையாளப்படுத்தியுள்ளார்கள். கொழும்பு, கண்டி பிரதான பாதைகளின் கேந்திர நிலையம் என்ற வகையிலும் இந் நகரம் முக்கியத்துவம் பெறுகிறது.
இலங்கையின் முக்கியத்துவம் பெற்று விளங்கும் சிவனொளிபாதமலைக்கு அண்மித்த நகரம் என்ற வகையிலும் இத் தளம் முக்கியத்துவம் பெறுகிறது. இந் நகரத்தின் ஊடாகவே சிவனொளிபாத மலைக்கான பயணப்பாதையும் அமைந்துள்ளது. ஒத்தக்கடை என்ற நிலையில் இருந்து மிக விரைவாக முன்னேறி வரும் நகரமாக இந் நகரத்தின் வளர்ச்சி நலை அவதானத்திற்குரியதாகும். இந் நகரத்திற்கு அருகில் அமைந்த தோட்டங்களில் மலையக மக்களின் வாழ்வியலை அடையாளப்படுத்தும் பிரயத்தனங்கள் முக்கியம் பெறுகின்றன. அவ் வகையில் சீத்தாலெட்சுமி தோட்டத்தின் பங்கேற்கும் (பிளக்குவாட்டர் தோட்டம்) கலை நேசிப்பும் சிறப்பிடம் பெறுகின்றன.
மலையகத்தில் பல தோட்டங்கள் நமது அடையாளமான முக்கூத்துக்களையும் வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளன. சிற்சில பிரதேசங்களில் பொன்னர் சங்கர், அருச்சுணன் தபசு ஆகிய கூத்துக்கள் பயில் நிலையில் இருந்துள்ளன. மலையகத்தின் சகல பிரதேசங்களிலும் காமன் கூத்து செல்வாக்கு பெற்றிருந்தது.
மூத்த காமன் வாத்தியார் அமரர் இ. கோபால் அவர்களது ஆசியோடு முன்னெடுக்கும் குழுவினர்
கடந்த காலங்களில் வட மாகாணத்திற்கு மலையக மக்கள் புலம்பெயர்ந்த நிலையில் அப் பிரதேசத்திலும் காமன் கூத்தை நிலைபெற செய்திருந்தார்கள். கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் காமன் கூத்தின் பயில் நிலை குறைந்து வருகின்றமையும் கவலைக்குரியதாகும். அவ்வாறே பொன்னர் சங்கர் கூத்தை அரங்கேற்றுவதிலும் ஆர்வம் குறைந்து வருகிது. அருச்சுணன் தபசு கூத்தை அரங்கேற்றுவது மிக அரிதாகவே இடம்பெறுவதும் கவலைக்குரியதாகும். இந் நிலையில் நமது பாரம்பரியத்தை காக்க வேண்டிய பிரயத்தனத்துடன் ஒவ்வொரு வருடமும் இக் கூத்துக்களை அரங்கேற்ற பங்களிப்பு செய்யும் நம் மண்ணின் கலைஞர்கள் போற்றுதற்குரியவர்கள்.
கினிகத்தேனை, பிளக்குவாட்டர் தோட்டத்தில் இக் காமன் கூத்து பாரம்பரியத்;தை நிலைபெற செய்வதில் மூத்த காமன் வாத்தியார் அமரர் இராமசாமி கோபால் அவர்களது பங்கேற்பு மிகுந்த கவனத்தை பெறுகிறது. மிக நீண்ட காலமாக இத் தோட்டத்தில் காமன் கூத்தை அரங்கேற்றுவதை கட்டாய கடமையாகக் கொண்டு தன் வாழ்நாளை அர்ப்பணித்த நம் மண்ணின் உயரிய கலைஞராக கோபால் ஐயா திகழ்ந்தார்.
மிக அமைதியான சுபாவம் கொண்டவரான கோபால் வாத்தியார் சிறந்த அனுகுமுறையில் அனைவரையும் ஒன்றிணைத்து வருடந்தோரும் காமன் கூத்தை அரங்கேற்றுவதில் பெரும் பங்காற்றி வந்துள்ளார்.
பிளக்குவாட்டர் தோட்டத்து பொது மக்களை, இளைஞர்களை, அண்மையத் தோட்டத்து மக்களை, அருகிலுள்ள காமன் வாத்தியார்களை, வேடதாரிகளை, பாட்டு வாத்தியார்களை, தப்பிசை கலைஞர்களை, ஒப்பனை கலைஞர்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு வருடமும் காமன் கூத்தை அரங்கேற்றும் அவரது முனைப்பு மிகுந்த அவதானத்திற்குரியதாகும்.
பாடல் பாடுவதிலும் சிறந்த முன் மாதிரியாக விளங்கிய அண்ணார் இக் கூத்தின் உள்ளடக்கத்தை தெளிவுறுத்துவதிலும் முன் மாதிரியானவராக விளங்குகினார். எல்லாவற்றுக்கும் மேலாக தனக்கு தெரிந்த இக் கலையம்சத்தை இளந் தலைமுறையினருக்கு போதிப்பதிலும் இவரது முன் மாதிரி போற்றுதற்குரிதாகும். இவ்வாறான ஓர் ஆளுமையின் அமரத்துவம் இத் தோட்டத்து மக்களால் ஜீரணிக்க முடியாதவென்றாக அமைந்திருந்தது.
உதவி காமன் வாத்தியார் நல்லு மோகனதாஸ் அவர்களை நெறிப்படுத்தியதிலும் இக் கலையில் ஆர்வலர்களை உருவாக்குவதிலும் இ. கோபால் வாத்தியாரின் பங்கேற்பு பெருமிதமானதாகும். கோபால் ஐயா அவர்களது நெறிப்படுத்தலில் உதவி வாத்தியார் ந. மோகனதாஸ் உட்பட ஏனைய கலைஞர்களும், ஆர்வலர்களும் பரிபூரணமான ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளார்கள். அவ் அனுபவங்களைக் கொண்டு நூறாவது காமன் கூத்து அரங்கேற்றம் காமன் வாத்தியார்; நல்லு மோகனதாஸ் ஐயாவின் தலைமையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
காமன் கூத்து பல இடங்களில் அரங்கேற்றப்படுகிறது. அரங்க நெறிமுறைகளை கற்பிதங்களாகக் கொண்டும் பல இடங்களில் இக் கூத்து அரங்கேற்றப்படுகிறது. கால வரையறையை கருத்திற் கொண்டு அரங்க மயப்படுத்தும் முனைப்புகளும் தொடரப்படுகின்றன. இவ்வாறான பிரயோகங்களின் போது காமன் கூத்தின் உள்ளடக்கம் சிதைக்கப்படுகின்ற நிலையும் கவலைக்குரியதாகும். அவ்வாறான பலவீன அம்சங்களை தவிர்த்து இக் கூத்தின் முழுமையான உள்ளடக்கத்தையும் அவதானிக்கின்ற போக்கினை இத் தோட்டத்து காமன் கூத்து கொண்டுள்ளது. எனது அனுபவத்திலும் பல தோட்டங்களில் இடம்பெறும் காமன் கூத்துக்களை அவதானித்திருக்கிறேன்.
ஓர் ஆய்வுப் பார்வையில் இத் தோட்டமே எனது முதல் அவதானத்திற்குரியதாக திகழ்கிறது. 2011ம் வருடம் தினக்குரல் ‘உதயசூரியன்’ இதழில் காமன் கூத்து கலையறிவோம் தொடர், கொழும்புத் தமிழ்ச் சங்கம் 2012ம் வருடம் நிகழ்த்திய உலகத் தமிழ் இலக்கிய மாநாடு ஆய்வரங்கத்தில் நிகழ்த்திய ‘பன்முக நோக்கில் காமன் கூத்து’ எனும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரை உருவாக்கம், 2016ம் வருடம் பிரான்ஸ்சில் இடம்பெற்ற உலகத் தமிழ் நாடக விழாவில் காமன் கூத்தை அரங்கேற்றுவதற்கான அழைப்பு (பங்கேற்க முடியவில்லை), சமகாலத்தில் தாய்வீடு சஞ்சிகையில் தொடரும் ‘மலையக மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த கலையாக காமன் கூத்து’ எனும் தலைப்பிலான் ஆய்வுத் தொடர் ஆகியவற்றை திருப்திகரமாக முன்னெடுக்கின்றமைக்கு பிளக்குவாட்டர் தோட்டத்து களம் மிகுந்த ஆதர்சனத்திற்குரியதாக திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மூத்த காமன் வாத்தியார் அமரர் இ.கோபால், மூத்த வாத்தியார் அமரர் பாட்டையா மற்றும் காமன் வாத்தியார் ந. மோகனதாஸ் மற்றும் மூத்த கலைஞர்களுடன் கட்டுரையாளர்.
இத் தோட்டம் காமன் கூத்து நேசிப்பாளர்களின் ஆழ்ந்த ஈடுபாடு அக்கறைத் தன்மை, அமரர்களான வாத்தியார்களின் ஆசீர்வாதம், கோபால் வாத்தியாரின் வாக்கு, ஆசி என்பதெல்லாம் காமன் கூத்து கலையின் இருப்பிடமாக நிலைபெறும் என்பது அசைய முடியாத நம்பிக்கையாகும். இளந் தலைமுறையினர் இக் கூத்தோடு தொடர்புபடுகின்ற அக்கறையும் ஈடுபாடும் மேலும் நம்பிக்கையை வலுவாக்குகிறது எனலாம். இத் தோட்டத்தில் இடம்பெறும் நூறாவது காமன் கூத்து அரங்கேற்றம் திருப்தியையும் மகிழ்வையும் உணர்த்துகிறது. இம் முயற்சியில் உழைத்த அத்தனை நல்லுள்ளங்களும் போற்றப்பட வேண்டியவர்கள்.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வறட்சியான காலநிலை நிலவி வருகிறது. இதனால் வெப்பநிலை அதிகரித்து நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் சடுதியாக குறைந்து வருவதாக மின்சாரதுறைச் சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வறட்சியான காலநிலையினை அடுத்து காசல்ரி, மாவுசாக்கலை, கெனியோன் விமலசுரேந்திர லக்சாபன நவலக்ஸபான உள்ளிட்ட நீர்த்தேக்;கங்களின் நீர் மட்டம் கனிசமான அளவு குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.காசல்ரி நீர்த்தேக்கத்தில் மாத்திரம் தற்போது 34 அடி நீர் தாழிறங்கியிருப்பதாகவும் ஏனைய நீர்த்தேக்கங்களில் கனிசமான அளவு நீர் தாழிறங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன. ஹட்டன் பகுதியில் குடிநீர் விநியோகம் சுமார் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடைவை மாத்திரம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றன.
இதனால் ஹட்டனில் உள்ள ஒரு சில உணவகங்கள் குடிநீரினை பணம் செலுத்தி பிரத்தியேகமாக பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு ஹட்டனை பிரதேசமான ரூவன்புர,அலத்கம கொட்டகலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.
இந்த குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு பிரதான காரணமாக வறட்சியான காலப்பகுதியில் காடுகளுக்கு தொடர்ச்சியான தீ வைக்கப்படுவதனால் பல நீரூற்றுக்கள் அற்றுப்போய் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் நூற்றுக்கணக்கான கண்ணி வெடிகளை ஈரான் ராணுவம் வீசி உள்ளது.
அரபிக் கடலில் பெர்சியன் வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் ஹார்முஸ் ஜலசந்தி இணைக்கிறது. இது 167 கி.மீ. நீளம், 50 கி.மீ. அகலம் கொண்டதாகும். இந்த ஜலசந்தியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் 33 கி.மீ. அகலம் மட்டுமே உள்ளது. அதிலும் கடல் ஆழமாக உள்ள 3 கி.மீ. அகலம் கொண்ட பகுதி வழியாகவே சரக்கு கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. இது ஈரான் கடல் எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது.
தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவம் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முழுமையாக முடக்கி உள்ளது. இதன் காரணமாக இந்தியா உட்பட உலகம் முழுவதும் எல்பிஜி, சிஎன்ஜி, கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் சுதந்திரமான சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக அப்பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்கள் குவிக்கப்பட்டு உள்ளன. ஈரான் கடற்படையின் 60 கப்பல்கள், ஏராளமான படகுகளை அமெரிக்க ராணுவம் குண்டுகளை வீசி அழித்து உள்ளது.
இந்த சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியில் நூற்றுக்கணக்கான கண்ணிவெடிகளை ஈரான் ராணுவம் வீசியிருக்கிறது. கடலுக்கு அடியில் மூழ்கியிருக்கும் இந்த கண்ணிவெடிகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க முடியும். எதிரிகளின் போர்க்கப்பல்கள், சரக்கு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் வரும்போது கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்து கப்பல்களை தகர்ப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இது குறித்து சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது: கடல் கண்ணி வெடிகள் 3 வகைகளாக தயாரிக்கப் படுகின்றன. முதல்வகை கண்ணிவெடிகள் கடலுக்கு அடியில் புதைந்திருக்கும். 2வது வகை கண்ணிவெடிகள் கடலின் சில நூறு அடி ஆழத்தில் தண்ணீரில் மிதக்கும். இவற்றை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க முடியும். கடலின் மேல் பகுதியில் கப்பல்கள் செல்லும் போது இந்த வகை கண்ணிவெடிகள் மேலெழுந்து வந்து வெடித்துச் சிதறும்.
3-வது வகை கண்ணிவெடிகள் கடலுக்கு அடியில் மிதக்கும். இவற்றை ரிமோட் கண்ட்ரோல் மூலம் கடலின் மேற்பகுதி்க்கு கொண்டு வந்து குறிப்பிட்ட இலக்கை நோக்கி நகர்த்தி செல்ல முடியும். இதன்படி எதிரிகளின் கப்பல்களை நோக்கி சீறிப் பாயும் கண்ணிவெடிகள் அவற்றின் மீது மோதி வெடித்துச் சிதறும். ஈரான் ராணுவத்திடம் 3 வகையான கண்ணிவெடிகளும் உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி. இவர் அடுத்து இயக்கும் இந்தி படத்தில் சல்மான் கான் நடிக்கிறார்.
இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா...
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம்.
கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...
தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இருப்பதாகக் கூறி, படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பி மத்திய தணிக்கை வாரியம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து படக்குழு...
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்க ஈரானுக்கு 48 மணிநேரக் கெடு விதித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.
நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் கடுமையான இராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர்...
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் 10 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா பொதுஜன...
பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணியும் காமினி தேசிய பாடசாலை அணியும் இணைந்து இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் நான்காவது முறையாக நடத்திய “Battle of Little England” கிண்ணப் போட்டி, நுவரெலியா...