Home Blog Page 28

“பொருளாதார கண்காணிப்புக் குழு” ஜனாதிபதி தலைமையில் கூடியது

வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், பிரஜைகளின் நலனை உறுதி செய்வதற்கும் நியமிக்கப்பட்ட பொருளாதார கண்காணிப்புக் குழு, நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கூடியது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்நாட்டு சந்தை நிலைமையை ஸ்தீரப்படுத்தல் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கை குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், கடந்த குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழில் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரிச் செயலாளரும் நிதி மற்றும் திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதி சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) ரஸல் அபொன்சு,கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா,

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன, இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தலைவர் மங்கள விஜேசிங்க , வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஹனீப் யூசுப்,

இலங்கை தேயிலை சபையின் தலைவர் ஆர்.கே. ஒபேசேகர, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் சி. அமரசேகர, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் மேலதிக செயலாளர் (பொருளாதார விவகாரங்கள்) தர்ஷன எம். பெரேரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

ஈரானின் புதிய உச்ச தலைவரின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க முடியாது!

” ஈரானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் எவருக்கும் நான் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க மாட்டேன்.”

இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார்.

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் இணைந்து கடந்த 28-ஆம் திகதி போர் தொடுத்தன. இதில் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார்.

இதையடுத்து புதிய உச்ச தலைவராக அயதுல்லா அலி கமெனியின் மகன் மொஜ்தபா கமெனி சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இதுவரை மொஜ்தபா கமெனி பொது வெளியில் தோன்றவில்லை.

அவர் அமெரிக்காவின் தாக்குதலில் காயம் அடைந்துள்ளதாகவும், கோமா நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையே நேற்று மொஜ்தபா கமெனி முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில் அமெரிக்கா-இஸ்ரேலை பழிவாங்குவோம். அரபு நாடுகள் மீதான தாக்குதல் தொடரும். ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் மொஜ் தபா கமெனி உயிருடன் உள்ளார் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர், “மொஜ்தபா கமெனி ஒரு வேளை காயமடைந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் ஏதோ ஒரு வடிவத்தில் உயிருடன் இருக்கலாம் என்று நினைக்கிறேன் ” என்றார்.

இதற்கிடையே மொஜ் தபா கமெனிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மிரட்டல் விடுத்து உள்ளார்.

போர் தொடங்கிய பிறகு அவர் முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு தாக்குதல் எதிர்பார்த்ததை விட சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. இஸ்ரேல் எப்போதையும் விட தற்போது வலிமையாக உள்ளது.

ஈரானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் எவருக்கும் நான் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க மாட்டேன்.

மொஜ்தபா கமெனி, பொதுவெளியில் தனது முகத்தைக் காட்ட முடியாது. அவர் ஈரானின் புரட்சிகர காவல் படையினர் கைப்பாவையாக உள்ளார்.

ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளை நாங்கள் நசுக்கி வருகிறோம்.ஈரானில் கொடுங்கோல் ஆட்சியை அகற்றுவதற்கான சூழலை அந்நாட்டு மக்களுக்கு உருவாக்குவதற்காகவே அமெரிக்காவும் இஸ்ரேலும் செயல்பட்டு வருகின்றன.

ஈரான் மக்கள் புதிய சுதந்திரப் பாதையில் அடியெடுத்து வைக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம். உங்களுக்கு உதவுகிறோம்.

ஆனால் இறுதியில் அது உங்களைச் சார்ந்தது. அது உங்கள் கைகளிலேயே உள்ளது என்றார்.

பாகிஸ்தான் – பங்களாதேஷ் 2வது ஒருநாள் போட்டி இன்று!

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (13) நடைபெறுகிறது.

இலங்கை நேரப்படி இந்தப் போட்டி பிற்பகல் 1.45 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள Shaheen Shah Afridi தலைமையிலான பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.

மிர்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.

செம்மணி மனிதப் புதைகுழி: ஏப்ரல் 20 இல் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முன்னெடுப்பதற்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று வியாழக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இதற்கான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன.

விசாரணையின் போது மன்று வழங்கிய முக்கிய உத்தரவுகள் வருமாறு:-

புதைகுழியைச் சூழவுள்ள பகுதிகளை வாரத்தில் இரண்டு தினங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் துப்பரவு செய்ய வேண்டும் என நல்லூர் பிரதேச சபைக்கு மன்று கட்டளையிட்டது.

அத்துடன், ‘டித்வா’ புயல் மற்றும் பருவ மழையினால் சேதமடைந்துள்ள தற்காலிகக் கொட்டகைகளை அகற்றி, புதிய கொட்டகைகளை அமைக்கவும், அகழ்வுப் பணிகளுக்குத் தேவையான தளபாட வசதிகளைச் செய்து கொடுக்கவும் பிரதேச சபைக்கு உத்தரவிடப்பட்டது.

வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, நீதிவான் எஸ்.லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன், ரனித்தா மற்றும் நல்லூர் பிரதேச சபைச் செயலாளர் ஆகியோர் புதைகுழி பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு நடத்தினர்.

தற்போது புதைகுழிக்குள் நீர் தேங்கி நிற்பதனால், எதிர்வரும் 28ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் நீரினை வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நீதிமன்றில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 20ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் திகதி குறிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் 6,000 இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்!

ஆபரேஷன் Epic Fury நடவடிக்கையின்போது ஈரானில் சுமார் 6 ஆயிரம் இலக்குகள்மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் ஈரானின் போர்க்கப்பல்கள், ஏவுகணைத் தளங்கள் மற்றும் ஆயுத உற்பத்தி நிலையங்கள் போன்றவை பெருமளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டு இராணுவ நடவடிக்கைகளின் போது, ஒரு பாடசாலை தற்செயலாகத் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் இராணுவப் புலனாய்வாளர்கள் எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் அமெரிக்கா உள்ளக விசாரணையை முன்னெடுத்துவருகின்றது என தெரியவருகின்றது.

ஈரானின் இராணுவக் உள்கட்டமைப்பை முடக்குவதையே இந்தத் தீவிரமான தாக்குதல்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கட்டளை மையங்களும் இந்தத் தாக்குதலில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

மலையகத் தமிழர்கள் ஒரு தேசிய இனம்: வெறும் தொழிலாளர் சமூகமாக எங்களைச் சுருக்கிவிடாதீர்கள்!

மலையகத் தமிழர்கள் இன்று வெறும் தொழிலாளர் சமூகமாகச் சுருங்கிவிடாமல், ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளனர் என இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவர் இசொமடா அகியோவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகள் குழு, கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவர் இல்லத்தில் தூதுவர் இசொமடா அகியோ மற்றும் ஜப்பானிய உயர்மட்டக் குழுவினரை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியது.

இச்சந்திப்பின் போது மனோ கணேசன் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் வருமாறு:-

“இலங்கையில் வாழும் சுமார் 15 இலட்சம் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் சமூக – பொருளாதார சவால்கள் குறித்து ஜப்பான் இனிவரும் காலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, தோட்டப்பகுதிகளில் வாழும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கு நேரடிப் பயன் அளிக்கக்கூடிய உதவித் திட்டங்களை வழங்க முன்வாருங்கள்.”

“எமது மக்களை ஒரு இலங்கை தேசிய இனமாக அடையாங்காணுங்கள். நாம் பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம். தற்போதைய அரசு எமது பிரச்சினைகள் குறித்து நிறையப் பேசினாலும், அவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.”

“இலங்கைக்கு வரலாற்று ரீதியாக அதிகளவு உதவி வரும் நட்பு நாடான ஜப்பான், தனது உதவிகள் இந்நாட்டின் மிகவும் பின்தங்கிய சமூகமான மலையகத் தமிழ் மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று மனோ கணேசன் இதன்போது வலியுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர்களான வே. இராதாகிருஷ்ணன், பாரத் அருள்சாமி மற்றும் பிரஜீவன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

38 ஆண்டுகள் ஆசிரியர் சேவைக்குப் பின் மல்லிகா துரையராஜா ஓய்வு

மாத்தளை மாவட்டம் பிட்டகந்தயை பிறப்பிடமாகவும் பதுளை மாவட்டம் பசறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மல்லிகா துரைராஜா, பெரியாம்பிள்ளை லெட்சுமி அவர்களின் மகளும் திரு.துரைராஜா அவர்களின் மனைவியுமாவார்.

திருமதி மல்லிகா துரைராஜா தனது ஆரம்பக்கல்வியை இறத்தோட்டை இந்துக்கல்லூரியிலும் உயர்க்கல்வியை பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியிலும் மற்றும் உடுவரை மகிந்தா கல்லூரியிலும் கற்றார்.

1988 ம் ஆண்டு அவருக்கு பதுÆநாவிலை தமிழ் வித்தியாலயத்தில் முதல் ஆசிரியர் நியமனம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பதுளை யூரி தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், பதுளை ஸ்ரீ கணேஸா தமிழ் வித்தியாலயத்திலும் பதுளைகலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்திலும் பிரதி அதிபராகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளார்.

இவர் தனது ஆசிரியர் பயிற்சியை எதன்சைட் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பூர்த்தி செய்தவரும் ஆவார். இதன்பின்னர் தேசிய கல்வி நிறுவகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் வாண்மைத்துவக் கல்வியை தொடர்ந்து அவர் கல்விமாணி பட்டதாரியாக உயர்ந்தார்.

இவர் தனது சேவைக்காலத்தில் சக ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் மற்றும் சமூக நலன் விரும்பிகளுடனும் நட்புறவுடன் பழகி வந்தமை குறிப்பிடத்தக்கது.இவரிடம் கல்வி கற்ற பல மாணவர்கள் தற்போது உயர்ந்த பதவிகளில் உள்ளனர்.

புpரதி அதிபர் திருமதி.மல்லிகா துரைராஜா 2026.03.11 ஆம் திகதி தனது பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

இவரது பணி ஓய்வினையொட்டி பாடசாலை சமூகத்தினரால் பிரியாவிடைகளும் வெகுவிமர்சையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

-நடராஜா மலர்வேந்தன்
நமுனுகுலை நிருபர்

பாம்பு தீண்டி அரச அதிகாரி பலி:  மல்லாவியில் சோகம்!

மல்லாவியில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வயலை பார்க்க சென்ற போதே நேற்று (11) மாலை இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துணுக்காய் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான திருநாவுக்கரசு கிருபாகரன் (55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான பரிசோதகராக கடமை ஆற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானால் 3 நிபந்தனைகள் முன்வைப்பு!

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறிய நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

‘‘போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமானால், மூன்று நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஒன்று, ஈரானுக்கு உள்ள உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும், இரண்டாவது, ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மூன்றாவது எதிர்காலத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படாது என்ற உறுதிமொழி வழங்க வேண்டும்.

அமைதியை ஏற்படுத்துவதில் ஈரான் உறுதியாக உள்ளது. என்றபோதிலும், அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்த மோதல் முடிவுக்கு வரும். ஏனெனில், அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்கள் காரணமாகவே இந்த போர் தொடங்கியது.

ஈரானின் பாதுகாப்புக்கு வலுவான சர்வதேச உத்தரவாதங்கள் கிடைத்தால் மட்டுமே போர் முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அக்சியாஸ் ஊடகத்துக்கு ட்ரம்ப் அளித்தப் பேட்டியில், “ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும். ஏனெனில், ஈரானில் அமெரிக்க ராணுவம் குறிவைத்து குண்டுவீசி அழிப்பதற்கு என்று எதுவும் இல்லை. எந்த நேரத்திலும் முடிவுக்குக் கொண்டுவர நான் விரும்புகிறேன். போர் முடிவுக்கு வரும்.

இந்தப் போர் இதுவரை சிறப்பாக நடந்துள்ளது. விளைவுகள் திட்டமிட்டதைவிட அதிகமாக உள்ளது. நாங்கள் 6 வார காலத்தில் எந்த அளவிலான அழிவை ஏற்படுத்த நினைத்தோமோ அதைவிட அதிகமாகவே நிகழ்த்திவிட்டோம்” என்று கூறி இருந்தார்.

சுரேஷ் சாலே மீது 3 குற்றச்சாட்டுகள்: நீதிமன்றில் சிஐடி அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வு சேவைவியின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நேற்று மேற்படி தகவலை வெளியிட்டனர். இது தொடர்பில் 25 பக்க அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வவுணதீவில் இரண்டு காவல்துறையினரின் கொலைகள் மற்றும் சாய்ந்தமருது குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சுரேஷ் சாலே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபராக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர், கடுவாபிட்டிய தேவாலயத்தை இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு அடையாளம் காட்ட, ஒரு புலனாய்வுத் தகவல் வழங்குபவரைப் பயன்படுத்தியதாகவும், சுரேஷ் சாலே மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, சாரா ஜஸ்மின் மரணத்தை உறுதிப்படுத்த நடத்தப்பட்ட இரண்டு மரபணுப் சோதனைகள் தோல்வியடைந்த நிலையில், மூன்றாவது மரபணுச் பரிசோதனையை நடத்துமாறு சாலே, புலனாய்வாளர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை சாலேயின் சட்டத்தரணி நிராகரித்தார், ஈஸ்டர் தாக்குதல்கள் நடந்த நேரத்தில் அவர் இலங்கையில் இருக்கவில்லை என்றும் மலேசியாவில் இருந்தார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார மேலதிக அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

இறுதி எச்சரிக்கை! ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்தார் ட்ரம்ப்!!

0
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்க ஈரானுக்கு 48 மணிநேரக் கெடு விதித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் கடுமையான இராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர்...

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 10 ஆம் திகதி வாக்கெடுப்பு!

0
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் 10 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா பொதுஜன...

“Battle of Little England” கிண்ணம் – காமினி தேசிய பாடசாலைக்கு வெற்றி!

0
பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணியும் காமினி தேசிய பாடசாலை அணியும் இணைந்து இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் நான்காவது முறையாக நடத்திய “Battle of Little England” கிண்ணப் போட்டி, நுவரெலியா...