Home Blog Page 29

மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை பஸ் சேவை !

இலங்கையின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் இதுவரை போதிய கவனம் செலுத்தப்படாத மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக முன்னுரிமை பஸ் சேவை ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

‘அனைவருக்கும் சம வாய்ப்புகள் மற்றும் மானுட கௌரவத்தைப் பாதுகாக்கும் நாடு’ என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை யதார்த்தமாக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

430.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், வெறும் போக்குவரத்துச் சேவை மட்டுமல்லாது, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தினால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலத்திட்ட வரிசையில் மற்றுமொரு விசேட திட்டமாகும். பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் உள்ள பௌதிகத் தடைகளை நீக்கி, மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சமூகத்துடன் ஒன்றிணைவதற்கான பின்னணியை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.

முதற்கட்டமாக, சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்கள் இலகுவாக ஏறி இறங்கக்கூடிய தாழ்தள வசதி கொண்ட 10 நவீன குளிரூட்டப்பட்ட பஸ்கள் நேற்று முன்தினம் (10) ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இவை எதிர்வரும் சனிக்கிழமை கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டு ‘மெட்ரோ பஸ்’ நிறுவனத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்படவுள்ளன.

33 ஆசனங்களைக் கொண்ட இந்தப் பஸ் ஒன்றில் ஒரே நேரத்தில் 80 பயணிகள் பயணிக்க முடியும். சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட தொழில்நுட்ப அம்சங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

ஒரு முன்னோடித் திட்டமாக இச்சேவை மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும். அதன்படி, மாகும்புரவிலிருந்து புறக்கோட்டை வரையிலும், மாகும்புரவிலிருந்து கடவத்தை வரையிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கு ஒருமுறை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

குறிப்பாக மகரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகிய பிரதான சுகாதார மையங்களை நேரடியாக உள்ளடக்கும் வகையில் இந்த போக்குவரத்துத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இச்சேவைக்காகத் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபையின் 28 சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்படவுள்ளது. சமூக சேவைகள் அமைச்சினால் வழங்கப்படும் இப்பயிற்சியில் பஸ் தொழில்நுட்பம், பயணிகள் பாதுகாப்பு, தொழில்சார் ஒழுக்கநெறிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் தொடர்புகொள்வதற்கான சைகை மொழி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றியைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் மேலும் 100 பஸ்களை நாட்டுக்குக் கொண்டு வந்து பொதுப் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன் இணைந்ததாக, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் பஸ் நிலையங்களையும் மாற்றுத்திறனாளிகள் இலகுவாக அணுகக்கூடிய தரங்களுக்கு ஏற்ப புனரமைக்கவோ அல்லது புதிதாக நிர்மாணிக்கவோ திட்டமிடப்பட்டுள்ளது.

தூதுவர்கள் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி!

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்ட தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் 10 பேரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச சேவைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்கு நியமிக்கப்படும் நபர்களின் தகைமைகளை பரிசோதிக்கும் இக்குழுவின் அனுமதியைத் தொடர்ந்து, அவர்கள் தத்தமது இராஜதந்திரப் பணிகளைப் பொறுப்பேற்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் மற்றும் அவர்களின் பதவிகள் குறித்த விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

1. தர்ஷன எம். பெரேரா – மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்.

2. டி.எம்.எஸ்.பி. தசநாயக்க – ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி (ஏற்கனவே பதவியேற்றுள்ளார்).

3. தயானி மென்டிஸ் – ஓஸ்திரியாவுக்கான இலங்கையின் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி.

4. எஸ்.பி.டபிள்யூ. பத்திரண – ரூமேனியாவுக்கான இலங்கையின் தூதுவர் (ஏற்கனவே பதவியேற்றுள்ளார்).

5. என்.ஐ.டி. பரணவிதான – எத்தியோப்பியா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கையின் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி.

6. எஸ்.கே. சந்திரசிறி – இஸ்ரேலுக்கான இலங்கையின் தூதுவர்.

7. தம்மிக பெர்னாண்டோ – கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்.

8. அநுர விதானகே – லெபனானுக்கான இலங்கையின் தூதுவர்.

9. பேராசிரியர் எம்.ஐ. பஸீஹா அஸ்மி – ஈரானுக்கான இலங்கையின் தூதுவர்.

10. எம். பாரூக் எம். பௌசர் – பாலஸ்தீனத்திற்கான இலங்கைப் பிரதிநிதி.

13 ஆவது நாளாக தொடரும் போர்: 16 ஈரான் கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்கா

அமெரிக்க, இஸ்​ரேலிய கூட்​டுப்​படை மற்​றும் ஈரானுக்கு இடையி​லான போர் இன்று 13 ஆவது நாளாக தொடர்கின்றது.

ஈரான் தனது எல்​லையை ஒட்​டிய ஹார்​முஸ் நீரிணையை
ஏற்கெனவே முடக்​கி​யுள்​ளது. அவ்​வழி​யாக செல்​லும் கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​படும் என மிரட்​டல் விடுத்​துள்​ளது.

இதனால் ஹார்​முஸ் நீரிணை வழி​யாக செல்​லும் எண்​ணெய் கப்பல் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் ஹார்​முஸ் நீரிணையில் கண்​ணிவெடிகளை மிதக்கவிடும் ஈரானின் திட்​டத்​துக்கு எதி​ராக மேற்​கொள்​ளப்​பட்ட முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யில் 16 ஈரானிய கண்​ணிவெடி கப்​பல்​களை தங்​கள் படைகள் மூழ்​கடித்​த​தாக அமெரிக்கா தெரிவித்​துள்​ளது.

முன்னதாக, ஹார்முஸ் நீரிணை

யை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக ஈரான் கண்ணி வெடிகளை மிதக்கவிடத் தொடங்கியிருப்பதாக உளவுத்துறையினர் கூறியதாக அமெரிக்க ஊடகமான சிஎன்என் நேற்று முன்தினம் தெரிவித்தது.

மலையக மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் ‘அரசாங்கத்தின் வாக்குறுதிக்கு’ என்ன நடந்தது?

மலையகத் தமிழ் சமூகம் தடையின்றி தங்கள் சொந்த வீடுகளில் வசிக்கும் வகையில் காணி உரிமையைப் பெற்றுக்காடுப்பதாக தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது அளித்த வாக்குறுதியை, ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னரும் நிறைவேற்றவில்லை என்பதை மலையகத் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் எதிர்க்கட்சியில் இருந்தபோது அட்டன் பிரகடனத்தின் மூலம் மலையக மக்களுக்கு அவர்களின் நில உரிமைத் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என, கொட்டகலை, சித்திவிநாயகர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மலையக வாழ்வுரிமை மாநாட்டில் உரையாற்றிய தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.

“அனுர குமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும்போது வந்து வெளியிட்ட அட்டன் பிரகடனம். மலையகத்தில் பயிரிடப்படாத காணியெல்லாம் மலையக இளைஞர்களுக்கு பிரித்து வழங்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளனர். எங்கேயாவது காணி கொடுத்தார்களா? சொன்னார்கள் கொடுக்கவில்லை.”

ஒக்டோபர் 15, 2023 அன்று, தேசிய மக்கள் சக்தி, ‘தாயகத்திற்கு வலிமை, மலையகம் 200, கௌரவமான குடிமக்கள்’ என்ற தலைப்பில் அட்டன் பிரகடனத்தை, அட்டனிலுள்ள DKW மண்டபத்தில் வெளியிட்டபோது, ஆவணத்தின் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மற்றும் அந்தக் கூட்டணியின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு கையெழுத்திட்டிருந்தது.

“பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று வீடமைப்பு ஆகும். 2012/2013 தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கையின்படி அவர்களில் 67.8வீதமானவர்கள் இன்னமும் ‘லயன் அறைகளில்’ வாழ்கிறார்கள். மேலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிமலையகத் தமிழ் மக்கள் சுபீட்சமான சமுதாயமென்ற வகையில் அவர்களின் அபிவிருத்திக்கு உதவுகின்றவீடமைப்புத் திட்டமொன்று மூலமாக அவர்களுக்கு உயிர்வாழ்வதற்கான பொருத்தமான வீடுகளை வழங்குகின்ற வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கும்.” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மலையக மக்களின் காணி உரிமைகளை உறுதி செய்வதோடு மாத்திரமல்லாமல், மலையக தமிழ் சமூகத்தில் வேலையற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தோட்டப் பகுதிகளில் பயிரிடப்படாத பகுதிகள் மற்றும் கைவிடப்பட்ட நிலங்கள் பயன்படுத்தப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தி அட்டன் பிரகடனத்தின் மூலம் உறுதியளித்திருந்தது.

“சில தோட்டங்களில் தொழிலாளர்கள் ஓய்வுபெறும்போது அவர்களை வீடுகளில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி அத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்கும். பெரும்பாலான தோட்டக்குடும்பங்கள் பணத்தையும் உழைப்பையும் செலவிட்டு தமது வீடுகளை அமைத்திருந்தபோதிலும் காணிகளைப் பதிவுசெய்கின்ற அங்கீகரிக்கப்பட்ட உறுதிகள் இன்னமும்
கிடையாது.

உறுதிகள் இல்லாத பிரச்சினை இந்த சமுதாயத்திற்கு மாத்திரமன்றி நாட்டின் ஏனைய
பிரதேசங்களைச் சேரந்த குடியிருப்புவாசிகளும் எதிர்நோக்குகின்ற பிரச்சினையாக அமைவதோடு இந்தசிக்கலுக்கு நியாயமான தீர்வினைக் கண்டறிகின்ற அத்துடன் மலையகத் தமிழ் மக்களுக்கு அவர்களினவீடுகளில் தடைகளின்றி தொடர்ச்சியாக வசிப்பதற்கான உரிமையை தேசிய மக்கள் சக்தி உறுதிசெய்கின்றது.

பெருந்தோட்டப் பிரதேசங்களில் பயிர்செய்யப்படாத பிரதேசங்கள் மற்றும் கைவிடப்பட்ட
காணிகளை மலையகத் தமிழ் சமுதாயத்தின் தொழிலற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை
மேம்படுத்துவதற்காக ஈடுபடுத்தும்.”

ஜனாதிபதி இப்போது மக்களுக்கு வழங்குவதற்கு காணியைத் தேடித்தருமாறு கேட்பதாக, இந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழ் முற்போற்குக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான, தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தினார்.

“மக்கள் நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள் இந்த அரசாங்கம் உங்களுக்கு காணி கொடுக்காது. நாங்கள் போய் ஜனாதிபதியை கேட்டால் அவர் காணி எங்கு இருக்கிறது என எங்களிடம் கேட்கின்றார். நாங்கள் சொன்னோம் மலையகத்தின் எல்லா இடத்திலும் காணி இருக்கிறது, அதனை கொடுங்கள் எனக் கூறினோம். எமது மலையக மக்கள் காணி உரிமையுடன் வாழ்வதை எந்த வகையிலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.”

மலையகத்தில் காணியைப் பெற்றுக்கொள்வதில் எழுந்துள்ள பிரச்சினையை விளக்கிய மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன், நிலத்தின் உரிமை இரண்டு அரசு நிறுவனங்களுக்கு இடையில் ‘ஊசலாடுகிறது’ என சுட்டிக்காட்டினார்.

“நாங்கள் இருந்த நேரத்தில் பேசி பெற்றுக்கொண்ட ஏழு பேர்ச். அந்த ஏழு பேர்ச் காணியையாவது கொடுங்கள். நீங்கள் வீடுகளை அமைக்கத் தேவையில்லை காணியை கொடுங்கள்.நாங்கள் எப்படியாவது, கடனைப் பெற்றாவது வீட்டை கட்டிக்கொள்வோம். ஆகவே வீட்டை அமைப்பதற்கு காணி அத்தியாவசியம். ஆகவே இதைத்தான் நாங்கள் வலியுறுத்துகின்றோம். காணியை எங்கு பெற்றுக்கொள்வது? நாங்கள் எங்கு இருக்கின்றோம். தோட்டத்தில் இருக்கின்றோம். தோட்டக் காணியை பெறுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. ஜனவசம சொல்கிறது எல்ஆர்சிக்கு சொந்தம் என. எல்ஆர்சி சொல்கிறது ஜனவசமவிற்கு சொந்தமென. யாருக்கு சொந்தம் என்பதை நீதிமன்றமே இன்னும் தீர்மானிக்கவில்லை. ஆகவே மக்களுக்கு எப்போது கொடுக்கப்போகிறீர்கள். ”

இத்தகைய சூழ்நிலையில், மலையக தமிழ் மக்களின் காணிப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு செயலணியை அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

“ஆகவே ஜனாதிபதி ஒரு செயலணியை உருவாக்கி, அதன் ஊடாக காணிப் பிரச்சினைக்கு ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். எதுவெதுக்கோ எல்லாம் செயலணியை அமைக்கின்றார். ஆகேவே செயலணியை அமைத்து இந்த காணி பிரச்சினையை தீர்த்தால் என்ன?”

மார்ச் 7, 2026 அன்று கொட்டகலை சித்திவிநாயகர் கலாசார மண்டபத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மலையக வாழ்வுரிமை மாநாட்டில், கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று கட்சிகளின் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏவுகணைச் சோதனையை மகளுடன் பாா்வையிட்டாா் வடகொரியா ஜனாதிபதி!

அமெரிக்கா-தென்கொரியாவின் கூட்டுப் போா்ப் பயிற்சிக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தனது இளம் மகளுடன் இணைந்து ஏவுகணைச் சோதனையை நேரில் ஆய்வு செய்தாா்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு வடகொரிய கடற்படையில் இணைக்கப்பட்ட ‘சோய் ஹியோன்’ போா்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள், வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளில் இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி ஏவுகணைச் சோதனையை தனது 13 வயது மகள் கிம் ஜு ஏவுடன் கிம் ஜோங் உன், கண்காணிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வாரமும் இத்தகைய சோதனைகள் நடந்தபோதிலும், தற்போது முதல்முறையாகத் தனது மகளுடன் வந்து கிம் ஜோங் உன் சோதனைகளைப் பாா்வையிட்டது முக்கியத்துவம் பெற்றது.

அதிபா் கிம்முடன் அண்மைக்காலமாக அவரது மகள் கிம் ஜு ஏ தோன்றி வருகிறாா். நாட்டின் அடுத்த அதிபராக கிம் ஜு ஏ முன்னிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தென்கொரிய உளவுத்துறை கணித்துள்ளது.

யாழில் வன்முறை கும்பல் வெறியாட்டம்: ஒரே இரவில் ஐந்து வீடுகள்மீது தாக்குதல்!

வன்முறை கும்பலொன்றினால் யாழ்ப்பாணத்தில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ஒரு வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதுடன், இளைஞன்மீது வாள்வெட்டு தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த , பேருந்து , இரண்டு மோட்டார் சைக்கிள்கள் , இரண்டு கார்கள் , பட்டா ரக வாகனம் ஆகியவற்றை அடித்து நொறுக்கி அவற்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய வன்முறை கும்பலை சேர்ந்த நால்வரை ஊரவர்கள் மடக்கி பிடித்து, அவர்களின் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு வாள்கள் என்பவற்றையும் மீட்டு, பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவது,

“ சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீசாலை மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

அதன்பின்னர் மேற்படி கும்பல் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தட்டான்குளம் பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

அதில் ஒரு வீடு தீ பற்றி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவையும் தீக்கிரையாகியுள்ளது.

அதனை தொடர்ந்து மீசாலை வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த குறித்த வன்முறை கும்பல் வீட்டில் இருந்த இளைஞன் மீது வாள் வெட்டினை மேற்கொண்டதுடன் , வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளது.

அங்கிருந்து மற்றுமொரு வீடொன்றில் புகுந்த கும்பல் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் , பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை அடித்து நொறுக்கியுள்ளது.

குறிப்பிட்ட சில மணி நேரத்தினுள் தமது ஊருக்குள் புகுந்து வன்முறை கும்பல் ஒன்று வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டு தீ வைத்ததை அறிந்து ஊரவர்கள் ஒன்றிணைந்து வன்முறை கும்பலை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை பலர் தப்பி சென்ற நிலையில் நால்வர் மடக்கி பிடிக்கப்பட்டனர்.

வன்முறை கும்பல் தப்பி செல்லும் போது விட்டு சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள் , இரண்டு வாள்கள் மற்றும் கொட்டான்கள் என்பவற்றையும் மீட்டனர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசாரிடம் தம்மால் மடக்கி பிடிக்கப்பட்ட நால்வரையும் , அவர்களின் மோட்டார் சைக்கிள்கள் வாள்கள் , கொட்டான்கள் என்பவற்றையும் ஊரவர்கள் ஒப்படைத்துள்ளனர்.

மரக்கறி விலைப்பட்டியல் (12.03.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சஜித் பிரேமதாஸ தலைமையில் அவசர இராஜதந்திர சந்திப்பு!

உக்கிரமடைந்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள அபாயங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று அவசர சந்திப்பு நடைபெற்றது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள், முன்னாள் தூதுவர்கள் மற்றும் சர்வதேச உறவுகள் துறைசார் புத்திஜீவிகள் கலந்துகொண்டனர்.

அங்கு கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பின்வரும் முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

கடல் எல்லைக்குள்
போர் அபாயம்

“மத்திய கிழக்கு மோதல்கள் இப்போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை நேரடியாகப் பாதித்துள்ளன. கடந்த வாரம் காலி கடற்பரப்பிற்கு மிக அருகாமையில் ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐரிஸ் டேனா’, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் இலங்கைக்கு ஆபத்தான முறையில் நெருக்கமாகிவிட்டதை உணர்த்துகின்றது. டித்வா சூறாவளிப் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் வேளையில், இவ்வாறான பூகோள அரசியல் மோதல்கள் எமது மீட்சியைப் பாதிக்கும்.” – என்று சஜித் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய நான்கு முன்னுரிமைத் துறைகளை அவர் முன்வைத்தார்.

வலுச்சக்தி அவசர நிலை பிரகடனம்

“தற்போது இலங்கையிடம் ஒரு மாதத்துக்கு மட்டுமே எரிபொருள் கையிருப்பு உள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் தடைகளால் எரிபொருள் விலை உயரும் அபாயம் உள்ளது. இதற்குத் தீர்வாகத் தாமதமின்றி சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வெளிநாட்டுத் தொழிலாளர் பாதுகாப்பு

மத்திய கிழக்கில் உள்ள 1.5 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் வருமான வழிகளைப் பாதுகாக்க வேண்டும். மோதல் சூழலிலும் அவர்கள் தங்களது ஊதியத்தைப் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பும் வகையில் விசேட தொழில்நுட்ப உதவி முறைமையை உருவாக்க வேண்டும்.

ஏற்றுமதிப் பொருளாதாரத்தைப் பாதுகாத்தல்

கடல் போர் அபாயக் காப்புறுதிக் கட்டணங்கள் மும்மடங்கு அதிகரித்துள்ளன. இதனால் தேயிலை மற்றும் ஆடைத் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் மேலதிக வணிகச் செலவுகளை மானியமாக வழங்க அரசு விசேட காப்புறுதி நிதியத்தை உருவாக்க வேண்டும்.” – என்றும் சஜித் கூறினார்.

இராஜதந்திர நடுநிலைமை

ஈரானிய வீரர்களை மீட்ட இலங்கை கடற்படையினரைப் பாராட்டிய அவர், வெறும் கண்காணிப்பாளராக இருக்காமல் ‘இந்தியப் பெருங்கடல் பிராந்திய சங்கத்தின்’ தலைமைப் பதவியைப் பயன்படுத்தி, கடல்வழிப் பாதைகள் இராணுவமயமாக்கப்படுவதைத் தடுக்க இலங்கை முன்னிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குறை கூறுவதை விட ஆக்கபூர்வமான தீர்வுகளை முன்வைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் என்று தெரிவித்த அவர், சர்வதேச விலை உயர்வைக் காரணம் காட்டி மக்கள் மீது மேலதிக வரிச் சுமைகளை ஏற்றி நசுக்கக் கூடாது என்றும் அரசை எச்சரித்தார்.

லாப் கேஸ் விலையும் அதிகரிப்பு!

LAUGFS Gas ‘லாப்’ சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ எடையுடை சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 4,630 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 கிலோ லாப் சமையல் எரிவாயுவின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1, 862 ரூபாவாகும்.

பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி

பாகிஸ்தான் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

ICC T-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் அணி, தற்போது பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று டாக்காவில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 30.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.

115 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

இறுதி எச்சரிக்கை! ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்தார் ட்ரம்ப்!!

0
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்க ஈரானுக்கு 48 மணிநேரக் கெடு விதித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் கடுமையான இராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர்...

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 10 ஆம் திகதி வாக்கெடுப்பு!

0
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் 10 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா பொதுஜன...

“Battle of Little England” கிண்ணம் – காமினி தேசிய பாடசாலைக்கு வெற்றி!

0
பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணியும் காமினி தேசிய பாடசாலை அணியும் இணைந்து இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் நான்காவது முறையாக நடத்திய “Battle of Little England” கிண்ணப் போட்டி, நுவரெலியா...