Home Blog Page 215

சம்பள உயர்வு குறித்து கம்பனிகள் அறிவிக்கப்பட்டும்: நான் ஏன் பதவி விலக வேண்டும்?

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் முன்மொழிவு இடம்பெற்றுள்ள நிலையில், இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் பதவி விலக வேண்டும் என சிலர் வலியுறுத்திவருகின்றனர்.

அரசாங்கத்தால் 10 ரூபாகூட வழங்க முடியாது என ஜீவன் கூறி இருந்தார் எனவும், ஆனால் நாளாந்தம் 200 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது எனக் கூறியுமே இவ்வாறு வலியுறுத்தப்படுகின்றது.

இதற்கு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய ஜீவன் தொண்டமான் பதிலளித்தார்…..
அவர் கூறிய கருத்துகள் வருமாறு,

“ பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படுவது நல்ல விடயம். சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்றுதான் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஒவ்வொருமுறையும் கூறிவருகின்றன. ஆனால் அடிப்படை சம்பளம் அல்ல, ஊக்குவிப்பு கொடுப்பனவு பற்றியே கூறப்பட்டது என பின்னர் அறிவிப்பு வெளியாகும்.

எந்த பொறிமுறையின்கீழ் சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது என்பது பற்றி எமக்கு தெரிவிக்கப்பட வேண்டும். இதை பற்றிதான் நான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் ஜீவன் தொண்டமான் பதவி விலக வேண்டும் என்கின்றனர். கருத்து கூறுவதால் பதவி விலக வேண்டுமா?

ஜனாதிபதியால் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க முடியுமானால் அது வரவேற்கப்படவேண்டிய விடயம். கடந்த முறை பாதீட்டில் 1,700 ரூபா உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனால் அது வழங்கப்படவில்லை. 4 ஆயிரத்து 500 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்றார்கள். ஒரு செங்கல்கூட வைக்க முடியாது என்றேன். அதேபோல ஒரு செங்கல்கூட வைக்கப்படவில்லை. பதுளை மாவட்டத்தில் வெத்து பேப்பர் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு இராஜினாமா செய்;யாதவர்கள் எதற்காக என்னை இராஜினாமா செய்ய கோருகின்றனர்?

அடிப்படை சம்பளம் 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டால் அதனை வரவேற்போம். பெருந்தோட்ட நிறுவனங்கள் ஊடாக இதற்குரிய அறிவிப்பு வெளியாக வேண்டும். அரசாங்கமும் இதனை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிட வேண்டும். ” -என்றார் ஜீவன்

காட்டு யானைகளின் தாக்குதலால் நான்கு மீனவ தோணிகள் சேதம்!

 

இரண்டு நாட்களாக மட்டக்களப்பு புதுகுடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்திவருகின்றன.

புதுக்குடியிருப்பு பகுதியில் 4 மீனவர்களின் தோனிகளையும் விவசாய நிலங்களையும் பயன் தரும் தென்னை மரங்களையும், பலா மரம் ,வாழை மரங்களை உடைத்து நாசம் செய்து சேதப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தொடர்ச்சியான காட்டு யானை தாக்குதலால் உயிர் அச்சத்தில் வாழும் மக்கள், தமது பகுதியில் யானைகளின் பிரச்சினையை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சில நாட்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் உயிர் மற்றும் ஜீவனுபாய வாழ்வாதாரம் காட்டு யானைகளால் அளிக்கப்படுவதற்கு முன் உடனடி தீர்வை பெற்றுத் தர வேண்டும் எனவும் புதுக்குடியிருப்பு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மட்டக்களப்பு செய்தியாளர்.

என்.பி.பி. அரசின் பாதீடுமீது மொட்டு கட்சி விமர்சனக்கணை தொடுப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் நிதியாண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு- செலவுத் திட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

” மக்களை ஏமாற்றும் விதத்திலேயே வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

” குறுகிய காலப்பகுதிக்குள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்கள் வரவு- செலவுத் திட்டத்தில் இல்லை. உறுதிமொழிகள் இடம்பெற்றிருந்தாலும் அவற்றை நிறைவேற்றுவதற்குரிய வழிகாட்டல் இல்லை. இலக்கங்களை குறிப்பிடலாம், அதனை அடைவதற்குரிய வேலைத்திட்டமும் பாதீட்டில் இல்லை. ஆக மொதத்தத்தில் எவ்வித அடிப்படையும் இன்றி மக்களை ஏமாற்றுவதற்காக முன்வைக்கப்பட்ட வரவு- செலவுத் திட்டமே இதுவாகும்.” – எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

லொறி மோதி சிறுவன் பலி: களுத்துறையில் சோகம்!

 

தனது வீட்டை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் ஒருவர் லொறி மோதி உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, வெட்டுமகட பகுதியை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று, வீதியின் குறுக்கே சைக்கிள் ஓட்டிச் சென்ற சிறுவன் மீது மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த சிறுவன் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அதிநவீன ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா!

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

எனவே பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா அவ்வப்போது கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.
இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் அன் கருதுகிறார்.

எனவே இந்தக் கூட்டு ராணுவ பயிற்சியைக் கைவிட வேண்டும் என தென் கொரியாவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்க ராணுவ மந்திரி பீட் ஹெக்சேத் தென் கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ராணுவ செலவுகளை உயர்த்தும் தென் கொரியாவின் முடிவுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இது வடகொரியாவின் கோபத்தை மேலும் தூண்டியது.

இந்நிலையில், கிழக்கு கடற்பகுதியில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

அதேவேளை, வடகொரியாவுக்கு ஆதரவு வழங்கும் சில நிறுவனங்கள்மீது ஆஸ்திரேலியா அண்மையில் புதிய தடைகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

 

ஜே.வி.பி. செயலருடன் சுவில் தூதுவர் சந்திப்பு!

ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வாவை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் சந்தித்துப் பேசியுள்ளார்.

பத்தரமுல்ல,பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அண்மையில் இலங்கை நாடாளுமன்றக் குழுவொன்று சுவிற்சர்லாந்திற்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரக முதல்நிலைச் செயலர் ஜஸ்டின் பொய்லெட்டும் கலந்து கொண்டுள்ளார்.

நுகேகொடை அரசியல் சமர் அரசுக்கு கடும் அழுத்தமாக அமையும்!

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. நேற்று தெரிவித்தார்.

நுகேகொடை அரசியல் சமர் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இதற்குரிய நடவடிக்கை இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு குறித்து கட்சிகள் எடுக்கும் முடிவை நாம் மதிக்கின்றோம்.

நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார். எனினும், அவரது ஆசிர்வாதம், ஆதரவு அக்கூட்டத்தக்கு நிச்சயம் இருக்கின்றது. மக்களுக்காக களத்தில் இறங்கி போராடிய தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. அவரின் வழிகாட்டலுடன் எமது பயணம் தொடரும்.
நுகேகொடை அரசியல் சமரானது அரசாங்கத்துக்கு நிச்சயம் கடுமை அழுத்தமாக அமையும்.” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

ஏமாற்றிவிட்டது என்பிபி அரசு: பாதீடு குறித்து தமிழரசுக் கட்சி கடும் தீர்மானம்!

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு உட்பட தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் கடுமையான தீர்மானமொன்று எடுக்கப்படும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேச்சு நடத்துவதற்கு நேரம் கோரி இருந்தோம். கடந்த ஜுலை மாதம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் அதற்குரிய பதில் ஜனாதிபதி தரப்பில் இருந்து இன்னும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

“ தமிழரசுக் கட்சிதான் மூன்றாவது பெரிய கட்சியாகும். அக்கட்சியால் வழங்கப்பட்ட கடிதத்துக்கு ஜனாதிபதியொருவர் பதில் வழங்காமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும். எனவே, வரவு- செலவுத் திட்டம் பற்றி நாமும் காத்திரமானதொரு முடிவை எடுக்க வேண்டும்.

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதற்கு எனக்கு தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் பங்கேற்கமாட்டேன். எமது கட்சியும் பங்கேற்காது.” – எனவும் சாணக்கியன் எம்.பி. குறிப்பிட்டார்.

மரக்கறி விலைப்பட்டியல் (08.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

2ஆம் வாசிப்புமீதான விவாதம் இன்று ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியில் பொருளாதார விவகாரங்களைக் கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் ஆகிய இருவரில் ஒருவர் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றவுள்ளனர்.

இதன்போதே வரவு- செலவுத் திட்டம் தொடர்பான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் நேற்று முன்வைக்கப்பட்டது.

நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தினார்.

ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் முதல் வாசிப்பு கடந்த செப்ரெம்பர் 26 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்திற்கு மொத்தம் ஆறு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும்.

குழு நிலை விவாதம் நொவம்பர் 15 முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் நடைபெற்ற பின்னர், மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும்.

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

புசல்லாவையில் பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமர்!

0
புசல்லாவையில் பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமர்! புசல்லாவை நயாபான தமிழ் வித்தியாலயம் , எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி பிரம்மாண்டமான கிரிக்கெட் திருவிழாவை நடத்துகின்றது. போட்டியில் நயாபான, கலைவாணி, ஸ்டெலன்பேர்க் மற்றும் டெல்டா...

நிர்வாகச் சீர்கேடு: ஹட்டன் – டிக்கோயா நகரசபையில் கடும் அமளி! சபை அமர்வு ஒத்திவைப்பு!

0
மலைவாஞ்சான் ஹட்டன்: ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் மாதாந்த அமர்வு இன்று (24) காலை 10.45 மணியளவில் நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் கூடியது. எனினும், கடந்த 10 மாதங்களாக நகரசபை நிர்வாகத்தில்...

மலையகத்துக்கு மாடி வீட்டு திட்டம் வேண்டாம்: காணி உரிமையை உடன் வழங்குக!

0
" மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி, வீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும். எமது மக்களுக்கு மாடி வீட்டும் திட்டம் பொறுத்தமற்றது." என்று திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் மற்றும் ஜனநாயகத்துக்கான செயலூக்கப்படுத்தப்பட்ட பிரஜைகள் என்ற செயல்திட்டத்தின்...