Home Blog Page 217

ஊழல் வாதிகள் தப்பவே முடியாது: பாதீட்டு உரையில் ஜனாதிபதி திட்வட்டம்!

அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து ஹிட்லரை தோற்கடித்ததுபோல, எதிரணிகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சர்வாதிகார பயணத்துக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டுமென எதிரணிகள் விடுத்த அறைகூவலுக்கு பாதீட்டு உரையில் பதிலடி கொடுத்தார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலடி கொடுத்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் பாரிய பேரணியை நடத்துவதற்கு எதிரணிகள் திட்டமிட்டுள்ளன.

இது தொடர்பில் அறிவிப்பதற்காக கொழும்பில் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்டிருந்த சாகர காரியவசம் மற்றும் உதய கம்மன்பில ஆகியோர், மேற்படி ஹிடலர் கதையைக்கூறி எதிரணிகளை ஒன்றுபடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த அறிவிப்பு பற்றி இன்று ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.

“ ஹிட்லர் வந்துவிட்டார் என சிலர் கூறுகின்றனர். நீங்கள் ரஷ்யாவா, நீங்கள் அமெரிக்காவா (எதிரணியை பார்த்து கேட்கின்றார்…) ஹிட்லரை தோற்கடிப்பதற்காக அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒன்றிணைந்தது வரலாற்றுக் கதை. அது உலக அரசியலில் முக்கிய திரும்பு முனை.

எதிரணிகள் எப்படியான விளக்கத்தை வழங்கினாலும் நாம் சட்டத்தை அமுலாக்குவோம்.

மக்களுக்கு அநீதி இழைத்திருந்தால், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் தண்டனை வழங்குவோம். அதற்கு எந்த பெயர் சூட்டினாலும் பரவாயில்லை. எமது நடவடிக்கையை கைவிடமாட்டோம்.” – என்றார் ஜனாதிபதி அநுர.

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!

 

உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா இன்று (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவர் நாடு திரும்பும் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது ஜனநாயக விரோதம்!

மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் அதன் நிர்வாகத்தை ஆளுநர் ஊடாக முன்னெடுத்து வருவது ஜனநாயக விரோதச் செயலாகும் என்று தேர்தல் ஆணைக்குழவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ மாகாணசபைத் தேர்தல் ஒரு வருடத்துக்குள் நடத்தப்படும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டதால், அதனை நடத்தாமல் ஆளுநர்கள் ஊடாக நிர்வாகத்தை முன்னெடுப்பது சட்டவிரோதமாகும்.

மக்கள் சபையை நிர்வகிக்க வேண்டுமெனில் மக்கள் வாக்களிப்புமூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் அவசியம் என மாகாணசபைகள் தொடர்பான வழக்கு விசாரணையொன்றில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.” – எனவும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

தேர்தல் நடத்தப்படாமல் அது ஒத்திவைக்கப்பட்டுவருவது ஜனநாயக விரோதமாகும்.

ஆளுங்கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் ஒரு வருடத்துக்குள் பழைய முறையிலேனும் மாகாணசபைத் தேர்தலை நடத்தி இருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் பிரச்சினை எழுந்திருக்காது.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குள்ள தடையை நாடாளுமன்றத்தால் மாத்திரமே தற்போது நிவர்த்தி செய்ய முடியும். எந்த முறைமையின்கீழ் தேர்தல் என்ற முடிவுக்கு வரவேண்டும். பழைய முறைமையின்கீழ் தேர்தலை நடத்துவதாக இருந்தால் அடுத்த வருடம் முற்பகுதியில் அதனை செய்ய முடியும்.

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு எதிரணி வசம் உள்ள உள்ளாட்சிசபைகளில்கூட இன்னும் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் உள்ளது.” எனவும் தேர்தல் ஆணைக்குழவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

114 பேர் உயிரிழப்பு: பிலிப்பைன்ஸில் அவசர நிலை பிரகடனம்!

பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி புயலுக்கு 114 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பசிபிக் கடலில் உருவான கல்மேகி புயல் நேற்று முன்தினம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பிராந்தியத்தை கடந்து தென் சீனக் கடல் நோக்கி நகர்ந்தது.

இதில் பிலிப்பைன்ஸின் மத்திய பிராந்தியத்தில் உள்ள தீவுகளில் பலத்த சூறைக்காற்று வீசியதுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் நீக்ரோஸ் ஆக்சிடென்டல், செபு உள்ளிட்ட மாகாணங்கள் வெள்ளக் காடாக மாறின.

இதில் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், ஆற்றங்கரையோர வீடுகள், பெரிய அளவிலான கப்பல் கன்டெய்னர்களும் கூட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

பிலிப்பைன்ஸ் இந்த ஆண்டு எதிர்கொண்ட பேரிடர்களில் மிக மோசமான பேரிடராக இது கருதப்படுகிறது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் மத்திய பிராந்தியத்தில் கல்மேகி புயலுக்கு 114 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர். 127 பேரை காணவில்லை.

அதிகாரி ஒருவர் கூறுகையில், “கல்மேகி புயலால் சுமார் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.” – என்றார்.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் நேற்று அந்நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார். அவசர நிதியை அரசு விரைவாக வழங்கவும், உணவுப் பதுக்கல், அதிக விலை நிர்ணயம் ஆகியவற்றை தடுக்கவும் இது உதவும் என கூறப்படுகிறது.

இதற்கிடையில் பசிபிக் கடலில் உருவாகியுள்ள மற்றொரு புயல், கடும் புயலாக வலுப்பெற்று பிலிப்பைன்ஸின் வடக்கு மாகாணங்களை அடுத்த வார தொடக்கத்தில் தாக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நுகேகொடை கூட்டத்தில் களமிறங்குவாரா சாணக்கியன்?

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டு எதிரணியின் அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்குமாறு எனக்கு தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், நான் அதில் பங்கேற்கமாட்டேன் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

அத்துடன், தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எமது கட்சியும் அதில் பங்கேற்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் தமிழரசுக் கட்சி கடுமையான தீர்மானமொன்றை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் பதவிக்கு பொதுவேட்பாளர்கள்?

மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக எதிரணிகளின் சார்பில் பொதுவேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட எதிரணிகளிலுள்ள சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் அரசாங்கத்தக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளன.

இந்நடவடிக்கைக்கு பிறகும் எதிரணி கூட்டு தொடர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சிசபைத் தேர்தல்களில் எதிரணிகள் இணைந்தே ஆட்சி அமைந்துள்ளன. எனவே, மாகாணசபைத் தேர்தலில் எதிரணிகள் ஒன்றிணைந்து, முதல்வர் பதவிக்காக அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவேட்பாளர்களை களமிறக்கினால் வெற்றி பெறமுடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தாலும், இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இழப்பீட்டு பணியகத்திற்கு படை அதிகாரிகள்: தமிழரசுக் கட்சி கடும் எதிர்ப்பு!

இழப்பீடுகளுக்கான பணியகத்தில் முன்னாள் இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்கப்படுவது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வெளிப்படுத்திய ஒவ்வொரு பயத்தையும் உறுதிப்படுத்தும் என்று, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தமது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இழப்பீடுகளுக்கான பணியகத்தில் முன்னாள் சிறிலங்கா இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்கப்படுவது எதிர்த்து இலங்கை தமிழ் அரசு கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
பல ஆண்டுகளாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உள்நாட்டு பொறுப்புக்கூறலில் நம்பிக்கை இல்லை என்று கூறி வருகின்றனர். இதில் அவர்கள் தெளிவாக உள்ளனர்.

அவர்களின் துன்பங்களுடன் தொடர்புடைய அதே நபர்களால் வழிநடத்தப்படும் நிறுவனங்களை நம்ப முடியாது.
அரசாங்கம் ஒரு உள்நாட்டு செயல்முறையை உறுதியளிக்கிறது. ஆனால் இந்த நபர்கள் நியமிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வெளிப்படுத்திய ஒவ்வொரு பயத்தையும் அது உறுதிப்படுத்தும்.

இவ்வாறான கவலைகளைப் பற்றி கலந்துரையாடுவதற்கு ஒரு சந்திப்பைக் கோரி 4 மாதங்களுக்கு முன்னரே சிறிலங்கா அதிபருக்கு கடிதம் எழுதினோம். எந்த பதிலும் இல்லை என்றும் சாணக்கியன் பதிவிட்டுள்ளார்.

மரக்கறி விலைப்பட்டியல் (07.11.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (07.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் சஜித் சந்திப்பு!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவருமான அஜித் தோவலை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார்.

கடல்சார் தொடர்புகள், திறன் விருத்தி மேம்பாடு, நவீன தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், தெற்காசிய நாடுகளிடையே பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்துதல் என்பன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் எழும் சவால்களை எதிர்கொள்ள தகவல் பரிமாற்றம், பிராந்திய அபிவிருத்திக்கான முன்முயற்சிகள் மற்றும் நிறுவன ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கருத்தாடல் இடம்பெற்றுள்ளது

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

2.5 மில்லியன் டொலர் திருட்டு – விசாரணைக்கு உதவும் அவுஸ்ரேலிய அதிகாரிகள்

0
நிதி அமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவி, இணையக் குற்றவாளிகள் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திருடிய சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, அவுஸ்ரேலிய அதிகாரிகள் உதவி வருவதாக அவுஸ்ரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் தெரிவித்துள்ளார். இந்த...

சாம்பியனானது பசறை தமிழ் மகா வித்தியாலயம்!

0
பசறை வலய பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற இருபது வயதிற்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில், 2026 ஆம் ஆண்டிற்கான சாம்பியன் பட்டத்தை பசறை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் கைப்பற்றினர். இந்த வெற்றியின் பின்னணியில் மாணவர்களின் விடாமுயற்சி மற்றும்...

மரக்கறி விலைப்பட்டியல் (25.04.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (25.04.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...