Home Blog Page 225

தெலங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து: 20 பேர் உயிரிழப்பு

 

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா – கானாபூர் சாலையில் இன்று காலையில் ஆர்டிசி பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.

இரு சக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது டிப்பர் லாரி ஆர்டிசி பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த பயங்கர விபத்தில் 20 பேர் இறந்ததாக செவெல்லா அரசு மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்

இதுகுறித்து மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜேந்திர பிரசாத், “

இந்த விபத்தில் இதுவரை இருபது பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களின் உடல்கள் எங்கள் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை நடைமுறைகள் முடிந்த பிறகு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். சிறு காயங்களுடன் உள்ள 6 பயணிகள் செவெல்லா சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலத்த காயங்களுடன் உள்ளவர்கள் பட்டினம் மஹிந்திரா ரெட்டி மருத்துவமனை மற்றும் பாஸ்கர் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

எதிர்கால தலைமுறையை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற மகா சங்கத்தினர் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்

கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையே ஒரு ஆன்மீக தொடர்பு இருப்பதாகவும், சமூகத்தை மீட்டெடுக்க பிக்குமாரின் பங்களிப்பு இந்த சமூகத்திற்கு மீண்டும் அவசியம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

களனி வித்யாலங்கார சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று (02) பிற்பகல் நடைபெற்ற ‘யெலசிய அபிமன்’ நினைவு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

1875 நவம்பர் 1ஆம் திகதி போதிசத்வ குணோபேத ரத்மலானே ஸ்ரீ தர்மாலோக மகா சுவாமிந்திர தேரினால் நிறுவப்பட்ட பேலியகொட வித்யாலங்கார பிரிவேனா, சமகால பௌத்த கல்வியின் தலைமையகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பேலியகொட வித்யாலங்கார பிரிவேனா நிறுவப்பட்டு இந்த ஆண்டு 150 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நீண்ட வரலாற்றில் வித்யாலங்கார பிரிவேனா நாடு, தேசம், மதம், தர்மம் மற்றும் மொழிக்கு ஆற்றிய சேவை மகத்தானது. சிங்களம், பாலி, சமஸ்கிருதம் மற்றும் பௌத்த தர்மம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி பட்டப்படிப்பை நோக்காகக் கொண்டு பிக்குகளுக்குத் தேவையான கல்வியை இந்த நிறுவனம் வழங்கி வந்தது. சமகாலத்திற்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆங்கில மொழி அறிவு என்பனவும் வழங்கப்படுகிறது.

வித்யாலங்கார பிரிவேனாவின் புதிய இணையத்தளத்தை ஜனாதிபதி திறந்து வைத்ததோடு ‘யெலசிய அபிமன்’ கல்வித் தொகுப்பு மற்றும் நினைவுத் தொகுப்பு என்பன ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

அமராபுர மகாநிகாயவின் மகாநாயக்க தேரர், அதி வணக்கத்திற்குரிய கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரர், ராமான்ய மகாநிகாய மகாநாயக்க தேரர், வணக்கத்திற்குரிய மகுலேவே விமல தேரர், அமெரிக்காவின் வொஷிங்டன் மேரிலாந்து விகாரையின் விகாராதிபதி அதி வணக்கத்திற்குரிய கட்டுகஸ்தொட்ட உபரதன நாயக்க தேரர், பிரபல நடிகர் ரவீந்திர ரந்தேனிய, ஓய்வுபெற்ற சிரேஸ்ட பேராசிரியர் தர்ஷன ரத்நாயக்க ஆகியோருக்கும் கௌரவப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

வித்யாலங்கார இறுதிப் பரீட்சையின் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்றார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

இந்த வித்யாலங்கார பிரிவேனாவை நமது நாட்டில் நவீன கல்வியின் மையம் என்று அழைக்கலாம். வித்யாலங்கார பிரிவேனா கல்வித் துறையில் பெரும் பங்காற்றியது. இந்த வழிபாட்டுத் தலம் மிகப்பெரிய சமூகப் பணிகளைச் செய்த பிக்குமார்களால் வளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வித்யாலங்கார பிரிவேனா கல்வித்துறையில் மட்டுமல்ல, நமது கிராமங்களுக்குத் தேவையான ஒழுக்கமான பிக்குகளை உருவாக்குவதிலும் பெரும் பங்காற்றியது. இது நமது கிராமங்களில் பிரிவேனா கல்விக்கான ஆசிரியர்களை உருவாக்கும் மையமாகவும் மாறியது. பௌத்த தத்துவ அடித்தளங்களை ஆராய்வதன் மூலம் சரியானதைக் கண்டறிய பாடுபடும் ஒரு மையம் இது.

வித்யாலங்கார பிரிவேனா என்பது உள்நாட்டு மட்டுமல்ல, வெளிநாட்டு மாணவர்களும் படிக்கும் ஒரு சிறந்த கல்வி மையமாகும். 1940களில், அக்கால ஆட்சியாளர்களின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக பிக்குகள் செயல்படத் தொடங்கினர். இதனால் கோபமடைந்த குழுக்கள் பிக்குகளுக்கு எதிராக ஒரு புதிய வகை அரசியல் பிக்குகளாக புதிதாக பிக்குகளை உருவாக்கினர். புத்தர் போதித்த தர்மத்தைப் பின்பற்றும் பிக்குகளின் தலைமுறை ஒன்றும், மறுபுறம், கேலிக்கூத்தான அரசியல் பிக்குகளின் தலைமுறை என்று கூறப்படும் ஒரு புதிய வகையை உருவாக்கினர். இந்த நாட்டில் பிக்கு தலைமுறை நமது சமூகத்துடன் பிணைப்பைக் கொண்டுள்ளது. அவர்களின் சமூக செயல்பாடு ஆட்சியாளர்களின் சமூக விரோதக் கொள்கைகளுக்கு எதிராக இருந்தது. 1946 மார்ச் 14 ஆம் திகதி வித்யாலங்கார பிரிவேனா பிரகடனம் என்ற பெயரில் பிக்குகளும் அரசியலும் என்ற வரலாற்று ஆவணம் வெளியிடப்பட்டது. இந்த பிரகடனத்தின் மூலம் பிக்குகளின் சமூகப் பணிகளில் மிக முக்கியமான திருப்புமுனை வெளியிடப்பட்டது.

ஒரு ஆட்சி வீழ்ச்சியடைந்தால், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் அதற்கு இணையாக பௌத்த மதத்தின் மீதான தாக்கமும் தவிர்க்க முடியாதது என்பது அந்த அறிக்கை தெளிவாகச் சுட்டிகாட்டப்ட்டிருந்தது. எனவே, பிக்குகளின் வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஏதாவது திட்டம் இருந்தால், அதில் அரசியலோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் அதில் ஈடுபடுவது பிக்குவுக்கு உகந்தது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இது நமது பிக்குகளுக்கு நல்ல வழிகாட்டுதலை வழங்குகிறது என்று நான் நினைக்கிறேன்.பிக்குகளை மையமாகக் கொண்டு பரப்பப்பட்ட அவதூறுகள் இந்த அறிக்கையில் பலமான முறையில் தகர்க்கப்பட்டது. இந்த கருத்தாடல் இலவச கல்விச் சட்டத்துடன் தான் அன்று கட்டமைக்கப்பட்டது. இலவச கல்விச் சட்டம் தொடர்பாக வித்யாலங்கார பிரிவேனாவை மையமாகக் கொண்ட பெரும் எழுச்சி மிகவும் வலுவான வெற்றிக்கு வழிவகுத்தது.

1947 இல் ‘காலய’ இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டது போன்று வித்யாலங்கார பிரிவேனா பிக்குகள் மற்றும் சமூகத்திற்கு நல்ல விடயங்களைக் கொண்டுவரும் ஒரு பாரிய மையமாக மாறியுள்ளது. 150 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட வரலாறாகும்.

இந்த மாபெரும் வித்யாலங்கார பிரிவேனா 150 ஆண்டுகளாக மிகவும் வலிமையானது மற்றும் நமது பௌத்த தர்மம், சமூகம் மற்றும் பிக்கு சமூகத்தில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. அந்த வரலாற்றுப் பொறுப்பு தற்போதைய பரிவேனாதிபதி தேரர் மற்றும் எங்கள் பிக்குகளின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. அவரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தப் பணியை அவர் மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையும் வலுவான எதிர்பார்ப்பும் எங்களுக்கு உள்ளது.

2005 இல் தொடங்கிய இந்தப் பிரிவேனாவின் நிர்மாணப் பணிகள் 20 ஆண்டுகளாக நிறைவு செய்யப்படவில்லை. மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் அறிவு கொண்ட ஒரு நாட்டில் ஒரு கட்டிடத்தைக் கட்டித் திறக்க 20 ஆண்டுகள் ஆகும் என்றால், நாம் எந்தளவு கீழ் மட்டத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளலாம். 2005 இல் செலவிடப்பட்ட பணத்தின் பயன்கள் 2025 தான் கிடைக்கிறது என்றால் பொதுமக்களின் பணத்திற்கு நாம் நியாயத்தை நிலைநாட்டவில்லை. அரச பொறிமுறையில் உள்ள திறமையின்மை, குழப்பகரமான தன்மை என்பவற்றை ஒவ்வொன்றாக தீர்க்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

இந்தக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பான ஒரு ஆய்வறிக்கையை அமைச்சர் ஹினிதும சுனில் அமைச்சரவையில் சமர்ப்பித்தார். ஒரு பெரிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது மின்சார இணைப்பு பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.கம்பிகள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.இந்தளவு புனிதமான இடத்தில் உள்ள கம்பியை பாதுகாக்க முடியாவிட்டால், நாடு எங்குள்ளது?

போதைப்பொருள்தான் இதற்கு முக்கிய காரணம். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் உள்ளள கம்பியைப் பாதுகாக்க அதிரடிப்படை நிறுத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள யானைகள் வேலியில் வைக்கப்பட்டுள்ள பெட்டரியை திருடப்படுகிறது. எனவே, இந்தக் கட்டிடத்தில் உள்ள பாரிய கம்பி வெட்டப்பட்டதன் பின்னணியில் உள்ள போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். ஒரு அரசாங்கமாக, நமக்கு ஒதுங்க முடியாத பொறுப்பு உள்ளது.

இந்த போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். இந்த போதைப் பொருட்கள் நாம் நினைத்துப் பார்க்காது துறைகளுக்கும் பரவியுள்ளன. இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக அரசியல் மற்றும் வாதங்கள் இருக்கலாம். ஆனால் இந்த பேரழிவைத் தடுக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும். கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவை தகர்க்க முடியாது. நாம் தவறு செய்தால், கிராமத்தில் உள்ள விகாரையின் பிக்குவைத்தான் குறை கூறுவோம். கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையே ஒரு ஆன்மீக உறவும் வரலாற்று பாரம்பரியமும் உள்ளது. இந்த சமூகத்திற்கு மீண்டும் பிக்குவின் மரபு தேவை. இந்த நாட்டிற்கு ஏற்பட்ட ஒவ்வொரு பேரழிவிலும், பிக்குகள் முன்வந்து செயற்பட்டுள்ளனர்.

நாட்டுக்கும் மக்களின் நலனுக்காக அவர்கள் எவ்வளவு பணியாற்றியுள்ளனர்? நமது நாட்டை மீட்டெடுக்க அத்தகைய பிக்குமார்களின் தலையீடு அவசியம். அந்தத் தலையீட்டைச் செய்ய நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேந்தர், வணக்கத்துக்குரிய கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் இத்தேபானே தம்மாலங்கார தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் , அனுநாயக்க தேரர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச அரசியல்வாதிகள், தூதுவர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நுகேகொடை கூட்டத்தில் ரணில், மஹிந்த பங்கேற்பு?

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் கூட்டத்தில் முக்கிய அரசியல் புள்ளிகளை களமிறக்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க , கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை களமிறக்குவதற்குரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன பங்கேற்றாலும் அக்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது பற்றி அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையிலேயே கூட்டத்தில் உரையாற்றாவிட்டாலும் , வந்து அமர்ந்திருக்குமாறு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

நுகேகொடை கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்பதால் அக்கூட்டத்தின் முக்கியத்துவம் குறையக்கூடாது என்பதற்காகவே இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது.

எனினும், மேற்படி தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

சூடானில் உள்நாட்டு போர் உக்கிரம்: பலர் படுகொலை!

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை ராணுவப் படையான ஆஸ்.எஸ்.எப்., கைப்பற்றிய பின் ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானின் எல் – பாஷர் நகரை, சூடான் ராணுவத்திடம் இருந்து, துணை ராணுவப் படையான ஆர்.எஸ்.எப்., சமீபத்தில் கைப்பற்றியது.
அதைத் தொடர்ந்து, அங்கு மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் ஏற்பட்டுவருகின்றன.

சூடானில், சக்திவாய்ந்த இரு ராணுவ தலைமைகளுக் கு இடையேயான அதிகாரப் போட்டியின் விளைவால் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

சூடானின் அதிகாரப்பூர்வ ராணுவ தலைவரான ஜெனர ல் அப்தெல் பத்தாஹ் அல் பூர்ஹான் தலைமையில் எஸ்.ஏ.எப்., எனும் சூடான் ஆயுத படைகள் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

டார்பூரில் இனப் படுகொலை செய்த ஜன்ஜாவித் போராளிக் குழுவைச் சேர்ந்த ஜெனரல் முகமத் ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்.எஸ்.எப்., எனும் துணை ராணுவ விரைவு படைகள் செயல்பட்டு வருகிறது.

இரு பிரிவினரும் இணைந்து, நீண்டகாலமாக சர்வாதிகாரியாக இருந்த ஓமர் அல் பஷீரை, 2019ல் ஆட்சியில் இருந்து அகற்றியதில் முக்கி ய பங்கு வகித்தன.
இந்நிலையில், ஆட்சி கவிழ்ப்புக்கு பின், கடந்த 2021ல் ஜனநாயக ஆட்சிக்கு மாறுவது மற்றும் ஆர்.எஸ்.எப்.,ஐ அதிகாரப்பூர்வ ராணுவத்துடன் இணைப்பது உள்ளிட்ட விவகாரங்களில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்நிலையில், 2023 ஏப்ரல் முதல் இரு தரப்பிடையேயான மோதல் முழு அளவிலான உள்நாட்டு போராக மாறியது.
எல் – பஷாரில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமியருக்கு எதிராக பரவலாக பாலியல் வன்முறைகள் மற்றும் கூட்டு பாலியல் வன்முறைகள் நடப்பதாகவும் முறைப்பாடுகள் எழுந்துள்ளன.

ஆர்.எஸ்.எப்., தாக்குதலுக்கு பயந்து 36,000க்கும் மேற்பட்ட மக்கள் கால்நடையாக அருகில் உள்ள தாவிலா போன்ற நகரங்களுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இதற்கிடையே, ஆயிரக்கணக்கானோர் மாயமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூடானில், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைக்கு இடையிலான மோதல்களால், 1.4 கோடி மக்கள் இடம் பெயர்ந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது உலகிலேயே மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளதாக மனித நேய ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, சூடானின் எல் - பாஷர்; நகரில் நடக்கும் கொடூரங்கள் குறித்து ஆஸ்திரேலியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் வன்முறை மற்றும் தடையற்ற மனிதாபிமான அணுகலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுக்கிறோம்.

பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் சர்வதேச சட்டத்தை மதிக்கும் தங்கள் கடமைகளை அனைத்து தரப்பினரும் நிலைநிறுத்த வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் குறிப்பிட்டுள்ளார்.

மரக்கறி விலைப்பட்டியல் (03.11.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (03.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

21 ஆம் திகதி போராட்டம் குறித்து அரசுக்கு நடுக்கம்: மொட்டு கட்சி கருத்து!

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டம் குறித்து அரசாங்கம் அச்சம் அடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

மொட்டு கட்சியின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டார்.

“  21 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தால் ஆளுங்கட்சிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் அனைத்து விடயங்களையும் மறந்து    அப்போராட்டம் பற்றி கதைக்கின்றது.

எதிரணிலுள்ள சில கட்சிகள் எதிரணியையே தாக்குகின்றன. அக்கட்சிகளுடன் எமக்கு தேர்தல் கூட்டணி கிடையாது. உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும்.

எமக்கு எதிராக சேறு பூசப்படுகின்றது. போலி பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.  மிரட்டல்மூலம் எமது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது.” எனவும் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் நடைபெறவுள்ள போராட்டத்தில் தமது கட்சி பங்கேற்காது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை!

நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான வத்திக்கானின் செயலர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், இலங்கைக்கு இன்று மேற்கொள்கிறார்.

அவர் நவம்பர் 8ஆம் திகதி வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தின் அழைப்பின் பேரில், அவர், இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.

அவர் இந்தப் பயணத்தின் போது, ​​ ஜனாதிபதி அநுர திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்திப்பார்.

அத்துடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துவார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தேவாலயங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள கலாசார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் வத்திக்கானின் வெளியுறவு அமைச்சர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

நாடு பூராகவும் இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்! ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தும் வரை போராடுவோம்!!

 

ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள்  நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையினை போராட்டத்தினை இன்று (03) திகதி முதல் மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கணேசன் அனீரன் கையொப்பமிட்டு கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமக்கான ஆசிரியர் நியமனத்தை உறுதிப்படுத்தித்தராமல் கடந்த ஐந்து வருடங்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர் எனும் நியமணத்தின் ஊடாகவே தாம் கற்பித்தல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் தமக்கு ஆசிரியர் நியமணத்தை வழங்காதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 03.11,2025 திகதியும் நாளை 04,11,2025 திகதியும்  நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறைப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையினை முன்வைத்து கடந்த 01.11,2025 திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்ததுடன், அதன் தொடர்ச்சியாக சுகயீன விடுமுறைப் போராட்டத்தினையும் முன்னெடுக்கவுள்ளனர்.

இலங்கை முழுவதும் 16600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாடசாலைகளில் இணைக்கப்பட்டு கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதுடன், இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களில் 1400 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அ. அலெக்ஸ் மட்டக்களப்பு

சீதையம்மன் ஆலயத்தில் கொள்ளை: 7 உண்டியல்கள் உடைப்பு!

நுவரெலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் நேற்றிரவு இனம் தெரியாத நபர்களால் ஆலயத்தில் உட்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 7 உண்டியல்கள் களவாடப்பட்டுள்ளன என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டிவி கமராக்கள் உடைக்கப்பட்டு , ஆலயத்தின் காரியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் ஆலயத்தின் உட் பகுதியில் பல்வேறு தேவைகள் நிமித்தமாக வைக்கப்பட்டிருந்த ஏழு உண்டியல்களே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளை இடம்பெற்றுள்ளது.

இனம் தெரியாத நபர்கள் ஆலயத்திற்குள் பிரவேசித்து குறித்த உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தாள்களை களவாடிவிட்டு , சில்லறை காசுகளை ஆற்றில் கொட்டிவிட்டு சென்றுள்ளதாக ஆலயத்தில் நிர்வாக சபையில் பொறுப்பு வாய்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் ஆலயத்தின் காரியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் சுமார் 53 ஆயிரத் ஆயிரம் ரூபாவும் களவாடப்பட்டள்ளது.

உண்டியல் பணம் உட்பட நான்கு இலட்சம் ரூபா வரை களவாடப்பட்டிருக்கலாம் என நிர்வாக சபையினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக நுவரெலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து காவல் துறையினர் ஆலயத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

ஆலயத்தில் பாதுகாப்பிற்றகாக பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டிவி கமராக்கள் அனைத்தும் உடைக்கப்பட்ட பின்பே இக்கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருடர்கள் ஆலயத்தின் ஆற்றங்கரை வழியாக வருகை தந்து வெளியில் பொருத்தப்பட் டிருந்த கமராவை உடைத்ததன் பின்பு ஆலயத்திற்கள் உட்பிரவேசித்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டள்ளனர்.

இந்த வருடத்தில் இரண்டாவது தடவையாக ஆலயத்தில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், ஆலயத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆலய நிர்வாக சபையினர் தெரவிக்கின்றனர்.

7 ஆம் திகதி பட்ஜட் முன்வைப்பு: ஆய்வுக்கு விசேட குழு அமைக்கிறது சஜித் அணி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் முன்வைக்கப்படவுள்ள வரவு- செலவுத் திட்டத்தை ஆராய்ந்து, தர்க்க ரீதியிலான கருத்துகளை முன்வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.

இதற்காக விசேட குழுவொன்றை அக்கட்சி நியமிக்கவுள்ளது. கபீர் ஹாசீம், ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் மேலும் சில பொருளாதார நிபுணர்கள் அக்குழுவில் இடம்பெறவுள்ளனர்.அதேபோல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருத்தரங்கு நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

வெறுமனே விமர்சனங்களை முன்வைக்காமல், புள்ளி விவரம் மற்றும் விஞ்ஞானப்பூர்வமான கருத்துகளை முன்வைக்கும் நோக்கிலேயே விடயங்களை எதிரணி எம்.பிக்களுக்கு சுட்டிக்காட்டுவதற்கு இக்குழு நியமிக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.

வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி நிதி அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது. இது 2 ஆம் வாசிப்பாக கருதப்படும். 2 ஆம் வாசிப்புமீதான விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை நடைபெறும். 14 ஆம் திகதி மாலை 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகும். பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி நடைபெறும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அரச மொத்த செலவீனமாக 4 ஆயிரத்து 434 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

2026 பாதீட்டில் நிதி அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. (634 பில்லியன் ரூபா)

பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபாவும், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு 554 பில்லியன் ரூபாவும், கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுக்கு 301 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படவுள்ளது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

பொகவந்தலாவையில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்!

0
நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்து அமைக்கக்கோரும் கை எழுத்து இயக்கம் இன்று பொகவந்தலாவ பகுதியில் ஆரம்பமானது. நோர்வூட் நகரை அண்மித்ததான பகுதியில் நோர்வூட் பிரதேச செயலகத்தை அமைக்க வேண்டும்...

பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

0
ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அடுத்ததாக ஓமான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ஈரான் அரச...

மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி!

0
மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி! மெராயா நகரில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பலவந்தமாக வைக்கப்பட்டிருந்த கண்டய்னர் , சட்ட ரீதியான நடவடிக்கைகளின் அழுத்தம் காரணமாக இன்று அகற்றப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மக்களுக்கும் சாரதிகளுக்கும் பெரும் சிரமத்தை...