Home Blog Page 226

தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எடுத்த பின்னரே மாகாணசபைத் தேர்தல்!

மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எட்டப்பட்ட பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை இடம்பெறும் என்று பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

“ மாகாணசபை தேர்தலை புதிய முறைமையில் நடத்துவதற்காக பழைய முறைமை கடந்த காலத்தில் இரத்து செய்யப்பட்டது. எனினும், இதற்குரிய நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை. சட்டமூலத்தை கொண்டுவந்த அமைச்சர்கூட அதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே, மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது பற்றி முதலில் தீர்மானத்துக்கு வரவேண்டும். அனைத்து கட்சிகளின் இணக்கத்துடன் சிறந்த முறைமையை அறிமுகப்படுத்திய பின்னர் தேர்தல் நடத்தப்படும்.

ஜனநாயகத்தை வெளிப்படுத்துவதற்காக மக்களுக்கு உள்ள உரிமையை நாம் தடுக்கமாட்டோம். எனினும், கடந்தகாலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் பிரச்சினையாக உள்ளது. அது நிவர்த்தி செய்யப்பட்ட பின்னர் நடவடிக்கை இடம்பெறும்.

தேர்தல் திகதி பற்றி தற்போது உறுதியாகக் கூறமுடியாது.     தேர்தல் முறைமை பற்றி இறுதி முடிவை     எட்டப்பட்ட பின்னர் அது நடத்தப்படும்.” எனவும் அமைச்சர் சந்தன அபேரத்ன மேலும் குறிப்பிட்டார்.

மரக்கறி விலைப்பட்டியல் ( 02.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

செம்மணியை மீண்டும் புதைக்க இடமளியாதீர்! நீதி கோரி யாழில் போராட்டம்

 

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் நகர் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், ‘செம்மணி மனிதப் புதைகுழியை மீண்டும் மூடி மறைப்பதை நிறுத்து! உண்மையை வெளிப்படுத்து!!’ எனும் தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ”மேலும் அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய், அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமையை உறுதி செய், செம்மணியை மீண்டும் புதைக்க இடம் கொடுக்காதே…! உண்மையை வெளிப்படுத்து!!, அனைத்து காணாமல் ஆக்கல்களுக்கும் இப்போதாவது நீதி வழங்கு” ஆகிய வசனங்கள் அடங்கிய பதைதைகளை ஏந்தியிருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் சிங்கள மக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிரணிகள் ஒன்றிணைவது நல்லது: வரவேற்கின்றோம்!

எதிரணிகள் ஒன்றுபட வேண்டும். அது நல்லது. அதனை நாம் வரவேற்கின்றோம் என்று அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக எதிரணிகளால் எதிர்வரும் 21 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பேரணி தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ எதிரணிகளின் போராட்டம் பற்றி அத்தரப்புகளிடம்தான் கேட்க வேண்டும். இருந்தாலும் எதிரணிகள் ஒன்றுபட வேண்டும். அவ்வாறு ஒன்றிணைவது  நல்லது. ஆனால் அது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே.

நாம் கூட்டமொன்றை நடத்துவதாக இருந்தால் ஒரு கிழமைக்கு முன்பு இருந்துதான் தயார்படுத்தல் இடம்பெறும். ஆனால் இவர்கள் ஒரு மாதத்துக்கு முன்னரே தயாராகிவிட்டனர். மக்களை திரட்டுவதற்கு இவர்களுக்கு         ஒரு மாதம் செல்லும் என்பது இதன்மூலம் புலப்படுகின்றது.

நாம் எதிரணியில் இருக்கும்போது சிறப்பாக செயல்பட்டோம். இணைய வேண்டிய இடங்களில் இணைந்து பயணித்தோம். இது ஜனநாயக பண்பாகும்.” எனவும் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி குறிப்பிட்டார்.

தீபாவளி தினத்தன்று தலவாக்கலையில் நடந்த பெருந்துயர் சம்பவம்: இளைஞர் உயிரிழப்பு!

 

தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று ஜீப் மோதியதில் விபத்திற்குள்ளான இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

செல்வநாதன் புஸ்பகுமார் (28) என்ற இளைஞனே, நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று இரவு வேளையில் தலவாக்கலை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் பிரதான வீதியில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு பட்டாசு கொளுத்தி கொண்டிருந்த இளைஞர்கள் குழு ஒன்றில் இருந்த எஸ்.புஸ்பகுமார் (28) என்ற இளைஞனும் இருந்துள்ளார்.

இதன்போது பிரதான பாதையில் வருகை தந்த ஜீப் வண்டி ஒன்று திடீரென இளைஞர்கள்மீது மோதியுள்ளது.

இதில் இரு இளைஞர்கள் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த குறித்த இளைஞன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய சாரதி நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

உயிரிழந்த இளைஞன் தலவாக்கலை புகையிரத பணியளார்களுக்கான வீடொன்றில் வசித்து வந்துள்ளார். இதே நேரம் குறித்த விபத்தில் பாதிக்கப்பட்ட இன்னும் ஒரு இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பின்பு வீடு திரும்பியுள்ளார்.

நுவரெலியா நிருபர்

 

மக்களுக்காக களமாட எனக்கு பதவிகள் தேவையில்லை!

ஜனநாயகத்துக்காக முன்னிலையாவதற்கு பதவிகள் தேவையில்லை. எதிரணிக்குரிய பொறுப்பை நாம் நிறைவேற்றுவோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச  தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

‘ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார பயணத்துக்கு எதிராகவே 21 ஆம் திகதி ஒன்றிணையவுள்ளோம்.
நல்லாட்சியின்போது எதிரணிக்குரிய பொறுப்பை நாம் சிறப்பாக நிறைவேற்றினோம். இனியும் அவ்வாறு நடப்போம்.

அரசியல் என்பது தருணம் பார்த்து நடத்த வேண்டியது அல்ல. மக்களுக்கு பிரச்சினை வரும்போது முன்னிலையாக வேண்டும். அந்த பணியை நாம் செய்வோம்.” – எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் போராட்டம்!

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டம்!

ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் இன்று சனிக்கிழமை (01) குறித்த போராட்டத்தை ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தேசிய அமைப்பினால் முன்னெடுத்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் சமத்துவமான ஓய்வூதியம் வேண்டும், ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் 28 வருடங்கள் கடந்துள்ளன, ஓய்வூதிய முரண்பாட்டை தீர்க்க அரசிடம் நீதி கோருவோம் எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இன்றையதினம் பிரதமர் ஹரிணி அமரசூரிய மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அ. அலெக்ஸ் மட்டக்களப்பு

பப்புவா நியூ கினியாவில் மண்சரிவு: 21 பேர் பலி!

 

பப்புவா நியூ கினியாவின் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில், 21 பேர் உயிரிழந்தனர்.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு மலைப்பகுதியான எங்கா மாகாணத்தில் உள்ள குகாஸ் கிராமத்தில், நேற்று அதிகாலை 2:00 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், வீடுகள் தரைமட்டமானதால், தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே புதையுண்டனர். உள்ளூர்வாசிகள் 30 பேர் வரை இறந்ததாகவும், 18 உடல்கள ; இதுவரை மீட்கப்பட்டதாகவும் எங்கா கவர்னர் பீட்டர் இபடாஸ் தெரிவித்தார்.

21 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் பப்புவா நியூ கினியா அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இதனால் நிலச்சரிவும், பாதிப்புகளும் நிகழ்கின்றன.

கடந்த ஆண்டு மே மாதம் எங்காவில் ஏற்பட்ட நிலச்சரிவில், கிராமவாசிகள் 670 பேர் உயிரிழந்ததாக ஐ.நா., சபை தெரிவித்தது. ஆனால், 2,000க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்ததாக பப்புவா நியூ கினியா அரசு கூறியது.

7 ஆம் திகதி பட்ஜட் முன்வைப்பு: சஜித் அணி கூறுவது என்ன?

சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்தக்கூடிய வரவு- செலவுத் திட்டத்தையே அரசாங்கம் முன்வைக்கக்கூடும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் 2ஆவது வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் மரிக்கார் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்து வரி குறைப்பு செய்வதற்கு முன்னதாக அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. எனினும், கூட்டுறவு தேர்தல்களில் தோல்வி ஏற்படுவதால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது.

எனவே, சர்வதேச நாணய நிதியத்தை திருப்தி படுத்தும் பாதீடே முன்வைக்கப்படக்கூடும். அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம்.” – என்றார் எஸ்.எம். மரிக்கார்.

மரக்கறி விலைப்பட்டியல் (01.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

பொகவந்தலாவையில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்!

0
நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்து அமைக்கக்கோரும் கை எழுத்து இயக்கம் இன்று பொகவந்தலாவ பகுதியில் ஆரம்பமானது. நோர்வூட் நகரை அண்மித்ததான பகுதியில் நோர்வூட் பிரதேச செயலகத்தை அமைக்க வேண்டும்...

பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

0
ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அடுத்ததாக ஓமான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ஈரான் அரச...

மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி!

0
மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி! மெராயா நகரில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பலவந்தமாக வைக்கப்பட்டிருந்த கண்டய்னர் , சட்ட ரீதியான நடவடிக்கைகளின் அழுத்தம் காரணமாக இன்று அகற்றப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மக்களுக்கும் சாரதிகளுக்கும் பெரும் சிரமத்தை...