Home Blog Page 3490

ஒரே நாளில் 32 ஆண்களும், 25 பெண்களும் கொரோனாவால் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் ஜுன் 13 ஆம் திகதி மாத்திரம் 57 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

32 ஆண்களும், 25 பெண்களுமே இவ்வாறு பலியாகியுள்ளனர.

இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது.

” பெண் தொழிலாளர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் தோட்டக் கம்பனிகள்”

தேயிலை, இறப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் ஆண் தொழிலாளர்களைப் போலவே சம சம்பளம் பெற்று வந்தாலும் தோட்ட நிர்வாகங்கள் அவர்களது வேலைப்பளுவை அதிகரித்து உளவியல் ரீதியான அழுத்தங்களை பெண் தொழிலாளர்கள் மீது பிரயோகித்து வருவதாக ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ. முத்துலிங்கம்  குற்றஞ் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 1951ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தனது சர்வதேச பொது மாநாட்டில் பெண் தொழிலாளர்களுக்கு சம சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற பொது தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் சுமார் 42 வருடங்கள் கழித்து 1993 இல் இங்கு அமுல்படுத்தியது.

இதன் பயனாக 1993 ஏப்ரல் மாதம் தொடக்கம் தோட்ட ஆண், பெண் தொழிலாளர்களுக்கு தின சம்பளமான 23 ரூபா 78 சதம் அடிப்படை சம்பளமாகவும், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் விலைக்கேற்ப கொடுப்பனவு என்பனவும் சேர்த்து பெண் தொழிலாளர்களுக்கும் சம சம்பளமாக வழங்கப்பட்டு வந்தன.

சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் அதிகரிக்கப்படும் கொடுப்பனவுகளுக்கு ஏற்ப பெண் தொழிலாளர்கள் இன்றும் சம சம்பளத்தை பெற்று வருகின்றனர். பெண் தொழிலாளர்கள் சம சம்பளத்தை பெற்று வந்தாலும் கம்பனி நிர்வாகங்கள் இத் தொழிலாளர்கள் மீது பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.

கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்த சம்பள அதிகரிப்பிற்கேற்ப ஒரு நாட் பேருக்கு 14 கிலோகிராம் கொழுந்தை பறிக்க நிர்ப்பந்தித்து, தற்போது ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பிற்கு பின்னர் 20 கிலோகிராமிற்கு மேலதிகமாக கொழுந்தை பறிக்க வேண்டும் என அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். வறட்சி நிலவும் காலங்களில் இது சாத்தியமற்ற விடயமாகும். இதனால் பெண் தொழிலாளர்கள் தாம் தொழில் புரியும் இடங்களில் பாரிய மன அழுத்தங்களுக்கு உட்பட்டு வருகின்றனர்.

தவிர,ஞாயிற்றுகிழமைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒன்றரை நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பது சட்டமாகும். எனினும் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு பறிக்கும் கொழுந்து கிலோகிராம் அளவிற்கு ஏற்பவும், சேகரிக்கும் இறப்பர் பால் லீற்றருக்கு ஏற்பவும் கொடுப்பனவுகளை வழங்கும் முறையை நிர்வாகங்கள் முன்னெடுத்துள்ளன. இது சம்பளமாக இல்லாமல் கைக்காசு முறையில் வழங்கப்படுகின்றன.

இதன் காரணமாக தொழிலாளர்கள் இக் கொடுப்பனவிற்கான ஊழியர் நம்பிக்கை நிதி, ஊழியர் சேமலாப நிதி அறவிடூகளை இழந்துள்ளனர்.இந்நாட்களில் இவர்களது தொழில் பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரசாங்கம், அரச நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண் ஊழியர்களை பாதுகாக்க விசேட ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. இது வரவேற்கத்தக்க விடயமாகும்.

து போன்ற நடைமுறையை தனியார் துறை பெண் கர்ப்பிணி தொழிலாளர்களும் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். குறிப்பாக மலையக பெண் தொழிலாளர்களுக்கு இது அத்தியாவசியமாகும்.என இவ்விடயத்தில் சுகாதார அமைச்சு விரைந்து கவனம் செலுத்த வேண்டும், அத்தோடு பெண் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளை பாதுகாக்க தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘பஸில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது’

பஸில் ராஜபக்ச நாட்டில் இருந்திருந்தால் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு இடமளித்திருக்கமாட்டார்.  எரிபொருட்களின் விலை உயர்வு மக்களை பாதிப்படையச் செய்துள்ளது. கொழும்பில் இருந்து தீர்மானம் எடுப்பவர்களுக்கு இது தெரியாது. மக்களோடு மக்களாக வாழும் எமக்குதான் புரியும்.

எனவே, குறித்த முடிவை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும். ஆளுங்கட்சி பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் வலியுறுத்துவேன்.

இவ்வாறு இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.

 

,

பஸ் கட்டணம் உயருமா? வெளியானது புதிய அறிவிப்பு!

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் பஸ் கட்டணம் ஒரு ரூபாவினால்கூட அதிகரிக்கப்படமாட்டாது – என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அனுமுகம தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனை கடந்த காலத்தில் விதிக்கப்பட்ட போது, பேருந்து கட்டணத்தில் 20 வீத திருத்தம் மேற்கொள்ளப்பட்டமையால் இந்த தடவை கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

எனினும், எரிபொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஆராயப்படும் எனவும் திலும் குறிப்பிட்டார்.

கம்மன்பிலவுக்காக பொங்கியெழுந்த பங்காளிகள் – கூட்டறிக்கையும் வெளியானது

” எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவே முடிவெடுத்திருந்தது. இந்நிலையில் குறித்த முடிவை வலுசக்தி அமைச்சர் கம்மன்பிலமீது மட்டும் திணித்து வீண் பிரச்சினையை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் உருவாக்கியுள்ளார்.” – என்று அரசாங்க பங்காளிக்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஶ்ரீலங்கா பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தின் செயலையும் மேற்படி கட்சிகள் கண்டித்துள்ளதுடன், அவரின் கூற்றையும் நிராகரித்துள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகள் அரசாங்கம்மீதான மக்களின் நம்பிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் ‘ஆள் அரசியலுக்கு’ அரச தலைவர்கள் ஆரம்பத்திலேயெ முடிவு கட்டப்படவேண்டும் எனவும் 8 பங்காளிக்கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை நியாயப்படுத்தவில்லை. எனவே, மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வழிமுறைகள் பற்றி ஆராய வேண்டும் எனவும் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

1.எமது மக்கள் சக்தி

2.தேசிய சுதந்திர முன்னணி.

3.ஜனநாயக இடதுசாரி முன்னணி.

4.ஶ்ரீலங்கா சமசமாஜக்கட்சி

5.தேசிய காங்கிரஸ்

6.ஶ்ரீலங்கா கம்யூனிஸ்கட்சி

7. ஐக்கிய மக்கள் கட்சி

8.ஶ்ரீலங்கா மக்கள் கட்சி

 

நாட்டில் மேலும் 1,780 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் மேலும் ஆயிரத்து 780 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது.

ஹட்டனில் அனுமதியின்றி திறக்கப்பட்ட கடைகளுக்கு பூட்டு!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நகரில் அனுமதிப்பத்திரமின்றி திறக்கப்பட்டிருந்த  கடைகளை மூடுமாறு பொலிஸார் இன்று உத்தரவிட்டனர்.

பயணத்தடை அமுலில் இருந்தாலும் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வதற்காக கடைகளை திறப்பதற்கு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டிருந்தது. சில வர்த்தகர்கள் அனுமதி பத்திரமின்றியே கடைகளை திறந்து வைத்துள்ளனர்.இதனால் பெருமளவானவர்கள் நகர் பகுதிக்கு வரும் நிலை காணப்படுகின்றது. வாகனங்களும் அதிகளவு வருகின்றன.

சிலர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காமல் செயற்படுவதையும் காணக்கூடியதாக இருந்தது. எனவேதான், அனுமதி பத்திரம் பெறாத கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியாவசிய தேவைகள் இன்றி ஹட்டன் நகருக்கு வருகைதந்த முச்சக்கரவண்டி மற்றும் ஏனைய வாகனங்கள் திருப்பியனுப்பப்பட்டன.

எதிர்வரும் தினங்களில் அனுமதிப்பத்திரமின்றி கடைகள் திறக்கப்பட்டால் திறக்கப்பட்ட கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

‘எரிபொருள் விலை உயர்வு’ – நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்க முடிவு!

எரிபொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மையமாகக்கொண்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளது.

நேற்றிரவும் இன்று காலையும் நடைபெற்ற கட்சியின் உள்ளக கலந்துரையாடல்களில் இவ்விவகாரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

துறைசார் அமைச்சருக்கு எதிராகவா அல்லது அரசாங்கத்துக்கு எதிராக என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

தற்போதைய பிரதான எதிர்க்கட்சியால் முன்வைக்கப்படும் முதல் நம்பிக்கையில்லாப் பிரேரணை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

வட்டகொடையில் கறுப்பு பட்டியணிந்து போராட்டம்

வட்டகொடை தோட்டத்தில் பணிபுரியும் வெளிகள உத்தியோத்தர் ஒருவரை குறித்த தோட்டத்தில் உள்ள தொழிலாளி ஒருவர் தாக்கியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்களும், தோட்ட சேவையாளர் சங்கத்தின் உறுப்பினர்களும் இன்று போராட்டமொன்றை வட்டகொடை தோட்ட காரியாலயத்திற்கு முன்பாக முன்னெடுத்தனர்.

கைகளில் கறுப்பு பட்டி அணிந்தவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலயம் ஈடுப்பட்டனர்.

இதன்போது உத்தியோகத்தரை தாக்கிய தொழிலாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டகாரர்கள் வலியுறுத்தினர்.

தாக்குதலுக்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்கிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

க.கிசாந்தன்

எரிபொருள் விலையில் மீள் திருத்தம்? அமைச்சரவை இன்று ஆராயும்!

அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலையை மீள திருத்துவதற்கான சாத்தியப்பாடு உள்ளதா என்பது தொடர்பில் அரசு தீவிர கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (14) மாலை 5 மணிக்கு நடைபெறும் அமைச்சரவைக்கூட்டத்தின்போது இது தொடர்பில் ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்படவுள்ளது என அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்ததால் ஏனைய சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையும் விரைவில் அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்புக்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்களும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். விலை உயர்வை அரசு மீளப்பெறவேண்டும் எனவும் வலியுறுத்திவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அதிகரிக்கப்பட்டுள்ள விலை உயர்வை மீள திருத்துவது தொடர்பில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16)...

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...