Home Blog Page 3491

‘வெள்ளம்’ – கர்ப்பிணி மனைவியை தூக்கிக்கொண்டு 11 கி.மீ. நடந்த கணவன்

நாட்டில் கடந்தவாரம் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலை நிலவியது. பல இடங்கள், வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின. காலி மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

காலி, இனிதும பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்ணொருவருக்கு சிகிச்சைக்காக வைத்தியசாலை செல்லவேண்டியிருந்தது. வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் அம்புலன்ஸ் வண்டிகூட வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தனது கர்ப்பிணி மனைவியை தூக்கிக்கொண்டு 11 கி.மீ. நடந்தே சென்றுள்ளார் கணவன் குமார.

 

 

சாகர காரியவசத்துக்கு அதிகாரம் வழங்கியது யார்? கூட்டணிக்குள் சர்ச்சை!

“எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான முடிவை வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவே எடுத்தது. ஜனாதிபதி மற்றும் பிரதமரை பாதுகாக்கவே, நெருக்கடியான நிலையிலும் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை நான் சுயமாக முன்வந்து விடுத்தேன். இந்நிலையில் ஜனாதிபதி, பிரதமரை எதிர்க்கும் அளவுக்கு சாகர காரியவசத்துக்கு அதிகாரம் வழங்கியது யார்?

இவ்வாறு வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.

” கொரோனா நெருக்கடியால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் விதத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளமை ஏற்கமுடியாது. எனவே, இந்நிலைமைக்கு பொறுப்பேற்று துறைசார் அமைச்சர் பதவி விலக வேண்டும். ” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் நேற்று முன்தினம் மாலை விசேட அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வலுசக்தி அமைச்சில் அமைச்சர் உதய கம்மன்பில ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது அவர் கூறியவை வருமாறு,

“வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உபக்குழுவில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, டளஸ் அழகப்பெரும, நாமல் ராஜபக்ச மற்றும் இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், லசந்த அழகிவன்ன ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இக்குழு கூடியே விரிவான கலந்துரையாடலின் பின்னர் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்கியது. எனவே, இது அரசால் எடுக்கப்பட்ட முடிவாகும். அறிவிப்பை மாத்திரமே நான் விடுத்தேன்.

எரிபொருட்களின் விலை உயர்வு சம்பந்தமான அறிவிப்புகளை வழமையாக நிதி அமைச்சே வெளியிடும். எனினும், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை நெருக்கடி நிலைக்கு தள்ளக்கூடாது என்பதால் அரச தலைவர்களை பாதுகாக்கும் நோக்கில் சுயமாக முன்வந்து விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை நான் விடுத்தேன். எவரும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. என்னால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமரின் பிரதிநிதியாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பங்கேற்றிருந்தார்.

எனவே, சாகர காரிய வசம் என்பவர் விமர்சனங்களை தொடுப்பது எனக்கு எதிராக அல்ல. மாறாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரையே அவர் விமர்சிக்க விளைந்துள்ளார். அரச தலைவர்களை எடுத்த முடிவை விமர்சித்து சாகர காரியவசம் பெரும் தவறை இழைத்துள்ளார். எனவே, பதவி விலகவேண்டியது நானா, சாகர காரியவசமா?

இவ்வாறானதொரு அறிவிப்பை விடுப்பதற்கு கட்சி மட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என மொட்டு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர். பிரதமர் மற்றும் கட்சியின் தவிசாளருக்குகூட இது தொடர்பில் எதுவும் தெரியாது. எனவே, இவ்வாறானதொரு அறிவிப்பை விடுப்பதற்கு சாகரவுக்கு அதிகாரம் வழங்கியது யார்?

எரிபொருள் விலை உயர்வுக்கான நெருக்கடி நிலைக்கு நான்தான் காரணமென சாகர கருதினால், என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கின்றேன். நான்தான் பொறுப்பு என அவர் அறிக்கை விடுத்துள்ளார். எனவே, விவாதத்துக்கு வந்தால் யார் பொறுப்பு என்பதை விவாதிக்கலாம். ” – என்றார்.

இஸ்ரேலில் திடீர் திருப்பம் – புதிய பிரதமர் பதவியேற்பு!

இஸ்ரேல் நாட்டில் திடீர் திருப்பமாக 8 கட்சிகள் அடங்கிய கூட்டணி வெற்றிபெற்று புதிய பிரதமர் பதவியேற்றார். 12 ஆண்டுகளாக பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்டுள்ளார்.

120 இடங்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 8 எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி 60 எம்பிக்கள் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. பெஞ்சமின் நெதன்யாகு கட்சிக்கு 59 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஒரு எம்பி வாக்கெடுப்பை புறக்கணித்தார்.

எதிர்க்கட்சிகள் கூட்டணியின் வெற்றிக்கு நெதன்யாகு ஆதரவு எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சுழற்சி முறையில் பிரதமர் பதவி வகிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி யமினா கட்சித் தலைவர் நஃப்தலி பென்னட் இஸ்ரேலின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் அதிகாரபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். அவர் இப்பதவியை இரண்டு ஆண்டுகள் மட்டும் வகிப்பார்.

அவரது அமைச்சரவையில் 9 பெண்கள் உள்பட 27 பேர் இடம்பெற்றுள்ளனர். ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாக இஸ்ரேல் புதிய பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் 1,362 பேருக்கும், இரத்தினபுரியில் 322 பேருக்கும் கொரோனா

மேல் மாகாணத்தில் மேலும் ஆயிரத்து 39 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 338 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 362 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 339 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் 322 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றும் மழை – இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி இன்று பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேவேளை, நிலவும் மழையுடனான வானிலையால் இரண்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, கிரியெல்ல மற்றும் அயகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் , கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, வரக்காபொல, தெஹியோவிட்ட மற்றும் புளத்கொஹூபிட்டிய, அரநாயக்க, கேகாலை, யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல, மாவனெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி பகுதிகளில் இன்று (14) மாலை 04 மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்குமென தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

நீரிழ் மூழ்கி இரு இளைஞர்கள் பலி!

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

எட்டு இளைஞர்கள் நீராடுவதற்கும் சென்றுள்ளனர். இதில் 15 மற்றும் 17 வயதுகளுடைய இரு இளைஞர்களே நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

சடலங்கள் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலதிக பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

 

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 1,198 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் ஆயிரத்து 198 பேர் கடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைக்கு வந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து ஆராய்வு’

கொவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது பிள்ளைகளின் நோய்கள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிய குழந்தை மருத்துவர்களின் உதவியை பெறுமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ச,கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொவிட் நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தி அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொவிட் தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் உடனடியாக கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதன் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டிய   பிரதமர், ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை சுகாதார அமைச்சின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டினார்.

குறித்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட குழந்தை மருத்துவர்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் பாடசாலைகளை மீள திறக்கும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு தமது சங்கத்தின் ஆதரவை கல்வி வலய மட்டத்தில் பெற்றுக்கொடுக்க முடியும் என கௌரவ பிரதமர் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய நாடு முழுவதும் உள்ள 99 கல்வி வலயங்களுக்கும் தமது சங்கத்தின் சார்பில் பிரதிநிதிகளை பெயரிட்டு மேற்படி நடவடிக்கையை முறையாக முன்னெடுப்பதாக சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தடுப்பூசி திட்டமொன்று செயற்படுத்தப்படின் அதன்போது தரம் 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா  தெரிவித்தார்.

இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு சுமார் இரண்டு இலட்சத்து எழுபத்து ஒன்பது ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் சுமார் மூன்று இலட்சம் கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி வழங்குவதன் முக்கியத்துவமும் பேராசிரியர் கபில பெரேராவால் சுட்டிக்காட்டப்பட்டது.

நாட்டின் எதிர்கால சந்ததியினர் மற்றும் அவர்களை வழிகாட்டும் ஆசிரியர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எப்போதும் நடவடிக்கை மேற்கொள்ளும் என   பிரதமர் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.

பாடசாலை ஆரம்பிக்கும்போது மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பான முறையில் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவது தொடர்பான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் என்று தெரிவித்த கௌரவ பிரதமர். பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கையின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

குறித்த கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பாடசாலை நடவடிக்கைகளுக்கான மேலதிக செயலாளர் எல்.எம்.டீ.தர்மசேன, பாடசாலை சுகாதார பிரிவின் பணிப்பாளர் கமனி குணரத்ன, வைத்தியர்களான டி.எல்.பீ.சோமதுங்க, மகேந்திர ஆர்னல்ட், ஷாமன் ரஜீந்திரஜித், சுரந்த பெரேரா, பேராசிரியர் சனத் லமாபதுசூரிய உள்ளிட்ட குழந்தை மருத்துவ வைத்தியர்கள் சங்கத்தின் வைத்தியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

‘பயணக்கட்டுப்பாட்டால் பயன் இல்லை என கூறமுடியாது’

” பயணக்கட்டுப்பாட்டால் எவ்வித பயனும் இல்லை எனக் கூறமுடியாது. இன்னும் ஒரிரு வாரங்களில் அதன் பயனை உயரக்கூடியதாக இருக்கும்.” – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு முன்னர் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இன்று ஒரு தொகை இருந்தால் அதைவிடவும் அதிகமானதொரு தொகையே நாளை இனங்காணப்பட்டது. எனினும், பயணக்கட்டுப்பாடுகளின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

கூடுதலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும் எண்ணிக்கை என்பது சமமட்டத்தில் உள்ளது. எனவே, பயனத்தடையால் பயன் இல்லை எனக்கூறமுடியாது. இன்னும் இரு வாரங்களில் அதன் பயனை அறியக்கூடியதாக இருக்கும்.

அத்துடன், பயணத்தடையை கட்டம், கட்டமாகவே தளர்த்த வேண்டும். பயணக்கட்டுப்பாடுகளை முழுமையாக மறந்து ஒன்றுகூடும் வகையில் மக்கள் செயற்பட்டால் மீண்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும். எனவே, சுகாதார நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்படவேண்டும்.” – என்றார்.

சங்காவுக்கு ஐ.சி.சி. வழங்கிய கௌரவம்…..!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவை, புகழ்பூர்த்தவர்கள் (Hall of Fame) பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் சபை கௌரவித்துள்ளது.

ஐ.சி.சி.யின் Hall of Fame விருதுக்கு தெரிவான இரண்டாவது இலங்கை வீரர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் முத்தையா முரளிதரன் மேற்படி பட்டியலில் இணைக்கப்பட்டார்.

கிரிக்கெட் விளையாட்டிற்கு ஆற்றிய சேவைக்காக வழங்கப்படுகின்ற உயரிய அங்கீகாரமாக Hall of Fame கருதப்படுகின்றது.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16)...

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...