Home Blog Page 3492

2 தசாப்தங்களுக்கு பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றி நியூசிலாந்து அணி

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. எட்ஜ்பேஸ்டனில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றுள்ளது நியூசிலாந்து.

இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 303 ரன்களை குவித்தது அந்த அணி. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 388 ரன்களை குவித்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 122 ரன்களை மட்டுமே இங்கிலாந்து எடுத்தது. அதனால் 38 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது நியூசிலாந்து. 10.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை எடுத்தது நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 1999க்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைபற்றியுள்ளது நியூசிலாந்து அணி. இந்த தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்தது. அடுத்ததாக நியூசிலாந்து அணி வரும் வெள்ளி அன்று இந்தியாவுடன் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் சவுத்தாம்ப்டனில் விளையாட உள்ளது.

‘கப்பல் தீப்பிடிப்பு’ – 40 மில்லியன் டொலர்களை இழப்பீடாக கோர இலங்கை முடிவு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் முதற்கட்டமாக கப்பல் நிறுவனத்திடம் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாகக் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது – என்று துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன  தெரிவித்தார்.

” இழப்பீடு கோரும்போது கப்பல் விபத்தால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்பு, சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்பு, மீனவ சமூதாயத்துக்கு ஏற்பட்டுள்ள தாக்கம், கப்பலில் தீயை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக ஏற்பட்ட செலவீனம் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படும். இவற்றுக்கான செலவுகளை ஈடுசெய்யும் வகையிலேயே நடவடிக்கை இடம்பெறும். இதற்காக குழுக்கள் செயற்பட்டுவருகின்றன.” – என்றும் அமைச்சர் கூறினார்.

அதேவேளை, இலங்கை கடற்பரப்புக்குள் கப்பல் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்கள் உட்பட மீனவ சமூதாயத்துக்கு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஏற்கனவே உறுதிமொழி வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘சமஷ்டி முறையே மலையக மக்களின் இருப்புக்கும் பாதுகாப்பு’

” ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். சமஷ்டி முறை வருகின்றபோது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும்.” – என்று தமிழ் தேசியக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மஸ்கெலியா பகுதிகளில் உள்ள சுமார் 600 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி 13.06.2021 அன்று முன்னெடுத்திருந்தது.

இவ் நிவாரண பொருட்களை வழங்கி வைத்ததன் பின் சமகால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தோம். அதேபோல மலையக மக்களுக்கான காணி மற்றும் அரசியல் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்போம்.

இந்நாட்டில் ஒற்றையாட்சி முறையை ஒழிக்கப்பட்டு சமஷ்டி முறையை உருவாக்கும் அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே போராடி வருகின்றோம். அவ்வாறு சமஷ்டி முறை வருகின்ற போது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும். மலையக மக்களுடன் இணைந்து பயணிக்க நாம் தயார்.

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, சீனாவின் முகவர்களாக செயற்பட்டு நாட்டின் வளங்களை விற்கின்றது. பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு உயரும் வகையில் செயற்பட்டு வருகின்றது. மக்கள் நலன் பற்றி சிந்திப்பதில்லை. அவ்வாறு சிந்தித்திருந்தால் இவ்வாறு எரிபொருட்களின் விலை உயர்வடைந்திருக்காது.
செலன இணைந்த நிறுவன திட்டத்தின் ஊடாக கொழும்பிலுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை சீனாவுக்கு வழங்க ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. தென்பகுதியை தாரை வார்ப்பது மட்டுமல்லாமல் வடக்கில் 7 ஏக்கர் காணியிலுள்ள ஜனாதிபதி மாளிகையும் குத்தகைக்கு வழங்க முயற்படுகின்றனர்.” – என்றார்.

நாட்டில் மேலும் 1,886 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் மேலும் ஆயிரத்து 886 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்து 163 ஆக அதிகரித்துள்ளது.

‘மலையக கட்சிகளின் கொள்கை மாறினால் இணைந்து செயற்படலாம்’ – கஜேந்திரகுமார்

” மலையக மக்களையும் ஒடுக்கும் செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலைமையை உணர்ந்து, தங்களது அரசியல் நிலைப்பாட்டை மாற்றி பொதுவான தொரு நிலைப்பாட்டுக்கு மலையக தலைமைகள் வரும் பட்சத்தில் அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித தடையும் கிடையாது.” – என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மஸ்கெலியா பகுதிகளில் உள்ள சுமார் 600 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி 13.06.2021 அன்று முன்னெடுத்திருந்தது.

இவ் நிவாரண பொருட்களை வழங்கி வைத்ததன் பின் சமகால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்பதே எமது கருத்தாகும். மலையக மற்றும் முஸ்லிம் தலைமைகளுடன் இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் கடந்தகாலங்களிலும் முன்னெடுக்கப்பட்டன. எனினும், கொள்கை ரீதியிலான முரண்பாட்டால் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வரமுடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

வடக்கு, கிழக்கில் வாழும் ஈழத் தமிழ் மக்கள் கடந்த 73 ஆண்டுகளாக எவ்வாறெல்லாம் குறிவைக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டனவோ, மேற்படி அனைத்து நடவடிக்கைகளும் இன்று மலையக மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

எனவே, இந்நிலைமையை உணர்ந்து, மலையக மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள், வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களோடு ஒரு பொதுநிலைப்பாட்டை எடுத்து, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் விதத்தில் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால் இணைந்து செயற்படுவதில் எந்த பிரச்சினையும் இல்லை.

அதேவேளை, கடந்த அரசின் பொருளாதார மோசடி உள்ளிட்ட குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரம் மேம்படும் என்ற உறுதிமொழியை வழங்கியே தற்போதைய ஆட்சியாளர்கள் சிங்கள மக்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்றனர். ஆனால் அரசின் செயற்பாடுகள் கடும் ஏமாற்றமாக உள்ளன.” – என்றார்.

க.கிசாந்தன்

“உலக மகா நடிப்புடா” என அரசின் நாடகத்தை பார்த்து மக்கள் வாயடைத்து போயுள்ளனர்

மக்கள் ஏற்கனவே வாழ்க்கை செலவு நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வேளையில், எரிபொருள் விலையை ஏற்றியமைக்கு பொறுப்பேற்று எரிபொருள் அமைச்சர் உதய கம்மன்பில ராஜினாமா செய்ய வேண்டுமென கூறுவது யார்? ஆளுகின்ற பொதுஜன பெரமுன (SLPP) ஆளும் கட்சியின் பொது செயலாளர் சாகர காரியவசம் எம்பி. அரசின் இந்த திடீர் “நன்னடத்தையை” பார்த்து, “உலக மகா நடிப்புப்புடா” என நாடு முழுக்க மக்கள் மயங்கி வாயடைத்து நிற்கிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி தனது சமூக உடகங்களில் கூறியுள்ள கருத்தை தேசிய ஊடகங்களுக்கு மேலும் விவரித்து கூறியுள்ளதாவது,

பிழை நடந்தால், இப்படி பொறுப்பேற்று ராஜினாமா செய்வற்கு நல்லதே. அது நாகரீக அரசியலே. ஆனால், இந்த அரசின் வரலாறு இப்படி இல்லையே.

ஆகவே திடீரென அரசு இவ்வளவு நாகரீகமாக செயல்படுவதை பார்க்கும் போது, “நீங்கள் ஒன்றும் அவ்வளவு நல்ல அரசாங்கம் கிடையாதே” என மக்கள் சந்தேகத்துடன் அங்கலாய்கிறார்கள்.

மக்கள் நெருக்கடியில் இருக்கும் வேளையில், எரிபொருள் விலையை ஏற்றியமைக்கு பொறுப்பேற்று எரிபொருள் அமைச்சர் (கம்மன்பில) ராஜினாமா செய்ய வேண்டுமென கூறுவது, ஆளும் பொதுஜன பெரமுன (SLPP) என்ற ஆளும் கட்சியின் பொது செயலாளர் சாகர காரியவசம்.

கோவிட்19 தொற்றை கட்டுப்படுத்த உரிய வேளையில் தடுப்பூசிகளை வாங்க இந்த அரசு தவறி விட்டது. மிகவும் நட்பு நாடு என்று இவர்களே கூறிக்கொள்ளும் சீன நாடுகூட தங்கள் தயாரிப்பான சீனபார்ம் தடுப்பூசியை, வங்காளதேசத்துக்கு 10 டொலர் விலையிலும், இலங்கைக்கு 15 டொலர் விலையிலும் தருகிறது. தடுப்பூசியை தேடி மக்கள் அல்லோல் கல்லோல் படுகிறார்கள். இவை அனைத்துக்கும் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய இங்கே ஆளில்லை.

நடுக்கடலில் தீப்பிடித்த இரசாயன பொருள் கொண்ட கப்பலை, கொழும்பு துறைமுகத்தை நோக்கி வரச்சொல்லி, கடல் வளத்தையும், மீனவர் வாழ்வாதாரத்தையும் அழித்தவர் யார் தெரியவில்லை. “அவரை கண்டால் கூட்டி வாருங்க” என, பாணந்துறை முதல், புத்தளம், மன்னார் வரை மேற்கு கரை முழுக்க மீனவ மக்கள் பொங்கிநின்று கேள்வி எழுப்புகிறார்கள். “இதற்கு நான்தான் பொறுப்பு” என பொறுப்பேற்று ராஜினாமா செய்ய இங்கே ஆளில்லை.

இந்நிலையில் திடீரென அரசு இவ்வளவு நாகரீகமாக செயல்படுவதை பார்க்கும் போது, எமக்கு சந்தேகம் வருகிறது. இதற்குள் உள்ள உள்குத்து என்ன என்று கேட்க தோன்றுகிறது. தமிழ் சினிமா சிரிப்பு நடிகர்களின் “நீ ஒன்னும் அவ்வளவு நல்லவன் கிடையாதே?” என்ற பிரபல சிரிப்பு சந்தேக வசனம் ஞாபகத்தில் வருகிறது.

உண்மையில், அமைச்சரவை தீர்மானத்தின்படியே விலை தீர்மானிக்கப்படுகிறது. அமைச்சரவையில் வாழ்க்கை செலவு உப குழு இருக்கிறது. அதில்தான் விலைவாசி முடிவுகள் எடுக்கப்பட்டன. அமைச்சரவை அமைச்சராக இருந்த எனக்கு இதுபற்றி நன்கு தெரியும். அமைச்சரவை பத்திரங்களை யார் முன் வைத்தாலும், முடிவு எடுக்கபட்டால் அதுபற்றி முழு அமைச்சரவையும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்த வாழ்க்கை செலவு உப குழுவில் யாரெல்லாம் இருக்கின்றார்கள்?

நிதி அமைச்சர் பிரதமர் மகிந்த ராஜபக்ச, வர்த்தக அமைச்சர் பந்துல்ல குணவர்த்தன, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ராஜாங்க அமைச்சர் அஜித் கப்ரால், ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோர் உள்ளார்கள். ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர இந்த குழுவின் செயலாளராக குழுவை கூட்டுகிறார். இங்கேதான் விலையேற்றங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. ஆகவே இந்த குழுதான் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அனைத்துக்கும் பொறுப்பேற்று ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச ராஜினாமா செய்ய வேண்டும்.

அமைச்சர் உதய கம்மன்பில, அரசில் உள்ள சிறுகட்சி அமைச்சர். இது ஏதோ வீடு தீப்பற்றியதற்கு, வீட்டில் வளர்க்கும் கூண்டுக்கிளியை பலிகடா ஆக்குவதாக தெரிகிறது. உதய எனது தனிபட்ட நண்பர்தான். அவரையிட்டு நான் கவலையடைகிறேன். ஆனாலும், காலமெல்லாம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக விஷம் கக்கி வந்த உதய கம்மன்பிலவின் இன்றைய கதியை நினைத்து அரசியல்ரீதியாக கவலைப்பட எமக்கு காரணம் ஏதுமில்லை.

இதற்கு முன்னால், இதேமாதிரி காலமெல்லாம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக விஷம் கக்கி வந்து, இப்போது அரசு தலைமையின் கோபத்துக்கு ஆளாகி, அதனால் வாயை மூடிக்கொண்டு இருக்கும் அமைச்சர் விமல் வீரவன்சவின் கதியே இன்று, அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு ஏற்பட்டுள்ளது. இதைதான் அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்களோ?

‘அரசின் முடிவையே நான் அறிவித்தேன் -பதவி விலகவேண்டியது சாகரவே’! கம்மன்பில

” எரிபொருள் விலை அதிகரிப்பானது அரசாங்கத்தின் முடிவாகும். அது என்னால் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவு கிடையாது. அரசாங்கத்தின் அறிவிப்பையே நான் அறிவித்தேன்.” – என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவே தீர்மானித்தது. ஜனாதிபதி, பிரதமர், வர்த்தகத்துறை அமைச்சர், அமைச்சர் நாமல் உள்ளிட்டவர்கள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். எனவே, இது என்னால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு கிடையாது.

எரிபொருள் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சே வெளியிடும். எனினும், இது தொடர்பான அறிவிப்பை நானே விரும்பி வெளியிட்டேன். பிரதமரின் பிரதிநிதியாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பங்கேற்றிருந்தார். அரசாங்க தலைவர்களை பாதுகாக்கவே நான் இவ்வாறு செயற்பட்டேன்.

அத்துடன், மொட்டு கட்சியின் கூட்டம் இடம்பெறாமலேயே கட்சியின் செயலாளர் மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளார். அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தனர். பிரதமர், தவிசாளருக்குகூட இது பற்றி தெரியாது.

குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை விமர்சித்தே சாகர அறிக்கை விடுத்துள்ளார். இதற்கான அதிகாரத்தை அவருக்கு வழங்கியது யார்? அரசாங்கத்தின் தீர்மானத்தை விமர்சித்து அவர் தவறிழைத்துள்ளார். எனவே, பதவி விலகவேண்டியது அவரா, நானா?

எனவே, எரி பொருள் வில உயர்வுக்கு பொறுப்புகூறவேண்டியது யார் என்பது தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு சாகர காரியவசம் வரவேண்டும். அதற்கான சவாலை நான் விடுக்கின்றேன்.” – என்றார்.

நிழல் உலக தாதா தெல்பாலாவின் மகள் ஹெரோயினுடன் கைது!

நிழல் உலக தாதா ‘தெல்பாலா’ என்றழைக்கப்படும் கருப்பையா பாலனின் மகளான நிர்மலா (வயது – 41)  பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே 50 கிராம் ஹேரோயினுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு, இந்தியா தப்பிச்சென்று தலைமறைவாக வாழ்ந்த தெல்பாலா அங்கு வைத்தே உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் இந்த அரசு விரைவில் கவிழும்’ – ராதா

அரசாங்கத்தின் தீர்க்கதரிசனம் அற்ற தீர்மானத்தின் காரணமாக தற்பொழுது எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது .இதன் மூலம் ஏழைகளின் வயிற்றில் இந்த அரசாங்கம் அடித்துவிட்டது. இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சி வெகு தொலைவில் இல்லை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

இன்று எமது நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாலுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.இதன் காரணமாக எங்களுடைய மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான ஒரு நிலையில் அரசாங்கம் எரிபொருட்களின் விலையை அதிகரித்திருப்பதானது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்த கதையாகவே இருக்கின்றது.

இந்த எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாக எங்களுடைய பெருந்தோட்ட தொழிலார்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.காரணம் இன்றும் பல பெருந்தோட்ட பகுதிகளில் மண்ணெண்னையையே அதிகமாக எங்களுடைய மக்கள் பாவித்து வருகின்றார்கள்.இந்த விலையேற்றத்தை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

இந்த எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாக பாண் உட்பட பேக்கறி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிப்பதற்கான சாத்தியம் இருக்கின்றது.இது சாதாரண மக்களை பெரிதும் பாதிக்கும்.

அது மட்டுமல்லாமல் முச்சக்கர வண்டி ஒட்டுனர்களின் நிலைமை இன்னும் பரிதாபமான ஒரு நிலைக்கு சென்றுவிடும்.அவர்களுடைய தொழிலை செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் விலையேற்றம் இன்னும் பாதிப்பையும் சாதாரண மக்களிடம் அதிக கட்டணத்தையும் அறிவிட வேண்டிய நிலைமை ஏற்படும்.

போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கும்.ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்.இப்பொழுது இருக்கின்ற விலைகளையே பொது மக்கள் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்.இதில் இன்னும் விலையேற்றம் ஏற்பட்டால் மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

விலேயேற்றம் பிழையானது என மொட்டு கட்சியின் செயலாளரே கருத்து வெளியிட்டுள்ளார்.அப்படியானால் இது யாருடைய வழிகாட்டலில் நடைபெற்றது என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் ஏழைகளின் தோழனாக இருக்க வேண்டும்.அப்படி இரந்தவர்தான முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்ஹ பிரேமதாச.அவர் மறைந்தாலும் அவருடைய சேவைகளை இன்றும் மக்கள் மறக்கவில்லை.அதற்கு காரணம் அவர் ஏழைகளின் பங்காளனாக இருந்தவர்.

அதே போல இந்தியாவின் தமிழ்நாட்டிலும் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் ஏழைகளுக்காக பாடுப்பட்டவர்.எனவே ஏழைகளின் வயிற்றில் அடிக்கின்ற எந்த அரசாங்கமும் ஆட்சியில் நிலைத்திருக்க முடியாது.இந்த அரசாங்கம் வீழ்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலில் மாஸ்டருக்கு முதலிடம்

பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐஎம்டிபியின் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் சிறந்த படங்கள், பிரபலமான படங்கள் உள்ளிட்ட பல பட்டியல்களை ஐஎம்டிபி இணையதளம் தற்போது 2021ஆம் ஆண்டு, இதுவரை வெளியான இந்தியப் படங்களில் பிரபலமான படங்கள் என்னென்ன என்கிற கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.

இந்தப் பட்டியலில் திரைப்படங்களோடு, வெப் சீரிஸின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஐஎம்டிபி புரோ தளத்தின் தரவுகள், அந்தந்த திரைப்படங்களின் பக்கங்கள் எத்தனை முறை இந்தியாவில் இருக்கும் பயனர்களால் பார்க்கப்பட்டுள்ளன ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதில் திரிஷ்யம் 2, கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை பின்னுக்குத் தள்ளி மாஸ்டர் முதலிடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸும் இதில் இடம்பெற்றுள்ளது.

2021 (இதுவரை) பிரபலமான திரைப்படங்கள்/வெப் சீரிஸ் முழு பட்டியல்

1. மாஸ்டர்
2. ஆஸ்பிரன்ட்ஸ் (வெப் சீரிஸ்)
3. தி வைட் டைகர்
4. திரிஷ்யம் 2
5. நவம்பர் ஸ்டோரி
6. கர்ணன்
7. வக்கீல் ஸாப்
8. மஹாராணி (வெப் சீரிஸ்)
9. கிராக்
10. தி கிரேட் இண்டியன் கிச்சன்

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16)...

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...