Home Blog Page 3493

பூண்டுலோயா சுகாதார பிரிவில் மேலும் 25 பேருக்கு கொரோனா

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹங்குராங்கெத்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அறுவருக்கும், கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவருக்கும், மத்துரட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், பூண்டுலோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேருக்கும், வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரை நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 367 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஓல்டன் தோட்டத்தில் காவலரண் அமைக்கும் நடவடிக்கை ஜீவனின் தலையீட்டால் நிறுத்தம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன் தோட்டத்தில் அமைக்கப்படவிருந்த பொலிஸ் காவலரண் நடவடிக்கை, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலையீட்டால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஓல்டன் தோட்டத்தில், பெப்ரவரி மாதம் முதல் பகுதியில், தோட்ட நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றி, நீண்டகால பணிநிறுத்தம் மற்றும் தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

இதன் காரணமாக, சிறுவயது இளைஞன் உட்பட 10 ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் அங்கு நடந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக, ஹட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், ஓல்டன் தோட்டத்தில், பொலிஸ் பாதுகாப்பு அரண் ஒன்றை அமைக்க ஹட்டன் பொலிஸ் தலமையகம் ஏற்பாடுகளை செய்திருந்தது.

இதற்கு ஓல்டன் தோட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது குறித்து இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கும் கொண்டுவந்திருந்தனர்.

இதையடுத்து, ஹட்டன் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகரை, நேற்று (12) ஜீவன் தொண்டமான் சந்நித்து, இது தொடர்பில் கலந்துரையாடினார்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் ஜீவன் வலியுறுத்திய விடயங்களுக்கு அமைய, ஓல்டன் தோட்டத்தில் பொலிஸ் காவலரண் அமைக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேலும், ஹட்டன் பிரதேசத்தில், கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்கள் செலுத்திக் கொள்ளவதற்கான விழிப்புணர்வை வழங்குவதற்கு, உதவி பொலிஸ் அத்தியட்சகர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

‘கொழும்பு, கம்பஹா, களுத்துறையில் 117,955 பேருக்கு கொரோனா’

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மேல் மாகாணத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 955 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை கொழும்பு மாவட்டத்தில் 56  ஆயிரத்து 464 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 40 ஆயிரத்து 788 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 20 ஆயிரத்து 703 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்திலேயே அதிகளவு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாவட்டத்தில் நேற்று 528 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 561 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 313 பேருக்கும் நேற்று வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மரக்கிளை முறிந்து விழுந்ததில் மலையக இளைஞர்கள் மூவர் படுகாயம்!

மரமொன்றின் பாரிய கிளையொன்று பேருந்து தரிப்பிடத்தில் முறிந்து விழுந்ததில் பேருந்துக்காக காத்திருந்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு அருகாமையில் உள்ள ஒஸ்போன் தோட்டத்திலேயே நேற்று (12.06.2021) மாலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் நேற்று மாலை கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது. இதனால் மரமொன்றின் பாரிய கிளையொன்று முறிந்து பஸ்தரிப்பிடம்மீது விழுந்துள்ளது. பஸ் தரப்படமும் முழுமையாக சேதமடைந்து, அதற்குள் இருந்த இளைஞர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

பிரதேச வாசிகள் இணைந்தே மூவரையும்மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

க.கிசாந்தன்

படகில் கொண்டுவரப்பட்ட 200 கிலோ ஹெரோயின் பறிமுதல்

மிரிஸ்ஸ வெலிகம பிரதேசத்தில் இன்று அதிகாலை 200 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது ஒன்பது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரும், போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரும், கரையோர பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளும் நடத்திய சோதனையின்போது இந்த பாரிய ஹெரோயின் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேசிய புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சோதனை நடத்தப்பட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டர்களிலும், சணல் பைகளிலும் பொதுசெய்யப்பட்டு இந்த ஹெரோயின் போதைப் பொருட்கள் சிறிய படகொன்றில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மே மாதம் 11ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற இழுவைப் படகில் இருந்து இந்த ஹெரோயின் போதைப் பொருட்கள் சிறிய படகிற்கு மாற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பு அரசியலில் பரபரப்பு – இன்று பதிலடி கொடுக்க கம்மன்பில ‘ரெடி’

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் விடுக்கப்பட்ட வலியுறுத்தல் தொடர்பில் இன்று பதில் வழங்கப்படும் எனவும், இதற்காக ஊடகவியலாளர் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொரோனா நெருக்கடியால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் விதத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளமை ஏற்கமுடியாது. எனவே, இந்நிலைமைக்கு பொறுப்பேற்று துறைசார் அமைச்சர் பதவி விலக வேண்டும். என்று அரசின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.

கொரோனா பிரச்சினையால் மக்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில் அவர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் விதத்தில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை ஏற்கமுடியாது. இவ்வாறானதொரு அதிகரிப்பை செய்திருக்கவும் கூடாது எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, கம்மன்பிலவை பதவி விலகுமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவர் வழங்கவுள்ள பதிலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘நாட்டில் 24 மணிநேரத்துக்குள் 1,353 பேர் கைது’

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் ஆயிரத்து 353 பேர் கடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைக்கு வந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 31 ஆயிரத்து 395 பேர் அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘கொரோனா’வால் மேலும் 33 ஆண்களும், 30 பெண்களும் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 63 மரணங்கள் பதிவாகியுள்ளன. மே 23 முதல் 31 வரை 12 பேரும், ஜுன் 1 முதல் 51 பேரும் உயிரிழந்துள்ளனர்.

33 ஆண்களும், 30 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 136 ஆக அதிகரித்துள்ளது.

‘ கூட்டுக்கிளியை பலிகடாவாக்க முயற்சி’ – மனோ வெளியிட்டுள்ள தகவல்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியின் முகநூல் பதிவு வருமாறு,

மக்கள் நெருக்கடியில் இருக்கும் வேளையில், எரிபொருள் விலையை ஏற்றியமைக்கு பொறுப்பேற்று எரிபொருள் அமைச்சர் (கம்மன்பில) ராஜினாமா செய்ய வேண்டுமென கூறுவது யார்..? பொதுஜன பெரமுன (SLPP) என்ற ஆளும் கட்சி..!

திடீரென அரசு இவ்வளவு நாகரீகமாக செயல்படுவதை பார்க்கும் போது,
தமிழ் சினிமா சிரிப்பு நடிகர்களின் “நீ ஒன்னும் அவ்வளவு நல்லவன் கிடையாதே, ப்ரதர்” என்ற பிரபல சந்தேக வசனம் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறதே..!

கபினட் தீர்மானத்துக்கு பொறுப்பேற்று ஜனாதிபதியல்லவா ராஜினாமா செய்யனும்..!
கம்மன்பிலயார்,

அரசில் உள்ள சிறுகட்சி அமைச்சர். இது ஏதோ வீடு தீப்பற்றியதற்கு, வீட்டில் வளர்க்கும் கூண்டுக்கிளியை பலிகடா ஆக்குவதாக தெரியுது..!

ஆனாலும், காலமெல்லாம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக விஷம் கக்கி வந்த கம்மன்பிலவின் கதியை நினைத்து கவலைப்பட ஏதுமில்லை..!

இதற்கு முன்னால் அரசு தலைமையின் கோபத்துக்கு ஆளாகி வாயை மூடிக்கொண்டு இருக்கும் வீரவன்ச கதியே இன்று இவருக்கு..!

அரசன் அன்று..! தெய்வம் நின்று..!

கண்டி மாவட்டத்துக்கு மேலும் 50, 000 ஸ்புட்னிக் – பை தடுப்பூசிகள்! பாரத் அருள்சாமி தகவல்

மத்திய மாகாண கொவிட் 19 தடுப்பு கூட்டம் இன்று மத்திய மாகாண ஆளுநர்  லலித் யூ கமகே தலைமையில் மத்திய மாகாண சபையின் கேட்போர்கூடத்தில் கூடியது.

இதன் போது பெருந்தோட்ட பகுதிகளுக்கும் அதனை அண்டி உள்ள நகர மற்றும் கிராம பகுதிகளுக்கும் துரித கதியில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாக சுகாதார பிரிவினரால் தெரிவிக்கபட்டது.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட கருத்து தெரிவித்த தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைபு இராஜாங்க அமைச்சின் பிரஜாஷக்தி பிரிவின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி,

கடந்த வாரம் அமைச்சர் ஜீவன் தொண்டமான்   மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாக நுவரேலியா மாவட்டத்தில் கடந்த 9ஆம் திகதி முதல் 50, 000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறன . மேலும் தடுப்பூசி பெற வரும் அனைவருக்கும் தேவையான வசதிகளை நாம் சுகாதார அதிகாரிகள் மற்றும் இராணுவம் மற்றும் பொலிஸாருடன் இணைந்து வழங்கி வருகிறோம்.

மேலும் நேற்றைய தினம் முதல் பெருந்த்தோட்ட பகுதிகள் உள்ளடங்களாக நுவரேலியா கொட்டகலை ஹட்டன் மஸ்கெலியா போன்ற பல பகுதிகளில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றன.

கண்டி மாவட்டத்தில் புதிதாக வழங்கப்படும் தடுப்பூசிகளை தொற்று அதிகமாக உள்ள பெருந்தோட்ட பகுதிகளில் வழங்க வேண்டும் என கோரிக்கையை பாரத் முன்வைத்தார். இக் கோரிக்கையை ஏற்ற ஆளுநர் உட்பட அமைச்சர்கள் அப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் வழங்குமாறு வலியுறுத்தினர்.

அதன் அடிப்படையில் இவ் வாரம் வழங்கப்படும் 50000 தடுப்பூசிகள் தொற்று அதிகமாக உள்ள கண்டி மாநகரசபை, பஸ்பாககோறளை மற்றும் பஹாததும்பர வைத்திய அதிகாரிகள் பிரிவுக்கு வழங்கவும் விஷேடமாக நாவலபிட்டிய பெருந்த்தோட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கவும் இணக்கம் எட்டப்பட்டது.

மேலும் இதுவரை 487 மரணங்கள் மத்திய மாகாணத்தில் பதிவாகியுள்ளன. நாட்டில் தடுப்பூசிகளுக்கு கேள்வி அதிகரித்துள்ள நிலையில் எங்களின் கோரிக்கைக்கு அமைவாக பெருந்தோட்ட பகுதிகளுக்கு தடுப்பூசிகள் வழங்கபடுகின்றன ஆனால் அதற்கு 63% ஆக குறைந்த அளவானோரே தடுப்பூசிகளை பெறுகின்றனர் எனவே இளைஞர்கள் யுவதிகள் முன்வந்து 60வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இத்தடுப்பூசிகளை பெற்றுகொள்ள உதவுமாறு கேட்டுக்கொள்வதாக பாரத் அருள்சாமி கோரிக்கை விடுத்தார்.

மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்களான மஹிந்தானந்த அழுத்தகமகே, கெஹலிய ரம்புக்வல, லோஹன் ரத்வத்த, திலும் அமுனுகம கலந்து கொண்டதுடன் கண்டி நுவரேலியா மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் சுகாதார அதிகாரிகள் மற்றும் இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16)...

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...