Home Blog Page 3494

‘எரிபொருள் விலை அதிகரிப்பு’ – கம்மன்பில பதவி விலக வேண்டும்! மொட்டு கட்சி வலியுறுத்து

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான விலை அதிகரிப்பை மேற்கொள்வது மக்களுக்கு மேலும் நெருக்கடியாக அமையும். எனவே, இதற்கான முழு பொறுப்பையும் ஏற்று, துறைசார் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.

வலுசக்தி அமைச்சராக உதய கம்மன்பில பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் பஸில் ராஜபக்சவுக்குமிடையில் சிறந்த உறவு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

ஜோடி சேர 2000 கி.மீ. பயணம் செய்த காண்டாமிருகம்

வெள்ளை காண்டாமிருகங்கள் தற்போது தென்ஆப்பிரிக்க காடுகளில் அதிகமாக காணப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் வாழும் வெள்ளை நிற காண்டா மிருகங்கள் அழியும் நிலையில் உள்ளன.

இந்த விலங்கினத்தை காப்பாற்றுவதற்கு தீவிர முயற்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் தைவான் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில் 5 வயதான என்மா என்ற பெயருடைய வெள்ளை பெண் காண்டா மிருகம் இருக்கிறது.

அது இனப்பெருக்கம் செய்வதற்கு தைவானில் ஆண் காண்டாமிருகம் இல்லை. எனவே அதனை ஜப்பான் நாட்டுக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். ஜப்பானில் டொபு உயிரியல் பூங்காவில் மொரான் என்கிற 10 வயது காண்டாமிருகம் உள்ளது.

அதனுடன் ஜோடி சேர்வதற்காக என்மா காண்டாமிருகத்தை ஜப்பானுக்கு விமானத்தில் அழைத்து சென்றுள்ளனர்.

ஜப்பானுக்கும் தைவானுக்கும் இடையே உள்ள தூரம் 2,160 கி.மீ. ஆகும். ஆனாலும் காண்டாமிருகம் ஜோடி சேர வேண்டும் என்பதற்காக அங்கு அழைத்து சென்றுள்ளனர்.

சில மாதங்கள் இரு காண்டாமிருகங்களும் ஒன்றாகவே இருக்கும். கர்ப்பம் அடைந்ததும் காண்டாமிருகத்தை தைவானுக்கு அழைத்து செல்வார்கள்.

வெள்ளை காண்டாமிருகங்கள் தற்போது தென்ஆப்பிரிக்க காடுகளில் அதிகமாக காணப்படுகின்றன. இப்போது 18 ஆயிரம் வெள்ளை காண்டாமிருகம் மட்டுமே காடுகளில் இருக்கிறது.

மைதானத்துக்குள் சண்டித்தனம் காட்டிய ஷகிப் அல் ஹசனுக்கு வைக்கப்பட்டது ஆப்பு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரான ஷகிப் அல் ஹசன், மைதானத்துக்குள் முறையற்ற விதத்தில் நடந்துக்கொண்டு நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால் அவருக்கு போட்டித் தடையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் நடைபெறும் டாக்கா பிரிமியர் லீக்  ரி – 20 கிரிக்கெட் தொடரின்போதே, ஷகிப் அல் ஹசன் ஒழுக்கமற்ற விதத்தில் செயற்பட்டார்.

தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவர், விக்கெட்டை உடைத்து, தரையில் அடித்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரின் இந்த செயற்பாடு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையிலேயே டாக்கா பிரிமியர் லீக்கில் மூன்று போட்டிகளில் பங்கேற்க தடையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் 1,633 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் மேலும் ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 556 ஆக அதிகரித்துள்ளது.

பேக்கரி பொருட்களின் விலையும் விரைவில் உயரும்?

பாண் தவிர ஏனைய அனைத்து பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது  என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையிலேயே, விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

‘பயணத்தடையால் நுவரெலியாவில் மலர் உற்பத்தியாளர்கள் பாதிப்பு’

பயணக் கட்டுப்பாட்டால், நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி செய்கையாளர்கள் உள்ளிட்ட வீட்டுத் தோட்ட செய்கையாளர்கள் உள்ளிட்டோருடன் பூச்செடிகள், மற்றும் விற்பனைக்காக வளர்க்கப்படும் பூக்களை உற்பத்தி செய்வோரும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தங்களது நாளாந்த வருமானத்தையும் இழந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த அசாதாரண காலப்பகுதியில் பொது வைபவங்கள் மற்றும் வீட்டு வைபவங்கள், ஆலய வைபவங்கள் போன்றவை தடைப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் குறித்த வைபவங்களை நம்பி தமது ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வரும் நுவரெலியா மாவட்ட மலர் செய்கையாளர்கள் சொல்லன்னா துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

திருமணங்கள், வீட்டு வைபவங்கள், ஆலய நிகழ்வுகள் உள்ளிட்ட பொது வைபவங்களுக்கு பாவிக்கப்படும் மலர்களை உற்பத்தி செய்வதும் விற்பனைக்கு கொண்டு செல்வதையும் தொழிலாளாக கொண்டவர்களே, இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் செடியிலிருந்து உரிய காலப்பகுதியில் பூக்களை அகற்ற முடியாததால், மழையால் பழுதாகியும் வீனே உதிர்ந்தும் கொட்டும் நிலை உருவாகியுள்ளது.

இதனால் நுவரெலியா மாவட்டத்தில் மலர் செய்கை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தமது ஜீவனோபாய வாழ்க்கை வருமானத்தை இழந்துள்ள நிலையில், பாரிய பொருளாதார சிக்கலுக்கும்இ மலர்கள் வளர்ப்புக்காக செய்த செலவுகளையும் ஈடுகட்ட முடியாது கடன் சுமைகளுக்கும் ஆளாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஹக்கலை, மீப்பிலிமான, சாந்திபுர, டொப்பாஸ், பிளக்வூல், லபுக்கலை போன்ற இன்னும் பல பிரதேசங்களில் விலையுயர்ந்த பூக்கள் வளர்ப்பாளர்கள் மற்றும் பூக்களை கொள்வனவு செய்து விற்பனை செய்வோரும் தமது நாளாந்த வருமானத்தை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதேநேரத்தில் பூக்கள் வளர்ப்பாளர்களின் வாழ்வாதார பாதிப்புக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் விவசாயம் மற்றும் சுயத்தொழில் துறை அமைச்சுக்கள் இவ்விடயம் தொடர்பில் கவனமெடுத்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க நுவரெலியா மாவட்ட செயலகம் முன்வர வேண்டும் என, பூக்கள் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

க.கிசாந்தன்

கம்பஹாவில் 741 – இரத்தினபுரியில் 397- பதுளையில் 96 பேருக்கும் நேற்று கொரோனா

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக வருமாறு,

கொழும்பு –505

கம்பஹா – 741

கேகாலை –50

குருணாகல் – 145

காலி – 67

மாத்தறை – 40

பதுளை – 96

அம்பாறை – 66

மாத்தளை – 18

அநுராதபுரம் – 57

முல்லைத்தீவு – 3

மன்னார் – 9

வவுனியா – 35

திருகோணமலை – 6

நுவரெலியா – 45

கண்டி – 101

இரத்தினபுரி – 397

புத்தளம் – 29

யாழ்ப்பாணம் – 60

கிளிநொச்சி –8

பொலன்னறுவை –6

அம்பாந்தோட்டை – 8

மொனறாகலை – 19

மட்டக்களப்பு –67

‘இன்னும் ஆயிரம் ரூபா கிடைக்கவில்லை – 700 ரூபாவே வழங்கப்படுகிறது’

பெருந்தோட்டங்களில் பதிவு செய்யப்படாத சமயாசமய தொழிலாளர்களுக்கு (கைக்சாசு தொழிலாளர்கள்) நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டுமென தொழில் திணைக்களம் அறிவித்துள்ள போதிலும் இதுவரை 700 ரூபா சம்பளமே வழங்கப்படுவதாக அக்கரப்பத்தனையிலுள்ள கைக்காசுத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

பெருந்தோட்டங்களில் கைக்காசுக்கு வேலை செய்பவர்கள் என அழைக்கப்படும் சமயாசமயத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் இதுவரை நேர்த்தியாக வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்டம் அக்கரப்பத்தனையிலுள்ள கிரன்லி கீழ் பிரிவு, ஊட்டுவள்ளி, சின்னத்தோட்டம் உள்ளிட்ட தோட்டங்களில் தொழில்புரியும் தமக்கு நாளாந்த சம்பளமாக 700 ரூபாவே வழங்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் பிரகாரம், பெருந்தோட்டங்களில் பதிவு செய்யாமல் தொழில் புரியும் சமயாசமயத் தொழிலாளர்களுக்கும் ஆயிரம் ரூபா நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து, தொழில் ஆணையாளர் நாயகத்தினால் பிராந்தியங்களிலுள்ள பெருந்தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்களுக்கு இது தொடர்பில் கடிதமொன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

பதிவு செய்யப்படாத சமயாசமய தொழிலாளர்களுக்கு சில பகுதிகளில் 1000 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்படுவதில்லை என சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தியிடம் வினவிய போது, 1000 ரூபா சம்பள விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு விசாரணையில் உள்ளமையினால், பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயம் 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி – நியுஸ்பெஸ்ட்

‘பாணதுறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதி ஆய்வு’ – பிரதமர் பணிப்பு

விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ள பாணதுறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு  பிரதமர் மஹிந்த ராஜபகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று (11) ஆலோசனை வழங்கினார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல், மீன்வளம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தி, கப்பல் தீயினால் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக மதிப்பிடவும், சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடமிருந்து முழு இழப்பீட்டைப் பெறுவதற்கும், கப்பலை வெளியேற்றுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும்   பிரதமர் இதன்போது அறிவுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவித்தார்.

கொவிட் தொற்று நிலைமை காரணமாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவை கப்பல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்தினருக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் எனவும் கௌரவ பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

‘கொட்டகலை சுகாதார பிரிவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றல்’

கொவிட் -19 தடுப்புக்கான தடுப்பூசி ஏற்றும் பணி நுவரெலியா மாவட்டத்தில் இன்று (12.06.2021) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினம் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

இதன்படி கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவு இனங்காணப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்கு சுகாதார அதிகாரிகள் முன்னுரிமை வழங்கியிருந்தனர்.

காலையிலேயே தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்கு வந்திருந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டனர்.

நுவரெலியா மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் சினோ பாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக மேலும் 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

க.கிசாந்தன்

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16)...

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...