Home Blog Page 3495

நானுஓயா சுகாதார பிரிவில் மேலும் 24 பேருக்கு கொரோனா

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மேலும் 45 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நானுஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேருக்கும், டயகம சுகாதார வைத்திய அதிகாரி பிவில் 17 பேருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நால்வருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 30,042 பேர் இதுவரை கைது’

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் ஆயிரத்து 27 பேர் கடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைக்கு வந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 30 ஆயிரத்து 42 பேர் அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘வெட்கக்கேடு’ – எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறானதொரு முடிவை மொட்டு அரசு எடுத்துள்ளமை வெட்கக்கேடாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கு ஏற்றவகையில் தங்களால் இந்த நாட்டை ஆள முடியாது என்பதை மொட்டு அரசாங்கம் ஏற்கவேண்டும்.  ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே இந்த நாட்டிற்கு செழிப்பையும் வளர்ச்சியையும் கொண்டு வர முடியும் எனவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.

மக்களே அவதானம் – 11 நாட்களில் 184 பேருக்கு டெங்கு!

நாட்டில் இம்மாதத்தில் இதுவரை 184 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் – என்று சுகாதார அமைச்சின் டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில் 888 பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மழையுடன்கூடிய காலநிலையில் டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு, கண்டி உட்பட 10 மாவட்டங்களில் டெங்கு நோய் தலைதூக்கும் அபாயம் இருப்பதால், சுற்றுச்சுழலை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மைதானத்தில் பேயாட்டம் ஆடிய ஷகிப் அல் ஹசன் – குவியும் கண்டனங்கள்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரான ஷகிப் அல் ஹசன், மைதானத்துக்குள் முறையற்ற விதத்தில் நடந்துக்கொண்டு நடுவருடன் கடும் சீற்றத்துடன் வாக்குவாதம் செய்யும் காணொளி தற்போது வைரலாகியுள்ளது.

சர்வதேச மட்டத்திலான தரவரிசைகளில் முன்னிலை வகிக்கும் ஷகிப் அல் ஹசனின் இத்தகைய செயற்பாட்டை கிரிக்கெட் இரகர்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

உள்ளூரில் நடைபெற்ற ரி – 20 கிரிக்கெட் தொடரின்போதே, தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவர், விக்கெட்டை உடைத்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார். அது தொடர்பான காணொளி

உலகின் மிக நீண்ட கண் இமைகள் – சீனப் பெண் கின்னஸ் சாதனை

சீன பெண் ஒருவர் 8 அங்குல நீள கண் இமைகளுடன் 5 ஆண்டுகளுக்கு பின் சொந்த சாதனையை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.

உலகில் அழகாக இருப்பது என்பது எந்த பெண்ணுக்கு பிடிக்காது. எல்லா பெண்களும் தங்களை அழகுப்படுத்தி கொள்ள விரும்புவர். இவற்றில் முக அழகு முக்கிய இடம் பிடிக்கிறது. முகத்தில் கண் இமைகள், நல்ல கருமை நிறத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக மஸ்கரா உள்ளிட்ட வண்ண பூச்சுகளை நவீன கால யுவதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மிக நீண்ட கண் இமைகளை வளர்த்து சீனாவை சேர்ந்த யூ ஜியாங்சியா என்ற பெண் கின்னஸ் சாதனை படைத்து உள்ளார். அவரது இமைகளின் மொத்த நீளம் 8 அங்குலம் ஆகும். கடந்த 2016ம் ஆண்டில் ஏற்படுத்திய சொந்த சாதனையை அவர் முறியடித்து உள்ளார்.

இதற்காக தொடர்ந்து அவற்றை வளர்த்து வந்துள்ளார். இதுபற்றி கூறும் ஜியாங்சியா, எனக்கு ஏன் இவ்வளவு நீண்ட கண் இமைகள் இருக்கின்றன என நான் யோசித்ததுண்டு. சில ஆண்டுகளுக்கு முன் மலை பகுதியில் 480 நாட்கள் வரை வசித்து வந்தேன் என கூறுகிறார்.

ஊசி போல் அதனை நீட்டி கொள்கிறார். உலகின் மிக நீண்ட கண் இமைகளை கொண்ட பெண் என்ற பெருமையை பெற்று, கின்னஸ் சாதனை படைத்துள்ள அவர் தொடர்ந்து கூறும்பொழுது, இது நிச்சயம் கடவுள் புத்தர் அளித்த பரிசாகவே இருக்கும்.

இதனால் எனது அன்றாட வாழ்க்கையில் எந்த சங்கடமும், பாதிப்பும் ஏற்படவில்லை. அதற்கு பதிலாக, எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியே ஏற்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட வீடியோ வெளிவந்து வைரலாகி உள்ளது.

நாட்டில் எகிறும் மரண வீதம் – கொரோனாவால் மேலும் 62 பேர் பலி!

நாட்டில் மேலும் 62 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. மே 31 முதல் ஜுன் 08 ஆம் திகதிவரை 07 பேரும், ஜுன் 1 முதல் 10 வரை 55 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 73 ஆக அதிகரித்துள்ளது.

‘இந்திய கடலோர பாதுகாப்பு படை வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பு’

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலின் அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்கு இந்திய கடலோர பாதுகாப்பு படை வழங்கிய ஒத்துழைப்புக்கு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு கோபால் பக்லேவிற்கு  நன்றி தெரிவித்தார்.

இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு இடையில் பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜூன், 11) இடம்பெற்ற சந்திப்பின்போதே பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு நன்றி தெரிவித்தார்.

மேலும் இரு நாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவும்  இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள் தொடர்பாகவும் பாதுகாப்புச் செயலாளர் இதன்போது நினைவுகூர்ந்தார்.

பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பாக இந்திய தூதுக்குழுவுடன்  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இரு நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் இராணுவ பயிற்சி பரிமாற்றத்தின் சீரான செயல்பாடு தொடர்பாகவும்  கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக இந்த கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டன.

அத்தோடு இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

கொவிட்-19 பரவல் தடுப்பு தொடர்பான சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம் பெற்ற இந்தக் கலந்துரையாடலில் , கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப் படைத் தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பாத்திரன, தேசிய புலனாய்வு பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார, மேலதிக செயலாளர் பி பி எஸ் சி நோனிஸ், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஷ் சூத் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 366 ஆக அதிகரித்துள்ளது.

 32 ஆயிரத்து 291 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவருகிறனர்.

‘பயணத்தடைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படவுள்ள சேவைகள்’ – (Video)

பயணத்தடை நீடிக்கப்பட்டாலும் தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு வருமாறு,

” உணவு மற்றும் அதியாவசிய பொருட்கள் நடமாடும் வாகன சேவை ஊடாக மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவருகின்றது. அப்பணி அவ்வாறே தொடரும்.

நிர்மாணப்பணிகளை முன்னெடுத்துச்செல்வதற்கும், ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் இதர தொழிற்சாலைகளில் இடம்பெறும் பணிகளை அவ்வாறே முன்னெடுத்துச்செல்வதற்கும் அனுமதி வழங்கப்படும்.

விவசாய நடவடிக்கையை வழமைபோல் முன்னெடுக்க முடியும். சேதன பசளை உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் உற்பத்தி நடவடிக்கையை தொடர்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

பொருளாதார மத்திய நிலையங்களை இரு நாட்களுக்கு திறக்கப்படவுள்ளது. திகதி விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.” – என்றார்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16)...

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...