Home Blog Page 3496

முதன் முறையாக சி.ஐ.டியில் பெண் அதிகாரிக்கு முக்கிய பதவி!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான இமேஷா முதுமால நியமிக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் பதவிக்கு பெண் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

பட்டதாரியான குறித்த பெண் பொலிஸ் அதிகாரி, வெளிநாடுகளிலும் பொலிஸ்துறை சார்ந்த கல்வியை பயின்றுள்ளார்.

பயணத்தடை ஜுன் 21 ஆம் திகதிவரை நீடிப்பு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று அறிவித்தார்.

தற்போதுபோன்று இக்காலப்பகுதியிலும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக தற்போது அமுலில் உள்ள பயணத்தடை 14 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த முடிவு மாற்றப்பட்டு பயணத்தடையை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

,

காதல் மன்னன் காலமானார்

தனது 72 ஆவது வயதில் 26 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்நாள் முழுவதும் காதல் மன்னனாக வாழ்ந்த Geoffrey Edelsten இன்று மெல்பேர்னில் காலமானார்.

இறக்கும்போது அவருக்கு வயது 78. Geoffrey Edelsten மூன்றாவது திருமணத்தை, கடந்த 2015 ஆம் ஆண்டு மெல்பேர்னில் செய்துகொண்டபோது, அந்த அமெரிக்க பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான விஸா முடிவதற்கு பத்துமணி நேரமே மீதமிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Geoffrey Edelsten அடிப்படையில் மருத்தவர். ஆனால் மிகப்பெரிய செல்வந்தர். பகட்டாக வாழ்க்கை வாழ்வதிலும் வாழ்ந்து காட்டுவதிலும் மிகப்பெரிய பிரியமுடையவர். ஆஸ்திரேலிய உதைபந்தாட்ட கழக உரிமையாளர். தொழிலதிபர். எல்லாவற்றுக்கும் மேலாக காதல் மன்னன். வாழ்நாள் முழுவதும் சர்சைகளாலும் பெண்டிர்களாலும் சூழ்ந்து கிடந்தவர்.

இவரிடம் முன்னர் சிகிச்சைக்காக வந்த ஒரு நோயாளியை தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவரது மருத்துவ அனுமதி பறிக்கப்பட்டது. ஆனாலும், Geoffrey Edelsten எண்ணுக்கற்ற வைத்திய நிறுவனங்களை நடத்திவந்தார். அவற்றால் வந்த வருமானத்தையும் தனது சொத்துக்களையும் விளையாட்டிலும் பெண்களுடனான களியாட்டத்திலும் அள்ளி இறைத்தார். தனி ஹெலிக்கொப்டரில் ஆஸ்திரேலிய வானில் பறந்து திளைத்தார்.

Geoffrey Edelsten தனது பணத்தில் பெருந்தொகையை தொண்டு அமைப்புக்களுக்கும் பொதுச்சேவைகளுக்கும் அள்ளி இறைத்தார்.

ஆனாலும் இவருக்கு எப்போதும் புதிது புதிதாக அழகிய பெண்கள் தேவையானபடியே இருந்தது. மட்டுமல்லாமல், ஊடகங்களில் தனது பெயர் எந்த வழியிலாவது வந்துகொண்டிருக்கவேண்டும் என்ற போதை உடல் முழுவதும் நிறைந்திருந்தது.

Geoffrey Edelsten 1980 இல் 19 வயதான Leanne Nesbitt என்ற ஆஸ்திரேலிய மொடல் அழகியை திருமணம் செய்தார். மூன்று வருடங்களில் அந்தத் திருமணம் முறிந்தது. 2009 ஆம் ஆண்டு தனது 66 வயதில் கலிபோர்னியாவை சேர்ந்த 25 வயதுடைய Brynne Gordon என்ற உடற்கல்வி பயிற்றுனரை திருமணம் செய்தார்.

இவரும் ஒரு மொடல் அழகி மற்றும் நடிகை. மெல்பேர்னில் சுமார் 550 பேர் முன்னியிலையில் திருமணம் நடைபெற்றது. முப்பது லட்சம் டொலர்கள் செலவின் இடம்பெற்ற இந்த திருமணம் ஐந்து வருடங்களில் முறிந்தது.

கடைசியா, கடந்த 2015 ஆம் ஆண்டு – தன்னிலும் பார்க்க 46 வயது குறைந்த Gabi Grecko என்ற அமெரிக்க அழகியை மெல்பேர்னில் திருமணம் செய்துகொண்டார். இந்த செய்தியும் படங்களும் ஆஸ்திரேலிய ஊடகங்களில் மீண்டும் இவர் தொடர்பாக குலுங்கத்தொடங்கின.

இந்த திருமணம் தொடர்பாக பின்பொருதடவை ஊடகமொன்றுக்கு செவ்வியளிக்கும்போது, தான் விரும்பிய அந்தப்பெண்ணின் விஸா முடிவதற்கு பத்து மணித்தியலங்களே இருந்த காரணத்தினால் – முன்பு போல் அல்லாமல் அவசர அவசரமாக – ஆடம்பரமில்லாமல் திருமணத்தை முடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று என்று குறிப்பிட்டிருந்தார்.

எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானம்!

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கு வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளது.

திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இதன்படி எரிபொருள் விலை விரைவில் அதிகரிக்ககூடும் என அறியமுடிகின்றது. அவ்வாறானதொரு அதிகரிப்புக்கே வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளது.

” உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டபோதிலும், 21 மாதங்களாக விலை அதிகரிப்பை நாம் செய்யவில்லை. மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு அதிகரிப்பு செய்யாமல் இருந்தோம். அதிக விலைக்கு எரிபொருளை வாங்கி குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.” – என்று அமைச்சர் கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயற்படுத்த பிரதமர் உத்தரவு

நல்லாட்சி அரசாங்கத்தின் திறனற்ற முகாமைத்துவம் மற்றும் நிதி முறைகேடு காரணமாக இழப்புகளை எதிர்கொண்டுள்ள அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ச  உத்தரவு பிறப்பித்தார்.

இலங்கை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய நிலை குறித்து அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனம் மூலம் பல திட்டங்கள் தன்னிச்சையாக செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதும், அதன் மூலம் கிடைக்க வேண்டிய பில்லியன் கணக்கான ரூபாய் பணம் இதுவரை பொறியியல் கூட்டுத்;;தாபனத்தினால் இன்னும் அறவிடப்படவில்லை என்பதும் தெரியவந்தது.

சிறிகொத கட்சி தலைமையகத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் சேவைகள் பெறப்பட்டுள்ளன என்றும், அதற்கு இதுவரை எந்த கட்டணமும் செலுத்தப்படவில்லை என்றும் பொறியியல் கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் தகுதிகள் இல்லாமல் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளை வழங்கியமையால் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் ஆரம்பித்த பல அபிவிருத்தி திட்டங்கள் நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டமையால் அந்த அபிவிருத்தி பணிகள் நிறுத்தப்பட்டு பொறியியல் கூட்டுத்தாபனம் ஸ்தம்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

பேலியகொட சீ சிட்டி (C City) சந்தை வளாகம் இவ்வாறு கைவிடப்பட்ட ஒரு வேலைத்திட்டம் என இங்கு வெளிப்படுத்தப்பட்டது. கௌரவ பிரதமரின் கட்டளைக்கமைய கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ இந்திக அனுருத்த மற்றும் பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ அவர்கள் ஆகியோரின் மேற்பார்வையில் குறித்த சந்தை வளாக நடவடிக்கை அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயல்படுத்துவதில், இதுவரை நிறுத்தப்பட்ட திட்டங்களைத் ஆரம்பிக்க பேச்சுவார்த்தைகளின் மூலம் ஒரு பொதுவான முடிவை எடுக்க வேண்டும். தேவையான நிதி உதவி குறித்து சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவிக்கப்படும் என்றும்  பிரதமர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பிரதமரிடமிருந்து கிடைத்த நேர்மறையான பதிலை தொழிற்சங்க பிரதிநிதிகள் பாராட்டினர்.

‘இன்றைய விவாதம் பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு மிகவும் அதிஷ்டமான நேரம் வருவதைக் காட்டுகிறது. தற்போதுள்ள கடன்களை திருப்பிச் செலுத்த ஒரு திட்டம் விவாதிக்கப்பட்டது. இப்போது எங்களுக்கு ஒரு கூட்டு பொறுப்பு உள்ளது. எங்களை பணியிடத்திலிருந்து நீக்கிய நல்லாட்சி பின்னர் ஒரு கொடிய ஆட்சியாக மாறியது.

அவர்களிடமிருந்து ஒரு அரசு நிறுவனம் கூட தப்பவில்லை. எனவே, இந்த கலந்துரையாடலுக்குப் பின்னர், நாங்கள் நாளை முதல் பணியிடத்திலிருந்து பணியிடத்திற்கு செல்வோம்’ என்று கூட்டு தொழிற்சங்க மையத்தின் தேசிய அமைப்பாளர் பிரேமலால் பெரேரா கூறினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் காமினி லொகுகே, இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன, இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி ரத்னசிறி களுபஹன உள்ளிட்ட அரச நிறுவனத் தலைவர்கள் மற்றும் பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

ஒபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 2 இந்தியக் கப்பல்கள்!

ஒபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 2 பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்திய கரையோர காவல் படை கப்பல்களின் கப்டன்கள், இந்நடவடிக்கை குறித்த வினைத்திறன் மேம்பாட்டு மீளாய்வுக்காக 2021 ஜூன் 10ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தபோது இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகேதென்ன அவர்களால் சிறப்பாக வரவேற்கப்பட்டிருந்தனர்.

இந்த கப்பல்கள் மூலமாக வழங்கப்பட்டிருந்த ஆதரவினை பாராட்டிய அவர், எம்.வி.எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீ அனர்த்தத்தினை கட்டுப்படுத்துவதற்காக வழங்கிய துரிதமான பதில் நடவடிக்கைக்காக இந்தியாவிற்கு விசேட நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.

கடல் மாசு நீக்கும் சிறப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்த சமுத்திர பிரஹரி கப்பலின் செயற்பாடுகள் குறித்தும் இந்நடவடிக்கைகளில் தமது வகிபாகம் குறித்தும் இந்திய கடலோர காவல் படையின் கப்டன்கள் இலங்கை கடற்படை தளபதிக்கு எடுத்துக் கூறியிருந்தனர்.

2. இந்த சந்தர்ப்பத்தில் அங்கு சமூகமளித்திருந்த உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்கள், இந்நடவடிக்கை முழுவதும் இந்திய கப்பல்களின் செயற்பாடுகளுக்கு இதயபூர்வமான ஒத்துழைப்பினை வழங்கிய இலங்கை கடற்படைக்கும் இலங்கை கடற்படை தளபதிக்கும் நன்றியினை தெரிவித்திருந்தார்.

கடல் மார்க்கத்தில் இந்தியாவையும் இலங்கையையும் பிணைத்த புவியியல் ரீதியிலான காரணிகள் மாத்திரமின்றி ஒபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 1 மற்றும் 2 செயற்பாடுகளின் மூலமாக சான்று பகர்ந்ததைப்போன்று கடலில் இடம்பெற்ற அனர்த்தங்கள் மற்றும் HADR ஆகிய அவசர நிலைகளில் பதிலளிப்பதற்காக பாரம்பரிய ரீதியில் காணப்படும் ஒத்துழைப்பும் இதற்கான முக்கிய காரணியாக அமைகின்றது எனவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

பொதுவான கடற்பரப்பில் அனர்த்த சூழ்நிலைகளில் உரிய தருணத்தில் தக்க பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக காணப்படும் இருதரப்பு பொறிமுறைகளையும் அவர் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார்.

மேலும் பொதுவான கடற்பரப்பின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்து செயற்படுகின்றமையை சுட்டிக்காட்டியிருந்த அவர் மீண்டும் நிகழக்கூடிய செயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதர்களின் செயற்பாடுகளால் ஏற்படும் அனர்த்தங்கள் ஆகியவற்றிற்கு உரிய பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

3. எம்.வி.எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினை அணைப்பதற்காக இலங்கை கடற்படையிடமிருந்து உதவிக்காக கோரிக்கை விடுக்கப்பட்ட சில மணித்தியாலங்களில் மே 25ஆம் திகதி முதல் இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் இங்கு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையையும் மாசு நீக்கும் செயற்பாடுகளுக்கான உதவிகளையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்டமுடியும்.

எம்.வி.எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயினை அணைக்கும் முயற்சிகளில் ஐசிஜி டோனியருடன் இணைந்து இந்திய கடலோர காவல் படையின் மூன்று கப்பல்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. மேலும் கடல் மாசு அச்சுறுத்தலை கணிப்பிடும் பணிகளில் மாசினை கட்டுப்படுத்தும் கப்பல்கள் உதவியை வழங்கியிருந்ததுடன் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான பூரண வசதிகளை அக்கப்பல்கள் தம் வசம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளினதும் கடல் படைகள் இடையில் காணப்படும் கூட்டுத்திறன் மற்றும் ஒன்றிணைவானது இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கைகளுக்கான சிறந்த சான்றாக அமைகின்றன.

4. 2020 செப்டம்பர் இலங்கை கரைக்கு அப்பால் எம்டி.நியூ டைமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் இந்தியக் கடற்படையினதும் இந்திய கடலோர காவல் படையினதும் இவ்வாறான கப்பல்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டுகளில் கடலில் ஏற்பட்ட அனர்த்தங்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளின்போது வெற்றிகரமாகவும் துரிதமாகவும் முதலில் பதிலளித்து உதவியினை வழங்கும் நாடாக இந்தியா உள்ளது.

பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாகர் கோட்பாட்டிற்கு அமைவாகவும் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையை பிரதிபலிப்பதாகவும் இந்த செயற்பாடுகள் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

‘சஜித்துக்கு நம்பிக்கை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது தவறு’ – சஜித்

” சஜித்தின் தலைமைத்துவத்துக்கு நம்பிக்கை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய கட்சியின் செயல் தவறானதொன்றாகும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்படடியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இரு மாத கால விடுமுறையின் இருக்கின்றேன். கட்சியின் உள்ளக தகவல்கள் குறித்து சரியாக தெரியாது. எனினும், கட்சிக்குள் முரண்பாடுகளும் இல்லை என்பதை தெளிவாகக்கூறிக்கொள்கின்றேன். சஜித்தான் எமது தலைவர்.கட்சிக்குள் முரண்பாடும் இல்லை. இவ்வாறான நிலையில் எதற்கு தலைமைத்துவத்துக்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தவறான செயல். மக்கள் மத்தியில் வீண் அச்சத்தை உருவாக்கும். கூட்டத்தில் நான் பங்கேற்றிருந்தால் அது தொடர்பில் கேள்வி எழுப்பியிருப்பேன்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் நான் இணையவுள்ளதாக வெளியாகும் தகவல் தவறானதாகும். என்னை அரசியலுக்கு அழைத்துவந்து அமைச்சரவை அந்தஸ்த்து உள்ள அமைச்சு பதவி வழங்கி, முதலமைச்சராக்கியது அவர்தான். இதனால் அவர்மீது இன்றளவிலும் மதிப்பு உள்ளது. இருந்தாலும் கட்சி தாவும் அரசியல் என்னிடம் கிடையாது, ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கினோம். அக்கட்சியுடன் பயணம் தொடரும்.

ஆட்சியை கவிழ்க்க வேண்டுமெனில் எதிரணிகள் ஒன்றுபடவேண்டும். தனியே செல்லலாம் என ஐக்கிய மக்கள் சக்தியோ, ஐக்கிய தேசியக்கட்சியோ நினைத்தால் அது தவறு. ” – என்றார்.

‘கொரோனா’ ஊழித்தாண்டவம்’ – நாட்டில் மேலும் 101 பேர் பலி!

நாட்டில் மேலும் 101 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது.

நாளொன்றில் உறுதிப்படுத்தப்பட்ட அதிகூடிய மரண எண்ணிக்கை இதுவாகும்.

டெஸ்ட் போட்டியில் 97 ஓட்டங்களுக்குள் சுருண்ட மே. தீவுகள் அணி

தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ஓட்டங்களைப்பெற்று, 31 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றது.

பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நேற்று தொடங்கியது.

நாணயச்சுழற்சியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் மற்றும் ஷாய் ஹோப் களமிறங்கினர்.

ஹோப் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நோர்டியா பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த போனருடன் கேப்டன் பிராத்வெய்ட் ஜோடி சேர்ந்தார். ஆனால், 15 ரன்கள் எடுத்திருந்த பிராத்வெய்ட்டையும் நோர்டியா வெளியேற்றினார். போனர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா வெளியேற்றினார். அடுத்துவந்த ரோஸ்டனை 8 ரன்னில் லுங்கி இங்கிடி வெளியேற்றினார்.

பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அன்ரிச் நோர்டியா மற்றும் லிங்கி இங்கிடி பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இதனால், முதல்நாள் ஆட்டத்தின் 40.5 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஹோல்டர் அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய லிங்கி இங்கிடி 5 விக்கெட்டுகளையும் அன்ரிச் நோர்டியா 4 விக்கெட்டுகளையும், ரபாடா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் மற்றும் அடன் மார்க்ரம் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

5 பந்துகளை சந்தித்த டீன் எல்கர் ரன் எதுவும் எடுக்காமல் (0) ரோச் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த பீட்டர்சென் – மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பீட்டர்சன் 19 ரன் எடுத்த நிலையில் சீல்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய அடன் மார்க்ரம் அரைசதம் கடந்தார். அவர் 60 ரன்கள் எடுத்திருர்ந்த நிலையில் சீல்ஸ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய ரைசி வென் டர் டஸ்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் களமிறங்கிய வென்னி 6 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதையடுத்து, விக்கெட் கீப்பர் குவிண்டன் டிகாக் களமிறங்கினார்.

தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணியின் ரைசி வென் டர் டஸ்சன் 34 ரன்னுடனும் குவிண்டன் டிகாக் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இதன் மூலம், தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 31 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

நிவாரண நிதி திரட்ட விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடும் அமீர்கான்

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், செஸ் விளையாடி, கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட உள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

திரைப் பிரபலங்கள் பலரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில், பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், செஸ் விளையாடி, கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட உள்ளார்.

‘செக்மேட் கோவிட்’ என்கிற பெயரில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி அந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் நடிகர் அமீர்கான் கலந்துகொண்டு இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துக்கு எதிராக செஸ் விளையாட உள்ளார். செஸ் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகர் அமீர்கான், ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16)...

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...