Home Blog Page 3497

இலங்கைத் தொடருக்கான இந்திய அணி தலைவராக தவான்

விராட் கோஹ்லி, ரோகித் சர்மா உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இருப்பதால், இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு தவான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதற்கிடையில் இந்திய அணி இலங்கை சென்று தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட முடிவு செய்தது.

விராட் கோஹ்லி, ரோகித் சர்மா இல்லாததால் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை பிசிசிஐ-க்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

1. ஷிகர் தவான் (தலைவர் ), 2. புவனேஷ்வர் குமார் (துணைத் தலைவர் ), 3. பிரித்வி ஷா, 4. தேவ்தத் படிக்கல், 5. ஆர். கெய்க்வாட், 6. சூர்யகுமார் யாதவ், 7. மணிஷ் பாண்டே, 8. நிதிஷ் ராணா, 9. இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), 10. சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), 11. சாஹல், 12. ராகுல் சாஹர், 13. கே. கவுதம், 14. குருணால் பாண்ட்யா, 15 குல்தீப் யாதவ், 16. வருண் சக்ரவர்த்தி, 17. தீபக் சாஹர், 18. நவ்தீப் சைனி, 19. சி. சகாரியா.

4 வயது சிறுவனுக்கு ‘பியர்’ வழங்கிய இளைஞன் கைது (Video)

4 வயது சிறுவன் ஒருவருக்கு ‘பியர்’ அருந்துமாறு வற்புறுத்தி அதனை வழங்கிய 25 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று பெலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவன் பியர் அருந்தும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. இந்நிலையிலேயே இன்று கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த நபருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

r

கம்பஹாவில் 575 – கொழும்பில் 339- பதுளையில் 73 பேருக்கும் நேற்று கொரோனா

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக வருமாறு,

கொழும்பு – 339

கம்பஹா – 575

கேகாலை – 81

பதுளை – 73

அம்பாறை – 38

மாத்தளை – 35

அநுராதபுரம் – 68

முல்லைத்தீவு – 4

மன்னார் – 25

வவுனியா – 32

திருகோணமலை – 48

நுவரெலியா – 198

கண்டி – 127

இரத்தினபுரி – 52

புத்தளம் – 42

யாழ்ப்பாணம் – 167

கிளிநொச்சி – 5

பொலன்னறுவை – 30

அம்பாந்தோட்டை – 27

மொனறாகலை – 6

மட்டக்களப்பு – 79

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து மீண்டார் சஜித்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், அவரின் பாரியாரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 
அத்துடன், கங்காராம விகாரைக்குச்சென்ற அவர்கள், அங்கு ஆன்மீக வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
விரைவில் செயற்பாட்டு அரசியலுக்குள் சஜித் மீண்டும் திரும்புவார். எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்விலும் பங்கேற்பார்.

நாட்டில் மேலும் 67,615 பேருக்கு நேற்று தடுப்பூசி ஏற்றல்

நாட்டில் மேலும் 67 ஆயிரத்து 615 பேருக்கு கொவிட் – 19 தடுப்புக்கான சினோ பாம் தடுப்பூசி நேற்று ஏற்றப்பட்டது.

அத்துடன், சினோ பாம் தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களில் 25 ஆயிரத்து 451 பேருக்கு நேற்று 2ஆவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் பல இடங்களில் இன்றும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.

மஸ்கெலியா சுகாதார பிரிவில் மேலும் 51 பேருக்கு கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 198 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 56 பேரும், மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 51 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஹட்டன், ராகல, பொகவந்தலாவ ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் 127 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 35 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீடிப்பு! ‘பார்’களுக்கும் தொடர்ந்து பூட்டு!!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4 மணிக்கு நீக்கப்பட்டாலும், மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறியமுடிகின்றது.

அத்துடன், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களை மட்டும் சேவையில் ஈடுபடுத்தல் உள்ளிட்ட பல நடைமுறைகளும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும், தேசிய அடையாள அட்டை நடைமுறையின் பிரகாரமே வெளியில் செல்லும் நடைமுறையும் ஆரம்பமாகவும் எனவும் தெரியவருகின்றது.

அதேபோல மதுபானசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும். திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட கொண்டாட்டங்களை நடத்தவும் இடமளிக்கப்படாது என தெரியவருகின்றது.

பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் எவ்வாறான தடைகள் அமுலில் இருக்கும் என்பது தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது.

தடுப்பூசி திட்டத்தை முறையாக முன்னெடுக்கவும் – ஜனாதிபதி பணிப்பு

சுகாதாரப் பரிந்துரைகளின்படி, உலகளாவிய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, தடுப்பூசி ஏற்றுவதில் மூன்றாவது டோஸ் தேவைப்டுமாக இருந்தால், அதனை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று பணிப்புரை விடுத்தார்.

உலகின் பல முன்னணி நாடுகள் மூன்றாவது டோஸுக்கான தடுப்பூசிகளை தற்போது கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளன. இலங்கையும் இது குறித்து பிரத்தியேக கவனம் செலுத்தி மூன்றாவது டோஸ் வழங்குவது அவசியமானது.

உலகெங்கிலும் தடுப்பூசிகளுக்குப் பெரும் கேள்வி உள்ளது. இந்தப் போட்டி சூழ்நிலையில், இலங்கைக்கு அதிகளவு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள பல நாடுகளின் தலைவர்களுடன் தானே நேரடியாக கலந்துரையாடி உதவி கோரியுள்ளதனையும் அதிகாரிகளிடம் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

அந்தவகையில், மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள தடுப்பூசிகளை வெளிப்படைத்தன்மையுடனும் முறையாகவும் வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தற்போது அதிகளவு தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி ஏற்ற வேண்டியது அவசியமானது என்பதனை சுட்டிக்காட்டினார்.

அதே நேரம், தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

அதிகளவானவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றுவதன் மூலமே கொவிட் நோய்த்தொற்று பரவுவதையும், மக்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாவதையும் தடுக்க முடியும்.

முறையான தடுப்பூசி ஏற்றல் மற்றும் தடுப்பூசி ஏற்றிக்கொள்வோர் பற்றிய தரவுகளைச் சேகரிப்பதற்காக – தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) பிரத்தியேக மென்பொருளை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் – கிராம சேவகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டத்தில் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கு திகதி மற்றும் நேரத்தை மக்கள் இலகுவாக ஒதுக்கிக் கொள்ள முடியும்.

தற்போது தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் மற்றும் எதிர்காலத்தில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள இருக்கின்றவர்கள் அனைவரையும் பற்றிய தகவல்களை உள்ளடக்கவும், தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிச் சான்றிதழை வழங்கவும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

கொவிட் நோய்த்தொற்று அல்லாமல் மரணிப்பவர்களுக்கான இறுதிக் கிரியைகளும், பி.சி.ஆர். பரிசோதனைகளின் காரணமாகத் தாமதப்படுகின்றன என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதைக் கருத்திற் கொண்டு, வேறு காரணங்களால் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை 24 மணி நேரத்திற்குள் நடத்திமுடிக்க நடவடிக்கை எடுக்க கொவிட் ஒழிப்பு சிறப்பு குழு முடிவு செய்தது.

அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே, பிரசன்ன ரனதுங்க, ரோஹித அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்கள் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, எனது செயலாளர் பி. பீ. ஜயசுந்தர, எனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் (ஓய்வு பெற்ற) மேஜர் ஜெனரல் வைத்திய நிபுணர் சஞ்சீவ முனசிங்க, முப்படைகளின் தளபதிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோர் நேற்றைய சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சஜித் அணிக்குள் மோதலா? 21 இல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றக்குழு!

ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ள சஜித் பிரேமதாச, தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் இக்கூட்டத்தில் பங்கேற்று தலைமை வழங்குவார்.
சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்திக்குள் சதி நடப்பதாகவும், தனிக்குழுவொன்று உருவாகவுள்ளது எனவும் தகவல் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழு நேற்று முன்தினம் அவசரமாகக் கூடியது. சஜித்துக்கு நம்பிக்கை தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றக்குழு மீண்டும் கூடவுள்ளது.

நுவரெலியா உட்பட 7 மாவட்டங்களில் 26 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு

நாட்டில் 7 மாவட்டங்களிலிருந்து 26 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்கும்ஸ் தோட்டம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்தாலும் நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடு அமுலில் இருப்பதால் மேற்படி பகுதிகளுக்கும் அந்நடைமுறை பொருந்தும்.

விடுவிக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் வருமாறு,

 

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16)...

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...