Home Blog Page 3498

பற்றி எரிந்த கப்பலால் பாதிக்கப்பட்ட மீனவ சமூதாயத்துக்கு உரிய நஷ்டஈடு

இலங்கை கடற்பரப்புக்குள் கப்பல் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நீதி அமைச்சர், துறைசார் நிபுணர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்புகள், ஆலோசனைகள் பெறப்பட்டே நஷ்ட ஈடுவழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். இதன்போது நாட்டிலுள்ள மீனவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கருவாடு உற்பத்தி செய்பவர்கள், மீன்களை கிராமங்களுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்பவர்கள், மீன் கடைக்காரர்கள், மீன் ஏற்றிச்செல்லும் லொறியின் சாரதி உள்ளிட்டோரும் இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நஷ்ட ஈடு வழங்கும் வகையில் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

கப்பலில் இருந்த தரவுகள், தகவல்கள் இருக்கின்றனவா என்பது தெரியாது. அது தொடர்பில் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. கப்பலொன்று வரும்போது எமக்கு வழங்கப்படும் மின் அஞ்சல் உள்ளிட்ட தகவல்கள் எம்மிடம் உள்ளன. அவற்றை மாற்றமுடியாது. அவற்றை அடிப்படையாக வைத்தே நஷ்டஈடு கோரப்படும்.” – என்றார்.

‘அரசை காக்கவே அதிஉயர் சபைக்கு வருகிறார் ரணில்’ – சஜித் அணி சாட்டையடி

” மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவரான ரணில் விக்கிரமசிங்க, அரசை பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்றம் வருகிறார். எனவே, அவரின் நாடாளுமன்ற வருகையானது எமக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார   தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவுக்கு நம்பிக்கை தெரிவித்து ஏன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது தொடர்பிலும், ரணிலின் நாடாளுமன்ற வருகை சம்பந்தமாகவும் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இவை குறித்து அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது, ஒரு குழு தம்முடன் இணையவுள்ளது என்றெல்லாம் அரசும், அரசுக்கு சார்பானவர்களும் சமூகவலைத்தளங்கள் ஊடாக பரப்புரைகளை முன்னெடுத்துவருகின்றனர். இவ்வாறு பரப்படும் தகவல்கள் போலியானவை என்பதை நிரூபிப்பதற்காகவும், கட்சி உறுப்பினர்கள் சஜித் பக்கமே இருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்துவதற்காகவுமே நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க என்பவர் மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர். அரசின் தேவைக்கெற்க செயற்படக்கூடிய ஒருவர். ஏதேனும் ஒரு விதத்தில் பயன்பெறுவதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை அரசு, பாதுகாப்பு வழங்கி வைத்துள்ளது. எனவே, ரணிலின் கருத்தை நம்புவதற்கு மக்கள் இனியும் தயாரில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் நாடாளுமன்றம் வருவது எமக்கு எவ்விதத்திலும் பிரச்சினையாக அமையாது.” – என்றார்.

நாட்டில் மேலும் 2,142 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 142 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது.

14 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் – வெளியானது அறிவிப்பு!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

14 ஆம் திகதிக்கு பின்னரும் பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படும் என வெளியாகியுள்ள தகவல் போலியானது எனவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தானம் மற்றும் தியாகங்களால் கொவிட் தொற்றுநோயை தோற்கடிக்க புனித வெசாக் உற்சவத்தில் ஈடுபடும் பிரைம் குழுமம்

இலங்கையின் பாரிய வீட்டுவசதி மற்றும் காணி கட்டட விற்பனைத் குழுமமான பிரைம் வர்த்தக குழுமம், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வெசாக் மாதத்தில் கொவிட் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரண்டு Non-invasive Ventilatorகளை நன்கொடையாக வழங்கியது. கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த இலங்கை வாழ் மக்களிடம் உதவியை அரசாங்கம் கோரியபோது, இந்த செயற்கை சுவாசக் கருவிகளை வழங்க பிரைம் குழுமம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

ஆன்மீக பூஜைகளுக்கு முன்னுரிமை அளித்து, வீட்டில் வெசாக் அலங்காரங்கள் மற்றும் விலை உயர்ந்த வெசாக் பந்தல்களை அமைத்து வெசாக் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, இலங்கை வாழ் மக்கள் இந்த கொவிட் தொற்றுநோயிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள், இது தானம், இரக்கம் மற்றும் தியாகத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் புத்தரின் பிரசங்கத்தின் உண்மையான மதிப்பை சேர்க்கிறது.

பிரைம் குழுமத்தால் வழங்கப்பட்ட இந்த செயற்கை சுவாசக் கருவிகள் கம்பாஹா மாவட்ட பொது மருத்துவமனையின் டாக்டர் சசங்க வெடிசிங்கவிடம் பிரைம் குழுமதத்தின் தலைவர் பிரேமலால் பிராக்மணகே தலைமையிலான குழுவினரால் வழங்கப்பட்டது, இதில் பிரைம் குழுமத்தினர் உறுப்பினர்கள் உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பிரைம் குழுமத்தால் நன்கொடையளிக்கப்பட்ட இந்த இரண்டு புதிய செயற்கை சுவாசக் கருவிகளுடன் தற்போது கம்பஹா பொது மருத்துவமனையில் செயற்கை சுவாசப் பிரிவிலுள்ள கருவிகள் 06ஆக அதிகரிக்கத்துள்ளது. கொவிட் தொற்றுநோயால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு கொண்டு வரப்படும் பல நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற உதவும்.

‘புத்தரின் போதனைகளில் குறிப்பிடப்பட்டுள்ள உதவி செய்வதையும் இரக்கத்தையும் அனைவருக்கும் பரப்புவதற்கும், அந்த உன்னத குணங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கும் வெசாக் பருவம் சிறந்த வாய்ப்பாக உள்ளது என்று நான் நம்புகிறேன். ஒரு நல்ல செயலின் முடிவு மற்றும் அதன் நன்மைகளும் சிறந்தது என பிரைம் குழுமத்திலுள்ள நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்பது உண்மை. மேலும் கொவிட்டின் இந்த புதிய மாறுபாட்டால் சுவாசக் கோளாறுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஒரு இலங்கையிலுள்ள ஒரு வர்த்தகக் குழுமமாக கொவிட் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற எங்களால் முடிந்த தாராளமான நன்கொடைகளை அளிக்க விரும்பினோம்.’ என பிரைம் குழுமத்தின் தலைவர் பிரேமலால் பிராக்மனகே தெரிவித்தார்.

பிரைம் குழுமம்

இலங்கையின் காணி கட்டட விற்பனை துறையில் சர்வதேச கடன் தரமான ICRA [A-] நிதி நிலைத் தன்மையைப் பெற்ற ஒரேயொருரு குழுமமான பிரைம் குழுமம் காணி மற்றும் கட்டட மேம்பாட்டுத் துறையில் சுமார் 25 வருடகால அனுபவத்தைக் கொண்ட முழுமையான இலங்கை வர்த்தக குழுமமாகும். பிரைம் குழுமம் LMD சஞ்சிகையினால் 2019 ஆண்டில் நாட்டின் வர்த்தகங்கள் மத்தியில் கௌரவமான வர்த்தக நாமங்கள் அடங்கிய நிறுவனங்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது. அத்துடன் பிரைம் குழுமத்தின் தலைவர் மற்றும் அதன் துணை தலைவி ஆகியோரை LMD சஞ்சிகையினால் 2019ஆம் ஆண்டில் நாட்டின் சிறந்த 100 வர்த்தகங்களைச் சேர்ந்த ‘Realty Visionary’ and ‘Power Woman’இனால் மதிப்பீடு செய்யப்பட்டதுடன், பிரபலமான PropertyGuru Asia Property Awards விருது வழங்கும் நிகழ்வில் ‘Best Developer’ மற்றும் ‘Best Luxury Condo Development’ என்ற விருதுகளையும் வெல்வதற்கு பிரைம் குழுமத்திற்கு முடிந்தது. Asia One சஞ்சிகையினால் கௌரவிக்கப்படும் ஆசியாவின் விசேட இலச்சினைகளுக்குள் இடம்பிடித்துள்ளதுடன் 2018ஆம் ஆண்டு இலங்கைகயில் சிறந்த தொழில்முனைவோர் என்ற அந்தஸ்தையும் பிரைம் குழுமம் பெற்றது. அத்துடன் தனியார் நிறுவன குழுமமாக இருந்த பிரைம் குழுமத்தில் சேவை மற்றும் முதலீடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் Prime Lands Residencies பொதுப் பங்கு விநியோகம் (IPO) மேற்கொள்ளப்பட்டதுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முடிவடைந்த இந்த பங்கு விநியோகத்தின் மூலம் குழுமத்தின் பங்குரிமை தொடர்பில் முதலீட்டாளர்களில் பெரும்பாலானோருக்கு சந்தர்பம் வழங்கியதனால் சர்வதேச தரத்திற்கு கட்டட விற்பனை நிறுவனமாக உருவாகுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறந்து 8 நாட்களேயான பச்சிளம் குழந்தை கொரோனாவால் பலி!

பிறந்து 08 நாட்களேயான பச்சிளம் குழந்தையொன்று கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட நிமோனியாவால் உயிரிழந்துள்ளது.

கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த குழந்தையொன்றே  இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த மரணம் தொடர்பான தகவல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் பதிவான இளம் வயது கொரோனா மரணமாக இது கருதப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் 3 நாட்களில் 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி ஏற்ற திட்டம்!

நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் 40 ஆயிரம்  தடுப்பூசிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (10.06.2021) ஊடகங்களிடம் தெரிவித்தவை வருமாறு,

“அரசாங்கத்தின் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்திற்கு 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் அரசாங்க பணியாளர்களுக்கும், இலங்கை போக்குவரத்து சபை, இலங்கை மின்சார , சபை உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் தடுப்பூசியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசிகள் நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை வலப்பனை ஹங்குரன்கெத்த அம்பேகமுவ மஸ்கெலியா உட்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்படுகின்றது. இங்குள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் வழங்கப்படும்.

நுவரெலியா மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் கடந்த 09.06.2021 அன்று நுவரெலியா காமினி தேசிய பாடசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது 3000 பேருக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (10.06.2021) வியாழக்கிழமை கொத்மலை வலப்பனை ஹங்குரன்கெத்த அம்பேகமுவ பகுதிகளை சேர்ந்த அரச பணியாளர்கள் உட்பட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் முன் பணியாளர்களுக்குமாக 6000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.

எதிதிர்வரும் மூன்று தினங்களில் அதாவது 12 ஆம் திகதி 13 ஆம் திகதி 14 ஆம் திகதி ஆகிய திகதிகளில் நுவரெலியா மாவட்டத்தில் 98 கிராம சேவகர்கள் பிரிவில் 60 வயதிட்கு மேற்பட்ட சுமார் 40000 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலாளர்களினதும் பிராந்திய சுகாதார அதிகாரிகள் பொது சுகாதார அதிகாரிகள் உட்பட சுகாதார பிரிவினர் பொலிசார் இராணுவத்தினர் உட்பட அனைவருடைய ஒத்தழைப்பையும் பெற்றுக் கொண்டு மிகவும் அமைதியான முறையில் தடுப்பூசிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் எந்தவதமான குழப்பங்களும் இல்லாமல் அமைதியான முறையில் வருகை தந்து தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.மேலும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வருகின்றவர்களுக்கு விசேடமான போக்குவரத்து அனுமதிகள் தேவையில்லை.

அவர்கள் நேரடியாக வருகை தந்து தங்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்ற இடங்கயை கிராம அதிகாரிகள் மூலமாக அறிந்து கொண்டு அங்கே நேரடியாக வருகை தந்து தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும்.” – என்றார்.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

X-Press Pearl கப்பலில் எண்ணெய்க் கசிவா?

X-Press Pearl கப்பலில் எண்ணெய்க் கசிவு ஏற்படுவதாக Sky இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

கப்பல் மூழ்கியுள்ள பகுதியில் செய்மதி தொழில்நுட்பத்தினூடாக பெறப்பட்ட நிழற்படங்களை மேற்கோள் காட்டி இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

தீப்பற்றிய கப்பல் மூழ்கியுள்ள கடல் பிராந்தியத்தில் பாரியளவில் எண்ணெய்ப் படலம் காணப்படுகின்றனமை குறித்த செய்மதி படங்களினூடாக தெரியவந்துள்ளது.

இதனைத் தவிர, கப்பல் மற்றும் கரையோரங்களை அண்மித்த பகுதிகளில் செய்மதி தொழில்நுட்பத்தினூடாக பெறப்பட்ட நிழற்படங்களையும் சர்வதேச ஊடகங்கள் வௌியிட்டுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற பாரிய கடல் சார் பாதிப்பு இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவாவிடம் நாம் வினவினோம்.

எனினும், அவ்வாறான எண்ணெய்ப் படலம் இல்லை என கண்காணிப்புகளூடாக உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

மூழ்கும் கப்பலை அண்மித்து 05 கப்பல்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா குறிப்பிட்டார்.

தீப்பற்றிய கப்பலிலிருந்து கரையொதுங்கிய ஆயிரம் தொன் பிளாஸ்டிக் கழிவுகளை வத்தளை பகுதியில் களஞ்சியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்றி நியுஸ்பெஸ்ட்

‘மாதம் 8 நாட்களே வேலை’ – கொட்டியாகலையில் தொழிலாளர்கள் போராட்டம்!

பொகவந்தலாவ, கொட்டியாக்கலை கீழ்ப்பிரிவு மற்றும் மத்தியப்பிரிவு தோட்டத்தொழிலாளர்கள் தமது தொழில் உரிமைகளை வலியுறுத்தியும், தோட்ட நிர்வாகத்தின் செயற்பாடுகளைக் கண்டித்தும்   போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் வருமாறு,

” வாரம் இரு நாட்கள் வீதம் மாதத்தில் 8 நாட்களே வேலை வழங்கப்படுகின்றன. இதனால் சம்பளம் குறைந்துள்ளது. கிடைக்கும் சொற்பளவு சம்பளத்தை வைத்து என்ன செய்வது, பிள்ளைகளுக்கு டேடா காட் வாங்குவதா, உணவு வாங்குவதா?

அதுமட்டுமல்ல நெருக்கடியான சூழ்நிலையிலும் 18 கிலோ கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகங்கள் வலியுறுத்துகின்றன. ஒரு புறம் வாழ்வாதாரம் பாதிப்பு. மறுபுறம் தொழில் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, எமக்கு நீதி வேண்டும். இ.தொ.காவின் தோட்ட தலைவர், நிர்வாகத்துடன் இணைந்து தன்னிச்சையாக முடிவெடுக்கின்றார். இதனை ஏற்கமுடியாது.” – என்றனர்.

நீலமேகம் பிரசாந்த்

‘இந்திய டெல்டா திரிபுடன் இலங்கையில் மேலுமொருவர் அடையாளம்’

இந்தியாவில் பரவும் அதிக வீரியம் கொண்ட டெல்டா கொரோனா வைரஸ் திரிபுடன் இலங்கையில் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையில் இருந்த ஒருவரின் வைரஸ் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியபோதே இவ்விடயம் கண்டறியப்பட்டது. கொரோனா டெல்டா வைரஸ் வகையால் பாதிக்கப்பட்ட இரண்டாவது இலங்கையர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தல் நிலையில் இருந்தவருக்கு B.1.617 (டெல்டா) வைரஸ் தொற்றியிருப்பதை ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16)...

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...