Home Blog Page 3499

காதர் மஸ்தான் எம்.பிக்கும் கொரோனா

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பொன்றில் பங்கேற்பதற்காக சென்ற அவரிடம் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன்ட் பரிசோதனையிலேயே வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

‘சிலோன் டீ’ நாமத்துக்கும் சிக்கல் வரும் அபாயம் – ஞானசார தேரர் எச்சரிக்கை

” இரசாயன உரப்பயன்பாட்டுக்கான திடீர் தடையால் தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கீழ்நாட்டு தேயிலைகள் மஞ்சள் நிறமாகியுள்ளன. இதனால் சிலோன் டீ என்ற நாமத்துக்கும் சிக்கல் ஏற்பட்டுவிடுமோ என சிறு தேயிலை தோட்ட உற்பத்தியாளர்கள் அஞ்சுகின்றனர்.”  – என்று பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் சுட்டிக்காட்டினார்.

சேதன உரத்தை உருவாக்குவதற்கான உரிய திட்டங்கள் இன்றி அரசாங்கம் தீடீர் முடிவை எடுத்தது தவறு எனவும் தேரர் குறிப்பிட்டார்.

சேதன பசளையை பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து பயிற்சி பெற்ற பின்னர், முடிவுகளை எடுத்திருக்கலாம் எனவும் தேரர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை,  பாராளுமன்ற ஆசனம், துறைமுக நகர விடயம் உள்ளிட்டவை தொடர்பில் ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துகள் வருமாறு,

பிக்பாஸ் 5 ஆவது சீசன் எப்போது? வெளியானது திகதி விபரம்

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், 5-வது சீசன் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது.

இந்நிலையில், கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்தாண்டை போலவே இந்தாண்டும் அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்க அதன் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளாராம்.

‘படையப்பாவால் இப்போது கவலைப்படும் நடிகை மீனா’

திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த மீனா, தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.

திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த மீனா, தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார். இவர் கைவசம், ரஜினியின் ‘அண்ணாத்த’, திரிஷ்யம் தெலுங்கு ரீமேக் போன்ற படங்கள் உள்ளன.

இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: “எனக்கு வில்லி வேடத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது. சினிமா பார்வையாளர்களின் மன நிலை தற்போது மாறி இருக்கிறது. முன்பெல்லாம் கதாபாத்திரம் தனது இமேஜுக்கு பொருத்தமாக இருக்குமா? என்று யோசிக்க வேண்டி இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை.

நாம் நடிப்பது ஒரு கதாபாத்திரம் என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். எனவேதான் எதிர்மறை கதாபாத்திரம் உள்ளிட்ட வித்தியாசமான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். படையப்பா, தேவர் மகன் உள்பட பல வெற்றி படங்களை கால்ஷீட் பிரச்சினையால் தவற விட்டுள்ளேன். அது எனக்கு இப்போதும் வருத்தம் அளிக்கிறது.

அடிப்படையில் நான் ஒரு நடன கலைஞர். எனவே எனக்கு நடன காட்சிகளில் நடிக்க மிகவும் பிடிக்கும். பரதநாட்டிய கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க ஆர்வம் இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை.” இவ்வாறு மீனா கூறியுள்ளார்.

காட்டுக்கு திரும்பும் வழியில் கூட்டமாக தூங்கிய யானைகள் – வைரலாகும் புகைப்படம்

சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள யுனான் மாகாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 15 யானைகள் கூட்டமாக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தன.

வழக்கமாக செல்லும் பாதையை மறந்து அவை ஊருக்குள் புகுந்துவிட்டதாக‌ தெரிகிறது.

வனப்பகுதிக்கு செல்லும் வழி தெரியாமல் ஊருக்குள் சுற்றித்திரிந்த யானை கூட்டம் அங்கு பெரும் பொருள் சேதங்களை ஏற்படுத்தியது.இதுவரை சுமார் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களை யானைகள் சேதப்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே யானைகளை பத்திரமாக வனத்துக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். யானைகள் தங்கள் வனப்பகுதிக்கு செல்வதற்கு 300 மைல் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

எனவே யானை கூட்டம் மக்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்து விடாமல் இருக்க வனத்துறையினர் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு யானைகளை பெரிய வாகனங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர்.

யானைகளால் பொதுச்சொத்துகளுக்கு மேலும் சேதம் ஏற்படாமல் இருக்க, வனத்துறை சார்பில் வழியில் ஆங்காங்கே தொட்டிகள் அமைக்கப்பட்டு உணவும், தண்ணீரும் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சீன அரசு தொலைக்காட்சி ஒன்று யானைகள் வனத்துக்குள் அனுப்பப்படும் நிகழ்வை 24 மணி நேர நேரலையாக வழங்கி வருகிறது. லட்சக்கணக்கான சீன மக்கள் இதனை மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில், வனத்துக் குள் செல்லும் வழியில் 15 யானைகளும் அழகாகப் படுத்து உறங்கும் காட்சி ‘ட்ரோன் கேமரா’ மூலம் படம் பிடிக்கப்பட்டது. அந்தப் புகைப்படம் தற்போது உலக அளவில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடங்க மறுக்கும் புத்தாண்டு கொத்தணியால் மரண வீதம் அதிகரிப்பு!

நாட்டில் 2021 ஏப்ரல் 15 முதல் நேற்றுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் புத்தாண்டு கொத்தணியால் மரண வீதமும் அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியில்

 

 

நுவரெலியாவில் 5 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 77 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் வருமாறு,

‘ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு ரணிலால் ஜனாதிபதியாவும் முடியும்’

” 40 ஆசனங்களை வைத்துக்கொண்டு பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு , தேவையேற்படின் அரசியல் விஞ்ஞானத்தின் பிரகாரம் ஒரு ஆசனத்தை வைத்து மீண்டும் பிரதமர் ஆகலாம். அதன்பின்னர் ஜனாதிபதியாகும் ஆளுமையும் உள்ளது.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர  அபேவர்தன தெரிவித்தார்.

அனைவரையும் இணைத்துக்கொண்டு பயணமொன்றை மேற்கொள்வதற்காகவும், நாட்டுக்காகவுமே ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்றம் அனுப்புகின்றது எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியையும் இணைத்துக்கொண்டு பயணிப்பதில் தமக்கு சிக்கல் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், யார் தலைமை தாங்குவது என்ற விடயத்தாலேயே சர்ச்சை நிலை உருவாகியுள்ளது.

நாட்டில் பல பாகங்களில் இன்றும் மழை பெய்யும்

மேல், சப்ரகுமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

மலைநாட்டில் மேற்கு பகுதியிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகம்வரை காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறியுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி ‘பார்ட்டி’ – கொள்ளுபிட்டியவில் 9 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி ‘பார்ட்டி’ ஏற்பாடு செய்திருந்த இரு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 9 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள சொகுடி அடுக்குமாடி கட்டிடத் தொகுதியிலேயே இவர்கள் குறித்த பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளனர்.

அதேவேளை, நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய ஆயிரத்து 57 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16)...

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...