Home Blog Page 35

உலகக்கிண்ணத்தை வென்றது இந்தியா அணி!

ஐடிடி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா – நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளரான கோல் மெக்கோன்ஜி நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட் செய்தது.

20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 8 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், இஷான் கிஷன் 25 பந்துகளில் தலா 4 சிக்ஸர், பவுண்டரிகளுடன் 54 ரன்களும், ஹர்திக் பாண்டியா 18, சூர்யகுமார் யாதவ் 0, திலக் வர்மா 8, ஷிவம் துபே 26 ரன்கள் எடுத்தனர்.

2-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஜோடி 48 பந்துகளில் 105 ரன்கள் குவித்தது. நியூஸிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மேட் ஹென்றி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 256 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த செய்த நியூஸிலாந்து அணி 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டிம் ஷெய்பர்ட் 26 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் மிட்செல் சாண்ட்னர் 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்களும் சேர்த்தனர். ஃபின் ஆலன் 9, ரச்சின் ரவீந்திரா 1, கிளென் பிலிப்ஸ் 5, மார்க் சாப்மேன் 3, டேரில் மிட்செல் 17, ஜேம்ஸ் நீஷம் 8 ரன்களில் நடையை கட்டினர்.

இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டும் வழங்கி 4 விக்கெட்களை வீழ்த்தினார். அக்சர் படேல் 3 விக்கெட்களும், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பீல்டிங்கின்போது இஷான் கிஷன் சிறப்பாக செயல்பட்டு 3 கேட்ச்களை பிடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற சாதனையையும், 3-வது முறையாக மகுடம் சூடிய முதல் அணி என்ற சாதனையையும், சொந்த மண்ணில் முதன்முறையாக கோப்பையை வென்ற அணி என்ற வரலாற்று சாதனையையும் இந்திய அணி படைத்தது.

இந்திய அணி கடந்த 2007 மற்றும் 2024-ம் ஆண்டுகளிலும் மகுடம் சூடியிருந்தது.

டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 3 முறை கோப்பையை வென்றது இல்லை. அதிகபட்சமாக மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்துஅணிகள் தலா 2 முறை மட்டுமே கோப்பையை வென்றிருந்தன.

பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.27.48 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த நியூஸிலாந்து அணி ரூ.14.65 கோடியை பெற்றது. ஆட்டநாயகனாக பும்ராவும், தொடர் நாயகனாக சஞ்சு சாம்சனும் தேர்வு செய்யப்பட்டனர்.

 

6 மாதங்களுக்கு போர் செய்ய முடியும்: நவீன ஏவுகணைகளும் கைவசம் என்கிறது ஈரான்!

 

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக 6 மாதங்களுக்கு தங்களால் ஒரு தீவிரமான போரை நடத்த முடியும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான மோதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ரியாத்தை நோக்கிச் சென்ற ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக சவூதி அரேபியா தெரிவித்தது.

மேலும், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை ஈரான் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் ஏவுகணைகள் முஹாரக் பகுதியில் உள்ள ஒரு பல்கலைக்கழக கட்டிடத்தின் மீது விழுந்ததில் மூன்று பேர் காயமடைந்ததாக குவைத்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரணமாக பல நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், தெஹ்ரானின் உள்ள ஒரு எண்ணெய் கிடங்கை அமெரிக்காவும், இஸ்ரேலும் சனிக்கிழமையன்று தாக்கியதாக ஈரான் குற்றம் சாட்டியது. பங்குச் சந்தைகள் சரிந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்பின் மீதான முதல் தாக்குதலாக இது கூறப்படுகிறது.

ஈரானின் புரட்சிகர காவல்படையின் வெளிநாட்டு நடவடிக்கைப் பிரிவான குட்ஸ் படையில் உள்ள முக்கிய தளபதிகளை குறிவைத்து, பெய்ரூட்டின் ஒரு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் துல்லியமான தாக்குதலை நடத்திய இஸ்ரேல் ராணுவம், இன்று (மார்ச் 8) ஈரான் முழுவதும் புதிய தாக்குதல் அலைகளைத் தொடங்கியது.

லெபனானின் சுகாதார அமைச்சகம், ஹோட்டலில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாகக் கூறியது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுக்கு எதிரான போரில் ‘நாங்கள் முழு பலத்துடன்’ தொடர்ந்து ஈடுபடுவதாக உறுதியளித்துள்ளார்,

இந்தச் சூழலில், ஈரானின் புரட்சிகர காவல்படை இன்று (மார்ச் 8) தங்களால் தற்போதைய சண்டை வேகத்தில் ஆறு மாதங்களுக்கு தீவிரமான போரை நடத்த முடியும் என்று கூறியது.

ஈரான் புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி, “ஈரான் இதுவரை முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது, ஆனால் வரும் நாட்களில் மேம்பட்ட மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தும்” என்றார்.

மரக்கறி விலைப்பட்டியல் (08.03.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சாம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணி எது?

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறும்.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அரை இறுதி ஆட்டத்தில் 253 ரன்கள் குவித்த போதிலும் கடைசி ஓவர் வரை போராடி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி அரை இறுதியில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் 170 ரன்கள் இலக்கை நியூஸிலாந்து அணி 12.5 ஓவர்களை எட்டி வெற்றி கண்டிருந்தது.

இந்திய அணி 4-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

2007 மற்றும் 2024-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி 2014-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோல்வி அடைந்து இருந்தது.

அதேவேளையில் நியூஸிலாந்து அணி 2-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. அந்த அணி கடந்த 2021-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து இருந்தது.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற, நிறைய துணிச்சல் தேவை, ஆனால் அதிர்ஷ்டமும் இல்லாமல் இருக்க முடியாது. இந்த வகையில் அது ஒரு சரியான ஆட்டமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் சரியான நேரத்தில் சரியான விஷயங்கள் நடக்க வேண்டும்.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினால் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற சாதனையையும், 3-வது முறையாக மகுடம் சூடிய முதல் அணி என்ற பெருமையையும் பெறும். ஏனெனில் இதுவரை எந்த அணியும் 3 முறை கோப்பையை வென்றது இல்லை.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.27.48 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.14.65 கோடியை பெறும்.

நியூஸிலாந்து அணி கடந்த 11 வருடங்களாக ஐசிசி நடத்தும் தொடர்களில் 5 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதில் அந்த அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டுமே பட்டம் வென்றது. 50 ஓவர், டி20 வடிவிலான போட்டிகளில் அந்த அணி 2-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இந்த சோகத்துக்கு தீர்வு காண அந்த அணி இம்முறை முயற்சிக்கக்கூடும்.

ஈரான் கப்பலுக்கு அடைக்கலம் கொடுத்தது சரியான முடிவே!

“ஈரான் கப்பல்கள் விவகாரத்தில் இலங்கை சரியான முடிவையே எடுத்துள்ளது. சர்வதேச சட்டத்துக்கமையவே செயல்பட்டுள்ளது.” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

“ இலங்கைக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் தாக்குதலுக்கு இலக்கான ஈரான் கப்பலில் இருந்தவர்களை இலங்கை கடற் படையினர் மீட்டனர்.

இந்த நடவடிக்கை சர்வசதேச சமவாயங்களுக்கு உட்பட்டது. அப்பகுதியில் அமெரிக்க கப்பல் ஒன்று இருந்திருந்தால்கூட ஈரான் படையினரை நிச்சயம் காப்பாற்றி இருக்க வேண்டும். அதுதான் சர்வதேச சட்டம்.

எதிரணி சரணடைய வந்தால்கூட அவரை சுட்டுக்கொல்வதற்கு சர்வதேச சட்டத்தில் இடமில்லை.

எனவே, ஈரான் கப்பல்கள் விவகாரத்தில் இலங்கை எடுத்த முடிவு சரியானது. சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டது. அவ்வாறு செய்திருக்காவிட்டால்தால் கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கும்.” – என்றார் பொன்சேகா.

“ஈரான் கப்பல்மீதான அமெரிக்க தாக்குதல் போர்க்குற்றம்”

இந்திய பெருங்கடலில் ஐஆர்ஐஎஸ் தேனாவை மூழ்கடித்த அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறியது, போர்க்குற்றம் என்று ஈரான் ஐ.நா.வில் குற்றம் சாட்டியுள்ளது.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான ஈரானின் தூதர் அமீர் சயீத் இரவானி,

“ஈரானின் கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 2,000 மைல்கள் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா ஓர் ஆபத்தான ஆக்கிரமிப்புச் செயலை செய்தது.

நல்லெண்ணப் பயணத்தில் இந்திய கடற்படையின் அழைப்பின் பேரில் சுமார் 130 மாலுமிகளை ஏற்றிச் சென்ற ஈரானிய போர்க்கப்பலான தேனா சர்வதேச நீரில் தாக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 100 ஈரானிய மாலுமிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்கா ஒரு போர்க்குற்றத்தைச் செய்தது. இந்த கொடூரமான மற்றும் சட்டவிரோத தாக்குதல் சட்டம் மற்றும் கடல்வழி சுதந்திரத்தின் அடிப்படைக் கொள்கையின் கடுமையான மீறலாகும்.

மேலும், தனது நாட்டுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தும் கூட்டு ராணுவ நடவடிக்கையை நிறுத்த உறுதியாகவும், தெளிவாகவும், தாமதமின்றியும் தலையிட வேண்டும்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் நமது மக்களுக்கு எதிராகச் செய்து வரும் ஆக்கிரமிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைக் கண்டிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச் செயலாளரை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

ஈரானுக்கு எதிராகவும், பொதுமக்களுக்கு எதிராகவும் அனைத்து குற்றங்கள் மற்றும் ராணுவத் தாக்குதல்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர கட்டாயப்படுத்த வேண்டும். சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் போர்க்குற்றங்களின் மீதான இந்த கடுமையான மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும்.” என்று அவர் கூறினார்.

‘நிபந்தனையற்ற சரணடைவு’ கோரிக்கையை நிராகரித்தது ஈரான்!

அண்டை நாடுகள் (வளைகுடா நாடுகள்) மீதான தாக்குதலுக்கு மன்னிப்புக் கோரிய ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், அண்டை நாடுகளைத் தாக்க வேண்டாம் என்று தங்களது தற்காலிக தலைமைத்துவக் குழு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய பெசெஷ்கியன், “அண்டை நாடுகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.

ஈரானுக்கு எதிராக அந்த நாடுகளில் இருந்து தாக்குதல்கள் தொடங்கப்படாவிட்டால், அண்டை நாடுகள் மீது இனி தாக்குதல்கள் இருக்காது அல்லது ஏவுகணை ஏவுதல்கள் இருக்காது என்று தற்காலிக தலைமைத்துவக் குழு முடிவு செய்து அறிவித்துள்ளது.

அதேநேரத்தில், நாங்கள் நிபந்தனையின்றி சரணடைவது என்ற அமெரிக்காவின் கனவுகளை அவர்கள் கல்லறைக்கு எடுத்துச் செல்வார்கள்” என்றார்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்ததால், இன்று (மார்ச் 7) அதிகாலை வளைகுடா அரபு நாடுகளை குறிவைத்து ஈரானால் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்த கருத்துகள் வந்தன.

இன்று காலை பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

நிபந்தனையற்ற சரணடைதல் இல்லாமல் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன் என்று ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் இஸ்ரேலுக்கு 151 மில்லியன் டாலர் புதிய ஆயுத விற்பனையை அங்கீகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பைப் பேண நடவடிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை முகாமைத்துவம் செய்வதற்கான, உணவுக் கொள்கை மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழுவின் விசேட கூட்டம் நேற்று (06) பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பை பேணுவதற்கும், குறிப்பாக வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி மற்றும் உணவுப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

உணவு உற்பத்திக்கும், மீன்பிடித் துறைக்கும் முன்னுரிமை அளித்து, எரிபொருளை தொடர்ந்து வழங்குவதற்கு முறையான பொறிமுறையை உருவாக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நாட்டின் உணவு உற்பத்திக்குத் தேவையான உரங்கள் மற்றும் விவசாயத்திற்கு அவசியமான இரசாயனப் பொருட்களின் இறக்குமதியின்போது, சம்பந்தப்பட்ட நாடுகள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தினால், அதனை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார ஆகியோருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் அடங்கிய உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஈரானிய கப்பல் குழுவினரை அனுப்பக் கூடாது- இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்?

ஈரானிய கடற்படைக் கப்பல்களில் இருந்தவர்களை, ஈரானுக்கு அனுப்பக் கூடாதென, இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலில் இருந்து உயிர் தப்பியவர்களையும், சிறிலங்காவின் காவலில் உள்ள இரண்டாவது ஈரானிய கப்பலின் பணியாளர்களையும் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று, இலங்கை அரசாங்கத்தை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.

மார்ச் 6 நாளிடப்பட்ட, முன்னர் அறிவிக்கப்படாத, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உள்ளக அறிக்கையில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரியான, ஜெய்ன் ஹோவெல், ஐஆர்ஐஎஸ் புஷேர் கப்பல் குழுவினரையோ அல்லது ஐஆர்ஐஎஸ் டெனாவில் இருந்து தப்பிய 32 பேரையோ ஈரானுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று இலங்கை
அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருப்பதாக அந்த உள்ளக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதிகளை பரப்புரைக்காக பயன்படுத்தும் ஈரானிய முயற்சிகளை சிறிலங்கா அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்துக்களை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திடம் கோரிய போதும், உடனடியாக பதிலளிக்கவில்லை.

அதேவேளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அலுவலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளும், உடனடியாக கருத்து தெரிவிக்க முன்வரவில்லை.

கப்பல் குழுவினரை ஈரானுக்கு திருப்பி அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று, இந்தியா மற்றும் சிறிலங்காவிற்கான இஸ்ரேலிய தூதுவரிடம், அமெரிக்க பிரதிநிதி ஹோவெல் தெரிவித்ததாக உள்ளக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையை விட்டு வெளியேறுவதை ஊக்குவிக்கும் வகையில் குழுவினருடன், ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று, ஹோவலிடம் இஸ்ரேலிய தூதுவர் கேட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் பிரதிநிதி இதுகுறித்த கேள்விக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

இரண்டாவது கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர், மோதல் நடைபெறும் காலம் முழுவதும் இலங்கையில் காவலில் இருக்கும் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உள்ளக அறிக்கை தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலேயே காணி விடுவிப்பு!

இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த காணிகள் உரிய மீளாய்வின் பின்னர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலேயே விடுவிக்கப்படுகின்றது என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணைமீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போதே பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

“ யாழ்.பாதுகாப்பு படை தலைமையகம் அகற்றப்படுவுள்ளது என சில வாரங்களுக்கு முன்னர் வதந்தி பரப்பட்டது. பாரிய பிரச்சினையை இதன்மூலம் தோற்றுவிப்பதற்கு முற்பட்டனர்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே இவ்வாறு உண்மையற்ற தகவல்கள் சமூகமயப்படுத்தப்படுகின்றன.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு, கிழக்கு, தெற்கு என நாட்டில் எந்த பகுதியாக இருந்தாலும் இராணுவம் வசம் இருந்த – தற்போது இருக்கின்ற காணிகள் உரிய மீளாய்வின் பின்னரே விடுவிக்கப்படுகின்றது.

இது விடயத்தில் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அதற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.” எனவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

ஈரான் வான்வெளியில் அமெரிக்க ஆதிக்கம்!

0
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின்...

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” நாளை ஆரம்பம்!

0
- நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம். இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும்...

முதல் வெற்றியை பதிவு செய்யுமா சி.எஸ்.கே?

0
மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் , லக்னோ ஆகிய அணிகள் மோத உள்ளன. இன்றிரவு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை...