Home Blog Page 36

ஈரானுக்கு ஆதரவாக களமிறங்குமா ரஷ்யா?

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் இலக்குகளை தாக்குவதற்கு தேவையான உளவுத் தகல்களை ரஷ்யா, ஈரானுக்கு வழங்கி வருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், மேற்படி உளவு தகவல்களால் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அத்துடன், ஈரானின் ராணுவத் திறன் முறியடிக்கப்பட்டுவருகின்றது எனவும் அறிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்குரிய ட்ரோன்களை ஈரான் வழங்கிவருகின்றது. இதற்கு பிரதி உபகாரமாகவே ரஷ்யா உளவு தகவல்களை வழங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது.

எனினும், ஈரானுக்கு ராணுவ ரீதியான ஆதரவு வழங்குவது குறித்து ரஷ்யா மௌனம் காத்துவருகின்றது.

ஈரான்மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு தாக்குதல் இன்று 8 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

அடக்குமுறைக்காக அவசரகால சட்டம் பயன்படுத்தப்படவில்லை!

அவசரகாலச் சட்டத்தை அடக்குமுறைக்காக பயன்படுத்தும் எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது. இதனை கடந்த மூன்று மாதங்களாக செயலில் நிரூபித்தோம் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (06) உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

அவசரகாலச் சட்டத்தை நாம் அடக்குமுறைக்காககப் பயன்படுத்த வில்லை. கடந்த மூன்று மாதங்களாக அச்சட்டம் அமுலில் இருக்கின்றது.

இக்காலப்பகுதிக்குள் மேற்படி சட்டம் அடக்குமுறைக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதற்குரிய ஆதாரத்தை எதிரணியால் முன்வைக்க முடியுமா? எனவும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

சமூகவலைத்தளங்களில் அரசாங்கத்துக்கு எதிராக எவ்வளவு போலி தகவல்கள் பரப்படுகின்றன. அவற்றுக்கு எதிராகக்கூட நாம் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, அடக்குமுறையென வெறுமனே கூக்குரல் எழுப்புவதைவிடுத்து, எங்கு, எப்போது அது நடந்தது என தெளிவாக கூறுவதே அர்த்தமுள்ள கருத்தாக அமையும். அப்போது ஏதேனும் தவறு இருந்தால்கூட அதனை எம்மால் திருத்திக்கொள்ள முடியும்.

அதேவேளை, நாம் எதிரணியில் இருந்தபோது அவசரகாலச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தோம். அப்போது அச்சட்டம் அடக்கமுறைக்காகப் பயன்படுத்தப்பட்டது. அதற்குரிய நிறைய சான்றுகள் உள்ளன எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டினார்.

ஈரான் உச்ச தலைவர் தங்கி இருந்த பதுங்கு குழிக்குள் இஸ்ரேலின் 50 விமானங்கள் தாக்குல்!

ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனின் வீட்டில் கீழ்ப்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பதுங்கு குழிகள் மீது 50 இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின என்று தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கடந்த வாரம் உயிரிழந்தார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வந்தபோது பதுங்கு குழிகள் மீது இஸ்ரேல் வான்படைகள் நடத்திய அதிரடி ஏவுகணை தாக்குதலில் அவர் உட்பட பலர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பான வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (ஐடிஎஃப்) வெளியிட்டுள்ளன. இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

அலி காமேனி தனது வீட்டின் கீழ்ப்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பதுங்கு குழிகள் மீது 50 இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. பதுங்கு குழிகளை தகர்க்கும் அளவுக்கு மிகவும் அதிரடியான ஆயுதங்கள் கொண்டு இஸ்ரேல் விமானப்படையினரால் தாக்கப்பட்டது.

இந்த பதுங்கு குழிகளில் இருந்தபடிதான் அவர் போர் தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்து வந்தார். 50 விமானங்கள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியபோது அப்பகுதி இருந்த கட்டிடங்கள் முழுவதும் வெடித்துச் சிதறின. இதனால் அங்கு எழும்பும் புகை மண்டலமும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள், ஈரான் இடையேயான போர் 7-வது நாளை எட்டிய நிலையில் நேற்று இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (07.03.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ஈரான் சரணடைந்தால் அந்நாட்டை மீள கட்டியெழுப்புவோம்: ட்ரம்ப் உறுதி!

ஈரானின் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவர்கள் நிபந்தனையற்ற சரணடைவது மட்டுமே ஒரே தீர்வு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் கட்டமைப்புகளின் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனால், வளைகுடா நாடுகளிடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருவதால், இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஈரான் நிபந்தனைகளின்றி சரணடைவது மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே தீர்வு எனவும், ஈரானின் வளர்ச்சிக்காக அயராது உழைப்போம் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

“நிபந்தனையற்ற சரணடைதலைத் தவிர ஈரானுடன் வேறு எந்த ஒப்பந்தமும் இல்லை. அதன்பிறகு, ஒரு சிறந்த தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, நாங்களும் எங்களின் மிகவும் துணிச்சலான கூட்டாளிகளும் ஈரானை அழிவின் விளிமில் இருந்து மீட்க அயராது பாடுபடுவோம்.

ஈரானை பொருளாதார ரீதியாக முன்பை விட சிறந்ததாகவும், வலிமையாகவும் மாற்றுவோம். ஈரானை மீண்டும் சிறந்ததாக ஆக்குங்கள் (மேக் ஈரான் கிரேட் அகயின்)” எனத் தெரிவித்துள்ளார்.

 

விமானப்படையின் 75 ஆண்டு விழா நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு!

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் வான் சாகசங்கள் மற்றும் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் இன்று (06) பிற்பகல் ரத்மலானை, இலங்கை விமானப்படை தளத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

விமானப்படைத் தளத்திற்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விமானப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

பின்னர் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்ட ஜனாதிபதி, வான் சாகசங்களையும் கண்டுகளித்தார்.

விமானப்படை அருங்காட்சியகத்தில் ஜனாதிபதி சிறப்பு நினைவுக் குறிப்பை இட்டதுடன், இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நினைவுப் பரிசையும் வழங்கினார்.

இலங்கை விமானப்படையின் 75 ஆண்டுகால சிறப்புமிக்க சேவையை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்த கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கல்வி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வானூர்தி மற்றும் விமான தொழில்நுட்ப அரங்குகளையும் இது கொண்டுள்ளது.

இலங்கை விமானப்படையின் விமானங்களை மிக அருகில் சென்று பார்க்கவும் அவற்றின் தொழில்நுட்ப விவரங்களைப் பற்றி அறியவும் இது வாய்ப்பை வழங்குவதுடன், விமானப்படையின் அனைத்து தொழில்முறையிலான தனித்தனி அரங்குகள் மற்றும் வான்வழிப் பறப்பிற்காக ஏராளமான இலங்கை விமானப்படை விமானங்கள் மற்றும் சிவில் விமானங்கள் கண்காட்சியில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், விமானப்படை ஹெலிகாப்டர்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஜெட் விமானங்களின் வான்வழி சாகசங்கள், இரவு நேர ட்ரோன் காட்சிகள், விமானப்படை மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள், விமானப்படை விசேட பிரிவினால் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள், தீயணைப்பு காட்சிகள், பரிசூட் காட்சிகள் மற்றும் அங்கம்பொர சண்டை காட்சிகள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகள் இதில் உள்ளடங்குகின்றன. இந்தக் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகளை இன்று (06) முதல் மார்ச் 08 வரை, தினமும் பிற்பகல் 02.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜெயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா, மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உட்பட சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிறப்பு அதிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

 

 

 

புதுடெல்லியில் ஜெய்சங்கரை சந்தித்தார் விஜித ஹேரத்

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை மஹாசாகர் மற்றும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை தொடர்ந்து வழிநடத்தும் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டம் நீடிப்பு: ஐக்கிய மக்கள் சக்தி போர்க்கொடி!

அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கப்படுவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

அடக்குமுறையைக் கையாள்வதற்காகவே அவசரகால நிலை நீடிக்கப்படுகின்றது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல சுட்டிக்காட்டினார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்தக்கொள்வது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ டித்வா பேரிடரின் பின்னரே அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. எனினும், அதனை நீடிப்பதற்கு தற்போது எந்தவொரு தேவைப்பாடும் இல்லை.

மேற்படி சட்டத்தை நீடித்துக்கொள்வதற்கு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தர்க்கங்களும் ஏற்புடையவை அல்ல.

அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு அலையை ஒடுக்குவதற்காகவே இப்படியான ஜனநாயக விரோத செயல் இடம்பெறுகின்றது.” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல குற்றஞ்சாட்டினார்.

சாதாரண சட்டங்களின்கீழ் செய்யக்கூடிய விடயங்களை முன்னெடுப்பதற்கு அவசரகாலச் சட்டம் எதற்கு? எனவே, இதன் பின்னணியில் வேறு நோக்கம் இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு நாடாளுமன்றம் இன்று ஒப்புதல் வழங்கியது. இது தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம் மீண்டும் நீடிப்பு!

அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கும் பிரேரணை 100 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தை அடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பை கோரியதன் அடிப்படையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அவசரகாலச் சட்ட நீடிப்புக்கு ஆதரவாக 108 உறுப்பினர்களும், எதிராக 8 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகியவற்றின் 8 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, உறுப்பினர்கள் மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 108 உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை.

ஈரான் கப்பல் விவகாரம்: ஜனாதிபதி அநுரவின் முடிவுக்கு ரிஷாட் பாராட்டு!

இலங்கைக் கடல் எல்லைக்கு அருகில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்தவர்களைக் காப்பாற்றியதோடு, ஈரானின் மற்றொரு கப்பலை இலங்கைத் துறைமுகத்தில் தரிப்பதற்கும் அதில் பயணம் செய்த 208 பேருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கும் மனிதாபிமான அடிப்படையில் தீர்மானம் மேற்கொண்ட, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி எடுத்த இந்தத் தீர்மானத்தின் மூலம் ‘மனிதாபிமானமே எதிலும் முதன்மையானது’ என்பதை – அவர் நிரூபித்துள்ளார் என்றும், இது – இலங்கையர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் தருணம் எனவும் றிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

”மத்திய கிழக்கில் நடந்து கொண்டிருக்கும் யுத்தம் – ஈரான் மீது திணிக்கப்பட்டது. அந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள், அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தருணத்தில் ஈரானின் இரண்டு கப்பல்களிலும் பயணித்த மொத்தம் 240 ஈரானிய பிரஜைகளை, ஜனாதிபதியின் துணிவான முடிவின் மூலம் காப்பற்றக் கிடைத்தமையினால், உலக வரலாற்றில் இலங்கை உயர்ந்து நிற்கிறது” என்றும் றிஷாட் பதியுதீன் கூறியுள்ளார்.

‘இந்த விவகாரம் தொடர்பில் பொய்யான, பயமுறுத்தும் நோக்குடனான அதிகமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நாட்டின் கௌரவத்தையும் மனித உயிர்களை பாதுகாக்கும் வகையிலும் நாடென்ற வகையில் சர்வதே உடன்பாடுகளுக்கு எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில்தான் நாம் இந்த தலையீட்டை செய்தோம். இது நாடென்ற வகையில் மிகவும் தைரியமான மனிதாபிமான முன்னெடுப்பாகும்’ என்று, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக் தெரிவித்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள றிஷாட் பதியுதீன்; “இதன் மூலம் மனிதாபிமானமுள்ள தலைமைத்துவத்தின் பண்பினை – ஜனாதிபதியிடத்தில் நான் காண்கிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

‘ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையினால், அவர் அமெரிக்காவை பகைத்துக் கொள்ள நேரிடும்’ என்று வெளியிடப்படும் குரூரமான கருத்துக்களை, தான் கடுமையாக எதிர்ப்பதாகவும், ”ஒரு நன்மையை செய்யும் போது, அதன் பின்விளைவுளை கருணையுள்ள மனிதர்கள் ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டார்கள்” என்றும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுத்தீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

”இலங்கையின் மிக நீண்டகால நண்பராக ஈரான் இருந்து வருகிறது. இலங்கை பெரும் அனர்த்தங்களில் சிக்கித் தவித்த போதெல்லாம், ஓடிவந்து ஈரான் உதவியிருக்கிறது. அந்த வகையிலும், ஈரானுக்கு உதவ – இலங்கை கடமைப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரானின் கப்பல்களில் இருந்த நூற்றுக்கணக்கான மனித உயிர்களை காப்பாற்றுவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்திய படையினரையும் பராட்டி – நன்றி தெரிவிப்பதாகவும் றிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

ஈரான் வான்வெளியில் அமெரிக்க ஆதிக்கம்!

0
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின்...

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” நாளை ஆரம்பம்!

0
- நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம். இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும்...

முதல் வெற்றியை பதிவு செய்யுமா சி.எஸ்.கே?

0
மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் , லக்னோ ஆகிய அணிகள் மோத உள்ளன. இன்றிரவு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை...