Home Blog Page 37

யாழ்.படகு விபத்துக்கான காரணம் என்ன?

யாழ்.படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் Ramalingam Chandrasekar இது தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

விபத்துக்குள்ளான படகு பயணத்திற்கு பாதுகாப்பான நிலையில் இருந்ததா, பயணிகளின் எண்ணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டதா, கடல் பயணத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பன குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடமும், பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் அமைச்சர் அவசர கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார்.

கடலில் சிக்கியிருக்கக்கூடியவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகளை தீவிரப்படுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மீட்பு நடவடிக்கைகளில் எந்தவித தாமதமும் ஏற்படாத வகையில் அனைத்து வளங்களையும் பயன்படுத்துமாறும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை அதிகாரிகளுடனும் அமைச்சர் தொடர்புகொண்டு அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.

 

ஈரானின் புதிய உச்ச தலைவரை ஏற்க முடியாது: ஆயுதங்களை கைவிடுமாறு ட்ரம்ப் அழைப்பு!

வெனிசுலாவில் நடந்தது போல, ஈரானிலும் புதிய தலைவர் நியமனத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் புதிய உச்ச தலைவராக கமெனியின் 2-வது மகன் மொஜ்தபா கமெனி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை ஏற்க முடியாது எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.

இந்த நிலையில் ஈரான் உச்ச தலைவராக மொஜ்தபா கமேனியை ஏற்க முடியாது என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

“ அயதுல்லா அலி கமேனியின் கொள்கைகளைத் தொடரும் ஒரு புதிய ஈரானியத் தலைவரை ஏற்க முடியாது. இது அமெரிக்காவை 5 ஆண்டுகளில் மீண்டும் போருக்குத் தள்ளும்.

எனவே வெனிசுலாவில் நடந்தது போல, ஈரானிலும் புதிய தலைவர் நியமனத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஈடுபட வேண்டும்.

ஈரானுக்கு நல்லிணக்கத்தையும் அமைதியையும் கொண்டு வரக்கூடிய ஒருவரை நாங்கள் விரும்புகிறோம்.

ஈரானை வழிநடத்த பகுத்தறிவு மற்றும் விவேகமுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும்.

ஈரான் இராணுவம், புரட்சி கர காவல்படை தங்களது ஆயுதங்களை கீழே போடுமாறு அழைப்பு விடுக்கிறேன். புதிய, சிறந்த ஈரானை பெரும் ஆற்றலுடன் வடிவமைக்க எங்களுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என அமெரிக்க ஜனாதிபதி மேலும் கூறினார்.

யாழில் படகு விபத்து: இரு பக்தர்கள் பலி: மீட்பு பணி தீவிரம்!

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த படகொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழா தற்போது இடம்பெற்று வருகின்றது.

இவ்விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து பக்தர்கள் சென்ற படகே படகில் மூழ்கி இன்று விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். படகில் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலர் பயணித்துள்ளனர். தற்போது மீட்பு பணி இடம்பெற்றுவருகின்றது.

ஐவர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 4 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் விழா ஆரம்பமானது. இன்று (06) நற்கருணை பெருவிழா இடம்பெறுகின்றது. நாளை (07) சனிக்கிழமை தேர்த் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

குவைத்திலுள்ள தூதரகத்தை மூடியது அமெரிக்கா!

குவைத்தில் உள்ள தமது நாட்டு தூதுரகத்தை அமெரிக்கா மூடியுள்ளது. அங்கிருந்து அனைத்து பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தூதரகத்தில் உள்ள ரகசியத் தரவுகள் மற்றும் கோப்புகளை முழுமையாக அழிக்குமாறு தூதரக ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குவைத் வான்பரப்பில் ஊடுருவிய ஏவுகணைத் தாக்குதலை அந்த நாட்டு இராணுவம் முறியடித்ததைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வான்வழித் தாக்குதலால் சில வாகனங்கள் சேதமடைந்தாலும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கை எனவும், பாதுகாப்பு மீளாய்வின் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலமைப் பரிசில் மாணவர்களுக்கு “பாரி வெற்றிக்கனி” நூல்கள் வழங்கல்

பண்டாரவளை கல்வி வலயத்திற்குட்பட்ட நீட்வுட் இலக்கம.01 தமிழ் வித்தியாலயம் உள்ளிட்ட சுமார் 30 பாடசாலைகளைச் சேர்ந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் மாணவர்களுக்கு “பாரி வெற்றிக்கனி” நூல்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரி அறக்கட்டளை ஏற்பாட்டில் இந்த நூல் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு கல்வி உதவியாக “பாரி வெற்றிக்கனி” நூல்கள் வழங்கப்பட்டன.

இந்த உயரிய சமூகச் சேவையை முன்னெடுத்து வரும் பாரி அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி சசிவதனா விமலரஞ்சிதன் மற்றும் அதன் அதிகாரிகள், அங்கத்தவர்கள் அனைவருக்கும் கல்வி சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்று சிறப்பித்தவர் பண்டாரவளை வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்
க. யோகேஸ்வரன் ஆவர். மேலும், நிகழ்வை ஒருங்கிணைப்பதில் ஹப்புத்தளை இலக்கம்
01 தமிழ் வித்தியாலய அதிபர் ஜெயராஜ் அவர்கள் இணைப்பாளராக செயல்பட்டு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.

இந்த நிகழ்வு மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கமும் கல்வி ஆதரவும் கிடைத்துள்ளதாக கல்வியியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

( நடராஜா மலர்வேந்தன் )
பசறை நிருபர்

அமெரிக்க நீர்மூழ்கி கப்பலுக்குள் ஆஸ்திரேலிய படை: அந்நாட்டு பிரதமர் கூறுவது என்ன?

இந்து சமுத்திரத்தில் ஈரானின் போர்க்கப்பல்மீது அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தும்போது குறித்த நீர்மூழ்கிக்குள் ஆஸ்திரேலிய கடற்படையினரும் இருந்துள்ளனர்.

இச்சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமது கடற்படை அதில் இருந்ததை ஆஸ்திரேலிய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், மேற்படி தாக்குதலில் ஆஸ்திரேலிய கடற்படை நேரடியாக பங்கேற்கவில்லை எனம் அவர் கூறினார்.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையில் இராணுவ கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டணி ஆக்கஸ் AUKUS என அழைக்கப்படுகின்றது.

இந்த ஆக்கஸ் திட்டத்தின்கீழ் அணுசக்தியில் இருந்து இயங்கக்கூடிய நீர்மூழ்கிக்கப்பல்களை ஆஸ்திரேலியா பெறவுள்ளது.

இதற்கமைய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்குவதற்கான பயிற்சியின் ஒரு பகுதியாகவே ஆஸ்திரேலிய படையினர் அமெரிக்கக் கப்பல்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதன்ஓர் அங்கமாகவே ஈரான் கப்பல்மீது தாக்குதல்
நடத்திய அமெரிக்க நீர்மூழ்கியிலும் ஆஸ்திரேலிய படையினர் இருந்துள்ளனர்.

பாதுகாப்புத் துறையின் தகவலின் பிரகாரம், அமெரிக்க அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களில் பணியாற்றும் பணியாளர்களில் சுமார் 10 பேரில் ஒருவர் ஆஸ்திரேலியர் என தெரியவருகின்றது.

எனினும், ஈரானுக்கு எதிரான இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் ஆஸ்திரேலிய படையினர் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றும், அவர்கள் ஆஸ்திரேலிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுவதாகவும் பிரதமர்தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்து சமுத்திரத்தில் இலங்கையின் கடற்பரப்புக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பிலேயே ஈரான் கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் மூழ்கடித்தது.

இதில் 90 பேர்வரை பலியாகியுள்ளனர். 32 பேர் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச சட்டம் மற்றும் சாசனத்துக்கமையவே இது விடயத்தில் இலங்கை செயல்பட்டது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, மற்றுமொரு ஈரான் கப்பலையும் இலங்கை பொறுப்பேற்றுள்ளது. மனிதாபிமான அடிப்படையிலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அணு குண்​டு​களை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை சோதனை!

அணு குண்​டு​களை சுமந்து செல்​லும் திறன் கொண்ட அதிநவீன ஏவு​கணையை அமெரிக்க விமானப்படை வெற்​றிகர​மாக சோதனை செய்​துள்​ளது.

இதுகுறித்து அமெரிக்க விமானப் படை வட்​டாரங்​கள் கூறிய​தாவது:

கடந்த 1962-ல் ‘மினிட்​மேன்I’ ஏவு​கணை​யும் கடந்த 1965-ம் ஆண்​டில் ‘மினிட்​மேன் II’ ஏவு​கணை​யும் அமெரிக்க விமானப் படை​யில் சேர்க்​கப்​பட்​டன.

கடந்த 1970-ம் ஆண்​டில் ‘மினிட்​மேன் III’ ஏவு​கணை விமானப் படை​யில் சேர்க்​கப்​பட்​டது.

தற்​போது இந்த வகையை சேர்ந்த 400 ஏவு​கணை​கள் அமெரிக்​கா​வின் மோன்​டா​னா, நார்த் டகோ​டா, வயோமிங் பகு​தி​களில் நிலைநிறுத்​தப்​பட்டு உள்​ளன.

‘மினிட்​மேன் III’ ஏவு​கணை​யின் திறன் தொடர்ந்து மேம்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த சூழலில் அதிவேகத்​தில், அதிக தொலைவு சீறிப் பாயும் ‘மினிட்​மேன் III’ ஏவு​கணை​யின் சோதனை மார்ச் 3-ம் திகதி இரவு 11.01 மணிக்கு (பசிபிக் நேரம்) நடத்​தப்​பட்​டது.

அமெரிக்​கா​வின் வாண்​டன்​பெர்க் விண்​வெளி படைத் தளத்​தில் இருந்து புறப்​பட்ட ஏவு​கணை, மார்​ஷல் தீவு​களுக்கு அருகே நிலைநிறுத்​தப்​பட்​டிருந்த 2 இலக்​கு​களை மிகத் துல்​லிய​மாக தாக்கி அழித்​தது. ‘மினிட்​மேன் III’ ஏவு​கணை மூலம் ஒரே நேரத்​தில் பல்​வேறு இலக்​கு​களை தனித்​தனி​யாக தாக்கி அழிக்க முடி​யும்.

இந்த ஏவு​கணை முதலில் விண்​வெளி​யின் வளிமண்​டலத்தை தாண்​டிச் செல்​லும். பின்​னர் விண்​வெளி​யில் இருந்து மீண்​டும் வளிமண்​டலத்​துக்​குள் நுழைந்து தரை​யில் உள்ள இலக்​கு​களை மிக துல்​லிய​மாக தாக்கி அழிக்​கும். 36,000 கிலோ எடை, 59.5 அடி நீளம், 5.5 அடி விட்​டம் கொண்ட ஒரு ஏவு​கணை​யில் 3 அணு குண்​டு​கள் வரை சுமந்து செல்ல முடி​யும்.

இந்த ஏவு​கணை மணிக்கு 24,000 கி.மீ. வேகத்​தில் சீறிப் பாயும். சுமார் 13,000 கி.மீ. தொலைவு வரையி​லான இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்கி அழிக்​கும். ‘மினிட்​மேன் III’ ஏவு​கணை மூலம் உலகின் எந்த பகு​தி​யை​யும் 30 நிமிடங்​களில் தாக்கி அழிக்க முடி​யும். இவ்​வாறு அமெரிக்க விமானப் படை வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போரில் ஈரான் ராணுவத்​துக்கு ரஷ்​யா​வும் சீனா​வும் மறை​முக​மாக உதவி செய்து வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது.

இந்த சூழலில் ஈரான், சீனா, ரஷ்​யா​வுக்கு எச்​சரிக்கை விடுக்​கும் வகை​யில் டூம்​ஸ்டே (அழிவு நாள்) ஏவு​கணை என்​றழைக்​கப்​படும் ‘மினிட்​மேன் III’ ஏவு​கணை சோதனையை அமெரிக்​கா நடத்தியிருப்​பது உலக நாடு​களின்​ கவனத்தை ஈர்த்துள்ளது.

மத்திய கிழக்கில் 7 நாளாக தொடரும் போர்! ட்ரம்ப்பை குறிவைக்குமாறு ஈரான் மதகுரு அழைப்பு!

மத்​திய கிழக்கு நாடு​களில் 7-வது நாளாக போர் நீடித்து வரும் நிலை​யில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கொல்ல வேண்​டும் என ஈரான் மதகுரு ஒரு​வர் அழைப்பு விடுத்​துள்​ளார்.

அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் இணைந்து கடந்த பிப்​ர​வரி 28-ம் திகதி ஈரான் மீது வான்​வழி தாக்​குதலை தொடங்​கின. இதில், ஈரான் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி உட்பட சுமார் 50 உயர் அதிகாரி​கள் கொல்​லப்​பட்​டனர்.

இதையடுத்​து, இஸ்​ரேல் மற்​றும் அமெரிக்க படைத்​தலங்​கள் அமைந்​துள்ள வளை​குடா நாடு​கள் மீது ஈரான் தொடர்ந்து வான்வழி தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இதற்கு இஸ்​ரேல் மற்​றும் அமெரிக்க படைகள் தக்க பதிலடி கொடுத்து வரு​கின்​றன.

இந்​தப் போர் இன்று ஏழாவது நாளை எட்​டியது. நேற்று அதி​காலையில் இஸ்​ரேல் மீது ஈரான் ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் லட்​சக்​கணக்​கான மக்​கள் குண்டு துளைக்​காத புகலிடங்களில் தஞ்​சமடைந்​தனர். இது​வரை ஈரானில் 1,230 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்.

இந்த சூழலில், ஈரானின் மூத்த ஷியா மதகுருக்​களில் ஒரு​வ​ரான அயத்​துல்லா அப்​துல்லா ஜவாதி அமோலி ஈரானிய அரசு தொலைக்​காட்​சி​யில் பேசும்போது, “நாம் இப்​போது ஒரு பெரிய சோதனை​யின் விளிம்​பில் இருக்​கிறோம். இந்த ஒற்​றுமையை நாம் முழு​மை​யாகப் பாது​காக்க வேண்​டும். யூதர்​களின் (இஸ்ரேலியர்கள்) ரத்​தம் சிந்​தப்பட வேண்​டும், ட்ரம்​பின் ரத்​தம் சிந்​தப்பட வேண்டும்.

அடக்​கு​முறை செய்​யும் அமெரிக்​காவை எதிர்த்​துப் போராடுங்​கள், அவனது (ட்​ரம்​பின்) ரத்​தம் என் தோள்​களில் உள்​ளது என காலத்​தின் இமாம் கூறுகிறார்” என்று தெரி​வித்​துள்​ளார்.

ஷியா இஸ்​லாமிய மதகுரு​மார்​களில் ‘அயத்​துல்​லா’ என்​பது மிக உயர்ந்த பதவி​களில் ஒன்​றாகும். ஈரானில் இத்​தகைய மூத்த மதகுருக்​கள் பலர் உள்​ளனர். அவர்​களின் மத மற்​றும் அரசி​யல் ரீதியி​லான கருத்​துகள் குறிப்​பிடத்​தக்க தாக்​கத்தை ஏற்​படுத்​தும்.

எனவே, இந்த அறிக்கை மிக முக்​கிய​மான​தாகக் கருதப்​படு​கிறது.

அமெரிக்க செனட் ஒப்​புதல் இதற்​கிடையே ஈரானுக்கு எதி​ரான வான்​வழித் தாக்​குதல்​களை நிறுத்​து​வதற்​கான தீர்​மானம் அமெரிக்க செனட்​டில் தோற்​கடிக்​கப்​பட்​டது (53-47 வாக்​கு​கள்). இதன் மூலம் தாக்​குதலைத் தொடர அதிபர்​ ட்ரம்​புக்​கு அதி​காரம்​ கிடைத்​துள்​ளது குறிப்பிடத்தக்கது.

மரக்கறி விலைப்பட்டியல் (06.03.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

ஈரான் வான்வெளியில் அமெரிக்க ஆதிக்கம்!

0
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின்...

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” நாளை ஆரம்பம்!

0
- நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம். இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும்...

முதல் வெற்றியை பதிவு செய்யுமா சி.எஸ்.கே?

0
மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் , லக்னோ ஆகிய அணிகள் மோத உள்ளன. இன்றிரவு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை...