Home Blog Page 38

போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் – சீனா அறிவிப்பு

அமெரிக்​கா, இஸ்​ரேல் – ஈரான் இடையே போரை நிறுத்​து​வதற்கு மத்​தி​யஸ்​தம் செய்​யத் தயார் என்று சீனா அறி​வித்​துள்​ளது.

சீனாவின் இந்த அறிவிப்பானது போரில் புதிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஈரானைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் ஏவுகணை உற்பத்தி மையங்கள், அணு சக்தி மையங்களை குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையிலேயே அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போரை நிறுத்துவதற்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று சீனா நேற்று அறிவித்துள்ளது.

“ அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போரை பேச்சு மூலம் நிறுத்தலாம். போரை நிறுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்கலாம்.

இதற்காக இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்ய சீனா தயாராக உள்ளது.” என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் சீன ஜனாதிபதி தொலைபேசி மூலம் உரையாடிவருகின்றார்.

போராடி தோற்றது இங்கிலாந்து: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!

டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நேற்றுநடைபெற்றது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 253 ரன்கள் குவித்தது.தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன்
அதிரடியில் மிரட்டினார்.

அவர் 42 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார். ஷிவம் துபே 43 ரன்னும், இஷான் கிஷன் 39 ரன்னும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் வில் ஜாக்ஸ், ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே பெத்தேல் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் தனி ஆளாகப் போராடினார். வில் ஜாக்ஸ் 35 ரன்னும், ஜாஸ் பட்லர் 25 ரன்னும் எடுத்தனர்.பெத்தேல் சதமடித்து 105 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இந்தியா இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.

இலங்கையின் நிலம், வான், கடற்பரப்பை எந்தவொரு நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் பயன்படுத்த இடமளியோம்!

எமது நிலம், எமது கடற்பரப்பு, எமது வான் பரப்பு என்பவற்றை மோதல்களின் போது எந்த வகையிலும் எந்தவொரு நாட்டிற்கும் சார்பாகவோ எந்தவொரு நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலோ பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பங்கேற்புடன் நேற்றிரவு நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியவை வருமாறு,

” தற்போதைய மத்திய கிழக்கு மோதலின் போதும் சர்வதேச ரீதியிலான எந்தவொரு மோதல்களின் போதும் நாம் நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டிலே இருந்தோம்.

எமது நிலம், எமது கடற்பரப்பு, எமது வான் பரப்பு என்பவற்றை மோதல்களின் போது எந்த வகையிலும் எந்தவொரு நாட்டிற்கும் சார்பாகவோ எந்தவொரு நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலோ பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.

மோதல் ஆரம்பமான சந்தர்ப்பம் முதல் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் எமது அறிவிப்புகள் என்பன எமது நிலைப்பாட்டிற்குட்பட்டதாகவே முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையிலே இரு ஈரான் நாட்டு கப்பல்கள் தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது.

அதிலும் நாம் நடுநிலையையே பின்பற்றியுள்ளோம். நாடென்ற வகையில் எந்த வகையிலும் நடுநிலையை பாதுகாக்கும் அதே சமயம் மனிதாபிமானத்திற்கு முதன்மையளிக்கிறோம். மனித உயிர்களை பாதுகாக்க ஒருபோதும் பின்நிற்க மாட்டோம்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி எமது நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடாக மார்ச் 9 முதல் 13 வரை எமது துறைமுகத்திற்கு வருகை தர அனுமதி வழங்குமாறு ஈரான் கோரியிருந்தது. ஒத்துழைப்பை மேம்படுத்துவற்கான விஜயமாக அது குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் நாம் ஆராய்ந்ததில் எமது நாட்டு கடற்பரப்பிற்கு அருகில் அதற்கு வெளியில் ஈரான் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன.ஒத்துழைப்பு விஜயங்கள் அவ்வாறு முன்னெடுக்கப்படுவதில்லை. அதற்குப் பல செயற்பாடுகள் இருக்கின்றன.

அது தொடர்பில் நாம் ஆராய்ந்து கொண்டிருந்தோம். இந்த நிலையில் நாம் தற்பொழுது எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள கப்பலில் இருந்த கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கடந்த மாதம் 27 ஆம் திகதி எமக்கு அறிவிக்கப்பட்டது.

அவரையும் அதிகாரி ஒருவரையும் கரைக்கு எடுத்து வர அனுமதி கோரியிருந்தனர். அதற்கமைய அவர்களை அழைத்து வந்து தேவையான சிகிச்சைகளை வழங்கினோம்.

இந்த நிலையில் தான் கடந்த 4 ஆம் திகதி அதிகாலை 5.08- 5.30 ற்கும் இடைப்பட்ட நேரத்தில் காலி துறைமுகத்தில் இருந்து 19 கடல் மைல் தொலைவில் கப்பலொன்றுக்கு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் அந்தப் பிரதேசத்தில் அனர்த்த சமிக்ஞை எழுப்பப்பட்டிருந்தது.

எமது கடற்படையும் விமானப் படையும் பாரிய முன்னெடுப்பில் ஈடுபட்டன. நாம் பக்கசார்பற்றவர்கள் என்பதைப் போன்றே மனிதாபிமானம் கொண்டவர்கள். பலர் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்திருந்தனர்.

எனவே எமது கடற்படையினரும் விமானப் படையினரும் துரிதமாக தலையிட்டு 32 பேரை மீட்டனர். 84 பேரின் சடலங்கள் மீட்க்கப்பட்டன. அந்த சடலங்களையும் காயமடைந்தவர்களையும் கரைக்கு எடுத்து வந்தோம். காயமடைந்தோர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த IRIS கப்பலில் இருந்து 4 அல்லது 5 ஆம் திகதியில் எமது துறைமுகத்தில் நங்கூரமிட வெளிவிவகார அமைச்சின் ஊடாக கோரிக்கை முன்வைத்திருந்தனர். நாம் அது குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

எமது வெளிவிவகார அமைச்சர் , ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் இது தொடர்பில் கலந்துரையாடினார். தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுடன் பாதுகாப்பு தரப்பினரும் கூட ஆராய்ந்தனர். கப்பலின் ஒரு இயந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டது.

எமது கடற்பரப்பில் பின்பற்றப்படவேண்டிய சர்வதே உடன்பாடுகள் உள்ளன. யுத்தத்துடன் தொடர்புள்ள ஒரு தரப்பிற்குரிய கடற்படை கப்பல் என்பதால் நடுநிலையான நாடு என்ற வகையில் எவ்வாறு அவ்வாறான கப்பல் தொடர்பில் செயற்படுவது என்பது குறித்தும்

ஐ.நா. சமுத்திர சட்டம், 1907 ஹேக் சட்டம் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் என்பவற்றின் அடிப்படையில் அவர்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடினோம்.

இது சாதாரண நிலைமை அல்ல. நடுநிலையான நாட்டில் ஒரு தரப்பிற்குரிய கப்பலொன்று எமது துறைமுகத்திற்கு பிரவேசிக்க அனுமதி கோரப்பட்டிருந்தது. அதனை சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே கையாள வேண்டும்.

இதனை அவசரப்பட்டு செய்ய முடியாது. சட்டங்கள் மற்றும் சர்வதேச பிணைப்புகள் தொடர்பில் இருதரப்பும் ஒரு புரிந்துணர்விற்கு மற்றும் உடன்பாட்டிற்கு வர வேண்டும்.

எமது கடற்படை அதிகாரிகளும் அந்த கப்பலின் மாலுமியுடனும் ஈரான் தூதரகத்துடனுடன் கலந்துரையாடினார்கள்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் கப்பலில் உள்ளவர்களையும் கப்பலையும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நாம் தயார் என அறிவித்தோம்.

கப்பலில் இருப்போரை மீட்கவும் கப்பலை நங்கூரமிடும் இடம் தொடர்பிலும் பொது உடன்பாட்டிற்கு வந்தோம்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலே இந்த கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. கொழும்பு துறைமுகம் எமது பிரதான வர்த்தக துறைமுகமாகும்.

இந்த கப்பலை இங்கு நிறுத்துவது எமது கடல் சார்ந்த வர்த்தகத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

சில கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணங்களை அதிகரிக்கும் நிலை ஏற்படலாம். அதனால் அந்த கப்பலை திருகோணமலைக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தோம்.

கப்பலில் இருப்போரை கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்காக எமது கடற்படையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

208 பேர் கரைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 53 அதிகாரிகளும் 84 கெடட் அதிகாரிகளும் 48 சிரேஸ்ட கடற்படையினரும் 23 கடற்படையினரும் உள்ளனர்.

அவர்களை எமது படகுகளில் ஏற்றி கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதன் பின்னர் ஈரான் கடற்படையினரும் எமது கடற்படையினரும் இணைத்து கப்பலை திருகோணமலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பார்கள்.

எனவே நாம் தெளிவான நிலைப்பாட்டையே பின்பற்றுகிறோம். எந்த நாட்டுக்கு பக்கசார்பாகவோ எந்த நாட்டுக்கு அடிபணிந்தோ நாம் செயற்பட மாட்டோம்.

எமது நாடு இறையான்மையுள்ள நாடு. அரசாங்கமென்ற வகையில் எமது கடற்பரப்பு தொடர்பிலும் எமது நாடு தொடர்பிலும் எமது மக்கள் தொடர்பிலும் எமக்குப் பொறுப்புள்ளது.

அவையும் எமக்கு முக்கியமானவை. அவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அன்றி எமது மக்கள் மற்றும் எமது தாய்நாடு தொடர்பில் முன்னுரிமை அளித்தே தீர்மானங்களை எடுக்கின்றோம்.

வெளியில் எவ்வாறான கோசம், அழுத்தம் இருந்தாலும் நாம் குழப்பமடைய மாட்டோம்.

எமது நடுநிலை போக்கை பாதுகாத்து எமது மனிதாபிமானத்தை எவ்வாறு வெளிப்படுத்துவது எமது நிலைப்பாடாக இருந்தது. எந்த நாட்டுப் பிரஜையும் இவ்வாறான மோதலினால் உயிரிழப்பதை நாம் ஏற்கவில்லை.

சகல பிரஜைகளினதும் உயிர்கள் தமது உயிர்களுக்கு சமமானதாக கருதி செயற்பட வேண்டும். அதற்கமையவே நாம் இந்த முடிவுகளை எடுத்து செயற்படுத்தினோம்.

அதன் படி அவர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டோம். உலகின் அமைதிக்காக தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும் என யுத்தத்துடன் தொடர்புள்ள அனைத்து தரப்பினரிடமும் கோருகிறோம். மக்கள் உயிரிழக்கின்றனர்.

பாரிய பொருளாதார நெருக்கடி சூறாவளியாக வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த யுத்த நிலைமையினால் எங்கும் சிக்கல் நிலை உருவாகும் அபாய நிலை உருவாகியுள்ளது. அமைதியையே முழு உலகமும் எதிர்பார்க்கிறது.

அமைதிக்காக அனைவரும் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும். நாடென்ற வகையில் அமைதிக்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்போம்.

இந்த விவகாரம் தொடர்பில் பொய்யான, பயமுறுத்தும் நோக்குடனான அதிகமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

நாட்டின் கௌரவத்தையும் மனித உயிர்களை பாதுகாக்கும் வகையிலும் நாடென்ற வகையில் சர்வதே உடன்பாடுகளுக்கு எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் தான் நாம் இந்த தலையீட்டை செய்தோம். இது நாடென்ற வகையில் மிகவும் தைரியமான மனிதாபிமான முன்னெடுப்பாகும்.

கிளங்கன் வைத்தியசாலை சம்பவம்: நீதி கோரி மஸ்கெலியாவில் போராட்டம்!

பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியொருவரின் சடலம் பாலியல் துஷ்பிரயோகத்தக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்தும், நீதி கோரியும் இன்றும் (05) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மஸ்கெலியா நகரில் திரண்ட இளைஞர், யுவதிகளே நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சமூக செயற்பாட்டாளர் ரொமேஷ் தர்மசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்துக்கு மஸ்கெலியா பகுதி இளைஞர், யுவதிகள் மற்றும் ஆட்டோ சாரதிகள் உள்ளிட்டோர் ஆதரவளித்து, பங்கேற்றனர்.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பிண அறையிலேயே இக்கொடூரம் சம்பவம் ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

டிக்கோயா பகுதியை சேர்ந்த 23 வயது யுவதியொருவரின் சடலம் கடந்த 25 ஆம் திகதி பிரேத பரிசோதனைக்காக மேற்படி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதன்போது சிற்றூழியர்கள் மூவரே, அநாகரீகமான முறையில் செயல்பட்டுள்ளனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இச்செயலை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் ஹட்டன், நோர்வூட் உட்டப பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

சடலத்துக்கு நடந்த கொடூரம்: நீதியான விசாரணை வேண்டும்!

“மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தில் டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் இளம் பெண்ணின் சடலம் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பத்திற்கு நீதியான விசாரணை வேண்டும்.” – என்று அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியம் தலைவர் எஸ். சந்துரு பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

” டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலம் காமுகர்களின் பசிக்கு இரையாகியுள்ளதாக கூறப்படும் சம்பவம் மனிதநேயம் கொண்ட அனைவருக்கும் ஆழ்ந்த வேதனையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மரியாதைக்கும் சமூக நெறிகளுக்கும் முற்றிலும் முரணான இந்தக் கொடூரமான செயல் கடுமையாக கண்டிக்கப்படவேண்டியது.

இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு அவர்கள்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், அவர்கள் வகித்து வரும் பதவிகளில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதோடு, முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மனிதநேயத்தை மீறும் இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் சமூகத்திற்கே ஆபத்தானவர்கள்

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில் அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனவும் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியம் தலைவர் எஸ். சந்துரு பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

தொடரும் தாக்குதல்: ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்பதற்ற நிலை உக்கிரமடைந்துவருகின்றது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் என்பன இணைந்து ஈரான்மீது ஆறாவது நாளாக இன்று தாக்குதல் நடத்திவருகின்றன.

ஈரானைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் ஏவுகணை உற்பத்தி மையங்கள், அணு சக்தி மையங்களை குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

மேற்படி தாக்குதலில் ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்து லெபனான்மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது.

அதேவேளை, ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் தாக்குதலில் பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரசு எமிரேட் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன.

ஈரான் தாக்குதலில் 6 அமெரிக்க படையினர் பலியாகியுள்ளனர்.
இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

 

ஒரே நாளில் பல சாதனைகள் படைத்த பின் ஆலன்!

ஒரே நாளில் பல சாதனைகள் படைத்த பின் ஆலன்!

T20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் உள்பட ஒரே நாளில் பல சாதனைகளை நியூசிலாந்தின் Finn Allen
படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் புதன்கிழமை இரவு விளையாடிய நியூசிலாந்து அணி, வெறும் 12.5 ஓவர்களில் 170 ரன்கள் என்ற இலக்கை விரட்டி அதிரடி வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின்Finn Allen 33 பந்துகளில் சதம் விளாசி, தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.

இந்த ஆட்டத்தில் Finn Allen 33 பந்துகளில் சதம் விளாசியதே, T20 உலகக் கோப்பை வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிவேக சதமாகும். இதற்கு முன் 2016-இல் கிறிஸ் கெயில் இங்கிலாந்துக்கு எதிராக 47 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது.

மேலும், T20 உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் Finn Allen பெற்றுள்ளார்.

இதுமட்டுமின்றி, 10 பவுண்டரிகள், 8 சிக்ஸா்கள் அடித்த Finn Allen , உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

நடப்பு T20 உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள ஆலன், 289 ரன்கள் அடித்துள்ளார். அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ஈரான் கப்பல்மீது தாக்குதல்: 87 சடலங்கள் மீட்பு!

இந்து சமுத்திரத்தின் அமைதிதான் இலங்கையின் எதிர்பார்ப்பாகும். அதற்கான உரிய தலையீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.

ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பினார்.

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லையில் ஈரான் போர்க்கப்பலொன்று தாக்குதலுக்கு இலக்கான விவகாரம் தொடர்பிலேயே அவர் வினா எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

“ ஈரான் கப்பலில் இருந்து 32 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

87 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட கொள்கலன் வசதி இல்லை. எனவே, தனியார் துறையிடமிருந்து இரு கொள்கலன்கள் பெறப்பட்டுள்ளன.

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு இணைந்து இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்கின்றன.

இந்து சமுத்திரத்தின் அமைதிதான் எமது எதிர்பார்ப்பாகும். அதற்காக அனைத்து தலையீடுகளும் மேற்கொள்ளப்படும்.
சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் நாம் செயல்பட்டுள்ளோம்.

இந்த விவகாரம் தொடர்பில் அரசியல் நோக்கி கருத்துகளை வெளியிடமால், எதிரணிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.” என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறினார்.

ஈரானின் நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்கள் அழிப்பு: அமெரிக்கா

ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் ‘எபிக் ஃபியூரி’ ஆபரேஷனில் ஈரான் கடற்படையில் இருந்த ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்களை அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் 28ஆம் திகதி ஈரான்மீது போர் தொடுத்தன. பதில் தாக்குதலில் இறங்கிய ஈரான், அமெரிக்க ராணுவ முகாம்கள் இருக்கும் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதால் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘எபிக் ஃபியூரி’ ஆபரேஷன் நடத்தும் அமெரிக்க ராணுவ கமாண்டர் அட்மிரல் பிராட் கூப்பர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆபரேஷன் எபிக் ஃபியூரியின் முதல் 100 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஈரான் மீது 24 மணி நேரமும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதுவரை சுமார் 2,000 இலக்குகளை தாக்கியுள்ளோம். ஈரானின் வான் பாதுகாப்பு மோசமான அளவில் பாதிப்படைந்துள்ளது. ஈரானின் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழித்துள்ளோம்.

ஈரான் கடற்படையை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டோம். ஈரான் கடற்படையில் ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க்கப்பல்கள் இருந்தன. அனைத்தையும் மூழ்கடித்துவிட்டோம். சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு தடையாக இருந்த ஈரானின் அனைத்து இடங்கள் மீதும் பி-2 குண்டு வீச்சு விமானங்கள், எப்-35 போர் விமானங்கள், டொமஹாக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பிராட் கூப்பர் கூறினார்.

ஈரான் கடற்படையில் ஐஆர்ஐஎஸ் மக்ரான் என்ற போர்க் கப்பல் இருந்தது. ஆயில் டேங்கர் கப்பலைப் போர்க் கப்பலாக மாற்றி ஈரான் பயன்படுத்தி வந்தது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் முகாமிட்டிருந்த இந்த கப்பலை அமெரிக்க கடற்படை தாக்கி செயல் இழக்கச் செய்தது. ஈரான் கடற்படையில் பகேரி என்ற போர்க் கப்பல் கடந்தாண்டு சேர்க்கப்பட்டது. இதில் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இருந்தன. இதையும் அமெரிக்க கடற்படை தாக்கி மூழ்கடித்துவிட்டது.

 

 

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

ஈரான் வான்வெளியில் அமெரிக்க ஆதிக்கம்!

0
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின்...

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” நாளை ஆரம்பம்!

0
- நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம். இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும்...

முதல் வெற்றியை பதிவு செய்யுமா சி.எஸ்.கே?

0
மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் , லக்னோ ஆகிய அணிகள் மோத உள்ளன. இன்றிரவு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை...