மரக்கறி விலைப்பட்டியல் (05.03.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
மரக்கறி விலைப்பட்டியல் (05.03.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
உலகக்கிண்ண தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் India மற்றும் England அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
📍 மைதானம் & நேரம்
போட்டி Wankhede Stadium மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது.
இந்தியாவின் இலக்கு
நடப்பு சாம்பியனான இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற உறுதியுடன் களமிறங்குகிறது.
இதற்கு முன்பு இந்தியா
2007
2014
2024
ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
🏴 இங்கிலாந்தின் சவால்
மறுபுறம், இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டை பெறும் நோக்கில் இங்கிலாந்து அணியும் முழு வலிமையுடன் களமிறங்குகிறது.
🔥 இன்று இரவு கிரிக்கெட் ரசிகர்களுக்காக காத்திருக்கும் சூடான மோதல் — யார் இறுதிக்குள்?
நியூசிலாந்து அணி, தென்னாபிரிக்கா அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை வெற்றியுடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ஓட்டங்கள் எடுத்தது.
170 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய நியூஸிலாந்து அணி தொடக்கத்திலேயே அதிரடி காட்டியது.
தொடக்க வீரர்களான Finn Allen மற்றும் Tim Seifert இணைந்து முதல் விக்கெட்டுக்கு 117 ஓட்டங்கள் சேர்த்தனர்.
டிம் செய்ஃபெர்ட் – 33 பந்துகளில் 58 ஓட்டங்கள்
பின் ஆலன் – 33 பந்துகளில் சதம்!
இந்த தொடரிலும், T20 உலகக் கோப்பை வரலாற்றிலும் அதிக ஓட்டங்கள் (463) சேர்த்த ஜோடியாக ஆலன்–செய்ஃபெர்ட் சாதனை படைத்துள்ளனர். மேலும், இந்த தொடரில் இரண்டாவது முறையாக 100 ஓட்டங்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.
வரலாற்றுச் சதம்
பின் ஆலனின் 33 பந்துகளில் வந்த சதம், T20 உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் எடுக்கப்பட்ட சதமாகப் பதிவாகியுள்ளது.
நியூஸிலாந்து அணி வெறும் 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியின் இந்த அதிரடி தொடருமா?
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) பிற்பகல் இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்திற்குச் சென்று இலங்கைக்கான ஈரானிய தூதரைச் சந்தித்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்சமயம் நடந்து வரும் மோதல்களால் உயிரிழந்த ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமெனி மற்றும் ஈரானியர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்தார்.
நீண்டகால நண்பரான ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த விசேட அனுதாப குறிப்புப் பதிவேட்டில், ஈரானிய மக்கள் சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அனுதாபக் குறிப்பைப் பதிவிட்டார்.
இந்தப் பிரச்சினையை மோதல்கள் மூலம் தீர்ப்பது இன்னும் அதிகமான அப்பாவி உயிர்களை இழக்கச் செய்யும். ஆனபடியால், முடிந்தவரை சமாதானத்தை மையமாகக் கொண்டதொரு வேலைத்திட்டத்தை நோக்கி நகருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.
இலங்கை கடல் எல்லைக்கு அருகில் போர்க் கப்பலொன்றே அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
எனினும், குறித்த கப்பல்மீது நீர்மூழ்கி கப்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது என கடற்படை கூறியதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. விசாரணைகளின் பின்னரே அது பற்றி தெரியவரும் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே கடற்படை ஊடகப் பேச்சாளர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
“ அனர்த்தத்துக்கு உள்ளான கப்பலில் இருந்தவர்களின் உயிரைப் பாதுகாப்பதே எமது முதன்மை நோக்கமாக இருந்தது. அதனை நாம் செய்தோம்.
அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் இருந்து சில சடலங்களும் மீட்கப்பட்டன. கப்பலில் பயணித்தவர்களின் சடலமாக அவை இருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். எனினும், விசாரணைகளின் பின்னரே அது பற்றி உறுதியாக தெரியவரும்.
இலங்கையின் தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் உள்ள பகுதியிலேயே கப்பல் அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது.
அது இலங்கைக்குரிய எல்லை அல்ல என்றபோதிலும் அப்பகுதியில் ஏதேனும் அனர்த்தம் நடந்தால் மீட்பு பணியை முன்னெடுப்பதற்குரிய மனிதாபிமான கடப்பாடு இலங்கைக்கு உள்ளது. அதற்கமையவே நாம் செயல்பட்டோம்.
குறித்த கப்பல் எங்கிருந்து, எப்பகுதியை நோக்கிச் சென்றது, அதன் நோக்கம் என்ன என்பன பற்றிய தகவல்கள் விசாரணையின் பின்னரே தெரியவரும்.
அனர்த்தத்துக்கு உள்ளான கப்பல்மீது நீர்மூழ்கி கப்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக கடற்படை தெரிவித்தாக வெளியாகும் தகவலை நிராகரிக்கின்றோம்.
அனர்த்தம் எவ்வாறு நடந்தது என்பதை உரிய தொழில்நுட்ப ஆய்வின் பின்னரே கண்டறிய முடியும். உயிர்களை பாதுகாப்பதே எமது முதன்மை நோக்கமாக இருந்தது.
அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளில் மீட்பு மற்றும் தேடுதல் பணி தொடர்கின்றது.” எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார்.
“ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை படுகொலை செய்வது உறுதி” என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட நிலையில், அந்நாடு புதிய உச்ச தலைவரை தேர்வு செய்யவுள்ள சூழலில், இத்தகைய எச்சரிக்கையை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஹீப்ரூ மொழியில் பகிர்ந்த பதிவில், “ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை படுகொலை செய்வது உறுதி. அவரது பெயர் என்னவாக இருந்தாலும், அவர் எங்கு பதுங்கியிருந்தாலும் அவரைத் தேடி அழிப்போம்.
இதற்காக, நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து முழு பலத்துடன் செயல்படுவோம். தற்போதைய ஈரான் ஆட்சி தன்னை மீள்கட்டமைப்பதற்கான வாய்ப்புகளை நசுக்குவோம். ஈரானிய மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எரிந்துவிட்டு புதிய ஆட்சியை அமைக்கும் சூழலை உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இஸ்ரேலிய பிரதமருக்கும், இஸ்ரேலியப் படைகளுக்கும், எப்போதும் தயார் நிலையில் இருக்கும்படியும், போரில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளேன்” என்று காட்ஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
எதிர்காலத்தில் அதிகரிக்கக் கூடிய நிலமைகளை கணிப்பது சாத்தியமற்றது என்றாலும், அனைத்துத் துறைகளிலும் ஏற்படக் கூடிய சூழ்நிலைகளைத் தொடர்ந்து கண்காணித்து அந்த சவால்களை வெற்றிகொள்ள ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் கையிருப்புத் தேவைகளை நிர்வகித்தல், சுற்றுலா, ஏற்றுமதி, முதலீடு போன்ற துறைகளிலும், உணவுப் பாதுகாப்பு குறித்து ஏற்படக்கூடிய நிலைமைகள் மற்றும் இதன் மூலம் இந்நாட்டில் பணவீக்கத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பிலும் அதை நிர்வகிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன. இந்த சூழ்நிலையால் இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும், சாதாரண மக்களின் வாழ்க்கைக்கும் ஏற்படும் தாக்கத்தைக் குறைத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தற்போதைய எரிபொருள் கையிருப்பு போதுமானதாக இருந்தாலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை எதிர்கொள்ள தேவையான கையிருப்புகளைப் பேணுவது மற்றும் அதனை நிர்வகித்தல், உலக சந்தையில் ஏற்படவிருக்கும் எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இந்த நிலைமைகளை நிர்வகிப்பது
குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்தார்.
எரிவாயு கையிருப்புகளைப் பேணுவதற்கு போதுமான களஞ்சிய வசதிகள் இல்லாததால் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைத் தேடுவது குறித்தும், அதற்காக பின்பற்றக்கூடிய குறுகிய கால மூலோபாயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
சூயஸ் கால்வாய் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி போன்ற இடங்கள் மூடப்பட்டதால் கப்பல் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகள் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்காக, இலங்கையுடன் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றி வரும் கப்பல் நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரில், அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டில் தற்போது போதுமான உணவுக் கையிருப்பு உள்ளதாகவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
தற்போது பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தினார். இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஐரோப்பிய பிராந்தியத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மத்திய கிழக்கு வழியாக இந்நாட்டிற்கு வருகை தருவதால், இந்நாட்டின் சுற்றுலாத் துறையின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக விமானப் பயணத்தில் எடுக்கக்கூடிய மாற்று நடவடிக்கைகள் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியதுடன், அதற்காக தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் சேவைகள் அமைச்சின் அதிகாரிகள் விளக்கினர்.
முதலீட்டுத் துறையில் ஏற்படக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அதன்போது திட்டமிட்ட ரீதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் அவசியத்தை சுட்டிக்காட்டியதுடன், தரவு மையங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக சலுகைப் பொதியை (பெகேஜ்) தயாரிக்குமாறும், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரியவின் தலைமையில் இந்த விடயங்களை ஆராயவும் நிதி அமைச்சிற்கு அறிவுறுத்தினார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.ஜி. அபோன்சு, சுங்க பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் பராக்கிரம திசாநாயக்க ஆகியோருடன் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை முதலீட்டு சபை போன்ற துறைசார் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நுவரெலியா, ரம்பொடை, வெதமுல்ல தோட்டத்தில் தோட்டத் தொழிலாளியொருவர் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்
.
இன்று முற்பகல் 10.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
தேயிலை தோட்டத்தை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது , தேயிலைச் செடியின் அடிவாரத்தில் இருந்த விரியன் பாம்பே அவரை தீண்டியதாக தெரிய வருகிறது.
அவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
கௌசல்யா.
அரசியல், இராஜதந்திரத்தில் மட்டுமல்ல சமூகவலைத்தளங்களிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆதிக்கம் செலுத்துகின்றார்.
இந்தியாவின் பிரதமராக கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் பதவியேற்றார். மக்கள் ஆணையுடன் மூன்றாவது தடவையாக அப்பதவியில் நீடிக்கின்றார்.
இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு முதலே தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டா கிராமில் பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது. இதன் மூலம் உலக தலைவர்களில் பிரதமர் சாதனை படைத்தார்.
இந்நிலையில் யூடியூபில் அதிகம் பின் தொடர்வோரை கொண்ட தலைவர்கள் பட்டியலில், பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பெயரிலான யூடியூப் சேனல், 3 கோடி சந்தா தாரர்களுடன் முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகம் மீதும்-இஸ்ரேல் மீதும் டிரோன், ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் தொடுத்து வருகிறது.
சவுதி அரேபியா, குவைத்தில் அமெரிக்க தூதரகங்கள் மீது டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.இந்த நிலையில் துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் தூதரக கட்டிடத்தில் தீப்பிடித்து கரும்புகை எழும்பியது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறும்போது
“துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அனைத்து அமெரிக்க ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் ” என்றார்.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அமெரிக்க தூதரக வளாகத்திற்குள் உள்ள அமெரிக்காவின் உளவுத்துறை நிலையம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ தளமான அல் உதெய்த் விமானப்படை தளம் கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவின் தென்மேற்கே அமைந்து உள்ளது. இந்த விமானப்படை தளம் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
கத்தாரின் ராஸ் லபான், மசயீத்தில் உள்ள மின்சக்தி நிலையங்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டன. பக்ரைன் முழுவதும் இன்று அதிகாலை வான்வழித் தாக்குதல் அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன.
வளைகுடா நாடுகள் மீதான தனது தாக்குதலை ஈரான் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இன்று துபாய், அபுதாபி, கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டன. இதற்கிடையே சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படைகள் 9 டிரோன்களை இடைமறித்து அழித்துள்ளதாக தெரிவித்தது.
இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர் தாக்குதல் நடத்தியது. ஈரானில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலின் ஜெருசலேமில் விழுந்து வெடித்தன. டெல் அவிவ் நகரின் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன.