Home Blog Page 3539

“சுகாதார நடைமுறைகளை பின்பற்றாவிடின் புதிய கொத்தணி உருவாகும்”

நாளாந்தம் 100 ற்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்படுவதால் நாட்டில் கொரோனா தொற்றின் புதிய கொத்தணி உருவாகக்கூடுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர, மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் இன்னும் ஆபத்தில் உள்ளதாக கூறினார்.

ஆகவே முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டுதல்களை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை அவசரகால பயன்பாட்டுக்காக சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை அங்கீகரிக்க கணிசமான தரவுகளைப் பெற்றுள்ளதாக வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டார்.

இருப்பினும் நிபுணர் குழு ஒப்புதல் வழங்க இன்னும் தரவுகள் அவசியமென சுட்டிக்காட்டிய அவர், விரைவில் இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசியைப் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அரசியல் களத்தில் மீண்டும் அதிரடி காட்டுவாரா மங்கள?

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சம்பந்தமாக இன்றளவிலும் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

ஜெனிவாவில் 2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நல்லாட்சி அரசு இணை அனுசரணை வழங்கியமை பாரிய காட்டிக்கொடுப்பாகும் என தற்போதைய அரசும், தேசிய வாத அமைப்புகளும் குற்றஞ்சாட்டுவதுடன், அப்போது வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட மங்கள சமரவீரமீதும் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் இவற்றுக்கு பதிலடி கொடுப்பதற்கும், உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை விபரிக்கவும் மங்கள சமரவீர கடந்த புதன்கிழமை விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினார்.

இணை அனுசரணை வழங்கியதாலேயே இலங்கைமீதான சர்வதேச விசாரணை தடுக்கப்பட்டது எனவும், குறித்த பிரேரணையில் இருந்த உள்ளடக்கங்களை மைத்திரிபால சிறிசேன அறிந்தே வைத்திருந்தார் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார். அத்துடன், ஜெனிவாவில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் அரசுக்கு பல வழிகளிலும் நெருக்கடியாகவே அமையும் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார்.

ஆனால் மங்கள சமரவீரவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு என்னவென்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நேரடியாக உரிய பதிலை மங்கள வழங்கவில்லை. ஆனாலும் சந்திரிக்கா அம்மையாருடன் இணைந்து பாரியதொரு அரசியல் வேலைத்திட்டத்தை மங்கள சமரவீர முன்னெடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு அரசியலில் திடீர் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஒருகாலகட்டத்தில் பேர்போன – புகழ்பெற்ற மங்கள சமரவீர, சந்திரிக்கா அம்மையாருடன் இணைந்து முன்னெடுக்கவுள்ள புதிய பயணம் சிலரை கிளிகொல்ல வைத்துள்ளது எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

தினமும் ஸ்கிப்பிங் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்!

உடல் எடையைக் குறைக்க, உணவுக் கட்டுப்பாடுகள் மட்டும் போதாது. கூடவே, தினமும் 10 முதல் 15 நிமிடங்கள், எளிய பயிற்சிகள் சிலவற்றைத் தொடர்ந்து செய்துவந்தால், உடல் முழுவதும் ஒரே சீராக எடை குறையும்.

உடல் பருமன் முதல் மனஅழுத்தம் வரை மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு கயிறு தாண்டும் பயிற்சி.

ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு. ஸ்கிப்பிங் செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். மனக்கவலை, மன அழுத்தம் போன்றவை நீங்க உதவும்.

ஸ்கிப்பிங் பயிற்சி இதயத்துக்கும் நுரையீரலுக்கும் வலுவூட்டும். தினமும் ஸ்கிப்பிங் செய்வதால் உடல் மற்றும் தண்டுவடம் நேராகி உயரமான தோற்றம் கிடைக்கும்.

இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பு பலம் பெறும். கை மற்றும் கால்களின் செயல் வேகம் அதிகரிக்கும். இது ஒரு முழு உடலுக்கான பயிற்சி.

உடல்எடை குறைய

முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.

இதயம் வலுவடைய

உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.

மார்பகத்தின் தேவையற்ற கொழுப்புகளை நீக்க

உங்களுடைய மார்பகத்தின் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் மற்றுமொரு பயனுள்ள உடற்பயிற்சி இதுவாகும். இந்த பயிற்சி உங்களுடைய மார்பு மற்றும் பிற உடல் பகுதிகளிலிருந்து 100% கொழுப்பை கரைக்கும் பயிற்சி ஆகும். நீங்கள் இந்த பயிற்சியை தினமும் உங்களுக்கு உண்மையாக செய்து வந்தால் ஒரே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

மனகவலை நீங்க

உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற கோளாறுகள் நீங்குகின்றன.

உள் உறுப்புகள் சீராக செயல்பட

உடலின் உள் உறுப்புகளுக்கும், நரம்புகளுக்கும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன.உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.

ஸ்கிப்பிங் பயிற்சி யாரெல்லாம் செய்யக்கூடாதுன்னு தெரியுமா ?

ஸ்கிப்பிங் யார் செய்யக் கூடாது என்றால் அதிக உயரம் கொண்டவர்கள் ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.

இதய நோயாளிகள், கணுக்கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி, எலும்பு முறிவு உடையவர்கள் மற்றும் சுளுக்கு ஏற்பட்டவர்கள் அனைவரும் முடிந்த வரை ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்க்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் மானப்பெரும சத்தியப்பிரமாணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் மானப்பெரும கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்தார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போதே அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அஜித் மானப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 23 ஆம் திகதி முதல் 2ஆம் சுற்று தடுப்பூசி ஏற்றப்படும்!

ஏப்ரல் 23 ஆம் திகதி முதல் ஜுலை 6ஆம் ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் ஏற்றப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 27/2 கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 6 ஆம் திகதிவரை ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் 924,687 பேருக்கு முதல் தடுப்பூசியாக வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய விஞ்ஞான ரீதியான ஆய்வுகளின் பிரகாரம் முதல் தடுப்பூசி வழங்கப்பட்டு 12 வாரங்களின் பின்னர் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும் போது மிகவும் வீரியமான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கப்பெறுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முதல் சுற்றில் தடுப்பூசி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 23 ஆம் திகதிமுதல் ஜுலை மாதம் 6ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்படும்.  ஏப்ரல் 23 ஆம் திகதியின் பின்னர் கட்டங்கட்டமாகவே இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும். இரண்டாவது தடுப்பூசியை வழங்குவதற்காக 356,730 தடுப்பூசிகள் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவிடம் கையிருப்பில் உள்ளன.

924,687 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியை தற்போதைய சூழலில் வழங்க வேண்டியுள்ளது. இரண்டாவது தடுப்பூசியை வழங்க கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக 567,000 எக்ஸ்ட்ரா செனாகா தடுப்பூசிகளை தேவைப்படும். இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உரிய துறையினருடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

எதிர்வரும் வாரங்களில் குறித்த தடுப்பூசி தொகை கிடைக்கும். ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ரா செனாகா தடுப்பூசிகள் அனைத்தும் இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் மாத்திரமே பெற்றுக்கொள்ளப்படும். அந்நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தடுப்பூசிகளே முதல் சுற்றில் ஏற்றப்பட்டன.

அதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி கிடைத்தப் பின்னர் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவது குறித்து தேசிய ஒளடதங்கள் அதிகாரசபை தீர்மானம். தற்போது இந்த தடுப்பூசிகளை இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ” – என்றார்.

“மாநகர காவல் படை” அமைத்த யாழ். மேயர் மணிவண்ணன் கைது!

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சட்டத்தரணி வி.மணிவண்ணன் மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் ஆகியோர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் இருவரும் நேற்றிரவு 8 மணிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர்.

இருவரிடமும் இன்று அதிகாலை 2 மணிவரை வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் பின்னர் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இலங்கை பொலிஸுக்கு ஒத்ததாக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை அமைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடையை அணிந்திருந்தனர் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் நேற்று முன்தினமிரவு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு பல மணி நேரம் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படையின் கடமைகளை இடைநிறுத்துமாறு பொலிஸாரால் பணிக்கப்பட்டது.

காவல் படைக்கு வழங்கப்பட்ட சீருடைகளும் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டதுடன், கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.

மாநகர சபை ஆணையாளர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த காவல் படைக்கான சீருடை உள்ளிட்டவற்றை ஒழுங்கு செய்தமை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபனிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவ குணங்கள் நிறைந்த புளி! இப்படி சேர்த்து கொண்டால் நன்மைகள் ஏராளம்!

அறுசுவைகளில் ஒன்று புளிப்புச்சுவை. புளிப்புச் சுவையை மிகச்சரியான அளவில் நமக்கு கொடுக்கும் ஒரு பொருள் தான் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்துகிற புளி.

புளிய மரத்தின் இலை, பழம், பட்டை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது.

புளியில் கால்சியம், வைட்டமின் “பி’ நிறைந்துள்ளது. தவிர பாஸ்பரஸ், இரும்பு போன்றவைகளும் உண்டு. உணவில் மணம், சுவை ஊட்டவும் புளி பயன்படுகிறது.

புளிக்குள் ஒளித்திருக்கும் ஏராளமான மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • குமட்டல், வாந்தி ஏற்பட்டால் சிறிதளவு புளியை வாயில் போட்டு நீரை விழுங்கினால் வாந்தி நிற்கும்.
  • அடிபட்டு இரத்தக்கட்டு ஏற்பட்டால் புளியும், உப்பும் கலந்து அரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து தாங்கக்கூடிய சூட்டுடன் பற்றுப் போட்டால் இரத்தக்கட்டு கரைந்துவிடும்.
  • புளியுடன் சுண்ணாம்பு கலந்து குழப்பி சூட்டோடு தேள் கொட்டிய இடத்தில் போட, தேள் விஷம் இறங்கும்.
  • புளியங்கொட்டை பருப்பை இடித்து பொடியாக்கி, பசும்பாலில் அரைக்கரண்டி தூளைபோட்டு கற்கண்டு கலந்து குடித்து வர தாதுவிருத்தி உண்டாகும்.
  • பல் ஈறு வீக்கம், பல் வலி இவற்றிற்கு சிறிதளவு புளியும் அதே அளவு உப்பும் கலந்து வலியுள்ள இடத்தில் வைத்திருந்து 10 நிமிடம் கழித்து வாயில் வைத்திருந்த புளியை துப்பி வெந்நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி மூன்று வேளையும் செய்தால் பல் வலி குறையும். அந்த உமிழ் நீரை விழுங்கக்கூடாது.
  • புளியம் பூக்களை துவையலாக அரைத்து உண்டால் மயக்கம், தலைச்சுற்றல் தீரும்.
  • புளியை நீரில் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப்போட ரத்தக் கட்டுகள் கரையும்.
  • புளியமர இலைகளை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் மறையும்.
  • புளியம்பூவை நசுக்கி நீர்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, கண்களை சுற்றி பூசிவர கண் சிகப்பு, கண் வலி ஆகியவை நீங்கும்.
  • புளியங்கொட்டையின் தோல் ஒரு பங்கு, சீரகம் 3 பங்கு, பனங்கற்கண்டு 4 பங்கு ஆகியவற்றை எடுத்து பொடி செய்து, தினமும் 3 வேளை 2 கிராம் அளவு உட்கொண்டு வர நாட்பட்ட கழிச்சல் குணமாகும்.
  • புளியையும், சுண்ணாம்பையும் சேர்த்து அரைத்து தேள் கடி விஷத்திற்கு கடி வாயில் வைத்து கட்ட அது குணமாகும்.
  • புளியம் பட்டையின் சாம்பலை நீரில் கலக்கி, அது தெளிந்தவுடன், அந்த நீரைக்கொண்டு வாய் கொப்பளித்துவர தொண்டைப்புண் குணமாகும்.
  • புளியிலையை அவித்து, அதே சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு, வைத்து கட்டிவர சுளுக்கு குணமாகும்.
  • கல்லீரல் நோய்தொற்றுக்களை காக்கும் அரணாக புளி இருக்கின்றது.

இ.தொ.கா. நுவரெலிய தோட்ட தலைவர், தலைவிகளுடன் ஜீவன் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்றைய தினம் கொட்டகலை CLF வளாகத்தில் நுவரெலியா மாவட்ட தோட்ட தலைவர்கள், தலைவிகள் மற்றும் வாலிப காங்கிரஸின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன் போது கலந்துக்கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்று தந்தமையோடு அவர்களை பொருளாதார ரீதியிலே முன்கொணரவும் அவர்களின் தொழிலை கௌரவமிக்க தொழிலாக ஆக்குவதோடு அவர்களின் குழந்தைகளின் கல்வித்துறை வளர்ச்சிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் முன்னின்று செயற்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இச் சந்திப்பின் போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் இ.தொ.கவின் பிரதி தலைவர் அனுஷியா சிவராஜா மற்றும் தேசிய அமைப்பாளர் ராஜதுரை இ.தொ.காவின் உப தலைவர்களான சக்திவேல்,கணபதி கனகராஜ்,பிலிப்குமார் இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேச,நகர சபைகளின் தலைவர்கள் காரியாலய உத்தியோகஸ்தர்கள் மாவட்ட தலைவர் தலைவிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

 

பிறந்த குழந்தைக்கு தலையில் ஏன் உச்சி குழி இருக்கிறதுன்னு தெரியுமா?

பிறந்த குழந்தையின் தலையை தடவிப் பார்த்தால் தலை உச்சியில் குழி இருக்கும். இதனை ஆங்கிலத்தில் ‘Fontanelle’ என்று அழைக்கின்றனர்.

இயற்கையிலேயே மிகவும் சிக்கலான மற்றும் அதிசயமான ஒரு பாகம் எது என்றால் அது மனிதனின் மூளைதான். மூளை தான் மனிதகுக்கு ஒரு சக்தி வாய்ந்த ஒரு கணினி. இப்படிப்பட்ட பொக்கிசமான மூளையை பாதுகாக்கத் தான் பரிணாம வளர்ச்சி நமக்கு மிகவும் பாதுகாப்பான கடினமான மண்டை ஓட்டினை கொடுத்துள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்ன என்று பார்த்தால் மனிதனின் மூளை மூன்று வயதிற்குள் வளர்ந்து விடும். மூளை வளரும் காலகட்டத்தில் அபார வளர்ச்சிக்கு (Brain’s fast expansion) ஈடு கொடுத்து மண்டை ஓடும் பெரிதாக உருவாக வேண்டும். மிகவும் கடினம் இல்லையா. இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வு தான் தனிதனி ஓடு அமைப்பு.

ஐந்து தனிதனி ஓடுகள் நம் மூளைப் பகுதியில் அமைந்துள்ளது. அனைத்தும் மென்மையாக எளிதில் விரிவடையக் கூடிய வகையில் சவ்வினால் இணைக்கப்பட்டுள்ளது.

மூளையின் வேகமான வளர்ச்சிக்கு ஈடு தரும் விதத்தைத்தான் நாம் பொதுவாக உச்சிக் குழி என்கிறோம். இது உச்சந்தலையில் மட்டும் இருப்பதில்லை. ஓடுகள் சேரும் அனைத்து இடத்திலும் உள்ளது.

இந்த சவ்வு போன்ற அமைப்பு மண்டை ஓடினை விட கொஞ்சம் பலம் குறைந்ததாக உள்ளது. இந்த சவ்வு குழந்தைகளுக்கு தலைப் பகுதிகளில் அடி படாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது.

தாயின் கருவறையில் இருக்கும்போது குழந்தையின் மண்டையோட்டு எலும்புகள் முழு வளர்ச்சி அடையாது. பிரசவத்தில் குழந்தை எளிதாக வெளிவருவதற்கான இயற்கையின் ஏற்பாடுதான் இது.

முன், பின், நெற்றிப்பகுதி எலும்புகள் ஒன்றுசேரும் இடம் என்பதால் உச்சிக் குழி மென்மையாக இருக்கிறது.

பேதி, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது, உச்சிக்குழி நன்றாக அமுங்கியிருப்பதை காணலாம்.

பொதுவாக டயமன்ட் வடிவத்தில் இருக்கும் உச்சிக்குழியானது ஒரு வயது அல்லது ஒன்னரை வயதுக்குள் எலும்புகளால் மூடப்பட்டுவிடும்.

குழந்தையின் உச்சிக்குழி மென்மையாக இருந்தாலும், அந்த இடத்தில் தோல் நன்றாகவே மூடியிருக்கும் என்பதால் தாய்மார்கள் அச்சம் அடைய வேண்டாம். உச்சிக்குழியில் ஏதேனும் அசாதாரணமான மாற்றம் தென்பட்டால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.

அது தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளிவரும் போது தாய்க்கு இலகுவாக இருக்கவும், குழந்தையின் தலை விரைவாக தாயின் பிரசவத்தில் இலகுவாக, எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வெளிவரவும் குழந்தையின் மண்டை ஓடு முழுமையாக வளர்ச்சியடையாமல் இறைவன் படைத்துள்ளான். கொஞ்ச நாட்களில் அது முழுமையாக வளர்ச்சியடைந்து விடும்.

 

விகாரை உண்டியலை உடைத்து கொள்ளையிட்ட தம்பதியினருக்கு மறியல்!

எல்ல விகாரையின் உண்டியலை உடைத்து, பணத்தை திருடிச் சென்ற தம்பதிகளை எல்ல பொலிஸார் கைது செய்து, இன்று பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். நீதிபதி அவ்விருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

விகாரை உண்டியல் உடைக்கப்பட்டமை குறித்து, விகாரையின் தலைமைப் பிக்கு, எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இம் முறைப்பாட்டையடுத்து பொலிசார் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளின் பேரில், சந்தேகத்தின் பேரில் பொலிசார் தம்பதிகள் இருவரைக் கைது செய்தனர்.

அத்துடன் அவர்களிடமிருந்த பதின்மூன்றாயிரத்து இருபது ரூபா பணத்தையும் மீட்டனர்.
தம்பதிகள் இருவர் விசாரணைக்குற்படுத்தப்பட்ட வேளையில், விகாரையில் உண்டியல் உடைத்தமையையும், பொலிசாரினால் மீட்கப்பட்ட பணம் உண்டியலில் திருடிய பணம் என்பதையும், அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, அவ்விருவரும், பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததும், நீதிபதி கீர்த்தி கும்புறுஹேன தம்பதிகள் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

எம். செல்வராஜா, பதுளை.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!

0
மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,...

17 ஆண்டுகள் கடந்தும் ஆறா வடு: முள்ளிவாய்க்காலில் சுடரேற்றி அஞ்சலி!

0
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (மே 18), முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மக்கள் ஒன்றுகூடி, தங்களின் உயிரிழந்த உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 10:15 மணியளவில் தவத்திரு...