Home Blog Page 3538

இளவரசர் பிலிப் காலமானார்!

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் இன்று காலமானார். அவருக்கு வயது 99.

இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர் பிலிப். கடந்த சில மாதங்களாக இளவரசர் பிலிப் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.

தனது வின்ஸ்டர் கேசில் அரச மாளிகையில் இளவரசர் பிலிப்பின் உயிர் பிரிந்தது.

270,000 மெற்றிக் தொன் மரக்கறி, பழம் வீண்விரயம் – 20 பில்லியன் ரூபா நஷ்டம்!

2015 ஆம் ஆண்டு தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுக்கு அமைய மரக்கறி மற்றும் பழங்களின் அறுவடைகயில் 270,000 மெற்றிக் தொன் வீண்விரயமாவதுடன், இதனால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏறத்தாழ 20 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) தெரியவந்தது.

இந்த அறிக்கையின் அவதானிப்புக்கு அமைய இலங்கையில் மரக்கறி மற்றும் பழங்களின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்பு 30-40 வீதம் என்பதும் புலப்பட்டது.

இலங்கையில் வயது முதிர்ந்தவர்களில் 73 வீதமானவர்கள் போதியளவு மரக்கறி மற்றும் பழங்களை நுகர்வதில்லையென்றும், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகள் மத்தியிலான மந்தபோசனை மட்டம் 21 வீதமாகக் காணப்படுவதாகவும் இந்த அறிக்கையில் வெளிப்பட்டது.

ஒட்டுமொத்த விவசாயத் துறையையும் உள்ளடக்கும் வகையில் விவசாய கொள்கையொன்றுக்கான குறைபாடு குறித்தும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய விவசாயக் கொள்கை தொடர்பான இறுதி வரைபு 2019ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளபோதும் இது இன்னமும் வரைபாகவே காணப்படுகின்றமை தொடர்பிலும், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான சந்தையை உள்ளடக்கிய விவசாயக் கொள்கையொன்றுக்கான தேவை காணப்படுவது குறித்தும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் மரக்கறி மற்றும் பழங்களின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்பை குறைப்பது மற்றும் நியாயமான விலைக்கு அவற்றை விற்பனை செய்வதில் அரசாங்க நிறுவனங்களின் தலையீடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட செயலாற்று அறிக்கை அரசாங்கக் கணக்குகள் குழுவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்கண்ட விடயங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், நுகர்வோருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் பாரிய பிரச்சினையாகக் காணப்படும் இடைத்தரகர்களால் அதிக இலாபம் ஈட்டப்படுவதைத் தடுப்பதற்கும், மரக்கறி மற்றும் பழங்களில் அறுவடைக்குப் பின்னர் ஏற்படும் பாதிப்பைக் குறைத்து நியாயமான விலையைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் இக்குழுவின் உறுப்பினர்கள் கவனம் செலுத்தியிருந்தனர்.

வாளுடன் வலம் வரும் சூர்யா – வைரலானது புகைப்படம்

சூர்யா – பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சூர்யாவின் புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வேட்டி சட்டை அணிந்திருக்கும் சூர்யா, கையில் வாலுடன் கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.

அந்த மாஸான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் . தொடரில் இம்முறை வெற்றிநடை போடுமா சென்னை?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நாளை மும்பையில் நடக்கும் 2ஆவது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கில் டுபிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதிராய்டு, ருதுராஜ் கெய்க்வாட், டோனி ஆகியோர் உள்ளனர்.

ஆல்-ரவுண்டரில் ஜடேஜா, சாம் கர்ரன், கிருஷ்ணப்பா கவுதம், பந்துவீச்சில் தீபக் சாகர், ‌ஷர்துல் தாகூர், இம்ரான் தாகிர், கரண் சர்மா, நிகிடி ஆகியோர் உள்ளனர்.

அணிக்கு புதுவரவாக புஜாரா, ராபின் உத்தப்பா, கிருஷ்ணப்பா கவுதம், மொய்ன் அலி ஆகியோர் வந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியுடன் ஆட்டத்தை தொடங்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7-வது இடத்தை பிடித்து முதல் முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

அதற்கு ஏற்றாற்போல் சென்னை அணி வீரர்கள் விளையாடுவார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இளம் மற்றும் அனுபவ வீரர்கள் உள்ளனர்.

அந்த அணியில் ஷிகர் தவான், ரகானே, ஸ்டீபன் சுமித், பிரித்விஷா, அஸ்வின், ஸ்டோனிஸ், சாம் பில்லிங்ஸ், நார்ஜே, ரபடா, சுமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, கிறிஸ் வோக்ஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோள் பட்டையில் காயம் அடைந்ததால் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார். இதனால் புதிய கேப்டனாக இளம் வீரர் ரி‌ஷப்பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த அணியும் வெற்றியுடன் போட்டி தொடரை தொடங்கும் முனைப்பில் இருக்கிறது.

சென்னை அணியில் உள்ள அனுபவ வீரர்களுக்கும் டெல்லி அணியில் உள்ள இளம் வீரர்களுக்கும் போட்டியாக இது இருக்கும். இந்த ஆட்டம் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

கொரோனா தாண்டவம் – உலகில் மிகப்பெரிய இந்து கோவில் மூடப்பட்டது

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவிலும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்துவரும் நிலையில் அங்குள்ள உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான அங்கோர்வாட் ஆலயம் மூடப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்துக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டு பயணிகளும் ஏராளமானோர் வந்து வழிபாடுவார்கள். இது முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

கம்போடியாவில் இதுவரை 3 ஆயிரத்து 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 113 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தற்போது கம்போடியாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இதை தடுக்க இந்த நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக அங்கோர்வாட் ஆலயத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டினர் மட்டுமல்லாமல் வெளிநாட்டினருக்கும் இந்த தடை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 20 ஆம் திகதி வரை இந்த தடை அமுலில் இருக்கும் என்று கம்போடியாவின் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

A/L மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

2021 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2021 ஒக்டோபர் 03 ஆம் திகதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஜனவரி இறுதிவாரத்தில் சாதாரண தரப்பரீட்சையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதுளையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளின் அனுமதி பத்திரம் இடைநிறுத்தம்

மதுபோதையில் வாகனங்கள் செலுத்திய பதினொரு பேர், பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, நீதிபதி அவர்களுக்கு மொத்தமாக இரண்டு இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா அபராதம் விதித்ததோடு, அவர்களது சாரதி அனுமதிப்பத்திரங்களையும் மூன்று மாதங்களுக்கு இடை நிறுத்தம் செய்ய உத்தரவிட்டார்.

இது தொடர்பான வழக்கு 09-04-2021ல் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சமிந்த கருணாதாச முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பதுளை வாகன குற்றத்தடுப்புப் பொலிசார், பதுளையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வாகன பரிசோதனைகளில், 11 வாகனங்களின் சாரதிகள் மதுபோதையிலிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

நீதிபதி முன்னிலையில் அச் சாரதிகள் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டு, தமக்கு மன்னிப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.

நீதிபதி அவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபா என்றடிப்படையில், இரண்டு இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபாவை அபராதமாக விதித்ததுடன், அவர்களது சாரதி அனுமதிப்பத்திரங்களை மூன்று மாதங்களுக்கு இடை நிறுத்தம் செய்யவும் உத்தரவிட்டார்.

பதுளை, பசறை, ஹாலி-எலை பகுதிகளைச் சேர்ந்த வாகன சாரதிகளுக்கே, மேற்கண்ட தண்டனைகள் வழங்கப்பட்டதாகும்.

எம். செல்வராஜா, பதுளை

இந்த ஜூஸை தொடர்ந்து குடிங்க… இதய நோய் வராமல் தடுக்கும்!

அறுசுவைகளில் ஒன்று புளிப்புச்சுவை. இதை சரியான அளவில் நமக்கு கொடுக் கும் ஒரு பொருள் தான் நாம் அன்றாடம் பயன்படுத்துகிற புளி.

சுவைக்காக மட்டுமல்ல சத்துக்களும், மருத்துவ பயன்களும் இதில் அடங்கியுள்ளது.

தொண்டைப்புண்,தோல் பிரச்சினை, சொரி, சிறங்கு, வயிற்று புழுக்கள், மூட்டுகளில் வீக்கம் போன்ற பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.

அதிலும் புளி ஜூஸை தொடர்ந்து பருகுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

தற்போது அந்த ஜூஸை எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

 

  • புளிச் சாறு – அரை கப்
  • நாட்டு சர்க்கரை அல்லது தேன் – தேவையான அளவு
  • எலும்பிச்சை துண்டுகள் – 1
  • தண்ணீர் – விருப்பத்திற்கு ஏற்ப

 

செய்முறை

புளியங் பழத்தில் கொடைகளை நீங்கி விட்டு புளிச்சாற்றை பிழித்து அதை நாட்டு சர்க்கரை அல்லது தேனோடு கலந்து கொள்ள வேண்டும்.

தேவையான அளவு குளிர்ந்த நீரை அந்த கரைசலில் சேர்க்க வேண்டும்

எலுமிச்சை துண்டுகளை அதில் பிழிந்து விட்டு, ஐஸ் க்யூப்களை கலந்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது சத்தான புளி ஜூஸ் ரெடி.

பதுளையில் மற்றுமொரு விபத்து – பஸ் மோதியதில் பாதசாரி பலி!

பதுளையிலிருந்து மகியங்கனைக்கு சென்று கொண்டிருந்த இ.போ.ச. பஸ் பாதசாரியொருவரை மோதியதில், பாதசாரி அவ்விடத்திலேயே பலியானார்.

இச்சம்பவம், பதுளையை அண்மித்த கைலகொடை எரிபொருள் நிலையத்தின் அருகே நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

பண்டாரவளையைச் சேர்ந்த மொகிதீன் வாஹீட் காசிம் என்ற 67 வயது நிரம்பிய நபரே, பஸ் மோதியதில் மரணமானவராவார். இவர் பண்டாரவளையிலிருந்து முக்கிய அலுவல் காரணமாக கைலகொடைக்கு வந்து, பாதையைக் கடக்கும் போதே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து குறித்து, பதுளைப் பொலிசார் ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டதுடன், பஸ் சாரதியான டி.எம். ஜயசிங்க என்ற 44 வயது நிரம்பிய நபரை கைது செய்தனர். அந்நபர் 09-04-2021ல் முற்பகல் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, நீதிபதி சமிந்த கருணாதாச, அந்நபரை எதிர்வரும் 12ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

யாழ். மேயரை உடன் விடுவிக்குமாறு கூட்டமைப்பு வலியுறுத்து

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மேயர் சட்டத்தரணி மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றம் இன்று 10 மணிக்கு கூடியது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் சார்பில், அரசாங்கத்திடம் மேற்படி கோரிக்கையை – வலியுறுத்தலை விடுத்தார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன்.

இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன இதற்கு பதிலளித்தார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

லுணுகலை பெருந்தோட்டப் பகுதிகளில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்

0
லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன. மலையகப் பகுதிகளில் அரச சேவைகளை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு...

யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!

0
மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,...