Home Blog Page 3537

எதிர்வரும் 12 ஆம் திகதி விசேட பொது விடுமுறை அறிவிப்பு

எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு இந்த விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

21/4 தாக்குதல் – சூத்திரதாரிகளின் சொத்துகளும் முடக்கப்படும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு அதியுச்ச தண்டனையை வழங்குவது மாத்திரமின்றி தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவரினதும் சொத்துகளும் அரசுடமையாக்கப்படும். அவ்வாறு அரசுடமையாக்கப்படும் சொத்துகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக இழப்பீடுகளை வழங்குவது தொடர்பிலும் பரிசீலனை செய்யப்படுமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அத்துடன், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் விசாரணைஅறிக்கை, அரச புலனாய்வுத்துறையின் அறிக்கை, பொலிஸாரின் அறிக்கை, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை, வெளிநாட்டு புலனாய்வுத்துறையின் விசாரணை அறிக்கை மற்றும் ஏனைய அறிக்கைகளின் பிரகாரம்தான் நௌப்பர் மௌலவியே பிரதான சூத்திரதாரியென அறிவித்துள்ளேன். இவர் பிரதான சூத்திரதாரி இல்லையென கூறுபவர்கள் உரிய சாட்சியங்கள் இருந்தால் ஒப்படைக்கலாமெனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான இறுதிநாள் விவாதத்தில் பதில் உரையை வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்ட பின்னர் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் மிகவும் வினைத்திறன் மிக்க விதத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. பயங்கரவாதத் தடுப்பு பிரிவு, சிஐடி மற்றும் பொலிஸாரினால் இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடைய 108 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 75 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் கைதுசெய்யப்பட்டுள்ள 54 பேரில் 50 பேரை நாட்டுக்கு அழைத்துந்துள்ளோம் என்பதுடன், அவர்களிடம் மேலதிக விசாரணைகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ள 32 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. சட்ட மாஅதிபருக்கு இந்த ஆவணங்களுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் கிடைத்துள்ளதால் 32 பேருக்கும் எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய அவர் இரவு – பகலாக செயற்பட்டு வருகிறார். அதன் காரணமாக வழக்குத் தாக்கல் செய்ய தாமதம் ஏற்படுவதாக ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நீதியானதல்ல. தற்போது இந்த விடயம் சட்ட மாஅதிபர் கையில்தான் உள்ளது.

பிரதான சூத்திரதாரியை மறைக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுவதாக எதிர்க்கட்சியினர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக தேசியப் பாதுகாப்பை கணக்கில் எடுக்காது செயற்பட்டவர்கள் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்தியிருந்தால் தாக்குதல்களை இலகுவாக தடுத்திருக்கலாம்.

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சஹரானின் குழுவினருக்கோ அல்லது அவரது வலையமைப்புகோ எவ்வித நிதியும் அளிக்கப்படவில்லையென்பதை பொறுப்புடன் கூறுவதுடன் அது குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முழுயான நிதி உதவியை இப்ராஹித் சகோதரர்கள்தான் வழங்கியுள்ளனர். 2014ஆம் ஆண்டுமுதல் தாக்குதல்களுக்கான பின்புலத்தை உருவாக்க 500 இலட்சத்தை வழங்கியுள்ளனர்.

பங்காளிகளின் தனிவழி சந்திப்பால் கடும் சீற்றத்தில் மொட்டு கட்சி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக்கட்சிகள் மீண்டுமொருமுறை தனிச்சந்திப்பொன்றை நடத்தியுள்ளமை குறித்து அரசியல் களத்தில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலேயே நேற்று முன்தினம் இரவு இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி, தூய  ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 11 கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பில் பங்கேற்றனர் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான புதிய சட்டம், மே தினம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன என்று சுதந்திரக்கட்சியின் உப தலைவரான அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

அதேவேளை, அரசிலிருந்து விலகி தனிவழி செல்வதற்கான நகர்வா இதுவென எழுப்பட்ட கேள்விக்கு, இல்லை என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா பதிலளித்தார்.

மே தினம் தனித்தா அனுஷ்டிக்கப்படும் என்ற கேள்விக்கு, கூட்டாகவும், தனித்தும் அனுஷ்டிப்பதற்கான உரிமை உள்ளது. ” – என்றார்.

” 20 கிலோ கொழுந்து – தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடி அதிகரிப்பு” – தொழிலாளர்கள் கவலை

” பொருட்களின் விலைகள் கிடுகிடுவென அதிகரித்துள்ளன. வாழ்க்கைச்சுமையும் அதிகரித்துள்ளது. ஆயிரம் ரூபா சம்பளம் கிடைத்தாலும் சமாளிக்ககூடிய தொகையாக அது அமையவில்லை. தொழில் சுமைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.” – என்று தோட்டத் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஒரு சில தோட்டங்களில் ஒரு நாள் பெயருக்கு 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதுடன், பல வழிகளிலும் தொழில் சுமைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்களின் பிள்ளைகளை பாதுகாக்கும் சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கான ஊழியர்களை குறைத்தல் உட்பட பல அடாவடி செயல்களில் தோட்ட நிர்வாகம் ஈடுபட்டுவருவதாகவும் தொழிலாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

எனவே, தொழில் சுமைகள் எதுவும் அதிகரிக்கப்படாமல், முன்பிருந்த நடைமுறைகள் தொடரவேண்டும். அவ்வாறானதொரு நிலையில் ஆயிரம் ரூபா கிடைத்தால் அது ஆறுதாக இருக்கும். அதனைவிடுத்து தொழில் சுமைகளை அதிகரித்து, சலுகைகளை பறித்துவிட்டு சம்பள உயர்வை வழங்குவது ஏற்புடையதாக அமையாது.” – என்றார்.

” சம்பள உயர்வு விவகாரத்தில் கம்பனிகள் கொள்ளை” – உதயா

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கம்பனிகள் பகல் கொள்ளை அடித்து வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.

சம்பள உயர்வு என்ற போர்வையில் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காது கம்பனிகள் அவர்களை பழிவாங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொழிலாளர்களின் தொழில் உரிமை மற்றும் அடிப்படை உரிமையை மீறும் செயல் எனவும் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1000 ரூபா விவகாரத்தில் விமர்சனம் செய்வோர் செய்யட்டும் : பாரத் அருள்சாமி

மக்கள் நலனுக்காக எப்போதும் முன்னின்று செயற்படுவதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸே சிறந்த உதாரணம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப செயலாளரும் பிரஜா சக்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகமுமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் வெறும் பேசுபொருளாகவும் சாத்தியப்படுமா என்ற கேள்விக்கு மத்தியிலுமிருந்த பெருந்தோட்ட மக்களின் ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு, மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி எதிர்ப்பார்ப்புமாக இருந்தது இன்று பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளமாக பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று மட்டுமல்லாது 80 வருட சேவையில் மக்களின் நலனுக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் முன்னின்று செயற்படும் ஒரு ஸ்தாபனம் என்பதை இன்று நிரூபித்துள்ளது. அனைத்து மக்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் ஒரு ரூபாவைக்கூட சம்பள அதிகரிப்பாக வழங்க முடியாத வங்குரோத்து அரசியல் தலைவர்கள், இன்று நாங்கள் மக்களுக்கு பெற்றுக் கொடுத்த சம்பள அதிகரிப்பைக் கண்டு மௌனித்திருப்பது புதிதான விடயமல்ல. அவர்களால் விசமர்சிக்கவும் வசைப்பாடுவும் மாத்திரமே முடியுமே தவிர செயலளவில் எதனையும் செய்ய முடியாதது என்பதே சிறந்த சான்றாகும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த ஆயிரம் ரூபா விடயம் மாத்திரமல்லாது. இந்திய வம்சாவளி மலையக மக்களின் வாழ்வியலில் சுபீட்சத்தை ஏற்படுத்தும் தொலை நோக்கம் கொண்டு செயலை அமுல்படுத்தும் வகையிலேயே செயற்படும் என்பதை பெறுமதித்துடன் கூறிக் கொள்ள முடியும்.

மக்களின் தொழிற்சங்க உரிமைகள், அரசியல் உரிமைகள் என அனைத்தையும் பெற்று கொடுப்பதற்காக முன்னின்று செயற்படுவோடும். விமர்சனம் செய்வோர் செய்யட்டும். நாங்கள் விமர்சனங்களைக் கண்டு அஞ்சுவதில்லை. மக்களுக்கு என்ன அத்தியாவசி தேவைகள் இருக்கின்றதோ அதனை பெற்றுக் கொடுக்க எங்களுடைய அரசியல் பலத்தைக் கொண்டு, அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் முன்னின்று பெற்றுக் கொடுப்போம்.

ஆயிரம் அதிகரிப்பினால் சில சலுகைகள் இல்லாது போயுள்ளதாக பலர் கூறுகின்றனர். ஆனால், அவை அனைத்தும் கூட்டு ஒப்பந்தம் ஊடாகவே பெற்று கொடுக்கப்பட்டது. ஆகவே, அன்று கூட்டு ஒப்பந்தத்தை ஏளனம் செய்தவர்கள் இன்று அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது மகிழ்ச்சியக்கின்றனது. பலருக்கு பேச்சில் மட்டும் முடிந்ததை நாங்கள் செயல்வடிவில் செய்து காட்டியுள்ளோம். மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாது மக்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமை சார்ந்த சலுகைகளும் பெற்று கொடுக்கப்படும் என்றார்.

புதுவருடத்திற்கு பின் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேசுவோம் : ஜீவன் தொண்டமான்

எங்களுடைய வேண்டுகோளுக்கு அமையவும், மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் ஆசைப்பட்டதற்கு அமைய இன்று மக்கள் கைகளில் ஆயிரம் ரூபாய் முழுமையாக கிடைக்கின்றது என்றும், இந்த ஆயிரம் ரூபாய் சம்பளமானது கூட்டிக் கழித்த தொகையல்ல அடிப்படையான சம்பளமாகவே மக்கள் கைகளுக்கு செல்கின்றது என்றும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அட்டனில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரவத்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

ஆயிரம் ரூபாய் சம்பள தொகை மக்களுக்கு சென்றடைய இதை சாத்தியமாக்கியது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆகும்.

இந்த தருணத்தில் இவர்களுக்கும் இவர்கள் தலைமையிலான அரசாங்கத்திற்கும் நன்றிகளை தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் தொழில் அமைச்சர் நிமல்சிரிபாலடி சில்வா ஆகியோர் எம்முடன் இந்த ஆயிரம் ரூபாய் விடயத்தில் விடாப்பிடியாக இருந்ததால் இந்த தொகையை பெற்றுக்கொள்ள முடிந்தது.

இன்றைய கொரோனா காலத்தில் நாடு அசாதாரண சூழ்நிலையை எதிர்கொண்டுவரும் இக்காலப்பகுதியில் ஆயிரம் ரூபாவுக்கு முக்கியத்துவத்தை தந்து இதை பெற்றுக்கொடுத்ததாக புகழ்ந்தார்.

அதேநேரத்தில் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் விடயத்தில் அரசியலுக்கு அப்பால் ஏனைய துறைகளை சார்ந்தோரும்,உதாரணமாக யாழ் பல்கலைகழக மாணவர்களும்,இன்னும் பலரும் கூட ஆதரவை வழங்கினார்கள் இத்தருணத்தில் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பளம் முழுமையான அடிப்படை சம்பளமாகவே தொழிலாளருகளுக்கு கிடைக்கிறது.

காரணம் அடிப்படை சம்பளம்900+ பட்ஜட் தொகை100 ரூபாய் என இணைக்கப்பட்டு ஆயிரம் ரூபாய் முழுமை சம்பளத்தினை வழங்கினாலும் இந்த முழுமை சம்பளத்திற்கே ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன் வழங்கப்படுகின்ற ஆயிரம் ரூபாய் சம்பளத்தை அடிப்படையாக கொண்டே தொழிலாளர்களுக்கான பிரசவப்பணம் உள்ளிட்ட சலுகை தொகைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேநேரத்தில் ஆயிரம் ரூபாவுக்கு வெளியான வர்த்தமானிக்கு இடைக்கால தடை உத்தரவு கோறி கம்பணிகள் நீதிமன்றம் சென்றனர்.

ஆனால் நீதிமன்றம் இடைக்கால தடையை வழங்கவில்லை ஆகையால் வர்த்தமானி பிரகாரம் தொழிலாளர்களுக்கு கட்டாயம் ஆயிரத்தை கம்பணிகள் வழங்க நேரிட்டுள்ளது.

மேலும் ஆயிரத்தை வழங்கியேயாகவேண்டும் என்றபடியால் கம்பணிகள் தோட்ட நிர்வாகங்களுக்கு அறித்துள்ளது ஆயிரம் ரூபாவை சம்பளமாக வழங்குங்கள் அதேநேரத்தில் நாளாந்த கொழுந்து கொய்தல் அளவை அதிகரியுங்கள் என தெரிவித்துள்ளது.

குறிப்பாக பொகவந்தலாவை கொட்டியாக்கலை தோட்டப்பகுதியில் இதுவரை நாள் ஒன்றுக்கு 14-16 கிலோ கொய்து வந்த தேயிலை அளவை 20 கிலோவுக்கு அதிகமாக கொய்ய வேண்டும் என தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாக அறிந்தேன் என்றார்.

அதேநேரத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இந்த விடயம் தொடர்பில் கம்பணியாருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கம்பணி அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு சாதகமான பதில் வழங்கியுள்ளனர்.

அதனடிப்பகையில் புதுவருடத்திற்கு பின் வழமையான தொழில் நடவடிக்கைகளுக்கு மேலும் சாதகமான பதில் கிட்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் நாம் ஏற்கனவே சொன்னதுபோல ஒரு தோட்டத்தில் தொழிலாளர்கள் வழமையாக எவ்வாறு கொழுந்து கொய்கின்றனறே அந்த வழமையை மாற்றக் கூடாது எனவும் மேலதிகமாக கொழுந்து கொய்ய வேண்டுமேயானால் தோட்ட நிர்வாகமும் தொழிற்சங்க கமிட்டிகளும்,தொழில் செய்யும் மக்களும் அதை பேசி தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தொழிலாளர்களுக்கான மருத்துவம்,பிள்ளை பராமரிப்பு,பிரசவப்பணம் உள்ளிட்ட பொது சலுகைகள் வழமையாக கிடைக்கும் இதை தடுக்க முடியாது அதேநேரத்தில் கம்ளணிகள் கடந்த காலங்களில் இவ்விடயத்தில் காத்திரமாக செயற்படவில்லை . தொழிற்சங்கம் மக்களின் ஒத்துழைப்படன் நிர்வாகத்துடனும், கம்பனியுடனும் தலையிட்டு பெற்றுக்கொடுத்துள்ளது.

அத்துடன் இந்த சலுகைக்கும் சம்பள உயர்வுக்கும் எந்தவோர் தொடர்பும் இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஏழுவருடத்திற்கு முன் ஆரம்பமான விடயமே இந்த ஆயிரம் ரூபாய் இந்த சந்தர்ப்பத்தில் இன்றைய நிலையில் தொழிலாளர்களின் வாழ்வூதாரத்திற்கு இந்த தொகை சக்தியாக மாறியுள்ளது.

இருப்பினும் இத்தொகை இ.தொ.காவின் இலக்கல்ல மாறாக தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு இந்த ஆயிரம் ரூபாய் உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என விபரித்தார்.

நாட்சம்பள வழமையினால் மக்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது அத்துடன் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. ஆகையால் இந்த வழமையை சற்று மாற்றியாக வேண்டும் .

இது தொடர்பில் பல்வேறு பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது இருப்பினும் கருத்து வேறுபாடுகள் காரணமாக தீர்வு எட்ட முடியாமல் உள்ளது என்றார்.

அதேநேரத்தில் புதுவருடத்திற்கு பின் இது தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் அமர்ந்து பேசி இந்த வழமைக்கு மாற்று நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் தொழிலாளர்களின் பொருளாதாரத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பின்றி சிறந்த தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

அதே சந்தர்ப்பத்தில் தொழிலாளார்கள் நாளாந்தம் பறிக்கும் கொழுந்து அளவை இவ்வளவுதான் பறிக்க வேண்டும் என்ற ஒன்றை எவ்விடத்திலும் குறிப்பிடமாட்டோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதேநேரத்தில் முன்னேற்றக்கரமான வெற்றிகளுக்கு முன்வைக்கப்படும் விமர்சனங்களை மக்கள் மீது காட்டியிருந்தால் தொழிற்சங்க பிரச்சினை என்று ஒன்று வந்திருக்காது எனவும் சுட்டிக்காட்டினார்.

உங்க உதடு கருப்பா இருக்கா? இதனை போக்க இதோ சூப்பரான டிப்ஸ்

உதடுகளும் ஒருவரின் அழகை வெளிக்காட்டும். அதனால் தான் பெண்கள் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைப் போடுகிறார்கள்.

ஆனால் பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும்.

இப்படி உதடுகளின் அழகு பாழாவதற்கு அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்களின் தாக்கம், காப்ஃபைன், புகைப்பிடித்தல் போன்ற பல விஷயங்கள் காரணங்களாக உள்ளன.

இதனை தவிர்த்து உதடுகளின் அழகை இயற்கையாகவே அதிகரிக்கலாம். தற்போது உதடுகளில் உள்ள கருமையைப் போக்கி, உதடுகளை அழகாக வைத்துக் கொள்ள அற்புத வழிகள் என்ன என்பதை பார்ப்போம்.

  • வெள்ளை சர்க்கரையை லேசாக பொடித்துக் கொள்ளுங்கள். அதாவது சர்க்கரை துகள்களாக இருக்க வேண்டும். இதனுடன் காபி தூள் சேர்க்கவும். இதை உதட்டில் தடவி மசாஜ் செய்யுங்கள். குறைந்தது 5 நிமிடங்கள். பின்னர் கழுவி விட்டு தேங்காய் எண்ணெய் தடவலாம்.
  • இட்லி மாவு, தோசை மாவு தடவியும் ஸ்கரப் செய்யலாம். புளிச்ச கீரை சாறு, எலுமிச்சை சாறு, பொடித்த சர்க்கரை ஆகியவற்றை கலந்து இதைக் கொண்டும் ஸ்கரப் செய்யலாம்.
  • தேங்காய் எண்ணெய், ஷியா பட்டர், கொக்கோ பட்டர், கற்றாழை, அவகேடோ கலந்த லிப் பாமை தேர்ந்தெடுக்கலாம். வீட்டில் இருக்கும்போது, தேங்காய் எண்ணெய், நெய், லிப் பாம் பயன்படுத்தலாம். நிறமில்லாத லிப் பாம் பயன்படுத்துங்கள்.
  • நெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவை அனைத்தும் உதட்டுக்கு நல்லது. பகலில், இரவில் இதை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள்.
  • ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, உதட்டில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
  • இரவில் கற்றாழை ஜெல்லை உதட்டில் தடவலாம். அடுத்த நாள் கழுவி விடுங்கள். தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
  • வெள்ளரி சாறு, பீட்ரூட் சாறு, கேரட் சாறு, மாதுளை சாறு, கொத்தமல்லி கீரை சாறு ஆகியவற்றைத் தொடர்ந்து உதட்டில் தடவி வந்தாலும் விரைவில் பலன் கிடைக்கும்.

யாழ். மேயரிடம் 10 மணிநேரம் பலகோணங்களில் விசாரணை!

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்றிரவு அவர் முற்படுத்தப்பட்ட போது, பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் வரி வசூலிப்பாளர்களுக்கு சீருடை வழங்கியமையை அடுத்து சர்ச்சை எழுந்தது. தமிழீழ காவற்றுறையின் சீருடையை ஒத்த சீருடையை வழங்கியதாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோவினால் இன்று அதிகாலை 1.40 மணிக்கு கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டார்.

சுமார் 10 மணிநேர விசாரணையின் பின்னர் முதல்வர் வி. மணிவண்ணன் இன்றிரவு 8 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

“திருமதி உலக அழகி” கிரீடத்தை மீள கையளிக்க கரோலின் ஜுரி தீர்மானம்

திருமதி உலக அழகியாக தெரிவுசெய்யப்பட்ட கரோலின் ஜுரி, தனக்கு சூட்டப்பட்ட மகுடத்தை மீள கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் அவர் காணொளியொன்றையும் வெளியிட்டுள்ளார்.

திருமதி இலங்கை அழகி போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வாவுக்கு சூட்டப்பட்ட கிரீடத்தை, கரோலின் ஜுரி மேடையில் வைத்து கழற்றியமை கடும் கண்டனத்துக்கு உள்ளானது. அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையிலேயே அவர் பட்டத்தை மீள ஒப்படைக்கபோவதாக அறிவித்துள்ளார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வலியுறுத்து!

0
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார். பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஈரானின்...

லுணுகலை பெருந்தோட்டப் பகுதிகளில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்

0
லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன. மலையகப் பகுதிகளில் அரச சேவைகளை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு...

யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!

0
மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,...