Home Blog Page 3536

டெல்லி அணி வெற்றிநடை – முதல் போட்டியிலேயே சென்னை தோல்வி!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றிபெற்றது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று முன்தினம் ஆரம்பமானது. போட்டியின் 2-வது நாளான நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட், முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக டு பிளசிஸும் ருதுராஜ் கெய்க்வாட்டும் களம் இறங்கினர். சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளசிஸ் ரன் எதுவும் இன்றி எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த ஓவரில் ருதுராஜும் 5 ரன்களில் வெளியேறினார். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ரன்களுக்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.

3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மோயின் அலி- சுரேஷ் ரெய்னா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 24 பந்துகளில் 36 ரன்கள் அடித்த மோயின் அலி, அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அம்பத்தி ராயுடு (23 ரன்கள்) ஓரளவு தாக்குப்பிடித்தார். எனினும் மறுமுனையில் சுரேஷ் ரெய்னா அசத்தலாக ஆடினார். ஏதுவான பந்துகளை சிக்சருக்கு விளாசி அசத்தினார். சிறப்பாக ஆடிய சுரேஷ் ரெய்னா 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உள்பட 54 ரன்கள் எடுத்து ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டோனி ரன் எதுவும் இன்றி போல்டு ஆகி வெளியேறினார். கடைசி கட்ட ஓவர்களில் சாம் கரன் மற்றும் ஜடேஜா அதிரடி காட்டினர். குறிப்பாக சாம் கரன் டெல்லி அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். இதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சாம் கரன் 15 பந்துகளில் 34 ரன்கள் விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில், ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். அதிரடியில் கலக்கிய இந்த ஜோடியில் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதனைத்தொடர்ந்து இந்த ஜோடியில் பிரித்வி ஷா 72 (38) ரன்களும், ஷிகர் தவான் 85 (54) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஸ்டோய்னிஸ் 14 (9) ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் கேப்டன் ரிஷாப் பண்ட் 15 (12) ரன்களும், ஹெட்மயர் ரன் ஏதும் எடுக்காமலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.4 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், ப்ராவோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ஏழு பேர் பலி!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு குறைந்தபட்சம் 7 பேர் பலியாகி உள்ளனர். சிலர் காமயடைந்துள்ளனர்.

மத்திய இந்தோனேசியாவில் அமைந்த கிழக்கு ஜாவா மாகாணத்தின் கடற்கரையோர பகுதியருகே நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.0 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் மலாங் நகருக்கு தென்மேற்கே 45 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.

எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலச்சரிவு ஏற்படக்கூடிய பாறைகள் அமைந்த பகுதிகள் அருகே வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கத்திற்கு 7 பேர் உயிரிழந்து உள்ளனர் என தேசிய பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்ட செய்தியை அடிப்படையாக கொண்டு அன்டாரா செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.   நிலநடுக்கத்திற்கு 300க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன.

ஆனால், இந்நிலநடுக்கம் ரிக்டரில் 6.7 ஆக பதிவாகி உள்ளது என இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்தோனேசியாவில் கடந்த 2018ம் ஆண்டு 7.5 என்ற அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 4,300 பேர் உயிரிழந்தனர்.

ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை

ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை  (12) நடைபெறவுள்ளது.

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை ம் திங்கட்கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

புலிவாலை பிடித்த கதையாகிவிட்டதா 1000 ரூபா?

சம்பள நிர்ணய சபையின் ஆயிரம் ரூபா சம்பளம் என்ற முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் கம்பனி தரப்பு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனால் சம்பள நிர்ணய சபையின் முடிவு நடைமுறைக்கு வருகிறது. மார்ச் 5ஆம் திகதியிலிருந்து தோட்டத் தொழிலாளர்கள் தினசரி வேதனமாக 1000 ரூபாவைப் பெற அருகதை உடையவர்கள் ஆகிறார்கள்.

கம்பனி தரப்பு அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாவை வழங்கவேண்டும். வாழ்கைச் செலவுப்படியாக 100 ரூபாவை அரசாங்கம் திறைசேரியிலிருந்து வழங்கும். இது எந்த அடிப்படையில் வழங்கப்பட போகிறது என்பதை பற்றி அறிவிக்கப்படாவிட்டாலும் காரியம் என்னவோ சித்தி.

இதன் மூலம் அரசாங்க தரப்புக்கு ஒரு தலைவலி தீர்கின்றது. ஜனாதிபதியும் பிரதமரும் தேர்தல்கால வாக்குறுதியொன்றை நிறைவேற்றியுள்ளார்கள். பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன கூற்றில் சொல்வது என்றால் இது அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றி. அரசே போராட வேண்டிய அளவுக்கு பலம் பொருந்தியதாக தோட்ட முதலாளிமார் சம்மேளனம் காணப்படுகின்றது.

இ.தொ.கா.வைப் பொறுத்தவரை இது ஆறுவருட போராட்டத்தின் அமோக அறுவடை. இ.தொ.கா.வால் மட்டுமே இதனைச் சாதிக்க முடிந்தது என்று அது கொக்கரிக்கலாம். அதற்கான களநிலவரம் சாதகமாகவே உள்ளது. விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் பிரதான துரும்புச் சீட்டாக 1000 ரூபா பெற்றுத் தந்ததைப் பாவிக்க இ.தொ.காவுக்கு நிறையவே வாய்ப்பு. இதனால் வீடமைப்புத் திட்டம் போன்று பாதியில் கைவிடப்பட்டுள்ள பல அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி மக்களின் அங்கலாய்ப்புகள் ஆறப்போடப் படலாம்.

மேலோட்டமாக பார்த்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரதான பிரச்சினையாக பேசும் பொருளாகிய 1000 ரூபாய் தினச்சம்பளம் சாதிக்கப்பட்டாயிற்று. சரி தான். ஆனால் உள்ளோட்டமாக ஆராய்ந்தால் சில சங்கடங்களும் சண்டித் தனம் காட்டப் போவதைப் புரிந்து கொள்ளலாம்.

எவ்வித மேலதிக கொடுப்பனவுகளும் உள்ளடக்கப்படாமலே 1000 ரூபாய் கிடைக்கின்றது. அதனால் இதர சிறப்புக் கொடுப்பனவுகள், மாதம் இத்தனை நாட்கள் குறைந்தபட்சம் வேலை வழங்கப்பட வேண்டும் என்னும் புரிந்துணர்வு ஏற்பாடு, தொழிலாளர்களின் நலன் சார்ந்த நடவடிக்கைகள் அனைத்துமே கம்பனி தரப்புகளின் கரங்களுக்குள் தாரைவார்க்கப் பட்டிருக்குமோ என்னும் அச்சம் சிலருக்கு.

ஏனெனில் இவைகளே கூட்டு ஒப்பந்தத்தின் சக்திவாய்ந்த சரத்துக்கள். இப்போழுது கூட்டு ஒப்பந்தம் ஓரங்கட்டப்பட்டுள்ளது. அது மீளவும் களத்துக்கு வரவேண்டுமானால் சம்பள நிர்ணய சபையில் இருந்து பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் வெளியேற வேண்டும். அப்படி வெளியேறி மீண்டும் கூட்டு ஒப்பந்தப் பொறிமுறைக்குள் வந்தால் மட்டுமே தற்போது கேள்விக் குறியாகியிருக்கும் பல நன்மைகள் கிடைக்கும். இதனையே தோட்ட முதலாளிமார் சம்மேளன ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை அண்மையில் சூசகமாக சொல்லியிருந்தார்.

இதனாலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுள்ளார்கள் என்று ஒரு பிடி பிடிக்கின்றார் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம். அவர் சொல்கிறார், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு நடைமுறைக்கு வந்திருந்தாலும் மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகள் இல்லாமல் செய்யப்பட்டு தொழிலாளர்கள் எமாற்றப்பட்டுள்ளதை எதிர்த்து போராட்டம் நடாத்த போகிறோம். புத்தாண்டுக்குப்பின் இது ஆரம்மாகும் என்கிறார்.

இதிலிருப்பது அரசியலாகவும் இருக்கலாம். மன அழுத்தத்தின் ஆதங்கமாகவும் இருக்கலாம். ஆனால் உண்மை இருக்கின்றது என்பதை முன்னாள் ஊவா மாகாண கல்வியமைச்சரும் பெருந்தோட்ட அபிவிருத்திக்கான பிரதமரின் இணைப்பாளருமாகிய செந்தில் தொண்டமான் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை எடுத்துக் காட்டவே செய்கின்றது.

பதுளை மாவட்டத்தில் பல தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவை வழங்க கம்பனிகள் மறுக்கின்றன. இந்த அராஜக போக்கை கண்டிக்கின்றோம். அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்தில் மேலதிக கொடுப்பனவுகள் உள்ளடக்கப்படவில்லை. அடிப்படைச் சம்பளம்தான் 1000 ரூபாய். மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டால் மாத்திரமே எதிர்காலத்தில் தொழிலாளர் மேலதிக வேலைத் திட்டங்களை முன்னெடுப்பார்கள்.

அப்படி வழங்கப்படாவிடில் 30 நாட்கள் செய்யும் வேலையை இதுவரை 20 நாட்களில் செய்து வந்த நிலையை மாற்றி 30 நாட்கள் செய்து முடிக்கும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டிவரும். இதனால் கம்பனிகள் நாளாந்தம் 1000 ரூபா வீதம் 30 நாளைக்கு 30000 ரூபாவைச் சம்பளமாக வழங்க வேண்டிய நிலைமை ஏற்படும். இதுதான் செந்தில் தொண்டமானின் அறிவிப்பு. ஆக தொழிலாளர்கள் போராட்டம் 1000 ரூபா நாட் சம்பளத்தோடு அடங்கப் போவதில்லை. அதனைத் தக்க வைக்கவும் இதுவரை காலமும் பெற்றுவந்த மேலதிக கொடுப்பனவுகளைத் திரும்பவும் உறுதி செய்யவும் போராடியாக வேண்டியுள்ளது. இதனைத்தான் பழனி திகாம்பரமும் சொல்கிறார். செந்தில் தொண்டமானும் உறுதிப்படுத்துகிறார்.

முன்னையவர் வீதிப் போராட்டத்துக்கு விதி செய்யப்போகிறார். பின்னையவர் பீதியைக் கிளப்பி மெதுவாக வெலை செய்யம் திட்டத்துக்கு பச்சைக்கொடி காட்டுகின்றார். சம்பள நிர்ணய சபை அதன் கடமையை சரியாக செய்து முடித்துவிட்டது என்னவோ உண்மைதான். அரசாங்கமும் 1000 ரூபாய் நாட் சம்பளத்தை சட்டபூர்வமானதாக்கிவிட்டது. ஆனால் பிரச்சினை மட்டும் தீரவில்லை.

எனினும் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு கம்பனிகளுக்கு விருப்பமான விடயமல்ல. கடந்த ஆட்சிக்காலத்தில் 50 ரூபா அதிகரிப்பு தர மறுத்து அது ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. கடைசிவரை கம்பனி தரப்பை பணிய வைக்க முன்னைய ஆட்சியால் முடியாமல் போனது. அந்த வகையில் இந்த அரசாங்கம் கம்பனி தரப்பின் கடும் போக்கிற்கு தக்க பாடம் புகட்டியிருக்கின்றது.

இனி தோட்டத் தொழிலாளர்கள் விவகாரத்தில் ஏதாவது நடக்க வேண்டுமானால் கம்பனி தரப்பை இணக்கப்பாட்டுக்கு கொண்டுவர முடியுமே தவிர பணிய வைக்க வாய்ப்பே இல்லை. பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன பெருந்தோட்டங்களைச் சுவீகரிக்க எந்தவொரு திட்டமும் இல்லை என்று கூறியுள்ளார்.

இனி அரசாங்கம் ஓரங்கட்டி நின்று நடப்பதை வேடிக்கைப் பார்க்கவும் செய்யலாம். சம்பள நிர்ணய சபையால் வேறு எந்த மேலதிக கொடுப்பனவுகளுக்கான பணிப்புரையை கம்பனிகளுக்கு விடமுடியாது. இதற்கிடையே என்னதான் வீராப்புப் பேசினாலும் மலையக தொழிற்சங்கங்களின் பலவீனம் சந்திக்கு வந்து நெடுநாளாயிற்று.

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்றொரு பழமொழி இருக்கிறது. 1000 ரூபாய் சம்பளத்தை தருகிறோாம் என்று முதலாளிமார் சம்மேளனப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை மகிழ்ச்சியுடன் கூறியிருப்பார் என்று நம்ப முடியுமா?

கம்பனி தரப்பு இந்தச் சம்பள விவகாரத்தை தமக்கு எற்பட்ட சறுக்கலாகவே கருதும். தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்கும் பாமரத் தன்மையில் அது இயங்காது. இதற்காக இது சும்மாவும் இருக்காது. 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பின் பயனை முழுமையாக அநுபவிக்க முடியாதவாறு கம்பனிகள் கட்டாயம் காய் நகர்த்தவே செய்யும். அது முதலாளி வர்க்கத்துக்கே உரிய முதலீடு.

இதன் ஆரம்பக் கட்டம் இப்பொழுது அரங்கேற ஆரம்பித்திருக்கிறது. இதனை எதிர்கொள்ள வேண்டிய தார்மீக பொறுப்பு சகல மலையக தலைமைகளுக்கும் இருக்கிறது. 1000 ரூபாய் வாங்கிக் கொடுத்த இ.தொ.காவுக்கு மேலதிக கொடுப்பனவு 40 ரூபாவை வாங்கித் தர முடியாதா என்று கேட்கிறார் செந்தில் தொண்டமான். அப்பாவித் தொழிலாளர்களை வீதிக்கு இறக்காமல் போராட்டங்களில் ஈடுபடுத்தாமல் சாதிக்க முடியுமானால் வரவேற்கத்தான் வேண்டும். புலிவாலை பிடித்த கதையாகிவிட்டதா 1000 ரூபா சம்பள அதிகரிப்பு?

பன். பாலா …•

வடகொரியாவில் கடும் பஞ்சம்

வட கொரிய மக்கள் சிரமமான காலத்தைச் சமாளிக்கத் தயாராகுமாறு அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் வலியுறுத்தியுள்ளார்.

வட கொரியாவின் தற்போதைய பொருளியல் நெருக்கடி 1990 களில் நிலவிய கடுமையான பஞ்சத்தை விட மோசமாய் இருப்பதாகத் கிம் கூறினார்.

கொரோனா கிருமிப்பரவலை முறியடிப்பதற்காக வட கொரியா தனது எல்லைகளை மூடியது. அதனால் வர்த்தகம் முடங்கிப்போனது.

வட கொரியா மீதான அனைத்துலகத் தடைகளும் நிலைமையை மோசமாக்கியுள்ளன.

வட கொரியா கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டிருப்பதாக மனித உரிமைக்குழுக்கள் எச்சரித்துள்ளன.

‘ஜகமே தந்திரம்’ பட நாயகிக்கு கொரோனா

கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள்.

தற்போது பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர் விஷால் ஜோடியாக ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். தனுஷ் ஜோடியாக ஜெகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஐஸ்வர்யா லட்சுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே நடிகர்கள் அமீர்கான், அக்‌ஷய்குமார், மாதவன், நடிகைகள் நக்மா, நிவேதா தாமஸ், கவுரி கிஷான், பூமி பெட்னெகர், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நடிகர், நடிகைகள் அடுத்தடுத்து கொரோனாவில் சிக்குவது ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்துவிட்டார் எனக் கூறப்பட்ட நபருக்கு மீண்டும் உயிர் வந்தது – நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சம்பவம்

உயிரிழந்துவிட்டார் என வைத்தியர் ஒருவரால் கூறப்பட்ட நபரொருவருக்கு மீண்டும் உயிர்வந்த சம்பவமொன்று நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

நீர்க்கொழும்பு மெதபிட்டிபன பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையொருவர் சக்கரை நோயால் நேற்று அதிகாலை நீர்க்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.

இதன்போது வெளியார் சிகிச்சைப்பிரிவில் வைத்து அவரை பரிசோதித்த வைத்தியர், குறித்த நபர் உயிரிழந்துவிட்டார் என குறிப்பிட்டார் என நோயாளியின் உறவினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் உறவினர் ஒருவர் கூறியதாவது.

” சக்கரை அளவு நன்றாகவே குறைந்துவிட்டதால் சுய நினைவிழந்த நிலையிலேயே வீட்டிலிருந்து அவரை எடுத்துசென்றோம். ஓபிடியில் வைத்து வைத்தியர் ஒருவர் பரிசோதித்தார். நான் ரிக்கெட் எடுக்க சென்றேன். பொலிஸ் செல்லுமாறு கூறினர். அங்கு சென்றபோது உயிரிழந்துவிட்டார் என பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதனையடுத்து நோயாளியிடம் சென்றேன். அவரின் சடல் பொலித்தினால் மூடப்பட்டிருந்தது. அதனை அகற்றிவிட்டு நான் அழுகும்போது. அவரின் வாய் அசைந்தது. இது தொடர்பில் வைத்தியருக்கு அறிவித்தோம். அதே வைத்தியர் மீண்டும் வந்து பார்த்தார். தற்போது வைத்தியசாலை வார்ட்டில் சிகிச்சைபெற்று வருகின்றார்.” – என்றார்.

அதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

18 கிலோ கொழுந்துதான் பறிப்போம் – தொழிலாளர்கள் திட்டவட்டம்

பெருந்தோட்டங்களில் மேலதிகமாக கொய்யப்படும் தேயிலைத் தளிர்களுக்கு கூடுதல் கொடுப்பனவுகளை வழங்க முடியாதென தோட்ட முகாமைத்துவம் கூறியதால், தொழிலாளர்கள் இன்று  ஒரு தினம் அடையாள வேலை நிறுத்தம் செய்துவிட்டு, இனிமேல் கூடுதலாக தேயிலைத் தளிர்கள் பறிப்பதில்லையென்ற போராட்டத்தை தொடரவுள்ளனர்.

வெலிமடைப் பகுதியின் அலகொல்லை பெருந்தோட்டத்திலேயே மேற்படி போராட்டம் இடம் பெற்று வருகின்றது.

தினமொன்றிற்கு தோட்ட முகாமைத்துவத்தினால் தீர்மானிக்கப்பட்ட 18 கிலோ தேயிலைத் தளிர்களை மட்டுமே தொடர்ந்து கொய்வதற்கு, தொழிலாளர்கள் கட்சி, சங்க பேதங்களின்றி தீர்மானித்து, அப் போராட்டத்தை தொடர்வதற்கும் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே, தொழிலாளர்கள், தோட்ட முகாமைத்துவத்தினால் தீர்மானிக்கப்பட்ட தேயிலைத் தளிர் கிலோ கிராம் எடையை விட கூடுதலாக தேயிலைத் தளிர்களை கொய்த போதிலும், கூடுதலாக கொய்யும் தேயிலைத் தளிர்களுக்கு கூடுதல் கொடுப்பனவுகளை வழங்க முடியாதென்று, தோட்ட முகாமைத்துவம் உறுதியாக கூறினர். இதையடுத்து, தொழிலாளர்கள் கூடுதல் தேயிலைத் தளிர்களை கொய்வதில்லை. தினமொன்றிற்கு தீர்மானித்தபடியே, தேயிலைத் தளிர்களை கொய்யவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கேகாலை பிளான்டேசன் பொறுப்பிலேயே, வெலிமடை அலகொல்லை பெருந்தோட்டமும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

எம். செல்வராஜா, பதுளை

“புத்தாண்டு கொத்தணியை உருவாக்க வேண்டாம் – சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுவோம்”

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான – கட்டுப்படுத்துவதற்கான சுகாதார வழிகாட்டல்களை அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புத்தாண்டை முன்னிட்டு நகரப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது. பொதுபோக்குவரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளின்போது சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் பின்பற்றுவதாக தெரியவில்லை. எனவே, நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் புத்தாண்டின் பின்னர் சிகிச்சை நிலையத்தில் இருக்கவேண்டிய நிலைமையே உருவாகும்.

ஆகவே, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவேண்டும். சுகாதார வழிகாட்டல்களை உரிய வகையில் பின்பற்ற வேண்டும்.” – என்றார்.

தெமோதரையில் குளவிக்கொட்டு – எட்டு மாணவர்கள் பாதிப்பு

தெமோதரைப் பகுதியின் சவ்தம் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் எட்டுப் பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி, தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம், நேற்று மாலை சவ்தம் தமிழ் மகா வித்தியாலய முன்றலில் இடம்பெற்றுள்ளது.

நேற்று பாடசாலை விடுமுறை வழங்கும் தினமாகையினால், மாணவர்கள் வித்தியாலய முன்றலில் விளையாடிக் கொண்டிருந்தனர். இவ்வேளையில் வித்தியாலய கட்டிடத் தொகுதியில் இருந்து வந்த குளவிக்கூடு கலைந்து, மாணவர்களை கொற்றத் தொடங்கின.

ஆண்டு ஒன்றில் 2 மாணவர்கள், ஆண்டு இரண்டில் 2 மாணவர்கள், ஆண்டு ஏழில் நான்கு மாணவர்களாக 8 மாணவர்கள் குளவிக் கொற்றலுக்கிழக்காகியுள்ளனர்.

குளவிக் கொற்றுக்கு இலக்கான இம் மாணவர்கள் தெமோதரை பிரதேச அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வலியுறுத்து!

0
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார். பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஈரானின்...

லுணுகலை பெருந்தோட்டப் பகுதிகளில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்

0
லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன. மலையகப் பகுதிகளில் அரச சேவைகளை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு...

யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!

0
மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,...