Home Blog Page 3540

அரிக்கும் தோலுக்கு இதோ சில 6 அற்புதமான வீட்டு வைத்தியங்கள்!

தோல் அரிப்பு ஏற்பட்டவுடன், அதை வெறும் அரிப்புதானே என்று எடுத்துக்கொள்ளாமல், அதன் காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும்.

உடலின் சத்து குறைபாடு, கிருமிகள், சிறுநீரகத்தில் கழிவுகள் சரியாக வெளியேறாமல் உள்ளே படியும்போது, நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இவற்றில் எதுவாக இருந்தாலும் அரிப்பு உண்டாகும்.

இதனை தடுக்க ஒரு சில வீட்டு வைத்தியங்கள் என்ன என்று பார்ப்போம்.

  • தேங்காய் எண்ணையை கைகளில் தேய்த்துக் கொண்டு பாதிக்கப் பட்ட பகுதிகளில் பூசுவது தான். பரவலான் அரிப்பு உணர்வை உடல் முழுவது உணர்ந்தால், குறிப்பாக குளிர் காலங்களில், ஒரு குளியல் தொட்டியில் மிதமான நீரில் ஊறி, பின்னர் உங்களை தட்டி உலர்த்தி பின்னர் உடல் முழுவதும் தடவவும்.
  • உங்கள் தோல் மிகவும் உணர்ச்சியுள்ளதாக இருந்தால், மிகச் சிறந்த வழி பெட்ரோலியம் ஜெல்லி. அதில் எந்த தீங்கு விளைக்கும் ரசாயனங்களும் இல்லை, இயற்கையான குணத்திலேயே தோலை மென்மையாகும் செய்கை உள்ளது. அதனால், அது உங்கள் நமைச்சல் விடுவிப்பதுமட்டும் இல்லாமல்,தோல் எரிச்சலைக்குறைவாக ஆக்கவும் உறுதி அளிக்கிறது.
  • ஒரு எலுமிச்சையை இரண்டாக நறுக்கி அதைப் பிழிந்து சிறிது சாறை எடுத்து அரிக்கும் இடத்தில் தவி, அதை காற்றில் உலர விட்டால் நீங்கள் விரைவில் நிவாரணத்தைப் பார்க்கலாம்.
  • ஒரு பங்கு நீரை மூன்று பங்கு சமையல் சோடாவுடன் கலந்து பசை செய்து அதை அரிக்கும் பகுதியில் தடவவும். உடல் முழுவதும் அரிப்பு பரவியிருந்தால், ஒரு கப் சோடாவை ஒரு டப் மிதமான நீரில் அரை மணி நேரம் ஊறி, அதை காற்றில் உலர்த்தவும்.
  • சில துளசி இலைகளை எடுத்து கழுவி, அதை பாதிக்கப்பட்ட பகுதியில் தேய்க்கவும். அல்லது சில இலைகளை நீரில் மூடிய பாத்திரத்தில் கொதிக்க வைத்து தேநீர் தயாரித்து, பின் அதில் ஒரு ப்ருத்து பந்தையோ அல்லது துணியையோ அழுத்தி, அதை அரிப்புள்ள இடங்களில் தேய்க்கவும்.
  • ஒரு சிறிய பருத்தி பந்து அல்லது துணியை சிறிது ஆப்பிள் சாறு வினிகரில் தோய்த்து அதை அரிப்புள்ள பகுதியில் தட்டவும். அல்லது உடல் முழுவதும் ஒரு பொதுவான அரிப்பை உணர்ந்தால், ஒரு கப் ஆப்பிள் சாறு வினிகரை உங்கள் குளிக்கும் நீரில் சேருங்கள்.
  • கற்றாழை இலையை உடைத்து, அதை நீள்வாட்டில் கத்தியை உபயோகித்து வெட்டி ஒரு ஸ்பூனை உபயோகித்து உள்ளேஜெல்லிபோன்ற பொருளை வெளியே கரண்டி எடுக்கவும். இதில் சிறிதளவு ஜெல்லை அரிக்கும் பகுதிகளில் தடை அதை சில நிமிடங்கள் விட்டு விடவும்.

உலோகம் விற்பனை குற்றச்சாட்டு – சி.ஐ.டியில் ரிஷாட் முறைப்பாடு!

கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் (IDB), Colossus (Pvt) Ltd தனியார் நிறுவனத்திற்கு உலோகம் விற்பனை செய்ததாக தெரிவிக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டின் மீது, விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும், ஆகையால் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, அக்குற்றச்சாட்டுக்கள் குறித்தான உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறு ஆணைக்குழுவின் தலைவருக்கு, எழுத்துமூலமான கோரிக்கை கடிதம் ஒன்றினை இன்று (08) நேரில் சென்று சமர்ப்பித்தார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரிஷாட் எம்.பி கூறியதாவது,

“கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழிருந்த, கைத்தொழில் அதிகார சபை, வருடம் ஒன்றுக்கு சுமார் முன்னூறு நிறுவனங்களுக்கு தேவையான மூலப் பொருட்களை வழங்கி வருகின்றது. அந்தவகையில், ஈஸ்டர் தாக்குதல் குண்டுதாரி இன்ஷாப் அஹமட்டுக்கு சொந்தமான நிறுவனத்துக்கும் மூலப் பொருட்களை வழங்கியிருக்கின்றது.

இந்த விற்பனை, கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் உட்பட அதிகாரிகளின் மேற்பார்வையுடனேயே நடைபெறுவது வழமையானது. இவ்வாறான விடயங்களில், அமைச்சரான எனக்கு எந்தத் தொடர்புமில்லை.

அத்துடன், இதில் நான் தலையீடு செய்வதும் இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சில அரசியல்வாதிகள் என்னைக் குறிவைத்து கிளப்பிய புரளிகளில் இதுவும் ஒன்றாகும்” என அவர் தெரிவித்தார்.

உங்களுக்கு கழுத்து வலி ரொம்ப அதிகமாக இருக்கா? இதனை போக்க இந்த பயிற்சியை செய்து பாருங்க

இன்றைய காலத்தில் பலருக்கும் தொல்லை தரும் வலியாக கழுத்துவலி உள்ளது.

கழுத்துவலிக்கு முக்கியக் காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்து போவதுதான். அப்போது கழுத்தை அவற்றால் தாங்கிப்பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் கழுத்துவலி.

ஒருவருக்கு கழுத்து வலி வந்தால், அது மிகுந்த எரிச்சலை உண்டாக்குவதோடு, எந்த ஒரு வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாமல் செய்துவிடும். மேலும் கழுத்து வலியானது தலையை அசைக்க முடியாமல் செய்து, ஒருவருக்கு கவனச்சிதறலை அதிகம் உண்டாக்கும்.

இதனை தடுக்க ஒரு சில உடற்பயிற்சிகள் உள்ளன. அதில் ஒன்றான டேபிள்டாப் நிலை அல்லது மர்ஜரி ஆசனம் எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

  • முதலில் உடலை டேபிள்டாப் நிலை அல்லது மர்ஜரி ஆசன நிலைக்கு கொண்டு வரவும். கை விரல்களை தரையில் விரித்து, அதில் உள்ளங்கைகளை தரையில் வைத்து உடலை பேலன்ஸ் செய்யவும்.
  • முன்னங்ககைகளை லேசாக தரையில் பதிக்க வேண்டும். கை மற்றும் கால் விரல்களை தரையில் பதித்து உடலை அப்படியே மேல்நோக்கி உயர்த்த வேண்டும்.
  • முன்னங்கைகள், விரல்கள் மற்றும் பாதங்களை தரையில் நன்கு அழுத்தி,இடுப்புப்பகுதியை மேல்நோக்கி உயர்த்த வேண்டும்.
  • தண்டுவட பகுதியை நேராக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • இடுப்புப்பகுதிகளுக்கு இடையில், கால்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டைவிரல்கள் மேல்நோக்கி இருக்க வேண்டும்.
  • கால்களில் ஏற்படும் ஸ்ட்ரெச்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, கால்விரல்களை, தரையில் வைத்து நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  • கால்களை நேராக வைத்துக் கொண்டோ அல்லது முழங்கால்களை சற்றே வளைத்தோ உடலின் பின்பகுதியை, பிளாட் ஆக வைத்து்கொள்ள முயல வேண்டும்.
  • தலை மற்றும் கழுத்து பகுதிகள் சுதந்திரமாக அசையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முன்னந்தலை, தரையை தொடுமாறு இருக்க வேண்டும்.
  • இந்த நிலையில், சுவாசத்தை 2 முதல் 6 வினாடிகள் வரை பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • முழங்கால்களை மெதுவாக வளைத்து, இடுப்புப்பகுதியை பழைய நிலைக்கு மெதுவாக கொண்டு வந்து இந்த நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும்.
  • பலாசனா நிலைக்கு வந்து சுவாசத்தை வெளியே விட்டு, பின் அமைதி நிலைக்கு திரும்பவும்.
நன்மைகள்
  • நமது மார்பகம் மற்றும் பின்பகுதிகள் வலு அடைகின்றன.
  • முதுகு தண்டுவடம் வலிமை பெறுகிறது.
  • தொடை எலும்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது.
  • உடலின் மேற்புற பாகங்களுக்கு நல்ல வலு அளிக்கிறது.
  • நரம்பு மண்டல இயக்கத்தை அதிகரிக்கிறது.
முக்கிய குறிப்பு

கைகளில் நாட்பட்ட வலி இருப்பவர்கள், தோள் மற்றும் பின்பகுதியில் காயங்கள் கொண்டவர்கள் மற்றும் வீக்கம் கொண்டவர்கள், இந்த ஆசனத்தை செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

விரைவில் தொப்பையை குறைக்கும் கரித்தூள் ஜூஸ்! எப்படி செய்வது?

தொப்பை பிரச்சினை இன்றைய காலத்தில் பலரும் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதனை குறைக்க பலர் பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் இன்று தொப்பையை குறைக்க உதவும் சூப்பரான ஜூஸ் ஒன்றை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • செயலாக்கப்பட்ட கரித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • லெமன் ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
  • தேன் – 1 டீஸ்பூன்
  • வெதுவெதுப்பான நீர் – 1 டம்ளர்
செய்முறை

ஒரு கிளாஸ் டம்ளர் வெதுவெதுப்பான நீரில் செயலாக்கப்பட்ட கரித்தூள், தேன் மற்றும் லெமன் ஜூஸை தேவையான அளவு கலந்து கொள்ளவும்.

நன்றாக கலக்க வேண்டும். இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இந்த முறையை தினமும் செய்தால் கண்டிப்பாக உங்கள் தொப்பையை குறைத்து விடலாம்.

குழந்தைகளை பாதிக்கும் தசை புற்றுநோய் பற்றி தெரியுமா?

தசை புற்றுநோய் பொதுவாக குழந்தைகளை அதிகளவில் தாக்குகிறது.

இது குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று உலகெங்கும் உள்ள சுகாதார நிறுவனங்களும், மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த நோயைப் பற்றி அவ்வளவாக மக்கள் கேள்விபட்டிருக்க மாட்டார்கள்.

அந்த புற்றுநோயின் அறிகுறிகள், சிகிச்சைகள் போன்றவற்றை அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் அறிகுறிகளின் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெற முடியும்.

ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் இந்த நோயிலிருந்து நாம் குணமடையலாம். இந்த வகை புற்றுநோயை ராபடோமியோசர்கோமா புற்றுநோய் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ராபடோமியோசர்கோமா புற்றுநோய் :

இது ஒரு வீரியமிக்க புற்றுநோய் ஆகும். இந்த புற்றுநோயால் தசை செல்களில் கட்டிகள் உருவாகும். பின்னர் தசை செல்கள் படிப்படியாக வீங்கும்.

பொதுவாக 19 வயதிற்குட்பட்டவர்களை இந்த புற்றுநோய் தாக்கும்.

ரப்டோமியோசர்கோமா தசை திசுக்களில் உள்ள உயிரணுக்களில் உருவாகும்.

புற்றுநோய் உருவாகும் இடங்கள்

தலை மற்றும் கழுத்து பகுதி. குறிப்பாக தொண்டைக்குள் அல்லது கழுத்தின் முதுகெலும்புக்கு அருகில்.

சிறுநீர்ப் பை மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் உருவாகிறது.

கை மற்றும் கால்கள், மார்பு, அடிவயிறு பகுதியில் வேண்டுமானாலும் இந்த புற்றுநோய் கட்டிகள் உருவாகலாம்.

புற்றுநோயின் காரணங்கள்

இந்த புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

உயிரணுக்களின் டி. என். ஏ வில் ஏற்படும் சில மாற்றங்களினால் இந்த புற்றுநோய் கட்டிகள் உருவாகிறது.

புற்றுநோயின் அறிகுறிகள்
  • கடுமையான தலைவலி.
  • கண்களில் கொப்புளங்கள் உருவாகும் மற்றும் வீக்கம் ஏற்படும்.
  • மூக்கு, தொண்டை மற்றும் காதுகளில் இருந்து இரத்தம் வரும்.
  • சிறுநீர் மற்றும் மலத்தில் இரத்தம் வரும்.
  • பெண்ணுறுப்பு பகுதியில் அல்லது மலவாய் பகுதியிலும் இரத்த போக்கு உண்டாகும்.
புற்றுநோயின் வகைகள்

இந்த ராபடோமியோசர்கோமா மூன்று வகைப்படும்.

புருன், அல்வியோலர், அனாபிளாஸ்டிக் ஆகும்.

சிகிச்சை முறை

ராபடோமியோசர்கோமாவை குணப்படுத்த அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் நீண்ட நாளான கட்டிகளை கட்டுப்படுத்த முடியும்.

கட்டியின் அளவு மற்றும் இருப்பிடத்தை பொறுத்து அறுவை சிகிச்சை செய்யப்படும்.

கதிர்வீச்சு சிகிச்சைகள் புற்றுநோய் கட்டிகளின் வீரியத்தை குறைத்து சுருக்க கதிர்வீச்சு சிகச்சைகள் செய்யப்படும்.

ஹீமோதெரபி சிகிச்சைகள் இந்த தசை செல் புற்றுநோயை போக்க ஹீமோதெரபி சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

இதன் மூலம் கட்டிகளை 80 சதவீதம் வரை குறைக்க வாய்ப்பு உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை ஆரம்பம்!

உலகெங்கிலும் உள்ள பல கோடி கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெள்ளிக்கிழமைஆரம்பமாகவுள்ளது.

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 14ஆவது அத்தியாயத்திற்கான தயார் படுத்தல்கள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர், நாளை 9ஆம் திகதி முதல் மே 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தொடரின் முதல் லீக் போட்டியில், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதவுள்ளன.

சென்னை- சிதம்பரம் மைதானத்தில் நாளை இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியில் மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும், பெங்களூர் அணிக்கு விராட் கோஹ்லியும் தலைமை தாங்கவுள்ளனர்.

இரு அணிகளும் முன்னதாக 27 முறை மோதியுள்ளன. இதில் மும்பை அணி 17 போட்டிகளிலும் பெங்களூர் அணி 10 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

‘தாதா சாகேப்’ தலைவா..!

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்ட காலம் குறித்துப் பலருக்கும் கேள்வியிருக்கலாம். சிலருக்கு அதன் நோக்கம் குறித்தும் விமர்சனம் இருக்கலாம்.

ஆனால் ‘தாதாசாகேப் பால்கே விருதுக்குத் தகுதியானவரா ரஜினி?’ என்று கேட்டால் ‘நூறு சதவிகிதம்’ என்றுதான் சொல்லமுடியும். தனது வணிக வெற்றிகளின் மூலம் தமிழ் சினிமாவை உலகச்சந்தை அளவுக்கு உயர்த்தியவர் மட்டு மல்ல, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தான் ஒரு தேர்ந்த எதார்த்தமான நடிகர் என்பதையும் நிரூபித்தவர் ரஜினி.

‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் முதல் காட்சியில், ஒரு பெரிய வாயிற்கதவைத் திறந்துகொண்டு என்ட்ரி கொடுப்பார் ரஜினி.

அது, தமிழ் சினிமாவுக்கு அவர் திறந்துவிட்ட வியாபாரக் கதவு. கொரானாவால் ஓராண்டு தாமதமாக இந்த விருது ரஜினிக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

ரஜினியின் வசனங்களில் சொல்வதென்றால், லேட்டா னாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறது. சரியாகத் தமிழகத் தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்பட்டதுதான் ‘சும்மா அதிருதில்ல.’

தாதா சாகேப் பால்கே விருதை சத்யஜித் ரேவும் வாங்கியிருக்கிறார்.

பாலிவுட் மசாலாப் படங்களை இயக்கிய யாஷ் சோப்ராவும் வாங்கி யிருக்கிறார். சத்யஜித் ரேவின் அற்புதமான கதாநாயகன் சௌமித்ரா சட்டர்ஜியும் வாங்கியிருக்கிறார்.

கடைசிப் படம் வரை மரங்களைச் சுற்றிவந்து ஹீரோயினுடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த தேவ் ஆனந்தும் வாங்கியிருக்கிறார்.

இந்தி சினிமாவின் பயங்கர வில்லன் பிரானும் பெற்றிருக்கிறார். ‘இவரை விட்டுவிட்டு அவருக்கு ஏன் கொடுத்தார்கள்’ என்ற கேள்வி எல்லா விருதுகளையும் எல்லாத் தருணங்களிலும் சர்ச்சைகளாகச் சுற்றிக்கொண்டிருக்கும்.

ஆனால், ரஜினிக்குக் கிடைத்திருக்கும் தாதா சாகேப் பால்கே விருது, உலகத் தமிழர்கள் யாவரும் உற்சாகமாகக் கொண்டாட வேண்டிய ஒன்று.

இந்தி மற்றும் வங்காள சினிமாவைத் தாண்டி தென்னிந்தியாவுக்கு அரிதாகவே இந்த விருது வந்து சேர்ந்திருக்கிறது. ரஜினிக்கு முன்பு இந்த விருது வாங்கிய ஐம்பது பேரில் வெறும் பத்துப் பேர் மட்டுமே தென்னிந்தியர்கள் என்ற புள்ளிவிவரம் இதை உணர்த்தும்.

ரஜினி அறிமுகமானது, தமிழ் சினிமாவுக்கு நெருக்கடியான காலகட்டம். இன்று உதயநிதியை முன்னிறுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.

1975-ல் அணையா விளக்காகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் ஸ்டாலினின் அண்ணன் மு.க.முத்துவை எம்.ஜி.ஆருக்கு மாற்றாக உருவாக்க அதிரடியாகக் களமிறங்கினார் கருணாநிதி. ‘எங்களுக்கு ஒரிஜினல் எம்.ஜி.ஆர். போதும்’ என முடிவெடுத்தனர் மக்கள். மு.க.முத்து நடித்ததில் ‘பூக்காரி’ மட்டுமே 100 நாள் படம்.

எம்.ஜி.ஆரை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தமிழ் சினிமா தத்தளித்தது. மிகக் கடுமையான மின்வெட்டு தமிழகத்தில் நிலவியது. கர்நாடக அரசு சலுகைகள் வழங்கியதால் கோலிவுட் மைசூருக்கு இடம் மாறியது. 1975 ஜூலையில் அவசர நிலை வேறு. ரிலீஸாகும் ஒரு தமிழ்ப் படம் 50 நாள்கள் ஓடினாலே மிகப் பெரிய வெற்றி என்றானது. எம்.ஜி.ஆர் படங்கள் ரிலீஸாகவும் வழக்கம்போல் ஓடவும் ஆயிரம் தடைக்கற்கள். கட்சி மாறியதால் சிவாஜியின் படங்களுக்கும் பெரிய வசூல் இல்லை. ஜெய்சங்கரின் பட்ஜெட் படங்கள் மட்டுமே தமிழ் சினிமாவைப் பெருமளவு காப்பாற்றின.

1977, ஜூனில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்து தமிழ் சினிமாவுக்குப் புத்துயிர் கொடுத்தார். அவர் அரிதாரம் பூச முயன்றதும் பூஜையோடு நின்றது. தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆரின் இடத்தை யாரால் நிரப்ப முடியும்? கலைஞரின் ‘வண்டிக்காரன் மகன்’ படம் மூலம் ஜெய்சங்கரை எம்.ஜி.ஆருக்கு எதிராகக் களம் இறக்க ஏற்பாடுகள் நடந்தன.

அந்தச் சூழலில் ‘16 வயதினிலே’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ இரண்டு படங்களும் செப்டம்பரில் வெளியாகின. கோலிவுட்டில் இன்பப் பிரளயம் உருவானது. ‘16 வயதினிலே’ இரண்டாவது வார முழுப்பக்க விளம்பரத்தில் ‘இது எப்படி இருக்கு’ என்ற வாக்கியத்துடன் பரட்டை ரஜினி.

மூன்று நாளோ, நான்கு நாளோ, சுமார் மூவாயிரம் ரூபாய் ஊதியத்துக்கு உற்சாகமாக ரஜினி நடித்தார். தேசிய கீதம் போல் உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் உதடுகளில் அரியாசனம் அமர்த்தி உச்சரித்த வார்த்தைகளாயின ‘இது எப்படி இருக்கு!’

அதே மாத இறுதியில் ‘ஆடு புலி ஆட்டம்.’ மழலைகள் தொடங்கி அரும்பு மீசைகள் வரை அத்தனையும் ‘இதுதான் ரஜினி ஸ்டைல்’ என்று உரத்துக் கத்தின. அடுத்தது ‘காயத்ரி.’ டைட்டில் ஓடுகிறது. ஹீரோ மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் பெயரைக் காட்டிலும் வில்லன் ரஜினிக்குக் கூடுதல் வரவேற்பு. விசில் சத்தத்தில் அரங்கங்கள் அதிர்ந்தன.

அப்போது ரஜினியிடம் கைமாறியது தமிழ் சினிமா. இன்றளவும் அது மூச்சு விட ரஜினி பட ரிலீஸ்களே உதவுகின்றன. 70 வயதில் அவர் ஓய்ந்துவிடவில்லை.

அவரது எவர்கிரீன் ஹிட் படங்கள் போல சமீபகாலப் படங்கள் வசூலைக் குவிக்காமல்போயிருக்கலாம். ஆனாலும், அவர் படத்துக்கான எதிர்பார்ப்பு துளியும் குறையவில்லை.உடல்நலமில்லாமல் போய், மறுபிறவி எடுத்துவந்து அவர் நடித்த ‘கபாலி’ படத்துக்குக் கிடைத்த ஓப்பனிங், பல இளம் ஹீரோக்களைப் பொறாமைப்பட வைத்திருக்கும்.

இன்றைக்கும் கோடிகளைக் குவிக்கிற கோலிவுட்டின் ஆணிவேர் ரஜினி என்பதை அவரின் எதிரிகளும் மனமார ஒப்புக்கொள்வர்.

சினிமா என்பது பல ஆயிரம் பேருக்கு வாழ்வு தருகிற ஒரு பிசினஸ். தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடங்கி, சிறுநகர தியேட்டர்களில் முறுக்கு விற்பவர்கள் வரை சினிமாவை நம்பிப் பிழைக்கின்றனர்.

தியேட்டர்களுக்குக் கூட்டம் வந்தால்தான் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும். 46 ஆண்டுகளாக அப்படி தியேட்டர்களுக்கு வருமானம் ஈட்டித் தரும் கலைஞராக ரஜினி இருக்கிறார்.

ரஜினிக்கு ஒரு ஹீரோவுக்கான தோற்றம் கிடையாது; நிறம் கிடையாது. அவர் வசனம் பேசும் முறைகூட பல இயக்குநர்களுக்குத் திருப்தி அளித்ததில்லை. அவருக்கு நடனமும் இயல்பாக வராது.இப்படி ஒரு ஹீரோவுக்கான இலக்கணங்கள் எதுவுமே அவரிடம் இருந்ததில்லை.

ஆனால், தமிழ் சினிமா கண்ட முதல் ‘மேன்லி ஹீரோ’ அவர்தான்.

அவருக்கு முன்பு வந்த உச்ச நட்சத்திரங்கள் பலரும் பாய்ஸ் கம்பெனி நாடக ஸ்த்ரீ பார்ட் கலைஞர்களாக இருந்தவர்கள். அதனாலேயோ என்னவோ அம்மாபெரும் நடிகர்களின் தோற்றத்திலும் நடிப்பிலும் பெண்மையின் சாயல் மிக அதிகமாகவே மிளிர்ந்தது.

அரிதாரம் பூசிக்கொள்பவர்களுக்கு முகம் மிக முக்கியம். இது ‘தோற்றத்திற்காகக் கிடைத்த விருது’ என்றால், ஆமாம்; அதுவும் ஆயிரம் விழுக்காடு நிஜம். சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற முன்னாள் பேருந்து நடத்துநரின் தோற்றம் கே.பாலசந்தரைக் கவர்ந்தது. அதன் விளைவே இன்றைய தாதா சாகேப் பால்கே விருது.

உதிரி நடிகராக உதயமாகி அதுவரையில் தமிழ் சினிமா காணாத அதிசய வில்லனாக வெற்றி நடை போட்டவர். ‘அபூர்வ ராகங்கள்’ தொடங்கி ஜெட் வேகத்தில் வளர்ந்தார். மற்றவர்கள் எளிதாக நடிக்க முடியாத வேடங்கள் ஒவ்வொன்றும். ‘மூன்று முடிச்சு’ பிரசாத், ‘அவர்கள்’ ராமநாதன், ‘புவனா ஒரு கேள்விக்குறி’ சம்பத், ‘காயத்ரி’யை புளூ பிலிம் எடுக்கும் கணவன் ராஜரத்தினம், சைக்கிள் செயின் சுழற்றும் ‘தப்புத்தாளங்கள்’ தேவா என ரஜினி வாழ்ந்து காட்டியது எத்தனை எத்தனை.

‘‘பெண்ணை ஆராயாதே… அனுபவி’’ என்று கமலுக்கு அறிவுரை சொல்லும் ‘அவள் அப்படித்தான்’ ரஜினியை இன்றும் ரசிக்காதவர் யார்? ஸ்ரீதரின் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் கமலின் காதலி ஸ்ரீப்ரியா. ‘அவள் எனக்குத்தான்’ என்று ரஜினி வசனம் ஏதுமின்றி கமலிடம் சுட்டிக்காட்டும் காட்சியில் ஸ்ரீதரே அசந்துவிட்டார். ‘முள்ளும் மலரும்’ காளி வேடம் ரஜினியைத் தவிர வேறு யாரால் நெருங்க முடியும்? அதிகம் வசனம் பேசாமல், காளிக்கான தோற்றப் பொலிவோடும் விறைப்போடும் வெற்றி வலம் வந்தார் ரஜினி. முதன்முதலில் ரஜினிக்கு சிறந்த நடிகர் பரிசு கிடைத்தது. இன்னொரு ‘பாசமலர்’ என்று ‘முள்ளும் மலரும்’ படத்தைக் கொண்டாடியது தமிழகம். அத்திரைப்படம் மிகச்சிறப்பாக உருவாகவும் வெளிவரவும் முக்கியக் காரணம் ‘கலைஞானி’ கமல்.

தாதா சாகேப் பால்கே விருது கிடைத்ததும், கே.பாலசந்தருக்கும் கமலுக்கும் நன்றி சொன்னார் ரஜினி. ஏனோ எஸ்.பி.முத்துராமனையும் மகேந்திரனையும் இந்த மகிழ்ச்சியான நேரத்தில் மறந்துவிட்டார். ரஜினியின் நடிப்புச்சக்கரம் இன்றுவரை சுழல்வதற்கு அச்சாணி அல்லவா எஸ்.பி.முத்துராமன்! ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘நெற்றிக்கண்’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிப்பில் ரஜினியைச் சிகரமாக உயர்த்தியவர்.

அப்பா,அண்ணன் வேடங்களில் மற்றொரு சிவாஜியாக மனதை மயிலிறகால் வருடியவர் சூப்பர் ஸ்டார். ஆக்‌ஷன் ஹீரோவால் நேசமிக்க தந்தையாகவும் கண்களைக் குளமாக்க முடியும் என்பதை ‘தர்பார்’ வரை நிரூபித்தவர் ரஜினி.

எப்படிப்பட்ட வேடங்களையும் ரஜினியால் ஜொலிஜொலிக்க வைக்க முடியும் என்பதற்கு ‘மூன்று முகம்’ மிக முக்கிய சாட்சி. அதன் இயக்குநர் ஏ.ஜெகன்னாதன், அலெக்ஸ் பாண்டியனாக ரஜினியின் விஸ்வரூபத்தை உருவாக்கியவர்.

‘அந்தாகானுன்’ மூலம் ரஜினி இந்தியிலும் முத்திரை பதித்தார். அவர் மும்பையில் கால் ஊன்றி சாதிக்க உதவியது ‘ஜான் ஜானி ஜனார்த்தன்.’ மூன்று முகத்தின் இந்திப் பதிப்பு. வடக்கே போய் மூன்று பாத்திரங்களில் வாகை சூடிய முதல் நட்சத்திரம்!

கோட் என்கிற உடையை ‘பில்லா’வில் ரஜினி அணிந்து வருகிற அழகே தனி. ரஜினிக்குப் பொருந்துகிற மாதிரி கோட் வேறு எவரையும் வசீகரமாகக் காட்டுவதில்லை.

நம்மவர் கமலுக்கு பத்மஸ்ரீ தவிர வேறு எந்த தேசிய அங்கீகாரங்களும் கிடைக்காதது அநியாயமே! சகலகலா வல்லவனுக்கு மட்டுமல்ல, சகலகலாவல்லியாக நடிப்புக்கு இலக்கணம் வகுத்த பி.பானுமதிக்கேகூட பால்கே விருது தரப்படவில்லை. நடிகைகள் பத்மினி, லட்சுமி, வாணிஸ்ரீ, ராதிகா ஆகியோருக்கு பத்மஸ்ரீகூட கிடையாது. அதற்காக, ரஜினிக்குக் கிடைத்ததைக் கொண்டாடாமல் போய்விட முடியுமா?

தங்க மனசுக்காரன் ரஜினி. தனது வெற்றிகளுக்காக எவரையும் பலி கொடுக்காதவர். எம்.ஜி.ஆரின் வானளாவிய புகழையும் ஜெய்சங்கரின் எளிமையையும் ஒருங்கே பெற்றவர். தன்னை வைத்துப் படமெடுக்கும் தயாரிப்பாளர்களைத் தூக்குக்கயிற்றைத் தேட வைக்கும் நடிகர்களுக்கு மத்தியில், தன் படங்களால் நஷ்டம் அடைந்ததாகச் சொன்னவர்களின் துயர் துடைத்த தமிழ் சினிமாவின் தங்க மகன்.

இந்திய சினிமாவை எகிப்தின் கெய்ரோவில் எதிரொலித்த நடிகர் திலகத்துக்கு அவரே எதிர்பாராத மிக அதிக சம்பளம் கொடுத்து அழகு பார்த்தவர் படையப்பா.

தமிழ் சினிமாவுக்குத் தமிழ் பேசாத மாநிலங்களிலும் மார்க்கெட் உருவாக்கிக் கொடுத்தவர். இந்தியா மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ரஜினியால் வசூல் பார்க்கிறார்கள். ‘முத்து’ படத்துக்குப் பிறகு ஜப்பானும் ரஜினியின் தேசமாகிவிட்டது.

‘கபாலி’ படப்பிடிப்புக்காக மலேசியா சென்றபோது ரஜினியை மலேசியப் பிரதமர் ‘தலைவா’ என்றழைத்தார். இன்று அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது கொடுத்ததும், மோடி ‘தலைவா’ என்று அழைத்திருக்கிறார்.

விருதுகளின் பின்னே இருக்கும் அரசியல் பற்றிப் பேசுவதில் என்ன இருக்கிறது? 1976-ம் ஆண்டில் காமராஜருக்கு ‘பாரதரத்னா’ விருது கொடுத்தார் இந்திரா காந்தி.

அடுத்த ஆண்டு தேர்தலில் அவருக்கு அது ஆதாயம் தரவில்லை. 1989 தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்று ஆட்சியைப் பிடிக்கக் கனவு கண்டது. ‘எம்.ஜி.ஆருக்கு பாரதரத்னா விருது கொடுத்தால், எம்.ஜி.ஆரின் ஓட்டுகளை மொத்தமாக அள்ளிவிடலாம்’ என்று யாரோ பிரதமர் ராஜீவ் காந்தியிடம் ஆலோசனை சொல்லியிருப்பார்கள் போல! தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு அந்த அறிவிப்பு வெளியானது. ஆனாலும், காங்கிரஸுக்கு எம்.ஜி.ஆர் ஓட்டுகள் கிடைக்கவில்லை. விருதுகளின் பின்னால் அரசியல் இருக்கலாம். ஆனால், விருதுகளால் அரசியல் வெற்றிகள் தீர்மானிக்கப்படுவதில்லை.

இதோ… வரும் மே 3-ம் தேதி டெல்லி சென்று தாதா சாகேப் பால்கே விருது பெறவிருக்கிறார் ரஜினி. அதே மேடையில் தனுஷும் சிறந்த நடிகர் விருது பெறுகிறார். மாமனாருக்கும் மாப்பிள்ளைக்கும் ஒரே சமயத்தில் சினிமாவுக்கான உயரிய தேசிய விருதுகள்.

தமிழ் சினிமாவை ஆள்பவர் விருது வாங்கும் அந்த தினத்துக்கு முதல் நாளே, ‘தமிழகத்தை யார் ஆட்சி செய்யப்போகிறார்கள்’ என்பது முடிவாகியிருக்கும்.

***

ரஜினியை ‘சூப்பர் ஸ்டாராக’ மாற்றியதில் முக்கியப்பங்கு எஸ்.பி.முத்துராமனுக்கு உண்டு.

தன் வசூல் நாயகனுக்கு ‘தாதாசாகேப்’ விருது கிடைத்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார் அவர்.”உரிய மனிதருக்கு உரிய நேரத்துல விருது கிடைச்சிருக்கு.

விருது அறிவிப்பு வந்தவுடனே போன் பண்ணி வாழ்த்து தெரிவிச்சேன். ‘உங்க மாணவனுக்கு கிடைச்சிருக்கு’னு சந்தோஷப்பட்டார்.

எங்க உறவு பல வருஷங்களுக்கு அப்பாற்பட்டது. 1977-ல ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்துலதான் முதல் முறை என்கிட்ட வந்து சேர்ந்தார். அப்பவே அவருக்குனு பஞ்ச் டயலாக்ஸ் கொடுத்திருந்தோம்.

அந்த நேரத்துல அவருக்கு சரளமாத் தமிழ் பேச வராது. இருந்தும், முயற்சி பண்ணி பேசினார். இப்போ ரஜினி என்றாலே பஞ்ச் டயலாக்ஸ்னு ஆகிப்போச்சு. கிட்டத்தட்ட 25 படங்கள் வரைக்கும் ரஜினிகூட வேலை பார்த்திருக்கேன்.

படங்கள்னு சொல்றதை விடவும் ரஜினியை வெச்சு 25 கதாபாத்திரங்களை இயக்கியிருக்கேன்னு சொல்லலாம்.”

cinema.vikatan.com

யாழ் மாநகர கண்காணிப்பு காவலர்களுக்கு புலிகளின் சீருடையா? மேயர் விளக்கம்

கொழும்பு மாநகர சபையை பின்பற்றியே, யாழ் மாநகர கண்காணிப்பு காவலர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

சீருடை வழங்கிய விடையத்தில் வேறு எந்த உள்நோக்கமோ, திட்டமோ தங்களுக்கு இருக்கவில்லை எனவும் வி.மணிவண்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர ஆணையாளர் மற்றும், கண்காணிப்பு காவலர்களுக்கு காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பாக இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

நேற்றையதினம் நாங்கள் யாழ் மாநகரத்தை தூய்மையாகவும், அழகாகவும் பேணுவதற்காக எங்களுடைய மாநகர சபை ஊழியர்களை ஒரு பணிக்காக அமர்த்தியிருந்தோம்.

அது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பின் ஊடாக அதனை மக்களுக்கு கூறியிருந்தோம். உன்மையிலே யாழ் மாநகரத்தை அசிங்கப்படுத்துகின்ற, குப்பைகளை வீசியெறிகின்ற, கட்ட இடங்களில் வெற்றிலை துப்புகின்றவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதர்க்காக யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றி அந்த தீர்மானத்தின் ஊடாக எவ்வளவு ரூபா தண்டப்பணமாக அறவிடுவது என்பதை வர்த்தமாணியில் அறிவித்து அந்த வர்த்தமாணி பிரசுரம் வெளியாகிய பின்னர் நாங்கள் எங்களுடைய வழமையான செயற்பாட்டில் ஒன்றாக விசேடமாக சிலரை பணிக்கு அமர்த்தியிருந்தோம்.

அதிலும் குறிப்பாக இந்த ஐந்து ஊழியர்களும் சபையில் ஊழியர்களாக செயற்பட்டவர்களே அவர்களையே இந்த விசேட பணிக்கு நாங்கள் நியமித்திருந்தோம்.

அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் போது மக்கள் அவர்களை இலகுவாக அடையாளம் காணவேண்டிய தேவை இருந்ததாலும், அவர்களுக்கு வேண்டத்தகாத பிரச்சினைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக சீருடை ஒன்றையும் அறிமுகப்படுத்தி வழங்கியிருந்தோம்.

இந்த சீருடை எதை பார்த்து நாங்கள் செய்தோம் என்றால் கொழும்பு மாநகர சபையில் இருக்கும் நடைமுறைகளை பின்பற்றித்தான். கொழும்பு மாநகர சபை பின்பற்றுகின்ற, பாவிக்கின்ற சீருடையையே நாங்களும் இந்த ஊழியர்களுக்கு வழங்குவதென யோசித்து அதே மாதிரியான சீருடையை வழங்கியிருந்தோம். இதில் வேறு எந்த உள்நோக்கமோ, திட்டமோ எங்களுக்கு இருக்கவில்லை.

சிலர் இதனை சொல்லுகின்றார்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடை போன்று இருப்பதாக என்னை பொறுத்தவரை சில இடங்களில் அது பொருந்தியிருக்கலாம் ஆனால் நாங்கள் கொழும்பு மாநகர சபையை முன்மாதிரியாக கொண்டே இதனை செய்திருந்தோம் என தெரிவித்துள்ளார்.

நீங்கள் இடது கை பழக்கம் உள்ளவரா..? உங்களின் குணாதிசயங்கள் என்ன தெரியுமா?

நம்மில் பெரும்பாலானோர் வலது கையைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். சிலர் மட்டும் அனைத்து செயல்களுக்கும் இடது கையைப் பயன்படுத்துவார்கள்.

இடது கை பழக்கம் உள்ளவர்களை ‘சினிஸ்ட்ராலிட்டி‘ என்று குறிப்பிடுவார்கள்.

இடது கை பழக்கம் உள்ளவர்களை பற்றி பல ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இடது கை பழக்கம் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பவர்கள் என்று இங்கு பார்ப்போம்.

  • இவர்கள் கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குவார்கள்.
  • உடல் அளவிலும், மனதளவிலும் சமநிலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால்தான் இவர்கள் மேலோங்கி வளர்கிறார்களாம்.
  • இடது கை பழக்கம் உள்ளவர்கள் எளிதாக வலது கையிலும் வேலை செய்ய முடியுமாம்.
  • இடது கை பழக்கம் உள்ளவர்கள் புத்திசாலிகளாம்.
  • இடது கை பழக்கமுள்ளவர்களின் மூளை சிறப்பாக செயல்படும். இதனால் இவர்கள் மல்டி டாஸ்கிங்கிலும் சிறந்து விளங்குவார்கள்.
  • இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு விரைவாக கோபம் வந்துவிடும். இவர்களது மூளை வேகமாக செயல்படுவது தான் இதற்கான காரணம் என கூறப்படுகிறது.
  • தண்ணீருக்கு கீழேயும் கூட, இவர்களுக்கு நல்ல பார்வை திறன் இருக்கும்.

திருமதி உலக அழகி ஜுரி கைது!

திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி, கறுவாத்தோட்டம் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றிபெற்ற புஷ்பிகா டி சில்வாவால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமதி இலங்கை அழகிப் போட்டி கடந்த 4 ஆம் திகதி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றிபெற்ற புஷ்பிகா டி சில்வாவுக்கு வெற்றி மகுடம் சூட்டப்பட்டது. மறுகணமே அது மீள பறிக்கப்பட்டு, 2ஆவது வெற்றியாளருக்கு வழங்கப்பட்டது.
புஷ்பிகா டி சில்வா விவாகரத்து பெற்றவர் என்பதை அடிப்படையாகக்கொண்டே இவ்வாறு பட்டம் பறிக்கப்பட்டது. எனினும், அவர் விவாகரத்து பெற்றவர் என்பது நிருபிக்கப்படவில்ல.இதனால் மீண்டும் புஷ்பிகாவுக்கே பட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

17 ஆண்டுகள் கடந்தும் ஆறா வடு: முள்ளிவாய்க்காலில் சுடரேற்றி அஞ்சலி!

0
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (மே 18), முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மக்கள் ஒன்றுகூடி, தங்களின் உயிரிழந்த உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 10:15 மணியளவில் தவத்திரு...

பெருந்தோட்ட வன்முறைகளுக்கு முடிவு: நாடாளுமன்றத்தில் 21 ஆம் திகதி விசேட கூட்டம்!

0
“தோட்டத் தொழிலாளர்கள் தாக்குதலுக்கு இலக்கான சம்பவங்கள் பதிவாகி இருந்தன. இதற்கு முன்னரும் அவ்வாறு நடந்துள்ளன. எனினும், அவ்வாறான விடயங்களுக்கு முடிவுகட்ட வேண்டிய காலகட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம்.” இவ்வாறு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல்...

மே 21 சர்வதேச தேயிலை தினம்: இலங்கையில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு!

0
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச தேயிலை தின நிகழ்வு தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கூறிய கருத்துகள் வருமாறு, “இலங்கை...