Home Blog Page 3541

கால்களை அசிங்கமாக்கும் பித்த வெடிப்பை தடுக்க வேண்டுமா? இதோ சூப்பரான வழிகள்

பாத வெடிப்பு பிரச்சனை பொதுவாக கிருமிகளின் தொற்று மூலமாகவும், உடலின் ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் ஏற்படுகிறது.

நாளடைவில் இது பாதத்தின் அழகும் குறைந்து,பாத வெடிப்பு புண்களாக மாறி வலியையும் ஏற்படுத்துகிறது.

பாதத்தில் ஏற்படும் பாத வெடிப்புகளை ஒரு சில இயற்கை பொருட்கள் மூலம் கூட சரி செய்யலாம். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.

  • பித்தவெடிப்புப் பிரச்னை ஏற்பட்டவுடன், அது மேலும் அதிகரிக்காமல் தடுப்பதற்காக கால்களை அழுக்கிலும், ஈரத்திலும் இருந்து பாதுகாப்பதற்காக காலணி அணிய வேண்டும். இதன் மூலம் பாதவெடிப்பு பெரிதாகாமல் தடுக்கலாம்.
  • பாதவெடிப்பில் உள்ள டெட் செல்கள் நீங்குவதற்கான கிரீம் பயன்படுத்தி, ஸ்கிராப் மூலம் தேய்த்து நீக்கலாம். டெட்செல்கள் நீங்கிய பின் பாதவெடிப்பு போவதற்கான மாய்ஸ்சரைசர் கிரீம் பயன்படுத்தலாம்.
  • வெளியில் சென்று வந்தவுடன் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவலாம். படுக்கச் செல்லும் முன்பும் பாதங்களைச் சுத்தம்செய்து கிரீம் தடவிக்கொள்வது பாதத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க உதவும்.
  • பித்தவெடிப்பு உள்ளவர்கள், மிதவெப்பமான தண்ணீரில் கல்உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து, கால்களை சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பின் கால்களை ஸ்கிரப் கொண்டு தேய்த்து, டெட் செல்களை நீக்கலாம்.
  • பித்தவெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலைகளைத் தேய்த்துவிடலாம். பித்த வெடிப்பு அதிகரிக்காமல் தடுக்க, தரமான காலணிகளைத் தேர்வுசெய்து பயன்படுத்தலாம்.

புத்தாண்டை முன்னிட்டு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படமாட்டாது!

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். எனினும், ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் இல்லை. பயணத் தடைகளை விதிப்பது குறித்தும் தீர்மானம் எடுக்கவில்லை – என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

விவசாய படிப்பில் 14 தங்கப்பதக்கங்களை வென்ற விவசாயின் மகன்

இந்தியா, கர்நாடக மாநிலம் குனூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் தோட்டக்கலைத்துறையில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதை பாராட்டி அவருக்கு 14 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா குனூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி வசந்தா. இந்த தம்பதி சுமார் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 2 மகன்கள். 2-வது மகன் பிரசாந்த்.

இவர் மைசூருவில் உள்ள தோட்டக்கலைத் துறை கல்லூரியில் பி.எஸ்சி. தோட்டக்கலைத்துறை இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் அனைத்து தேர்விலும் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதை பாராட்டி அவருக்கு பாகல்கோட்டையில் உள்ள தோட்டக்கலைத் துறை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 14 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது.

பிரசாந்த் பதக்கங்களை பெற்றதும் அவரது தாய் வசந்தாவும், தாத்தா சென்னேகவுடாவும் மேடையில் ஏறி அவருக்கு முத்தமழை பொழிந்தனர். மேலும் ஆனந்த கண்ணீரில் திளைத்தனர். பிரசாந்தின் தந்தைக்கு வங்கியில் ரூ.2.40 லட்சம் (இந்திய ரூபா) கடன் உள்ளது.

இதுகுறித்து பிரசாந்த் கூறுகையில், எனது குடும்பம் விவசாய குடும்பம். அதனால் விவசாயத்தின் மீது எனக்கு சிறு வயது முதலே ஆர்வம் வந்தது. இதனால் விவசாயத்தில் சாதிக்க விரும்பினேன். விவசாயத்தில் பலரும் பாரம்பரியமாக ஒரே பயிரை சாகுபடி செய்து வருகிறார்கள். இது பல சிக்கல்களை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் விவசாய விஞ்ஞானியாக மாறுவதே எனது குறிக்கோள். அத்துடன் எனது படிப்புக்காக எனது பெற்றோர் வாங்கிய கடனை அடைப்பேன் என்றார்.

“புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள் பரிமாற்றம்” – விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை

புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்கள் பரிமாற்றம் இடம்பெறக்கூடும் என்பதனால் இது தொடர்பாக மிக அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறான போலி நாணயத்தாள்கள் உங்கள் கைகளில் கிடைத்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 1000 ரூபா போலி நாணயமொன்றை கையில் வைத்திருந்த 28 வயதுடைய நபரொருவர் நேற்றைய தினம் (7) பனாகொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் 1000 ரூபா போலி நாணயத் தாள் ஒன்றை கடையில் கொடுத்து பொருட்களை வாங்க முயன்றபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்தப் புத்தாண்டு காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும், வாகன விபத்துக்களை குறைத்துக் கொள்ளவும் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

மேலும் இந்த இரண்டு காரணங்களையும் கருத்திற்கொண்டு செயற்படாவிடின் இம்முறை புத்தாண்டை மகிழ்ச்சிகரமாக கொண்டாட முடியாமல் போய்விடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உடலில் உள்ள அசுத்த ரத்தத்தை சுத்தம் செய்யும் இதோ சில குறிப்புகள் !

இரத்தம் என்பது அனைத்து உயிரினங்களின் உடலிலும் உள்ள சிவப்பு நிற திரவம் ஆகும். இரத்தத்தின் முக்கியமான வேலை உடலில் உள்ள செல்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருளான ஆக்சிஜனையும் ஊட்டச்சத்தையும் கொண்டு சேர்பதாகும்.

அதே போல் இரத்தமானது அனைத்து செல்களில் இருந்து கழிவுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது.

நாள்தோறும் நம் உடலில் ஓடும் ரத்தத்தில் அசுத்தங்கள், நச்சுகள், கழிவுகள் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

இதன் விளைவு நோய்கள், சாதாரண சரும பிரச்னை தொடங்கி வெரிகோஸ் வெயின், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கும் ரத்த சுத்தமின்மையே ஒரு முக்கிய காரணம்.

இதனை தடுக்க ஒரு சில இயற்கை வலிகள் உள்ளது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • தினமும் நமது உணவில் பீட்ரூட்டை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது உடம்பில் புத்தம் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
  • பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சைப்பழச் சாறு கலந்து சாப்பிட்டால், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.
  • அரை டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து இரவில் குடித்து வருவது நல்லது.
  • முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை இருப்பவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும்.
  • செம்பருத்தி பூவின் இதழ்களை நன்றாகச் சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடல் சோர்வை குறைத்து ரத்தத்தை தூய்மை அடைய செய்யும்.

ரஞ்சன் விவகாரம் – சபைக்குள் பிரதான எதிர்க்கட்சி போராட்டம்

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் சபாநாயகர் வழங்கிய தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதான எதிர்க்கட்சியின் இன்று சபைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கறுப்பு பட்டியணிந்து, பதாதைகளை தாங்கி நீதிக்காக குரல் எழுப்பினர்.

இதன்போது ஆளுங்கட்சியினருக்கும், எதிரணி உறுப்பினருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கடும் அமளி துமளி ஏற்பட்டது. இதனையடுத்து சபை நடவடிக்கைகள் ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் எதிரணியின் போராட்டம் தொடர்ந்தது. சபாநாயகரின் முடிவு தவறானது என சுட்டிக்காட்டியதுடன், உயர்நீதிமன்றத்தை நாடும் உரிமை ரஞ்சனுக்கு இருக்கையில் ஏன் அவசரமாக தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினர்.

HNB சிங்கிதி புதிய ‘சிங்கிதி ஜம்போ Avurudu’ சலுகைகளை அறிவித்துள்ளது

இவ்வாண்டு புதுவருட கொண்டாட்டத்தில், இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியான HNB PLC தனது சிறுவர் சேமிப்புக்காக ‘சிங்கிதி ஜம்போ அவுருது’ என்ற புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

இதில் பலவிதமான பரிசுகள் மற்றும் வவுச்சர்களும் இவற்றில் அடங்கும்.

இவ்வருடம் மார்ச் 23 முதல் ஏப்ரல் 30 வரை, 16 வயதிற்கு உட்பட்ட அனைத்து HNB சிங்கிதி மற்றும் Teen கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் பல நன்மைகளை வழங்குகின்றது.

‘எங்கள் இளம் சேமிப்பாளர்களுக்கு சிங்கிதி சேமிப்பு திட்டத்தை முன்னேற்றுவதன் மூலம் புது வருடத்தின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதையிட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.

இந்த புதிய திட்டங்களின் மூலம் இளம் வயதினரை நிதி ரீதியாக பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த முடியும். அதேசமயம் அவர்களின் கல்விப் பயணத்தை முன்னேற்றுவிக்கும் வகையிலான பரிசுகளையும் வழங்குகின்றோம்.

எதிர்வரும் வருடங்களில் இந்த திட்டங்களின் நோக்கங்களை விரிவுப்படுத்துவதன் மூலம் இளம் சேமிப்பாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க முடியும் என நம்புகின்றோம்.’ என HNB சேமிப்பு நடவடிக்கைகள் பிரதானி விரங்க கமகே தெரிவித்தார்.

சிங்கிதி கணக்கு வைத்திருப்பவர்களின் தொடர்ச்சியான கல்வி முன்னேற்றத்தை ஊக்கவிப்பதோடு தனது இளம் சேமிப்பாளர்களுக்கும் பரிசுகளையும் வழங்குகிறது.

5,000 ரூபா வைப்பிலிடுபவர்களுக்கு தொப்பிகள் அல்லது பேனா ஹோல்டர்கள், 10,000 ரூபா வைப்பிலிடுபவர்களுக்கு குடைகள் அல்லது பாடசாலை பைகள், 25,000 ரூபா வைப்பிலிடுபவர்களுக்கு முழுமையான பொருட்களுடன் வெண் பலகைகளும் வழங்கப்படும்.

மேலும் சிங்கிதி சேமிப்பாளர்கள் 50,000 ரூபா வைப்பிலிடும் போது ஒரு விளையாட்டு பை (Sports Bag) அல்லது 1,500 ரூபா பெறுமதியான வவுச்சர்களும், சிங்கிதி கணக்கு வைத்திருப்பவர்கள் 100,000 ரூபா வைப்பிலிடும் போது 5,000 ரூபா பெறுமதியான வவுச்சர்களும் 500,000 ரூபா வைப்பிலிடும் போது 20,000 ரூபா பெறுமதியான வவுச்சர்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இவ் வவுச்சர்களை HNBஇன் பங்குதார வணிகர்களான Abans, Arpico Super center, DSI, Mallika Hemachandra Jewellers, Nithyakalyani Jewellery, Stone ‘N’String, Sarasavi Bookshop, Vijitha Ypa மற்றும் Zuzi உள்ளிட்ட எந்தவொரு விற்பனை நிலையங்களிலும் மீட்டெடுக்கலாம்.

இம்முறையில் இளைஞர்களிடையே நிதி கல்வியறிவை உயர்த்துவதோடு வருங்கால தலைமுறையினருக்கு மதிப்புமிக்க பரிசுகளையும் அவர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கான பொறுப்புணர்வை வழங்குவதையும் வங்கி நோக்கமாக கொண்டுள்ளது.

இதுவொரு பிரகாசமான எதிர்காலத்திற்கான நிலையானதும், வலுவானதுமான அடித்தளமாகும்.

1991ஆம் ஆண்டில் முதன்முறை சிறுவர் சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்தியதால் சிங்கிதி கணக்கு வைத்திருப்பவர்களின் நலன்களைப் பாதுகாக்க HNB உறுதிப்பூண்டுள்ளது.

இதன் விளைவாக HNB Assurance உடன் இணைந்து ஒரு சிறப்பு காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது சிங்கிதி மற்றும் Teen சேமிப்புக் கணக்குகளுக்காக பெற்றோரிடமிருந்து வழங்கப்பட்ட நிலையான கட்டளையின் அடிப்படையில் செயல்படும்.

குறிப்பாக பெற்றோர்கள் குறைந்தபட்சம் 1,000 ரூபாவுக்கும்; 25,000 ரூபாவுக்கும்; இடையிலான நிலையான கட்டளையை செயல்படுத்துவதன் மூலம் காப்புறுதி நன்மையைப் பெறலாம். காப்புறுதி கட்டணத் தொகை வசூலிக்கப்பட மாட்டாது. குழந்தைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு நிலையான நிதியை வைப்பிலிட பெற்றோரை ஊக்குவிக்கிறது.

இயற்கையாக அல்லது தற்செயலாக பெற்றோருக்கு மரணம் ஏற்பட்டால் நிலையான கட்டளைகளுக்கு ஏற்ப HNBஆனது மாதாந்தம் தொடர்ந்து நிதியளிக்கும். 25,000 ரூபா வரையிலான நிலையான கட்டளை கொண்டுள்ள வாடிக்கையாளர் HNB இருந்து இந்த நன்மையை இலவசமாக பெற தகுதியுடையவராவர்.

மேலும் சிங்கிதி கணக்கில் தொடக்கத்திலிருந்து இளைஞர்களிடையே தொடர்ச்சியான சேமிப்பை வளர்க்க வெகுமதிகளை இணைப்பதன் மூலம் மாணவர்களுக்கிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க HNB பல முயற்சிகளை மேற்க்கொண்டுள்ளது.

அதோடு தரம் 5 தேர்வில் சித்தி பெற்ற சிங்கிதி சேமிப்பாளர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்க னுசைர னுயசர புலமைப்பரிசில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்வகையான மிகப்பெரிய நிதித்தொகையை வழங்கும் வங்கியாக, க.பொ.த மற்றும் லண்டன் O/L மற்றும் A/L மாணவர்களுக்கும் சிங்கிதி கணக்கு நிலுவைகளை குறித்த தொகைக்குள் பராமரிக்கும் போது னுசைர னுயசர புலமைப் பரிசில் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இவ் உதவித்தொகைக்கு தகுதி பெற பெற்றோர்கள் சிங்கிதி லமா HNB Teen கணக்கில் குறைந்தபட்சம் 500 ரூபா வைப்பிலிட வேண்டும்.

HNB சிறுவர் சேமிப்பில் முன்னோடியாக திகழ்கிறது. அதன் இளைய வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும் விதத்தில் விரிவாக்கப்பட்ட சலுகைகளை வழங்குகிறது.

சிங்கிதி கிரிகெடியோ கணக்கானது புதிதாக பிறந்த குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இக் கணக்கை குழந்தையின் பிறந்த திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பெற்றோரால் ஆரம்பிக்க முடியும். இக் கணக்கு மிக உயர்ந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது.

கணக்கைத் ஆரம்பிக்கும் போது இலவச வைப்புத்தொகையாக 1000 ரூபா பரிசாக வழங்குகிறது. கிரிகெட்டியோ கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளிலுள்ள நிலுவை தொகைக்கேற்ப தங்கள் பிறந்த நாளில் சிறப்பு பரிசுகளையும் பெறுவர்.

ஐந்து வயதை எட்டும் போது கணக்கு தானாகவே HNB சிங்கிதி லமா கணக்காகவும் பின்னர் 12+ வயதில் HNB Teen கணக்காகவும் மாற்றப்படும்.

நாடு முழுவதிலும் 252 வாடிக்கையாளர் நிலையங்களைக்கொன்டுள்ள HNB இலங்கையின் மிகப்பெரிய தொழில்நுட்ப ரீதியான புத்தாக்கங்களைக் கொண்ட வங்கிகளில் ஒன்றாகும்.

இது டிஜிட்டல் வங்கியில் ஒரு புதிய முன்னுதாரணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளுக்கு உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. Fitch Ratings (Lanka) Ltd நிறுவனத்தினால் AA-(lka)இன் நீண்டகால தேசிய மதிப்பீட்டை HNB கொண்டுள்ளது.

2020ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி விருதுகளில் இங்கையின் சிறந்ந Sub-Coustodian வங்கியாக HNB அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆசிய வங்கியாளர் விருதுகளில் 11வது தடவையாகவும் இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கிக்கான விருதை வென்றது.

சவாலான பொருளாதார சூழல் மத்தியிலும் தன்னுடைய வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர்களின் பொறுமையை சோதித்தால் விளைவு பாரதூரமாக அமையும் – தோட்டக் கம்பனிகளுக்கு ராதா எச்சரிக்கை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பான வர்த்தமானியை தள்ளுபடி செய்ய முடியாது என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்கள் மீது அடாவடித் தனமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தோட்டத் தொழிலாளர்கள் தமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,

” தொழிலார்களின் ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் ஆரம்பம் முதலே முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் தோட்ட கம்பனிக்காரர்களே .அவர்கள் எந்த காரணம் கொண்டும் அந்த சம்பள உயர்வை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க கூடாது என்ற என்னத்திலேயே செயற்பட்டு வந்தனர்.

ஆனால் இன்று இந்த விடயம் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது.நீதிமன்றம் வர்த்தமானியை நீக்க முடியாது என தீர்ப்பளித்துள்ள நிலையில் இன்று தோட்ட கம்பனிகள் தொழிலார்களை பழிவாங்குகின்ற செயலில் ஈடுபட்டு வருகின்றது.

இன்று (08.04.2021) லிந்துலை பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இவருடைய இறுதிக்கிரியைகளுக்காக வழமையாக குளி வெட்டுவதற்காக வழங்கப்படுகின்ற நால்வரை வழங்க முடியாது எனவும் அதனை மரண வீட்டுக்காரர்கள் பணம் கொடுத்து செய்து கொள்ள வேண்டும் என மனிதாபிமானம் அற்ற முறையில் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நடைமுறையானது கடந்த பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகின்றது.இந்த நடைமுறையை இப்பொழுது நடைமுறைபடுத்த முடியாது என கூறுவது எந்த விதத்தில் நியாயமானது.?

அதே நேரம் தோட்டத்தில் வேலை செய்து ஒய்வூதியம் பெற்று சென்றவர்கள் பொதுவாகவே நாட் கூலிகளாக வேலை செய்வது வழக்கம்.அவர்களில் அநேகமானவர்கள் வயது அதிகமானவர்களே.60 முதல் 65 வயதை தான்டியவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்.அவர்களுக்கு வேறு எந்த கொடுப்பனவும் வழங்கப்படமாட்டாது.தனியே நாட்சம்பளம் மாத்திரமே வழங்கப்படும்.ஆனால் அவர்களிடமும் இப்பொழுது வேலைப்பழுவை அதிகரித்துள்ளனர்.

மேலும் தற்பொழுது தோட்டங்களில் தோட்டங்களை துப்பரவு செய்வதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் தோட்ட நிர்வாகம் மேற்கொள்வதில்லை.இதன் மூலம் தோட்டங்களை காடுகளாக்கி தனியாருக்கு வழங்குவதற்கு அல்லது சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுகின்றார்களா?என்ற கேள்வியும் எங்கள் மத்தியில் ஏற்படுகின்றது.

அது மட்டுமல்லாமல் ஒரு நாள் சம்பளத்திற்கு எடுக்கப்படுகின்ற தேயிலை கொழுந்தின் எடையையும் அதிகரித்து இருக்கின்றார்கள்.இது தொழிலாளர்களுக்கு ஒரு பெரும் சுமையாக அமைந்துள்ளது.

தோட்ட தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாகNவு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.எல்லா தோட்டங்களிலும் ஏதோ ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது.இந்த நிலைமை தொடருமாக இருந்தால் தோட்டங்களில் அமைதியின்மை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

எனவே தோட்டத் தொழிலாளர்களின் பொறுமையை சோதிக்க யாராவது நினைத்தால் அதன் விளைவுகள் மிகவும் பாரதூரமாக இருக்கும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் அமைதியாக இருப்பது யாருக்கும் பயந்து கொண்டு என யாரும் நினைத்தால் அது அவர்களின் முட்டாள்தனம் எனவே தோட்டத் தொழிலாளர்களின் விடயத்தில் தோட்ட கம்பனிகள் ஒரு சரியான நடைமுறையை பின்பற்றாவிட்டால் தோட்ட நிர்வாகத்திற்கு தொழிலாளர்கள் பாடம் புகட்ட வேண்டிய ஒரு நிலைமை ஏற்படும்.” – என்றார்.

தொலைத்தொடர்புத் துறையில் தங்கத் தரத்துடன் கூடிய வாடிக்கையாளர் சேவையை வழங்கும் எயார்டெல்

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL) 2020ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் நடத்திய, சேவையின் தரம் (QoS) கணக்கெடுப்பின்படி வாடிக்கையாளர் சேவை அளவீடுகளில் சிறந்த செயல்திறனை எயார்டெல் லங்கா அடைந்துள்ளதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

முதல் தடவையாக நாடு முழுமையாக முடக்கப்பட்ட காலக்கட்டத்தில் (LockDown) ‘வீட்டிலிருந்து வேலை’ என்ற (Work from Home) சூழலுக்கு மாற்றமடைந்த காலப்பகுதியிலேயே இந்த அங்கீகாரம் எயார்டெல்லுக்கு கிடைத்துள்ளது.

இந்த அங்கீகாரம் குறித்து கருத்து தெரிவித்த எயார்டெல்லின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அஷீஷ் சந்திரா, “சேவை கலாச்சாரத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கே எயார்டெல் நிறுவனம் என்ற வகையில் நாம் எப்பொழுதும் முயற்சி செய்கிறோம்.

உலகத் தரம் வாய்ந்த வாடிக்கையாளர் சேவையுடன், எங்களது வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை வளமாக்குவதை நோக்காகக் கொண்டுள்ளோம்.

இந்த இலக்கை தக்கவைத்துக் கொள்வதற்கும், புதிய உச்சத்தை எட்டுவதற்கும் அர்ப்பணிப்புள்ள ஒரு குழுவின் ஒத்துழைப்பு இல்லாமல் எமது சேவைத் தரத்தை சர்வதேச அளவீடுகளுக்கு அப்பால் புதிய விதங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க முடியாமல் போயிருக்கும்.” என தெரிவித்தார்.

2020 ஜனவரி முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் TRCSL அளித்த சமீபத்திய அறிக்கையின்படி, எயார்டெல் லங்கா வாடிக்கையாளர் சேவை அளவீடுகளில் சிறந்து விளங்கியது.

இதேபோல், தொலைத்தொடர்பு துறையில் முன்னணியிலுள்ள, ‘IVR Initial Response Time’, ‘Initial Human Operator Response Time after the IVR system refers the call for operator assistance’ மற்றும் ‘Bill Correctness Complaints Resolution Time’ ஆகிய அளவீடுகளில் முன்னிலை வகிக்கிறது.

TRCSLஇனால் முன்வைக்கப்பட்ட தரங்களுடன் ஒப்பிடும்போது தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் (Mobile Operator) தங்களது வலையமைப்பின் தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவையைப் பற்றி ‘செல்லிட தொலைபேசி சேவைகளுக்கான சேவை ஒப்பீட்டு அறிக்கை’யை மதிப்பீடு செய்கிறது.

இந்த தரநிலைகள் சர்வதேச அமைப்புக்களால் நிறுவப்பட்ட தரங்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையானது இலங்கையின் வாடிக்கையாளர்கள் மத்தியில் அவர்களின் தகவல்களுக்காகவும், தொகுப்பு அளவீடுகளின் மேம்பாட்டிற்காகவும் விநியோகிக்கப்படுகிறது.

இந்த அறிக்கையின் நோக்கம் தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் பொதுவாக காலாண்டின் அடிப்படையில் கண்காணிக்கப்படும் QoS அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாரதி எயார்டெல் லங்கா நிறுவனம் தொடர்பாக:

2009 ஜனவரி 12ஆம் திகதி இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் (எயார்டெல் லங்கா) நிறுவனம் தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும்.

தமது வணிக செயற்பாடுகளை ஆரம்பித்த 2009ஆம் ஆண்டிலிருந்து 3 வருட குறுகிய காலப்பகுதிக்குள் எயார்டெல் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்த சேவையை வழங்கியதோடு இன்று நாடு முழுவதிலும் தமது சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு www.airtel.lk என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்.

சம்மாந்துறை இளைஞர் போராட்டம் தொடர்கிறது

சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள் பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அவை வெற்றியளிக்காமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவை அங்கையே நிரந்தரமாக வைக்குமாறு கோரி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

சம்மாந்துறை இளைஞர்கள் கடந்த திங்கட்கழமை குறத்த சாலைக்கு அண்மையில் திரண்டு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற அமீர் அப்னான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் டாக்டர் ஐ.எல்.ஏ. மஜீத், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டம் வெற்றியளிக்காவிட்டால் சாலைமறியல் போராட்டம் நடத்த உள்ளதாவும், அரசியல்வாதிகள் பலரும் தீர்வுகளை பெற்றுத்தருவதாக எங்களை ஏமாற்றுவதாகவும் அதனால் அவர்களை நம்பாது தொடர்ந்தும் தீர்வு கிட்டும்வரை அவ்விடத்திலையே போராட்டத்தை தொடர உள்ளதாகவும் தெரிவித்தனர்.

– ஊடக பிரிவு-

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

பெருந்தோட்ட வன்முறைகளுக்கு முடிவு: நாடாளுமன்றத்தில் 21 ஆம் திகதி விசேட கூட்டம்!

0
“தோட்டத் தொழிலாளர்கள் தாக்குதலுக்கு இலக்கான சம்பவங்கள் பதிவாகி இருந்தன. இதற்கு முன்னரும் அவ்வாறு நடந்துள்ளன. எனினும், அவ்வாறான விடயங்களுக்கு முடிவுகட்ட வேண்டிய காலகட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம்.” இவ்வாறு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல்...

மே 21 சர்வதேச தேயிலை தினம்: இலங்கையில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு!

0
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச தேயிலை தின நிகழ்வு தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கூறிய கருத்துகள் வருமாறு, “இலங்கை...

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!

0
  நாடாளுமன்றம் நாளை 19 ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை கூடும் என்று நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தெரிவித்தார். பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள்...