Home Blog Page 3542

விபத்துகள் – 3 மாதங்களில் 14 பொலிஸ் அதிகாரிகள் பலி!

இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 14 பொலிஸ் அதிகாரிகள் வீதி விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இக்காலப்பகுதியில் வாகன விபத்துக்களால் 14 அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 74 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, கடந்த வருடத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 39 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததுடன், 394 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். அவ்வாறே 2019 ஆம் ஆண்டில் வீதிவிபத்துக்களால் 38 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததுடன், 292 பேர் காயமடைந்துள்ளனர்.

புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வீதிவிபத்துக்களால், கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே பெருமளவான பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். அவ்வருடத்தில் 44 பொலிஸ் அதிகாரிகள் வீதி விபத்துக்களால் உயிரிழந்த அதேவேளை, மேலும் 321 பேர் காயமடைந்தனர்.

இதனைவிட வீதி விபத்துக்களால் சராசரியாக நாளொன்றில் 08 பேர் உயிரிழப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

14 நாட்களுக்கு 3 கிலோ அரிசி போதுமா? நாட்டு மக்கள் வீட்டுக் குருவியா?

” குடும்பமொன்றுக்கு 3 கிலோ அரிசி 14 நாட்களுக்கு போதுமானதாக இருக்குமா, அப்படியானால் ஒருவருக்கு ஒருவேளை உணவுக்கு 17 கிராம்தான் ஒதுக்கப்படுகின்றது. வீட்டுக்குருவி, காகங்கள்கூட இதனைவிட அதிகம் உண்ணும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் அரிசி விலை உச்சம் தொட்டுள்ளது. கீரி சம்பவின் விலை 200 ரூபாவை தாண்டியுள்ளது. இந்நிலையில் குடும்பமொன்றுக்கு 14 நாட்களுக்கு 3 கிலோ அரிசி போதும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

3 கிலோ அரிசி என்பது 3 ஆயிரம் கிராம். இதனை 14 நாட்களில் பிரித்தால் நாளொன்றுக்கு 214 கிராமே உண்ண வேண்டும். 4 பேர் கொண்ட குடும்பமொன்றாக இருந்தால் ஒருவேளையில் ஒருவர் 17 கிராமைதான் சாப்பிடவேண்டும். நாட்டு மக்கள் வீட்டுக்குருவியா அல்லது புறாவா?

காகம், குருவிகள்கூட 17 கிராமுக்கு அதிகம் அரிசி திண்கின்றன.”- என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல,

” நான் இவ்வாறானதொரு கருத்தை வெளியிடவில்லை. போலியான முறையில் தகவல் பரப்படுகின்றது.” – என்றார்.

கறுப்பாடுகளுக்கு மைத்திரி விடுத்துள்ள எச்சரிக்கை

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் கடந்த 30 ஆம் திகதி கண்டிக்கு பயணம் மேற்கொண்டு தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசிபெற்றார். சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.

மேற்படி சந்திப்புகளுக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்த மைத்திரிபால சிறிசேன, எதிர்காலத்தில் சுதந்திரக்கட்சி ஆட்சியமைப்பதே தனது எதிர்ப்பார்ப்பு என குறிப்பிட்டு அதற்கேற்ற வகையில் கட்சி கட்யெழுப்படும் எனவும் அறிவித்தார்.

மைத்திரியின் இந்த அறிவிப்பானது மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலரை சினம்கொள்ள வைத்துள்ளது. இது தொடர்பில் ஆளுங்கட்சியின் உயர் மட்ட தலைவர்களிடமும் அது தொடர்பில் முறையிட்டுள்ளனர்.

இதற்கிடையில் கண்டி பயணத்துக்கு முன்னர் கட்சி சகாக்களுடன் மைத்திரிபால சிறிசேன மந்திராலோசனை நடத்தியுள்ளார். எப்படியாவது சுதந்திரக்கட்சியை மீட்டெடுக்க வேண்டும் எனவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரியுள்ளார்.

அதேபோல கட்சியில் அங்கம் வகித்துக்கொண்டு மொட்டு கட்சிக்கு சார்பாக செயற்படுபவர்கள் வெளியேறினால்கூட பரவாயில்லை, நாம் எமது பயணத்தில் தெளிவாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சாரா உயிருடன் இருந்தால் நிச்சயம் பிடிக்கப்படுவார்!

21/4 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடரும். சாரா என்பவர் கைது செய்யப்படவேண்டியவர்களின் பட்டியலில் இருக்கிறார். உயிருடன் இருக்கும் பட்சத்தில் அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார் – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளன. 8 சம்பவங்கள் பதிவாகின. அவை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஆவணங்கள் இரு மாதங்களுக்கு முன்னர் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டன. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வரும்வரை சட்டமா அதிபர் காத்திருந்தார். தற்போது அந்த அறிக்கையும் கிடைத்துள்ளது.

எம்மால் வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஒப்பிட்டுதான் சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்வார். எடுத்த எடுப்பிலேயே வழக்கு தாக்கல் செய்துவிடவும் முடியாது. எனவே, சட்டத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிக்க முடியாத வகையில் சாட்சியங்கள் முன்வைக்கப்படவேண்டும். அதற்காகவே காலம் எடுத்திருக்க கூடும். இது பற்றி சட்டமா அதிபர் விளக்கமளித்தார்.

21/4 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவுபெறவில்லை. அது தொடரும். 31 பிரதான சந்தேக நபர்களுக்கு வழக்கு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, சாரா என்பவர் கைது செய்யப்படவேண்டியவர்களின் பட்டியலில் உள்ளார். அவர் உயிரிழந்திருந்தால் கைதுசெய்ய முடியாது. உயிருடன் இருந்தால் கைது செய்யப்படுவார். டி.என்.ஏ, பரிசோதனைகள் தற்போது இடம்பெறுகின்றன.” – என்றார்.

ஆங்காங்கே தோல் சுருக்கத்தை போக்கனுமா? மறக்காமல் இந்த பயிற்சியை செய்து வாருங்க

பெரும்பாலான பெண்களுக்கு அவா்களின் வயிறு மற்றும் உடலின் கீழ் உறுப்புகளில் எடை அதிகாித்தால், அந்த எடையைக் குறைப்பது என்பது எளிதான காாியம் அல்ல.

தொடைகள், பிட்டப் பகுதி மற்றும் வயிறு போன்ற பகுதிகளில் தேங்கும் கொழுப்பானது அதிகாித்து, அந்த பகுதிகளில் ஒருவிதமான தோல் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதைத்தான் செல்லுலைட் என்கிறோம். இந்த தோல் சுருக்கத்தை எளிதாக மாற்ற இயலாது.

ஆனால் யோகா பயிற்சிகளைச் செய்து வந்தால் அவை நமது தசைகளில் இறுக்கத்தை ஏற்படுத்தி, நாளடைவில் அந்த சுருக்கங்களை மாற்றிவிடும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

உத்கடாசனா

உத்கடாசனாவைத் தொடா்ந்து செய்து வந்தால், அது கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகாிப்பதோடு மட்டுமல்லாமல், இடுப்பு, தொடைகள் மற்றும் கால்களில் இருக்கும் செல்லுலைட்டைக் குறைத்து தோலிற்கு அழகைத் தருகிறது.

கருடாசனம்

கருடாசனா முழு உடலுக்கும் இறுக்கத்தைத் தருகிறது. தொடைகளை கசக்கி, கால்களால் உடலைத் தாங்கும் அளவிற்கு கால்களுக்கு வலுவைத் தருகிறது.

மேலும் உடலின் கீழ் உறுப்புகளில் உள்ள கொழுப்பை எாித்து, தோலை மிருதுவாக்குகிறது.

சா்வாங்காசனம்

சா்வாங்காசனா தொடைகளில் உள்ள தசைகளில் வேலை செய்து, உடலை தரையிலிருந்து மேல் நோக்கி நேராகச் தூக்கச் செய்கிறது.

இந்த ஆசனம் உடலில் உள்ள கொழுப்பை எாிப்பதோடு, தசைகளின் மையப் பகுதியை சீா்படுத்தி, செல்லுலைட் பிரச்சனையைக் குறைக்கிறது.

சேதுபந்தாசனம்

சேதுபந்தாசனத்தில் மல்லாக்கப் படுத்து தோள்பட்டை மற்றும் பாதங்களைத் தரையில் ஊன்றி, இருப்பிடப்பகுதி மற்றும் தொடைகளை தரையிலிருந்து மேலே உயா்த்த வேண்டும்.

அவ்வாறு செய்யும் போது இடுப்பு, இருப்பிடப்பகுதி மற்றும் தொடைகள் ஆகியவற்றில் இருக்கும் கொழுப்பு எாிக்கப்பட்டு, செல்லுலைட் என்ற தோல் சுருக்கம் படிப்படியாக மறையும்.

உத்தனாசனம்

உத்தனாசனாவை செய்து வந்தால் பிட்டப்பகுதி, இடுப்பு, மற்றும் தொடைகளில் உள்ள கொழுப்பை எாித்து, செல்லுலைட் சுருக்கத்தை குறைத்துவிடும்.

கும்பகாசனம்

கும்பகாசனாவை செய்து வந்தால், கைகளில் உள்ள தசைகளில் தேங்கியிருக்கும் கொழுப்பை எாித்து, அதிலுள்ள செல்லுலைட் சுருக்கத்தைக் குறைக்கும்.

மேலும் இந்த ஆசனம் முழு உடலுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

தயிர் சாப்பிடும்போது இந்த பழத்தை சாப்பிடாதீங்க!

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒன்று. பலாப்பழம் சுவையும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

ஆனால் அதை சில பொருள்களுடன் சேர்த்து சாப்பிடும்போது அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும்.

சில சமயம் அது மரணத்தை கூட ஏற்படுத்திவிவட வாய்ப்பு இருக்கிறது.

தயிருடன் எந்த பழத்தை சாப்பிடக்கூடாதுன்னு பார்ப்போம்

பலாப்பழமும், தயிரும்

  • பலாப்பழத்தை தயிருடன் சேர்த்து ஒருபோதும் சாப்பிடவே கூடாது.
  • இரண்டும் தனித்தனியாக இருக்கும்போது ஆரோக்கியமான பொருட்கள்தான் ஆனால் அவற்றை ஒன்றாக சாப்பிடும்போது அதனால் ஆபத்துகள் மட்டுமே ஏற்படுத்தி விடும்.
  • நமது முன்னோர்கள் காலத்தில் இருந்தே பலாப்பழத்தையும், தயிரையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். ஆயுர்வேதத்தில் இது மிகவும் ஆபத்தான உணவு சேர்க்கையாக கருதப்படுகின்றன.
  • ஆயுர்வேதத்தில் கூறியுள்ளபடி பலாப்பழத்தை தயிருடன் சேர்த்து சாப்பிடும்போது அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஒன்றோடொன்று கலந்து சில பிரச்சினைகளை உண்டாக்கி விடும்.
  • இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடும் போது இது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் குறிப்பாக வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி விடும். இதனால் மேலும் சில சரும பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அறிவியல் உண்மைகள்

  • ஆயுர்வேதத்தின் படி இவை இரண்டும் ஆபத்தான உணவாக இருந்தாலும் விஞ்ஞானரீதியாக பார்க்கும் போது அவை ஆரோக்கியமான பொருளாகவே கருதப்படுகின்றன.
  • சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தயிரில் பலாப்பழம் சேர்ப்பது அதன் தரத்தை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த இரண்டையும் சரியான அளவில் கலந்து சாப்பிடுவது உங்களுக்கு இருமங்கு பலனை தருகின்றன.
  • ஆனால் தவறான அளவில் சாப்பிடுவது பிரச்சினையைத்தான் உண்டாகும்.

குழந்தைகளுக்கு ஏன் தலையில் அதிகம் வியர்க்கின்றது?

சில குழந்தைகளில் தலையை தொட்டுப்பார்த்தால் வியர்வை அதிகமாக இருக்கும். இதனால் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் பெற்றோர்களுக்கு வரும்.

உடனே அவர்கள் மருத்துவரிடம் ஓடி போய் குழந்தையை காட்டுவார்கள். குழந்தைகளுக்கு தலை வியர்த்து போவது ஒரு சாதாரண விஷயம் தான். இதற்காக பெற்றோர்கள் பயப்பட வேண்டாம்.

குழந்தை பருவத்தில் தான் அனைத்து வகை வளர்ச்சிகளும் நிகழ்கின்றன. அந்த வகையில், இனிப்பு மொட்டுக்கள் முதலில் தலையில் தான் குழந்தைகளுக்கு உருவாகிறது.

வளர வளர அது உடல் பாகங்களுக்கு மாற்றப்பட்டு, வளர்ந்த பின் சில வருடங்களில், இனிப்பு மொட்டுக்களின் உருவாக்கம் நிறைவுபெறும். இவை தலையில் இருப்பதால், அதிகம் குழந்தைகளுக்கு அதிகமாக வியர்க்கும்.

குழந்தைகளின் தலை வியர்ப்பது, மூளையின் வளர்ச்சியையும் குறிக்கிறது. குழந்தையின் தலையில் வியர்க்கவில்லை எனில், மூளையின் செயல்பாடு சரியானதாக இல்லை என்று தான் அர்த்தம்.

குழந்தைகளின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 130 துடிப்பாக இருக்கும். பெரியவர்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 70-90 துடிப்புகள் இருக்கும். குழந்தைகளின் சுவாசமும், சுவாசிக்கும் முறையும் அதிகமாக இருக்கிறது. இவையும் குழந்தைகளின் தலை வியர்ப்பதற்கு காரணங்களாக அமைகிறது.

இப்படி அதிகம் வியர்த்தால், வாரத்திற்கு இருமுறை குழந்தைகளுக்கு தலைக்கு குளிக்க வைக்க வேண்டும். குளித்தபின், தலையை நன்றாக துவட்ட வேண்டும். ஸ்பாஞ்ச் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இப்படி செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் அதிக வியர்வையால் வாடை வராது.

குழந்தைகளுக்கு தலையில் அதிகம் வியர்ப்பதால் குழந்தைகள் தலையை எப்போதும் சொரிந்து கொண்டே இருக்கும் நிலை வரும். அப்போது உடனே பெற்றோர்கள் குழந்தைகளை தலைக்கு குளிக்க வைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் தான் அதிகமாக வியர்க்கும். அந்த சமயத்தில் குழந்தைகளின் உடல், தலை என அனைத்தை உடல் பாகங்களையும் போர்வையால் மூட கூடாது. எப்பொழுதுமே தலையை மூடாமல், குழந்தை தூங்கும் அறையில் நல்ல காற்று வசதி, வெளிச்சம், தூய்மை இருப்பது குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை தரும்.

குழந்தைகளுக்கு அதிகம் வியர்வை ஏற்படுவதால் மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளின் முடியை வெட்டிவிட வேண்டும். அல்லது மொட்டையடித்து விடலாம். இதனால் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் சளி போன்ற நோய்கள் ஏற்படுவது தடுக்க முடியும்.

இதனால்தான் குழந்தைகளுக்கு ஒரு வயது ஆனதும் கோவிலுக்கு சென்று மொட்டை போடும் பழக்கம் நம் மக்களிடம் உள்ளது.

நம் முன்னோர்கள் காரணம் இல்லாமல் எந்த விஷயத்தையும் சொல்ல மாட்டார்கள். பாரம்பரிய சம்பிரதாயங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் அறிவியல் ரீதியிலான பல உண்மைகள் இருக்கும்.

உங்களை வெற்றி அடையாமல் தடுக்கும் 5 காரணங்கள்!

நம் மூளையை 2 சதவிகிதம் மட்டுமே பெரும்பாலானோர் பயன்படுத்துக்கிறோம். இதுதான் தோல்விக்கான காரணமாக அமைகிறது.

அதற்கான 5 காரணங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தான் பணக்காரன் ஆக முடியும் என்று நினைக்காமல் இருப்பது

சிறு வயதில் வளர்ந்த சூழல்கள் இதற்கான முக்கிய காரணம் எனலாம். அவர்கள் சிறுவயதில் இருந்தே பணக்காரர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்ற செய்தியை மனதில் விதித்திருப்பார்கள். பெரிய கனவுகள் வேண்டாம் என்று தன்னை தானே தாள்த்தி கொண்டு ஒதுங்கி இருப்பர். மேலும், அவர்கள் வெறுக்கும் அந்த பணத்தை சம்பாதிக்க தினமும் குறைந்த சம்பளத்தில் வேலையில் ஈடுபடுவர். உங்கள் வாழ்க்கையில் பணம் சம்பாதித்து வெற்றியடைய நினைத்தால் நிச்சயம் இந்த குணத்தை மாற்றி கொள்ள வேண்டும்.

வேலைகளை தள்ளி போடுவது.

வெற்றியடையாதவர்களின் முக்கிய குணம், ஒரு வேலையை தள்ளிபோடுவது. குறிப்பாக ஒரு வேலை இந்நேரத்தில் செய்ய நேரம் இருந்தும் அதை மாலை வேளை செய்யலாம், நாளை செய்யலாம் என்று தள்ளிபோடுவது.

குறிப்பாக தனக்குதானே நான் இதை செய்வேன் என்று எண்ணிக்கொண்டே இருபார்கள் தவிர அந்த வேலையில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாமல் இருப்பர்.

தோல்விகளை பார்த்து பயப்படுவது

சிறுவயதில், படிக்கும்போது வெற்றி பெறவில்லை என்றால் பெற்றோர் அவர்களை கடுமையாக தாக்குவார்கள். அதற்கு பயந்து ஒழுக்கமாகவும், படிக்கவும் செய்வார்கள். இதனை வழக்கமாக கொண்டு வளர்ந்த பிறகும் வாய்ப்புகள் கண்முன் இருந்தும் அதை முயற்சிகாமல் தோல்விகளை பற்றி சிந்தித்து கொண்டிருப்பர்.

ஒரு விடயம் குறித்து யாரேனும் விமர்சித்தால், அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையை கொண்டிருப்பர். இதனால், முயற்சி செய்வதையும் முற்றிலும் விரும்பமாட்டார்கள்.

கற்றுக்கொள்வதை நிறுத்துவது.

யாராவது வந்து உங்களுக்கு ஒரு விடயம் குறித்து விவரித்தால், உடனே அவர்கள் எனக்கு எல்லாம் தெரியும் என்ற தொனியில் பதிலளப்பர். இது, தன் மற்றவர்களை போல் ஸ்மார்ட் ஆக இல்லையோ என்று சிந்திக்கு தோன்றும். இதனால், புதிதாக கற்றுக்கொள்ளாமல் இருப்பர்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க வேண்டும் அல்லது வெற்றி அடையவேண்டும் என்றால் நீங்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். எப்போது நீங்கள் கற்றுக்கொள்வதை நிறுத்துகிறீகளோ அப்போது நீங்கள் தொய்வடைய துவங்குவீர்கள்.

ஒரு முயற்சியை தொடங்கி பாதியிலேயே நிறுத்துதல்

பொதுவாக பலரும் எடைகுறைக்க ஜிம்க்கு போக வேண்டும் என்று முடிவெடுப்பர் ஆனால் பலரும் அதை கடைபிடிப்பதில்லை. சில நாட்கள் மட்டும் சென்று விட்டு மற்ற நேரங்களில் அப்படியே நிறுத்தி விடுவர்.

இது போன்ற செயல், பல இடங்களில் தொடரும். பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைத்து ஒருமாதம் தொடங்குவார்கள் அடுத்த மாதத்தில் இருந்து அது கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டே செல்வார்கள் இப்படி அவர்கள் வெற்றியடையாமல் இருப்பர்.

சிறு வயதிலே இளநரையா? இதனை எப்படி தடுக்கலாம்?

பொதுவான இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு கூட நரைமுடி பிரச்சினை வந்துவிட்டது.

ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை, உணவு பற்றாக்குறை போன்றவையும் முன்கூட்டியே நரை விழ தொடங்க காரணங்களில் ஒன்றாகிவிடுகிறது.

இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்துவதே நல்லதாகும். இல்லாவிடின் இது வளர வளர தீவிர பிரச்சினையாக மாறிவிடும்.

அந்தவகையில் குழந்தைகளில் நரை முடி வருவதை தீவிரமாகாமல் தடுக்க உதவும் சில எளிமையான பாதிப்பில்லாத ஒரு சில குறிப்புக்களை பற்றி இங்கே பார்ப்போம்.

  • தேங்காய் எண்ணெய் உச்சந்தலையில் ஈரப்பதத்தை அளித்து முடியின் வலிமையை மேம்படுத்த செய்கிறது. வளரும் பிள்ளைகளின் நரைமுடி தீர்வுக்கு நீங்கள் தேங்காய் எண்ணெயுடன் நெல்லிக்காய் விழுதை சேர்த்து வேகவைத்து பிள்ளைகளின் உச்சந்தலையில் மசாஜ் செய்துவிடவும். இது படிப்படியாக நரைமுடியை குறைத்து மேலும் தீவிரமாகாமல் தடுக்க செய்யும்.
  • பாதாம் எண்ணெய் மற்றும் நெல்லிச்சாறு இரண்டையும் சம அளவில் கலந்து காய்ச்சி கண்ணாடி பாட்டிலில் வைக்கவும். இதை தினசரி பிள்ளைகளின் உச்சந்தலையில் தடவி இலேசாக மசாஜ் செய்தாலே போதுமானது. இளநரையை தடுக்க தவிர்க்காமல் தினமும் பயன்படுத்துங்கள்.
  • தேங்காய் எண்ணெயை இரும்பு வாணலியில் இலேசாக கொதிக்க வைத்து அதில் கறிவேப்பிலை விழுதை அரைத்து சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும். இதை தினசரி தலையில் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் குழந்தையின் நரைமுடி படிப்படியாக குறையக்கூடும்.
  • பசுமாட்டிலிருந்து எடுத்ததாக இருக்க வேண்டும். . குழந்தைகளுக்கு தலைக்குளியலின் போது ஒரு மணி நேரம் முன்னதாக உச்சந்தலை முடியில் தடவி பிறகு தலைக்கு குளிக்க வைத்தால் இளநரை மேலும் வராமல் தவிர்க்கலாம்.
  • பாதாம் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து ஒரு பாட்டிலில் வைக்கவும். இதை குழந்தையின் உச்சந்தலையில் தடவி சுமார் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள். பிறகு மைல்டான அதிக இரசாயனம் இல்லாத ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசி எடுங்கள்.

அற்புத மருத்துவகுணம் கொண்ட முருங்கை இலை! இந்த நோய்களுக்கு எல்லாம் பயன்படும்!

முருங்கையின் இலை, ஈர்க்கு, பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் ஆகிய எல்லாப்பாகங்களும் மிகச்சிறந்த உடலுக்கு அன்றாட தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முக்கியமான உணவுப் பொருள் ஆகும்.

இந்த முருங்கை உணவானது பல்வேறு நோய்களை வராமல் தடுக்கக்கூடிய மற்றும் பலவகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய மருந்தாகவும் பயன்படுகிறது.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

அந்தவகையில் முருங்கையிலையில் அடங்கியுள்ள மருத்துவகுணங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

  • முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும்.
  • முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.
  • முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
  • முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும்.
  • முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.
  • முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
  • வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.
  • முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.
  • முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

மே 21 சர்வதேச தேயிலை தினம்: இலங்கையில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு!

0
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச தேயிலை தின நிகழ்வு தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கூறிய கருத்துகள் வருமாறு, “இலங்கை...

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!

0
  நாடாளுமன்றம் நாளை 19 ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை கூடும் என்று நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தெரிவித்தார். பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள்...

இன்றாவது களமிறங்குவாரா தோனி?

0
ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடனான ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடுகிறது. சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி விளையாடும் கடைசி ஆட்டமாக அமைந்துள்ளது. இதில் தோனி...