Home Blog Page 3543

யாழில் வீதியில் வெற்றிலை எச்சில் துப்பினால் 2 ஆயிரம் ரூபா அபராதம்

யாழ்ப்பாணம் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாவும், வெற்றிலை துப்பினால் 2 ஆயிரம் ரூபாவும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கையினை மேற்கொள்ளுவதற்காக மாநகர காவல் படை உருவாக்கட்டுள்ளதாக விஸ்வலிங்கம் மணிவண்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர சபையில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

யாழ்ப்பாண மாநகரத்தினை தூய்மையான நகரமான பேணுவதற்காக மாநகரசபை ஊழியர்கள் ஐவர் மாநகர காவலர்களாக தனியான சீருடை அணிந்து நாளையிலிருந்து கடமை புரிவார்கள்.

மாநகரத்தினை தூய்மையாக பேணுவதற்காக பொது இடங்களில் குப்பை கொட்டுவோர், வெற்றிலை துப்புவோர், வாகனங்களை பொதுவிடங்களில் நிறுத்துவோர், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை தடுப்பதற்கும், குற்றமிழைப்போருக்கு தண்டப்பணம் விதிப்பதற்கு யாழ்ப்பாண மாநகர ஊழியர்கள் ஐவர் தனியான சீருடை அணிந்து நாளையிலிருந்து கடமையில் ஈடுபடுவார்கள்.

பொது இடங்களில் குப்பை கொட்டுவதற்கு ஐயாயிரம் ரூபா தண்டப்பணமும் வெற்றிலை துப்புவோருக்கு 2 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதோடு குறிப்பாக யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றல் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பிலும் அந்த காவலர்கள் தமது பணியினைச் செயற்படுத்துவார்கள் என தெரிவித்துள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி வாய்ந்த மூலிகை டீ! எப்படி தயாரிப்பது ?

சளி, காய்ச்சல், உடல்வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை டீயை போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இன்று இந்த டீயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்:
  • இஞ்சி – 1 கப்
  • கிராம்பு, பட்டை – 10
  • அன்னாசிப்பூ -5
  • ஏலக்காய் – 5 கிராம்
  • துளசி – ஒரு கைப்பிடி
  • மிளகு – 5 கிராம்
  • அதிமதுரம் – 2 ஸ்பூன் அளவு
  • அஸ்வகந்தா – 1/4 ஸ்பூன்

 

செய்முறை
  • இஞ்சியை தோல் சீவி தண்ணீரில் நன்றாக அலசி கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • பிறகு அதை வெயிலில் தண்ணீர் உலரும் வரை காய வைக்கவும்.
  • துளசியை தண்ணீரில் அலசி அதையும் நன்றாக வெயிலில் உலர விட வேண்டும்.
  • பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து அதில் மிளகு மற்றும் ஏலக்காயை வறுத்து கொள்ளவும்.
  • அடுத்து அதில் வெயிலில் உலர்ந்த இஞ்சி, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ ஆகிவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.
  • வறுத்த கலவையை ஆறவைத்து மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
  • பிறகு அரைத்த பொடியில் அதிமதுரம் மற்றும் அஸ்வகந்தா பொடியை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  • இதை தினமும் காலையில் குடிக்கும் தேநீரில் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால் உடலுக்கு எந்த வித நோயும் அண்டாது.

ஆயிரம் ரூபாவுக்கு பின்னாலுள்ள துரோகங்களை அம்பலப்படுத்தினார் திகா!

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைத்தாலும் கம்பனிகளின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. தொழில் சுமைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரு சில தோட்டங்களில் 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். வேலை நாட்கள் குறைக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே, ஆயிரம் ரூபா என்ற போர்வையில் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

நாம் இவ்வளவு நாளாக மௌனமாக இருந்தோம். புத்தாண்டுக்கு பின்னர் போராட்டம் வெடிக்கும்.”

இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. குறிப்பிட்டார்.

அடிவாங்கும் குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும்?

பையன் அடங்கவே மாட்டுறான். ஒன்னு போடு அடங்கிவிடுவான். எதையாவது பண்ணிக்கிட்டே இருக்கா. இவள என்ன பண்றதுன்னு தெரியல. வர்ற கோவத்துக்கு அப்படியே தூக்கி அடிக்கலாம் போல இருக்கு. இப்படின்னு குழந்தைகள் பண்ற தப்புக்கு பெற்றோர்கள் கோபப்படுவதை பார்த்திருக்கிறோம்.

இன்னும் சில பேர் என்னை எங்க அப்பா, அம்மா அடிச்சதுனாலதான் நான் பெரிய ஆளா வந்திருக்கிறேன்னு பெருமை பேசிறதையும் பார்த்திருக்கிறோம். ஆனால் காலம் மாறி போய்விட்டது.

அடித்தால் குழந்தைகள் சரியாகிவிடுமா? அப்படி நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு.

பெற்றோர், ஆசிரியர், வீட்டில் உள்ள பெரியவர் யாராக இருந்தாலும் குழந்தைகளை அடிக்க கூடாது. அடிப்பது ஒரு குற்றச் செயல்.

மனிதராக பிறந்த நமக்கு உடல் ரீதியாக யார் மூலமாவது துன்பம் வந்தால் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள சட்டம் உள்ளது. அது போல குழந்தைகளுக்கும் சட்டம் உள்ளது.

நம் உடல் மேல் நமக்கு எப்படி உணர்வு இருக்கிறதோ, அதுபோல குழந்தைகளுக்கும் அதே உணர்வு உள்ளது. குழந்தைகளுக்கு பிடிக்காத முறையில் அவர்களது உடலை, மனதைக் காயப்படுத்தும் செயல் குற்றம்.

மனித உரிமைப்படி உடல் ரீதியாக துன்பப்படும் குழந்தைகள் சட்டத்தின் பாதுகாப்பை அணுக முடியும். வழக்கு தொடரவும் முடியும்.

முன்பெல்லாம் எங்கள் அப்பா, அம்மா அடித்து வளர்த்த பிறகு தான் நான் எல்லாம் முன்னேறினேன் என்று சில பேர் சொல்வதை கேட்டிருக்கிறோம். முன்பிருந்த அதே மனநிலை, உடல்நிலை, வளர்ச்சி, பக்குவம், சூழல் இன்று கிடையவே கிடையாது.

இதை அவசியம் பெரியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய குழந்தைகள் ரொம்பவே சென்ஸிடிவ்வாக இருக்கிறார்கள். உடன் படிக்கும் தோழி பேசவில்லை என்று ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அம்மா, அப்பா எப்போதும் என்னை அடிக்கிறாங்கன்னு ஒரு மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. வகுப்பில் எல்லோர் முன்னரும் ஆசிரியர் அடித்தார் என ஒரு மாணவி பள்ளி கட்டிடத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாள்.

நாம் குழந்தைகள் நம் சொத்தாக, நம் உரிமையாகப் பார்க்கிறோம். உண்மையில், அவர்கள் நம் மூலம் வந்திருக்கிறார்கள்.

ஆனால், நம்மை போல அவர்களின் இயல்பு, சுபாவம், கனவு, ஒழுக்கம், நடவடிக்கை எல்லாம் ஒன்று போல இருக்காது. அப்படி அவர்கள் என்னைப்போலதான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியாகாது.

இது அவசர உலகம். காலம் மாறி கொண்டே போகிறது. குழந்தைகளின் மன வளர்ச்சி, மனப்போக்கில் மாற்றம் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

பொதுவாக உயிரினங்கள் தன்னை விட பலசாலியான ஓர் உயிரினத்தால் ஆபத்து வர நேர்ந்தால் ஏதாவது ஒரு கட்டத்தில் தன்னைத் தற்காத்து கொள்ள எதிர்க்கும். அதுபோல, குழந்தைகளும் இயற்கையாகவே 4-5 வயதில் தன்னை காயப்படுத்தும் நபரை எதிர்க்கவோ, அடிக்கவோ, தன் எதிர்ப்பினை எதாவது ஒரு முறையில் காட்டவோ செய்கிறார்கள்.

அடி என்றைக்குமே ஒன்றுமே உதவாது. இது அனைவருக்கும் பொருந்தவும் பொருந்தாது. முக்கியமாக, குழந்தைகளுக்கு வாய்ப்பே இல்லை. அடிக்க, அடிக்க குழந்தைகள் கோபக்காரர்களாக மாறுவார்கள்.

அதீத இயக்கம், கோபம், வெறுப்பு, கெட்ட செயல்கள், கெட்ட எண்ணங்கள், கெட்ட சேர்கையிலும் கெட்ட செயலிலும் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக வந்துவிடும். அந்த மனநிலைமைக்கு மாறிவிடுவார்கள்.

குழந்தையை அடித்த பிறகு எந்த ஒரு பெற்றோரும் ஆனந்தமாக இருக்க மாட்டார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குழந்தை தெரியாமல் தன்னைத் திருப்பி அடித்து விட்டான் என நினைத்து நிம்மதியாக இருக்க முடியுமா அது மிக கொடுமை. அடிப்பது என்பது குற்றம்.

வன்முறை என்றைக்குமே தீர்வாகாது. நல்வழிப்படுத்த அன்பும் அக்கறையும் அரவணைப்பும் புரிதலுமே மிகவும் அவசியம். எந்த காரணமோ எந்த சூழலோ பெற்றோர் குழந்தைகளை அடிப்பது சரியான முடிவாக இருக்கவே இருக்காது.

ஒரு குழந்தை ஒரு தவறை செய்தால், அந்த குழந்தையிடம் பேசாமல் இருப்பது, கொஞ்சாமல் இருப்பது என என்ன குழந்தைகளின் பலவீனத்தில் சிறிய தண்டனை வழங்கி குழந்தையை திருத்தவேண்டும்.

இப்படி செய்வியா என நன்றாக அடி அடித்துவிட்டு, ஒரு மணி நேரமோ அடுத்த நாளோ குழந்தையை தூக்கி கொஞ்சுவதில் எந்த ஒரு பயனும் இல்லைவே இல்லை. இந்த நிலை குழந்தையின் நடவடிக்கையை இன்னும் மோசமாக்கும்.

பெற்றோர்கள் புரிந்து நடந்தால் குழந்தைகள் மனநிலையிலும், உடல் நிலையிலும் ஆரோக்கியமாக வளருவார்கள்.

ஈர்ப்புக்கான உளவியல் காரணங்கள்?

ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட பல உளவியல் காரணங்கள் உள்ளது. ஈர்ப்பு என்பது பேசுதல், பழகுதல் போன்ற அனைத்திற்கு அடிப்படையாக இருக்கும். அந்த ஈர்ப்பின் அடிப்படையான நான்கு படிநிலைகள் குறித்து பார்க்கலாம்

சமூகம்

  • பொதுவாக சமூகத்தில் பலருக்கும் தங்களை சிரிக்க வைக்கும் நபர்களை அதிகம் பிடிக்கும். அதற்கு காரணம், அவர் திறந்த மனம் படைத்தவர் என்ற நம்பிக்கை. அதிலும் குறிப்பாக சிரிக்க வைக்கும் நபர் மற்றவர்களை காயப்படுத்தாமல் சிரிக்க வைக்க வேண்டும். அவர், தன்னை தனேயும் காயப்படுத்தி கொள்ளவும் கூடாது என்பது மிகவும் அவசியம்.
  • மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளுதல், புதிய நபர்களை அதிகம் சந்தித்து பேசுதல் ஆகியவை ஈர்பினை உண்டாக்கும்.
  • புதிய நபர்களுடன் அறிமுகம் ஏற்படுத்திக்கொள்ளும் போது, அவர்களை சாதுரியமான இடத்தில் இருப்பவராக உணர வைத்தல். (எடுத்துக்காட்டு) புதிய நபரை பார்த்ததும், வணக்கம் சொல்லி அவரை வேறொரு நபர் என்ற உணர்வு இல்லாத அளவில் நண்பராக உணர செய்தல்

மனநிலை

  • ஒருவர் நம்மை சந்தித்தால், அவருக்கு மீண்டும் நம்மை சந்திக்க வேண்டும் என்ற உணர்வு தூண்டும் அளவில் நடந்து கொள்ளுதல்.
  • புதிய தகவல்கள் ஒருவர் நம்மிடம் கூறினால், அதை நாம் தெரிந்த விடயமாக இருந்தாலும், அவரிடம் பேசி கேட்டுக்கொள்ளுதல்.
  • ஒருவர் பேசும் போது அவரை தவிர்க்காமல், அவர் என்ன பேச வருகிறார் என்ற கேட்டுக்கொண்டால் எதிரில் இருக்கும் நபருக்கு நம்மை நன்றாக பிடிக்கும்.
  • தன்னம்பிக்கை அதிகமாக இருக்கு நபராக நடந்து கொள்ளுதல். எதிர்மறை செயல்களை பரப்பாமல், தன்னம்பிக்கை ஊட்டும் விடங்களை அதிகம் பகிருதல்.

பொருட்கள்

விலை உயர்ந்த பொருட்கள் அதிக வசதியான வாழ்க்கை போன்றவை ஒருவர் நம்மீது ஈர்ப்பு கொள்ள உதவும்.

உடல் அமைப்பு

உடல் அமைப்பு ஒருவரை நிச்சயம் ஈர்க்கும். கடவுள் படைப்பில் பெண்களின் உடல் அமைப்பு ஆண்களுக்கு ஈர்ப்பை உண்டாக்கும். எனவே தான் பெண்கள் உடலை பார்த்து ஆண்கள் ஈர்க்கப்படுகின்றனர். இது ஆண் பெண் இணைய உதவியாக இருக்கும்.

நகங்களை அழகாக பராமரிக்க இதோ சில சூப்பரான டிப்ஸ்!

பொதுவாக நகம் வளர்ப்பது ஒரு சிலருக்கு பிடித்தமான ஒரு விஷயம். குறிப்பாக பெண்களுக்கு நீளமாக நகம் வளர்த்து அதில் விதவிதமாக நெயில்பாலிஷ் போட்டு அழகு பார்ப்பது அவர்களின் பொழுதுபோக்காக இருக்கக்கூடும்.

ஆனால் நகம் வளர்ப்பது அனைவருக்கும் எளிதான ஒரு காரியம் அல்ல. சிலருக்கு அடிக்கடி நகம் உடைந்துவிடுவதால் அதனை நிர்வகிப்பது சற்று கடினமான செயலாக இருக்கும்.

இதற்கு பணத்தை செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கூட எளிய முறையில் நகத்தை அழகுப்படுத்த முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.
  • எலுமிச்சம்பழத் தோலை பயன்படுத்தி நகங்களை சுத்தம் செய்வது நல்லது. பாலைக் கொதிக்க வைத்து இறக்கிப் பதமான சூட்டில் நகங்களில், படுமாறு செய்து சுத்தமான பஞ்சில் துடைக்க நகம் பளபளக்கும்.
  • கை கழுவும்போது நகத்தில் தண்ணீர்படும். உடனடியாக தண்ணீர் சிறிதளவு கூட இல்லாத வகையில் காய்ந்த டவலால் நகங்களைத் துடைத்துவிட வேண்டும்.
  • பாதாம் எண்ணெய்யை நகங்களுக்கு பூசி அரைமணி நேரம் வைத்திருந்து கடலைமாவினால் கழுவி சுத்தம் செய்தால் நகங்கள் மினுமினுக்கும்.
  • ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும். வாரம் ஒருமுறை நகங்களை வெட்டி சுத்தம் செய்யுங்கள். மேலும் நகங்களில் இருக்கும் அழுக்குகளை நீக்கவேண்டும்.
  • கால் நகங்களை யூ வடிவில் வெட்டுவதை தவிர்த்து விட்டு நேராக வெட்டி விட வேண்டும். இப்படி செய்வதினால் கால் நகங்களை எளிமையாக சுத்தம் செய்யலாம், எளிதில் அழுக்கு அடைவதையும் தவிர்க்கலாம்.
  • நகங்கள் பளபளப்புடன் மஞ்சள் நிறமாக மாறாமல் இருப்பதற்கு வாரத்தில் இரண்டு நாளாவது நெய்ல் பாலிஷ் போடாமல் இருப்பது நல்லது.

முதுகு வலி சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கனுமா? இந்த மூன்று பயிற்சியே போதும்

முதுகு வலி என்பது நம்மிடையே காணப்படும் சர்வ சாதாரண சொல்லாகும். 90 சதவீத மக்கள் வாழ்வில் ஒரு முறையாவது முதுகு வலி அனுபவிக்காமல் இருந்திருக்க முடியாது.

முதுகுவலி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆயினும் 25 வயது முதல் 55 வயது உடையோர் அடிக்கடி கூறுவர்.

இதனை போக்க ஒரு சில யோகாசனங்கள் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

பிளாங் போஸ்

முதலில் டேபிள் டாப் நிலையில் முட்டி போட்டு இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி நில்லுங்கள். பின் இரண்டு கால்களை நீட்டி கொள்ளுங்கள்.

உங்கள் கைகளை தரையில் அழுத்தி, ஒரு அடி உடலை பின்வாங்கவும், உங்கள் உடலை தரையில் இணையாகக் கொண்டு வாருங்கள்.

தோள்களை விரித்து உடலானது தரையில் செங்குத்தாக இருககுமாறு பார்த்துக் கொள்ளவும்.

உங்கள் கைகளை தரையில் அழுத்தி, உங்கள் தோள்பட்டைகளை அகலமாக பரப்பவும்.

மார்பைத் திறந்து, முதுகு எலும்பை கீழே இழுத்து, தொடைகளைத் தூக்கி, கால்கள் மூலம் உடலை தாங்குங்கள்.

தலையை முன்னோக்கி வந்து தரையை நோக்கி மெதுவாகப் பாருங்கள். 5 முதல் 10 சுவாச சுழற்சிகளுக்கு இருங்கள்.

இந்த போஸ் அடிவயிற்றுக்கு நன்மை பயக்கும் என்பது மட்டுமல்லாமல், பின்பக்க தசைகளை வலுப்படுத்தவும் பயன்படுகிறது.

​நிற்கும் வில் போஸ்

நேராக நின்றுக் கொண்டு உங்களது இடது பக்க காலை பின்னோக்கி தூக்கி கணுக்காலில் இடது கையால் இருக்க பிடித்து கொள்ளவும். உங்கள் உடலை வில்லாக வளைத்து வலது கையை நேராக நீட்டி முத்திரை போட்டு கொள்ளவும்.

மிக ஆழ்ந்து சுவாசிக்கவும். 30-60 வினாடிகள் இதே நிலையில் தொடரவும.பின் கால்களை மாற்றி கொள்ளவும். இது தான் வில் முறை யோகா ஆகும்.

இந்த போஸ் உடற்பகுதியை நீட்டி முதுகெலும்பு மற்றும் பின்புற தசைகளை பலப்படுத்துகிறது.

​மவுண்டைன் போஸ்

நேராக நின்று கொள்ளவும். இப்பொழுது உங்கள் இரண்டு குதிகால்களை ஒன்றாக மேலே தூக்கவும். உங்கள் கால்விரல்களை விரித்து, இரு கால்களிலும் உங்கள் உடல் எடையை சமமாக தாங்கவும். உங்கள் தோள்களைத் தளர்த்தி, அவற்றை முன்னும் பின்னும் உருட்டவும்.

உங்கள் கைகளை மேல்நோக்கி தூக்கி கொள்ளவும். ஆழமான சுவாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

சில மணி துளிகள் இந்த யோகாவினை செய்தால் போதுமானது. இதுவே முதுகுவலி சார்ந்த பாதிப்பினை தடுக்க உதவுகிறது

நௌப்பர் மௌலவியா பிரதான சூத்திரதாரி? ஐக்கிய மக்கள் சக்தி சந்தேகம்

21/4 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பது அரசாங்கத்தினால் புனையப்பட்ட கதையாகக் கூட இருக்கலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரியெல்ல சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியின் சர்வதேச சக்திகள் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள போதிலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இதுதொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. பிரதான சூத்திரதாரி பற்றியும் இல்லை.

இந்நிலையில் தாக்குதல் நடைபெற்று 2 வருடங்கள் நெருங்கும்வேளை பிரதான சூத்திரதாரியொருவரின் பெயர் நேற்று திடீரென வெளியிடப்பட்டுள்ளது.  நௌபர் மௌலவி என்பவர் 2019 ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்டிருந்தாலும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னினையில் சாட்சியளிக்கவில்லை. இது ஏன்?

கொழும்பு பேராயர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பும் பிரதான சூத்திரதாரி குறித்து கேள்வி எழுப்புவதால் அரசாங்கத்துக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அந்த அழுத்தங்களில் இருந்து தப்பிப்பதற்காகவே  நௌப்பர் மௌலவியின் பெயரை வெளியிட்டிருக்கலாம். ” – என்றார்.

பசறையில் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த முதியவர் திடீர் மரணம்!

வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த முதியவர் ஒருவர், கீழே விழுந்த நிலையில் மரணமான சம்பவமொன்று, பசறைப் பகுதியின் கோணக்கலை பெருந்தோட்டத்தின் ரேந்தபொல பிரிவில், (இன்று) 07-04-2021ல் இடம்பெற்றுள்ளது.

ரேந்தபொல பிரிவு தோட்டத்தினைச் சேர்ந்த எஸ். இராமச்சந்திரன் என்ற 65 வயதுடைய நபரே, மரணமானவராவார்.

இவர் (இன்று) 07-04-2021 காலை தமது தோட்டக்குடியிறுப்பிற்கு முன்னாலுள்ள வீட்டுத் தோட்டத்தில், தோட்ட வேலை செய்து கொண்டிருந்தார். அந்நிலையில், அவர் கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து, அவரது மனைவி தனது கணவருக்கு தேநீர் கொண்டு சென்ற வேளையில், அவர் கீழே விழுந்திருக்கக் கண்டு, அவரைத் தூக்க முயற்சித்த வேளையில், அவர் இறந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இது குறித்து, பசறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு, பொலிசாரும் அங்கு வந்துள்ளனர்.
விசாரணைகள் தொடர்கின்றன. மாரடைப்பு இம் மரணத்திற்கு காரணமாக இருக்கலாமென்று சந்தேகிக்கப்படுகின்றது.

எம். செல்வராஜா, பதுளை

இவர்கள் மட்டும் தப்பித்தவறி கூட கருவாட்டை சாப்பிடவே கூடாதாம்

கருவாடு யாருக்கு தான் பிடிக்காது. சிலருக்கு கருவாடு வாசனை தான் பிடிக்காதே தவிர, சமைத்த பிறகு ஒருப்பிடி பிடிக்காமல் விட மாட்டார்கள்.

கருவாடு பலருக்கு சரியாக சமைக்க தெரியாது. அதனால், சுவை சரியாக வராது. எல்லா வகை கருவாடும் உடலுக்கு நல்ல தான்.

கருவாடு கறி சமைக்கும் வரை அல்லது பொரியல் செய்யும் வரை வேண்டாம் என்று சொல்பவர்கள் செய்தபின் சட்டியையே துடைத்து சாப்பிட்ட நினைவுகளும் உள்ளது.

இப்படியான கருவாட்டில் இருக்கும் சத்துக்கள் அதிகமானவை, குறிப்பாக சின்ன கருவாடான நெத்தலி. நெத்தலி தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது கூட சிறந்தது என்று சொல்கின்றனர்.

அந்த அளவிற்கு பயனுள்ளது இந்த கருவாட்டு வகைகள். குறிப்பாக மாமிச வகைகளில் கொழுப்பு குறைந்தவை என்றால் மீன் மற்றும் கருவாடு தான்.

இத்தனை நல்ல விடயங்களை கூறிவிட்டு ஏன் கருவாட்டை சாப்பிட வேண்டாம் என கூறுகின்றோம் தெரியுமா? எல்லோரும் உடல் நிலையும் ஒரே மாதிரி கிடையாது என்பது நீங்கள் அறிந்தது தான். ஒவ்வொருவரின் நோய்களை பொறுத்து தானே உணவு எடுத்துக் கொள்ள முடியும்.?

அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு மீன் மற்றும் கருவாடு தான். ஆனால், கருவாட்டை எந்தெந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது, யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என உங்களுக்கு தெரியுமா?

மீன், நண்டு

கருவாடு மட்டுமின்றி மீன், நண்டு போன்ற உணவுகள் சாப்பிடும் போதும், மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது. இது புட் பாய்சன் ஆக காரணமாகலாம்.

வாந்தி, பேதி

மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி போன்றவை சேர்த்து ரசம் வைத்து கருவாட்டுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. மேலும் இந்த ரசத்தை தனியாக குடித்து வந்தால் அஜீரணம், வாந்தி, பேதி ஆகாமல் தடுக்கும்.

தலை குளியல்

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கருவாடு, மீன், நண்டு, இறால், தயிர், மோர் போன்ற உணவுகள் சாப்பிட கூடாது.

சைனஸ்

சைனஸ், மூக்கடைப்பு, சளி, இருமல், தும்மை, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற கோளாறு உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கவே கூடாது.

வெண் மேகம்

மீன், கருவாடு சாப்பிட்ட பிறகு பால், தயிர் சாப்பிடக்கூடாது. மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ளவர்கள் உப்பு அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

சரும பிரச்சனை

சரும பிரச்சனை மற்றும் ஒவ்வாமையால் அவதிப்படுபவர்கள் கருவாடு சாப்பிடாமல் இருப்பது நலம்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!

0
  நாடாளுமன்றம் நாளை 19 ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை கூடும் என்று நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தெரிவித்தார். பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள்...

இன்றாவது களமிறங்குவாரா தோனி?

0
ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடனான ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடுகிறது. சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி விளையாடும் கடைசி ஆட்டமாக அமைந்துள்ளது. இதில் தோனி...

play-off சுற்று வாய்ப்​பை தக்க வைக்​கும் முனைப்பில் சிஎஸ்கே இன்று களத்தில்!

0
  IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 63 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30...