Home Blog Page 3544

ஊவாவில் 27 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த நடவடிக்கை

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் 27 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் நடவடிக்கைகளை, கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது. இவ் 27 பாடசாலைகளில் தமிழ்ப் பாடசாலையொன்றும், முஸ்லீம் பாடசாலையொன்றுமாக இரு தமிழ் மொழி மூல பாடசாலைகளும் அடங்கியுள்ளன.

மொனராகலை கல்வி வலயத்தின் ஸ்ரீ விபுலானந்தர் தமிழ் மத்திய மகா வித்தியாலயமும், பிபிலை கல்வி வலயத்தின் பக்கினிகாவெல முஸ்லீம் மத்திய மகா வித்தியாலயமுமாக இரண்டு தமிழ்மொழி மூல வித்தியாலயங்களே, தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளனவாகும்.

மொனராகலை கல்வி வலயத்தின் ஏழு மத்திய மகா வித்தியாலயங்களும் பிபிலை கல்வி வலயத்தின் ஏழு மத்திய மகா வித்தியாலயங்களும், வெள்ளவாயா கல்வி வலயத்தின் ஐந்து மத்திய மகா வித்தியாலயங்களும், தனமல்விலை கல்வி வலயத்தின் ஆறு மத்திய மகா வித்தியாலயங்களுமாக 25 மத்திய மகா வித்தியாலயங்கள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன. குறிப்பிட்ட 25 பாடசாலைகளும் சிங்கள மொழி மூல பாடசாலைகளாகுமென்பது குறிப்பிடத்தக்கது.

மொனராகலை மாவட்டத்தின் 27 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும், முதல் கட்ட ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 29ந் திகதி, இடம்பெறவுள்ளது. இந்நிகழ்விற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார்.
மொனராகலை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டம் 06-04-2021ல் நடைபெற்ற போதே, மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

புத்தாண்டு கொரோனா அலை உருவாகும் அபாயம் – விழிப்பாகவே இருப்போம்!

சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் புத்தாண்டு நிகழ்வுகளை நடத்தாவிட்டால் மீண்டுமொரு கொரோனா அலை உருவாகக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, அனைவரும் விழிப்பாகவே செயற்பட வேண்டும் – என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த இணையவழி ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது.

இதன்போது புத்தாண்டை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகிவருகின்றனர். பொருட்களை வாங்குவதற்கு ஒன்றுகூடுகின்றனர். இதனால் கொரோனா வேகமாக பரவக்கூடிய அபாயம் உள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு அறிவிப்பு விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“மாவட்ட மட்டத்தில் நடைபெறும் அபிவிருத்திக்குழுக் கூட்டங்களில் பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு பல அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக புத்தாண்டு நிகழ்வுகளின்போது முதலாவது மற்றும் இரண்டாவது தொடர்பாளர்களை இனங்காண்பது கடினமாக செயலாகும். எனவே, இக்காலப்பகுதியில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் சுகாதார வழிக்காட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை உரிய வகையில் பின்பற்ற வேண்டும்.
அதேபோல் கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில், நிகழ்வுகளை உரிய வழிகாட்டல்கள், கட்டுப்படுத்தல்களுடன் நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரிகளும் உரிய வகையில் செயற்படவேண்டும்.

அவ்வாறு இல்லாது வழமைபோல் நிகழ்வுகள் நடத்தப்படுமானால் மீண்டுமொரு கொரோனா அலை உருவாகலாம். எனவே, அனைவரும் அவதானத்துடன் செயற்படவேண்டும்.” – என்றார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி.பதவியும் பறிபோனது!

ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று சபையில் அறிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் சபை அமர்வில் பங்கேற்காவிட்டால் அவரின் எம்.பி. பதவி பறிபோய்விடும்.

எனினும், 3 மாதங்களுக்கு ஒரு தடவை விடுமுறை பெறலாம். அவ்வாறானதொரு அனுமதியை ரஞ்சனுக்கு வழங்குவதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதிமன்றத்தால் நான்கரை வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பகா மாவட்டத்தில்போட்டியிட்டு ரஞ்சம் ராமநாயக்க வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓய்வறை நிர்மாணிப்பு”

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின், நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி , அவர்கள் தொழிலில் ஈடுப்படும்போது இளைப்பாற, உணவு உட்கொள்ள , மலசலகூட வசதிகளை கொண்ட ஓய்வறை கட்டிடங்கள் பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றன.
 
இதன் ஓர் அங்கமாக ஹய்பொரஸ்ட் முதலாம் பிரிவில் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டு வரும் கட்டிடத்தை இராஜாங்க அமைச்சர் நேரில் சென்று கண்காணித்தார்.
 

இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா – தடுப்பூசி ஏற்றுமதியிலும் தாக்கம்!

இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு காரணமாக தடுப்பூசி ஏற்றுமதி குறைய வாய்ப்புள்ளதாக தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு மருந்திற்கான சர்வதேச கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது. இதன்மூலம் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் நீடிக்கிறது.

இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தற்போதுள்ள வயது வரம்பை தளர்த்தி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘காவி’ எனப்படும், தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு மருந்திற்கான, சர்வதேச கூட்டமைப்பின் தலைவர் சேத் பெர்க்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், தடுப்பூசி திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டில், தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது.

எனவே, உலக நாடுகளுக்கு இந்தியாவின் தடுப்பூசி குறைவாகவே கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலில் களமிறங்குவது உறுதி- “திருமதி ஶ்ரீலங்கா” புஷ்பிகா அறிவிப்பு

” நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன். திருமதி உலக அழகி பட்டம்தான் எனது அடுத்த இலக்கு. அதன்பின்னர் அரசியலுக்கு வரும் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கின்றது. ரோஸி சேனாநாயக்கவின் வழியை பின்பற்றுவேன்.” – என்று என்று திருமதி இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வா  தெரிவித்தார்.

அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு,

கலப்பு முறையிலேயே மாகாண தேர்தல்! தனி வழிக்கு தயாராகும் மலையக கட்சிகள்!!

இவ்வருடத்துக்குள் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. குறிப்பாக தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியாக தடையாக உள்ள விடயங்களை தகர்ப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மறுபுறத்தில் மாகாணசபைத் தேர்தலுக்கு முக்கியமான பௌத்த தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அரசுக்கு ஆதரவு வழங்கும் கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் மாகாணசபைத் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி தொகுதி (70 வீதம்) மற்றும் விகிதாசாரம் (30 வீதம்) என கலப்பு முறையில் தேர்தலை நடத்துவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், போனஸ் ஆசனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளது. இதுவரை மாகாணமொன்றில் கூடுதல் வாக்குகளைப்பெறும் கட்சிக்கு 2 போனஸ் ஆசனங்கள் வழங்கப்படும். புதிய யோசனையின் பிரகாரம் மாவட்டமொன்றுக்கு இரு ஆசனங்கள் வழங்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் மூன்று மாவட்டங்கள் உள்ளன. அப்படியானால் 6 போனஸ் ஆசனங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு தேர்தலுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதால் அரசியல் கட்சிகளும் அது தொடர்பில் கழுகுப்பார்வையை செலுத்தி பூர்வாங்க பணிகளை முன்னெடுத்துவருகின்றன. தற்போதைய நிலைவரப்படி மாகாணசபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவதற்கு முக்கியமான சில கட்சிகள் ஆலோசனை நடத்திவருகின்றன.

தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட மேலும் சில கட்சிகளே தனிவழிப்பயணத்துக்கு தயாராகிவருகின்றன. எனினும், இறுதிப்படுத்தப்பட்ட தேர்தல் முறைமை எவ்வாறு அமையும் என்பதை அடிப்படையாகக்கொண்டே மேற்படி கட்சிகளின் இறுதி முடிவு அமையும்.

புதிய தேர்தல் முறையானது சிறு கட்சிகளுக்கு பாதிப்பாக இருக்கக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

குட்டையாக இருக்கும் உங்கள் குழந்தை உயரமாக வளர! இதோ வழி

தம் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ளது.

உயரம் பாரம்பரியத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. கூர்ந்து நோக்கினால் தந்தையைப் போன்ற உயரத்தை ஆண் பிள்ளைகளும் தாயை போன்ற உயரத்தை பெண் பிள்ளைகளும் அடைகின்றனர்.

தந்தை உயரமாக இருக்கும் சமயத்தில் மகன்கள் அதைவிட சற்று உயரமாக இருப்பார்கள். தாய் குட்டையாக இருந்தால் மகள் அதைப் போன்றே குட்டையாக வளர்வார்கள்.

மரபணுக்களால் ஒருவரின் உயரம் தீர்மானிக்கப்பட்டாலும் நம் முயற்சிகளின் மூலமும் குழந்தைகளின் உயரத்தை அதிகப்படுத்தலாம்.

உயரத்தை அதிகப்படுத்துவதில் சத்தான உணவு வகைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. மீன் எண்ணை, வைட்டமின் ஏ மற்றும் டி கொண்ட மாத்திரைகள், புரோட்டின் நிறைந்த எல்லா உணவுப் பொருட்களும் குழந்தைகளுக்கு உயரத்தை அதிகப்படுத்துகின்றன.

புரோட்டின் நிறைந்த உணவுப் பொருட்களை மட்டும் கொடுக்காமல் அதன் கூட சில உடற்பயிற்சிகள் மேற்கொண்டாலும் குழந்தைகள் உயரமாக வளருவார்கள்.

என்னென்ன பயிற்சிகள் செய்தால் குழந்தைகள் வேகமாக வளர்வார்கள் என்பதை பார்ப்போம்:

  • நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும். இது உங்கள் குழந்தைகள் சீராக உயரமாக வளர நீச்சல் பயிற்சி உதவும்.
  • கீழேப் படுத்து, உங்கள் இடுப்பை மட்டும் உயர்த்த வேண்டும். உங்கள் இடுப்பை உயர்த்தி 20-30 வினாடிகள் அதே நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த பயிற்சி தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் குழந்தைகளின் உயரம் கொஞ்சம் அதிகரிக்கும்.
  • தினமும் உங்கள் குழந்தை ஸ்கிப்பிங்கை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் உயரமும் அதிகமாகும்.
  • நிலத்தில் படுத்து உங்கள் கால்களை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இது உங்கள் இடுப்பு பகுதியையும், கால் பகுதியையும் நன்கு ஸ்ட்ரெச் செய்யும். கொஞ்சம் கடினம் தான். இருந்தாலும் தினமும் செய்து வந்தால் உங்கள் குழந்தைகள் சீராகவும், உயரமாகவும் வளர்வார்கள்.
  • தரையில் படுத்து, உங்கள் கால்களை உங்கள் தலைக்கு பின் தசையில் உயர்த்தி தரையை தொடும் படி செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்தால் உங்கள் குழந்தைகளின் இடுப்பு, தண்டுவடம், மற்றும் கால்கள் நன்று ஸ்ட்ரெச் ஆக மாறும். இதனால், உங்கள் குழந்தை சீரான முறையில் உயரமாக வளர முடியும்.

பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாக இருக்க காரணம்!

பொதுவாக நம்மிடையே பணக்காரர்களாக இருப்பவர்கள் தொடர்ந்து பணக்காரர்களாக இருக்கின்றனர். ஆனால், ஒரு எழை அல்லது நடுத்தர குடும்பத்தில் இருப்பவர்கள் அதன் வழியிலேயே செல்கின்றனர். எனவே ஒருவர் பணக்காரராக இருக்க காணரம் என்ன என்பதை பார்க்கலாம்

5 வழிமுறைகள்

தனக்கு தானே முதலீடு

முதலீடு என்பது, உங்கள் வாழ்க்கையில் தைரியமாக செய்ய வேண்டியது. உடல், மற்றும் மன நிலையை முறைபடியாக வைத்து கொண்டால் தான் முதலீடு சரியாக செய்ய முடியும். கற்றுக்கொள்ளுதல், மேம்படுத்துதல் அகியவற்றை கொண்டுள்ளது. இதற்கு எந்த பாரபட்சமும் இல்லாமல் முதலீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

குடும்பத்தில் முதலீடு

குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். அவர்களிடம் பணத்தை வாரி இறைக்காமல், அவர்களிடம் நேரத்தை செலவிட வேண்டும். மனைவி, குடும்பத்தை சேர்ந்த மற்ற உறுப்பினர்கள், குழந்தைகள் என்று அனைவரிடமும் அன்புடனும் தங்கள் பொன்னான நேரத்தை செலவிடுவது மிகவும் அவசியம்.

நல்ல மனிதர்களுடன் முதலீடு

திறமையானவர்கள், நம்பிக்கையானவர்களை நம்முடன் சேர்த்து கொள்ள வேண்டும். உங்கள் வளர்ச்சியில் அவர்களின் பங்கு இருக்கும் நபர்களை இணைத்து கொள்ள வேண்டும்.

நம்முடன் இருப்பவர்களுக்கான பயன்.

நாம் நல்ல மனிதர் என்று இணைத்து கொள்ளும் நபருக்கு நம்மாலான அனைத்தையும் செய்யவேண்டும். நாம் வளரும் போது அவர்களும் வளர வேண்டும். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிகாரத்தில் முதலீடு

பணத்தை விட முக்கியமான ஒன்று அதிகாரம். அதிகாரம் உள்ளவர்களிடம் பணம் தானாக தேடி வரும் எனவே அதிகாரத்தை கையில் வைத்துகொள்ளும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். பணத்தை கொடுத்து அதிகாரத்தை வாங்கலாம். ஆனால், அதிகாரம் கையில் இருந்தால் தான் பணம் வந்து சேரும்.

கூந்தலை பாதிக்கும் பொடுகு பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா?

பொதுவாக இன்றைக்கு பலர் பொடுகு பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றார்கள்.

இது ஏற்பட வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம் போன்றவை காரணமாக அமைகின்றது.

பொடுகின் தொல்லை அதிகமானால் முடியின் வேர்க்கால்கள் பலம் இழந்துவிடும். அதனால் முடி உதிர்வு அதிகமாகும்.

பொடுகு வந்தவுடனே அதை நீக்குவதற்கு எளிய வீட்டு வைத்தியங்களை செய்ய ஆரம்பித்துவிடவேண்டும். அப்பொழுதுதான் பொடுகு தொல்லையை கட்டுப்படுத்த முடியும்.

தற்போது பொடுகை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

  • சாம்பார் வெங்காயம் அதாவது சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து. பிறகு 15 நிமிடம் கழித்து குளிக்க பொடுகு தொல்லை நீங்கும்.
  • பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து குளிக்கவும். தலையில் தயிர் தேய்த்தும் குளிக்கலாம்.
  • வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்.
  • பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிப்பது பொடுகுக்கு ரெம்ப நல்லது.
  • வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
  • அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி பின்னர் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
  • வேப்பிலை சாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்த்து குளிக்கலாம்.
  • வசம்பு பவுடரை தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து தேய்க்கலாம். தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.
  • மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து, இந்த கலவையை தலையில் தேய்த்து குளிக்கவேண்டும்.
  • வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊறவைத்து பின்பு குளிக்கலாம். மண்டை கரப்பான் நோய் குணமாக பப்பாளி பாலையும் படிகாரத்தையும் சேர்த்து தடவலாம்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

இன்றாவது களமிறங்குவாரா தோனி?

0
ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடனான ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடுகிறது. சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி விளையாடும் கடைசி ஆட்டமாக அமைந்துள்ளது. இதில் தோனி...

play-off சுற்று வாய்ப்​பை தக்க வைக்​கும் முனைப்பில் சிஎஸ்கே இன்று களத்தில்!

0
  IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 63 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30...

‘இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சி’ – நந்திக்கடலில் சுடடேற்றி அஞ்சலி!

0
முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி இன்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு அஞ்சலி செலுத்தினர். முள்ளிவாய்க்கால்...