Home Blog Page 3545

வெறும் காலில் நடைப்பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

முன்பு காலத்தில் நம்முடைய முன்னோர்கள் செருப்பு இல்லாமல் வெறும் காலில் தான் தரையில் நடந்து உள்ளனர். அப்படி தரையில் நடப்பது மிகவும் நல்லதாம்.

இதனால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • பொதுவாக வெறும் காலில் நடப்பதால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும். அதேபோல் நிலத்தில் காலூன்றி நிற்பதால் சாதாரணாமாக உடலில் உள்ள 70% நீரை விட அதிகம் சுரக்கும்.
  • பாதத்திற்கு அடியில் விரல்கள் முதல் குதிகால் வரை அமைந்திருக்கும் ஒவ்வொரு நரம்புகள் மூளை, இருதயம் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன. எனவே வெறும் காலில் நடப்பது நல்லது.
  • வெறும் காலில் ஓடுவதும், சிறிது நேரம் நடப்பதும் இரத்த ஓட்டத்திற்கும், ஆரோக்கியமான வாழ்வுக்கும் இன்றிமையாதது.
  • வெறும் காலில் நடப்பதால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும் மற்றும் மன உளைச்சலை குறைக்கவும், தூக்கத்தை அதிகரிக்கவும் முடியும்.
  • கரடுமுரடான தரையில் நடக்கும் போது பாதத்திற்கு நேரடியாக அழுத்தம் ஏற்படுவதால், அது உடற்செயற்பாட்டை ஊக்குவிக்கும்.
  • வெறும் காலில் நடப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. இதனால் இதயம் சார்ந்த எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. இரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்புகளை குறைக்கின்றது.
  • வெறும் காலில் நடைபயிற்சி மேற்கொண்டால் நரம்பு மற்றும் எலும்புகள் வலுவடைகின்றது. அதுவும் அதிகாலை வேளையில் புல்லின் மீது வெறும் காலில் நடத்தால் கண் பார்வை கூர்மையாகும்.

பதுளை நகரிலுள்ள 15 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

பதுளை மாநகரின் வர்த்தக நிலையங்களில் 15 வர்த்தகர்களுக்கெதிராக, பதுளை பொது சுகாதாரப் பரிசோதகர்கள் கூட்டாக, பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் (இன்று) 06-04-2021ல் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.

பதுளை பொது சுகாதாரப் பரிசோதகர்கள் பத்துப்பேர் கொண்ட குழுவினர், பதுளை மாநகரின் 160 வர்த்தக நிலையங்களை முற்றுகையிட்டு, சோதனைகளை மேற்கொண்டனர். இதற்கமைய 15 வர்த்தக நிலையங்களில், 15 வர்த்தகர்களுக்கெதிராக, பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, அவர்களுக்கெதிராக, வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அத்துடன், மேலும் பெரும்பாலான வர்த்தகர்களுக்கு, பொது சுகாதாரப் பரிசோதகர்களினால், கடுமையான எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன.

வழக்குகள் தொடரப்பட்ட 15 வர்த்தகர்களுக்கெதிராக, சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாமை, அசுத்தமான உணவுவகைகளை சுத்தப்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை, மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் வைத்திருந்தமை, காலம் கடந்த நிலையிலான பொருட்கள் இருந்தமை, எடை குறைக்கப்பட்ட நிலையிலான பொதி செய்யப்பட்ட பொருட்கள் கண்டுபிடித்தமை, பொருட்களை பதுக்கி வைத்திருந்தமை, கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

06-04-2021ல் பதுளை மாநகரில் முற்றுகையிடப்பட்ட வர்த்தக நிலையங்கள் அனைத்தும் உணவகங்கள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்கள், மலிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்கள் ஆகியனவாகும்.

பொதுமக்களின் நலன் கருதியும், அவர்களினால் செய்யப்பட்ட புகார்களினடிப்படையிலுமே, மேற்படி முற்றுகை இடப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகும்.

எம். செல்வராஜா, பதுளை

முட்டை புதியதா? பழையதா? எப்படி அறிந்து கொள்வது ?

முட்டை பெரும்பாலும் ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவு பொருள் ஆகும்.

ஒரு முட்டையில் ஏழு கிராம் உயர் தர புரதம், இரும்பு, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளன. லுடீன் மற்றும் கோலின் போன்ற நோய்களை எதிர்க்கும் ஊட்டச்சத்துக்களும் முட்டையில் நிறைந்திருக்கிறது.

இருப்பினும் முட்டை சாப்பிடுவதற்கு முன் அது நல்ல முட்டையா? கெட்டுப்போன முட்டையா? என்று பார்த்து சாப்பிடுவது அவசியமாகும்.

அந்தவகையில் முட்டை எது புதியது, பழையது? எது கெட்டுப்போன முட்டை என்று எப்படி பார்ப்பது என தெரிந்து கொள்வோம்.

எப்படி அறியலாம்?

கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பி அதனுள் முட்டையை மெதுவாக போட வேண்டும். முட்டை முழுவதுமாக மூழ்கி டம்ளரின் அடிப்பகுதியில் கிடைமட்டமாக ஒட்டியிருந்தால் அது புதிய முட்டை.

டம்ளருக்குள் ஒருபக்கமாக சரிந்த நிலையில் இருந்தால் ஒரு வாரம் ஆகி விட்டது என்று அர்த்தம். நன்றாக சாய்ந்த நிலையில் மிதந்து கொண்டு இருந்தால் 2 அல்லது 3 வாரம் பழையதான முட்டை என்று அர்த்தம். எனினும் அந்த முட்டை பயன்பாட்டுக்கு உகந்தது.

ஆனால் தண்ணீருக்குள் போட்டதும் முட்டை மிதந்து கொண்டிருந்தால் அந்த முட்டை ரொம்ப பழையது அல்லது கெட்டுப்போனது என்று அர்த்தம். அதனால் அந்த முட்டையை தவிர்ப்பது நல்லது.

கெட்டுப்போன முட்டையை எப்படி கண்டறிவது?

முட்டையை காது பக்கத்தில் கொண்டு சென்று குலுக்கும்போது, சலசலவென்று சத்தம் வந்தால் அது கெட்டுப்போன முட்டை என்று அர்த்தம்.

முட்டையை உடைத்து பார்க்கும்போது வெள்ளைக்கரு நிறம் வெள்ளை நிறமாக இல்லாமல் மங்கி போய் இருந்தால் அந்த முட்டையும் கெட்டுப்போனதுதான்.

மஞ்சள் கரு சிதறிய நிலையிலோ, கலங்கிய நிலையிலோ இருந்தாலும் அது கெட்டுப்போன முட்டையாகும்.

கெட்டுப்போன முட்டையை சாப்பிடுவதனால் என்ன நடக்கும்?

கெட்டுப்போன அந்த முட்டையை சாப்பிடுவது உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்.

ஏனெனில் முட்டையின் உள்ளடுக்குகளில் இருக்கும் சால்மோனெல்லா எனும் ஒரு வகை பாக்டீரியா வளர்ச்சி அடைய தொடங்கிவிடும்.

அதனை உட்கொண்டால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்த்தொற்றுகளை ஏற்படுத்திவிடும்.

அரசியலில் களமிறங்குவாரா “திருமதி இலங்கை அழகி” புஷ்பிகா டி சில்வா?

” அரசியலுக்கு வரும் எண்ணம் தற்போது இல்லை. அது தொடர்பில் எதிர்காலத்தில் சிந்திக்கலாம். விரும்பம் இல்லை என ஒரேடியாக கூறிவிடவும் முடியாது.” – என்று திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டு புஷ்பிகா டி சில்வா இன்று தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், தான் விவாகரத்து பெற்ற பெண் கிடையாது என குறிப்பிட்ட அவர், விவாகரத்து பெற்ற பெண்கள்கூட இவ்வாறான நிகழ்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இது தொடர்பில் தான் குரல் எழுப்பவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் திருமதி இலங்கை அழகிப் போட்டியின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருமதி இலங்கை அழகிப் போட்டியின் வெற்றியாளராக திருமதி புஷ்பிகா டி சில்வா என்பவர் தெரிவு செய்யப்பட்டதை, நிகழ்ச்சி தொகுப்பாளர் அறிவித்தார்.அதையடுத்து, புஷ்பிகா டி சில்வாவிற்கு, திருமதி இலங்கை படத்துக்கான கிரீடம் சூட்டப்பட்டது.

கிரீடம் சூட்டப்பட்டு, ஓரிரு நிமிடங்களில், திருமதி உலக அழகு ராணியான கரோலின் ஜுரி, இந்த கிரீடத்தை பெறுவதற்கு புஷ்பிகா டி சில்வா தகுதியற்றவர் என அறிவித்தார்.

திருமணமாகி, விவாகரத்தான பெண்ணொருவருக்கு இந்த கிரீடத்தை வழங்க முடியாது என கரோலின் ஜுரி, மேடையில் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.

இவ்வாறு கரோலின் ஜுரி அறிவித்திருந்த நிலையில், புஷ்பிகா டி சில்வாவிற்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை, கரோலின் ஜுரி மேடையிலேயே மீளப் பெற்றுக்கொண்டார்.

கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்ட கரோலின் ஜுரி, அதே மேடையில் இரண்டாவது இடத்தை (ஃபர்ஸ்ட் ரன்னர்-அப்) பெற்றவருக்கு அந்த கிரீடத்தை அணிவித்திருந்தார். இந்த நிலையில், மேடையில் அமைதியின்மை ஏற்பட்டது. இவ்விவகாரம் பேசு பொருளாகவும் மாறியது.

இந்நிலையில் குறித்த பட்டம் புஷ்பிகா டி சில்வாவுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

உடல் எடை அதிகரிக்க 1 வயது குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்?

ஒவ்வொரு குழந்தையும் முதல் ஒரு ஆண்டிற்குள் சரியான எடையை எட்ட வேண்டும் என்பது அவசியம்.

அந்தவகையில் எப்படி குழந்தையின் எடையை இயற்கையாகவே ஆரோக்கியமான முறையில் அதிகரிப்பது என பார்க்கலாம்.

  • குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் கொடுப்பது மிக மிக முக்கியம். தாய்ப்பால் சுரக்கும் உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • 6 மாதம் தொடங்கிய பின்னரே உங்கள் குழந்தைக்கு நீங்கள் வாழைப்பழம் கொடுக்கலாம். பச்சை வாழைப்பழத்தை தவிர்க்கலாம். மற்ற அனைத்து வாழைப்பழங்களும் குழந்தைக்கு நல்லது. 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை நீங்கள் கேக்காகவோ, புட்டிங்காகவோ செய்து தரலாம்.
  • குழந்தைக்கு கேரளா நேந்திர பழ கஞ்சி குழந்தைகளுக்கான மிகசிறந்த உணவு.
  • 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, நெய் சேர்த்த உணவுகளைக் கொடுக்கலாம். கிச்சடி உணவுகளை நெய் சேர்த்துக் கொடுப்பது நல்லது. பொங்கல், உப்புமா போன்றவற்றில் நெய் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம். பருப்பு சாதம், சப்பாத்தி, பராத்தா போன்றவற்றிலும் நெய் சேர்க்கலாம்.
  • வேகவைத்துத் தோல் உரித்து, நன்கு மசித்து குழந்தைக்கு கொடுக்க மிக சிறந்த உணவு இது. நொறுக்கு தீனியாக, ஃபிங்கர் ஃபுட்டாக, ப்யூரியாக, கட்லெட் போல உருளைக்கிழங்கை குழந்தைகள் உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் பருப்புகளை வேகவைத்துத் தரலாம். பாசி பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து ஆகியவை குழந்தைக்கு நல்லது. பருப்பு வேகவைத்த தண்ணீரை குழந்தையின் முதல் உணவாகவே தரலாம்.
  • நட்ஸை அரைத்துக் கொடுக்கலாம். அதாவது பொடி செய்து பவுடராக சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஜூஸ், ஸ்மூத்தி, ப்யூரி, கேக், பான்கேக் போன்றவற்றில் நட்ஸ் பவுடர் சேர்த்து குழந்தைகளுக்கு தரலாம்.

பிரபல நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா வைரஸ் தொற்று

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த சூழலில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு நேற்று முன் தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அக்‌ஷய் குமார் அவரது மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃபுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் எடுத்துக்கொண்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனது மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன்.

கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உடனடியாக தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் எல்லா அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” என்று அதில் தெரிவித்துள்ளார்.

21/4 தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார்? வெளியானது தகவல்

நௌப்பர் மௌலவி, ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவருமே 21/4 பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளாக பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

”   நௌப்பர் மௌவிக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருந்தது. அவரே அவ்வமைப்பின் எண்ணத்தை நாட்டுக்கு கொண்டுவந்தார். சஹ்ரானையும் வழிநடத்தினார். அவர் தற்போது சிறையில் உள்ளார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் நௌப்பர் மௌலவி, ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவருமே பிரதான சூத்திரதாரிகள் என கண்டறியப்பட்டுள்ளனர்.” – என்றனர்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து – இருவருக்கு காயம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஸ்டதர்டன் தோட்டத்துக்கு அருகில் இன்று 6/4/2021 பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற ஆட்டோவின் முன்பக்க சக்கரம், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், ஸ்டர்டதன் தோட்ட பிரதான பாலத்துக்கு அருகில் வைத்து திடீரென்று வெடித்ததால் சாரதிக்கு முச்சக்கர வண்டியை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

அத்தருணத்தில் பிரதான பாதையின் ஊடாக வெலிஓயா நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்தில் ஆடடோ மோதி பாதையின் நடுவில் கவிழ்ந்துள்ளது.

இதன்போது பஸ் வண்டியில் பயணித்த பயணிகள் உடனடியாக செய்யப்பட்டு ஆட்டோவில் இருந்த சாரதியையும் மூன்று பெண்களையும் கைக் குழந்தையையும் மீட்டெடுத்தனர்.

கைக்குழந்தைக்கு சிறிய காயம் ஏற்பட்டதால் அந்த குழந்தை வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

பசறை பஸ் விபத்து – வெளியானது விசாரணை அறிக்கை!

பசறை 13 ஆவது மைல் கல்லில் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்து பாதை சீர்கேட்டினால் ஏற்பட்டதல்ல. வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதற்கு பொறுப்பாக இருக்க வாய்ப்பில்லையென்று, விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற இவ்விபத்து குறித்து ஆராய விபத்து இடம்பெற்ற மறுதினமே மூவரடங்கிய விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் அறிக்கை இன்று உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

அவ் அறிக்கையிலேயே, மேற்படி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்றமையானது, பாதை சீர்கேட்டினாலேயே இடம்பெற்றதென்று, வீதி அபிவிருத்தி அதிகார சபை மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது. இதையடுத்தே, டபள்யு.பீ.வீரதுங்க தலைமையிலான மூவரடங்கிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. இவ் விபத்து பாதை தரத்தினால் ஏற்பட்டதல்லவென்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இவ்விபத்தில் 14 பேர் பலியானதுடன், 32 பேர் காயங்களுக்குள்ளாகியிருந்தனர். லுணுகலையிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பஸ்சே, விபத்துக்குள்ளானதாகும்.

விபத்து தொடர்பாக விபத்துக்குள்ளான பஸ் சாரதியும், விபத்துக்குள்ளான பஸ்சின் எதிர்த்திசையில் வந்த லொரிச் சாரதியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தபோதிலும், தற்போது பஸ் சாரதி மட்டுமே நாளை மறுதினம்  (08-04-2021) வரை விளக்கமறியலில் இருந்து வருகின்றார். லொரிச் சாரதி சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்த வழக்கு விசாரணை நாளை மறுதினம் (08-04-2021) பசறை நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட லொரிச் சாரதியும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று, பசறை நீதிமன்ற நீதிபதி சமிந்த கருணாதாச உத்தரவிட்டுள்ளார்.

எம். செல்வராஜா, பதுளை

சைக்கிளில் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிய விஜய்

சென்னை நீலாங்கரையில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் விஜய்.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பலரும் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

திரையுலக பிரபலங்களான அஜித், ரஜினிகாந்த், சூர்யா ஆகியோர் காலையில் முதலிலேயே வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் நீலாங்கரையில் இருக்கும் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை, சைக்கிளில் வந்து பதிவு செய்தார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

play-off சுற்று வாய்ப்​பை தக்க வைக்​கும் முனைப்பில் சிஎஸ்கே இன்று களத்தில்!

0
  IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 63 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30...

‘இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சி’ – நந்திக்கடலில் சுடடேற்றி அஞ்சலி!

0
முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி இன்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு அஞ்சலி செலுத்தினர். முள்ளிவாய்க்கால்...

பிரதமர் மோடிக்கு சுவீடனின் உயரிய விருதை வழங்கிய இளவரசி!

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சுவீடன் நாட்டின் உயரிய விருதான 'ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்' விருந்து வழங்கப்பட்டுள்ளது. சுவீடன் இளவரசி விக்டோரியாவால் குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு...