Home Blog Page 3546

பதுளை மாவட்ட அதிபர், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்…

பதுளை மாவட்டத்திலுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பள அதிகரிப்பைக்கோரி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதுளையில் உள்ள ஊவா மாகாணசபைக்கு முன்னால் குறித்த போராட்டம் நடைபெற்றுவருகின்றது.

பல வருடங்களாக தமக்கு வேதன உயர்வு வழங்கப்படவில்லை எனவும், அதனை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியே இப்போராட்டம் இடம்பெறுகின்றது.

பாடசாலைகளில் மாணவர் வருகை தந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

ந. மலர்வேந்தன்

2025 இல் 360 மில்லியன் கி.கி. தேயிலை உற்பத்தி எதிர்ப்பார்ப்பு! மானியம் வழங்கவும் நடவடிக்கை!!

தேயிலை செய்கையை ஊக்குவிப்பதற்காக தற்போது வழங்கப்பட்டுவரும் மானியத் தொகையில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி புதிய பயிரிடலுக்கு எக்டேர் ஒன்றுக்கு இதுவரை 4 லட்சம் ரூபா வழங்கப்பட்டு வந்த நிலையில் அத்தொகை 5 லட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரண முன்வைத்தார். அப்பத்திரம் வருமாறு,

மலையகத்துக்கான 10 ஆயிரம் வீடுகள் திட்டம் இரு வாரங்களில் ஆரம்பம்

மலையக பிரதேசங்களில் 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு, வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

வீடமைப்பு திட்டங்களுக்காக இதுவரை அரசாங்கத்திடமிருந்து 592 மில்லியன் ரூபா கிடைத்துள்ள நிலையில் மேலும் 1057 மில்லியன் கிடைக்கவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தேர்தல் காலங்களில் புதிய கிராமங்களை அமைப்பதாக கூறி ஆரம்பிக்கப்பட்ட வீடுகள் அரைகுறை நிலையில் உள்ள நிலையில் அவற்றை முழுமையாக நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன எனத்தெரிவித்த அவர், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தேர்தல் முன்னெடுப்புகள் இடம்பெற்ற நவம்பர் மாதமளவிலேயே மக்களை ஏமாற்றுவதற்கான இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் இடம்பெற்ற செய்தியாளர்மாநாட்டின் போதே, இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தோட்ட வீடமைப்பு திட்டங்களுக்கு மேலாக, அனர்த்த முகாமைத்துவ துறையினரால் சில பகுதிகளில் வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தீ அனர்த்தம் உள்ளிட்ட அனர்த்தங்களுக்குள்ளான வீடுகளை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளையும் எமது அமைச்சு மேற்கொண்டுள்ளது. அதேவேளை, நுவரெலியாவில் பல்கலைக்கழகமொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளின் பூர்வாங்க செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

அருள் கல்வி வட்டத்தின் ஆசான் சிவஞானஜோதி காலமானார்

கொழும்பு கொட்டாஞ்சேனை அருள் கல்வி வட்டத்தின் ஊடாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் இதயத்தை வென்ற ஆசானும் அரசின் உயர் அதிகாரியுமான கல்விமான் வே.சிவஞானஜோதி காலமானார்.

இவரது மரணம் நாட்டிற்கு மட்டுமல்ல அவரிடம கற்ற அனைத்து மாணவர்களுக்கும் பேரிழப்பாகும்.

கணக்கியல் ஆசிரியரான இவரிடம் கற்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இன்று உயர் தொழிலில் இருந்து வருவது குறிப்பிடதக்கது

யாழ்.சண்டிலிப்பாயை பிறப்பிடமாக கொண்ட வே.சிவஞானசோதி ஐயா பல அமைச்சுக்களின் செயலாளராக திறன்பட பணியாற்றி இருந்தார். குறிப்பாக இந்து கலாச்சார அமைச்சு, பாரம்பரிய சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, வடக்கு மாகாண ஜனாதிபதி செயலணி, நல்லிணக்க அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

இறுதியாக ஒய்வு பெற்ற பின்பும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராகவும் கடமையாற்றி கொண்டிருந்தார். நேற்றைய தினம் கொழும்பு – அப்பலோ வைத்தியசாலையில் திடீர் சுகவீனமுற்று தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் எம்மை எல்லாம் விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இலங்கையில் மட்டுமல்ல பல நாடுகளில் சிறந்த அரச விருதுகளையும் கல்வியல் விருதுகளையும் பெற்று நாட்டிற்கும் திரு. சிவஞானஜோஜி பெருமை சேர்த்திருந்தார்.

நீண்டகாலமாக அரச பணியில் மிக பெரும் பங்கை குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களுக்கு ஆற்றியிருந்தார்.

ஒரு தலைசிறந்த மூத்த தமிழ் அரச அதிகாரியாக மட்டுமல்லாது ஓய்வு பெற்ற பின்பும் வடமாகாண மக்களுக்கு தொடர்ந்து செயலாற்ற வேண்டி என்னுடன் இணைந்து ஒரு ஆலோசகராக இறுதி மூச்சுவரை தொடர்ச்சியாக கலந்துரையாடி பல்வேறு சேவைகளை மக்களுக்கு திட்டமிட்டு வழங்கி கொண்டுவருகின்ற இவ்வேளையில் அன்னாரின் இழப்பு ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஈடுஇணையற்ற பாரிய இழப்பாகும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போமாக…

– நன்றி அண்ணாச்சி நியூஸ்

 

தமிழகத்தில் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் வாக்களிப்பு

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்களிப்பு தற்போது நடைபெற்றுவருகின்றது.

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியது. அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டனர்.

கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் அனல்பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.பின்னர் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நேற்று இரவே சென்று வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழக சட்ட சபை தேர்தலில் வாக்களிக்க 6.28 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

அதேவேளை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே நடிகர் அஜித் தன் மனைவி ஷாலினியுடன், திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார். வாக்குப்பதிவு தொடங்கியதும், அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவரும் வாக்களித்துவிட்டு புறப்பட்டுச்சென்றனர்.

இதேபோல் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார். சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர். மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் தன் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்சரா ஹாசனுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

21/4 தாக்குதல் – எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை அரசுக்கு கிடையாது!

21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் எந்தவொரு நபரையும் பாதுகாக்கவேண்டிய தேவை அரசுக்கு கிடையாது. வழக்கு தாக்கல் செய்வது தொடர்பில் சட்டமா அதிபரே தீர்மானம் எடுப்பார் – என்று அமைச்சரும், சட்டத்துறை நிபுணருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று தெரிவித்தார்.

21/4 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு எதிராக உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நபரொருவர் தொடர்பில் சாட்சியங்களின் அடிப்படையில்தான் வழக்கு தாக்கல் செய்யப்படும். வழக்கு தொடுப்பதா இல்லையா என்பது குறித்து சட்டமா அதிபர் திணைக்களமே தீர்மானம் எடுக்கும். இதுதான் நெறிமுறை. கடந்த ஆட்சியின்போது இந்த கோட்பாடு மீறப்பட்டது. அலரிமாளிக்கையில் இருந்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இதனால்தான் குழப்பமான நிலைகூட உருவானது.

அரசியல் காரணங்களின் அடிப்படையில் அல்ல சாட்சியங்களின் அடிப்படையிலேயே சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும். எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. அதேபோல எவரையும் பிரச்சினைகளுக்குள் சிக்கிவிட வேண்டும் என்ற எண்ணமும் எமக்கு இல்லை.

21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் உரிய வகையில் இடம்பெறுகின்றன. கடந்த சில நாட்களில்கூட 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.” – என்றார்.

பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் ஆயரின் திருவுடல் நல்லடக்கம்

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் பேரருட்திரு கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று (05) நல்லடக்கம் செய்யப்பட்டது.

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று பிற்பகல் வரை இறுதி அஞ்சலிக்காக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் வைக்கப்பட்டிருந்தது.

ஆயரின் திருவுடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

சமயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், படையினர், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, பாப்பரசரின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி, இலங்கை ஆயர்மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி, கொழும்பு பேராயர் மற்றும் பிரதமர் ஆகியோரின் இரங்கல் செய்திகள் இதன்போது வாசிக்கப்பட்டன.

இதனையடுத்து, ஆயரின் திருவுடல் பேராலயத்திற்குள் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

இதேவேளை, மன்னார் நகர்ப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆயரின் திருவுருவச்சிலை இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் பேரருட்திரு கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது 81ஆவது வயதில் கடந்த முதலாம் திகதி நித்திய இளைப்பாறினார்.

21/4 தாக்குதல் – பேராயர் வெளியிட்ட கருத்துக்கு பதில் வழங்கினார் மைத்திரி

” பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்ட கருத்துகளை தொடர்பில் கவலையடைகின்றேன்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று (5)  தெரிவித்தார்.

21/4 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு எதிராக உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று வலியுறுத்தினார்.

” முன்னாள் ஜனாதிபதி (மைத்திரிபால சிறிசேன) தேர்தலில் போட்டியிடவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆடை அணிந்துகொண்டா அவர் இவ்வாறான அறிவிப்பை விடுக்கின்றார்? பேரவலமொன்று இடம்பெறவுள்ளது என தெரிந்தும், தமது கடமையை, பொறுப்பை மறந்து வெளிநாடு சென்ற அவர், எப்படி தேர்தலில் போட்டியிட முடியும், கட்சி தலைமைப்பதவியை வகிக்க முடியும்? ” எனவும் ஆயர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் அவரின் இந்த அறிவிப்பு தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே ” கவலையடைகின்றேன்” என்ற விடயத்தை மட்டும் மைத்திரி குறிப்பிட்டார்.

‘இதொகாவின் நேர்மையான போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது’

நல்லாட்சிக் காலத்தின்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு  சிறிய தொகையையேனும் சம்பள அதிகரிப்பாகப் பெற்றுக்கொடுக்க முடியாமல் போனது. ஆனால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இது விடயத்தில் நேர்மையாகப் போராடிப் பெற்றுக்கொடுத்துள்ளது என, காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, இந்தச் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுப்பது சற்று தாமதமானாலும், கொடுத்த வாக்குறுதிப்படி, சம்பள அதிகரிப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான சௌமிய பவனில் இன்று (05) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,

“ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனைத் தடுத்து நிறுத்த நீதிமன்றம் வரை பெருந்தோட்டக் கம்பனிகள் சென்றிருந்தாலும், அந்தச் சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பான நியாயங்களை சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் எடுத்துரைத்து, இறுதி செய்யப்பட்ட சம்பள அதிகரிப்பை, நீதிமன்ற அனுமதியுடன் பெற்றுக்கொடுத்திருக்கிறோம்” என்றார்.

“அந்த வகையில், பிறக்கவுள்ள சித்திரைப் புத்தாண்டை, இந்த ஆயிரம் ரூபாய் நாள் சம்பள அதிகரிப்புடன் கொண்டாட, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று, செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

தேங்காய் எண்ணெய் கலப்படத்தின் பின்னணியில் ரிஷாட்டா?

தேங்காய் எண்ணெய்யை பாம் ஒயிலுடன் எத்தனை வீதம் கலக்க முடியும் என்று முன்னர் இருந்த சட்டத்தை, 2016 ஆம் ஆண்டு நான் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சரிசெய்து, பாவனையாளர் நலன்கருதி அதனை திருத்தியதாகவும், 1980 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்த பழைய சட்டத்தை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்றதாலேயே இந்த திருத்தத்தை கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட மத்திய குழுவினருடனான கலந்துரையாடல், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் தலைமையில்  கிண்ணியாவில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“1980 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சட்டத்துடன் ஏற்கனவே இது தொடர்பில் சுற்றுநிருபம் ஒன்றும் இருந்தது. அதில் எவ்வாறு எண்ணெய்களை கலந்து அதாவது, பாம் ஒயிலை தேங்காய் எண்ணெய்யுடன் 25 வீதம் கலக்க முடியும் என்றும், அதற்கான அனுமதியையும் அந்த சட்டம் கொண்டிருந்தது. அந்த அனுமதியை பயன்படுத்தி கடந்த காலங்களில், 25 சதவீதத்துக்கு பதிலாக 50 சதவீதம், 75 சதவீதம் எனக் கலந்து மோசடி செய்தார்கள்.

எனவேதான், குறிப்பிட்ட தேங்காய் எண்ணெய்யில் என்ன கலந்திருக்கின்றார்கள்? எத்தனை சதவீதம் கலந்திருக்கின்றார்கள்? யார் இதனை செய்திருக்கிறார்கள்? என்பதை எழுத்துருவிலே அந்தந்த போத்தல்களிலே ஒட்ட வேண்டும் என்று கட்டாயமாக்கி, ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தேன். இதனை நல்ல நோக்கத்திலேயே மேற்கொண்டேன். திருடர்களை பிடிப்பதற்காகவும், பாவனையாளர் தாம் பயன்படுத்தும் பொருட்களின் உள்ளடக்கம் என்னவென்று அறிந்துகொள்வதற்காகவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், இவ்வாறான நல்ல நோக்கத்துடனான சட்டத்தை நான் கொண்டு வந்ததினாலேயே, தற்போது நடைபெற்றுள்ள அநியாயம் நிகழ்ந்ததாக கூறுகின்றனர். சிங்கராஜவில் இடம்பெற்று வரும் காடழிப்பு, கோடிக்கணக்கில் இடம்பெற்றுள்ள சீனி மோசடி ஆகியவற்றிலிருந்து மக்களை திசை திருப்பும் நோக்கில், என்னை தொடர்புபடுத்தி இந்தப் புரளியை கிளப்பியுள்ளர்கள்.

எண்ணெய் இறக்குமதியின் போது, சுங்கத் திணைக்களம் அவற்றை பரிசீலிக்க வேண்டும். SLSI இலங்கை தரக் கட்டளை நிறுவனம் அதனை ஆராய வேண்டும். அதேபோன்று உணவுத் திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள உணவுப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஆய்வு மையம் ஆகிய நிறுவனங்கள் இதனை கட்டாயம் பரிசீலிக்க வேண்டும் என்ற சட்டமும் இருக்கின்றது.

இவற்றில் ஒன்றையும் செய்யாமல் அவர்களுக்கு ஏற்றாற்போல இறக்குமதி செய்துவிட்டு, அவர்களின் நண்பர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாரிய தொகையில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கிவிட்டு, மொத்தமாக கொள்ளையடிக்க எடுத்த முயற்சி அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாக புற்றுநோயை ஏற்படுத்தும் சதியும் தெரியவந்துள்ளது.

“இந்த நாட்டில் எது நடந்தாலும் ரிஷாட் பதியுதீன் தான் காரணம்” என்று சமூக ஊடகங்களில் பொய்களை பரப்புவது வாடிக்கையாகிவிட்டது. அந்தவகையில், இந்த விவகாரத்தையும் என்னுடன் சம்பந்தப்படுத்தி, சமூக வலைத்தளங்களில் பொய்யான பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். எனினும், பெரும்பான்மை சமூகமும் இவற்றின் உண்மைத்தன்மையை தற்போது உணரத் தொடங்கியிருகின்றார்கள்” என்றார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

‘இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சி’ – நந்திக்கடலில் சுடடேற்றி அஞ்சலி!

0
முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி இன்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு அஞ்சலி செலுத்தினர். முள்ளிவாய்க்கால்...

பிரதமர் மோடிக்கு சுவீடனின் உயரிய விருதை வழங்கிய இளவரசி!

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சுவீடன் நாட்டின் உயரிய விருதான 'ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்' விருந்து வழங்கப்பட்டுள்ளது. சுவீடன் இளவரசி விக்டோரியாவால் குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு...

6 மாதங்களாகக் கூடாரம்தான் வாழ்க்கை: பாதுகாப்பான இடம் கோரும் தோட்ட மக்கள்!

0
  "6 மாதங்களாகக் கூடாரங்களில் வாழ்கின்றோம். அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றோம். எனவே, பாதுகாப்பான இடத்தில் காணி வழங்கி, தற்காலிக வீடுகளையாவது விரைவில் அமைத்துத் தருமாறு கோருகின்றோம்" இவ்வாறு நுவரெலியா மாவட்டம், ஹங்குராங்கெத்த...