Home Blog Page 3547

கலாபூஷணம் விருது வென்ற மலையக கவிஞர் நீலா பாலன் காலமானார்

புகழ் பூத்த தமிழ்க் கவிஞர் நீலா பாலன் தமது 73 அகவையில், (இன்று) 05.04.2021  மாரடைப்புக் காரணமாக, பதுளை அரசினர் மருத்துவமனையில் இயற்கை   எய்தினார்.

பதுளையைச் சேர்ந்த வெலிமடையில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த இவர், முழு இலங்கையிலும் போற்றப்படக்கூடிய நீலா பாலனின் இயற்பெயர் பூபாலரட்ணமாகும்.

இவர் 14.04.1948ல் நல்லதம்பி, பூரணிப்பிள்ளை ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் கவிதை இலக்கணத்தை சிறு வயதிலிருந்தே முறைப்படி கற்றுக்கொண்டு இறக்கும் வரையில், வெல்லும் கவிஞராகவே விளங்கி வந்ததற்கான காரணம், அவரது அடிப்படை இலக்கிய ஞானமாகும். இது வரையில், அவர் 700ற்கு மேற்பட்ட கவிதையை எழுதியுள்ளார்.

அத்துடன், 15 நாடகங்களை மேடையேற்றியுள்ளார். 75 கவியரங்குகளுக்கு தலைமை வகித்துள்ளார். “தமிலோசை” என்ற கையெழுத்து பிரதிக்கும் ஆசிரியராக இருந்து வந்துள்ளார்.

முத்தமிழ் மன்றத்தின் தலைவராகவும் இருந்த அவர் ‘இலந்தை பழத்துப் புழுக்கள்’, ‘கடலோர தென்னை மரம்’ என்ற நாடகங்களை மேடையேற்றி, பெரும் வரவேற்பை பெற்றவராவார்.

நான்கு தசாப்தங்களாக கவிதை மன்னராக இருந்து வந்த இவர், பாவரவு, கவிதை வித்தகர், கவிமணி, தமிழ் மணி, கவிமாமணி, கவிதை பரிதி ஆகிய பட்டங்களைப் பெற்ற இவர், இலங்கை அரசினால் ‘கலாபூஷணம்’ என்ற அரச விருதையும் பெற்றிருக்கின்றார்.

அவரது இறுதிக்கிரியைகள் 06.04.2021 மாலை 3.00 மணியளவில் வெளிமடை பொது மயானத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இறுதியாக, இவர் பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்றும் பொருட்டு பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்கத்திலும் தொழிலுறவு அதிகாரியாக கடமையாற்றியவர் என்பதும் இங்கு விசேடமாக குறிப்பிடத்தக்கதாகும்.

எம். செல்வராஜா, பதுளை

புத்தாண்டு பரிசே ஆயிரம் ரூபா – இ.தொ.காவுக்கு கிடைத்த வெற்றியென ஜீவன் பெருமிதம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்கப்பெறவுள்ளது. இது இ.தொ.காவுக்கு கிடைத்த வெற்றியாகும் என்பதுடன் புத்தாண்டு பரிசாகவும் அமைந்துள்ளது என்று  இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமாமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

சௌமியபவனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஆயிரம் ரூபா தொடர்பில் சம்பள நிர்ணய சபை எடுத்த தீர்மானத்துக்கு எதிராக , எதிரணி தரப்பு தாக்கல் செய்திருந்த மனு  இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வர்த்தமானி அறிவுறுத்தளுக்கு எதிரான குறித்த மனு மீதான முதற்கட்ட விசாரணையை அடுத்து, கம்பனி தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

எனவே, வர்த்தமானி அறிவித்தலின்படி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெறக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஏற்கனவே நுவரெலியா அரச பெருந்தோட்ட யாக்கம் ஒன்றின் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இது இ.தொ.காவின் முயற்சிகளுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.

ஜனாதிபதி, பிரதமர், தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வா, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோருக்கு இ.தொ.கா சார்பில் நன்றிகளை தெரிவிக்கின்ற அதேவேளை   பெருந்தோட்ட தொழிலாளர்கள் இதுவிடயத்தில் பொறுமையாக இருந்து எம்மோடு கைகோர்த்து இருந்தமையால் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் . ” – என்றார்.

“21/4 தாக்குதல் குறித்து இன்னும் ஒருவருக்கேனும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை”

21/4 தாக்குதல் சம்பவம் இடம்பெற்று ஈராண்டுகள் நெருங்கினாலும்கூட தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவருக்கேனும் நீதிமன்றில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சட்டத்தரணி அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் அமெரிக்காவில்கூட வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவருக்கேனும் இலங்கை நீதிமன்றத்தில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அத்துடன், தாக்குதல் சம்பவத்தின் பின்னணி மற்றும் பிரதான சூத்திரதாரிகளும் கண்டறியப்படவில்லை. அதனை நோக்கி விசாரணைகள் நடைபெறுவதாகவும் தெரியவில்லை. கட்டாயம் தாக்குதலின் பின்புலம், பிரதான சூத்திரதாரிகள் கண்டறியப்படவேண்டும். அப்போதுதான் நீதி கிடைக்கும்.

21/4 தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியவர்கள் மற்றும் பொறுப்புக்கூறவேண்டியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படவேண்டும்.” – என்றார்.

அப்புத்தளை நகரில் கடைகளில் திடீர் சோதனை! தேங்காய் எண்ணெய் மாதிரியும் பெறப்பட்டது!!

அப்புத்தளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் நேற்று திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அப்புத்தளை பிரதேச பொது சுகாதார மேற்பார்வை பரிசோதகர் எஸ்.சுதர்ஷன் தலைமையில், பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் ரோய் விஜயசூரிய அடங்கிய குழுவினரே பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது அனைத்து பலசரக்கு கடைகளிலும், நுகர்வோர் பாவனைக்கு உகந்ததான
தரமான தேங்காயெண்ணெய் விநியோகிக்கப்படுகின்றதா என்பதை அறிவதற்காக தேங்காயெண்ணெய் மாதிரிகள் கடைகளில் பெறப்பட்டன.

அத்துடன், காலவதியான மற்றும் தரமற்ற பொருட்கள் இனங்காணப்பட்ட எட்டு கடைகளின் வியாபார நடவடிக்கைகளுக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம். செல்வராஜா, நடராஜா மலர்வேந்தன்

1000 ரூபா விவகாரம் – பெருந்தோட்ட நிறுவனங்களின் கோரிக்கை நிராகரிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி  வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைகால தடை விதிக்குமாறு, பெருந்தோட்ட நிறுவனங்களினால் மனு ஊடாக தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழில் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன.

இந்த மனுவில் தொழில் அமைச்சர், தேசிய சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான மேலதிக விசாரணைகளை மே மாதம் 5 திகதி   எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி உலக சாதனை!

ரிக்கிபொண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆண்கள் அணி, ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 21 ஆட்டங்களில் வென்றதே உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஆஸ்திரேலிய மகளிர் அணி முறியடித்துள்ளது.

மெக்லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலாவது ஆட்டம் மவுன்ட் மாங்கானுவில் நேற்று நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 48.5 ஓவர்களில் 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலெடுத்தாடிய ஆஸ்திரேலியா 38.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 215 ஓட்டங்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி தொடர்ச்சியாக பெற்ற 22-வது வெற்றி இதுவாகும். ஒரு நாள் போட்டி வரலாற்றில் இது புதிய சாதனையாகும். இதற்கு முன்பு ரிக்கிபாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆண்கள் அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 21 ஆட்டங்களில் (2003-ம் ஆண்டு) வென்றதே உலக சாதனையாக இருந்தது.

18 ஆண்டுகால அச்சாதனையை அந்த நாட்டு பெண்கள் அணி முறியடித்திருக்கிறது.

” போராடி பெறுவதே எங்கள் வரலாறு – இருப்பதை இழப்பதே இ.தொ.காவின் வரலாறு”

தனி தமிழ் “பிரிவு” என்றால், கொடுப்பதை வாங்கிக்கொண்டு மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இதுதான், வித்தியாசம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் நாம் வருவோம். மீண்டும் பெறுவோம் – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு பறிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவரின் முகநூல் பதிவு வருமாறு,

மத்திய மாகாணத்தில் ஆரம்பித்து, இப்போது ஊவா மாகாணம் வரை, “மாகாண தமிழ் கல்வி அமைச்சு” என்ற இயந்திரம் ஒழிக்கப்பட்டு, “தமிழ் பிரிவு” ஆகிவிட்டது.

ஆறு (6) தமிழர் பெரும்பான்மை பிரதேச சபைகளை நுவரெலியாவில் போராடி பெற்றது, தமிழ் முற்போக்கு கூட்டணியின் வரலாறு. இருப்பதையும் இழப்பது இப்போதைய வரலாறு.

தனியான தமிழ் கல்வி “அமைச்சு” என்றால் மாகாணசபை வரவு செலவு திட்டத்தில், எங்கள் பாடசாலை பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக, தனியான நிதி ஒதுக்கீடு கிடைக்கும்.

தனி தமிழ் “பிரிவு” என்றால், கொடுப்பதை வாங்கிக்கொண்டு மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இதுதான், வித்தியாசம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் நாம் வருவோம். மீண்டும் பெறுவோம்.

இரு பெரும் தலைவர்கள் இன்றி தமிழக தேர்தல் – நாளை வாக்களிப்பு!

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், நாளை 16ஆவது சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகிறது.மொத்தம் 234 தொகுதிகளில், வாக்களிப்பு இடம்பெறுகிறது.

தமிழ்நாட்டு அரசியலில் முக்கியத் தலைவர்களாக விளங்கிய முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி,  ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகு அங்கு நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது.

மாநிலத்தின் ஆளும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், மத்தியில் ஆளும் பாரத ஜனதா கட்சியும் இணைந்து இந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளன.

திராவிட முன்னேற்றக் கழகக் கட்சி, தேசியக் கட்சியான காங்கிரஸுடன் கூட்டனி அமைத்துள்ளது.

நடிகர் கமலஹாசன், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை உருவாக்கி முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

நாளை காலை 7 மணி முதல், வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பு தொடங்கும்.

அடுத்த மாதம் (மே) 2-ஆம்  திகதி வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கும். அன்று மாலைக்குள் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தோட்டத் தொழிலாளர்களை புறக்கணிக்கும் தொழிற்சங்கம்”

தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக தோட்ட நிர்வாகம் தொழில் திணைக்களம் மற்றும் தொழில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் மற்றும் முறைப்பாடுகளுக்கு தொழிலாளர்கள் சார்பாக அவர்கள் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆஜராகுவதில்லையென பாதிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது,

30 – 40 வருட காலங்களாக மாதாந்தம் சந்தாப்பணம் செலுத்தி அங்கம் வகிக்கும் இத் தோட்ட தொழிலாளர்கள் தமக்கு அநீதி எற்படும் சந்தர்ப்பங்களில் இத் தொழிற்சங்கங்களை நாடும் போது தமது சங்கத்திடம் செலவு செய்வதற்கும், போக்குவரத்து மற்றும் சட்டத்தரணிகளுக்கு வழங்கப் பணமில்லாத காரணத்தினால் தம்மால் தொழிற்சங்க காரியாலயங்கள் மற்றும் தொழில் நீதிமன்றங்களுக்கு வர முடியாது என்று கூறி எம்மை புறக்கணிக்கின்றனர்.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள சில தோட்ட நிருவாகங்கள் தொழிலாளர்கள் மீது வேண்டுமென்றே பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்குத் தாக்கல் செய்யும் போது தொழிலாளர்கள் பணமின்றி தமது தங்க நகைகளை ஈடு வைத்து அல்லது விற்றே வழக்கு நடத்த வேண்டியுள்ளது என்கின்றனர்.

10 மாவட்டங்களில் இன்றும் கடும் வெப்பம்

நாட்டில் 10 மாவட்டங்களில் இன்றும் உஷ்ணமான காலநிலை நிலவும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

முல்லைத்தீவு, வவுனியா, புத்தளம், குருணாகல், அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனறாகலை ஆகிய மாவட்டங்களிலேயே கடும் வெப்பம் நிலவக்கூடும்.

அதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் உஷ்ணமான காலநிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

பிரதமர் மோடிக்கு சுவீடனின் உயரிய விருதை வழங்கிய இளவரசி!

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சுவீடன் நாட்டின் உயரிய விருதான 'ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்' விருந்து வழங்கப்பட்டுள்ளது. சுவீடன் இளவரசி விக்டோரியாவால் குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு...

6 மாதங்களாகக் கூடாரம்தான் வாழ்க்கை: பாதுகாப்பான இடம் கோரும் தோட்ட மக்கள்!

0
  "6 மாதங்களாகக் கூடாரங்களில் வாழ்கின்றோம். அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றோம். எனவே, பாதுகாப்பான இடத்தில் காணி வழங்கி, தற்காலிக வீடுகளையாவது விரைவில் அமைத்துத் தருமாறு கோருகின்றோம்" இவ்வாறு நுவரெலியா மாவட்டம், ஹங்குராங்கெத்த...

மரக்கறி விலைப்பட்டியல் (18.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...