Home Blog Page 3550

21/4 தாக்குதல் – நீதி கிடைக்காவிட்டால் தேர்தலில் போட்டியிடமாட்டேன்

” 21/4 தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் உரிய தண்டனை வழங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நீதியை பெற்றுக்கொடுக்காவிட்டால் அடுத்த தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன். ” – என்று இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 21/4 பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் தனது பதவிகாலம் முடிவடைவதற்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிய தண்டனையை பெற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த பொறுப்பில் இருந்து ஜனாதிபதி விலகமாட்டார் என்பதும் எனக்கு தெரியும்.

சிலவேளை, உரிய நடவடிக்கை எடுக்கமுடியாமல்போனால் அடுத்த தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன். இதனை பொறுப்புடனேயே கூறுகின்றேன். அவ்வாறு கூறுவதற்கான முதுகெலும்பு எனக்கு உள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் மூடிமறைக்கப்பட்டன. ஆனால் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி வெளிப்படுத்தினார். எனவே, அவர்மீது முழு நம்பிக்கையும் உள்ளது. ” – என்றார்.

திருமண மோதிரம் நான்காவது விரலில் அணியக் காரணம் என்ன? சீன இரகசியம் சொல்லும் கதை

தம்பதிகளுக்குள் ஏற்படப்போகும் பந்தத்தின் அடையாளமாக திருமண மோதிரம் இருக்கிறது.

உலகம் முழுவதும் நான்காவது விரலில்தான் திருமண மோதிரத்தை அணிகின்றனர்.

இருப்பினும் சிலருக்கு மோதிரம் மாற்றிக்கொள்ளும் நாம் ஏன் அதனை எப்பொழுதும் நான்காவது விரலில் அணிகிறோம் என்ற சந்தேகம் பலரிடையே காணப்படுகின்றது. அதற்கு பின்னால் பல காரணங்களும்,கதைகளும் இருக்கிறது.

திருமணத்தின் அடையாளமாக இடது கையில் மோதிரம் அணியும் வழக்கம் கிபி 1549 ஆம் ஆண்டில் இருந்துதான் தொடங்கப்பட்டது.

ஐரோப்பாவில் இருந்த கத்தோலிக்க திருச்சபையில்தான் இந்த பழக்கம் முதன் முதலாக தொடங்கப்பட்டது.

அதற்கு முன் வலது கையில்தான் மோதிரம் அணியப்பட்டு வந்தது. அல்லது கை ஒருவரின் பலத்தை பிரதிபலிப்பதால் இந்த பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

அதன்பின் பல்வேறு மாற்றங்களால் இது இடக்கைக்கு மாற்றப்பட்டது.

ரோமானியர்களின் நம்பிக்கைப்படி “விஞ்ஞானம் அதிகம் முன்னேறாதபோது, நம் கையின் நான்காவது விரலில் இருந்து ஒரு நரம்பு நேராக இதயத்திற்கு ஓடுகிறது என்று நம்பப்பட்டது”

இது பொதுவான நம்பிக்கையாக கருதப்பட்டாலும் இதற்கு பின்னால் வேறு சில காரணங்களும் இருந்தது.

நான்காவது விரலில் மோதிரம் ஏன் அணியப்படுகின்றது?

சீனர்களின் நம்பிக்கைப்படி நம்முடைய ஒவ்வொரு விரல்களும் ஒவ்வொரு உறவை பிரதிபலிக்கிறது. இதில் நான்காவது விரல் நம்முடைய வாழ்க்கைத்துணையை பிரதிபலிக்கிறது.

கட்டை விரல் பெற்றோர்களையும், நடுவிரல் உங்களையும், சுண்டு விரல் குழந்தைகளையும் பிரதிபலிக்கிறது.

இந்த காரணத்திற்கு பின்னால் சீனர்கள் ஒன்றையும் விளையாட்டையும் வடிவமைத்துள்ளார்கள்.

நான்காவது விரலில் அணிய காரணம் என்ன?

முதலில் உங்களின் இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து வைத்து உங்களை பிரதிபலிக்கும் உங்களின் நடுவிரலை மட்டும் கீழ்நோக்கி மடக்கி உங்கள் குழந்தைகளின் விரலான சுண்டு விரலை பிரிக்க முயற்சியுங்கள்.

உங்களால் எளிதில் இதனை செய்ய முடியும். ஏனெனில் குழந்தைகள் குறிப்பிட்ட காலம் வரைதான் உங்களுடன் இருப்பார்கள். அவர்களுக்கான குடும்பம் அமைந்த பிறகு உங்களை விட்டு விலகிவிடுவார்கள்.

இதனைத் தொடர்ந்து உங்களின் விரலாய் பிரிக்க முயலுங்கள், இதையும் எளிதில் செய்து விடலாம், உங்கள் உடன்பிறந்தவர்களும் உங்களை விட்டு விலகுவதன் அடையாளம் இது.

இதேபோல உங்களின் கட்டை விரலையும் நீங்கள் பிரிக்கலாம். உங்கள் பெற்றோரும் காலம் முடிந்தவுடன் உங்களை விட்டு விலகிவிடுவார்கள்.

இப்போது உங்கள் வாழ்க்கைத்துணை விரலை நீங்கள் எவ்வளவு முயன்றாலும் பிரிக்க முடியாது. ஏனெனில் உங்கள் வாழ்க்கைத்துணை மட்டுமே உங்களுடன் இறுதிவரை வரப்போகிறார்கள் என்பதே இதன் அர்த்தம்.

இதனால்தான் நான்காவது விரலில் மோதிரம் அணியப்படுவதாக சீனர்கள் கூறுகிறார்கள்.

அவிசாவளை வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி – இருவருக்கு காயம்

அவிசாவளை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவமொன்றில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

அவிசாவளை, புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த  மூர்த்தி (வயது – 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவிசாவளை – இரத்தினபுரி பிரதான வீதியின் மாதொல பகுதியிலுள்ள இரும்பு பொருள் சேகரிப்பு நிலையமொன்றிலேயே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்ததாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

” நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்லன்” – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

” நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன். ஆனாலும் மாகாணசபை முறைமையை எதிர்க்கின்றேன்.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மருதங்கேணியில் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாண சபை முறைக்கு சரத் வீரசேகர ஆகிய நான் எதிரானவன் . அன்றும் எதிர்த்தேன் இன்றும் எதிர்க்கிறேன் நாளையும் அதே கருத்தை தான் கொண்டுள்ளேன். அது இந்தியாவால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்ட ஒன்று.

மாகாண சபைமுறைமை என்பது ஒரு தேவையற்ற ஒரு விடயமாகும் ஒன்பது மாகாணசபைகள் காணப்படும்போது அந்த 9 மாகாண சபைக்கும் தனியான நிர்வாகம் காணப்படும். மத்திய அரசு என்பது தனியாக செயற்பட வேண்டி வரும். ஆனால் மத்திய அரசாங்கம் என்பது ஒன்று தான். ஒன்பது மாகாணத்திற்கும் தனியான நிர்வாகம் இருக்க முடியாது.

ஆனால் அரசாங்கம் மாகாணசபை முறை வேண்டும் என தீர்மானிக்குமானால் அந்த தீர்மானத்தினை நான் எதிர்க்கப் போவதில்லை. இந்த பிரதேசத்தில் மாகாணசபை இல்லாது போய் கடந்து மூன்று வருஷம் ஆகிவிட்டது. தற்பொழுது அபிவிருத்தி தடைப்பட்டுள்ளது.

கடந்தமுறை ஆட்சியில் இருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் மத்திய அரசாங்கத்தால் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் அரைவாசி நிதியினை பயன்படுத்தாது திறை சேரிக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலைமைதான் இங்கே காணப்படுகின்றது.ஆகவே மாகாண சபை என்பது மக்களுக்கு பிரயோசனமான ஒரு விடயமாக அமைய வேண்டும்.

எனினும் வடக்கு மக்கள் மாகாண சபையினை விரும்புகின்றார்கள். அது ஒரு அரசியல் காரணமாக இருக்கலாம். ஆனால் சரத் வீரசேகர ஆகிய நான் தனிப்பட்ட ரீதியில் மாகாணசபை முறைமைக்கு எதிரானவன்.

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த தீர்மானித்தால் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஏற்றவாறு நான் செயற்படத் தயாராக உள்ளேன். எனினும் நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன். அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த விரும்பினால் அதை நடத்தலாம் .ஆனால் தனிப்பட்ட ரீதியில் நான் மாகாண சபைக்கு எதிரானவன்.” – என்றார்.

இராகலையில் குளத்தில் மூழ்கி மாணவன் பலி – மற்றுமொரு சிறுவன் வைத்தியசாலையில்!

நுவரெலியா, இராகலை பகுதியிலுள்ள குளத்துக்கு நண்பர்கள் சகிதம் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரிழ் மூழ்கி பலியாகியுள்ளார். இன்று (02.04.2021) நண்பகலே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது என இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இராகலை சூரியகாந்தி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் உ. அபினேஷன் என்ற மாணவரே (வயது – 15) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனும், அவரின் மூன்று நண்பர்களும் இன்று இராகலை, மந்திரிதென்ன பகுதியிலுள்ள குளமொன்றில் நீராடச்சென்றுள்ளனர். இவ்வாறு நீராடிக்கொண்டிருக்கையில் என்ற சிறுவன், சேற்றுக்குள் சிக்கி நீரிழ் மூழ்கியுள்ளார். அவரை மீட்பதற்கு முயன்ற மற்றுமொரு சிறுவனும் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து ஏனைய இருவரும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அறிவித்தனர். தீவிரமாக செயற்பட்ட மக்கள் இரண்டாவதாக சிக்கியவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர்.

தேடும் நடவடிக்கை 3 மணிநேரம் தொடர்ந்ததும்.  அதன்பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏனைய இரு சிறார்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

க.கிசாந்தன்

பால் பாட்டில் குழந்தைக்கு ஆரோக்கியமானதா?

இன்று காலக்கட்டத்தில் பிறந்த சில குழந்தைகளுக்கு 5 மாதங்கள் ஆகும் போதே தாய்ப்பால் பற்றாக்குறை பிரச்சனை வந்து விடுகிறது.

அதனால் சில தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனை படி பவுடர் பால் அல்லது பசும்பாலை பாட்டிலில் ஊற்றி குழந்தைக்கு கொடுப்பதுண்டு.

ஆரம்ப கட்டத்தில் நிப்பிள் பொருத்திய ஃபீடிங் பாட்டில் கள் அம்மாவிடம் பால் குடிப்பதை போன்ற உணர்வை தரும் என்று பழக்கி அதை தொடர்ந்து குழந்தைக்கு பால், தண்ணீர் எல்லாமே ஃபீடிங் பாட்டிலில் கொடுத்தார்கள்.

ஆனால் ஃபீடிங் பாட்டிலில் நிப்பிளானது கண்ணுக்கு தெரியாத அழுக்குகளை கொண்டிருக்கும் என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

அதிலும் சில அம்மாக்கள் ஃபீடிங் பாட்டிலை குடிக்கும் குழந்தைகள் எந்த தொல்லையும் இல்லாமல் குழந்தை அழாமல் இருக்க நிப்பிளை வாயில் வைத்துவிடுவார்கள். இவை நிச்சயம் குழந்தையின் வளர்ச்சிக்கு நன்மை தராது.

அதுமட்டுமின்றி ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுப்பதனால் பலவகையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது என கூறப்படுகின்றது.

அந்தவகையில் ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுப்பதால் ஏற்படும் ஆபத்து பற்றியும், அதனை தடுக்க என்ன செய்யலாம் எனவும் இங்கு பார்ப்போம்.

எவ்வாறான ஆபத்தை ஏற்படுத்தும்?
  • அம்மாவிடம் பால் கொடுக்கும் குழந்தை நாக்கை நீட்டியபடி வாயை திறந்தபடி நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு பாலை உறிஞ்சி குடிக்கும். ஆனால் ஃபீடிங் பாட்டிலில் குழந்தையின் வாய் குவிந்திருக்கும். நாக்கு மடங்கி இருப்பதால் குழந்தை இயல்பாக உறிஞ்சி குடிக்க முடியாது.
  • நாம் ஏற்னவே போட்டிருக்கும் ஓட்டையில் அளவால் அவை எளிதாக குழந்தையின் வாய்க்குள் செல்வதால் குழந்தை பாலை அப்படியே விழுங்க தொடங்கும். மூச்சு விடவும் நேரமின்றி அப்படியே விழுங்கி விடும். இதனோடு வாய் வழியாக காற்று உள்ளே செல்வதற்கும் வாய்ப்பு உண்டு. இதனாலும் குழந்தைக்கு வயிறு உப்புசம், வயிறு வலி உண்டாகலாம்.
  • ஃபீடிங் பாட்டிலில் பயன் படுத்தப்படும் ரப்பர் சிலிக்கோன், பிளாஸ்டிக், லேட்டக்ஸ் போன்றவற்றால் செய்யப்படுகிறது. இதுவும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
​ஃபீடிங் பாட்டில் பயன்படுத்தும் போது செய்ய வேண்டியவை என்ன?
  • குழந்தைக்கு பால் கொடுக்கும் போது 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து வாயில் வைக்க அனுமதிக்க வேண்டாம்.
  • பால் குடித்த பிறகு வெறும் பாட்டிலை வாயில் வைத்து சப்பிக்கொண்டிருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும்.
  • பால் குடித்து முடித்தவுடன் பாட்டிலை சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.
  • அதிகப்படியான சோப்பு பயன்படுத்தி பாட்டிலை கழுவ வேண்டாம்.
  • பாட்டில் மூடியில் ரப்பர், ரிங் என்று அனைத்தையும் வெளியே எடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.
  • தினமும் காலையும் மாலையும் பாட்டிலை மிதமான சூட்டில் இருக்கும் வெந்நீரில் கழுவி எடுக்க வேண்டும்.
  • பாட்டில் நிப்பிளை மாதத்துக்கு இரு முறை மாற்றிவிட வேண்டும். பிளாஸ்டிக் அல்லாத ஸ்டீல் பாட்டில் பயன்படுத்துவது நல்லது.
வேறு என்ன செய்யலாம்?
  • குழந்தைக்கு 10 மாதமாகும் போதே நாள் ஒன்றுக்கு 4 முறை கொடுக்கும் பாட்டில் பாலை இரண்டு முறையாக குறைக்க வேண்டும்.
  • பாட்டிலை படிப் படியாக குறைத்து டீஸ்பூன் பழகலாம். பிறகு சாதாரண ஸ்ட்ரா தம்ளரை தம்ளரில் கொஞ்சம் கொஞ்சமாக பால் ஊற்றி கொடுக்கலாம்.
  • தண்ணீரை எந்த காரணம் கொண்டும் பாட்டிலில் ஊற்றி பழக்கமால் குழந்தையின் பக்கத்தில் உட்கார்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கொடுப்பது நல்லது.

1000 ரூபா கிடைக்காவிட்டால் அடுத்து என்ன? ஜீவன் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

” பயத்தால் அல்ல, நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையே நாம் பொறுமை காக்கின்றோம். நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் அமையும் என நம்புகின்றோம். எது எப்படி இருந்தாலும் ஆயிரம் ரூபாவை எப்படி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது எமக்கு தெரியும்.” – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலையில் அமைந்துள்ள சீல்.எல்.எப் கேட்போர் கூடத்தில் இன்று (02.04.2021) நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களில் காணப்படும் குறைநிறைகளை கண்டவறிதற்கான கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வு நடைபெற்ற பின்னர் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு மற்றும் கம்பனிகளின் செயற்பாடுகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் ஜீவன் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 50 ரூபா, 100 ரூபா என கூறிக்கொண்டு கடந்த ஆட்சியின்போது 5 வருடங்கள் கடத்தப்பட்டன. அதற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆனால் இன்று கம்பனிகளுக்கு எதிராக நாம் நீதிமன்றம்வரை சென்றுள்ளோம்.

இந்நிலையில் தொழிலாளர்களை உசுப்பேத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது, அப்படி இருக்கையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியாவது ஏன் சம்பள உயர்வை வழங்கமுடியாது எனவும் கேட்கின்றனர். எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது. அதற்கென நடைமுறைகள் உள்ளன.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாகத்தான் சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக மேன்முறையிடு செய்யும் உரிமையும், நீதிமன்றம் செல்லும் உரிமைகளும் கம்பனிகளுக்கு இருக்கின்றன. ஆனால் 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.

தொழிற்சங்க ரீதியில் தொழிலாளர்களின் பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். பெற்றுக்கொடுத்தும் வருகின்றோம். மற்றைய தரப்பினரும் தொழிற்சங்கம் நடத்துகின்றனர். அவர்கள் விமர்சனங்களை முன்வைப்பதையே பணியாக முன்னெடுக்கின்றனர். நாம் பொறுமையாக இருக்கின்றோம். அதற்கு பயம் காரணம் அல்ல. நீதிமன்ற தீர்ப்புவரும்வரை காத்திருக்கின்றோம்.

சிலவேளை நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட்டால், அடுத்து என்ன செய்வது என்பதும் தெரியும். பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும். இது தொடர்பில் தொழில் அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.” – என்றார்.

அதேவேளை, ஊவாவில் தமிழ் கல்வி அமைச்சை எவ்வாறு பெறவேண்டும் என்பதும் எமக்கு தெரியும். மாகாணசபைத் தேர்தல் முடிந்ததும் அதனை பார்க்கலாம் எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.

க.கிசாந்தன்

மாகாணசபைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது

” கடந்த ஆட்சியில்போல் தேர்தல் இழுத்தடிக்கப்படாது. மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடைபெறும். தேர்தல் முறைமை குறித்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும்.” – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (02.04.2021) தெரிவித்தார்.

கொட்டகலையில் அமைந்துள்ள சீல்.எல்.எப் கேட்போர் கூடத்தில் இன்று (02.04.2021) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றங்களில் காணப்படும் குறைநிறைகளை கண்டவறிதற்காக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலுக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க கலந்து கொண்டிருந்தார்

இதன்போது, இ.தொ.கா பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் தங்களின் தேவைகளையும், குறைபாடுகளையும் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் சுட்டிக்காட்டினர்.

இந்த கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், இ.தொ.கா பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர்.

ஊடகங்களுக்கு மேலும் கூறியவை வருமாறு,

” மத்திய அரசாங்கம், மாகாணசபைகள் மற்றும் உள்ளாட்சி மன்றங்கள் என மூன்று கட்டமைப்புகளும் இணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஒரு வேலைத்திட்டத்தை மூன்று தரப்புகளுமே முன்னெடுக்கவேண்டிய நிலைகூட ஏற்படுகின்றது. இதனால் மக்கள் பணம் வீண்விரயமாகின்றது. அது தொடர்பில் தெளிவுபடுத்திவருகின்றோம்.

கடந்த ஆட்சியின்போது மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டது. ஜனநாயகத்தை, மக்கள் இறைமையை மதிக்கும் அரசாங்கம் என்ற வகையில் மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்.

எந்த முறைமையின்கீழ் நடத்த வேண்டும் என்பது குறித்தான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். அந்த கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படலாம்.

மக்களுக்கு அதேபோல் சபைகளின் நிர்வாகத்தை கொண்டுநடத்துவதற்கு சிக்கல் எழாத வகையிலும், பலமான கட்டமைப்பை உருவாக்கும் விதத்திலும் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படும்.” – என்றார்.

க.கிசாந்தன்

” ஊவா தமிழ்க் கல்வி அமைச்சு பறிப்பு” – அரச பங்காளியான இ.தொ.கா. கடும் எதிர்ப்பு!

ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு, ஊவா மாகாண சபையிலிருந்து பறிபோனதானது ஜீரணிக்க முடியாததொன்றாகும். இத் தமிழ்க் கல்வி அமைச்சு நீக்கப்பட்டமை, ஊவா மாகாண தமிழ் மக்களுக்கும், தமிழ் கல்விச் சமூகத்திற்கும் பெரும் பாதிப்பேயாகுமென்று, இ.தொ.கா. உதவிச் செயலாளரும், முன்னால் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டி.வி. சென்னன் தெரிவித்தார்.

முன்னால் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சென்னன் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து அவ் அறிக்கையில், ‘அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாகவே, ஊவா மற்றும் மத்திய மாகாண சபைகளில் தமிழ்க்கல்வி அமைச்சுக்கள் கொண்டுவரப்பட்டன. இவ் அமைச்சுக்களினால் தமிழ்க்கல்விச் சமூகத்தினர் பெரும் பயன்களைப் பெற்று வந்திருப்பது, யாவரும் அறிந்ததேயாகும்.

ஏற்கனவே பொதுவான அமைச்சொன்றின் கீழேயே, தமிழ்க்கல்வி விடயங்களும் உள்ளடங்கப்பட்டிருந்தன. அக்காலப்பகுதியில் தமிழ்க்கல்வித்துறைக்கு பல்வேறு வகையில் புறக்கனிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இத்தகைய காரணங்களினாலேயே, தமிழ்க்கல்விக்கென தனியானதோர் அமைச்சு இருக்க வேண்டுமென்ற பலத்த கோரிக்கைகள் எழ ஆரம்பித்தன.

இதையடுத்தே, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தமிழ்க்கல்விக்கென ஒருங்கிணைந்த அமைச்சுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவ் அமைச்சுக்கள் ஊடாகவே, இரு மாகாணங்களில் தமிழ்க் கல்வித்துறையின் அனைத்து விடயங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதன்மூலம் எம்மவர்களே நன்மையடைந்து வந்தனர்.

ஊவா மாகாணத்தின் தமிழ்க்கல்வி அமைச்சை இல்லாமல் செய்ய வேண்டுமென்று மாற்று சமூகத் தலைமைகள், பலவகையில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு, கங்கனம் கட்டிச் செயற்பட்டு வந்தனர். ஆனால், அச் செயற்பாடுகள் அனைத்தையும், அக்காலப்பகுதியில் தமிழ்க்கல்வி அமைச்சராக இருந்த செந்தில் தொண்டமான் முறியடித்து, தமிழ்க்கல்வி அமைச்சை வெற்றிகரமாக முன்னெடுத்து வந்தார்.

ஆனால், தற்போது, ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில், 02-04-2021 முதல், ஊவா மாகாணத்தில் தமிழ்க்கல்வி அமைச்சை, விசேட வர்த்தமானி ஒன்றின் மூலம் இல்லாமல் செய்துவிட்டார். இச் செயற்பாடானது மாகாண தமிழ் மக்களுக்கும், கல்விசார் சமூகத்தினருக்கும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தப் போகின்றது.

இவ் விசேட வர்த்தமானி அறிவிப்பிற்கு முன், ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் எமது சமூக முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழ்க்கல்வி சார் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடலொன்றினை மேற்கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், இவ் வகையில் எந்தவொரு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாமல், தன்னிச்சையாக முடிவெடுத்து, தமிழ்க்கல்வி அமைச்சை நீக்கியதானது, தமிழ் மக்களின் மனதினை புண்படுத்திய செயலாகும்.

ஆளுனர் மேற்கொண்டுள்ள இம் முடிவு மீள்பரிசீலனை செய்யப்படல் வேண்டும். தமிழ்க்கல்வி அமைச்சு நீக்கியமை குறித்த விசேட வர்த்தமானியை மீளப்பெற்றுக் கொள்ளல் வேண்டும். தவறின், இச் செயற்பாடுகளுக்கு எதிராக ஜனநாயக வழிமுறையில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெறவே செய்யும்.

ஊவா ஆளுனரும் சிறுபான்மை சமூகத்தவராக இருக்கும் நிலையில், தமிழ்க்கல்வி அமைச்சு இல்லாமல் செய்யப்பட்டதன் பின்னர் ஏற்படும் பாதிப்புக்களை உணர்ந்து, அத் தமிழ்க்கல்வி அமைச்சை மீண்டும் ஊவா மாகாணத்தில் ஏற்படுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“தொழிலாளர் தேசிய முன்னணி கலைக்கப்படவில்லை”

பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி என்ற கட்சி, தேர்தல்கள் ஆணைக்குழுவால் முடிவுறுத்தப்படவில்லை என்று, ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் அக்கட்சியிலிருந்து விலகுவதாக எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கட்சியின் தற்காலிக பதில் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த சவரிமுத்து வயலட் மேரியின் நியமனத்தை,தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளதால், அக்கட்சி இன்னும் முடிவுறுத்தப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

மேலும், தொழிலாளர் தேசிய முன்னணியின் நிரந்தர உத்தியோகத்தர் குழுவை விரைவில் நியமிக்க வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அக்கட்சிக்கு அறிவுறித்தியுள்ளது.

அவ்வாறு நியமிக்கப்படும் நிரந்தர உத்தியோகத்தர் குழாம் தொடர்பான தகவல்களை ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

கொட்டக்கலையில் அதிசயம்: உச்சியில் அல்லாமல் தண்டின் நடுப்பகுதியை பிளந்து வெளிவந்த வாழைக்குலை!

0
இயற்கை அன்னை எப்போதுமே நம்மை ஆச்சரியப்படுத்தத் தவறுவதில்லை. அந்த வகையில், கொட்டக்கலை பாத்தியாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுத்தோட்டத்தில் நிகழ்ந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஒரு வாழை மரம்...

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...