Home Blog Page 3549

முரண்பாடுகளுக்கு முடிவுகட்ட பங்காளிகளை அவசரமாக சந்திக்கிறார் கோட்டா

ஆளுங் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குமிடையில் அடுத்தவாரம் முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு பங்காளிக்கட்சி தலைவர்கள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து, இறுதி முடிவை எடுக்கும் நோக்கி பங்காளிகளை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பின்போது எடுக்கப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே மாகாணசபைத் தேர்தலை நடத்தும் முறைமை தீர்மானிக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

மேற்படி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார்.

தமிழகத்தில் ஐமுனைப் போட்டி! பிரச்சாரப் போர் நாளையுடன் ஓய்வு – 6 ஆம் திகதி வாக்களிப்பு!!

தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியிலும் பிரசாரத்தை முடிக்க உள்ளனர்.

தமிழக சட்டசபைக்கு தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், களத்தில் நிற்கின்றன. இதுதவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவையும் நிற்பதால் தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், கி‌ஷன்ரெட்டி மற்றும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதுதவிர வேட்பாளர்களும் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் உள்ளனர். சில தொகுதிகளில் நடிகர், நடிகைகளும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

தேர்தல் பிரசாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் 234 தொகுதிகளிலும் ஒவ்வொரு வேட்பாளரும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். விடுபட்டு போன பகுதிகளுக்கு சென்று தற்போது ஓட்டு கேட்டு வருகின்றனர்.

பிரசாரத்தின் கடைசி நாளான நாளை  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியிலும் பிரசாரத்தை முடிக்க உள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நாளை மாலை 7 மணியுடன் பிரசாரம் முடிவடைந்ததும் தொகுதிக்கு தொடர்பு இல்லாத அனைவரும் அங்கிருந்து வெளியே செல்ல அறிவுறுத்தப்படுவார்கள்.

அதன்பிறகு போலீசார் துணை ராணுவப் படையினர் வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

6 ஆம் திகதி ஓட்டுப்பதிவு நடைபெறும். இதையொட்டி இப்போது வீடு வீடாக ‘பூத்’ சிலிப் வழங்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் உச்சகட்ட பாதுகாப்பு – 12 ஆயிரம் பாதுகாப்பு படையினர் களத்தில்!!

ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள அனைத்து தேவாலயங்களினதும் பாதுகாப்பிற்காக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்

பொலிஸ் மற்றும் அதிரடிப்படையைச் சேர்ந்த மொத்தம் 9,365 அதிகாரிகள் கடமைக்கு அனுப்பப்பட்டுள்ளனர், மேலும் 2,522 முப்படை வீரர்களும் பாதுகாப்பு வழங்க ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள்.

நீர்கொழும்பு, சிலாபம், மற்றும் மட்டக்களப்பைச் சுற்றியுள்ள தேவாலயங்களில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

சாராவை கண்டுபிடிக்க வேண்டியது மிக முக்கியம் – முஜிபூர் ரஹ்மான் வலியுறுத்து

21/4 தாக்குதலுடன் தொடர்புடைய சாரா உயிருடன் இருக்கிறார். ஆணைக்குழுவும் இதனை கூறியுள்ளது. எனவே, சாராவை கண்டுபிடிப்பது மிக முக்கியமாகும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 21/4 தாக்குதலின்போது சாரா சாய்ந்தமருதில் இருந்துள்ளார். அங்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பத்தின் பின்னர், சாராவின் குரலை தான் கேட்டதாக சஹ்ரான் மனைவி சாட்சியமளித்துள்ளார். அதேபோல சாராவை தலைமன்னார்வரை கொண்டுசென்ற பொலிஸ் அதிகாரி தற்போது சி.ஐ.டி. காவலின்கீழ் உள்ளார். சாரா உயிருடனேயே இருக்கிறார். உயிரிழந்தவர்களின் உடல் கூற்றுடன் சாராவின் தாய்க்கு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் சாரா உயிரிழந்துவிட்டார் என்பது உறுதியாகவில்லை. ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலும் இது பற்றி குறிப்பிடப்படவுள்ளது.

சாரா இந்து மதத்தை சார்ந்தவர். பின்னர்தான் இஸ்லாம் மதத்தை தழுவி தற்கொலை குண்டுதாரி ஒருவரை திருமணம் முடித்துள்ளார். ஆக சாராவை சஹ்ரான் குழுவுக்குள் அனுப்பியது யார்? அவர் மட்டும் எப்படி தப்பித்தார் என்பது உள்ளிட்ட உண்மை கண்டறியப்படவேண்டும். சஹ்ரான் குழுவை யாரோ வழிநடத்தியுள்ளனர். அது உட்பட அனைத்து காரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டால்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும்.” – என்றார்.

மடூல்சீமையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்தவர் கைது!

மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்ட எல்டெப் தோட்ட கீழ் பிரிவில் 1, 850 லீற்றர் சட்ட விரோத கசிப்புடன் 58 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மடூல்சீமை பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் அதிகாரி பிரியந்தவிற்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர் தலைமையிலான குழுவினர் சுற்றிவளைப்பினை சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நமது நிருபர்கள்

பிக்பாஸ் 5ஆவது சீசனில் சகிலாவின் மகள் பங்கேற்பு

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை ஜூன் மாதம் 3 வாரத்திலிருந்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகென் ராவும், 4-வது சீசனில் நடிகர் ஆரியும் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழில் முதல் மூன்று சீசன்களும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கப்பட்ட நிலையில், 4-வது சீசன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனை ஜூன் மாதம் 3 வாரத்திலிருந்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இதனிடையே இந்தமுறை கலந்து கொள்ள இருப்பதாக ஒரு சில திரைபிரபலங்களின் பெயரும் அடிபட தொடங்கியுள்ளது.

ஏற்கனவே நடிகர்கள் ராதாரவி, மன்சூர் அலிகான், எம்.எஸ்.பாஸ்கர், குக் வித் கோமாளி கனி, சுனிதா, பவித்ரா ஆகியோர் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இவர்களுடன் நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகளான மிலா கலந்துகொள்ள உள்ளதாகவும், இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

6ஆவது தடவையாக கடைசி பந்தில் வெற்றிக்கனியை ருசித்த பாகிஸ்தான் அணி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் கடைசி பந்தில் வெற்றி காண்பது இது 6-வது நிகழ்வாகும்.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் நான்கு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலாவது ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்க அணி 55 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. புதிய தலைவர் டெம்பா பவுமா (1 ரன்), விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் (20 ரன்) ஆகியோரும் இதில் அடக்கம்.

இதன் பின்னர் வான்டெர் துஸ்செனும், டேவிட் மில்லரும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள் 5-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் திரட்டினர். மில்லர் 50 ரன்களில் (56 பந்து, 5 பவுண்டரி) கேட்ச் ஆனார். கடைசி வரை நிலைத்து நின்று அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவிய வான்டெர் துஸ்சென் தனது முதலாவது சர்வதேச சதத்தை ருசித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுக்கு 273 ரன்கள் சேர்த்தது. வான்டெர் துஸ்சென் 123 ரன்களுடன் (134 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். பின்னர் 274 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி ஆடியது. பஹார் ஜமான் 8 ரன்னில் ரபடாவின் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

இதைத் தொடர்ந்து இமாம் உல்-ஹக்கும், கேப்டன் பாபர் அசாமும் இணைந்து அணியை நிமிர வைத்தனர். அபாரமாக ஆடிய பாபர் அசாம் தனது 13-வது சதத்தை எட்டினார். அசாம் 103 ரன்களிலும் (104 பந்து, 17 பவுண்டரி), இமாம் உல்-ஹக் 70 ரன்னிலும் அன்ரிச் நோர்டியாவின் பந்து வீச்சில் வீழ்ந்தனர். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து வெளியேறியதால் பாகிஸ்தான் தடுமாற்றத்திற்கு உள்ளானது. விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தனது பங்குக்கு 40 ரன் எடுத்தார்.

கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பெலக்வாயோ வீசினார். இதன் முதல் பந்தில் ஷதப்கான் (33 ரன்) கேட்ச் ஆனார். அடுத்த 3 பந்துகளில் பஹீம் அஷ்ரப் ரன் எடுக்காமல் விரயமாக்கியதால் பரபரப்பு உண்டானது. இதனால் 2 பந்தில் 3 ரன் தேவையானது. இந்த சூழலில் 5-வது பந்தில் பஹீம் அஷ்ரப் 2 ரன் எடுத்தார். தொடர்ந்து கடைசி பந்தில் மேலும் ஒரு ரன் எடுத்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 274 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் கடைசி பந்தில் வெற்றி காண்பது இது 6-வது நிகழ்வாகும். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நாளை நடக்கிறது.

தமிழ்க் கல்வி அமைச்சை மீள பெறுவோம் – ஜீவன் தொண்டமான் சபதம்

” ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சை மீள எவ்வாறு பெறுவது என்பது எமக்கு தெரியும். தேர்தலுக்கு பின்னர் அது நடக்கும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு இல்லாது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு அவசியம்.அதன் ஊடாக சேவைகள் இடம்பெறுகின்றன. தேர்தலுக்கு பிறகு அதனை பெறுவோம். எவ்வாறு பெறுவது என்பது எமக்கு தெரியும்.” – என்றும் ஜீவன் கூறினார்.

உலக நீதி அரங்கில், தமிழர்களின் முதல் சாட்சி இராயப்பு ஜோசப் ஆண்டகை – மனோ இரங்கல்

உலக நீதிமன்றத்தில், இலங்கை வாழ் தமிழர்களின் முதல் வழக்கு தொடுனரும், முதல் சாட்சியும் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள்தான். ஆனால், அவர் தொடர்ந்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அதற்குள் ஏன் போனார் என்றும் தெரியவில்லை.

2005 முதல் 2009 வரையிலான மிக நெருக்கடியான மனித உரிமை பாழ்பட்டு போன கால கட்டத்தில் அவர் எனக்கும், எமது சிவில் மக்கள் கண்காணிப்பு குழுவுக்கும் தந்த உபதேசங்கள் என் மனதுள் இன்றுவரை ஆளப்பதிந்துள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி, மக்கள் கண்காணிப்பு குழு ஆகிய அமைப்புகளின் சார்பில் எங்கள் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தமுகூ தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களது நேர்மையும், ஆளுமையும், துணிச்சலும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுள்ளன. போரின் இறுதி கட்டங்களில் கொல்லப்பட்டோர், காணாமல் போனோர், காயமடைந்தோர் பற்றிய கணக்கீடுகள் தொடர்பில் சர்வதேச சமூகமும், குறிப்பாக ஐநா அமைப்புகளும், ஏனைய சிவில் அமைப்புகளும், இலங்கை அரசும் இழுபறிபட்டுக்கொண்டு இருந்த வேளையில், ஆயரின் குரல் உறுதியாகவும், தர்க்கரீதியாகவும் ஒலித்தது.

அவரது குரலுக்கும், தர்க்கரீதியான ஆவணங்களுக்கும் இறுதிவரை இலங்கை அரசும், ஐநாவும் பதில் கூறவில்லை என்பதை இங்கே கூறியே ஆகவேண்டும். அது மட்டுமல்ல, போரின் இறுதி காலகட்டங்களில் ஐநா சபை அப்பாவி மக்களை பாதுகாக்க தவறி விட்டது என்ற மனக்கிலேசதத்தையும் அவர் கொண்டிருந்தார்.

நியாயம், நீதி, உண்மை, அமைதி, சமத்துவம், சமாதனம் ஆகியவற்றின் பேரில் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் நடத்தி வந்த போராட்டம் இன்னமும் நிறைவடையவில்லை. உலகின் மனசாட்சியை தட்டி எழுப்பி அவர் தொடுத்த வழக்கு இன்னமும் முடிவுறவில்லை. அங்கே அவர் நேர்பட அளித்த சாட்சியத்துக்கு பதிலுரை வழங்கப்படவில்லை. அதற்குள் ஆயர் ஐயா, ஏன் போனார் எனவும் தெரியவில்லை.

ஆனால், அவரது சிவில் தலைமைத்துவத்தை முன்மாதிரியாக கொண்டு இன்று வடக்கு கிழக்கிலேயே சிவில் சமூகம் கட்டமைக்கப்பட்டு செயற்பட ஆரம்பித்துள்ளமை நம்பிக்கை ஒளியை தருகிறது. இதுவே அவருக்கான அர்த்தமுள்ள அஞ்சலி என நான் நினைக்கின்றேன்.

தமிழ்க் கல்வி அமைச்சு பறிக்கப்பட்டமை மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம்

ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு நீக்கப்பட்டுள்ளமையானது மலையக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (03.04.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கையில் மத்திய மாகாணத்தில் 522 தமிழ் பாடசாலைகளும்
ஊவா மாகாணத்தில் 222 தமிழ் பாடசாலைகளும் உள்ளன. இவ்விரு மாகாணங்களிலும் தமிழ்மொழிமூல கல்வி மேம்பாட்டுக்காக தமிழ்க் கல்வி அமைச்சுகள் உருவாக்கப்பட்டிருந்தன. 1988 இல்தான் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து மலையக மக்களுக்கானதொரு உரிமையாக இவை கிடைக்கப்பெற்றுவந்தன.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இற்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு இல்லாது செய்யப்பட்டது. தற்போது ஊவா மாகாணத்திலும் தமிழ்க் கல்வி அமைச்சும் பறிக்கப்பட்டுள்ளது. இது பெருந்தோட்ட மக்களுக்கு செய்யப்படும் அநீதியாயம். மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்.

தமிழ்க் கல்வி அமைச்சு இருந்தால் கல்விப்பணிப்பாளர் நியமனம், ஆசிரியர் நியமனம், சிற்றுழியர் நியமனம் பல பல விடயங்களை செய்யலாம். தமிழ்மொழிமூல கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம். தற்போது அந்த அமைச்சு இல்லாமல் செய்யப்பட்டமையானது கல்வி வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.” – என்றார்.

அதேவேளை, நாளொன்றுக்கு 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என தோட்ட துரைமார் இன்று வலியுறுத்திவருகின்றனர். பல நெருக்கடிகளை நிர்வாகம் கொடுத்துவருகின்றது. எனவே, ஆயிரம் ரூபாவை அரசு பெற்றுக்கொடுக்கவேண்டும்.” – என்றார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

கொட்டக்கலையில் அதிசயம்: உச்சியில் அல்லாமல் தண்டின் நடுப்பகுதியை பிளந்து வெளிவந்த வாழைக்குலை!

0
இயற்கை அன்னை எப்போதுமே நம்மை ஆச்சரியப்படுத்தத் தவறுவதில்லை. அந்த வகையில், கொட்டக்கலை பாத்தியாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுத்தோட்டத்தில் நிகழ்ந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஒரு வாழை மரம்...

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...