Home Blog Page 3553

மன்னார் மாவட்டத்தின் முன்னாள் ஆயர் காலமானார்

மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை ( வயது – 80) இன்று காலை இயற்கை எய்தினார்.
மதத்துக்கு அப்பால் மனிதத்தை நேசித்தனர். மனித உரிமை காவலராக செயற்பட்டவர். தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். தமிழ் தேசியம் தடம்புரளாத விதத்தில் நெருக்கடியான கட்டங்களிலும் அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கியவர்.

சீனாவின் கொரோனா தடுப்பூசிகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

சீனாவின் Sinopharm கொரோனா தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.சீன அரசாங்கத்தின் நன்கொடையாக 6 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong கையளித்தார்.

நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பூசிகளை முதலில் இங்கு வசிக்கும் சீன பிரஜைகளுக்கு ஏற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கையில் தொழிலுக்காக வருகை தந்துள்ள 4,500 சீன பிரஜைகளுக்கு முதற்கட்ட Sinopharm தடுப்பூசிகளை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், Sinopharm தடுப்பூசியை நாட்டினுள் பயன்படுத்துவதற்கு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.

இதேவேளை, கொரோனா தடுப்பூசி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.

சொஃப்ட்லொஜிக் லைஃப் இலங்கையின் பாரம்பரிய மருத்துவமான “ர்நடய ஏநனய” மருத்துவ காப்பீட்டின் மூலம் பாதுகாப்பு வழங்குpன்றது

இலங்கையில் அனைத்து மக்களின் வாழக்;கைத்தரத்தை உயர்த்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிற செயற்பாட்டில், நாட்டின் மிகவும் விரும்பதக்க ஆயுள் காப்புறுதி நிறுவனமான சொஃப்ட்லொஜிக் லைஃப் இப்போது பதிவு செய்யப்பட்ட பாரம்பரிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களில் செய்யப்படும் சிகிச்சைகளை முழுமையாக உள்ளடக்குகிறது.

நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கான இந்த புதிய பாதையில் எங்கள் நாட்டின் தலைமுறைகளால் நம்பப்படுகிற பூரண குணப்படுத்தலைத் தரும் இலங்கையின் பாரம்பரிய மருத்துவ நடைமுறையை மேம்படுத்துவதன் மூலம் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“இலங்கையர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனமாக நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையை வளர்ப்பது எங்கள் கடமை என்பதை நம்புகிறோம்.

மனதையும் உடலையும் குணப்படுத்துவதை துரிதப்படுத்த தலைமுறைகளால் வடிவமைக்கப்பட்டது.
இன்றும் நம்மில் பலர் நீண்டகால நோய்களுக்கு பாரம்பரிய மருத்துவ முறையை நாடுகின்றோம்;;.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சொஃப்ட்லொஜிக் லைஃப்இன் நிறைவேற்றுப் பணிப்பாளரான இப்திஹார் அகமட், “இருப்பினும், பெரும்பாலானவர்கள் இதைப்பற்றி குரல் கொடுக்காததால், இதுபோன்ற நம்பகமான பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளின் இருப்பு மற்றும் நமது வாழ்வுக்கு அவை குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கவில்லை.

எனவே, இந்த முயற்சியுடன் எமது இலக்கு இரண்டு மடங்காக உள்ளது.

பாரம்பரிய மருத்துவமனைகள் அல்லது மருத்துவர்களிடமிருந்து சிகிச்சையை உள்ளடக்கிய ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைக் கொள்கையை நாங்கள் வழங்க விரும்புகிறோம், மேலும் மிக முக்கியமாக இந்த நம்பகமான தலைமுறை பரிசின் நடைமுறையை மேம்படுத்துவதற்காக இலங்கை முழுவதும் உள்ள உள்ளுர் பூர்வீக மருத்துவ மத்திய நலையங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்.

சொஃப்ட்லொஜிக் லைஃப் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மில்லியன் உயிர்களை கவனித்துக்கொள்வதற்கு மேலேயும் அதற்கு அப்பாலும் செல்ல தயாராக உள்ளது என்ற நம்பிக்கையை இது மேம்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கையாகும்.” என தெரிவித்துள்ளார்.

காப்புறுதிதாரர்கள் சொஃப்ட்லொஜிக் லைஃப்; காப்புறுதிதாரர்கள் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் மூலம் வழங்கப்படும் சான்றிதழ் பத்திரம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சைக்கான செலவுகளை கோரலாம்.

இந்த மதிப்புமிக்க மருத்துவ முறைகளை அடுத்த தலைமுறைகளுக்காக உயிருடன் வைத்திப்பது தங்கள் பொறுப்பு என சொஃப்ட்லொஜிக் லைஃப் நம்புவதால் நாடு முழுவதும் இன்னும் அடையாளம் காணப்படாத நூற்றுக்கணக்கான பிற மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளை அடையாளம் காண்பதற்கான தனது முயற்சியை விரிவுப்படுத்த உள்ளது.

பாரம்பரிய உள்நாட்டு சிகிச்சை முறையின் நன்மைகளை தயாராகவுள்ள ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு பயனளிப்பதற்காக, நாடு முழுவதும் செயற்படும் நம்பகமான சிகிச்சை மையங்களை அடையாளம் கண்டு ஒருங்கிணைப்பதற்கான பொது பரிந்துரைகளை வழங்க இலங்கை மக்களின் ஆதரவை திரட்டுவதற்கு சொஃப்ட்லொஜிக் லைஃப் விரும்புகிறது.

பாரம்பரிய மருத்துவ சிகிச்சையை அனுபவித்த எவரும் இப்போது ஒரு மருத்துவர் அல்லது மருத்துவமனையை பதிவு செய்ய றறற.றநனயஎயசரயெ.டம என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிக்கலாம், அதன் பிறகு சொஃப்ட்லொஜிக் லைஃப் அவற்றை மதிப்பீடு செய்து தமது தரவுக் கோப்பகத்தில் சேர்க்கும், இதனால் வெளிநாட்டு பார்வையாளர்கள் உட்பட மற்றவர்களும் அத்தகைய நடைமுறை நன்மைகளின் மதிப்பைக் காணலாம்.

நாங்கள் மக்களை பாதுகாக்கும் தொழிலில் இருக்கிறோம்.அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த புத்தாக்கங்களை கண்டுபிடிப்பதன் மூலமும் அயராது உழைக்கிறோம்.

எனவே எங்கள் சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்குப் பொருத்தமான காப்புறுதி தீர்வுகளை வடிவமைப்பதில் சொஃப்ட்லொஜிக் லைஃப் எப்போதும் மிகுந்த கவனம் செலுத்துகிறது. இன்றும் பல பகுதிகள் விரிவடையவும் வலுவடையவும் உள்ளது.

எமது வாடிக்கையாளர்களுக்கு பயன்தரும் வகையில் தீர்வுகளை உருவாக்குவதில் நாங்கள் மூதலீடு செய்வோம் என அவர் தொடர்ந்து கூறினார்.

தொடர்ந்து புத்தாக்கத்திற்கான கலாச்சாரத்தை வளர்ப்பது, வணிகத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு மாறும் சுறுசுறுப்பான அணுகுமுறை கடந்த ஆண்டில் மாறிவரும் சவால்களை எதிர்கொள்ள அதன் அனைத்து பங்குதாரர்களுக்கு தேவையானதைக் கொடுக்க பல வரையறைகளை அமைத்துள்ளது.

சொஃப்ட்லொஜிக் லைஃப் தற்போது 1.5 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்ககளின் நம்பிக்கையை வென்றுள்ளது.இது வாடிக்கையாளரின் சேவையில் சிறந்து விளங்குவதும்; புத்தாக்க கண்டுபிடிப்புக்களை உருவாக்குவதுமே வெற்றிக்கு மூலக்கல்லாகும்.

ஆண்டுதோறும் வாடிக்கையாளரின் தேவையை நன்கு புரிந்து கொள்வதற்காக பயனுள்ள புதிய முயற்சிகளை மேற்க்கொள்கிறது.

அதேசமயம் புதிய தயாரிப்புக்களை கண்டறியவும் தொழில்நுட்ப தீர்வுகளை கண்டறிவதற்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்தி;ட்டங்களுக்கு குறிப்பிடதக்க நிதியை ஒதுக்குகிறது.

சொஃப்ட்லொஜிக் லைஃப் பற்றி:

ஃசொப்ட்லொஜிக் லைஃப் காப்புறுதி பி.எல்.சி என்பது சொஃப்ட்லொஜிக் லைஃப் கெப்பிட்டல் பி.எல்.சி.இன் துணை நிறுவனமாகும்.

இது சொஃப்ட்லொஜிக் லைஃப் குழுமத்தின் ஒரு பகுதியாகும். இது இலங்கையின் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பெரு நிறுவனங்களில் ஒன்றாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குதாரர்களில் உலகளாவிய முதலீட்டாளர்கள் டுநயி கசழப அடங்கும்.

‘Avurudu Jayayi’ கார்ட் பிரசாரத்தினால் அனைவருக்கும் கவர்ச்சிகரமான சலுகைகளை அள்ளி வழங்கும் HNB

இலங்கையில் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக HNB எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் தமது HNB கார்ட் உரிமையாளர்களுக்காக ‘HNB Avurudu Jayayi’ எனும் வங்கியின் புதிய கார்ட் மேம்பாட்டை அறிமுகம் செய்துள்ளது.

தமது வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு சிறந்ததைப் பெற்றுக் கொடுக்க எப்பொழுதும் நடவடிக்கை எடுக்கும் HNB இம்முறை கிரடிட் மற்றும் டெபிட் கார்ட்களுக்காக பண்டிகைக்காலச் கழிவுகள் மற்றும் சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாடுமுழுவதிலும் மிகவும் பிரபல்யமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைத் தயாரிப்புக்கள் பலவற்றுடன் கைகோர்த்துள்ளது.

சௌபாக்கியம் என்ற தொனிப்பொருளில் ஃபேஷன், ஹோட்டல், உணவகங்கள், பல்பொருள் அங்காடி, Online விற்பனை நிலையங்கள், சுகாதாரம், கல்வி, தங்க நகை மற்றும் வாகன பராமரிப்பு நடவடிக்கைகள் போன்ற பிரிவுகளுக்கு சொந்தமான விற்பனை நிலையங்கள் பலவற்றுக்கு இந்த அட்டை பிரசாரத்தில் அடங்கும்.

பண்டிகைக் காலத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வங்கியின் புதிய அட்டை பிரசாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த HNB அட்டைப் பிரிவு பிரதானி திருமதி.

கௌதமி நிரஞ்சன், “ஏனைய வருடங்களை விட அதிகமான சவால்கள் நிறைந்த வருடத்தை கடந்து நாம் மீண்டும் வழமை நிலைக்கு வந்துள்ளோம்.

வாடிக்கையாளர் வங்கியியலில் தேசிய முன்னோடியாக இந்த உற்சவ காலத்தில் எமது வாடிக்கையாளர் பெருமக்களுக்கு அவர்களது மனதுக்கு ஏற்ற விதத்தில் பண்டிகையைக் கொண்டாட ஒப்பிட முடியாத பெறுமதியை வழங்குவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.” என தெரிவித்தார்.

தமது வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு அமைய இம்முறை பண்டிகைக் காலத்தில் அவர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய வாழ்க்கையை அனுபவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தும் நாட்டிலுள்ள அனைத்து முன்னணி ஃபேஷன் வர்த்தக இலச்சினைகளுக்காக 40% வரை கழிவுடன் முன் வரிசையிலுள்ள ஹோட்டல்களில் தங்குமிட வசதிகளுக்காக 70% வரை விசேட கழிவுகளையும் பெற்றுக் கொடுக்க HNB நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் வாடிக்கையாளர்களின் நவீன போக்குகளைப் பின்பற்றும் HNB கார்ட் அட்டை உரிமையாளர்களுக்கு அபான்ஸ் மற்றும் buyabans.com இனால் கொள்வனவு செய்யப்படும் iPhones, iPads மற்றும் Apple கைக்கடிகாரம் உள்ளிட்ட Apple தயாரிப்புக்களுக்காக 48 மாதம் வரையிலான வட்டியில்லா தவணைக் கட்டண திட்டத்துடன் விசேட கழிவுகளும் இந்த மேம்பாட்டின் மூலம் பெற்றுக் கொடுக்கப்படுகிறது.

மேலும் இந்த பண்டிகைக் காலத்தில் கார்ட் உரிமையாளர்களுக்கு அவர்களது அன்பார்ந்தவர்களுடன் பல்வேறு உணவகங்களில் சிறந்த உணவு விருந்தோம்பலை அனுபவிப்பவர்களுக்கு 30% வரை கழிவுகளும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலே குறிப்பிடப்பட்ட அனுகூலங்களுக்கு மேலதிகமாக கிரடிட் மற்றும் டெபிட் கார்ட் உரிமையாளர்களுக்கு பண்டிகை வாரம் முழுவதும் அவர்களது அன்றாட ஷெஃபிங் நடவடிக்கைகளை மேற்கொள்வததற்கு நாட்லுள்ள முன்னணி வரிசையிலுள்ள பல்பொருள் வனிகங்களில் 25% வரை கழிவுகளை வழங்க HNB நடவடிக்கை எடுத்துள்ளது.

“இந்த அனைத்திற்கும் மேலாக தமிழ் மற்றும் சிங்கள புதுவருட பண்டிகையானது இயற்கைக்கும், சம்பிரதாயங்களுக்கும் மற்றும் ஒவ்வொருவருக்கும் நன்றியைத் தெரிவிக்கும் ஒரு சந்தர்ப்பமாகும்.

அதற்கு நாம் மதிப்பளிப்பதோடு எமது இந்த ‘Avurudu Jayayi’ பிரசாரத்தினால் வழங்கப்படும் விசேட கழிவுகள் மற்றும் வட்டியில்லாத தவணைக் கட்டண திட்டங்களுடன் எமது வாடிக்கையாளர்கள் மீது உள்ள எமது நன்றியுணர்வைக் காட்ட நாம் விரும்புகின்றோம்.” என கௌதமி நிரஞ்சன் மேலும் தெரிவித்தார்.

கார்ட் உரிமையாளர்களின் வசதி மற்றும் திருப்தியை மேலும் அதிகரிப்பதற்கு HNBஇனால் வழங்கப்படும் இந்த கவர்ச்சிகரரமான கழிவுகளுக்கு மேலதிகமாக 2021 ஏப்ரல் 30ஆம் திகதி வரை எந்தவொரு கிரடிட் கார்ட் கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் 12 மாதம் வரை வட்டியில்லாத தவணைக் கட்டண திட்டத்தினையும் வங்கி பெற்றுக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது HNB அட்டை Visa Gold, Platinum, Signature மற்றும் Infinite ஆகியவற்றுக்கு மேலதிகமாக Master Card Gold, Platinum மற்றும் World போன்ற அட்டைகளும் இதில் உள்ளடங்குகின்றன.

இந்த அனைத்து கார்ட் உரிமையாளர்களுக்கும் வங்கியின் ஏனைய கவர்ச்சிகரமான விசேட அம்சங்கள் பலவற்றை அனுபவிப்பதற்கு தேவையான வழிமுறைகள் உள்ளதுடன் அவர்களுக்கு எவ்வித ஆரம்பக் கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது.

நாடு முழுவதிலும் 252 வாடிக்கையாளர் நிலையங்களைக்;கொன்டுள்ள HNB இலங்கையின் மிகப்பெரிய தொழில்நுட்ப ரீதியான புத்தாக்கங்களைக் கொண்ட வங்கிகளில் ஒன்றாகும்.

இது டிஜிட்டல் வங்கியில் ஒரு புதிய முன்னுதாரணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளுக்கு உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

Fitch Ratings (Lanka) Ltd நிறுவனத்தினால் AA-(lka)இன் நீண்டகால தேசிய மதிப்பீட்டை HNB கொண்டுள்ளது.

2020ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி விருதுகளில் இங்கையின் சிறந்ந Sub-Coustodian வங்கியாக HNB அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆசிய வங்கியாளர் விருதுகளில் 11வது தடவையாகவும் இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கிக்கான விருதை வென்றது.

சவாலான பொருளாதார சூழல் மத்தியிலும் தன்னுடைய வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டிருக்கின்றது.

‘பதுளை மாவட்ட பெருந்தோட்ட அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்’

பதுளை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக்கூட்டம்,(இன்று) பதுளை அரச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தொழில் அமைச்சர் நிமால் டி சிரிபால டி சில்வா மற்றும் ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஆகியோரின் இணைத்தலைமைகளில் மேற்படிக் கூட்டம் நடைபெற்றது.

பதுளை மாவட்டத்தின் பெருந்தோட்டங்கள் மற்றும் கிராமியப் பகுதிகள் அபிவிருத்திகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அ. அரவிந்தகுமார், டிலான் பெரேரா, சுதர்சன தெனிப்பிட்டிய, சாமர சம்பத் தசாநாயக்க, திஸ்ச குட்டியாராச்சி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் பதுளை மாவட்ட அனைத்து அரச திணைக்கள பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் ஆகியோரும், இக் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தனர்.

எம். செல்வராஜா, பதுளை

இலங்கையில் 154 வருட பழைமையான Finlays தோட்டத்தில் உச்ச வரம்புகளை தகர்த்து முன்னோக்கி வந்த இரு பெண்கள்

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவதில் உலகெங்கிலும் உள்ள மக்களுடன், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் அளித்த மகத்தான மற்றும் அத்தியாவசிய பங்களிப்புகள் குறித்து ஒரு கூட்டு புரிதலை உருவாக்க ஆராம்பிக்கிறது. பாலினத்தைப் பொருட்படுத்தாமல் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புக்களை மேம்படுத்துவதில் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று, நிர்வாகத்தின் இடத்தில் உள்ளது.

பெண்கள் இத்தகைய முக்கியமான பங்கினை வகிக்கும் பல துறைகளில், விவசாயம் மற்றும் தோட்டத் துறை ஆகியன அடங்கும், இருப்பினும், பொதுவாக, இங்கு கூட அவை பெரும்பாலும் கள நடவடிக்கைகளில் மட்டுமே உள்ளன, நிர்வாகப் பொறுப்பு அல்ல.

இருப்பினும், பாரம்பரியமாக ஆண் ஆதிக்கம் செலுத்தும் இந்தத் தொழிலில் கூட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, குறிப்பாக Finlays Tea Estates Sri Lanka (Pvt) Ltd போன்ற உள்நாட்டு பிராந்திய தோட்ட நிறுவனங்களின் (RPCs) முயற்சிகளுக்கு நன்றி.

தோட்டங்களில் சவால் நிறைந்த தொழில்களுக்கு பெண்களை தேர்வு செய்த நிறுவனம், 2025ஆம் ஆண்டளவில் நிர்வாக நிலைகளில் 30%ஐ அடைவதற்கான இலக்கையும் நிர்ணயித்துள்ளது.

அதற்காக, Finlays இந்த முக்கியமான பொறுப்புக்களில் பெண்களை தீவிரமாக இணைத்துக் கொள்ளத் தொடங்கியது, ஏற்கனவே, இந்த முயற்சிகள் மகத்தான முடிவுகளைத் தந்துள்ளன, அந்த நிறுவனத்தின் இரண்டு இளம் பெண் உதவி கண்காணிகளான பிரியந்தி மகேஸ்வரநாதன் மற்றும் நவோதா விஜயாங்கனி ஆகியோர் சொல்வதைக் கேட்போம்.

பெண்கள் அதிக திறன் கொண்டவர்கள்

இளம் வயதிலிருந்தே யாழ்ப்பாணத்தின் ஒப்பீட்டளவில் பழமைவாத சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த பிரியந்தி எப்போதுமே சவால்களையே எதிர்கொண்டார், ஒருபோதும் ஒரு பணியிலிருந்து பின்வாங்கவில்லை, குறிப்பாக கட்டளை கொடுக்கும் நடவடிக்கைகளை ‘பாரம்பரிய’மாக ஆண்களே செய்து கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறு வயதில் இருந்து, பிரியந்தி அவருடைய சகோதரனும் அவளுடைய அக்கம் பக்கத்து சிறுவர்களும் இணைந்து ஒவ்வொரு விளையாட்டுக்களிலும் ஈடுபடுள்ளார்.

காலப்போக்கில் இது தற்காப்புக் கலை பயிற்சிக்கு வழிவகுத்துள்ளது, மேலும் இந்தக் கலையில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

அதற்குப் பிறகு குத்துச் சண்டைப் பயிற்சியிலும் ஈடுபட்டு மாகாண மட்டத்தில் இடம்பெற்ற போட்டியின் போது 2017ஆம் ஆண்டு மற்றுமொரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது சவால் நிறைந்த நடவடிக்கைகள் குறித்து கூறிய பிரியந்தி மகேஸ்வரநாதன், “நான் பல்கலைக்கழகத்தில் இருந்த போது, சமீப ஆண்டுகளில் நாம் கண்ட மிக தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொடுக்கும் ஒரு வர்த்தகமாக விவசாயத்தின் ஆற்றலில் நான் ஈர்க்கப்பட்டேன், ஆனால் நடைமுறையில் இது நிச்சயமாக கலாச்சாரம், செயன்முறைகள் மற்றும் தொழில் முறைகளை சரிசெய்து தேயிலைத் தோட்டத்தில் நிர்வாக மட்டத்தில் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு எனக்கு சிறிய காலம் தேவைப்பட்டது.

ஆனால் இந்த வகையான தோட்டத் தொழிலில் பெண்கள் ஈடுபடாததனால் அது மிகவும் கடினமானதாகவும், சவாலானதாகவும் இருந்தது, நான் இதில் ஏதாவது சாதிக்க வேண்டுமென விரும்பினேன் – எனக்கும் மற்ற பெண்களுக்கும் எந்த தொழிலாக இருந்தாலும் அதில் வெற்றிபெற நாங்கள் முழுத் திறமையுள்ளவர்கள், ஒரு ஆணைப் போலவே எங்களாலும் முடியும்.” என தெரிவித்தார்.

Finlays Estate கண்காணி Richard Ohlmusஇன் வழிகாட்டுதலின் கீழ் Newburgh

Estateஇல் 6 மாதம் முழுமையான பயிற்சியைப் பெற்ற பின்னர், பிரியந்தி Waldemar Estateஇல் உதவி கண்காணியாக முதல் நியமனம் வழங்கப்படுவதற்கு முன்பு தொழிலைக் கற்றுக் கொண்டார், அவர் அங்கு இப்போது ஒருவருடத்திற்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அறிவியல் மற்றும் அறிவு மீதான ஆர்வம்

Finlays’ Alnwick Estateஇல் உதவி கண்காணியாக தொழில்புரியும் நவோதா விஜயாங்கனியும் தன்னை பெருந்தோட்டத் துறையில் பணிபுரிவதை ஒருபோதும் நினைத்துக் கூட பார்த்ததில்லை மற்றும் பல்கலைக்கழக மாணவராகப் பயிற்சி பெறும் காலப்பகுதியில் மலை நாட்டிலுள்ள அழகையும், மலைகளையும் ரொம்பவே நேசித்து தற்செயலாகவே இந்த தொழில்துறையில் நுழைந்துள்ளார்.

ஊவா-வெல்லஸ்ஸ பல்கலைக்கழத்தில் மாணவராக இருந்த காலத்தில், பேராதனை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை தொடர்பில் முதுகலை படிப்பை முடிப்பதற்கு முன்னர் தேயிலை தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றைப் பற்றியும் கற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் அவர் தேயிலை ஆராய்ச்சித் துறையில் இணைந்து கொண்டார், அங்கு தனது பயிற்சியை முடித்தபோது, அவர் தனது முகாமையாளருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது, அப்போது அவர் தன்னைப் போன்ற தகுதியுள்ள ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய வேலை வாய்ப்பு குறித்தும் விசாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“எனக்கு தேயிலை மீது ஏன் அவ்வளவு ஆர்வம் ஏற்பட்டது என்று பார்க்கும் போது, நான் மலையக சூழலையும் அதன் காலநிலையையும் அதிகமாக நேசிப்பதனால்.

தேயிலை வர்த்தகத்திற்கு பின்னால் உள்ள விஞ்ஞானம் கவர்ச்சிகரமானதாக இருப்பதை நான் எப்போதும் கண்டேன்.

Finlays தோட்டத்திற்கு ஆட்களை வேலைக்காக தேடுவதை பற்றி நான் அறிந்து கொண்டேன், அப்போது அங்கு என்ன பதவி என்று கூட எனக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் இந்தத் துறையில் பணிபுரிவதற்கு எனக்கும் விருப்பம் இருக்கிறது என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

இது பாரம்பரியமாக பெண்கள் நுழையாத ஒரு துறையாகும் என்பதையும் நான் அறிவேன், இதுவொரு சவாலானது என கூறியவர்களுக்கு முன்னால் நானும் சாதிக்க வேண்டுமென உணர்ந்தேன்.” என தெரிவித்தார்.

இன்று Alnwick Estateஇற்கு அனுப்பப்பட்ட பெண் உதவி கண்காணியாளர் ஆவார், அங்கு அவர் 130 நபர்களைக் கொண்ட குழுவை நிர்வகிக்கிறார்.

இந்த பொறுப்பானது மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கின்ற போதிலும் அதனைக் கடந்து வந்துள்ள நிலையில் நவோதா தனது கோட்பாடுகளைப் போலவே தனது வேலையில் சிக்கல்கள்கள் இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக பணிபுரிந்து வருகின்றார்.

 

தபால் ஊழியர்கள் போராட்டம் – மலையகத்திலும் சேவைகள் பாதிப்பு!

நாடு தழுவிய ரீதியில் தபால் திணைக்கள ஊழியர்கள், நியமனங்கள் மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்துள்ள ஒரு நாள் அடையாள வேலை நித்தப்போராட்டம் காரணமாக மலையகப்பகுதியில் தபால் திணைக்களத்துடன் தொடர்புடைய சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
பொதுவாக மின்கட்டணம்,தண்ணீர் கட்டணம் கடிதங்கள் உட்பட பல்வேறு சேவைகளை இலகுவாக தபால் திணைக்களத்தின் ஊடாகவே பொது மக்கள் செய்துவருகின்றனர்.
இன்று(31) திகதி தபால் அலுவலகங்களுக்கு வருகை தந்த பொது மக்கள் தங்களது தேவைகைள நிறைவேற்றிக்கொள்ள முடியாது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர்.
இதனால் இன்றைய தினம் அரச மற்றும் தனிநபர்களுக்கு விநியோகிக்க வேண்டிய கடிதங்களும் விநியோகிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நமது விசேட நிருபர் – ஹட்டன் கே. சுந்தரலிங்கம்

Hemas Primary Care வெளிநோயாளர் பிரிவை நீர்கொழும்பில் திறந்து வைக்கும் ஹேமாஸ் மருத்துவமனை குழுமம்

இலங்கையில் தனியார் மருத்துவமனை துறையில் சர்வதேச தரத்தில் சுகாதார சேவைகளை முதன்முறையாக அறிமுகம் செய்யும் வகையில் அவுஸ்திரேலியாவின் ACHSI சர்வதேச தரத்தை முதலில் பெற்றுக் கொண்ட ஹேமாஸ் மருத்துவமனை குழுமம் தமது புதிதான Hemas Hospitals Primary Care வெளிநோயாளர் சிகிச்சை மத்திய நிலையமொன்றை நீர்கொழும்பில் திறந்து வைத்துள்ளது.

அனுபவமுள்ள வைத்தியர்கள் மற்றும் தாதியர்களைக் கொண்ட ஊழியர்களினால் வாரத்தின் 24 மணித்தியாலமும் சேவைகளை வழங்கும். நவீன வைத்திய வசதிகளுடன் கூடிய வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவை நீர்கொழும்பு பிரதேசத்தில் திறந்து வைப்பது இதுவே முதல் தடவையாகும்.

நவீன வைத்திய வசதிகளுடன் கூடிய Hemas Hospitals Primary Care வெளிநோயாளர் சிகிச்சை மத்திய நிலையத்தில் பல நோயாளர்களை பரமரிக்கக் கூடிய விதத்தில் நிபுணத்துவம் கொண்ட வைத்திய பரிசோதனை வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடிவதுடன் இரசாயனக் கூட வசதிகள் மற்றும் மருந்துகளை வாங்கக் கூடிய வசதிகள் மட்டுமன்றி ஹேமாஸ் உடல் ஆரோக்கிய பிரிவும் இதில் அடங்கும்.
வத்தளை ஹேமாஸ் மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு சேவைகளை வழங்குவதனால் இந்த மத்திய நிலையத்திலிருந்து செயற்படும் போக்குவரத்து சேவைகள் மூலம் மேலதிக சிகிச்சைகள் தேவையான நோயாளர்கள் இந்த மத்திய நிலையத்திலிருந்து வத்தளை ஹேமாஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுவர்.

ஹேமாஸ் வலைப்பின்னல் இரசாயனகூட சேவைகள் செயற்படுத்தப்படுவதனால் அந்த ஒன்லைன் சேவை கட்டமைப்பிற்கு பிரவேசித்து தமது வைத்திய அறிக்கையை பரிசீலித்தல், ஒன்லைன் வசதிகளைப் பயன்படுத்தி நிபுணத்துவம் கொண்ட வைத்திய சேவைகளைப் பெற்றுக் கொள்ளுதல் போன்ற வலைப்பின்னல் வசதிகளையும் பயன்படுத்துவதன் ஊடாக கால வீண் விரையத்தை தவிர்த்துக் கொள்வதற்கு நோயாளர்களால் முடியும்.

“நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டிய மக்களுக்கு சர்வதேச தரத்தில் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு சேவை மத்திய நிலையமொன்றை வழங்கியமை இட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

அத்துடன் இந்த பிரதேசத்தில் கடமையாற்றும் வைத்திய நிபுணர்களுக்கு தமது சேவைகளை மிகவும் சிறப்பாக இந்த மத்திய நிலையத்திலிருந்து வழங்க முடியும் மற்றும் அதனூடாக நீண்டகால சிறந்த உறவை வைத்துக் கொள்வதற்கும் இது சிறந்தவொரு விடயமாக அமையுமென நான் நம்புகின்றேன்.

இங்கு விசேடமாக மேலதிக சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளர்களுக்கு அந்த நேரமே வத்தளை ஹேமாஸ் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கு தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

இதனூடாக ஆரம்ப சிகிச்சையளிப்பின் உச்ச அளவிற்கு சென்று நோயாளியை பூரணமாக குணப்படுத்துவதற்கு தேவையான சிகிச்சைகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொடுப்பதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிட்டும்.

நோயற்ற இலங்கையை கட்டியெழுப்புவதற்கான எமது எண்ணக் கருவிற்கு அமைய நோயாளர்களுக்காக ஒப்பிட முடியாத சுகாதார சேவையைப் பெற்றுக் கொடுப்பதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிட்டும்.” என வத்தளை ஹேமாஸ் மருத்துவமனையின் பணிப்பாளரும் பொது முகாமையாளருமான டொக்டர் லசன்த கருணாசேகர தெரிவித்தார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் செயற்படும் ஏனைய வெளிநோயாளர் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு சமாந்திரமாக மிகவும் நவீனமயத்துடன் கூடிய Hemas Hospitals Primary Care மத்திய நிலையத்தின் மூலம் நோயாளர்களின் ஒட்டுமொத்த குணப்படுத்தல் குறித்தும் கவனம் செலுத்துவதுடன் மலிவான விலையில், இந்த மத்திய நிலையத்திற்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் சிறந்த சேவையை மற்றும் டிஜிட்டல் சுகாதார சேவைக்கு இலகுவாக பிரவேசிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற சிறந்த வலைப்பின்னல் சுகாதார சேவைகளை வழங்குவதற்கு ஹேமாஸ் மருத்துவமனை குழுமத்தின் இலச்சினை வாக்குறுதியை மேலும் பலப்படுத்தியுள்ளது.

“நீர்கொழும்பில் திறந்து வைக்கப்பட்ட இந்த Hemas Hospital Primary Care மத்திய நிலையம் தேவையான சிகிசைக்கு தேவையான இடத்திற்கு தேவையான நேரத்தில் பெற்றுக் கொடுப்பதற்காக பொருத்தமாக இருக்குமென நான் நம்புகின்றேன்.

இதில் காணப்படும் மற்றுமொரு விசேட அம்சம் என்னவென்றால் நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு தாங்கள் வாழும் பிரதேசத்திலேயே சர்வதேச தரத்தில் சுகாதார சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு இந்த மத்திய நிலையத்தின் ஊடாக சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.” என ஹேமாஸ் மருத்துவமனை குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு நிலைய சங்கத்தின் தலைவருமான கலாநிதி லக்கித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஹேமாஸ் குழுமம் தொடர்பாக:

கொவிட்-19இல் பாதுகாப்பானது என இலங்கை தரப்படுத்தல் நிறுவனத்தினால் சான்றிதழ் பெற்ற இலங்கையின் ஒரேயொரு மருத்துவ இலச்சினை கொண்ட ஹேமாஸ் மருத்துவ குழுமம், அவுஸ்திரேயாவின் ACHSI எனும் Australian Council for Healthcare Standards Internationalஇன் அங்கீகாரம் பெற்ற மற்றும் பாதுகாப்பு மற்றும் தரம் தொடர்பில் தங்க முத்திரையை பதித்த இலங்கையின் முதலாவது மற்றும் ஒரேயொரு வைத்தியசாலை வலையமைப்பாகும்.

2008ஆம் ஆண்டு வத்தளையில் ஸ்தாபிக்கப்பட்ட ஹேமாஸ் வைத்தியசாலை இரண்டாவதாக தலவத்துகொடையில் ஸ்தாபித்து வைத்தியசாலை வலையமைப்பாக உருவெடுத்துள்ளதுடன் இலங்கையில் மிகவேகமாக வளர்ச்சியடையும் வைத்தியசாலை வலையமைப்பான ஹேமாஸ் வைத்தியசாலை FMCG, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு உட்பட பல்வேறு பிரிவுகளைக் கொண்ட விரிவாக்கப்பட்ட ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் முழுமையான துணை நிறுவனமாக அமைவதோடு சர்வதேச ரீதியில் சிறந்த மற்றும் பாதுகாப்பான சுகாதார சேவைகளை நோயாளர்களுக்கு வழங்கி வருகின்றது.

ஹேமாஸ் மருத்துவமனை தற்போது சமூக நல செயன்முறைகள் பலவற்றை மேற்கொள்கிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக முன்னெடுக்கப்படும் ‘பியவர’ நிகழ்ச்சித் திட்டம் மூலம் 400 மில்லியன் ரூபா செலவில் 140க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு மற்றும் 3200 சிறுவர்களுக்காக நாடு முழுவதிலும் உள்ள 53க்கும் அதிகமான முன்பள்ளிகளை அமைத்துள்ளதுடன் ‘ஆயத்தி’ சமூக நல செயன்முறைகள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் களனி பல்கலைக்கழகம், மார்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து ஊனமுற்ற குழந்தைகளுக்காக 650 மில்லியன் ரூபா செலவில் றாகமை வைத்தியசாலையில் புனர்நிர்மாண மத்தியநிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Google வர்த்தகச் செய்திகளுக்காக ஒருங்கிணைந்த இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற அந்தஸ்தைப் பெறும் Airtel

• Google தேடல் மற்றும் வரைப்படங்கள் ஊடாக வாடிக்கையாளர் ஒத்துழைப்புடன் உடனடி அளவளாவலை (Chat) இயக்குகிறது.

• வாடிக்கையாளர் அனுபவ தேர்வு முறைகளுக்காக மேலும் முதலீடு செய்ய எதிர்வரும் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ளன.

இலங்கை தொலைத்தொடர்பில் மைல்கல்லை அடைந்த, பெரும்பாலான இளைஞர்களால் விரும்பப்படும் தொலைத்தொடர்பு நிறுவனமுமான எயார்டெல் லங்கா Google Business Messagesகளுடன் வெற்றிகரமாக ஒருங்கிணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

எயார்டெல்லில் ஒத்துழைப்புக்களை அல்லது தகவல்களைத் தேடும் எவருக்கும், இந்த சேவை நேரலையில் (Live) இருப்பதால், புதிய அம்சமான Google Maps மற்றும் Google Searchஇல் செய்தி Buttonஐ Click செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த அம்சமானது ஒரு வாடிக்கையாளர் எண்ணைத் தேடுவதற்கு எடுக்கும் நேரத்தை நீக்குகிறது, தகவலுக்காக ஒரு தொடர்பு மையத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதனால் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் அனுபவத்தையும் மேம்படுத்த முடியும்.

இந்த தளங்களுக்கான அணுகல் BOTஇன் ஒருங்கிணைப்பால் மேலும் மேம்படுத்தப்பட்டு இது எதிர்காலத்தில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தானியக்க செயற்பாடானது பயனர்களின் தேவைகளை அடையாளம் காணவும், எயார்டெல்லின் தகவல் தளங்களில் எவ்வித இடையூறும் இல்லாமல் வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்காக குறைவான மனித குறுக்கீடுகளுடன் தீர்வுகளை வழங்கவும் முடியும்.

“எயார்டெல் தொடர்ந்து டிஜிட்டல் மயமாக்கலில் முதலீடு செய்துள்ளது, இதனால் இது சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்திற்கு வழிவகுக்கிறது.
Google Business Messagesகளை, விரிவடைந்துவரும் எமது வாடிக்கையாளர் தொடர்பு புள்ளிகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் எங்களை தொடர்புகொள்ள மற்றுமொரு வசதியான புதிய Channelஐ வழங்கி இலங்கையில் தற்போது முதல்வராக இருப்பதில் பெருமையடைகிறோம்.”

“அடுத்த தலைமுறைக்கான இணைப்பை நாங்கள் வைத்திருப்பதால் இந்த அணுகல் எளிதானதும் சரியான திசையில் ஒரு படியாக பயணித்துக் கொண்டிருக்கிறது என்று நாங்கள் நம்புகின்றோம்.” என எயார்டெல்லின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆஷீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

Google Business Messageஇன் அறிமுகமானது எயார்டெல்லின் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தளங்களான Facebook Messenger மற்றும் தொலைத்தெடர்பின் இணையத்தளத்தில் நேரடியாக அளவளாவும் (Chat) செயல்பாடு ஆகியவையும் அமையும்.

எயார்டெல் பின்னர் WhatsApp, Viber, Telegram மற்றும் Twitter போன்ற வாடிக்கையாளர் பராமரிப்பு சேவைகளை அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

எயார்டெல் பாவனையாளர்கள் தற்போது இந்த செயற்பாடுகளை அவர்கள் விரும்பும் தளத்தின் மூலம் அணுக முடியும். தற்போது, வாடிக்கையாளர் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக பட்டியல் அடிப்படையில் BOT பயன்படுத்தப்படுவதுடன், பரந்த அளவிலான சேவைகளுக்கான அணுகலை வழங்கும் மேம்பாட்டு கட்டத்திலும் எயார்டெல் உள்ளது.

தகவல் வழங்கும் தளங்களின் ஒருங்கிணைப்பு அனைத்து டிஜிட்டல் நுழைவு முனைகளிலும் எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவையை வழங்கும் மற்றும் மேலும் வேகமான டிஜிட்டல் முதல் உலகில் தடையற்ற பயன்பாட்டு அனுபவத்தை எளிதாக்கும்.

பாரம்பரிய Channelகளைப் பொறுத்தவரை, எயார்டெல் இப்போது மற்ற அனைத்து வாடிக்கையாளர் அணுகல் புள்ளிகளையும் டிஜிட்டல் மயமாக்கியுள்ளது, பயனர்கள் தங்கள் எயார்டெல் பயணத்தை டிஜிட்டல் முறையில் பயணிக்க உதவுகிறது.

தற்போதுள்ள மற்றும் புதிய பயனர்களுக்கு ஒரே மாதிரியாக இருக்கும் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்துவதில் தொலைத்தொடர்பு தொடர்ந்து இரட்டிப்பாகும்.

எயார்டெல்லின் டிஜிட்டல் வாடிக்கையாளர் சேவை வசதி மூன்று உள்ளூர் மொழிகளிலும் கிடைக்கும். எந்தவொரு சமூக ஊடக பயன்பாடுகளிலும் மொபைல் நெட்வேர்க்குகள் வழங்கல்களை பாவனையாளர்கள் செயல்படுத்த விரும்பினால், அவர்கள் தற்போதுள்ள கடன் நிலுவைத் தொகையை செலுத்துவதன் மூலமோ அல்லது ஒன்லைனில் ரீசார்ஜ் செய்வதன் மூலமோ அவ்வாறு செய்யலாம்.

பாரதி எயார்டெல் லங்கா நிறுவனம் தொடர்பாக:

2009 ஜனவரி 12ஆம் திகதி இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் (எயார்டெல் லங்கா) நிறுவனம் தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும்.

தமது வணிக செயற்பாடுகளை ஆரம்பித்த 2009ஆம் ஆண்டிலிருந்து 3 வருட குறுகிய காலப்பகுதிக்குள் எயார்டெல் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்த சேவையை வழங்கியதோடு இன்று நாடு முழுவதிலும் தமது சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு www.airtel.lk என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்.

மாகாணசபைத் தேர்தல் – போனஸ் ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது குறித்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி இறுதி முடிவை எடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார் – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த இணையவழி ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாணசபைத் தேர்தல் முறைமையை மறுசீரமைப்பது தொடர்பான சட்டமூலம் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. ஸ்தீரமானதொரு மாகாணசபையை உருவாக்கும் நோக்கில் போனஸ் ஆசனங்களை அதிகரிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. தற்போது மாகாணமொன்றில் அதிகூடிய வாக்குகளைப்பெறும் கட்சிக்கு 2 போனஸ் ஆசனம் வழங்கப்படுகின்றது. மேற்படி யோசனையின் பிரகாரம் மாவட்ட ரீதியில் 2 போனஸ் ஆசனங்கள் வழங்கப்படும்.

அந்தவகையில் மேல் மாகாணத்தில் 3 மாவட்டங்கள் உள்ளன. இதுவரை 2 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்ட நிலையில் அந்த எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. அதேபோல வடமத்திய மாகாணத்தில் இரண்டு மாவட்டங்கள் உள்ளன. அங்கு போனஸ் ஆசனங்களின் எண்ணிக்கையை 4 ஆக அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக பிரதேசத்துக்கு பொறுப்புக்கூறவேண்டிய பிரதிநிதி இருக்க வேண்டும் என்பதால் 70 வீதம் தொகுதி அடிப்படையிலும் 30 வீதம் விகிதாசார அடிப்படையிலும் தெரிவுசெய்வதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டது.

அத்துடன், தொகுதியொன்றில் ஒரு கட்சி மூன்று வேட்பாளர்களை நிறுத்த முடியும் என்ற திட்டமும் முன்வைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சர்களும் கருத்துகளை முன்வைத்தனர். இதனையடுத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தைக்கூட்டி, இறுதி முடிவொன்றை எடுப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்தார்.

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக்கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. எனவே, அக்கட்சிகளுக்கும் வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ” என்றார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...