Home Blog Page 3552

பரிசாக கிடைத்த காரை பயிற்சியாளருக்கு வழங்கிய நடராஜன்

மஹிந்திரா நிறுவனம் அன்பளிப்பாக வழங்கிய காரை தனது பயிற்சியாளர் ஜெயபிரகாஷுக்கு பரிசளித்து நெகிழ்ச்சியூட்டியிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் நன்றாக விளையாடிய இளம் வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோரை ஊக்கப்படுத்தும் விதமாக பிரபல மஹிந்திரா நிறுவனத்தின் ஆனந்த் மஹிந்திரா கார் பரிசாக அளிக்கப்படும் என்று கடந்த ஜனவரி அறிவித்திருந்தார். அதன்படி எல்லோருக்கும் கார் பரிசாக சில தினங்களுக்கு முன்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தனக்கு மஹிந்திரா நிறுவனம் வழங்கிய தார் காரை தனது பயிற்சியாளரும் தன்னை ஊக்கப்படுத்தி வருபவருமான ஜெயபிரகாஷுக்கு பரிசளித்து நெகிழ்ச்சியூட்டியிருக்கிறார் நடராஜன்.

8 வயது மகனை கொடூரமாகத் தாக்கிய தந்தை கைது!

தனது மகனை, மிருகத்தனமான முறையில் தாக்கிய தகப்பனை, வெள்ளவாய பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

வெள்ளவாயப் பகுதியில் வெஹரயாய என்ற கிராமத்தில் மேற்hடி தாக்குததல் சம்வம் இடம் பெற்றது. 31 வயதுடைய தப்பன் மது போதையில் வீடு வந்து, தனது சொற்படி மகன் நடக்கவில்லையென்று, தனது எட்டு வயது நிரம்பிய சிறுவனை கடுமையாகத்தாக்கியுள்ளார்.

தாக்கப்பட்ட அச் சிறுவன் மறு தினம் பாடசாலைக்கு சென்ற போது, நோய் வாய்ப்பட்ட நிலையிலேயே, வகுப்பில் அமர்ந்திருந்தான். இதனை அவதானித்த பாடசாலை அதிபர், அச் சிறுவனிடம் காரணத்தை வினவினார். சிறுவன் தனது தந்தை தன்னை அடித்தமையைக் கூறி, தான் தாக்கப்பட்ட உடம்பின் பாகங்களையும் காட்டினான். இவ்விடயத்தை அதிபர் வெள்ளவாயப் பொலிசாருக்கு அறிவித்தார். பொலிசார் பாடசாலைக்கு விரைந்து, சிறுவனின் நிலையைக்கண்டு, அச் சிறுவனை வெள்ளவாய அரசினர் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து, சிறுவனின் வாக்கு மூலத்திற்கமைய, சிறுவனின் தகப்பனை பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் விசாரணையின் பின்னர், வெள்ளவாய மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.ஏ.சி. பிரசாத் தெரிவித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிறுவனின் உடம்பெங்கும் பலத்த காயங்கள் தென்படுவதாகவும், அக்காயங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், டாக்டர்கள் தெரிவித்தனர்.

எம். செல்வராஜா, பதுளை

மனைவியை கொலைசெய்துவிட்டு கணவனும் தற்கொலை! கிளிநொச்சியில் சோகம்!!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தை தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும்
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இச் சம்பவம் இன்று (01) நண்பகல் இடம்பெற்றுள்ளது என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்
அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மனைவியை கழுத்தை நெறித்து கணவன் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தில் 38 வயதுடைய வேலாயுதம் சிவஞானம் என்பவரும் அவரது மனைவியான 36 வயதுடைய சிவஞானம்
குகனேஸ்வரி என்வரும் இறந்துள்ளனர்.

இவர்களுக்கு 16 வயதில் மகளும், 13 மற்றும் 06 வயதில் இரணடு மகன்களும் உள்ளனனர். இவர்களின் இந்த நிலையில் மூன்று பிள்ளைகளும் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர். பொலீஸ் மேதிலக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

” என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் விருதை சமர்ப்பிக்கிறேன்”

என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய திரைப்பட துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்குஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைத்துறையில், வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டு தோறும், தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான 51ஆவது தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய

திரைத்துறையினருக்கு கிடைக்கும் கவுரவமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இந்த விருது கருதப்படுகிறது.

தமிழ் திரையுலகில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மற்றும் இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த்தாதா சாகேப் விருதை பெறுகிறார். தாதாசாகேப் விருது கடந்த 1969ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய திரைப்படத் துறையின் தந்தை என கூறப்படும் தாதாசாகேப் பால்கேவின் பெயரில், திரைத்துறையில் சாதனைபுரிந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. கடந்தாண்டு இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதாசாகேப் விருதுவழங்கப்பட்டது. இதையடுத்து, தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது, ரசிகர்கள்

இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியத் திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை எனக்கு வழங்கிய மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

என் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டுவந்த பேருந்து ஓட்டுநரான எனது நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையின் பிடியில் வாடியபோது என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த சகோதரன் சத்யநாராயணாவிற்கும், என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது இயக்குநர் பாலச்சந்தருக்கும்,

திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

என்னை வாழ்த்திய தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவரும், நண்பருமான மு.க.ஸ்டாலின், நண்பர் கமல்ஹாசன், மத்திய, மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது

இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினியின் 40 ஆண்டு கால திரையுலக சாதனையை பாராட்டி, அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

51வது தாதா சாகேப் பால்கே விருது இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை தந்தற்காக இந்த விருது அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். தங்கத் தாமரை பதக்கமும், பணப்பரிவும் வழங்கப்படும்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,

“தமிழக தேர்தலுக்கும் ரஜினிகாந்துக்கு விருது அறிவித்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘பசறை பஸ் விபத்து’ – சாரதிக்கு அனுமதி பத்திரம்கூட இல்லை! திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின

பசறையில் கடந்த 20ஆம் திகதி விபத்துக்குள்ளான பேருந்தை செலுத்திய சாரதி குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருப்பதாக, பசறைப் பொலிசார் தெரிவித்தனர்.

இச்சாரதி, பஸ் அட்டவணையை பின்பற்றாத நிலையில் செயல்பட்டமை, பொறுப்பற்ற நிலையில் பஸ்சை கடும் வேகத்தில் செழுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்குள்ளாகியிருந்தார்.

அக் குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், மேலுமொரு மோசடி குற்றச்சாட்டும் வெளியாகியுள்ளது.

குறித்த பஸ் சாரதி, பிறிதொரு சாரதியின் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தியே, விபத்துக்குள்ளான பேருந்தை செழுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது. அத்துடன், இச் சாரதி தனக்குறித்தற்ற அனுமதிப்பத்திரத்தை பயன்னடுத்தி, நீண்ட காலமாகவே சாரதியாக இருந்து செயல்பட்டு வந்தமை குறித்த தகவல்களும், வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக தீவிர புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வருகின்றன. அத்துடன் குறித்த சாரதிக்க எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை, முன்னெடுக்கவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேற்படி பசறை விபத்தில் 14 பேர் பலியானதுடன், 32 பேர் காயங்களுக்குள்ளாகியமையும் குறிப்பிடத்தக்கது.

எம். செல்வராஜா, பதுளை

ஹக்கலையில் கோர விபத்து – மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி!

ஆட்டோ ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளாகியதில், மூன்று பெண்கள் பலியாகினர். இச்சம்பவம் வெளிமடை – நுவரெலியா பிரதான வீதியில் ஹக்கல என்ற இடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

எல்ல பகுதியிலிருந்து நுவரெலியாவிற்கு சென்று, மீளவும் எல்ல பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்த ஆட்டோ, எதிர் திசையில் வந்த கனரக லொரியொன்றுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் 51,52,20 வயதுகளுடைய மூன்று பெண்களே பலியானவர்களாவார். விபத்தில் காயமடைந்த நபரொருவர் நுவரெலியா அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆட்டோவில் பயணித்தவர்களே பலியானவர்களாவர். இவ் ஆட்டோவில் வந்த மற்றவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வெளிமடை பொலிசார் மேற்படி விபத்துக்குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் விபத்துக்கான கனரக லொரியின் சாரதியையும் வெளிமடை பொலிசார் கைது செய்துள்ளனர்.

எம். செல்வராஜா, பதுளை

 

ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் நாளை மன்னாருக்கு எடுத்து செல்லப்படவுள்ளது

மறைந்த ஓய்வு நிலை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சிற்றாலயத்தில் அரசியல் பிரமுகர்கள், மதகுருமார் சமூக ஆர்வலர்கள் மறைந்த ஆயருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.

யாழ் மறைமாவட்ட ஆயர், குருமுதல்வர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று திருவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது யாழ் மறை மாவட்டத்தைச் சேர்ந்த குருக்கள், அருட் சகோதரிகள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

மன்னார் ஆயரின் இறுதி திருப்பலி எதிர்வரும் திங்கட்கிழமை மாலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுநிலை மன்னார் ஆயர் இராயப்பு யோசப் இன்று காலை காலமாகியிருந்தார்.

நாளை மதியம் மன்னாருக்கு எடுத்துச் செல்லப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை மாலை இறுதி திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாகாண தேர்தலில் தனிவழி செல்ல தயாராகிறது தமிழ் முற்போக்கு கூட்டணி

“எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் களமிறங்குவதற்கு எதிர்ப்பார்ப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” – என்று முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் நேற்று (31.03.2021) காலை நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் பங்கேற்றிருந்த வேலுகுமார் எம்.பியிடம் , ” மாகாணசபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் நடத்தி முடிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. அதற்கான சட்ட ரீதியான தடைகளை தகர்ப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றன. எனவே, குறித்த தேர்தலை எதிர்கொள்வதற்கு உங்கள் கட்சி – கூட்டணி தயாரா?” – என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தேர்தல் என்பது ஜனநாயகத்தின் – மக்கள் ஆட்சியின் பிரதான அங்கம். வாக்களிப்பு என்பது மக்களுக்கான உரிமை. அந்த வகையில் எந்நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார்.

ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட விரும்புபவர்கள், எதிர்ப்பார்ப்பவர்களிடமிருந்து எமது கண்டி மாவட்ட கட்சி அலுவலகம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் தேவைப்படும் பட்சத்தில் எமது அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் கிடைத்த பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு பொருத்தமான, தகுதியான வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். வெற்றிகரமாக தேர்தலை எதிர்கொள்வதற்கு அவர்கள் தயார்படுத்தப்படுவார்கள். ” – என்றார்.

அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்து போட்டியிடுமா அல்லது ஐக்கிய மக்கள் சக்தியாகவா களமிறங்கும்? என எழுப்பட்ட மற்றுமொரு கேள்விக்கு,

” அரசியல் சூழ்நிலை – களநிலைவரம் உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துவருகின்றோம். தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னர், எமது கட்சி, கூட்டணியின் உயர்பீடம்கூடி – மக்கள் பக்கம்நின்று உரிய முடிவை எடுக்கும்.” – என்றார் வேலுகுமார் எம்.பி.

” உள்ளக பொறிமுறைமூலம் உண்மையை கண்டறியுங்கள்” – மங்கள வலியுறுத்து

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைக்கு எதிராக தனிப்பட்ட ரீதியில் நாடுகளால் தடைவிதிக்கமுடியும். எனவே, சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்திலான தடைகளை அமுல்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.” – என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இத தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” போரின்போது சர்வதேச சட்டத்திட்டங்கள் மீறப்பட்டனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக பொறிமுறையொன்று உருவாக்கப்படும் என ஐ.நா. பொதுச்செயலாளருக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2009 இல் உறுதியளித்திருந்தார். பான் கீ மூன் இலங்கை வந்து மூன்று நாட்களுக்கு பின்னர் இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நாவில் விசேட அமர்வொன்றுகூட நடைபெற்றது. இதன்போது இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை தடுப்பதற்கு அப்போதைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு வழங்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு, செயற்படுத்துவதற்கு ராஜபக்ச அரசு நடவடிக்கை எடுக்காததன்காரணமாகவே 2012 இல் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக 2014 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்படவிருந்தது. அதற்காக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் குழுவொன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் அதிஷ்டவசமாக 2015 இல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. வெளிவிவகார அமைச்சராக நான் பதவியேற்றதும் இந்தியா பயணத்தின் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை சென்று சந்தித்தேன். கால அவகாசம் கோரினேன். இதன்படி இலங்கை தொடர்பான அறிக்கை 2015 மார்ச்சில் முன்வைக்கப்படவில்லை. அதன்பின்னர் 2015 செப்டம்பரில் நாம் பிரேரணையொன்றை முன்வைத்தோம். எமது திறமையால் அதற்கு அனைத்து நாடுகளின் ஆதரவும் பெறப்பட்டது.

30/1 தீர்மானத்திலுள்ள உள்ளடக்கங்கள் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிந்தே வைத்திருந்தார். அவர் அனுமதிகூட வழங்கியிருந்தார். தீர்மானத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நானே அவருக்கு எடுத்துரைத்தேன். நாட்டுக்கு ஏற்படவிருந்த பெரும் பாதிப்பை தடுத்து ஜீ.எல்.பி. வரிச்சலுகை, மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கம் போன்றவற்றை வென்றோம். அப்படி இருந்தும் தேசத்துரோக முத்திரை குத்தப்பட்டது.

அதேவேளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தற்போதும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. விசாரணைகளுக்கான சாட்சியங்களை திரட்டுவதற்கு குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 2023 வரை காலம் உள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் தடை விதிக்க முடியாது. எனினும், நாடுகளால் தனிப்பட்ட ரீதியில் தடைகளை விதிக்கமுடியும். எவ்வித குற்றமும் இழைக்காத சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் எந்தவொரு தடையையும் விதிக்கவேண்டாம் என சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.

போர்க்குற்றங்கள் இடம்பெற்றனவா என்பது எமக்கு தெரியாது. இடம்பெற்றுள்ளன என்று எவரும் கூறவில்லை. இடம்பெற்றுள்ளன என்று குற்றச்சாட்டே முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, அது போர்க்குற்றமா அல்லது எந்த வகையான குற்றம் என்பதை விசாரணை நடத்தினால்தான் கண்டறியமுடியும்.” – என்றார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...