Home Blog Page 3554

சர்வதேச மீள் சுழற்சி தினத்திற்கு சமாந்திரமாக “Waste 2 Value” எனும் செயலியை அறிமுகம் செய்யும் Eco Spindles

மார்ச் 18ஆம் திகதி 2021: BPPL ஹோல்டிங்ஸின் பூரண இணை நிறுவனமும் பிளாஸ்டிக் போத்தில் மீள் சுழற்சியில் இலங்கையின் முன்னோடிகளான Eco Spindles நிறுவனம் கொழும்பு ஹில்டன் ரெசிடென்ஸீஸ் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வின் போது நிறுவனம் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்த ‘Waste 2 Value” கையடக்க தொலைபேசி செயலி (Mobile App) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

சர்வதேச மீள் சுழற்சி தினத்திற்கு சமாந்திரமாக அறிமுகம் செய்த இந்த “Waste 2 Value” செயலி மூலம் எதிர்பார்ப்பது, பொறுப்புடன் பிளாஸ்டிக் மீள் சுழற்சி தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்துதல் மற்றும் நாட்டின் மீள் சுழற்சி செய்யக் கூடிய குப்பைகளை சேர்ப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதற்காகவே ஆகும்.

Google Play அல்லது App Store மூலம் இந்த செயலியை தற்போது பெற்றுக் கொள்ள முடிவதுடன் உரிய முறையில் குப்பைகளை அகற்றும் நோக்கில் அனைத்து நபர்களுக்கும் நாட்டிலுள்ள 300க்கும் அதிகமான குப்பை கூலங்களுக்கு இலகுவாக பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பம் இதன்மூலம் கிட்டும்.

இதன் மூலம் அவர்கள் கொட்டும் குப்பைகளை சேகரித்து மீள் சுழற்சி செய்யப்படுவதுடன் வீண்விரையம் ஏற்படுவதையும் தடுக்கும்.

இந்த நிகழ்வின் போது கருத்து தெரிவித்த BPPL ஹோல்டிங்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி அனுஷ் அமரசிங்க, “கடந்த பல வருடங்களாக எமது கூட்டாண்மையுடன் இணைந்து நாடு முழுவதிலுமுள்ள குப்பைகளை சேகரிக்கும் குப்பைக் கூலங்களை அமைத்து வருகின்றோம். “Waste 2 Value” செயலி மூலம் மக்களுக்கு அவர்களது பிளாஸ்டிக் கழிவுகளை உரிய விதத்தில் அகற்றுவதற்கு இந்த கூலங்கள் உதவியாக இருக்குமென நான் நம்புகின்றேன்.

அத்துடன் பிளாஸ்டிக் கழிவுகளை உரிய முறையில் அகற்றுவது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதற்கு நாம் எதிர்காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இந்த செயலியை அறிமுகம் செய்வது மிகவும் முக்கியமானதாகவும் மற்றும் புத்தாக்க நடவடிக்கையாகவும் அமையும்.” என தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு அரசு மற்றும் குப்பை நிர்வகிப்புப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான வரிசையிலுள்ள அதிதிகள் மற்றும் Eco Spindlesஇன் முன்னணி நிர்வாகிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செயலியை அறிமுகம் செய்ததுடன் இலங்கையின் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு மீள் சுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக் போத்தல் ஒன்றின் பெறுமதியை சேர்த்து தயாரிப்புக்களை உருவாக்குவதில் தமது அர்ப்பணிப்பை Eco Spindles மீண்டும் கவனம் செலுத்தியுள்ளது.
மேலும் பொதுமக்களுக்கு இலகுவாக தேடிக்கொள்ளக் கூடிய இடங்களில் குப்பை கூலங்களை நிர்மாணிப்பதற்கும் ஒத்துழைப்புக்களை வழங்கிய நிறுவனத்தின் வர்த்தக கூட்டாண்மையாளர்களுக்கும் பரிசுகளும் இதன்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“எமது நோக்கம் பிளாஸ்டிக் மாசுக்களால் ஏற்படக் கூடிய சாதகமான மற்றும் பாதகமான விளைவுகள் குறித்து நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் அறிவுறுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து சூழலைல் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு உரிய சூழல் ஒன்றை உருவாக்குவதற்கு இதன் மூலம் பாரிய திறன் இருப்பதை காட்டுவதற்காகும்.

எந்தவொரு நபரும் இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடிவது போன்றே இந்த தேசிய பணிக்காக ஒத்துழைப்புக்களை வழங்க முடியும்.”

ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிக்கு “Waste 2 Value” செயலியை டவுன்லோட் செய்து கொள்ளப்பட்டதன் பின்னர் அருகில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுக் கூலம் தொடர்பான தகவல்களை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் பாவனையாளர்களுக்கு அவர்களது பிளாஸ்டிக் கழிவுகளை பொறுப்புடன் அகற்றுவதற்கான அலோசனைகள் மற்றும் ஞாபகப்படுத்தல்களுடன் Eco Spindlesஇன் பிளாஸ்டிக் மீள் சுழற்சி செய்யும் முறைமைகள் குறித்து தேவையான தகவல்களை அறிந்து கொள்வதன் மூலம் இந்த செயலியை பயன்படுத்துவோர் உற்சாகமடைவார்கள்.

Eco Spindles நிறுவனம் அகற்றும் PET போத்தல்களை சேகரித்தல், மீள் சுழற்சி செய்வது போன்றே துணிகளை தயாரிப்பதற்கான பொலியேஸ்டர் நூல் மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள தூரிகை (Brush) தயாரிப்பாளர்களுக்காக மொனோஃபிளமென்ட் தயாரிப்புக்கள் போன்ற முடிவுப் பொருட்களை சேர்த்து தயாரிப்புக்களை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

2019/20 ஆண்டுகளில் Eco Spindles 81 மில்லியனுக்கும் அதிகமான PET பிளாஸ்டிக் போத்தல்கள், அதாவது 2.3 மில்லியன் கிலோகிராம் அளவிலான பிளாஸ்டிக்கை மீள் சுழற்சி செய்துள்ளது.

நிறுவனத்திடம் அவர்களுக்குத் தேவையான PET பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிப்பதற்காக 400 வரையிலான சேகரிப்பாளர்களுடன் கூடிய பாரிய வலைப்பின்னல் ஒன்று இருப்பதுடன் ஒன்று சேர்ப்பதற்காக 19 தளங்கள் உள்ளன.

அத்துடன் நிறுவனத்தினால் சிவனொளி பாதம், கதிர்காமம் போன்ற கழிவு நிர்வகிப்பு வேலைத்திட்டங்கள் ஊடாக நிலைத்தன்மையுடைய பொது வேலைத் திட்டங்கள் பலவும் மேற்கொள்ளப்படுவதுடன் கடற்கரை பிளாஸ்டிக் மீள் சுழற்சி வேலைத்திட்டம் மற்றும் அதிவேக வீதி வேலைத்திட்டங்கள் அதனூடாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

BPPL Holdings PLC தொடர்பில்

1984ஆம் ஆண்டு நிறுவப்பட்ட BPPL Holdings PLC அதன் பிரிவின் கீழ் முழுமையாக அதற்குச் சொந்தமான இரண்டு துணை நிறுவனங்களை நிறுவியுள்ளது, அதாவது Eco-Spindles (Pvt) Ltd மற்றும் Beira Brush (Pvt) Ltd ஆகியனவாகும்.

ஒவ்வொரு பிராந்தியத்திலும் கணிசமான சந்தைப் பங்கைக் கொண்டு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள சர்வதேச சந்தைகளுக்கு மீள்சுழற்சி செய்யப்பட்ட பொலியேஸ்டர் நூல், Monofilaments மற்றும் தொழில்முறை மற்றும் வீட்டை சுத்தம் செய்யும் கருவிகளை குழு ஏற்றுமதி செய்கிறது. ‘Tip Top என்ற தயாரிப்பின் கீழ் உள்நாட்டில் சில்லறை விற்பனை செய்யப்பட்ட வீட்டு துப்பரவு தூரிகைகளையும் இந்த குழு உற்பத்தி செய்கிறது.

தேசிய தரம் மற்றும் உற்பத்தித் திறன் சம்மேளன விருது வழங்கும் நிகழ்வில் அதிகமான விருதுகளை வென்ற ஹேமாஸ் மருத்துவமனை

இலங்கையின் தனியார் மருத்துவமனை மற்றும் இரசாயனகூட சேவைத் துறையில் தமது சிறப்பை மீண்டும் உறுதிப்படுத்தி 2020 தேசிய தரம் மற்றும் உற்பத்தித்திறன் சம்மேளன விருது வழங்கும் நிகழ்வில் 50 விருதுகளை ஹேமாஸ் மருத்துவமனைக் குழுமம் வென்றுள்ளது.

இந்த விருதுகளில் 36 தங்கம் 12 வெள்ளி மற்றும் 2 வெண்கல விருதுகளையும் வெல்வதற்கு ஹேமாஸ் மருத்துவமனைக் குழுமத்தினால் முடிந்துள்ளதுடன் ஒட்டுமொத்த விருது வழங்கும் நிகழ்வின் போது அதிகமான விருதுகளை தனதாக்கிக் கொண்ட நிறுவன குழுமம் என்ற கௌரவத்தையும் ஹேமாஸ் மருத்துவமனை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெற்காசியாவில் முதலாம் இடத்திலுள்ள வைத்தியசாலை என்ற உறுதியுடனும் மற்றும் முறையான உட்பார்வையுடன் செயற்பட்டு வரும் ஹேமாஸ் மருத்துவமனை மற்றும் இரசாயனக் கூட குழுமம் அண்மையில் இடம்பெற்ற 2020 தேசிய தரம் மற்றும் உற்பத்தித்திறன் சம்மேளன விருதுவழங்கும் நிகழ்வில் புதிய சாதனையொன்றை படைத்து ஒரு நிறுவனம் பெறக் கூடிய அதிக விருதுகள் மற்றும் சேவைத் துறையில் நிறுவனமாக அதிக விருதுகளை தனதாக்கிக் கொண்டுள்ளது.

அத்துடன் இந்த விருது வழங்கும் நிகழ்வில் “Best Lean Six Sigma Projects” பிரிவின் கீழ் பெற்றுக் கொண்ட அதிகமான தங்க விருதுகளை வென்றுள்ளது.

தேசிய தரம் மற்றும் உற்பத்தித்திறன் சம்மேளன விருது வழங்கும் நிகழ்வில் அதிகமான விருதுகளுக்கு சொந்தக்காரர் என்பதுடன் இந்த வருட இறுதியில் இந்தியாவின் ஹைதரபாத் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச தரக் கட்டுப்பாட்டு விருது வழங்கும் நிகழ்விற்காக தகுதி பெறவும் ஹேமாஸ் மருத்துவமனை மற்றும் இரசாயனகூட குழுமத்திற்கு முடிந்துள்ளது.

“முன்மாதிரியான மருத்துவமனை சேவையை நடத்திச் செல்வதற்காக தரம் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியன இரண்டு பிரதான காரணிகளாக அமைவதுடன் இந்த இரு காரணிகளையும் மிக இலகுவாக எடுத்துக்கொள்ளவோ அல்லது மறந்து விடுவதற்கோ ஒருபோதும் முடியாதமைக்கு காரணம் பல்லாயிரக் கணக்கான உயிர்களின் தீர்மானம் இதன் அடிப்படையிலேயே தங்கியுள்ளது.

விசேடமாக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை, மருத்துவமனையின் அடிப்படை வசதிகளின் தரம், ஆகிய பிரிவுகள் எப்பொழுதும் உச்ச அளவில் வைத்திருத்தல் முக்கியமானது.

அதனால் இந்த விருது வழங்கும் நிகழ்வு எமக்கு முக்கியமாக இருப்பதற்கு காரணம் நோயாளர்களின் பாதுகாப்பு, மற்றும் நாட்டிலுள்ள சுகாதார சேவைத் துறையில் புத்தாக்கங்களுக்காக ஹேமாஸ் மருத்துவமனைக் குழுமத்தின் அர்ப்பணிப்பு இந்த விருதுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையர்களின் ஆரோக்கியத்திற்காக நாம் எப்பொழுதும் உற்பத்தித்திறன் மாற்றத்தை நோக்கி பயணிப்பதுடன் மருத்துவ சிறப்பின் எல்லைகளை விஸ்தரிப்பதற்கும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.” என ஹேமாஸ் மருத்துவமனை மற்றும் இரசாயனக்கூட குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், தனியார் மருத்துவமனை மற்றும் பராமரிப்பு இல்ல சங்கத்தின் தலைவர் கலாநிதி லக்கித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

 

பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தில் 50 மில்லியன் ரூபா மோசடி!

போராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தினால் பேணப்பட்டு வந்த நிலையான வைப்புக் கணக்குகளில் 50 மில்லியன் ரூபா நிதி முன்னாள், சிரேஷ்ட அதிகாரி ஒருவரால் மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தின் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) புலப்பட்டது.
போராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தினால் மக்கள் வங்கியின் பேராதனைக் கிளையில் பேணப்பட்டுவந்த 14 நிலையான வைப்புக்கள் 2006ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2016 டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மூடப்பட்டு பெறப்பட்ட 93 மில்லியன் ரூபாவில், 37 மில்லியன் ரூபா மாத்திரம் மீண்டும் நிலையான வைப்பில் இடப்பட்டிருப்பதுடன், எஞ்சிய 50 மில்லியன் ரூபா சிரேஷ்ட உதவி நிதி அதிகாரியினால் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி மோசடியுடன் தொடர்புபட்ட அதிகாரி பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருப்பதுடன், இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
பல்கலைக்கழகத்தில் இந்த மோசடியுடன் தொடர்புபட்ட நபர்கள் குறித்து ஆராய்வதற்கு பேராதனைப் பல்கலைக்கழக மூதவையினால் ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இதற்கு மேலதிகமாக கணக்காய்வாளர் திணைக்களத்தினால் தண்டக் கட்டணம் அறவிடப்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் மேலும் தெரியப்படுத்தப்பட்டது.
பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் 2018 மற்றும் 2019 வருடங்களுக்கான கணக்காய்வு அறிக்கை மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கோப் குழு கூடியிருந்தது.

கழிவு நிர்வகிப்பு தொடர்பில் நெகிழ்வான திட்டமொன்றை முன்மொழியும் இலங்கை வர்த்தக சம்மேளனமும் – தனியார் துறையும்

இலங்கையில் நெகிழ்வான பொதியிடல் கழிவுகள் மூலம் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு மிகவும் ஒருங்கிணைந்த மாற்று நடவடிக்கை தொடர்பிலான முன்முயற்சிக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் (CCC) மற்றும் தொழில்துறை பங்குதாரர்களான விரிவாக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பு (EPR) ஆகியன முன்மொழிவொன்றை முன்வைத்துள்ளன.

நெகிழ்வான பொதியிடல் கழிவுகளை முற்றிலுமாக தடை செய்வதற்குப் பதிலாக, இந்த சிக்கலுக்கு EPRஇன் அணுகுமுறையைப் பின்பற்றுவது நெகிழ்வான பொதியிடல் கழிவுகள் பயன்பாட்டின் மூலம் ஏற்படும் நன்மைகளிலிருந்து நுகர்வோர் தொடர்ந்தும் பயனடைய அனுமதிக்குமென இலங்கை வர்த்தக சம்மேளனத்தினதும் மற்றும் தனியார் துறையினதும் நம்பிக்கையாகும்.

கொவிட்-19 தொற்றுநோயால் உந்தப்பட்ட, நெகிழ்வான பொதியிடல் தொழில் உளகளவில் உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

அரசாங்க அதிகாரிகள் மீது கழிவு நிர்வகிப்பு குறைக்க EPR உதவுகிறது என்றும், இந்தோனேசியா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் பொதியிடல் கழிவுகளை மீள்சுழற்சி செய்யும் பொறுப்பை பகிர்ந்து கொள்ளவும் இது நடைமுறையில் உள்ளது என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.

விரிவாக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பு (EPR) என்பது உலகளாவிய ரீதியில் நடைமுறையிலுள்ள ஒரு விடயமாகும், அங்கு கழிவுகளை சேகரித்தல், பதப்படுத்துதல் மற்றும் மீள்சுழற்சி பொறுப்பு தயாரிப்பாளர்களால் (பிராண்ட் உரிமையாளர்கள், பொதியிடல் வழங்குநர்கள், உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனையாளர்கள்) மேற்கொள்ளப்படுகிறது.

தொழில்துறையின்படி, இலங்கையில் நுகர்வோரில் சுமார் 50% பேர் சிறிய பொதியிடல் அளவுகளில் தயாரிப்புக்களை வாங்குகிறார்கள், அங்கு தேர்வுகளும் உள்ளன.

மாதத்திற்கு 25,000க்கும் குறைவாக வருவாயைப் பெறும் குடும்பங்கள், தினசரி ஊதியத்தை நம்பியுள்ள குடும்கங்கள், மற்றும் விடுதிகள் மற்றும் வாடகை இருப்பிடங்கள் போன்ற சமூக வசதிகளைப் பயன்படுத்தும் நபர்கள் மத்தியில் இந்த நுகர்வுப் போக்கு பொதுவானதாகும்.

“சந்தையில் சிறிய மற்றும் மலிவு பொதியிடல் அளவுகளை நாங்கள் தக்க வைத்துக் கொள்வது முக்கியம், ஏனெனில் இது பல்வேறு சமூக பொருளாதார குழுக்களின் நுகர்வோருக்கு சிறந்த தயாரிப்புக்களை செய்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் சிறந்த பொதியிடல் கழிவுகளை முற்றாக தடை செய்வதற்குப் பதிலாக அந்த பொதியிடல் கழிவுகளினால் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைத்துக் கொள்வதற்கான ஒரு நிலையான மாற்றுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டியது மிகவும் சிறந்தது என நான் நம்புகின்றேன்.” என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஞ்சுல டி சில்வா தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்ட EPR திட்டம் நெகிழ்வான பொதியிடல் கழிவுகளைக் குறைக்க மற்றும் நெகிழ்வான பொதியிடல் மீள்சுழற்சி முயற்சிகளை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்பட்ட பொதியிடலை மீண்டும் சேகரிக்க, விநியோக முறைமையாக பயன்படுத்துதல் போன்ற விருப்பங்களின் தொகுப்புக்கள் குறித்து உறுப்பினர்கள் EPR வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றனர்.

கால்வாய்கள் மற்றும் ஆறுகளுக்கு கழிவுகள் கலக்காத வண்ணம் நிறுத்தி வைத்துக் கொள்ள உபகரணங்களை நிறுவுதல்; நுகர்வோருக்கு தெளிவுபடுத்துவதற்கான பிரசாரங்களுக்கு பிரதான மற்றும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துதல்; நெகிழ்வான பொதியிடல் மீள்சுழற்சி திறனை அதிகரித்தல் மற்றும் மீள்சுழற்சி செய்ய முடியாத கழிவுகளை பிரிக்க நகராட்சிகளை அணுகுதல் மற்றும் ஆற்றல் உற்பத்தியில் அதைப் பயன்படுத்துதல்.

இந்த ஆண்டிற்காக, 2021ஆம் ஆண்டில் சந்தையில் வெளியிடப்பட்ட நெகிழ்வான பொதியிடல் கழிவுளில் 25%ஐ மீண்டும் சேகரிக்கவும், படிப்படியாக சேகரிப்பை 100% சேகரிப்பை அதிகரிக்கவும் சேகரிப்பு திட்டங்கள் இலக்கு வைத்துள்ளன.

நெகிழ்வான பொதியிடல்களுக்கு அதிக மதிப்பை உருவாக்குவதையும், நெகிழ்வான பொதியிடல்களை நிர்வகிக்க நிறுவனமயமாக்கப்பட்ட ஒரு தயாரிப்பாளர் பொறுப்பு அமைப்பு (PRO) ஆக “நிலையான பொதியிடலுக்கான கூட்டணியை” மேம்படுத்துவதையும் இந்தத் திட்டம் நோக்காகக் கொண்டுள்ளது.

“முறையற்ற விதத்தில் அகற்றுதல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கசிவு காரணமாக எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு EPR ஒரு தீர்வை வழங்கும்.

எங்களால் முன்மொழியப்பட்ட பொறிமுறையானது, பழக்கவழக்க மாற்றத்தை உந்துவித்தல் மற்றும் நெகிழ்வான பொதியிடல் சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் விகிதங்களை நீண்டகாலத்திற்கு அதிகரிப்பதன் மூலம் சந்தையில் பயன்படுத்தப்படும் பொதியிடல் முறையாக அகற்றப்பட்டு மீள்சுழற்சி செய்யப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பை தொழில்துறைக்கு அளிக்கிறது.

கழிவு நிர்வகிப்புக்கான இந்த முழுமையான அணுகுமுறை நுகர்வோருக்கு மலிவு விலையில் தயாரிப்புக்களை தொடர்ந்து அனுபவிக்க உதவும் என்று நம்புகிறோம், அதேநேரம் கழிவுகளிலிருந்து மதிப்பையும் உருவாக்குகிறது.” என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை வர்த்தக சம்மேளனம், வர்த்தக சங்கங்கள், பிராந்திய மற்றும் துறைசார் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம், இரு தரப்பு வர்த்தக சபைகள் மற்றும் இலங்கையில் உள்ள தொழில்தருணர் அமைப்புக்களின் கூட்டமைப்பாகும்.

தற்போது சம்மேளனம் ‘மீள்சுழற்சிக்கான விரிவாக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பு முறை அறிமுகம்’ என்ற தொனிப்பொருளில் ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறது, இதன் பொருள் நுகர்வோருக்குப் பிந்தைய பிளாஸ்டிக் மீள்சுழற்சி மற்றும் நிர்வாகத்திற்கான வட்ட பொருளாதாரத்திற்கு அத்தியாவசிய ஆதரவை வழங்குதல், கடலோரத்தில் பிளாஸ்டிக் அதிகரிப்பை குறைத்தல் மற்றும் கடல் சூழலை பாதுகாத்தல்.

மியன்மார் இராணுவத்தின் தாக்குதலிலிருந்து உயிர்தப்பிய 3 வயது சிறுவன்

மியன்மாரில் வார இறுதியில் ராணுவத்தினர் நடத்திய ஆகாய வழித் தாக்குதலில் 3 வயதுச் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

கடந்த சனிக்கிழமை இரவு காரேன் மாநிலத்தில் புரட்சிப்படையினர் ராணுவத்தளம் ஒன்றைக் கைப்பற்றியதால் அங்கு ஆகாய வழித் தாக்குதல் நடத்தியது மியன்மார் ராணுவம்.

தாய்லந்து எல்லைக்கு அருகே நடந்த அந்தத் தாக்குதலில் சிறுவன் இருந்த குடிசை தரைமட்டமானது. சம்பவத்தில் சிறுவனின் 27 வயதுத் தந்தை சம்பவ இடத்திலேயே மாண்டார்.

சிறுவன் தந்தையின் மடியில் உட்கார்ந்திருந்ததாகவும், சிறுவன் உடலில் சில கண்ணாடிச் சில்லுகள் பாய்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.தற்போது சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

சிறுவனுக்கு அவரது தாய் துணையாக உள்ளதாகத் தொண்டூழிய அமைப்பு கூறியது.

இரண்டு நாள்களாக ஆகாயவழித் தாக்குதல் நடந்ததால் காரேன் மாநிலத்தில் உள்ள சுமார் 3,000 பேர் காடுகளையும் நதிகளையும்
தாண்டி தாய்லந்திற்குத் தப்பிச்சென்றனர்.

மியன்மாரில் நடந்து வரும் வன்முறையில் இதுவரை 500 -க்கும் மேற்பட்டோர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

மியன்மாரில், சென்ற மாதம் முதல் தேதி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு நாள்தோறும் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.

நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சி இடம்பெற வேண்டும் என்றும் அரசாங்க ஆலோசகரான திருவாட்டி ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi) விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராடி வருகின்றனர்.

ராணுவத்தின் அடக்குமுறையை ஐக்கிய நாட்டு நிறுவனமும் உலக நாடுகளும் கண்டித்துள்ளன.

லக்‌ஷ்மன் கிரியல்லவின் மகள் மாகாண சபைத் தேர்தலில் போட்டி?

இவ்வருடத்துக்குள் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியல்லவின் மகளான ஷாமி கிரியல்ல போட்டியிடவுள்ளார் என தெரியவருகின்றது.

மத்திய மாகாணசபைக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அவர் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.

அதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ராஜரட்னத்தின் மகனான ஜனார்த்தனும் கண்டி மாவட்டத்தில் சஜித் அணியில் களமிறங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தூதுவரை ஏற்க மறுக்கிறதா இந்தியா?

இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொடவின் நியமனத்தை அந்நாடு நிராகரித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலை இலங்கை மறுத்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது.

இதன்போது இந்தியாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொடவின் நியமினத்தை அந்நாடு நிராகரித்துள்ளதாகவும், எனவே, இது தொடர்பில் அரசு மீள் பரிசீலனை செய்யுமா எனவும் ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறினார்.

” அமைச்சரவைக்கு அவ்வாறானதொரு அறிவிப்பு விடுக்கப்படவில்லை. எனக்கு தெரிந்தவரை மிலிந்த மொரகொடவே இந்தியா செல்லவுள்ளார்” – என்றார்.

இரத்த பரிசோதனை மூலம் கொரோனா தொற்றாளரை இனங்காணும் முறை கண்டுபிடிப்பு

கொரோனா தொற்றின் நோய் எதிர்ப்பு சக்தியை இனங்காணும் இலகுவான இரத்தப் பரிசோதனை முறைமையை இலங்கையரான பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நிபுணர் குழு இணைந்து கண்டுபிடித்துள்ளது.

விரல் நுனியிலிருந்து எடுக்கப்படும் ஒரு சொட்டு இரத்தத்தை கொண்டே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை முறைமை மிக விரைவான மற்றும் செயன்முறைக்கு இலகுவானதென ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை, தாய்வான், இந்தியா, தாய்லாந்து, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்களும் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.

3,000 இரத்த மாதிரிகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக விசேட நிபுணர்குழுவில் பங்கேற்றிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை பேராசிரியர் நீலிகா மலவிகே தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

‘ஜெனிவா நெருக்கடியிலிருந்து மீள ஒத்துழைப்பு வழங்க தயார்’- ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு

” ஜெனிவா தீர்மானத்தை வைத்து எதிரணி அரசியல் பிழைப்பு நடத்தவில்லை. ஜெனிவா நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றோம். அதற்காக சர்வதேசத்தின் நம்பிக்கையை வெல்லும் வகையில் உள்ளக பொறிமுறை நிறுவப்படவேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது,

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் மாநாடு  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு, அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நேற்று முன்தினம் வெளியிட்டிருந்த கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கையிலேயே கலாநிதி கலாநிதி ஹர்ஷ டி சில்வா எம்.பி. மேற்படி அறிவிப்பை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஜெனிவா தீர்மானத்தை அடிப்படையாக வைத்து எதிரணியினர் மாயையை தோற்றுவித்துவருகின்றனர் என ஜீ.எல். பீரிஸ் அறிவிப்பு விடுத்துள்ளார். நாம் மாயையை தோற்றுவிக்கவில்லை. உண்மை நிலைவரம் என்னவென்பது தொடர்பில் தெளிவுபடுத்தல்களை முன்வைத்து வருகின்றோம். எனவே, யாதார்த்தம் என்னவென்பதை புரிந்துக்கொண்டு இப்பிரச்சினையில் இருந்து வெளியே வருவதற்கு அரசு முயற்சிக்க வேண்டும்.அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு நாம் தயார். இது தொடர்பில் எமது தலைவர் நாடாளுமன்றத்திலும் அறிவிப்பு விடுத்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் போர்காலம் குறித்து மட்டும் குறிப்பிடப்படவில்லை. அது தொடர்பில் ஒரிரு பக்கங்களே உள்ளன. நடப்பு அரசின் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களே பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஜனநாயக விரோதச் செயற்பாடுகள், இனவாதம், சுயாதீன நிறுவனங்கள் அரசியல் மயப்படுத்தப்படுகின்றமை, இராணுவ மயக்காமல், கருத்து சுதந்திரம் மறுப்பு, அரசை விமர்சிக்கின்றனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு .மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அதேவேளை, போர் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் ,சர்வதேச நம்பிக்கையை வெல்லும் விதத்திலான சுயாதீன பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கவேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினையில் இருந்து மீள முடியும். அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தினால்கூட சர்ச்சைகள் உருவாகாது.

அதேபோல ஒற்றையாட்சிக்குள் இறைமை, சுயாதீனம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதிகாரப்பகிர்வும் இடம்பெறவேண்டும்.” – என்றார்.

தலவாக்கலையில் விபத்து – இருவர் படுகாயம்!

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை கூட்டுறவு சங்க கடைக்கு முன்னால் நேற்றிரவு (30)8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் மோட்டார் சைக்கிள் சாரதி உட்பட பொது மகன் ஒருவன் கடும் காயங்களுக்கு உள்ளாகி விந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தலவாக்கலையில் இருந்து லோகி தோட்டத்தைச் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், வீதியைக் கடக்க முற்பட்டவர் மீது மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது வீதியில் சென்றவரும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் காயமடைந்தனர்.

லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து இருவரும் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் குறித்த நபர் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து லோறியின் அடியில் போய் நின்றதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

ஹட்டன் விசேட நிருபர் -கே. சுந்தரலிங்கம்

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...