Home Blog Page 3555

எதிர்காலத்தில் சுதந்திரக்கட்சி ஆட்சி அமையும் – மைத்திரி சபதம்!

” எதிர்காலத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியை அமைப்பதே எங்களின் எதிர்ப்பார்ப்பு. அதற்கேற்ற வகையில் கட்சி கட்டியெழுப்படும்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கண்டியில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சவால்களுக்கு மத்தியில் பயணித்த கட்சியாகும். மீண்டெழுவதற்கான சக்தி இந்த கட்சிக்கு இருக்கின்றது. 14 பேர் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதற்கு முன்னர் 8 எம்.பிக்கள் அங்கம் வகித்த சந்தர்ப்பமும் உள்ளது. எனவே, எதிர்காலத்தில் சுதந்திரக்கட்சி ஆட்சியை அமைப்பதே எமது எதிர்ப்பார்ப்பு.

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் அதேவேளை கட்சியை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

கண்டி தலதாமாளிகைக்கு சென்ற மைத்திரி அங்கு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்பின்னர் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார்.

மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற நோக்கில் செயற்படுகிறோம் : பாரத் அருள்சாமி

மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற நோக்கிலேயே நாங்கள் செயற்படுகிறோம் என்று இ.தொ.காவின் உப செயலாளரும், பிரஜா சக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

அத்துடன், 1100 இந்திய வீடமைப்பு திட்டங்களும் 100 அமைச்சு வீடமைப்பு திட்டங்களும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 30 மில்லியனுக்கு அதிகமான தொகை உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விமர்சனம் செய்து அரசியல் பிழைப்பு நடத்தாது வாக்களித்த மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” கண்டி மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்துக் கொண்டு செய்ய முடியாததை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலைமையின் கீழ் இன்று நாங்கள் முன்னெடுத்து வந்துள்ளோம். இதனடிப்படையில், 1100 இந்திய வீடமைப்பு திட்டங்களும் 100 அமைச்சு வீடமைப்பு திட்டங்களும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 30 மில்லியனுக்கு அதிகமான தொகை உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, 100 நாட்களுக்குள் 1000 காணி உறுதி பத்திரம் என்ற வேலைத்திட்டத்துக்கு அமைவாக 800 இற்கும் அதிகமான கண்டி மாவட்டத்திலுள்ள தோட்ட பகுதி மக்களுக்கு காணி உறுதி பத்திரம் பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகளும் இறுதி கட்டத்திலுள்ளது.

இதேவேளை, பாதை புனரமைப்பு, நீர் வளங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி துறை அபிவிருத்திகள் போன்ற பல திட்டங்களையும் நாங்கள் ஆரம்பித்துள்ளோம். இந்த நிலையில் கண்டி மாவட்டத்தில் தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கடந்த 5 வருட காலப்பகுதியில் எதனையும் செய்யாது இறுதி ஒரு வருடத்தில் சில சில அப்போதைய அரசாங்கம் செய்த சிறு அபிவிருத்திகளை செய்துவிட்டு, நாங்கள் கண்டிக்கு பாரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதாக தம்பட்டம் அடித்ததை மக்கள் மறக்கவில்லை.

எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான்   கட்டிய கட்டிடங்களை தானே கட்டியதாக தப்படிப்பது போன்று நாங்கள் வக்குரோத்து அரசியலை நாம் முன்னெடுப்பது கிடையாது. கடந்த காலங்களில் இந்திய வீடமைப்பு திட்டங்களில் பாதை, நீர் போன்றவற்றை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனக் கூறி இந்திய அரசாங்கம் வீடுகளை கட்டிக் கொடுத்திருந்தாலும் அப்போதிருந்தோரின் இயலாமையினால் வீடுகள் மட்டும் கட்டப்பட்டிருந்தாலும் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை அதனையும் நாமே எம் அமைச்சு நிதியில் அமைக்கின்றோம் எனினும், நாங்கள் எங்களுடைய மக்களுக்கு காணி உறுதி பத்திரம் வேண்டும் என்ற இலக்குடனேயே பயணிக்கின்றோம் அதனை வழங்கியும் உள்ளோம். இவர்களை போன்று மக்களுக்கு போலி காணியுரிமை கொடுத்து ஏமாற்றவில்லை.

மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான்  எங்களுக்கு குடியுரிமை அந்தஸ்தத்தையும் ஆறுமுகன் தொண்டமான் எங்களுக்கான அரசியல் உரிமையை பெற்றுக் கொடுத்தனர். தற்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் எம் மக்களுக்கான காணி உறுதி பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு செயற்படுகின்றோம்.

மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாங்கள் செயற்படுகின்றோம்.

இவர்கபோன்று பழைய குப்பைகளை தோண்டினால் இவர்கள் இன்று இங்கிருக்க முடியாது. முன்னாள் அமைச்சர் லக்‌ஷ்மன்  கிரியெல்ல தலைமையில் பல ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டது அவருடைய கண்ணுக்கு தெரியவில்லை. பன்வில கெலாபொக்க பகுதியில் அபபோதைய அரசாங்க உறுப்பினருக்கு காணி வழங்கியது அவருடைய கண்ணுக்கு தெரியவில்லை. இவற்றை பாதுகாப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினரான எவ்வித நடவடிக்கை எடுக்காது போன்று அவருடைய கட்சியும் கொழும்பு வாழ் மக்களுக்கு துரோகம் இழைத்தது போன்று கண்டி வாழ் மக்களுக்கும் துரோக இழைக்கப்பட்டமையினாலேயே கண்டி மாவட்டத்திலுள்ள 24 ஆயிரம் மக்கள் ஆளும் கட்சியில் எமக்கு வாக்களித்தனர்.

இளைய தலைமுறையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்கள் எங்களுடைய மக்களுக்கு நிலைபேண்தகு அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கே செயற்படுகின்றோம். அபிவிருத்தி என்ற பெயரில் சிறு தொகை பணத்தைக் கொண்டு அரசியல் செய்யும் வக்குரோத்து அரசியலை முன்னெடுப்பதற்கான தேவை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கும் கிடையாது.

நல்லாட்சியில் வக்குரோத்து அரசியலைக் கொண்டு நாட்டை மட்டுமல்லாது கண்டிவாழ் மக்களுக்கும் துரோகமிழைத்த பெருமைய கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கும் அவருடைய தலைமைக்குமே சாரும். எங்களுடைய பயணங்கள் முன்னோக்கிய பயணமாகவே அமையும். அவர்களுடைய அரசியல் பின்னடைவு ஏற்பட்டமையினாலேயே இளைய தலைமுறையினரான நாங்கள் அரசியலை முன்னெடுத்துச் செல்ல மக்கள் எங்களுக்கு பலத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

தேர்தலின் பின் இன்றுவரை கண்டி மக்களுக்கு நாம் பல சேவைகளை செய்துவருகின்றோம். விமர்சனம் செய்து அரசியல் பிழைப்பு நடத்தாது வாக்களித்த மக்களுக்கு சேவை செய்க என்றார்.

மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா

மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் நடிகர் கமல்ஹாசனை வைத்து அடுத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். முன்பே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் என்ற பெயரே இந்த படத்திற்கும் சூட்டப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை தனிமைப்படுத்தி கொண்ட அவர், அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள் என கேட்டு கொண்டார்.

தலவாக்கலை கொரின் பிரிவு தோட்டத்துக்கான களஞ்சியசாலைக்கு அடிக்கல்

தலவாக்கலை கொரின் பிரிவு தோட்டத்துக்கான களஞ்சியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்தின் வேண்டுகோளுக்கிணங்க,, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் 10 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த களஞ்சியசாலை அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த், தலவாக்கலை லிந்துலை நகர பிரதேச சபை தவிசாளர் பாரதிதாசன், கூம்வூட் வட்டார அமைப்பாளர் பிலிப்குமார், இளைஞர் அணி அமைப்பாளர்கள், தோட்ட முகாமையாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

மியன்மாரில் வன்முறை – இதுவரை 510 பேர் சுட்டுப்படுகொலை!

மியன்மாரில் பொதுமக்கள், போராட்டக்காரர்கள் என 510 பேரை இராணுவம் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மியான்மரில் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

இதையடுத்து இராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இராணுவத்தின் எச்சரிக்கையையும் மீறி போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் போராட்டத்தை ஒடுக்க இராணுவம் துப்பாக்கி சூடு நடத்துகிறது. இதில் பொதுமக்கள், போராட்டக்காரர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 27 ஆம் திகதி மியான்மர் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர்.

போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தும் மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் அதை கண்டுகொள்ளாத ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.

இந்த நிலையில் மியான்மரில் இதுவரை பொதுமக்கள், போராட்டக்காரர்கள் என 510 பேரை ராணுவம் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே மியான்மர் ராணுவம் கைது நடவடிக்கையிலும் தீவிரமாக உள்ளது. போராட்டம் நடத்திய முக்கிய பிரமுகர்களை கைது செய்து வருகிறது. இதனால் மியான்மரில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

அந்நாட்டின் தென் கிழக்கில் உள்ள கெய்ன் மாகாணத்தில் வசிக்கும் கரேன் என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் சுயாட்சி கோரி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது ராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இதையடுத்து கெய்ன் மாகாணம் முட்ரா மாவட்டத்தில் மியான்மர் ராணுவம் வான் தாக்குதலில் ஈடுபட்டது. கிராமங்கள் மீது விமானங்கள் மூலம் குண்டுகளை வீசினர். இதனால் ஆயிரக்கணக்கானோர் எல்லையில் உள்ள தாய்லாந்து நாட்டுக்கு தப்பி ஓடி தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த நிலையில் மியான்மருடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்தி கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்த தடை தொடரும் என்று அமெரிக்கா வர்த்தக பிரதிநிதி காத்தரீன் தெரிவித்தார்.

கண்டி, மாத்தளையிலிருந்து சென்று கிளிநொச்சியில் புதையல் தோண்டிய ஐவர் கைது!

கிளிநொச்சி, வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் அமைந்திருந்த காட்டுப் பகுதிக்கருகில் புதைய தோண்ட முற்பட்ட ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாயவனூர் காட்டுப் பகுதியில் நவீன ஸ்கானிங் இயந்திரத்துடன் மாத்தளை, கண்டி மற்றும் கொழும்பு பிரதேசங்களிலிருந்து வருகை வருகை தந்திருந்த ஐவர் நேற்று புதையல் தோண்டுவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் தகவல் இராணுவப்
புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பூஜை
வழிபாடுகளுக்காக அழைத்து வரப்பட்ட முதியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர்களிடமிருந்த புதையல் தோண்டுவதற்காக
பயன்படுத்தப்படும் நவீன ஸ்கானிங் கருவி மற்றும் ஏனைய பொருட்கள், அவர்கள் பயணித்த வாகனம் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். கைதானவர்கள் இன்று(30) கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் ஐவரையும் வருகின்ற ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.

பறிபோனது ஊவாவுக்கான தமிழ்க் கல்வி அமைச்சு – வெளியானது வர்த்தமானி!

ஊவாவில் வேறாக இயங்கிய தமிழ் மற்றும் சிங்கள கல்வி அமைச்சு விசேட வர்த்தமானி மூலம் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டது.

ஊவா மாகாண போக்குவரத்து அமைச்சின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளாக செயற்பட்டுவந்த ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதியிலிருந்து மீண்டும் அமுலுக்கு வரும் வகையில் ஊவா மாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது குறித்த விசேட வர்த்தமானி (2219/54) ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலால் வெளியிடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதுளை தமிழ் மகளிர் கல்லூரி அதிபருக்கும் அப்போதைய ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசாநாயகவுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து ஊவா மாகாண கல்வி அமைச்சுக்கு கீழ் செயற்பட்ட ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சை விசேட வர்த்தமானி மூலம் ஊவா மாகாண போக்குவரத்து அமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் போது செந்தில் தொண்டமான் குறித்த அமைச்சுக்கு பொறுப்பாக கடமையாற்றினார்.

2018 முதல் ஊவா மாகாண போக்குவரத்து அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சு எதிர்வரும் ஏப்ரல் 02 ஆம் திகதி முதல் திருமதி. சந்தியா அபன்வெல செயலாளராக கடமையாற்றும் ஊவா மாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.

எம். செல்வராஜா, பதுளை

இறுதி ஊர்வலத்தில் குளவிக்கொட்டு – தலவாக்கலையில் எட்டு பேர் பாதிப்பு!

தலவாக்கலை ட்டூப் தோட்டத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேர் இன்று மாலை 3 மணியளவில் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபரொருவரின் சடலத்தை மயானத்தில் அடக்கம் செய்வதற்காக கொண்டுசெல்லப்படும்வேளை, பட்டாசு கொளுத்தி வீசப்பட்டுள்ளது. இவ்வாறு வீசப்பட்ட பட்டாசு குளவிக்கூடுமீது விழுந்துள்ளது. இதனையடுத்தே குளவிகள் கலைந்துவந்து அவ்வீதி ஊடாக பயணித்தவர்கள்மீது சரமாரியாக கொட்டியுள்ளன.

குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். எவரின் நிலைமையும் பாரதூரமானதாக இல்லை. சிகிச்சைகளின் பின்னர் அவர்கள் வீட்டுக்கு அனுப்படுவார்கள் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

க.கிசாந்தன்

பசறை விபத்தின் எதிரொலி – 21 பஸ்களுக்கு சேவையில் ஈடுபட தடையுத்தரவு!

பதுளை – பசறை வழியில் பயணிக்கும் 21 பஸ்களுக்கு, பதுளை மோட்டார் வாகன திணைக்கள பிரதான பரிசோதகர் உபுல் ஹேரத் தற்காலிக தடையுத்தரவினை 30-03-2021ல் (இன்று) பிறப்பித்துள்ளார்.

பதுளை மோட்டார் வாகன திணைக்கள பரிசோதகர் குழுவினருடன், பதுளை, பசறை, போகாகும்பரை ஆகிய பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்துப் பிரிவு பொலிசாரும், மேற்படி சுற்றி வலைப்பு வாகன பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இப் பரிசோதனைகளின் போது, இ.போ.ச. பஸ்கள் – எட்டு, தனியார் பஸ்கள் – பதின்மூன்று என்ற வகையில் 21 பஸ்களுக்கு, வீதிகளில் பயணிக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இப்பஸ்கள், வீதிகளில் பயணிக்க முடியாத வாகனங்களாகவே, காணப்பட்டன. பல்வேறு குறைபாடுகள் இப் பஸ்களில் காணப்பட்டன. இக் குறைபாடுகளினாலேயே, விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இக் குறைபாடுகளை பத்து தினங்களுக்குள் நிவர்த்தி செய்து, அப்பஸ்களை மீள் பரிசோதனைக்குற்படுத்திய பின், சேவையில் ஈடுபடுத்த அனுமதி வழங்குவது குறித்து அறிவிக்கப்படுமென்று, மோட்டார் வாகன திணைக்கள பிரதான பரிசோதகர் தெரிவித்தார்.

அத்துடன், பொதுமக்களிடமிருந்து, கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்தே, இத் திடீர் பரிசோதனைகள் பதுளை – பசறை பிரதான வழியில் மேற்கொள்ளப்பட்டன.

எம். செல்வராஜா, பதுளை நிருபர்

புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்குகிறார் அரவிந்தகுமார்?

மலையக மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அரவிந்தகுமார் எம்.பி., வெகுவிரைவிலேயே புதியதொரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பவுள்ளார் என அவருக்கு நெருக்கமான சிலர் தகவல் வெளியிட்டனர்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கிய அரவிந்தகுமாரை ஆரம்பத்திலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி இடைநிறுத்தியது. ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மலையக மக்கள் முன்னணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்படி விசாரணைகளை ஆரம்பித்த மலையக மக்கள் முன்னணி, 4 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அரவிந்தகுமார் எம்.பியை கட்சியை விட்டும், அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் அதிரடியாக அண்மையில் நீக்கியது.

” தெரிந்து துரோகம் செய்தவர்களிடம் நியாயம் கேட்காதே, அவர்கள் செய்த தவறுக்கு ஆயிரம் பதில்களை சொல்வார்கள் என ஹிட்லர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி அரவிந்தகுமார் எம்.பியும் தெரிந்தே தவறு செய்துள்ளார்” – என அரவிந்தகுமாரை முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஸ்ணன் மறைமுகமாக துரோகி என விமர்சித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் இந்த நகர்வால் சினமடைந்துள்ள அரவிந்தகுமார் எம்.பி., பதுளை மாவட்டத்தில் உள்ள முன்னணியின் ஆதரவாளர்களை தம்பக்கம் வளைத்து போட்டுள்ளார். கட்சி தொண்டர்களுடன் அடுத்தக்கட்டம் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்திவருகின்றார்.

இதன்பிரகாரம் விரைவில் புதியதொரு அரசியல் இயக்கத்தை அவர் கட்டியெழுப்பக்கூடும் எனவும், அதனை மையப்படுத்தியே தற்போது நகர்வுகள் இடம்பெறுகின்றன எனவும் தெரியவருகின்றது.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...