Home Blog Page 3556

“நடுவீதி தாக்குதல் – நடந்தது என்ன, நடக்கப்போவது என்ன?

பொலிஸ் அதிகாரியால் நடு வீதியில் வைத்து சாரதியொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு….

“நடந்தது என்ன? நடப்பது என்ன?” என சற்று முன் நான் வினவியபோது “இதுதான் நடந்தது, நடக்கின்றது ஐயா” என மஹரகமை பொலிஸ் பொறுப்பதிகாரி (OIC) பிரதம ஆய்வாளர் (Chief Inspector) ஜனகாந்த எனக்கு சொன்னார்.

மஹரகமை நகர வீதியில் லொறியை ஓட்டி வந்த ஹப்புதளையை சேர்ந்த கலைமகன் பிரவீன், அவ்வீதியில் பணியில் இருந்த மஹரகமை போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் ஆய்வாளர் (IP) மைத்திரிபாலவின் மீது மோதி உள்ளார்.

அதனால் ஆத்திரமடைந்த அங்கே பணியில் இருந்த இன்னொரு போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் இஸ்மாயில் ரிபைடீன், லொறி சாரதி கலைமகன் பிரவீனை சராமாரியாக தாக்கியுள்ளார்.

அந்த காணொளிதான் உலகம் முழுக்க (Viral) தெறிக்கிறது. லொறி மோதலில் காயமடைந்த IP மைத்திரிபால இப்போது களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் இஸ்மாயில் ரிபைடீனும், பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்திய கலைமகன் பிரவீனும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் இருவரும் மஹரகமை பொலிசாரினால் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள்.

ஐந்து வயதுச் சிறுவனை கடித்துக்குதறிய தெரு நாய்கள்! இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

மாத்தளையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனை தெரு நாய்கள் கடித்துக்குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனே இதில் பாதிக்கப்பட்டுள்ளான்.

நாய்களின் கடிக்கு இலக்கான சிறுவனை விளையாட்டு மைதானத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் தீவிர முயற்சிக்குப் பின் மீட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தின் போது ஒரு நாய் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த மாணவர் மாத்தளை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுவனின் முதுகு மற்றும் ஒரு காலை கடித்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

குடிநீர், மின்சாரம்கூட இல்லை – காடாகிவரும் நல்லாட்சியின் தனி வீட்டுத் திட்டம்!

நுவரெலியா, ஹேவாஎட்ட – ஹங்குராங்கெத்த பிரதேச செலயகத்துக்குட்பட்ட ருக்வூட் தோட்டத்தில், தனி வீட்டுத் திட்டத்தில் வாழும் மக்களுக்கு குடிநீர், மின்சாரம் உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் இன்னும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே, தமக்கான அடிப்படை – உட்கட்டமைப்பு வசதிகளை விரைவில் செய்துகொடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேற்றப்பட்டிருந்த 24 குடும்பங்கள் ருக்வூட் பகுதியில் தனி வீட்டுத் திட்டத்தில் 2018 இல் குடியமர்த்தப்பட்டனர். 50 வீடுகள் கட்டப்பட்டிருந்தாலும் 24 வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்பட்டிருந்தன. எனினும், நல்லாட்சியால் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.

இன்றளவிலும் அம்மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர். எனவே, இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானாவது தமக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கலகா நிருபர் – ரம்யா

“சாரதியை தாக்கும் பொலிஸ் அதிகாரியின் செயலை அரசு அனுமதிக்காது”

” சாரதியொருவர்மீது தாக்குதல் நடத்தும் பொலிஸ் அதிகாரியின் செயலை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. “- என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது.

போக்குவரத்து பொலிஸ் அதிகாரியால் சாரதியொருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அரசின் நிலைப்பாடு என்னவென்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” சொல்லில் அல்ல தனது நிலைப்பாடு என்னவென்பதை அரசாங்கம் செயல் ஊடாக காட்டியுள்ளது. பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுப்பார்.” – என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

” படையினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவே முடியாது”

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாகக்கொண்டு இலங்கை படையினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னிலையில் கொண்டுசெல்லமுடியாது. பாதுகாப்புசபை ஊடாக முயற்சி எடுக்கப்பட்டால்கூட அதனை சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தும் – என்று இலங்கை அரசு நேற்று அறிவித்தது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (29) கொழும்பில் நடைபெற்றது. இதன்போது ஜெனிவா விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்படி அறிவிப்பை விடுத்தார் சட்டத்துறை நிபுணரான அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் .பீரிஸ்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் மக்கள் மத்தியில் மாயையொன்றை உருவாக்கிஅச்சத்தை ஏற்படுத்துவதற்கு எதிரணி முயற்சிக்கின்றது. இது தொடர்பில் எவரும் அச்சப்படவேண்டியதில்லை. அத்துடன், எமது நாட்டு முப்படையினரையும், அரசியல் தலைவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வதற்கான சூழல் குறித்த தீர்மானத்தின் ஊடாக உருவாகியுள்ளது எனவும் குறிப்படுகின்றனர். இது தவறான கருத்தாகும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வதற்கு இரு வழிகள் உள்ளன. இதில் ஒன்றுதான் ரோம் உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடவில்லை. அடுத்ததாக ஐ.நா. பாதுகாப்பு சபை கட்டளையிட்டால் சர்வதேச நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும். இதன்படி யோசனையொன்று முன்வைக்கப்பட்டால்கூட சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை நிராகரிக்கும். எனவே, இலங்கை படையினரையோ, அரசியல் தலைவர்களையோ சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லமுடியாது.

அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை என்பது கலந்துரையாடல் களமாகும். அங்கு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் மனித உரிமைகள் பேரவைக்கு கிடையாது. அதற்கான அதிகாரம் பாதுகாப்பு சபைக்கு மட்டுமே இருக்கின்றது.” – என்றார்.

“பண்டிகை காலத்தில் போலி நாணயத்தாள் புழக்கத்தில்” – அவதானமாக இருக்க மக்களுக்கு அறிவுறுத்தல்

பண்டிகை காலத்தில் பொது மக்கள் போலி நாணயத்தாள்களின் பயன்பாடு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் 5000 ரூபா போலி நாணயத்தாளுடன் முகத்துவாரம் பகுதியில் 21வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தொடர்ந்தும் இவ்வாறான குற்றச்செயல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. எனவே, பண்டிகை காலத்தில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

குறிப்பாக 5,000 ரூபா நாணயத்தாள்களை பயன்படுத்தும் போது போலி நாணயத்தாள் குறித்து கவனமாக செயற்பட வேண்டும்.

அவ்வாறு போலி நாணயத்தாள்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்குமாயின் அருகிலுள்ள பொலிஸாரிடம் தெரிவிக்குமாறும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

ஜீவன் யாருக்கு சேவை செய்கிறார்? வேலுகுமார் வெளியிட்ட பரபரப்பு தகவல்

“தேர்தல் காலத்தில் நாமே ஆளும் தரப்பில் உள்ளோம், எம்மால் தான் மக்களுக்கு பணியாற்ற முடியும் என்றார்கள். ஆனால், இரண்டு வருடங்கள் கடந்தும், ஒரு செங்கல் கல் கூட கண்டி மாவட்ட அபிவிருத்திக்காக வைக்கப்படவில்லை.” என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவருமான வேலு குமார் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பஹத்த ஹேவாஹெட காரியாலய திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, அவர் மேலும் பின்வருமாறு தெரிவித்தார்..

“கண்டி மாவட்டத்திற்கு பல வருடங்களுக்கு பின் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்தது. அதனை மிக சிறந்த முறையில் கடந்த ஆட்சியில் நாம் பயன்படுத்தினோம். கண்டி மாவட்டத்தில் பல ஆண்டுகள் தேங்கி கிடந்த உரிமை சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்தோம். அதே போன்று, புறக்கணிக்கப்பட்டிருந்த தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியில் எழுச்சியை ஏற்படுத்தினோம்.

கடந்த தேர்தல் காலத்தில் நாமே ஆளும் தரப்பில் உள்ளோம், எம்மால் தான் மக்களுக்கு பணியாற்ற முடியும் என்றார்கள். ஆனால் இரண்டு வருடங்கள் கடந்தும் ஒரு செங்கற்கல் கூட கண்டி மாவட்ட அபிவிருத்திக்காக வைக்கப்பட வில்லை. கடந்த ஆட்சி காலத்தில் வீடமைப்பிற்கான காணி வழங்கல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு இணைந்ததாக தனி வீட்டு திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது. அவற்றில் பல வீட்டு திட்டங்கள் எமது காலப்பகுதியில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

எனினும் 2018 ஆம் ஆண்டு இறுதி காலம் முதல், 2019 ஆம் ஆண்டின் இறுதி காலம் வரை ஆரம்பிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் உள்ளன. அவை எமது அரசாங்கம் முடிவுக்கு வருகின்ற போது அரைவாசி கட்டப்பட்ட வீடுகளாக இருந்தது. ஆனால் இன்று இரண்டு வருடங்கள் கடந்தும் அவை அதே நிலையிலேயே உள்ளது. அவற்றின் அபிவிருத்திக்காக ஒரு சதமேனும் நிதி ஒதுக்கப்படவில்லை.

ஹேவாஹெட தொகுதியின், லூல்கந்துர தோட்டத்தின், தோட்ட வீடமைப்பு அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வீடுகள் அரைகுறையாக கைவிடப்பட்டுள்ளது. ஊராகளை மற்றும் ஹந்தானை தோட்டத்தில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யாது அரைகுறை நிலையில் உள்ளது. இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ், ஹந்தானை தோட்டப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளுக்கும் அதே நிலைமையே காணமுடிகின்றது. தோட்ட பகுதிகளின் நாம் கொண்டு சென்ற வீடமைப்பு திட்டங்கள் முற்றாக இந்த ஆட்சியில் ஸ்தம்பிதம் அடைந்திருக்கிறது.

தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இவை கண்ணுக்கு தெரியாதுள்ளது. இத்தகைய திட்டங்களை பூர்த்தி செய்து மக்களுக்கு வழங்குவதை விட்டு, வேறு ஏமாற்று வேலைகளை செய்து வருகின்றனர். தமது நண்பர்களை, தமக்குதவிய வியாபாரிகளை, சந்தோஷப்படுத்தும் வேலையை செய்து வருகின்றனர். தோட்ட மக்களை ஏமாற்றி, காணி தருகின்றோம், என கூறிக்கொண்டு, தமது சகாக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்க மாவட்டம் முழுவதும் அலைந்து திரிகின்றனர்.

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு நாம் ஆரம்பித்து வைத்த திட்டங்களை முன்னெடுக்க இயலுமை இல்லையா? அல்லது இயலுமை இல்லாத பிரதிநிதிகளை கண்டி மாவட்டத்தில் வைத்திருப்பதால் இந்நிலைமையா? அல்லது ராஜாங்க அமைச்சரே இதைப்பற்றி தெரியாமல் இருக்கின்றாரா? என்ற கேள்வியையே மக்கள் சார்பாக நாம் முன்வைக்க வேண்டி இருக்கின்றது.” என்றார்.

இலங்கைக்கு தேயிலை பயிரை அறிமுகப்படுத்திய ஜேம்ஸ் டெய்லரின் 186 ஆவது பிறந்தநாள்

இலங்கைக்கு தேயிலை பயிர் செய்கையை அறிமுகப்படுத்திய ஜேம்ஸ் டெய்லர் என்பவரின் 186 ஆவது ஜனன தினம் நேற்றாகும். இதனை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதன்படி முதன்முதலில் தேயிலை பயிரிடப்பட்ட லுல்கந்து எனும் இடத்தில் வைத்து ஜேம்ஸ் டெய்லரை நினைவுகூரும் வகையில் கேக் வெட்டப்பட்டது. அதன்பின்னர் ஜேம்ஸ் டெய்லரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

கொண்டகலை பகுதியில் பரசூட் சாகசமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தோட்ட நிர்வாகமும், தொழிலாளர்களும் இணைந்தே நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கலகா நிருபர் – ரம்யா

தனிவழி செல்ல தயாராகிறது சு.க.! இன்று மகாநாயக்க தேரர்களை சந்திக்கிறார் மைத்திரி!!

இவ்வருடத்துக்குள் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவதற்கு உத்தேசித்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதற்கான நகர்வுகளை தற்போது திரைமறைவில் முன்னெடுத்துவருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இந்நிலையில் இன்று (30) வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெறவுள்ளார்.

அத்துடன் கண்டி மாவட்டத்தில் சுதந்திரக்கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட அரசியல் வேலைத்திட்டங்களிலும் பங்கேற்கவுள்ளார். மறுநாள் (31) மாத்தளை மாவட்டத்திலும் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரச கூட்டணியில் பங்காளியாக அங்கம் வகித்தாலும் சுதந்திரக்கட்சிக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை. இதனால் அக்கட்சி உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். மொட்டு அரசால் முன்னெடுக்கப்பட்ட சில திட்டங்களுக்கும் சுதந்திரக்கட்சி போர்க்கொடி தூக்கியிருந்தது.

இதனால் இரு தரப்புக்கும் இடையிலான உறவு நல்லதாக இல்லை. எனவேதான் மாகாணசபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட்டு, பலத்தைக்காட்ட முற்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

சுயெஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது!

சூயெஸ் கால்வாயில் தரைதட்டி நின்ற சரக்குக் கப்பல் மீண்டும் முழுமையாக மிதக்கும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு வாரமாக தரைதட்டி நின்ற அந்தக் கப்பல், இழுவைப் படகுகளால் வெற்றிகரமாக இழுக்கப்படுவதைக் காணொளிப் பதிவுகள் காட்டுகின்றன.

மீட்புக் குழுவினர்  து, கப்பலை கால்வாயின் Great Bitter Lake எனும் நீர்ப்பகுதிக்கு இழுத்துச் சென்றனர்.

அங்கு, கப்பல் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சூயெஸ் கால்வாயின் அடைப்பால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நாளொன்றுக்குக் கிட்டத்தட்ட 9 பில்லியன் டாலர் மதிப்புமிக்க வர்த்தகம் தடைபட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...