Home Blog Page 3557

ஊடகவியலாளரிடம் ரி.ஐ.டியினர் 3 மணிநேரம் விசாரணை

யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் தனியார் தொலைக்காட்சி சேவையின் நிகழ்ச்சித் தொகுப்பாளரும், ஊடகவியலாளருமான புலேந்திரன் சுலக்சன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டது.

குறித்த ஊடகவியலாளரை இன்றைய தினம் கொழும்பிற்கு அழைத்து வாக்குமூலம் பெற்ற பின்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விடுத்துள்ளனர்.

புலம்பெயர் நாட்டில் வசிக்கும் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர் என அடையாளப்படுத்தப்பட்ட நபருடன் ஊடகவியலாளர் முக புத்தகத்தில் நட்பில் இருந்தமை தொடர்பில்லையே விசாரணைக்கு அழைக்கப்பட்டு சுமார் மூன்று மணிநேரம் வாக்குமூலம் பெற்ற பின்னர் விடுவிக்கப்பட்டார்.

மனைவியை கொலை செய்து மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் வீசிய கணவன் கைது!

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து கடந்த 25 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பப் பெண், கொலை செய்யப்பட்ட பின்னரே நீர்த்தேக்கத்தில் வீசப்பட்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிடன் தோட்டத்தைச் சேர்ந்த வனராஜா சித்தரவள்ளி (வயது – 28) என்ற குடும்பப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவருக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர்.

சடலம் மீட்கப்பட்டதையடுத்து அது தொடர்பில் தலவாக்கலை மற்றும் அக்கரபத்தனை பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

கைரேகை அடையாளப்பரிவினர் விசாரணை மேற்கொள்வதற்காக வீட்டுக்கு செல்லும் போது , குறித்த பப்ணின் கணவர் வீட்டை விட்டு ஓடியுள்ளார். அதனை தொடர்ந்து கணவன் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் நேற்று அவரை கைது செய்து புலன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன்போது, கூலி வாகன சாரதியாக வேலை செய்யும் குறித்த நபர், தனது மனைவிக்கும் மற்றுமொருவருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், இதனால் கடந்த 23 ஆம் திகதி சண்டை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே மனைவி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பிள்ளைகளை தனது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, கணவன் வேலைக்கு சென்றுள்ளார். இரவு வீடு வந்து 11 மணியளவிலேயே சடலத்தை நீர்த்தேக்கத்தில் வீசியுள்ளார்.

ஹட்டன் விசேட நிருபர் – கே.சுந்தரலிங்கம்

‘நாய் சேகர்’ ஊடாக மீண்டும் களமிறங்குகிறார் வைகைப்புயல்

தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்ததால் கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறாராம்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. தற்போது அவர் ரீ-என்ட்ரிக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தலைநகரம், படிக்காதவன், மருதமலை போன்ற படங்களை இயக்கிய சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு நாய் சேகர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சுராஜ் இயக்கிய தலைநகரம் படத்தில் வடிவேலுவின் ‘நாய் சேகர்’ கதாபாத்திரம் மிகவும் பிரபலமானதால் இப்படத்திற்கு அதையே தலைப்பாக வைக்க உள்ளார்களாம். சுராஜ் – வடிவேலு இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்தார் நடிகை இனியா

தமிழ் படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இனியா.

வாகை சூடவா படத்தில் நடித்த கதாபாத்திரமும், சர சர சாரக்காற்று வீசும்போது… பாடலுக்கு அவர் வெளிப்படுத்திய பார்வையும் அபிநயமும் ரசிகர்கள் கண்களில் இன்னமும் நிற்கின்றன. அந்த படத்துக்கு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.

மவுனகுரு, அம்மாவின் கைப்பேசி, புலிவால், நான் சிகப்பு மனிதன், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

ஆனாலும் இனியாவால் முன்னணி நடிகையாக உயர முடியவில்லை. தற்போது இனியாவுக்கு பட வாய்ப்புகளும் குறைந்துள்ளன. இதனால் மார்க்கெட்டை பிடிக்க கவர்ச்சிக்கு மாறி உள்ளார். எல்லை மீறிய தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு

ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி திஸர பெரேரா சாதனை (Video)

6 பந்துகளுக்கு அடுத்தடுத்து 6 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்துள்ளார் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் திஸர பெரேரா.

சிரேஷ்ட கிரிக்கெட் போட்டியொன்றில் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசிய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையையே அவர் படைத்துள்ளார்.

இலங்கை அணி வீரரான திஸர பெரேரா, இராணுவ அணிக்காகவும் விளையாடுகின்றார்.  இந்நிலையில் புளுபீல்ட் அணிக்கு எதிராக நடைபெற்ற 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியிலேயே அவர் இச்சாதனையை படைத்துள்ளார்.

13 பந்துகளுக்கு திஸர பெரேரா அரைத்தசம் அடித்துள்ளார்.

6 சிக்ஸர்களை விளாசிய வீரர்களின் விபரம்…..

1. Sir Garfield Sobers (1968)
2. R Shastri (1985)
3. H Gibbs (2007)
4. Yuvraj Singh (2007)
5. Ross Whitely (2017)
6. Hazratullah Zazai (2018)
7. Leo Carter (2020)
8. K Pollard (2021)
9. T Perera (2021)

சுத்தமான குடிநீருக்காக பல தசாப்தங்கள் ஏங்கும் மக்கள்!

மலையகத்தில் ஆறுகள், நீரூற்றுக்கள் , நீர்வீழ்ச்சிகள் என நீர்வளம் காணப்பட்டாலும் ஒரு சில தோட்டங்களில் வாழும் மக்கள் பல வருடங்களாக ஒரு கிளாஸ் சுத்தமான நீருக்காக காத்திருக்க வேண்டிய நிலைமை இன்னும் தொன்று தொட்டு தொடர்கதையாகத்தான் இருக்கின்றன.இதற்கு நுவரெலியா மாவட்டம் லிந்துலை டிலிகுற்றி தோட்ட மக்களும் விதிவிலக்கல்ல.

இத்தோட்டத்தில் 35 குடும்பங்களை சேர்ந்த 160க்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு நாளும் குடிநீர் வசதி இல்லாமல் திண்டாடுகின்றனர்.

ஒரு குழாயில் வரும் சொட்டு நீருக்காக குடங்களை வைத்துக்கொண்டு பல மணி நேரம் காத்து இருப்பதோடு தங்களின் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்தோடு ஒரு கற்குகைக்குள் வரும் ஊற்று நீருக்காக ஒவ்வொரு நாளும் தனது உயிரினை துச்சமென நினைத்து பல்வேறுபட்ட சிரமங்களுக்கு மத்தியில் அந்த இடத்தில் இருந்து நீரை பெற்று வருவது வேதனை தரும் விடயமாகும்
முதியோர்கள் பாடசாலை மாணவர்கள் நோயாளர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

இப்பிரச்சனை தொடர்பாக அரசியல்வாதிகளிடம் தோட்ட நிர்வாகமும் அறிவித்த போதிலும் இதுவரை யாரும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இங்குள்ள மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன் விசேட நிருபர்

நுவரெலியா மாவட்டத்துக்கான புதிய செயலாளர் இன்று கடமையேற்பு!

நுவரெலியா மாவட்ட செயலாளராக மத்திய மாகாண முன்னாள் பிரதான செயலாளரும், மத்தியமாகாண கல்வி அமைச்சின் செயலாளருமான நந்தன கலப்பட இன்று (29) திங்கட்கிழமை சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

நுவரெலியா மாவட்ட செயலாளராக கடமையாற்றிய எ. பீ. ஆர். புஸ்பகுமார விவசாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கடந்த மார்ச் முதலாம் திகதி இடம்மாற்றம் பெற்று சென்றதையடுத்து நந்தன கலபட நுவரெலியா மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு வலப்பனை பிரதேச பிரதி செயலாளராகவும் அதனை தொடர்ந்து அங்குராங்கெத்த, உடுநுவர, அக்குரனபோன்ற இடங்களில் பிரதேச செயலாளராகவும், அதனை தொடர்ந்து மத்திய மாகாண பிரதாண செயலாளராகவும் மத்திய மாகாண கல்வி செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இப் பதவியேற்பு வைபவத்தில் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சீ. பீ. ரட்னாயக்க நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி சபையின் இணைத் தலைவருமான எஸ். பீ. திஸாநாயக்க உட்பட அரச அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

நுவரெலியா நிருபர் – எஸ். தியாகு

கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கலாம்! உங்கள் வீட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள் : பொலிஸ் பேச்சாளர்

சித்திரை புத்தாண்டு காலத்தில் பல குற்றச் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறன செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

தமிழ் – சிங்கள புதுவருட கொண்டாட்டங்களின் போது , திட்டமிட்ட குழுவினர் மற்றும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களால் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன.

இத்தகைய குற்றச் செயற்பாடுகள் தற்போதும் பதிவாகி வருகின்ற நிலையில் அவை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.

தங்க சங்கிலி , வாகனங்கள் கொள்ளை , தங்க நகை விற்பனை நிலையங்கள் மற்றும் நிதி நிலையங்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.

அதனால் பொது மக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இதன்போது வீட்டை விட்டு வெளியில் செல்லும் ஒவ்வொரு சந்தரப்பத்திலும் வீட்டின் பாதுகாப்பை உறுதிசெய்துக் கொள்ள வேண்டும்.

சொந்த வாகனங்களில் செல்பவர்கள் , வாகங்களை நிறுத்தி வைக்கும் போது அதன் பாதுகாப்பை உறுதிசெய்துக் கொள்ள வேண்டும்.

வங்கிகள் உள்ளிட்ட நிதி நிலையங்களில் பணத்தை வைப்பிலடச் செல்பவர்கள் , தங்களைச் சுற்றியுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன் , தங்களிடமுள்ள பணத்தை பாதுகாப்புடன் வங்கிக்கு கொண்டுச் செல்ல வேண்டும்.

இதேவேளை வர்த்தக நிலையங்கள் அருகில் காணப்படும் ஏனைய வர்த்தக நிலையங்களுடன் தொடர்பினை வைத்துக் கொள்வதுடன் , ஏதேனும் அனர்த்தம் நிகழ்ந்தால் உடனே அதனை ஏனைய வர்த்தக நிலையங்களும் அறிந்துக் கொள்வதற்காக திட்டமொன்றை தயாரித்திருத்தல் வேண்டும்.

இந்நிலையில் வர்த்தக நிலையங்கள் , நிதி நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் இவ்வாறான நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டால் அது தொடர்பில் தெரியப்படுத்துவதற்காக , அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களின் தொலைபேசி இலக்கம் மற்றும் அவசர அழைப்பு பிரிவின் இலக்கங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

தரை தட்டிய எவர் கிவன் கப்பல் ‘மீண்டும் மிதக்கத் தொடங்கியது’

எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நின்ற எவர் கிவன் கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எவர் கிவன் கப்பலின் பின்பகுதி கால்வாயின் கடையை உரசிக்கொண்டு நிற்பதை சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளிகள் காட்டுகின்றன.

கடல்சார் தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளும் ‘இன்ச்கேப்’ நிறுவனமும் தரைதட்டி, சிக்கிக்கொண்டிருந்த கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இழுவைப் படகுகள் மற்றும் அகழ்வுக் கருவிகள் ஆகியவற்றின் துணையுடன் இந்தக் கப்பலை மீண்டும் மிதக்க வைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து வந்தன.

சரக்கு போக்குவரத்து பாதைகளில் உலகன் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் சூயஸ் கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 23) முதல் எவர் கிவன் என்ற மிகப்பெரிய சரக்குக் கப்பல் தரைதட்டி நின்றது.

ஞாயிறு வரை 18 மீட்டர் ஆழத்தில், 27,000 கியூபிக் மீட்டர் அளவு மணல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது என்று சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்திருந்தது.

பெர்முடா முக்கோணத்தில் மாயமான கப்பல்கள், விமானங்களுக்கு என்ன ஆனது?
‘போர் மூண்டால் மூளட்டும்’: இந்திரா காந்தி உத்தரவால்கராச்சி செல்ல தயாரான கப்பல்கள்’
எவர் கிவன் கப்பலுக்கு அடியில் பெரும் அளவில் பாறைகள் இருந்ததாக சூயஸ் கால்வாய் ஆணைய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

சீனாவிலிருந்து நெதர்லாந்து நோக்கி


Satellite image from Cnes2021, Distribution Airbus DS showing Ever Given blocking the Suez Canal (25 March 2021)
பட மூலாதாரம்,CNES2021, DISTRIBUTION AIRBUS DS
சீனாவிலிருந்து நெதர்லாந்தில் உள்ள துறைமுக நகரமான ரோட்டர்டாமிற்குப் புறப்பட்டு, மத்தியதரைக் கடலுக்குச் செல்லும் வழியில் கால்வாய் வழியாக வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது எவர் கிவன் கப்பல் தரை தட்டியது.

சுமார் 2,20,000 டன் மொத்த எடையுள்ள அந்தக் கப்பலில் தற்போது 18,300 மிகப்பெரிய சரக்கு பெட்டகங்கள் உள்ளன.

வேகமான காற்று மற்றும் மணல் புயலால் மறைக்கப்பட்ட பார்க்கும் திறன் ஆகியவற்றால் 400 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் சூயஸ் கால்வாயில் செவ்வாயன்று தரைதட்டியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவித்தன

ஆனால் இந்த கப்பல் தரை தட்டியதற்கு வானிலை முக்கியக் காரணமல்ல என்று சூயஸ் கால்வாய் ஆணையத்தின் ஜெனரல் ஒசாமா ரேபி தெரிவித்துள்ளார்.

“இது தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது மனித பிழைகள் காரணமாக நடந்து இருக்கலாம். விசாரணையில் இதற்கான முழுமையான காரணம் தெரியவரும்,” என்று கடந்த சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால் என்ன விதமான தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது மனித பிழைகள் என்பது தொடர்பான விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

சூயஸ் கால்வாய் உலக பொருளாதாரத்துக்கு ஏன் முக்கியமானது?


உலகளாவிய வர்த்தக சரக்குகளின் சுமார் 12% சூயஸ் கால்வாய் வழியாகவே செல்கிறது, இது மத்தியதரைக் கடலைச் செங்கடலுடன் இணைக்கிறது மற்றும் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான குறுகிய தூரமுள்ள கடல் வழியாகவும் உள்ளது.

சூயஸ் கால்வாய்க்கு மாற்று வழியாக ஆசியா – ஐரோப்பா இடையே பயணிக்க வேண்டுமானால் ஆப்ரிக்க கண்டத்தின் தெற்கு முனையான நன்னம்பிக்கை முனையைச் சுற்றித்தான் செல்ல வேண்டும்.

ஆனால் அதற்கு சுமார் இரண்டு வார காலம் கூடுதல் நேரம் தேவைப்படும். அதற்கேற்ப எரிபொருள், உணவுக் கையிருப்பு ஆகியவையும் அதிகமாகும்.

2020ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 19,000 கப்பல்கள் இக்கால்வாய் வழியாக சென்றன. அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 51.5 கப்பல்கள் என்று சூயஸ் கால்வாய் ஆணையம் குறிப்பிடுகிறது.

2017ஆம் ஆண்டில், ஜப்பானிய கொள்கலன் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக இக்கால்வாயில் சிக்கியது. எகிப்திய அதிகாரிகள் இழுபறிப் படகுகளின் உதவியோடு சில மணி நேரங்களுக்குள் மீண்டும் அதை மிதக்க வைத்தனர்.

சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலுக்கு இடையிலான ஒரு பகுதியான சூயஸ் இஸ்த்மஸை எகிப்தில் கடக்கிறது. இந்தக் கால்வாய் 193 கி.மீ (120 மைல்) நீளம் கொண்டது மற்றும் மூன்று இயற்கை ஏரிகளை உள்ளடக்கியது.

2015ஆம் ஆண்டில், எகிப்து அரசாங்கம் கால்வாயை விரிவாக்கம் செய்தது. இது பிரதான நீர்வழிப்பாதையை ஆழப்படுத்தியதுடன், அதற்கு இணையாக 35 கி.மீ (22 மைல்) தடத்தையும் கப்பல்களுக்கு வழங்கியது.

எவர் கிவன் கப்பல் பற்றிய முக்கியத் தகவல்கள்


Suez Canal: Ships stuck in ‘traffic jam’ as salvage efforts continue
செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி (05:40 GMT) சுமார் 07:40 மணிக்கு நீர்வழியின் குறுக்கே மாட்டிக்கொண்டது.

20,000 கொள்கலன்களைக் கொண்டு செல்லும் திறன் இந்த கப்பலுக்கு உள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தைவானை சேர்ந்த எவர் கிரீன் மரைன் எனும் நிறுவனத்தால் இயக்கப்படும் எவர் கிவன் கப்பல் ஜப்பானைச் சேர்ந்த ஷோயி கிசென் எனும் நிறுவனத்துக்குச் சொந்தமானது. 2018ஆம் ஆண்டில் கட்டப்பட்டு, பனாமாவில் இந்தக் கப்பல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஷோயி கிசென் நிறுவனத்தின் தலைவர் யுகிடோ ஹிகாகி இந்த கப்பல் சேதம் அடைந்ததாக தெரியவில்லை என்று வெள்ளிக்கிழமை என்று தெரிவித்தார்.

“இந்த கப்பலுக்குள் நீர் புகவில்லை. இது மீண்டும் மிதக்கத் தொடங்கும்போது வழக்கம்போல இயங்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil

பசறை விபத்து – தந்தையை இழந்து தவிக்கும் மற்றுமொரு குடும்பத்தின் சோகக் கதை….

பசறை பஸ் விபத்தில் பலியான 14 பேரின் பாக்கியநாதன் யோகதாஸ் என்பவரும் ஒருவராவார். இவரது இழப்பினால் அவரது ஐந்து பிள்ளைகளும், அவரது மனைவியும் பெரும் துயரில் இருப்பதுடன், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்து வருகின்றது. தமக்கு எவரும் உதவமாட்டார்களாவென்று ஏக்கப்பெருமூச்சு விட்ட நிலையில் அவர்கள் உள்ளனர்.

பசறை – மீதும்பிட்டிய பி. பிரிவு பெருந்தோட்டத்தைச் சேர்ந்த 53 வயது நிரம்பிய பாக்கியநாதன் யோகதாஸ், மேற்படி விபத்தில் பலியானார். இவரது மனைவி வேலு சகாயமேரி வயது – 46, மேற்படி தோட்டக்குடியிறுப்பில் வசித்து வந்த போதிலும், சுகவீனம் காரணமாக அவரால் தொழில் செய்ய முடியாத நிலையிலுள்ளார்.

மகன் யோகதாஸ் வினோத் – வயது 26, க.பொ.த. சாதாரண தரம் சித்தியடைந்து, க.பொ.த. உயர்தரத்திற்கு தெரிவாகியும், கல்வியைத் தொடர முடியாத நிலையில் தற்போது அவர் தனியார் நிறுவனமொன்றில் விற்பனைப் பிரதிநிதியாக இருந்து வருகின்றார். மகன் யோகதாஸ் நிஸ்வதனன் – வயது 24. ஆண்டு 10 வரை கல்வியைத் தொடர்ந்துள்ளார்.

மகள் யோகதாஸ் அனிஷா – க.பொ.த. உயர்தர கலைப்பிரிவில், லுணுகலை இராமகிருஸ்ணா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றார்.
மகன் யோகதாஸ் ஜோசப் பிரசாத் – வயது 13. ஆண்டு 8ல் படித்துக் கொண்டிருக்கின்றார்.

மகன் யோகதாஸ் அபிஷேக் – வயது 10. ஆண்டு 5ல் படித்துக் கொண்டிருக்கின்றார்.
இப்பிள்ளைகளின் தகப்பனான பாக்கியநாதன் யோகதாஸ் பசறை நகரில் கட்டிட நிருமாணப் பணியில் ஊழியராக இருந்து வந்துள்ளார். இவருக்கு கிடைத்து வந்த சம்பளத்தில் மேற்படிக் குடும்பம் வழிநடாத்தப்பட்டு வந்தது. அத்துடன், யோகதாஸ் வினோத் நிறுவனமொன்றில் விற்பனைப் பிரதிநிதியாக இருந்து வருகின்றார். இவரது சம்பளமும், மேற்படி குடும்பத்தினரின் வாழ்வாதாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

பாக்கியநாதன் யோகதாஸ் பசறை பஸ் விபத்தில் பலியானதினால், யோகதாஸ் வினோத் என்பவருக்கு கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் இக் குடும்பத்தின் வாழ்வாதாரங்களை மேற்கொள்ள முடியாத அவலம் மேலிட்டு, அவர்கள் வாழ வழியின்றித் தவித்துக் கொண்டிருகின்றனர்.

இந் நிலையில், விபத்தில் பலியானவரின் மனைவி 46 வயதுடைய வேலு சகாய மேரியை சந்திக்க, அவரது குடியிறுப்பினை நாடிச் சென்ற போது, அவர், ‘எமது குடும்பத்தின் மேம்பாடுகள் குறித்து, பிள்ளைகளது கல்வி அபிவிருத்தி குறித்தும் கூடிய கவனம் எடுத்து, எனது கணவர் செயற்பட்டார். மூன்று பிள்ளைகளையாவது நல்ல முறையில் படிப்பிக்க வேண்டும். நன்றாகப் படித்து தொழில் செய்யும் போது, அவர்களின் நிழலில் நாமும் வாழ்க்கை நடாத்தலாமென்று அடிக்கடி என்னிடம் கூறுவார். பெரும் எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது. அவர் எடுக்கும் சம்பளத்தில் எமது குடும்ப வாழ்க்கை, வறுமையிலும் செம்மையாக அமைந்திருந்தது.

எனது கணவர் வழமைபோன்று, கடந்த 20ந் திகதி காலை குறிப்பிட்ட தனியார் பஸ்சில் பசறைக்கு தொழிலுக்காகப் புறப்பட்டார். அவர் சென்று சில நிமிடங்களில் அப் பஸ் விபத்துக்குள்ளாகியதையறிந்து, அவ்விடத்திற்கு நாங்கள் ஓடிச் சென்றோம். அங்கு ஒரே கூட்டம். காயப்பட்டவர்களையும், இறந்தவர்களையும் அம்புலன்ஸ் வாகனங்களில் ஏற்றுக்கொண்டிருந்ததைக் கண்டோம். ஆனால், எனது கணவரை என்னாலோ, பிள்ளைகளாலோ பார்க்க முடியவில்லை. மருத்துவமனைக்கு சென்றுதான் எனது கணவரை, என்னாலும் பிள்ளைகளாலும் பார்க்க முடிந்தது.

அவருடன் நாங்களும் இறந்திருந்தால் நன்றாயிருக்கும். எம் ஒவ்வொருவருக்கும் பேச்சே வரவில்லை. அழுகையை கட்டுப்படுத்தவே முடியாது போய்விட்டது.
எமது கனவு, எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் சுக்குநூராகின. எனது பிள்ளைகளுக்காக நான் விரும்பியோ, விரும்பாமலோ வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
எனது பிள்ளைகள் இருவருக்காவது அரச தொழில் வாய்ப்புக்கள் கிடைக்குமேயானால், எமது வாழ்வாதாரங்களை சீரமைத்துக் கொள்ளலாம்.

அத்துடன், எனக்கு கோழி வளர்ப்பு போன்ற சிறு கைத்தொழில்களை மேற்கொள்ள எவராவது உதவுவார்களேயானால், அவர்களுக்கு கோடி புண்ணியம் கிட்டுமென்று, கண்ணீர் மல்கக் கூறினார்.

வசதிபடைத்தவர்கள் எவராவது இக்குடும்பத்தினருக்கு உதவ முன் வருவார்களேயானால், வேலு சகாயமேரி, சம்பத் வங்கி பசறைக்கிளை சேமிப்புக்கணக்கு இலக்கம் 114654558125 என்றதற்கமைய நிதி உதவிகளை வழங்க முடியும்.

சொலமன் அவர்கள்

சொலமன் அவரகள் கருத்துத் தெரிவிக்கையில், ‘பாக்கியநாதன் யோகதாசின் மரணத்தையடுத்து, அவரது குடும்பம் வாழ வழியின்றித் தவிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்புடன் பாக்கியநாதன் யோகதாஸ் இருந்து வந்தார். அவரது கனவு நனவாகும் வகையில், அவரது பிள்ளைகளுக்கு அரச தொழில்வாய்ப்புக்கள் கிடைக்குமேயானால், அக் குடும்பத்தினர் சிறப்பாக வாழக்கூடியதாக இருக்கும்’ என்றார்.

மாரி சண்முகநாதன்

யோகதாசின் சகோதரன் மாரி சண்முகநாதன் கருத்துத் தெரிவிக்கையில், ‘யோகதாசின் பிள்ளைகளுக்கு ஏதும் நிரந்தர தொழில் வாய்ப்புக்கள் கிடைக்குமேயானால், அவர்களின் குடும்பத்தை மீளவும் கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும்’ என்றார்.

மகள் அனிஷா

விபத்தில் பலியான யோகதாசின் மகள் அனிஷா கருத்துத் தெரிவிக்கையில், ‘எனது அப்பாவின் எவ்வகையிலும் ஈடுசெய்ய முடியாது. எது எப்படியிருந்த போதிலும் அப்பாவின் கனவை நனவாக்கும் வகையில், க.பொ.த. உயர்தரப் பரீட்சையிலும் சித்தியடைந்து, பல்கலைக்கழகம் செல்வேன். எனது அப்பாவினதும் அம்மாவினதும் விருப்பப்படி ஆசிரியையாவேன். அதுவே எனது இலக்கு, அவ் இலக்கை நோக்கிய எனது பயணம் தொடரும்’ என்றார்.

எம். செல்வரா, பதுளை

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...