Home Blog Page 3574

இந்தியன்-2 படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி வருவது ஏன்?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி வருகிறது. ஏற்கனவே கிரேன் விழுந்த விபத்தினால் படப்பிடிப்பை நிறுத்தினர்.

பின்னர் கொரோனா தடங்கலாக வந்தது. தற்போது கமல்ஹாசன் தேர்தலில் தீவிரமாகி இருக்கிறார். விக்ரம் என்ற இன்னொரு படத்தில் நடிப்பதாகவும் அறிவித்து உள்ளார். இதனால் இந்தியன்-2 படத்தின் கதி என்ன என்று பலரும் பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்புக்கான தாமதத்தை காஜல் அகர்வால் வெளியிட்டு இருக்கிறார்.

அவர் கூறும்போது, “இந்தியன்-2 படத்தில் அமெரிக்காவை சேர்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள் பலர் பணியாற்றுகின்றனர். அவர்கள் இந்தியாவுக்கு வந்து இந்தியன்-2 படத்தில் பணியாற்ற வேண்டி உள்ளது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அவர்களால் இந்தியாவுக்கு வர முடியவில்லை. அதனால்தான் இந்தியன்-2 படப்பிடிப்பை நடத்த முடியவில்லை.

இந்தியன்-2 படப்பிடிப்புக்கான தாமதத்துக்கு இதுதான் காரணம். கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன்-2 படத்தில் நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறேன்’’ என்றார்.

ஆஸ்திரேலியாவில் பாட மறந்த பாட்டுக் குயில்கள்

ஆஸ்திரேலியாவின் அரிய regent honeyeater குயில்கள் அவற்றின் பாட்டை மறந்துவருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பறவைகள் அழிந்துபோகும் விளிம்பில் இருப்பதை அது குறிக்கலாம் என்று ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரிய பறவைகள் அருகி வருவதால் குஞ்சுகள் பாடக் கற்றுக்கொள்வதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பாடத் தெரியாத இளங்குயில்கள் இனப்பெருக்கம் செய்யும் சாத்தியமும் குறைவதாக ஆய்வு சுட்டியது.

எஞ்சியுள்ள ஆண் honeyeater குயில்களில் சுமார் 12 விழுக்காட்டுக் குயில்கள் மற்ற இனப் பறவைகளின் பாடல்களைப் பாடி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஒரே இனத்துடன் தொடர்புகொள்ளத் தெரியாத முதல் விலங்கினம் அதுவே என்று ஆய்வு குறிப்பிட்டது

இயற்கையில் சில நூறு குயில்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாக நம்பப்படுகிறது.

கிழக்கு ஆஸ்திரேலியாவில் எங்கும் காணப்பட்ட பறவைகள் இப்போது eucalyptus காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.

பாதுகாப்பில் இருக்கும் குயில்களுக்கு ஒலிப்பதிவுகளின் மூலம் பாட்டுகளைக் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.

இம்ரான் கானுக்கு சீனாவின் கொவிட் – 19 தடுப்பூசி செலுத்தப்பட்டது

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் ‘டோஸ்’ போட்டுக்கொண்டுள்ளார்.

சீனாவில் தயாரான சினோபார்ம் தடுப்பூசியின் 5 லட்சம் டோஸ்கள் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி பாகிஸ்தான் நாட்டுக்கு நன்கொடையாக அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.

அந்நாட்டில் கொரோனாவால் 6.15 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பெப்ரவரி தொடக்கத்தில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

பாகிஸ்தானில் சினோபார்ம் மற்றும் ஆஸ்டிரோ ஜெனிகா தடுப்பூசிகளை தவிர்த்து, ரஷ்யாவின் ஸ்புட்னிக் மற்றும் சீனாவின் கேன்சினோ பையோலாஜிக்ஸ் தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.

எனினும், பொதுமக்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் தடுப்பூசி போடும் பணி தொய்வடைந்தது.

இந்த நிலையில், சீனாவின் 2வது கட்ட சினோபார்ம் தடுப்பூசிகன் ராவல்பிண்டி நகரில் உள்ள நூர் கான் விமான தளத்திற்கு வந்து சேர்ந்தது. இதனை அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் பெற்று கொண்டனர். இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று எடுத்து கொண்டுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தில் நடிகர், நடிகைகளை களம் இறக்கிய அதிமுக

அதிமுக சார்பில் நட்சத்திர பேச்சாளர்கள் நாளை முதல் ஏப்ரல் 4 ஆம் திகதிவரை தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வாக்கு சேகரிக்க உள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

நட்சத்திர பேச்சாளர்களும் களம் இறக்கப்பட்டு உள்ளனர். அதன்படி அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் நாளை (சனிக்கிழமை) முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வாக்கு சேகரிக்க உள்ளனர்.

அதன்படி அ.தி.மு.க. கலைப்பிரிவு செயலாளரும், பிரபல சினிமா டைரக்டருமான ஆர்.வி.உதயகுமார், நட்சத்திர பேச்சாளர் வி.எம்.சுப்புராஜ், சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலாளர் லியாகத் அலிகான்,

நடிகர்கள் மனோபாலா, ரங்கநாதன், அனுமோகன், பேச்சாளர்கள் பாத்திமாபாபு, நிர்மலா பெரியசாமி, ஆர்.சுந்தர்ராஜன், அஜய்ரத்தினம், வெண்ணிற ஆடை நிர்மலா, கஞ்சா கருப்பு, குண்டு கல்யாணம், நடிகர் வையாபுரி, ரவிமரியா, சிங்கமுத்து, தியாகு, சரவணன், ஜெயதேவி, கவிஞர் முத்துலிங்கம், விஜய் கணேஷ், போண்டா மணி, கலைப்பிரிவு இணைச்செயலாளர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் ஆகியோர் நாளை முதல் தங்களது பிரசாரத்தை தொடங்குகிறார்கள்.

கூட்டு ஒப்பந்தத்தை அன்று தூற்றியோர் இன்று போற்றுகின்றனர் – கபட நாடகம் அம்பலம் என ஜீவன் சீற்றம்

பிரஜா சக்தி மூலம், ‘பிரஜா சக்தி தொழிற்சாலை’ நிறுவப்பட்டு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்திலும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி செயற்றிட்டத்திற்கு 15 வருட பூர்த்தியினை முன்னிட்டு 18.03.2021 நேற்று மாலை ஹட்டன், டிக்கோயா வனராஜா பகுதியில் பிரஜாசக்தி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றி வருகின்றோம். ஒரு வருடம்கூட ஆகவில்லை, பல்கலைக்கழகம், ஆயிரம் ரூபா போன்ற உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்ததாக வேலையிண்மை பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். ஒரிருவருக்கு வேலை வழங்குவது என்பது வேலை வாய்ப்புகளை உருவாக்குவது அல்ல. தொழிற்சாலைகள், கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்படவேண்டும். அந்தவகையில் பிரஜா சக்திமூலம் ‘பிரஜா சக்தி’ தொழிற்சாலை அமைக்கப்படும். முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.

அதேபோல கண்டி, பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களிலும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். பிரஜா சக்திமூலம் பல திட்டங்களை முன்னெடுக்கலாம். அதன் பணிப்பாளராக செயற்படும் பாரத் அருள்சாமிக்கு எமது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வழிகாட்டிகளாக இருப்பார்கள்.

ஆயிரம் தொடர்பில் மட்டுமே பேசுகின்றனர். ஆயிரம் மட்டும் எமது இலக்கு அல்ல. எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உச்சபட்ச நன்மைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவே பாடுபடுகின்றோம். கூட்டு ஒப்பந்தம் சரியில்லை என்றனர். தற்போது ஆயிரம் ரூபா கிடைத்துள்ள நிலையில், கூட்டு ஒப்பந்தம் அவசியம் என்கின்றனர். ஊடகங்கள் முன்னால் உரையாடியே சிலர் அரசியல், தொழிற்சங்கம் நடத்துகின்றனர். இவர்களின் இரட்டை வேடம் தற்பொழுது அம்பலமாகியுள்ளது. நாம் மக்களுக்காக, தொழிலாளர்களுக்காக அரசியல், தொழிற்சங்கம் நடத்துகின்றோம். எனவே, மக்களை பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது.

20 பெருந்தோட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளன. நாமும் நீதிமன்றம் சென்றுள்ளோம். எது எப்படி இருந்தாலும் ஆயிரம் ரூபா கிடைக்கும். தொழிலாளர்களும் பாதுகாக்கப்படுவார்கள்.” – என்றார்.

க.கிசாந்தன்

மாகாண தேர்தலுக்கு தயாராகுங்கள்! ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு பணிப்பு!!

மாகாணசபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகுமாறு ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு அரச உயர்மட்ட தலைவர்களால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மாகாணசபை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு பழைய முறைமையின்கீழ் தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. இதன்படி ஒக்டோபர் மாதத்துக்கு முன்னர் 9 மாகாணசபைகளுக்கும் தேர்தலை நடத்துவதே அரசின் எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது.

இந்நிலையில் ஆளுங்கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கும், அரச உயர் மட்ட பிரமுகர்களுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போதே தேர்தலுக்கு தயாராகுமாறு பணிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்புக்கு முன்னர் ஆளுங்கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களையும் உயர்மட்ட தலைவர்கள் சந்தித்து, கலந்துரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி. என்பனவும் தேர்தலை சந்திப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளன. வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் விண்ணப்பங்களைக்கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களுக்கு சர்வதேசம் நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் எழுப்பும் அவலக்குரலுக்கு சர்வதேச சமூகம் செவிசாய்க்க வேண்டும்” என்று கோரிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சர்வதேசத்திடம் நீதி கோரி யாழ்ப்பாணத்தில் மாபெரும் மக்கள் பேரணி முன்னெடுக்கப்பட்டது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் தமிழ் மக்கள் முன்னெடுக்கும் உணர்வெழுச்சிமிக்க அறவழிப் போராட்டங்களை நாம் மதிக்கின்றோம். சர்வதேச சமூகமும் இந்தப் போராட்டங்கள் தொடர்பில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் அதிக கரிசனை செலுத்த வேண்டும்.

அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட பிரேரணை வரைபையும் நாம் வரவேற்கின்றோம்.இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கொண்டுள்ள கரிசனைகளையும் நாம் வரவேற்கின்றோம்.

பொறுப்புக்கூறல் கடமையிலிருந்து இலங்கை நழுவ முடியாத வகையில் ஐ.நா.உள்ளிட்ட சர்வதேச சமூகம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளையும் வரவேற்கின்றோம்.

எனவே, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேசம் தாமதமின்றி நீதியை வழங்கியே தீரவேண்டும்’என்றும் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ராணி தோட்ட மக்களுக்கு விரைவில் வீடுகள் – ஜீவன் உறுதி

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரவுண்ஸ்விக் குரூப் ராணி தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று பார்வையிட்டதுடன், விரைவில் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரவுண்ஸ்விக் குரூப் ராணி தோட்டத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 20 வீடுகள் முற்றாக தீக்கிரையாகின. இதனால் 20 குடியிருப்புகளை சேர்ந்த 79 பேர் நிர்க்கதியாகினர்.

இதனை தொடர்ந்து தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இ.தொ.கா வின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நேற்று நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான பல்வேறு அடிப்படை தேவைகளை மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவரின் ஊடாக மேற்கொள்ளுமாறு பிரதேச சபை தலைவருக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்தோடு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு விரைவாக வீடுகளை அமைத்து கொடுப்பதற்கும், இந்த 20 வீடுகளில் தங்கி இருந்த திருமணமான அனைத்து குடுபங்களுக்கும் தனி வீடுகளை அமைத்து தருவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.

இவ்வீடுகளை அமைப்பதற்கான உரிய இடத்தினை தெரிவு செய்து தேசிய கட்டிட ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின் பின்னர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவாக வீடுகள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ராணி தோட்ட மக்களுக்கு அடிப்படை தேவைகளை உடனுக்குடன் செய்து கொடுப்பதற்கும் மஸ்கெலியா பிரதேச சபை தலைவருக்கு அமைச்சர் பணிப்புரைவிடுத்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது ரி -20 போட்டியில் இந்திய அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது ரி -20 போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  8 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களைக் குவித்தது. . அதிகப்படியாக சூர்யகுமார் யாதவ் 57 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனையடுத்து 186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. துவக்க வீரர் ஜோசன் ராய் 40 ஓட்டங்களிலும் பட்லர் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த வீரர் மலான் 17 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இந்நிலையில் பேர்ஸ்டோ மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஜோடி ஆட்டத்தை மாற்றினர். அந்த ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். பேர்ஸ்டோ 25 ஓட்டங்களுடனும் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே பென் ஸ்டோக்ஸ்சும் இரண்டாவது பந்தில் இயான் மோர்கனும் வெளியேற இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

கடைசி ஓவரில் இங்கிலாந்து அணிக்கு 23 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இந்நிலையில் கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார்.

முதல் பந்தில் ஜோர்டன் 1 ஓட்டமும் 2-வது பந்தில் ஆர்ச்சர் பவுண்டரியும் 3-வது பந்தில் சிக்சர் அடிக்க ஆட்டம் பரப்பரப்பானது.

4-வது பந்தில் 2 உதிரிகளை விட்டு கொடுத்தாலும் அடுத்த பந்தில் ஒரு ரன்னை மட்டுமே விட்டு கொடுத்தார். 5-வது பந்தில் ஜோர்டன் அவுட் ஆனார். கடைசி பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்திய அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர்.

மே மாதத்துக்கு பிறகு இ.தொ.காவின் தலைவர் நியமனம்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவர் எதிர்வரும் மே மாதத்துக்கு பிறகு நியமிக்கப்படவுள்ளார் என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்து 10 மாதங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் இ.தொ.காவின் தலைமைப்பதவி இன்னும் வெற்றிடமாகவே உள்ளது.

தொண்டமானின் மறைவின் பின்னர் தலைமைத்துவம் தொடர்பில் இ.தொ.காவுக்குள் மோதல் ஏற்பட்டது. கட்சி பிளவுபடுவதை தடுப்பதற்காக தலைவர் பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. தொண்டமானின் மகனான ஜீவன் தொண்டமானுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இறுதிக்கிரியைகள் முடிவடைந்த பின்னர் தேசியசபைக்கூடி புதிய தலைவரை தெரிவுசெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், சில தடவைகள் தேசியசபை கூடியும்  தலைவர் நியமிக்கப்படவில்லை. 10 மாதங்கள் கடந்துள்ளன.

அமரர் ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்து எதிர்வரும் மே மாதத்துடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது. அதன்பின்னரே புதிய தலைவர் நியமிக்கப்படக்கூடும் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...