Home Blog Page 3573

அரவிந்தகுமாருக்கு ஆதரவு தெரிவித்து 9 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மலையக மக்கள் முன்னணியிலிருந்து அரவிந்தகுமார் எம்.பியை நீக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய செயற்குழுக் கூட்டத்திலிருந்து 9 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

மலையக மக்கள் முன்னணியின் மத்திய செயற்குழுக் கூட்டம் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் ஹட்டனிலுள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது கட்சி கொள்கைக்கு முரணாக 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அவரிந்தகுமார் எம்.பியை கட்சி உறுப்புரிமையில் இருந்தும், அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மலையக மக்கள் முன்னணியின் மத்தியகுழுவில் மொத்தமாக 82 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். நேற்றைய கூட்டத்தில் 64 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பதுளையை பிரதிநிதித்துவம் செய்கின்ற 9 உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறினர்.

அரவிந்தகுமார் ‘அவுட்’ – மலையக மக்கள் முன்னணி அதிரடி!

மலையக மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்தும் , அனைத்து பதவிகளில் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் நீக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை கட்சியின் செயலாளர் நாயகம் சங்கரன் விஜயசந்திரன் உறுதிப்படுத்தினார்.

மலையக மக்கள் முன்னணியின் மத்தியகுழு கூட்டம் நேற்று (19.03.2021)  முன்னணியின்   பிரதான காரியாலய மண்டபத்தில் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் மத்தியகுழுவில் மொத்தமாக 82 உறுப்பினர்கள் அங்கம் வகித்த பொழுதிலும் 64 உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

இதன்போது கலந்துரையாடப்பட்ட, எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,

01. பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அ.அரவிந்தகுமார் கட்சியின் கொள்கையை மீறி 20வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை கட்சியின் கொள்கையை மீறும் செயலாக கருதப்பட்டது.

02. பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரிடம் விளக்கம் கோரப்பட்டது. அவ்விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்ற கவுன்சில் தீர்மானத்தை மத்தியகுழு ஏற்றுக்கொண்டது.

03. அ.அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணியில் வகித்த பதவிகள் மற்றும் அங்கத்துவ உறுப்புரிமை என்பன இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் அவர் தலைமைக்காரியாலயத்திற்கு அத்துமீறி அலுவலக பணியில்; ஈடுபட்டமை மத்தியகுழு மற்றும் கவுன்சிலின் தீர்மானத்தை மீறியதாக மத்தியகுழு தீர்மானித்தது.

04. இதன் அடிப்படையில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணி உறுப்புரிமையிலிருந்தும்  மற்றும் மலையக மக்கள் முன்னணிஇஇ மலையக தொழிலாளர் முன்னணியில் வகித்த பதவிகள் உடன் நடைமுறைப்படுத்தும் வகையில் நீக்கப்பட்டதாக மத்தியகுழுவில் தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி தீர்மானங்கள மேற்கொள்ளப்பட்ட பொழுது பதுளையை பிரதிநிதித்துவம் செய்கின்ற 9 உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறிய நிலையில் ஏனைய அனைவருடைய ஏகோபித்த ஆதரவுடன் மேற்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் ஊடக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கைக்கு அழைக்க வேண்டும்’

இலங்கைக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொள்ளுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையார் மிச்செல் பசெலெட் அம்மையாருக்கு அரசு அழைப்பு விடுக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், அனைத்துலக அரசியல் விமர்சகருமான கலாநிதி கலாநிதி பிரதீபா மஹாநாம ஹோவா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கைக்கு 2014 ஆம் ஆண்டிலும் இதேபோன்றதொரு நிலைதான் ஏற்பட்டிருந்தது. அப்போது மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த பேராசிரியர் நவநீதம் பிள்ளை அம்மையாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை ஏற்று அவர் நாட்டுக்கு வந்தார். அனைத்து பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டார். குறைகளையும் பட்டியலிட்டுக்காட்டினார். ஆனாலும் அவர் யதார்த்தத்தை புரிந்துகொண்டார். இளைஞர் நாடாளுமன்றம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இலங்கை வருவதற்கு முன்னர் அந்நாடு தொடர்பில் இருந்த மனநிலை விஜயத்தின் பின்னர் மாறியதாக நவநீதம் பிள்ளை அம்மையார் குறிப்பிட்டிருந்தார். யாழ். பயணத்தின்போது மொழி உரிமைக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை உணர்ந்தார்.

எனவே, இலங்கை வருமாறு தற்போதைய மனித உரிமைகள் ஆணையாளருக்கும் அழைப்பு விடுக்கவேண்டும். அதனை பிற நாடுகள் சாதகமான விடயமாக பார்க்கக்கூடும். அறிக்கைகளை மட்டும் அடிப்படையாகக்கொண்டே இலங்கை தொடர்பில் அவர் விம்பமொன்றை உருவாக்கி வைத்திருப்பார். ஆகவே, இலங்கைக்கு நேரில் வந்து, பல தரப்புகளுடன் கலந்துரையாடி நிலைமையை கண்காணித்தால் அவரால் யதார்த்த நிலைமையை புரிந்துகொள்ள முடியும். தவறான விம்பமும் உடையக்கூடும்.

அறிக்கையாளர்கள் வருவதைக்காட்டிலும் மனித உரிமைகள் ஆணையாளர் நேரில் வந்தால்தான், இலங்கை என்ன செய்துள்ளது, எவ்வாறான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதனை நேரில் அவதானிக்க முடியும்.” – என்றார்.

89,329 பேருக்கு கொரோனா – 86,227 பேர் குணமடைவு!

நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படடுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 329ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வருபவர்களில் மேலும் 283 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி, கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 86 ஆயிரத்து 227ஆகப் பதிவாகியுள்ளது.

‘காடாக மாறியுள்ள தேயிலைத் தோட்டங்கள் – தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்’

தேயிலைத் தோட்டங்கள் காடாகி விலங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், தேயிலைத் தோட்டங்களை துப்பரவு செய்து தமக்கான தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தில் இராகலை – மாகுடுகலை மற்றும் கிளன்டவன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று (19.03.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாக்குடுகலை தோட்டத்தில் கடந்த  20 வருடங்களாக மூடப்பட்டிருக்கும் தொழிற்சாலை வளாகத்திலேயே இரு தோட்டங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இன்றுடன் 13 ஆவது நாளாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்வதாகவும், தீர்வு கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை எனவும் போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் சூளுரைத்துள்ளனர்.

இது தொடர்பில் தொழிலாளர்கள் கூறியவை வருமாறு,

” மேற்படி தோட்டங்களை பொறுப்பேற்றுள்ள நிர்வாகம் உரிய வகையில் செயற்படாததால் தோட்டங்கள் காடாகி வருகின்றன. சிறுத்தை உட்பட விலங்குகள் பெருகியுள்ளன. இதனால் பெருந்தோட்டத்துறை அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல தொழிலுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. உயிரை கையில் பிடித்துக்கொண்டே வேலைசெய்ய வேண்டிய அவலம் தொடர்கிறது.

எனவே, காடாகவுள்ள தோட்டங்களை துப்பரவுசெய்து, தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, வாழ்வாதாரத்தை மேம்படுத்துமாறு கோரியே போராட்டம் இடம்பெறுகின்றது.  எமக்கு தீர்வு அவசியம். அது கிடைக்கும்வரை போராடுவோம்.” – என்றனர்.

க.கிசாந்தன்

2ஆவது மனைவியை கோடரியால் வெட்டிக் கொன்ற முதலாவது மனைவி!

தனது கணவனின் இரண்டாவது மனைவியை முதலாவது மனைவி தனது மகளுடன் இணைந்து கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்த கொடூரச் சம்பவமொன்று திம்புள்ள-பத்தனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று (19.03.2021) முற்பகல் 11 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என  திம்புள்ள-பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேக்கிலி தோட்டம் பொரஸ்கிரிஸ் பிரிவு பகுதியைச் சேர்ந்த 42 வயதான விஸ்வநாதம்மா என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் மனைவிமார்களுக்கு இடையில் மிக நீண்ட நாட்களாக பிரச்சினை நிலவி வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இவ்வாறானதொரு நிலையிலேயே2 தனது மகளுடன் இணைந்து, முதலாவது மனைவி, இரண்டாவது மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளார்.

குறித்த பெண்ணை கொலை செய்த, முதலாவது மனைவி மற்றும் மகள், அங்கிருந்து காட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்ற நிலையில், பிரதேசவாசிகளுடன் இணைந்து பொலிஸார், சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைகளின் பின்னர், சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் கூறுகின்றனர்.

தனது கணவனுடன் வாழ்ந்த வந்த நிலையிலேயே, இரண்டாவது மனைவியை, முதலாவது மனைவி கொலை செய்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

முதலாவது மனைவி தனது கணவரை விட்டு பிரிந்த நிலையில், கணவர், இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், மிக நீண்ட நாட்களின் பின்னர், முதலாவது மனைவி மீண்டும் வருகைத் தந்த, இரண்டாவது மனைவியை கொலை செய்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முதலாவது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திம்புள்ள-பத்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன், ந.சுசிதரன்

பூசகர் உட்பட நால்வருக்கு கொரோனா – மூடப்பட்டது கோவில்

மஸ்கெலியா பகுதியிலுள்ள கோவிலொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஆலயத்தின் பூசகர் உட்பட் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.க்கப்படுகின்றது.

குறித்த ஆலயத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

இதனையடுத்து   நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், ஆலயத்தின் பூசகர் மற்றும் பிரதேசத்திலுள்ள சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரியில் மாணவர்களை குறிவைக்கும் போதை மாபியாக்கள்

இரத்தினபுரி மாவட்டத்தில் மாணவர்களை இலக்கு வைத்து பாமசிகள் மூலம் போதை பொருள் விற்பனை இடம் பெற்று வருவது குறித்து பாதுகாப்பு துறையினர் அவதானத்தை செலுத்தியுள்ளனர்.

திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போதைப் பொருள் விற்பனை காரணமாக பாடசாலை மாணவர்கள் கிராம தோட்டப்பகுதி இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருவதனால் இதனைக் கட்டுப்படுத்த இரத்தினபுரி மாவட்ட போதைப் பொருள் பொலிஸ் சுற்றி வளைப்பு பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் போதையை ஏற்படுத்தவல்ல பொருட்களை விற்பனை செய்து வந்த இத்தகைய பாமசிகளில் குறுகிய காலத்தில் உடல் உள உயிர் பாதிப்புக்களை ஏற்படுத்தவல்ல மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.

போதைப் பொருளுக்கு பதிலாக சந்தேகங்களை ஏற்படுத்தாத மாண வர் இளைஞர்களைக் கவரக்கூடிய குளிசை வகைகளை இவர்கள் பய ன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்ப டுறது.

இவற்றில் சில கொடிய நோய்களுக்கு பயன்படுத்தும் குளிசைகள் எ னவும் வைத்தியர்களின் சிபாரிசு இல்லாமல் விநியோகிக்க முடியாத இந்த உயிராபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய குளிசை வகைகள் கொள்ளை விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மஹிந்தவுக்கு டாக்காவில் செங்கம்பள வரவேற்பு

பங்களாதேஷிற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (2021.03.19) காலை பங்களாதேஷின் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அதிகாரிகளினால் பிரதமர் வரவேற்கப்பட்டார்.

இரண்டு உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது  பிரதமர், பங்களாதேஷ் குடியரசின் தேசத்தின் தந்தையாக போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றில் கலந்து கொள்ளவுள்ளார்.

பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்ட ‘முஜிப் ஆண்டு’ தொடர்பாக  பிரதமர் மஹிந்த ராஜபக்ச  இன்று பிற்பகல் சிறப்பு உரையாற்றுவார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இவ்விஜயத்தின் போது பங்களாதேஷ் பிரதமர் கௌரவ ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி  முகமது அப்துல் ஹமீத், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

பங்களாதேஷ் நோக்கி பயணமானார் பிரதமர் மஹிந்த

பங்களாதேஷ்  பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  பிரதமர் மஹிந்த ராஜபக்ச  இன்று (2021.03.19) காலை பங்களாதேஷ் நோக்கி பயணமானார்.

பிரதமர் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் யுஎல் 189 ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் பங்களாதேஷ் நோக்கி பயணமானர்.

இந்த இரண்டு உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது  பிரதமர், பங்களாதேஷ் குடியரசின் தேசத்தின் தந்தையாக போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றில் கலந்து கொள்ளவுள்ளார்.

பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்ட ‘முஜிப் ஆண்டு’ தொடர்பாக  பிரதமர் மஹிந்த ராஜபக்ச  இன்று பிற்பகல் சிறப்பு உரையாற்றுவார்.

 பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இவ்விஜயத்தின் போது பங்களாதேஷ் பிரதமர் கௌரவ ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி  முகமது அப்துல் ஹமீத், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...