Home Blog Page 3572

பசறை விபத்து குறித்து ஆராய செந்தில் தொண்டமான் பணிப்பு – பாதிக்கப்பட்டோருக்கு உடன் உதவி!

பதுளை – பசறை, 13 ஆவது மைல்கல் பகுதியில் இன்று (20) இடம்பெற்ற பஸ் விபத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு, முதற்கட்டமாக 15,000 ரூபாயை உடன் வழங்க, ஊவா மாகாண ஆளுநர் மற்றும் பிரதமச் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி, பெருந்தோட்டங்களுக்கான பிரதமரிக் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்துடன், லுணுகலை பிரதேச சபையின் தவிசாளருடன் கலந்துரையாடி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான சவப் பெட்டிகளை வாங்கிக் கொடுக்கவும், அவர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

மேலும், சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கான நிதி உதவியைச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, காயமடைந்தவர்களுக்கான உரிய சிகிச்சைகளை வழங்கவும் தேவையேற்படின் அவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காகக் கொழும்புக்கு மாற்ற நடவடிக்கை முன்னெடுக்குமாறு, சுகாதாரத் துறையினருக்கு, செந்தில் தொண்டமான் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, விபத்துக்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, ஊவா மாகாண போக்குவரத்துக்கு ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ள அவர், விபத்துக்குள்ளான பஸ்ஸின் ஜீபிஎஸ் தொழில்நுட்பம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அதைக்கொண்டு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு, ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

14 உயிர்களை பலியெடுத்த பசறை விபத்து CCTV காணொளி வெளியானது

பசறை 13 ஆம் கட்டைப்பகுதியில் இன்று காலை 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

மலேசியாவுடனான உறவை துண்டித்தது வடகொரியா

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து வடகொரியாவுக்கு எதிராக மிகப்பெரிய விரோத செயலை செய்த மலேசியாவுடனான தூதரக உறவுகளை முற்றிலுமாக துண்டிக்கிறோம் என வடகொரியா தெரிவித்துள்ளது.

அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடிக்கிறது.

இந்த நிலையில் மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வட கொரியாவை சேர்ந்த, முன் சோல் மியோங் என்பவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ள அமெரிக்கா அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி மலேசிய அரசை கேட்டுக்கொண்டது. இதனை ஏற்று, முன் சோல் மியோங்கை அமெரிக்காவுக்கு நாடு கடத்த மலேசிய கோர்ட்டு அண்மையில் உத்தரவிட்டது.

இதனால் கடும் கோபமடைந்த வட கொரியா மலேசியாவுடனான தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மலேசியாவில் வசிக்கும் ஒரு வடகொரியருக்கு எதிராக அமெரிக்கா விதித்த பண மோசடி குற்றச்சாட்டுகள் அபத்தமான கட்டுகதை. எங்கள் அரசின் பிரதான எதிரியால் திட்டமிடப்பட்ட சதி.

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து வடகொரியாவுக்கு எதிராக மிகப்பெரிய விரோத செயலை செய்த மலேசியாவுடனான தூதரக உறவுகளை முற்றிலுமாக துண்டிக்கிறோம். அமெரிக்கா இதற்கு உரிய விலை கொடுக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கொலை செய்யப்பட்டதில் இருந்து வட கொரியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவுகள் கிட்டத்தட்ட முடங்கியே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2027 – மகளிர் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியை கூட்டாக நடத்த ஐரோப்பிய நாடுகள் விருப்பம்

2027ஆம் ஆண்டின் மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியைக் கூட்டாக ஏற்று நடத்த பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லந்து ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

போட்டியை ஏற்று நடத்துவது குறித்து ஏற்கெனவே FIFA என்னும் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்திடம் பேசியுள்ளதாக மூன்று நாடுகளும் கூறின.

ஆண்டு இறுதிக்குள் அதன் தொடர்பில் முறையான ஒப்பந்தத்தைத்தை உருவாக்கப் போவதாக அந்த 3 நாடுகளின் காற்பந்துச் சங்கங்கள் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

கடைசியாக மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி கடந்த ஆண்டு பிரான்ஸில் நடந்தது.

2023ஆம் ஆண்டுப் போட்டியை ஆஸ்திரேலியாவும், நியூஸிலந்தும் கூட்டாக ஏற்று நடத்துகின்றன.

ஜெர்மனி இதற்கு முன்னர் 2011ஆம் ஆண்டு மகளிர் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை நடத்தியது.

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிவரை 30 கி.மீ. நீந்தி சாதனை படைத்த பெண்!

இந்தியாவின் தலை சிறந்த நீச்சல் வீராங்கனையான சியாமளா கோலி, 30 கிலோ மீற்றர் தூரமான பாக்கு நீரிணையை நேற்று நீந்தி சாதனை படைத்தார்.

வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம், கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோர் இணைந்து இச்சாதனை முயற்சியை நேற்று மன்னாரில் ஆரம்பித்துவைத்தனர்.

இச்சாதனையை புரிவதற்கு 13 மணித்தியாலங்களும் 40 நிமிடங்க​ளையும் அவர் எடுத்துக்கொண்டார்.

நேற்று 19 ஆம் திகதி மன்னாரிலிருந்து பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து இந்தியாவின் தனுஷ்கோடியை சென்றடையும் சாதனை முயற்சியை ஆரம்பித்த சியாமளா, 47 வயது நீச்சல் வீராங்கனையாவார்.

உலகளவில் வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இரண்டாவது பெண்மணியாகவும், 13 வது நீச்சல் வீரராகவும் அவர் திகழ்வார். ஆழிக்குமரன் ஆனந்தன் (வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வீரர் ஆவார். ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.

பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக் கடந்தார் ஆனந்தன். 1975இல் மன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார்.

அப்போது தினபதி சிந்தாமணியின் ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திம்புள்ள – பத்தன சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கும், நோர்வூட் மற்றும் நுவரெலியா பிரிவுகளில் தலா ஒருவருக்குமாக மொத்தம் 14 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, நாட்டில் நேற்று 322 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

காடழிப்பை’கையிலெடுக்கிறது ஐ.ம.ச! 23 ஆம் திகதி கொழும்பில் போராட்டம்!!

காடழிப்புகளை நிறுத்துமாறும், சுற்றாடலை பாதுகாப்பதற்காக விசேட பொறிமுறையொன்றை உருவாக்குமாறு வலியுறுத்தியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

சுதந்திர சதுக்கத்தில் எதிர்வரும் 23 ஆம் திகதி மாலை 3 மணிக்கு குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

அதேவேளை, காடழிப்பு உட்பட சுற்றாடலுக்கு இழைக்கப்படும் தீங்குகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அதன்பின்புலத்தில் உள்ள அரசியல் கரங்களை அம்பலப்படுத்துவதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி ஐவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார, புத்திக பத்திரண, காவிந்த ஜயவர்தன, மயந்த திஸாநாயக்க உள்ளிட்டோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

பசறை விபத்து – பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு – 46 பேருக்கு காயம்!

update

பசறை 13 ஆம் கட்டைப்பகுதியில் இன்று காலை 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 46 பேர் காயமடைந்துள்ளனர் என பசறை வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்தார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

பசறையில் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து – ஏழு பேர் பலி!

பதுளை, பசறை 13 ஆம் கட்டை பகுதியில் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் ஏழு பேர் பலியாகியுள்ளனர். 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸே காலை 7.15 மணியளவில் பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ஆம் கட்டை மெத்தக்கடை பகுதியில் வைத்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைகிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.சிலர் பசறை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதுடன், மேலும் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 

இலங்கை ஆளுமைகள் அணி வெற்றிநடை – நாளை இந்தியாவுடன் பலப்பரீட்சை!

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆளுமைகள் அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற 2ஆவது அரையிறுதிப்போட்டியில் இலங்கை ஆளுமைகள் அணி, 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

வீதி விபத்துக்களில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் (Road Safety World Series) என்ற முன்னாள் கிரிக்கட் வீரர்கள் பங்குபற்றும் உலகக்கிண்ண தொடர் இந்தியாவில் நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை ஆளுமைகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

இதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்கா ஆளுமைகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல  விக்கெட்டுகளை இழந்து 125ஓட்டங்களைப் பெற்றது. நுவான் குலசேகர 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 126 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆளுமைகள் அணி, 17.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை ஆளுமைகள்  அணியின் சார்பில் உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும், அதிரடி காட்டிய ஜயசிங்க 47 ஓட்டங்களையும் பெற்றனர். சனத் ஜயசூரிய, டில்சான் ஆகியோர் தலா 18 ஓட்டங்களைப் பெற்றனர்.

5 விக்கெட்டுகளை வீழ்த்திய நுவான் குலசேகர ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

இறுதிப்போட்டிய நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இலங்கை, இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...