Home Blog Page 3579

2024 ஜனாதிபதித் தேர்தலில் பஸிலை ஆதரிக்க தயார் – கூட்டமைப்பு அறிவிப்பு

” இலங்கையில் 2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்சவால் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகளைப்
பெற்றுக்கொடுக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவரை ஆதரிக்கத் தயார்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கொழும்பு சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர் காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ச முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்த தெளிவான வேலைத்திட்டம் இருந்தது.

அதேபோல் சஜித்துடன் பேச்சுகளை நடத்தியவேளை வடக்கு, கிழக்கு மக்களின் பிரதான பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதே அவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதனால் அவரை ஆதரித்தோம். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் வெற்றிபெறவில்லை.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதியஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து நாம் பேச்சுகளை நடத்தியிருந் தோம். இதன்போது உங்களால் மட்டுமே தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக் குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியும்
என்பதை நான் நேரடியாகக் குறிப்பிட்டிருந் தேன்.

ஏனெனில் சிங்கள மக்கள் எதிர்க் காத ஒரே தலைவர் என்ற காரணத்தால்
அவர் எடுக்கும் தீர்மானங்கள் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தாது. நான் கூறியதை ஜனாதிபதி கோட்டா பய ராஜபக்ச ஏற்றுக்கொண்டபோதும்,
இன்னமும் தீர்வுகளை வழங்க அவர் முன்வரவில்லை – என்றார்.

அஸாத் சாலி சி.ஐ.டியினரால் கைது!

மேல் மாகாணசபையின் முன்னாள் ஆளுநரும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலி சி.ஐ.டியினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷரிஆ சட்டத்தைதான் தான் ஏற்பார் எனவும், உள்நாட்டு சட்டத்தை ஏற்கமுடியாது எனவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை அண்மையில் அஸாத் சாலி வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் சி.ஐ.டியில் முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே அவர் கொள்ளுபிட்டியவில் வைத்து இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடத்திட்டத்தில் ‘சட்டத்தை’ ஒரு பாடமாக உள்ளடக்குவதற்கு பாராளுமன்றக் குழு!

பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாக உள்ளடக்குவதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றை தயாரிக்க பாராளுமன்ற உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் தலைமையில் அண்மையில் கூடிய இரு அமைச்சுக்களும் இணைந்த ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த உபகுழு நியமிக்கப்பட்டது.

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான  வ ரவூப் ஹக்கீம், சிவஞானம் சிறிதரன்,   வீரசுமன வீரசிங்ஹ,  சாகர காரியவசம், அமரகீரித்தி அத்துகோரல,   டயனா கமகே,   (மேஜர்) சுதர்ஷன தெனிப்பிட்டிய உள்ளிட்ட எட்டுப்பேரைக் கொண்ட குழுவே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் செயலாளராக பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக செயற்படுவார்.

இங்கு கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிடுகையில், சட்டம் தொடர்பில் பொதுமக்களின் அறிவு மிகவும் குறைவான மட்டத்திலேயே காணப்படுவதாகவும், சட்டம் தொடர்பான அடிப்படைப் புரிதலை நாட்டிலுள்ள மாணவர்களுக்கு வழங்குவது மிகவும் முக்கியமானதாகும் என்றார். முன்னேற்றமடைந்த நாடுகளில் அடிப்படை சட்டம் தொடர்பில் குடியியல் கல்வி வழங்கப்படுவதாகவும், பள்ளிப் பாடத்திட்டத்தில் சட்ட அறிவை இணைப்பது அவசர தேவை என்றும் நீதி அமைச்சர் வலியுறுத்தினார்.

பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாகக் கொண்டுவருவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட இந்தக் குழு தனது யோசனைகள் அடங்கிய அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். இதன் பின்னர் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய சட்டம் பாடத்திட்டத்தில் விரைவில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்கு பணிந்து மாகாண தேர்தலை நடத்தும் முடிவை எடுக்கவில்லை

இந்தியா அல்லது அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தற்பொழுது ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர் நடைபெறுகின்றது. இந்த விடயத்திற்கும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் zoom தொழில்நுட்பத்தில் நடைபெற்றது. இதன் போது ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

முன்னைய அரசாங்கத்தினால் மாகாண சபை தேர்தல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட பிரேரணையின் போது அது காலவரையறை இன்றி ஒத்திபோடப்பட்டது.

இதனால் மாகாண சபை தேர்தல் நடைபெறுவதில் ஏற்பட்ட சட்ட ரீதியிலான தடைகளை நீக்குவதற்காக அரசாங்கம் தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மாகாண சபை எமது அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு மத்தியிலா? அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடத்துகின்றது என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், அமைச்சர் முன்னைய அரசாங்க காலத்தில் மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இதுதொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது வாக்கெடுப்பு 5.00 மணிக்கு நடைபெறவிருந்தது. வாக்களிப்பில் கலந்துக்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வருகைக்காக தாமதப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஒத்திவைக்கப்பட்டது.

அரசியல் யாப்புக்குட்பட்ட முக்கிய விடயமாகும். இதற்கு உடன்படுவதா? இல்லையா? என்பதில்லை பிரச்சினை. கடந்த அரசாங்க காலத்தில் மாகாண சபை தேர்தலை எதிர்கொள்வதற்கு அவர்களுக்கு இருந்த அச்சமே காரணம் அதனாலேயே தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதனால் அதனை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பது முக்கியமாகும். அதற்கு தற்பொழுது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

‘புர்கா’ தடை யோசனையை அரசு மீளப்பெற வேண்டும் – ரிஷாட் வலியுறுத்து

புர்காவைத் தடைசெய்யும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென்றும், இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள், சர்வதேசத்திலிருந்து எமது தாய்நாட்டை தனிமைப்படுத்தும் சூழலையே ஏற்படுத்துவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முஸ்லிம்களை இலக்கு வைக்கும் இவ்வாறான நிகழ்ச்சி நிரல்களை, அரசாங்கம் கைவிடுவதாகத் தெரியவில்லை. ஆட்சிக்கு வர உதவிய இனவாதிகளைத் திருப்திப்படுத்தவே, இந்த நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்கப்படுகின்றன. கொரோனாச் சூழ்நிலையில் முகக்கவசம், மூக்கை மறைத்தல் என்பன கடைப்பிடிக்கப்படும் காலமிது. இதைக் கூடப் புரிந்துகொள்ளாமல், முஸ்லிம்களைப் பழிவாங்கும் மனநிலையில்தான் இந்த அரசு நடந்துகொள்கிறது.

அரபு நாடுகளின் நண்பன் எனக் கூறும் இந்த அரசாங்கம், அரபு நாடுகளிலும் முஸ்லிம் உலகிலும் விரும்பப்படும் ஆடைகளுக்கு அடிப்படைவாதச் சாயம் பூசுவது, விந்தையும் வேடிக்கையாகவும் உள்ளது. ஒரு கலாசாரத்தின் நம்பிக்கையில் கை வைக்குமளவுக்கு அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகிறதே ஏன்? ஏனையோரின் நம்பிக்கைகளுக்கு இந்நாட்டில் இனி இடமில்லை என்றா எச்சரிக்கின்றனர்?

பயங்கரவாதம் கோலோச்சிய காலத்திலும், ஏன், இறுதிக்கட்ட யுத்தத்திலும் கூட, புர்கா மற்றும் ஹிஜாப் போன்ற முஸ்லிம்களின் கலாசார ஆடைகளுக்குத் தடை விதிக்கப்படவில்லை. இன்று, இதை அவசரமாகச் செய்யத் துணிவது பழிவாங்கலுக்காகவே.

சமூகங்கள் மீதான ஒடுக்கு முறைகளைத் தொடர்ந்துகொண்டு ஜெனீவாவில் எவ்வாறு வெல்ல முடியும்? தங்களுக்குப் பிடிக்காத ஒருசில அரசியல்வாதிகளைப் பழி தீர்ப்பதற்காக, ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கலாசார நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதா?

இந்தத் தடை வருமாக இருந்தால், முஸ்லிம் நாடுகளிலிருந்து மட்டுமல்ல, முகத்தை மறைக்கும் எந்தவொரு முஸ்லிம் பெண்ணும், உல்லாசப் பயணியாக இலங்கைக்கு வரப்போவதில்லை. எமது நாட்டின் சுற்றுலாத்துறையில் இது பாதிப்பை ஏற்படுத்தி, அந்நியச்செலாவணியில் பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளல் அவசியம்.

ஒவ்வொரு விடியற்காலையிலும் ஏதோவொரு இடியோசைச் செய்தியையே முஸ்லிம்கள் கேட்க நேரிடுவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சட்டத்தை ஏற்காதவர்களை நாடு கடத்த வேண்டும்

இலங்கையின் சட்டத்தை ஏற்கமுடியாதவர்களை நாடு கடத்துவதற்கு வழிவகுக்கும் வகையில் புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நீதி அமைச்சருமான விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” முஸ்லிம் மக்களின் வாக்குகள் இல்லாமல்போய்விடும் என்ற அச்சத்தால், 17 அடிப்படைவாத, இனவாத முஸ்லிம் உறுப்பினர்களின் உத்தரவுக்கு பணிந்து என்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க அன்று நடவடிக்கை எடுத்தார்.

ரிஷாட் பதியுதீன், அஸாத் சாலி, ஹிஸ்புல்லா, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரே அடிப்படைவாதிகளை வழிநடத்தி, தீவிரவாதிகளை பாதுகாப்பதற்கு முயன்றனர் என்ற விடயத்தை நான் தற்போதும் கூறுகின்றேன். இது தொடர்பில் ஏன் பொலிஸாரால் விசாரணை நடத்த முடியாது?

நாம் ஷரிஆ சட்டத்துக்குதான் (அரேபிய சட்டம்) கட்டுப்படுவோம் என கூறுகின்றனர்.  உள்நாட்டு சட்டத்தை மதிக்காதவர்களை நாட்டில் வைத்திருக்க முடியாது. சர்வதேச சட்டத்திலும் இவ்விடயம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இந்நாட்டின் சட்டத்தை ஏற்கமுடியாது என எவராவது கூறுவார்களாயின் அவர்களை நாடு கடத்த வேண்டும். அதற்கான சட்டங்களை இயற்ற வேண்டும்” – என்றார்.

‘விசேட சட்டம் இயற்றியாவது ஆயிரம் ரூபாவை வழங்குவோம்’ – தொழில் அமைச்சர் உறுதி

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கிய 1,000 ரூபா சம்பள உயர்வு சலுகை அந்த மக்களுக்கு கிடைப்பதை தாமதப்படுத்தவே சம்பள உயர்வுக்கு எதிராக தோட்டக் கம்பனிகள் நீதிமன்றத்திற்கு சென்றிருப்பதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஆனால் நீதிமன்றம் நியாயத்தை நிலைநாட்டுமென்று நம்பிக்கை தெரிவித்த அவர், ஏதும் சிக்கல் நிலை ஏற்பட்டால் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்தாவது தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

2015 இல் 1,000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் எமது அரசாங்கமே அதனை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்தது. இதற்காக 12 சுற்று பேச்சு நடத்தப்பட்டது. தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுக்குமிடையில் உடன்பாடு எட்ட முடியாமல் போனதால் வர்த்தமானி அறிவிப்பினூடாக 1,000 ரூபா வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இதற்கு எதிராக தோட்டக் கம்பனிகள் நீதிமன்றம் சென்றுள்ளன. தோட்டங்களின் உரிமை அரசுக்கே இருக்கிறது. குத்தகைக்கே அவை வழங்கப்பட்டுள்ளன. வழக்குத் தாக்கல் செய்து காலங்கடத்துவதே கம்பனிகளின் ​நோக்கமாகும்.வழக்கு விசாரணை முடிய பல வருடங்கள் செல்லும். இதற்கு மாற்று வழிகளை அரசு எடுக்கும்.” – எனவும் அவர் கூறினார்.

பீலேவின் சாதனையை முறியடித்த ரொனால்டோ

தனது சாதனையை முறியடித்த ரொனால்டோவுக்கு பீலே வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவர், இத்தாலியில் உள்ள ஜுவன்டஸ் கிளப்புக்காக தற்போது விளையாடி வருகிறார்.

இத்தாலி கிளப் கால்பந்து போட்டி ஒன்றில் ஜுவான்டஸ்- காக்லியானி அணிகள் மோதின. இதில் ஜுவான்டஸ் 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ரொனால்டோ 3 கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இதன் மூலம் அவர் அதிகாரப்பூர்வ போட்டிகளில் ஜாம்பவன் பீலே (பிரேசில்) சாதனையை முறியடித்தார்.

இந்த 3 கோல்கள் மூலம் ரொனால்டோ 770 கோல்களை தொட்டார். அவர் பீலேவை முந்தினார். இந்த போட்டிக்கு முன்பு ரொனால்டோ அவரை சமன் செய்து இருந்தார். தற்போது பீலேவை முந்தி சாதனை படைத்துள்ளார்.

ரொனால்டோ கிளப் போட்டிகளில் 668 கோல்களும், போர்ச்சுக்கல் அணிக்காக 102 கோல்களும் அடித்துள்ளார். கிளப் போட்டிகளில் ரியல் மாட்ரிட்டுக்காக 450 கோல்களும், மான்செஸ்டர் யுனைடெட்டுக்காக 118 கோல்களும், ஜுவான்டஸ் கிளப்புக்காக 96 கோல்களும், ஸ்போர்ட்டின் லிஸ்பன் அணிக்காக 5 கோல்களும் அடித்துள்ளார்.

தனது சாதனையை முறியடித்த ரொனால் டோவுக்கு பீலே வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

‘புர்கா தடை குறித்து அவசரமாக முடிவெடுக்க முடியாது – ஆழமாக ஆராய வேண்டும்’

புர்கா மற்றும் நிக்காப் தொடர்பிலான தடையை நடைமுறைப்படுத்துவது ஆலோசனை மற்றும் பொதுவான ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் திடீர் முடிவுகள் எதையும் மேற்கொள்ளாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் புர்கா மற்றும் நிக்காப் தடை தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இது தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். முஸ்லிம் மக்களின் கலாச்சார ரீதியிலான விடயங்களுடன் இது சம்பந்தப்பட்டது.

இந்த மக்கள் இலங்கையர் என்ற ரீதியில் இங்கு வாழ்கின்றனர். அவர்களது கலாச்சார உரிமையை பாதுகாக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. இதனடிப்படையில் புர்கா, நிக்காப் போன்றவற்றின் தடை வதிப்பு அவர்களது கலாச்சாரத்தில் தேவையற்ற அழுத்தத்தை மேற்கொள்ளாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

இருப்பினும் தேசிய பாதுகாப்பிற்கு இந்த ஆடை மூலம் அச்சுறுத்தல்கள்; ஏற்படுமாயின் அது தொடர்பில் அவசியம் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். இந்த விடயம் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையாகும் இருப்பினும் சர்வதேச ரீதியில் பல நாடுகளிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இலங்கையில் இந்த தடை விதிப்பு தொடர்பில் எந்தவொரு நாடும் அழுத்தத்தை மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் மேலும் கூட்டிக்காட்டினார்.

நீதிக்கான போராட்டம் 17ஆவது நாளாகவும் தொடர்கிறது

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 17வது நாளாக இன்றும் தொடர்கின்றது.

நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்இ அரசியல் பிரசியல் பிரதிநிதிகள்இ சிவில் அமைப்பினர்இ மத தலைவர்கள் என பரும் தனது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

போராட்டத்தின் கோரிக்கைகளாவன,

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக சிறிலங்கா அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும்.

தமிழ் இனத்தின் மீதானா இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம்இ சுயநிர்ணய உரிமைஇ தமிழ்த் தேசியம் என்பன அங்கிகரிக்கப்பட வேண்டும்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: செல்வம் எம்.பி. அழைப்பு!

0
"தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையெனில், வடக்கு - கிழக்கு மாகாண சபைகளை தேசிய மக்கள் சக்தி அரசு மிக எளிதாகக் கைப்பற்றும் அபாயம் உள்ளது." - இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...