Home Blog Page 3580

நாட்டில் 784,500 பேருக்கு கொவிட் -19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது!

இலங்கையில் 2021 ஜனவரி 29 திகதி முதல் நேற்றுவரை (15) 7 லட்சத்து 84 ஆயிரத்து 500 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு,

தோட்டக் கம்பனிகளின் சவால்களை முறியடிக்க இ.தொ.கா. சட்டத்தரணிகள் தயார்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள விவகாரம் தொடர்பில் எந்த சவால்களையும் ஏற்பதற்கு தமது சட்டத்தரணிகள் தயார் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இ.தொ.காவின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

” பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாட்சம்பளம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று சம்பள நிர்ணய சபை தொழில் அமைச்சிக்கூடாக வர்த்தமானி அறிவித்தல் விடுத்திருந்தமை சகலரும் அறிந்ததே. இந்த விவகாரத்தில் இ.தொ.கா. விடாப்பிடியாக இருந்து இப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு வழிசெய்திருந்தது.

இ.தொ.கா பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் செயற்பட்ட குழுவினர் ஆணித்தரமாகவும், காத்திரமாகவும் முன்னெடுத்திருந்ததையும் ஆயிரம் ரூபாவை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், பெருந்தோட்டங்களை நிர்வகிக்கும் 20 தோட்டக் கம்பனிகள் சம்பள நிர்ணய சபையின் வர்த்தமானி அறிவுறுத்தலுக்கு எதிராக தடை உத்தரவு கோரி நீதிமன்றத்தை நாடி இருப்பது அதிர்ச்சியளிக்கின்றது.

எனினும், எந்தவொரு சட்ட சிக்கல்களையும் எதிர்நோக்கி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைப்பதற்கான தொடர்முயற்சிகளில் ஈடுபட இ.தொ.காவின் சட்டத்தரணிகள் குழு தயார் நிலையில் இருக்கிறது. அது குறித்து தற்போது நன்கு ஆராய்ந்து வருகின்றது.” – என்றுள்ளது.

 

‘1000 ரூபாவை தடுப்பதற்கான தோட்டக் கம்பனிகளின் முயற்சி தோற்கடிக்கப்படும்’

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை தடுப்பதற்கு கம்பனிகள் முயற்சித்தால் அதனை முறியடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் – என்று பெருந்தோட்டத்துறை அமைச்சரும், அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல் நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை கூட்டு ஒப்பந்தம் ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கே தொழில் அமைச்சர் முயற்சித்தார். பல சுற்று பேச்சுகளையும் நடத்தினார். ஆனால் சம்பள உயர்வு தொடர்பில் அரசு கொள்கை அடிப்படையில் எடுத்த முடிவை ஏற்பதற்கு கம்பனிகள் அக்கறைக்காட்டவில்லை.

இதனால்தான் சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு தொழில் அமைச்சர்  நிமல் சிறிபாலடி சில்வா நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்துக்கு எதிராக சில கம்பனிகள் நீதிமன்றத்தை நாடியுள்ளன. சட்ட ரீதியில் எழும் சவால்களுக்கு பதிலளிப்பதற்கு தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

அதேவேளை, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியை முறியடிப்பதற்கு கம்பனிகள் முற்பட்டால், அதனை தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசு பின்நிற்காது.” – என்றார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக கண்டியைச் சேர்ந்தவர் யாழில் போராட்டம்

கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்பவரினால் இன்றைய தினம் யாழ்ப்பாணம், சுப்பிரமணியம் பூங்கா முன்னறில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் , கடத்தி படுகொலை செய்யப்பட்டோருக்கு என்ன நடந்தது என இந்த அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்து யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இந்த அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதற்கு ஆதரவாக கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்பவர் யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்கா முன்றலில் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.

இலங்கையில் குறிப்பாக வடக்கில் பல இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இந்த அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும். கடத்தல்கள் படுகொலைகள் ஈடுபட்டவர்கள் தொடர்பில் என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன, அந்த ஆதாரங்களை ஜெனிவாவிலும் சமர்ப்பிக்க உள்ளேன்.

எதிர்கால இளைய சமுதாயத்திற்கு கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களின் உண்மைத்தன்மை தெரியப்படுத்தப்பட வேண்டும் குறிப்பாக தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற காணாமலாக்கப்பட்ட உறவுகள் சில காலங்களில் இறந்து விடுவார்கள் ஆனால் எதிர்கால சந்ததியினருக்கு எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள் எதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும்

அத்தோடு தற்போது படுகொலைகள் மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தற்பொழுது பாராளுமன்றத்திலும் மாகாண சபை உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள் அவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் அதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி இன்றைய தினம் இன்று காலையிலிருந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார

வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு நீதி வேண்டும் எனினும் நான் தமிழ் மக்களுக்கு எதிராக இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் உண்மை விடயம் தொடர்பில் சரியான தெளிவுபடுத்தல் வேண்டும் என்பதற்காகவே நான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் இந்த போராட்டம் தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டம் என நினைக்காதீர்கள் என தெரிவித்தார்

இவ்வாறு படுகொலை புரிந்தவர்களில் ஆதாரங்கள் என்னிடம் உள்ளது அதனை ஜனாதிபதியிடம் தெரிவிப்பதற்கு நான் ஜனாதிபதியை சந்திப்பதற்கு கோரியிருந்த போதிலும் இன்றுவரை எனக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவே அதனை நான் எதிர்பார்க்கின்றேன் எனினும் ஐநா சபையில் இந்த கடத்தல் படுகொலைகள் தொடர்பான ஆதாரங்களை சமர்பிக்க உள்ளேன் எனவும் தெரிவித்தார்

‘மேட் இன் ஸ்ரீலங்கா’ – உலகின் சிறந்த வர்த்தக நாமமாக மாற்றுவோம்!

‘மேட் இன் ஸ்ரீலங்கா’ (Made in Sri Lanka) உலகின் சிறந்த வர்த்தக நாமமாக உலகிற்கு எடுத்துச் செல்வதற்கு ஒரு நாடு என்ற ரீதியில் நாம் கைக்கோர்ப்போம் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2021.03.15) இரவு தெரிவித்தார்.

வாகன உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு முறைமை (Standard Operating Procedures) வெளியீடு கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் இடம்பெற்ற போதே  பிரதமர் இவ்வாறு கூறினார்.

கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச அவர்களினால் குறித்த நிலையான செயற்பாட்டு முறைமையை உள்ளடக்கிய ஆவணம்   பிரதமரினால் வழங்கப்பட்டது.

இவ்வாறு வெளியிடப்பட்ட இலங்கை வாகன மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தித் தொழிற்துறைக்கான நிலையான செயற்பாட்டு முறைமையினை கைத்தொழில்துறை அமைச்சின் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

குறித்த நிகழ்வில் கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

“நீண்ட காலமாக எமது நாட்டின் தேவையாக காணப்பட்ட துறையொன்றுக்கு இன்று ஆரம்பம் கிடைத்துள்ளது. அது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கொவிட் தொற்றுநோய்க்கு முன்னர் வாகனங்களை இறக்குமதி செய்ய ஆண்டுதோறும் பாரிய அளவிலான அந்நிய செலாவணியை செலவிட்டோம் என்பது உங்களுக்குத் தெரியும். அத்தகைய வாகனங்களை இறக்குமதி செய்ய நாங்கள் ஆண்டுதோறும் 1000-1500 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டோம்.

எனவே கொவிட் உடன் வந்த பொருளாதார தாக்கத்தை குறைக்க வாகன இறக்குமதியை நிறுத்தினோம். எவரையும் துன்புறுத்தும் நோக்கத்துடன் இதனை செய்யவில்லை.அந்நேரத்திலும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் நாட்டில் காணப்பட்டன.

குறிப்பாக உலகளாவிய தொற்றுநோய் ஏற்பட்ட இத்தருணத்திலேயே உள்ளூர் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் நன்கு புரிந்துள்ளது. அதுமாத்திரமன்றி, நமது பொருளாதார அமைப்பின் குறைபாடுகளை ஈடுசெய்யவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

ஒரு அமைப்பை மாற்ற முயற்சிக்கும்போது, பல்வேறு தடைகள் வரும். சிலர் அதை விரும்புகிறார்கள். சிலர் அதை விரும்பவில்லை. ஆனால் நாங்கள் ஒரு வெற்றிகரமான அமைப்பை அறிமுகப்படுத்தும்போது, அனைவரும் அத்திட்டத்தில் இணைகிறார்கள்.

வாகன உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையொன்று இதற்கு முன்னர் காணப்படவில்லை.இத்தகைய அமைப்புகளை உருவாக்க பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை செயல்படுத்த எவரும் முன்வரவில்லை.

எனக்கு தெரியும் கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள் இது குறித்து நிறைய விவாதங்களை நடத்தினார். அவர் அமைச்சரவைக்கு வந்து அது குறித்து எங்களுக்கு விளக்கினார்.

ஆனால் இந்த வேலையை இவ்வளவு விரைவாக செய்ய முடியும் என்று நாங்கள் யாரும் நம்பவில்லை.இது நம் நாட்டின் கைத்தொழில்துறையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.நாட்டில் ஒரு நிலையான செயற்பாட்டு முறைமை இருக்கும்போது, எந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இது வசதியானதாக அமையும்.

அவர்கள் எந்தவித தயக்கமும் இன்றி நம் நாட்டில் வாகனத் தொழிற்துறைக்குள் நுழைவதற்கு இது வழிவகுக்கும்.உலோகம் மற்றும் உலோகம் அல்லாத பொருட்கள், மின்னணு உற்பத்திகள், டயர்கள் மற்றும் இரப்பர் கைத்தொழில்களும் இந்த வசதி ஊடாக மேம்படுத்தப்படும்.

மறுபுறம், நாட்டில் புதுமைகளுக்கு பெரும் தேவையை உருவாக்குவதற்கும், அதில் ஆர்வத்தை அதிகரிப்பதற்கும் இதுபோன்ற தரமான செயற்பாட்டு முறைமை இருப்பது முக்கியமாகும்.

அதேபோன்று கைத்தொழில்துறையில் தொழில்நுட்ப பட்டதாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் உட்பட சுமார் 20,000 நிபுணர்களுக்கு இந்த திட்டம் நேரடி வேலைவாய்ப்புகளை வழங்கும்.

நாம் ஒரு மேம்பட்ட உலகத்துடன் போட்டியிடுகிறோம். எங்களுக்கு எத்தனை தடைகள் வந்தாலும், இந்த போட்டியில் இருந்து நாம் விலகக்கூடாது. அந்நிய செலாவணியின் வெளிப்பாய்ச்சலை குறைப்பதன் மூலம் தேசிய பொருளாதார சவாலை சமாளிக்கும் ஆற்றல் எமக்குள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அமைச்சின் செயலாளர் அனுஷா பெல்பிட உட்பட அனைவருக்கும் இந்த திட்டத்தை வெற்றிகரமாக மாற்றும் திறன் உள்ளது என்பதை நான் அறிவேன்.

உங்கள் அனைவரின் அர்ப்பணிப்புடன் ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்பும் திறனும் நம்பிக்கையும் எங்களிடம் உள்ளது.

‘மேட் இன் ஸ்ரீலங்கா’ உலகின் சிறந்த வர்த்தக நாமமாக உலகிற்கு எடுத்துச் செல்வதற்கு ஒரு நாடு என்ற ரீதியில் நாம் கைக்கோர்த்துக் கொள்வோம்” என கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

சீனி மோசடி தொடர்பில் விசாரிக்க விசேட குழுக்கள் நியமனம்!

வரி வருமானத்தில் 15 பில்லியனுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய சீனி மோசடி தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேவேளை, இந்த விடயம் தொடர்பில் விசேட கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றை ஈடுபடுத்தியுள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் W.P.C.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் 15 நாட்களில் 112 பேருக்கு கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் கடந்துள்ள 15 நாட்களில் 112 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மாட்டத்தில் நேற்று மாத்திரம் 9 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் பரவவால் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக ஆயிரத்து 112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

‘வில்லி’யாக அவதாரம் எடுக்கிறார் இடுப்பழகி சிம்ரன்!

தமிழ் திரையுலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரனுக்கு திருமணத்துக்கு பிறகு கதாநாயகி வாய்ப்புகள் இல்லை. இதனால் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார்.

அதன்பிறகு வில்லியாக மாறினார். சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் காளீஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக மிரட்டினார். இப்போது பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்திலும் வில்லி வேடம் ஏற்றுள்ளார்.

இந்தியில் ஆயுஷ்மன் கொரோனா, ராதிகா ஆப்தே, தபு நடித்து வெற்றிபெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் தயாராகிறது. இதில் ஆயுஷ்மன் கொரோனா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார். நடிகர் தியாகராஜன் இயக்குகிறார். படத்தில் வில்லன் இல்லை. அதற்கு பதிலாக சிம்ரனின் வில்லி கதாபாத்திரத்தை குரூரமாக சித்தரித்து உள்ளனர்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்யும் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் இந்தியில் தபு நடித்துள்ளார். சிம்ரன் கள்ளக்காதல் கொலையாளியாக நடிப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சில படங்களில் வில்லியாக நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வந்துள்ளன.

மாகாண தேர்தல் – மலையகத்தில் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளும் போட்டி!

இவ்வருடம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில்  முன்னாள், இந்நாள் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளும் போட்டியிடவுள்ளனர்.

மத்திய மாகாண சபைக்கான தேர்தலில் முன்னாள் மாகாண அமைச்சர் அமரர் அருள்சாமியின் மகன், பாரத் அருள்சாமி கண்டி மாவட்டத்திலும், அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் உறவினர் ஒருவர் நுவரெலியா மாவட்டத்திலும் களம் காணவுள்ளனர்.

அத்துடன், மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர். சந்திரசேகரனின் மகள் சட்டத்தரணி அனுசா சந்திரசேகரனும் நுவரெலியாவில் போட்டியிடுகின்றார். ரேணுகா ஹேரத்தின் மகளும் போட்டியிடுகின்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ராஜரட்னத்தின் மகன், கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுகின்றார்.

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் மகனும், வேலாயுதத்தின் மகன்மாரும் பதுளையில் களமிறங்கவுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்திலும் தமிழ் அரசியல் பிரமுகர்களின் உறவினர்கள் போட்டியிடுகின்றனர்.

மியன்மார் வன்முறை – இதுவரை 138 பேர் பலி! ஐ.நா. கடும் கண்டனம்!!

மியான்மரில் பெண்கள், குழந்தைகள் உட்பட அமைதிவழி போராட்டக்காரர்கள் 138 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது .

மியன்மார் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஆட்சியை கைப்பற்றிய இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது.

இதனை தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது.‌ நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரியும், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ‌இந்த போராட்டத்தை ராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. ஆனாலும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை இராணுவம் அறிவித்துள்ளது.

இதனிடையே,மியன்மார் இராணுவத்துக்கு சீனா ஆதரவாக இருப்பதாக கூறி அந்நாட்டு நிறுவனங்களை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். இதனையடுத்து, வன்முறைகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மியான்மர் அரசை கேட்டு கொண்ட சீன தூதரகம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

இந்த நிலையில், ஐ.நா. அமைப்பின் பொது செயலாளரின் செய்தி தொடர்பு அதிகாரி ஸ்டெபானி டுஜார்ரிக் கூறும்பொழுது, மியான்மர் நாட்டில் கடந்த பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து, ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பின்னான வன்முறை சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட அமைதிவழியில் போராடிய போராட்டக்காரர்கள் 138 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

இவர்களில், யாங்கூன் நகரில் கடந்த ஞாயிற்று கிழமை 38 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் பெருமளவிலானோர் லெயிங் தாயிர் பகுதியை சேர்ந்தவர்கள். கடந்த சனிக்கிழமை 18 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என டுஜார்ரிக் கூறியுள்ளார்.

மியான்மர் மக்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராக நடந்து வரும் தொடர் வன்முறைக்கு ஐ.நா. பொது செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மியான்மர் மக்களுக்கு ஆதரவாக ஓரணியில் திரள சர்வதேச சமூகத்திற்கு அவர் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுபற்றி முறையான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இதேபோன்று மியான்மர் நாட்டில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு ஐ.நா. பொது செயலாளருக்கான சிறப்பு தூதர் கிறிஸ்டைன் ஸ்கிரானெர் பர்கனெரும் நேற்று கடும் கண்டனம் வெளியிட்டார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: செல்வம் எம்.பி. அழைப்பு!

0
"தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையெனில், வடக்கு - கிழக்கு மாகாண சபைகளை தேசிய மக்கள் சக்தி அரசு மிக எளிதாகக் கைப்பற்றும் அபாயம் உள்ளது." - இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...